புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைப் பிரபலங்கள்  - Page 5 I_vote_lcapதிரைப் பிரபலங்கள்  - Page 5 I_voting_barதிரைப் பிரபலங்கள்  - Page 5 I_vote_rcap 
6 Posts - 60%
heezulia
திரைப் பிரபலங்கள்  - Page 5 I_vote_lcapதிரைப் பிரபலங்கள்  - Page 5 I_voting_barதிரைப் பிரபலங்கள்  - Page 5 I_vote_rcap 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
திரைப் பிரபலங்கள்  - Page 5 I_vote_lcapதிரைப் பிரபலங்கள்  - Page 5 I_voting_barதிரைப் பிரபலங்கள்  - Page 5 I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப் பிரபலங்கள்


   
   

Page 5 of 12 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10, 11, 12  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 16, 2017 9:52 pm

First topic message reminder :

16.12.2017

அப்போ நாடங்களில மனோரமா ஹீரோயினா நடிச்சிட்டு இருந்தாராம். மணிமகுடம் நாடகத்ல அவர் நடிப்பை ஒரு பிரபலர் பார்த்தாராம். மாலையிட்ட மங்கை படத்தில நடிக்க சொன்னாராம். ஆனா ஹீரோயினா இல்ல, காமெடியனா. வந்ததே .............. ரோஷம் மனோரமாவுக்கு. “என்னான்னு நெனச்சுகிட்டீங்க, நான் நாடகத்தில ஹீரோயினாத்தான் நடிச்சிருக்கேன். தெரியும்ல. நீங்க என்னை இப்போ காமெடியனா நடிக்க சொல்றீங்க.” ன்னுட்டாராம். அந்தப் பிரபலர் , “இத பாரும்மா, படத்தில நீ ஹீரோயினா நடிச்சா, ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ, அவ்வளவுதான். அதுக்கப்புறமா சினிமாவில ஹீரோயினா நெலச்சு நிக்க முடியாது. காமெடியனா நடிச்சேன்னு வச்சுக்கோ, காலாகாலத்துக்கும் நடிச்சுட்டே ................ இருக்கலாம்” னு சொன்னாராம். அது போலத்தானே இருந்தார் ஆச்சியம்மா நாலு தலைமுறையா.

Baby Heerajan
 மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 21, 2018 11:35 pm

21.01.2018 

by heezulia on Sun Jan 21, 2018 
"இப்போ நீங்க போட்டிருக்கிற கோவியின்  போட்டோ எத்தன நாள் இருக்கும்?" 
by மூர்த்தி on Sun Jan 21, 2018 
"எத்தனை நாள் அல்ல.சில நிமிடங்கள் முன்".
ஃபோட்டோவை போட எத்தனை  நாள் ஆச்சுன்னு கேக்கல. நீங்க போட்டிருக்கிற ஃபோட்டோ இங்க எத்தனை நாள் வரை இருக்கும்னு கேட்டேன். கொஞ்ச நாள் கழிச்சு ஃபோட்டோ காணாம போயிருதே, அதான் கேட்டேன். 

ஃபோட்டோவை போட மிஞ்சி மிஞ்சி போனா, அஞ்..............சு  நிமிஷம் கூட ஆகாதே. 

Heezulia 

avatar
Guest
Guest

PostGuest Mon Jan 22, 2018 1:08 am

தவறாக புரிந்து கொண்டேன். பதிவிட ஒரு நிமிடம் கூட ஆகாது.
இணைக்கப்பட்ட படங்கள் நீக்கப்படுவதில்லை. ஈகரை இலவச இணையத்தளம் என்பதால் குறிப்பிட்ட அளவே படங்களுக்கான காலரி சேமிப்பு இருக்கும். மிகப் பழையவை டிலிற் செய்தால் சேமிப்பு இடம் தொடர்ந்து கிடைக்கும். இல்லையேல் limit exceed என வரலாம். இது பொதுவான நடைமுறை.avatar இல் படம் வராமல் போகலாம்.இவை எனக்குத் தெரிந்தவரை. (தவறாகவும் இருக்கலாம்.)

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jan 22, 2018 10:37 am

22.01.2018
by மூர்த்தி on Mon Jan 22, 2018 
"ஈகரை இலவச இணையத்தளம் என்பதால் குறிப்பிட்ட அளவே படங்களுக்கான காலரி சேமிப்பு இருக்கும்."
இதுக்கு என்ன அர்த்தம்? இலவச இணையதளம்னா என்ன? 


Heezulia

avatar
Guest
Guest

PostGuest Mon Jan 22, 2018 12:32 pm

சுருக்கமாக சொன்னால்,இணையத்தளங்கள் பொதுவாக இரண்டு வகையாக செயல்படுகிறது. ஒன்று பணம் கொடுத்து domain name (con/net/org……) வாங்கி பயன்படுத்துவது. அப்படி வாங்கப்படும் தளம் உங்ககளுக்கு சொந்தமானதாகும்.

இரண்டாவது இலவச தளங்கள். கூகிளின் blogger, wordpress, ஈகரையின் தாய்த் தளமான forumotion போன்ற சிலவாகும். இந்த இணையத் தளங்கள் தாங்களே இணையத்தளத்தை வடிவமைத்துக் கொடுக்கிறார்கள்.நாமும் விரும்பியபடி திருத்தங்களை செய்து அழகுபடுத்தி பாவிக்க முடியும்.தளத்தின் பெயரை நீங்களே தெரிவு செய்யலாம்.ஒருவர் எத்தனை பக்கங்களை வேண்டுமானாலும் உருவாக்கிப் பாவிக்கலாம்.

இவற்றை நாம் செயல்படுத்தினாலும்,அதற்கு உரிமையுள்ளவர்களானாலும் முற்றாக நமக்கு சொந்தமானவை அல்ல.அதாவது தவறான சமூக விரோத பதிவுகள் பதிவிடப்பட்டால் இணயத்தை முடக்க அவர்களுக்கு உரிமை உண்டு.

நீங்கள் விரும்பினால் கூட ஒரு இலவச இணையத்தளத்தை சில நிமிடங்களில் உருவாக்கிக் கொள்ளலாம். இணைய அறிவு தேவையில்லை. தவறுகள் திருத்தங்கள்,கேள்விகள் சந்தேகங்களை அவர்களிடம் support இல் தெரிந்து கொள்ளலாம். அதில் பதிவுகளை எழுதலாம். அந்த தளத்தின் அட்மின் நீங்களாக இருப்பீர்கள்.

வேண்டுமானால் உங்களுக்கு மட்டுமான தனிப்பட்ட தளமாக பாவித்துக் கொள்ளலாம். உங்களைத் தவிர யாரும் பார்க்க மாட்டார்கள். தனிப்பட்ட தகவல்கள்,படங்கள், கட்டுரைகளை சேமித்துக் கொள்ளலாம். விரும்பினால் உங்களுக்கு விரும்பிய சிலரை மட்டும் பார்க்க அனுமதிக்கலாம்.

இலவச தளம் அமைக்க தேவையானவை ஒரு மின் அஞ்சல் பாஸ்வேட் அவ்வளவுதான்.
இப்படி உருவாகும் இலவச இணையத்தளங்களின் சேமிப்பு கொள்ளளவு ஒரு குறிப்பிட்ட அளவாக இருக்கும்.அது போதுமானதாக இருக்கும். படங்களை காலரியில் சேமிக்கலாம். வீடியோக்களை சேமிக்க முடியாது. சேமிக்க வேண்டுமானால் அதிக கொள்ளளவு வேண்டும். அப்படி வீடியோக்களை சேமிக்க வேண்டுமானால் பணம் கொடுத்து அதிக இடத்தை வாங்க வேண்டும்.

இதுதவிர விளம்பரங்களை அனுமதித்து பணம் சம்பாதிக்கவும் முடியும். நீங்களாக விளம்பரங்களை அனுமதிப்பது அல்லது கூகிளின் விளம்பரங்களை அனுமதிப்பது.

எனக்குத் தெரிந்த தகவல்கள்.தவறிருந்தால் திருத்திக் கொள்ளலாம்.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 28, 2018 5:44 pm

28.01.2017

எம்.ஜி.ஆர்.


[எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயங்கள் தான். இருந்தாலும் எனக்கு ஒரு ஆசை அனுப்பணும்னு] 

1. எம்.ஜி.ஆர் நடிச்ச படங்கள் எத்தன தெரியுமா ? 136. 
முதல் படம் சதிலீலாவதி (1936). 
கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).

2. தெலுங்கு படங்களதான் எம்.ஜி.ஆர். அனேகமா ரீமேக் செய்வாராம். அப்டி 60 தெலுங்கு படங்கள ரீமேக் செஞ்சிருக்காராம். அதிலேயும் பாருங்க அம்புட்டும் என்.டி.ஆர். நடிச்சதா இருக்குமாம். ஆனா உரிமைக்குரல் மட்டும் நாகேஸ்வரராவ் நடிச்சதாம். 

3. எம்.ஜி.ஆருக்கு மூணு மனைவீங்களாம். தங்கமணி முதல் மனைவியாம். சதானந்தவதி ரெண்டாமவராம். அவர் இறந்த பின்னால வி.என்.ஜானகி மூணாவதா கல்யாணம் செஞ்சுகிட்டாராம். 

4. கண்ணதாசன் எம்.ஜி.ஆர். நடிச்ச 50 படங்களுக்கு பாட்டு எழுதி இருக்காராம். எம்.ஜி.ஆர் கார்ல போகும்போது 
"அச்சம் என்பது மடமையடா...." பாட்டுதான் ஒலிச்சிகிட்டே இருக்குமாம். 

5. அவர் நடிக்கிற படத்தில சிகரெட் பிடிப்பதை போல நடிக்க மாட்டேன்னு சொல்லிருவாராம். நினைத்ததை முடிப்பவன் படத்தில அப்டி ஒரு சீன் வருமாம். சிகரட்ட வாயில் வைப்பாராம். ஆனால் இழுக்கலியாம்ல. 

அப்டியா? 

அப்புறமா மலைக்கள்ளன் படத்தில ஹுக்கா பிடிப்பாராம்ல. இப்டி ஒரு சீன் அந்த படத்தில வந்ததால, படத்தில அந்த சீன எடுத்துரலாமா, வச்சுக்கலாமான்னு யோசிச்சுகிட்டே இருந்தாராம் அதனாலதான் அந்த படம் ரிலீஸ் ஆக லேட்டாச்சாம்ல.

Heezulia


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 28, 2018 6:17 pm

எம்ஜிஆர் ஒரு சகாப்தம்
அவர் பற்றிய தகவல்
அருமை.
நன்றி

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jan 29, 2018 5:47 pm

29.01.2018

அம்பிகா

கேரளாக்காரர். அம்பிகாவும், இவர் தங்கச்சி ராதாவும் ஸ்கூல்ல படிக்கும்போதே, பாட்டு போட்டில கலந்துட்டு, முதல் பரிசு வாங்குவாங்களாம். மிமிக்ரி, கவிதை, டான்ஸ், நடிப்பு இதிலெல்லாம் அம்பிகா பல பரிசு வாங்கியிருக்காராம். ராதாவும் அப்படித்தானாம்.

சின்ன வயசிலேயே அம்பிகாவுக்கு சினிமா மேல ஆசையாம்.  ஊர் பக்கத்தில ஷூட்டிங் நடந்துச்சுன்னா, அம்மாவை வற்புறுத்தி, ஷூட்டிங் பார்க்க கூட்டிக்கிட்டு போவார். 

இப்படித்தான்  ஒரு நாள், ஒரு ஷூட்டிங்க்கு அம்மாவோடு  போயிருந்தார்.  அங்க கமல், சோமன்பாபு இவங்களும் இருந்தாங்களாம். கமல் அம்பிகாவை பார்த்தார். 

"நீ ஸ்ரீவித்யா போல  ரொம்ப அழகா இருக்க. எங்கூட நடிக்கிறியா? நீ பெரிய நடிகையா வரலாம்" னு கமல் சொன்னாராம்.  அம்பிகா கொஞ்.................சங்கூட தயங்கவே இல்லியாம். சரீன்னுட்டார். சின்ன புள்ளயாச்சே. 

ஷீலா ஓஹோ.................... ன்னு நடிச்சுட்டு இருந்த சமயம். அம்பிகா அவரைப் பார்த்து, அவரைன்னா, அவரை இல்ல, அவர் நடிப்பை பார்த்து, நம்மளும் அவரை மாதிரி நல்லா நடிச்சு, பெரிய நடிகையாகணும்னு, அப்பவே, அம்பிகா நெனச்சாராம். அந்த சின்ன  வயசிலேயே பேராசை பாருங்க.

அம்பிகாவுக்கு நடிப்பின் மேல இருந்த interestஐ பார்த்த அவங்க அம்மா, மலையாள பட தயாரிப்பாளர் சுப்பிரமணியத்தை சந்திச்சார்.  தன் மகள்  நடிக்க விரும்புறதா சொல்லி, சினிமாவில சான்ஸ் கேட்டார். அவரும் அம்பிகாவை பார்த்தார். சரி மேக்கப் டெஸ்ட் செய்யலாமேன்னு, மேக்கப் போட்டு பார்த்திருக்கார். மேக்கப் கச்சிதம். நடிக்க சொல்லியிருக்கார். நல்லாவே நடிச்சுட்டார்.  

அப்புறம் என்ன, அந்த சமயத்தில் சுப்பிரமணியம் தயாரிச்சுட்டு இருந்த 'கோட்டாணிக்கரா' ங்கிற மலையாள படத்தில குழந்தை நட்சத்திரம், குட்டி அம்பிகாதான். 

பருவம் வந்ததும் நடிக்கிறதை விட்டுட்டாராம். முகுந்தன்னு ஒரு எழுத்தாளராம். அவர் கீதான்னு ஒரு நாவல் எழுதியிருந்தாராம். அந்த நாவல் படமாக எடுக்க ஏற்பாடுகள் நடந்துச்சாம். இந்தப் படத்தில அம்பிகாவை ஹீரோயினாக நடிக்க வைக்க ஆசைப்பட்டாராம், அந்தப் படத் தயாரிப்பாளர். அம்பிகாவின் வீட்டுக்கு ஆளையும் அனுப்பி வச்சாராம். ஆனா, வீட்ல அம்பிகா இல்ல. எங்க போய்ட்டார், எங்க போய்ட்டார்? 

அவர் என்னான்னா, ஜா......................லியா சினிமா தியேட்டர்ல சினிமா பாத்துட்டு உக்காந்திருந்தார். 

பின்னே என்ன, சினிமா தியேட்டர்ல சினிமாதான பாப்பாங்கன்னு சொல்லாதீங்க. இது இப்படித்தான் எழுதணும்.  

சினிமாக்காரங்க விடல. தியேட்டர்லேயிருந்து அம்பிகாவை கூப்பிட்டுக்கிட்டாங்க. அம்பிகாவின் சின்ன வயசு ஆசை இப்ப நிறைவேறிருச்சுல்ல. 

ஆனா ஒரு குழப்பம் மலையாள சினிமாவில. நடிகை பதிமினியின் உறவினர் ஒருத்தர், அம்பிகாங்கற பேர்ல இருந்தாராம். அதனால புது அம்பிகா பேரை மாத்த பாத்தாங்களாம். ஆனா, அம்பிகாவும், அவங்க அம்மாவுக்கும் பேர மாத்துறது பிடிக்கலியாம். ஏன்னா, புது அம்பிகா நடிச்ச படம் நல்லா ஓடுச்சாம். இது தவிர பழைய அம்பிகாவை கண்டுக்காம, இந்த புது அம்பிகாவை தேடி சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பிச்சுருச்சாம். 

இப்டியே....................... மலையாளத்தில் நடிச்சுட்டு இருந்த அம்பிகா தமிழ் படத்தில 'சக்களத்தி 1979' படத்தல செகண்ட் ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சதுதான். இந்தப் படம் அவ்வளவா ஓடல. அப்புறம் பாருங்க 1981ல வந்த 'அந்த 7 நாட்கள்', அம்பிகாவை  வே...............ற லெவலுக்கு கொண்டு போயிருச்சு. 

அந்த 7 நாட்கள் படத்தில, பாக்கியராஜ் மலையாளியாக நடிப்பார்.  மலையாளம் கலந்த தமிழ் வசனத்தை பேசிட்டு, அம்பிகாட்ட "நான் சரியா பேசினேனா"னு கேட்டுக்குவாராம். அம்பிகா ஒரிஜினல் மலையாளியாச்சே. 

அலைகள் ஓய்வதில்லை  படத்துக்கு முதல்ல அம்பிகாவைத்தான் பாரதிராஜா செலக்ட் பண்ணார். அதுக்கப்புறம் என்னாச்சுன்னா, பாரதிராஜா அம்பிகாவின் குடும்ப போட்டாவ பார்த்தார். ராதா அவர் கண்ணில பட்டுட்டா................... அதனால அம்பிகாவுக்கு கிடைக்க வேண்டிய சான்ஸ் போயே  போச்சு. 

ஆனா................. ராதாவுக்கு சினிமாவில நடிக்க ஆசையில்லாம, அப்புறமா ............. அதை விடுங்க.

அம்பிகா அதுக்கப்புறமா ரஜினி, கமல்கூட நடிக்க ஆரம்பிச்சுட்டார். 'எங்கேயோ கேட்ட குரல்' படத்தில ரஜினி கூட நடிக்குமோபோது, ரஜினி கால்ல விழுந்து அழுற ஸீன். இந்த ஸீன்ல, அம்பிகா கிளிசரின் போடாமலே................ அழுதுட்டாராம். 

இந்தப் படம் வந்த அதே சமயத்துலதான் கமலின் 'சகலகலா வல்லவன்' படமும் ரிலீஸ் ஆச்சாம். ரெண்டு படத்திலேயும் அம்பிகாதான் ஹீரோயின். 

அம்பிகா சின்ன வயசில, கமல் பட  ஷூட்டிங் நடக்கும்போது,  கமல் அம்பிகாட்ட கேட்டாரே ஒரு கேள்வி, "எங்கூட நடிக்கிறியா"ன்னு. 'சகலகலா வல்லவன்' பட ஷூட்டிங்ல, கமல் அதை அம்பிகாட்ட ஞாபகப்படுத்தினாராம். "பாத்தியா நான் சொன்னபடியே நடந்துச்சுல்ல" ன்னு சொல்ற அர்த்தத்ல.  

எங்கேயோ கேட்ட குரல் படத்தில வயசானவரா நடிச்ச மாதிரியே, சிவாஜி கூடவும் வாழ்க்கை படத்தில நடிச்சார். 

நான் பாடும் பாடல். நான் பாடி, நீங்க சொக்கி உக்காந்துட்டீங்கனா, நான் எழுதுறத எப்படி படிப்பீங்க? ஏன்னா, நான் நல்..............லா பாடுவேன். 

அது ஒரு படம். சிவகுமார் ஹீரோ. க்ளைமாக்ஸ் ஸீன். சிவகுமாரை அம்பிகா ஓங்கி அறையணும். சிவகுமார் என்னவோ அடி வாங்க ரெடியாத்தான் இருந்தார். ஆனா, அம்பிகா? முடியவே முடியாதுன்னுட்டாராம். இதுல மட்டுமில்லீங்க. அடிக்கிற ஸீன் எந்தப் படத்ல வந்தாலும், தயங்குவாராம். 

படத்தில குதிரை சவாரின்னாலும் பயமாம். ஏன்னா, மாவீரன், கடலமீன்கள் படங்களில, குதிரை சவாரி ஷூட்டிங் நடக்கும்போது, கீழே விழுந்து அடிபட்டுருச்சாம். 

அம்பிகா, ராதா ரெண்டு பேருமே தனித்தனியாவும், சேர்ந்தும் நடிச்சிருக்காங்க. ஆனா அவங்களுக்குள்ள பொறாமையே இருந்ததில்லயாம். 



Heezulia

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jan 29, 2018 6:07 pm

வாழ்க்கை
எனக்கு பிடித்த படங்களில் இதுவும் ஒன்று



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Feb 03, 2018 7:23 pm

03.01.2018

SV ரங்காராவ்

திரைப் பிரபலங்கள்  - Page 5 LRxhvfoDS9a5D9Un4UtK+svrangarao

இவர் முழு பேர் சாமர்லா வெங்கட ரங்காராவ். 

தெலுங்கு, தமிழ் படங்களில் நடிச்சிருக்கார். தெலுங்கு மக்கள் இவருக்கு 'விஸ்வநாத சக்கரவர்த்தி' ன்னு பட்டம் கொடுத்தாங்களாம். ஆந்திரா, விஜயவாடால  இவருக்கு மார்பளவு சிலை வச்சிருக்காங்களாம். 

எந்த வேஷத்ல  நடிச்சாலும், அந்தந்த கேரக்டரிலேயே வாழ்ந்தவர் மனுஷன். பிச்சு உதறிருவார். சபாஷ் மீனால 'கரெக்ட்' அப்பாதுரை. மாயாபஜாரில் கடோதகஜன். இதையெல்லாம் விடுங்க, சர்வர் சுந்தரத்ல டைரக்டராக நடிப்பாரு பாருங்க, காமெடியனாகவும் நடிச்சிருப்பாருல்ல. 

தெலுங்கில் இவர் டைரக்ட் செஞ்ச ரெண்டு படங்களுக்கு நந்தி விருது கெடச்சுதாமே. 'நர்த்தனசாலா' என்ற படத்தில இவர் கீச்சனாக நடிச்சதுக்கு, இந்தோனேஷியாவில நடந்த திரைப்பட விழாவில், விருது கெடச்சுதாம். சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகள், மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள் வாங்கியவர் ஆஜானுபாகு ரங்காராவ். 

கமல்ஹாசன் ஒரு தடவை சொல்லியிருந்தாராம், " நான் பார்க்க ஆசைப்பட்ட   முக்கியமானவங்கள்ல, காந்தி, பாரதியார் உட்பட, ரங்காராவும் ஒருத்தர். ஆனா சந்திக்க சான்ஸ் கிடைக்காம போயிருச்சு". 

நாடகங்களில் நடிச்சு, சினிமாவுக்கு வந்தவர். ஆனாலும், நாடக நடிப்பு இல்லாம, casual ஆக நடிச்சு பேர் பெற்றவர். இங்கிலிஷ் நாடகங்கள்ல கூட நடிச்சிருக்காராம்.


ஷூட்டிங்ல நடந்த சில சுவாரஸ்யங்கள்:

நானும் ஒரு பெண் ஷூட்டிங்.

MR ராதா வந்துட்டார். ரங்காராவை காணோம். ராதாவுக்கு கோவம் வந்துருச்சாம். அவர் பேசுற பாணியிலயே, "கெட்டவனா நடிக்கிறவன்ல்லாம் ஒழுங்கா நடந்துக்கிட்டுறான். நல்லவனா நடிக்கிறவன பாரு,  மத்தவங்கள பாடா................... படுத்துறான்"ன்னு ரங்காராவ் காதுல விழற மாதிரி பேசினாராம். 

ரங்காராவுக்கு சங்கடமாவும், வருத்தமாவும் feel பண்ணாராம். அவர் டைரக்டர்ட்ட, "இன்னிக்கி எம்புட்டு நேரமானாலும் சரி, கிளைமாக்ஸ் சீனை முடிச்சிருங்க. விடிய விடிய ஆனாகூட பரவாயில்ல"ன்னு சொல்லி முடிச்சு கொடுத்தாராம். 


பக்த ப்ரகலாதா ஷூட்டிங் :

AVM செட்டியாரின் படம்.  ரங்காராவ் ரண்யகசிபுவாக நடிச்சார். நடிக்கிறதுல சரியா கோஆப்ரேட் பண்ணலேன்னு செட்டியார் காதுக்கு போச்சாம். தானே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வர்றதாக சொல்லி அனுப்பினார் செட்டியார். செட்டியார் வந்ததை ரங்காராவ் பார்த்தார். அடடே, நம்ம விஷயம் அவர் காது வரிக்கும் போயிருச்சேன்னு யோசிச்சு, ரங்காராவ் என்ன செஞ்சார் தெரியுமா? 

ஷூட்டிங்காக போட்டிருந்த நகைகளை எல்லாத்தையும் கழட்டி, "இந்தாங்க புடிங்க"ன்னு செட்டியார் கையில கொடுத்தார். ஏகப்பட்ட வெயிட்.  "இவ்ளோ.......... கனத்தையும் சுமக்கணும். செந்தமிழ்ல வேற பேசணும்.  வீட்டுக்கு போனாகூட, இவ்ளோ வெயிட்டை சுமந்த வலிதான் இருக்கு" ன்னு ரங்காராவ் சொன்னாராம். அவர் நிலைமை புரிஞ்சு, செட்டியார் சமாதானமானார். 

- ஹிந்து

இன்னும் இவரைப் பற்றி எழுத நிறைய நிறைய இருக்கு. இருந்தாலும் இம்புட்டுதான் எழுதினேன். 

வேற வேலையா பிஸியா இருந்துட்டேன். இங்க வரமுடியல. அதுக்குள்ளாற என்னான்னா ஈகரை எம்மேல கோவிச்சுட்டு, வாசப்படியிலேயே நிக்க வச்சுட்டு, உள்ள விடமாட்டேன்னுருச்சு. இவளத்துக்கும் நான் ஆட்டோமேட்டிக்கா உள்ள வர டிக்கெட் வேற வாங்கி வச்சிருக்கேன். அப்படியும் விடலேன்னா என்ன அர்த்தம்ங்க்றேன். 

Heezulia

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 03, 2018 8:23 pm

Heezulia wrote:வாசப்படியிலேயே நிக்க வச்சுட்டு, உள்ள விடமாட்டேன்னுருச்சு. இவளத்துக்கும் நான் ஆட்டோமேட்டிக்கா உள்ள வர டிக்கெட் வேற வாங்கி வச்சிருக்கேன். அப்படியும் விடலேன்னா என்ன அர்த்தம்ங்க்றேன்.

சேவகா!
அனுமதி என் மறுத்தாய் !
ஈகரையின் மறு தாய் அவர்கள் !
நன்றாக ஷோ காமிக்கும் அவரை தடை செய்யலாமோ!

கபர்தார்!! வேலையிலிருந்து நீக்கப்படுவாய்!!

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 5 of 12 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக