ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10 
Dr.S.Soundarapandian
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10 
heezulia
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10 
i6appar
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிஞ்சதும் தெரியாததும்

+7
ரா.ரமேஷ்குமார்
Dr.S.Soundarapandian
பழ.முத்துராமலிங்கம்
SK
ayyasamy ram
T.N.Balasubramanian
heezulia
11 posters

Page 9 of 29 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 19 ... 29  Next

Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Empty தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia Sat Dec 16, 2017 6:47 pm

First topic message reminder :

16.12.2017

'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.

சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார்.  அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?

எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?

உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.

Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4953
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia Fri Dec 29, 2017 4:20 am

29 .12 .2017 

கண்ணதாசன் சும்மா இருக்காமே அப்பப்போ நாட்டு நடப்பை அவரோட பாட்டுல எழுதுவார்ல? அத மாதிரிதான் அனுபவி ராஜா அனுபவி படத்ல “மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்” ன்னு ஒரு பாட்டு எழுதினார்ல? அதுல “ஊரு கெட்டு போனதுக்கு மூரு மாருகெட்டு அடையாளம்” னு ஒரு வரி வருது. 

சென்னைல அப்போ ‘மூர் மார்கெட்’ ஒரு இடம் இருந்துச்சாம். அந்த இடத்துல போலி சாமான்களை விற்பதா பேசிகிட்டாங்களாம். அதனால கண்ணதாசன் அப்படி ஒரு வரி சேர்த்துகிட்டாராம். படம் ரிலீசாச்சா? ஆச்சு. 

மூர்மார்க்கெட்ல உள்ளவங்க இந்த பாட்டை கேட்டிருக்காங்க. அம்புட்டுதான். சும்மா விட்டாங்களா? பொங்கி எழுந்தாங்களாம். கோர்ட்டுக்கு போயிட்டாங்களாம். கேஸ் போட்டுட்டாங்களாம். ஆனா பாருங்க, இதனால படத்துக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாம போயிருச்சாம். 

“முத்துக்குளிக்க வாரியளா”ன்னு ஒரு பாட்டு இந்தப் படத்துல இருக்குல? ஈஸ்வரியும் ட்டி.எம்.எஸ்சும் பாடியது. அந்தப் பாட்டு கன்னாபின்னான்னு பட்டி தொட்டில எல்லாம் சூப்பரோ சூப்பர் ஹிட்டாச்சாம். ஹிந்தி படத்துல கூட அந்த வரியை மட்டும் யூஸ் பண்ணிகிட்டாங்க. அதுல மஹ்மூத் கூட நம்ம தமிழ்  நடிகை ராமாபிரபா நடிச்சிருந்தார்.


Heezulia
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4953
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia Fri Dec 29, 2017 4:28 am

29.12.2017 

எம்.ஜி.ஆருக்கு பட்டங்கள குடுத்தாங்கல்ல? அதையெல்லாம் யார் குடுத்தாங்கன்னு தெரியும்னு நெனக்கிறேன். என்னபோல தெரியாதவங்களுக்கு. 

1. தமிழ்வாணன் 
மக்கள் திலகம் னு  1951 ல குடுத்தாராம். 

2. உறந்தை உலகப்பன்னு ஒருத்தர் 
புரட்சி நடிகர்னு  ஒரு பேர கலைஞர் கருணாநிதிகிட்டே சொன்னாராம். அவர் இந்த பேர பட்டமா 1952 ல அறிவிச்சாராம். 

3. நெல்லை நகராட்சி மன்றம் 1960 ல 
வாத்தியார் னு பட்டம் குடுத்ததாம். 

4. 
பொன்மனச்செம்மல் னு 1963 ல கிருபானந்த வாரியார் குடுத்தாராம். 

5. அறிஞர் அண்ணா 1967 ல 
இதயக்கனி னு குடுத்தாராம். 

6. 1972 ல மெரீனா கடற்கரையில வச்சு கே.ஏ.கிருஷ்ணமூர்த்தி 
புரட்சித் தலைவர் னு வழங்கினாராம். 

Heezulia
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4953
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia Fri Dec 29, 2017 4:34 am

29.12.2017 

பூம்புகார் - கலைஞர் திரைக்கதை வசனம் எழுதிய படம். 

இந்தப் படத்ல கவுந்தியடிகளாக [சமணப் பெண் துறவி] நடிக்க சுந்தராம்பாள்தான் சரியானவர் என்ற எண்ணமாம் கலைஞருக்கு. இளங்கோவடிகளின் கதையையே அங்கங்கே கொஞ்சம் மாற்றி அமைத்திருந்தாராம். சுந்தராம்பாளை அந்தப் படத்தில நடிக்க வைக்க பெரும்பாடு பட்டாராம். கேளுங்களேன். 

அப்போ சுந்தராம்பாள் விடுதலை இயக்க மேடைகளில் பாடிக்கொண்டிருந்த சமயமாம். 

கலைஞர் : பூம்புகார் படத்தில் நீங்கள் கவுந்தியடிகளாக, அதாவது சமண துறவியாக நடிக்க வேண்டுமே! 

சுந்தராம்பாள் : நானா ........................ சமண துறவியாகவா? நெவெர்.............. நானோ பழுத்த முருக பக்தை. நான் எப்படி......................... , அதுவும் உங்கள் வசனத்தில் ? 

கலைஞர் : நீங்கள் நடிப்பது கட்சிக்காகவோ, பகுத்தறிவிற்காகவோ இல்லை. தமிழுக்காக மட்டுமேதானம்மா.

சுந்தராம்பாள் ஒத்துக்கொண்டார். ஆனால் சும்மா இல்லை. 

சுந்தராம்பாள் : என் கணவர் [எஸ்.ஜி.கிட்டப்பாவாமே] மறைந்தபின் நான் நெற்றியில் இட்டுக்கொள்ளும் திருநீற்றினை மேக்கப்புக்காக கூட கலைக்க மாட்டேன். இது உறுதி. 

கலைஞர் : அதெப்படி முடியும் ? நீங்கள் நடிப்பதோ சமண முனிவர் பாத்திரம். அதற்கும், திருநீற்றுக்கும் ஒட்டாதே.

கலைஞர் சுந்தராம்பாளிடம் கெஞ்சியிருக்காராம். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒருவர் ஒரு யோசனை சொன்னாராம்.

அந்த ஒருவர் : திருநீற்றை நெற்றியில் பட்டையாகப் போடாமல், ஒற்றை நாமமாகப் போட்டு நடிக்கலாமே. 

சுந்தராம்பாளும் அப்படி நடித்துக்கொடுத்தாராம். 

இது மட்டுமில்லைங்க.

"அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது 
நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது"

இப்படி சிலப்பதிகாரத்தில் வரிகள் வருகின்றதாமே. அவ்வளவுதான். 

"இறைவனைக் கேலி செய்யும் வரிகளைப் பாட மாட்டேன், இறைவனை இல்லை என்று சொல்ல மாட்டேன்"

ன்னு சொல்லிட்டாராம், அம்மையார். கலைஞருக்கு வேற வழியில்லாமல போச்சாம். வார்த்தைகளைக் கொஞ்சம் 
மாத்திட்டாராம். 

"நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது" இப்டி மாத்திட்டாராம். 

கலைஞரை எப்படியெல்லாம் மடக்கியிருக்கிறார் என்று இப்போல்ல தெரியுது!! ஐயாவின் கண்களில் விரலை விட்டு ஆட்டியிருக்கார் போலியே. 

இது FBல படிச்சது.

Heezulia
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4953
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia Fri Dec 29, 2017 4:44 am

29 .12 .2017 

சிவாஜி உச்ச நடிகராக இருந்த காலத்திலேயே எத்தனையோ சூப்பரான டூயட் பாடல்களைத் தன்னுடைய படத்தில, அடுத்த ஹீரோக்களுக்கும், துணை நடிகர்களுக்கும் விட்டுக் கொடுத்திருக்கிறாராம். இவர் காலத்தில இருந்த மற்ற சில ஹீரோங்க, அவங்க படத்தில எத்தனை டூயட் பாடல் இருந்தாகூட எல்லாத்தையும் அவங்களேதான் பாடுவாங்களாம். மத்தவங்களுக்கு கொடுக்கவே மாட்டாங்களாம். 

உதாரணத்துக்கு ஒரு நிகழ்ச்சியாம். பழைய இயக்குனர் ஒருத்தர் ஒரு உண்மையைப் சொல்லிட்டுப் போனாராம். 



எழுபதுகளில, அவர் இயக்கிய ஒரு குதிரை வண்டிக்காரர் பற்றிய கலர் படம். அதில செகெண்ட் ஹீரோவா நடிச்ச ஒரு நவரசமான திலகத்துக்கு ஒரு டூயட் பாடலைத் தெரியாத்தனமா கொடுத்துட்டாராம். அம்புட்டுதாங்க, அதில நடிச்ச பெரிய நடிகர் ஒரே லடாயாம். அப்புறமா அந்த இயக்குனர் "என்னண்ணே நீங்க, விடுங்க, நீங்க தான் எத்தனையோ டூயட் பாடியிருக்கீங்களே. பின்னே என்னண்ணே, ஒரே ஒரு பாட்டுதானேண்ணே, போகட்டும்ண்ணே." ன்னு சொல்லி சமாதானப்படுத்தினாராம். 

பாடல் : கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம் 
படம் : என் அண்ணன் 
பெரிய நடிகர் : எம்.ஜி.ஆர்.
செகண்ட் ஹீரோ : முத்துராமன், விஜயநிர்மலாவுடன் 
இயக்குனர் : ப.நீலகண்டன் 

Heezulia
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4953
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK Fri Dec 29, 2017 1:43 pm

அவர்கள் 1977

எனக்கு மிகவும் பிடித்தபடம்

பூம்புகார் - நிகழ்வுகள் சுவாரஸ்யம்

உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை



SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Empty தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia Tue Jan 02, 2018 6:49 pm

02 .01 .2018 


நன்றி SK. 


பாலசந்தர் படங்கள் எல்லாருக்கும் பிடிக்காது. படம் கொஞ்சம் புரியாது. கதையும் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். 


பூம்புகார், சொல்லவா வேணும். அருமையான படம். 


புதுமையான படைப்புகள் தமிழ் சினிமா உலகத்துக்கு கெடச்ச வருஷம் 1954. ஒரு படத்ல கொறஞ்சது 10 பாட்டாவது இருக்குமாம். இந்த சமயத்ல பாட்டே இல்லாம மட்டுமல்ல, சண்டைக்காட்சி, டான்ஸ் கூட இல்லாமல ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆச்சாம், அந்த நாள்.

எஸ்.பாலசந்தர் தன்னோட கதையை ஏ.வி.எம்.செட்டியாரிடம் கொடுத்தார். இந்தப் படத்துக்கு பாட்டே வேணாம்னு பாலசந்தர் சொன்னபோ, ஏ.வி.எம். ஷாக்காயிட்டார். ஏன்னா, அவர் கிராமஃபோன் ரெகார்ட் வியாபாரம் மூலமாத்தான் சினிமாவுக்கே வந்தாராம். தன்னோட படங்கள்ல பாட்டு ஹிட்டாகணும்னு நெனப்பாரா இல்லியா? அவர்கிட்ட போயி, அந்தப் படத்ல பாட்டு வேணாம்னு சொன்னா, எப்டி இருக்கும் ! 

அது மட்டுமில்ல, பாட்டு இல்லாத படங்களை யாரும் விரும்பமாட்டாங்கல்ல. பாலசந்தர், செட்டியாருக்கு தைரியம் சொல்லி, செட்டியாரும் உம் கொட்டிட்டாரு. 

ஹீரோவாக நாடக நடிகர் கல்கத்தா விஸ்வநாதன் நடிச்சாராம். ஆனால் அவரது நடிப்பில் திருப்தி இல்லியாம். பாலசந்தர் தான் புதுமையை விரும்புவர் ஆச்சே.

சிவாஜி கணேசன்.

அவர் தான் ஹீரோ ஆனார். பண்டரிபாய், சூரியகலா, ஜாவர் சீதாராமன், டி.கே. பாலசந்தர் இதில் நடிச்சாங்க.

படம் வெளியானபோது, முதல் காட்சியைப் பார்த்ததும் ரசிகர்கள் தெகச்சுட்டாங்களாம். 

காரணம்

படத்தின் ஸ்டார்டிங்லியே சிவாஜி சுடப்பட்டு இறந்து விடுவார். அதுக்கப்புறமா வர்ற ஸீன்கள்ல, படத்ல நடிச்ச ஒவ்வொருத்தரும், சிவாஜியைக் கொன்னது பற்றி ஒவ்வொரு விதமாகக் சொல்வாங்க. அவங்க சொன்னது எல்லாமே flashback காட்சிகளா வரும். இந்த flashback காட்சில எல்லாம் சிவாஜி வருவார். இந்தப் புதுமையான படத்தை ரசிகர்கள் பாராட்டினாலும், அவங்களுக்கு படம் புரியலியாம். அதனால் box officeல படம் வரலியாம். ஆனாலும் இந்தப் படத்துக்கு ஒரு பெருமை இருந்துச்சு. தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப் படம். ஒரு முக்கியமான விஷயம். இப்படத்திற்குப் பின்னணி இசை யார் தெரியுமா ?

இயக்குனர் எஸ்.பாலசந்தர் தான்.

ஐந்து வருஷங்களுக்கு பின்னால மறுபடியும் இப்படம் ரிலீஸ் ஆனபோ நல்லா ஓடுச்சாம். 


Heezulia
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4953
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia Tue Jan 02, 2018 7:12 pm

02 .01 .2018 

15 வயசுள்ள ஒரு இளைஞன். ட்டி.கே.எஸ். நாடகக் குழுவின் நாடகங்கள்னா அவனுக்கு ரொம்ப பிடிக்குமாம். அவங்களோட எல்லா மேடை நாடகங்களையும் பார்த்துருவானாம். அவங்களுக்காகவே ஒரு கதை எழுதினானாம். அந்தக் கதையை அவங்ககிட்ட போய் குடுத்து, நான் உங்க ரசிகன்னு சொல்லியிருக்கான். 


ட்டி.கே.சண்முகம் அந்தக் கதையை வாங்கி பார்த்திருக்கார்.    அவருக்கு கதை புடிச்சு போச்சு. சூப்பர் கதையை எழுதியிருக்கிறானேனு ஆச்சரியப்பட்டாராம். உடனே அந்தக் கதையை நாடகமாவும் போட்டுட்டாராம். நாடகத்துக்கு அட்டகாசமான வெற்றி. ஒரே நாடகத்ல புகழின் உச்சிக்கு போயிட்டான் அந்த 15 வயசு இளைஞன்.

இளைஞன் இளைஞன்னா, அவன் யார்னு சொல்லணும்ல. பிற்காலத்ல பிரபலமடைந்த ஒரு இயக்குனர், ஸ்ரீதர்தான் அவர்.

அந்த நாடகத்தைப் படமாக்க ட்டி.கே.எஸ்.சகோதரர்கள் முடிவு செஞ்சு, தமிழ், இந்தி, சிங்களம், கன்னடம்னு இத்தன மொழிகள்ல வெளியிட்டனர். என்ன படம் ? 

ரத்தபாசம் 1954 

படமும் வெற்றி பெற்றது. ட்டி.கே.சண்முகம், வித்யாவதி, எம்.எஸ்.திரௌபதி, பகவதி, அஞ்சலிதேவி நடித்தனர். 

சின்ன வயசிலேயே கலைஞரான ஒரே இயக்குனர் ஸ்ரீதர்.


Heezulia
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4953
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia Tue Jan 02, 2018 7:21 pm

02 .01 .2018 

சரவணபவ யூனிட்டி நிறுவனங்களுக்குக் கதை எழுதிக் கொடுத்தாராம் ஸ்ரீதர். 

என்ன கதை? 

எதிர்பாராதது 1954 

இதாங்க கதையின் பேரு. இந்தப் படத்தோட தயாரிப்பாளர் உமாபதிக்கு ஒரு சந்தேகம் வந்துருச்சாம். என்னான்னு நெனக்கிறீங்க? 

இவ்வளவு சின்னப் பையனாக இருக்கிறானே. இவன் எப்டி இப்படிப்பட்ட அனுபவம் நெறஞ்ச வசனங்களா எழுதுறான், அவந்தான் எழுதுறானா இல்லேன்னா யார்கிட்டயாவது எழுதி வாங்கிட்டு வர்றானான்னுதான் அந்தச் சந்தேகம். 

என்ன திருவிளையாடல் தருமி ஞாபகம் வந்துருச்சா ?

சரி, மேலே படீங்க. 

இந்த சந்தேகம் வந்ததுக்கப்புறம், உமாபதி, ஸ்ரீதர் கொடுத்த கதையை வாங்கி வச்சுட்டு, அவரைத் தன் officeக்கு வரச்சொல்லி, அங்கேயே உட்கார்ந்து வசனங்களை எழுதச் சொன்னாராம். எப்டி இருக்குது பாருங்க அவர் நடத்திய சோதனை ? 

Test வைக்கிறாராமா. 

இந்த டெஸ்ட்டில் ஸ்ரீதர் பாஸாயிட்டார். 

அவரது வசனங்களைப் பார்த்து, உமாபதி ஆச்சரியப்பட்டு போனார்னா பாருங்களேன். படம் தயாரிக்கப்பட்டது. சி.எச்.நாராயணமூர்த்தி இயக்கி, எடிட்டிங்கும் செஞ்சாராம். அசத்தலாக வெற்றியடைந்த இந்தப் படத்ல சிவாஜி - பத்மினி ஜோடியோட, அசோகன், எஸ்.வரலட்சுமி, சகஸ்ரநாமம், நாகையாவும் நடிச்சிருந்தாங்களாம். இப்படி வெற்றிப் படங்களைக் கொடுத்த ஸ்ரீதர் வெற்றிவாகை சூட கேக்கவா வேணும் !!

Heezulia
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4953
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia Wed Jan 03, 2018 1:10 am

03.01.2018 

MGR பேர்ல பதிவு தபால் வந்தா வாங்கமாட்டாராம். எதனால தெரியுமா? தெரிஞ்சதுதானேன்னு சொல்லாதீங்க. 

அவருடைய நாடோடி மன்னன் உருவாயிட்டு இருந்த சமயமாம். அவருக்கு ஒரு பதிவுத் தபால் வந்துச்சாம். அவரும் கையெழுத்து போட்டு வாங்கிட்டாராம். வாங்கி பிரிச்சு பார்த்தா ..................... அதுல ஒரு பேப்பர் இருந்துச்சாம். அதுல ஒண்ணுமே எழுதியிருக்கலியாம். வெறும்.................. எம்ப்ட்டி பேப்பர். MGR க்கு ஆச்சரியம், எரிச்சலாம். அதை போட்டுட்டு, நாடோடிமன்னன் வேலையில மூழ்கிட்டாராம். 

நாடோடி மன்னன் ரிலீஸ் ஆயிருச்சு. படம் கன்னா பின்னான்னு ஓடிட்டு இருந்துச்சாம். இந்த சமயத்தில ஒரு பதிவுத் தபால். அதுவும் வக்கீல் நோட்டீஸாம். என்னடா இதூன்னு MGR பிரிச்சு பார்த்தாராம். முந்தி ஒரு ரெஜிஸ்டர்ட் போஸ்ட் வந்துச்சே,அதே ஆள் சார்பா வந்த வக்கீல் நோட்டீஸ். அதுல "நாடோடி மன்னன் கதை என்னோடது. அந்தக் கதையை ரொம்ப மாசங்களுக்கு முன்னால உங்களுக்கு அனுப்பி இருந்தேன். ஆனா இப்போ என்னான்னா, அந்தக் கதையை படமா நீங்க எடுத்துட்டீங்க. ஆனா படத்தில என் பேர் இல்லியே. அதற்கான நஷ்ட ஈடு எனக்கு வேணும்" னு எழுதியிருந்துச்சாம். MGR க்கு பயங்கரமான ஷாக். அவருடைய வக்கீலை வச்சு பதில் அனுப்பிட்டாராம்.

ஆனாலும் "ஜனங்க இப்படீல்லாமா செய்வாங்க?" னு சொல்லிட்டே இருந்தாராம். அதுக்கப்புறமா ரெஜிஸ்டர்ட் போஸ்ட் வந்தா, சந்தேகமா இருந்துச்சுன்னா வாங்றதே இல்லியாம். 

Heezulia
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4953
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK Wed Jan 03, 2018 11:23 am

அந்த நாள் அருமையான படம் இதை ஒரேயொரு முறை தான் பார்த்திருக்கிறேன் மீண்டும் பார்க்க வாய்ப்பு கிடைக்க காத்திருக்கிறேன்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 29 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 19 ... 29  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum