ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 14 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 14 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 14 Poll_c10 
Dr.S.Soundarapandian
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 14 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 14 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 14 Poll_c10 
heezulia
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 14 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 14 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 14 Poll_c10 
i6appar
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 14 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 14 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 14 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிஞ்சதும் தெரியாததும்

+7
ரா.ரமேஷ்குமார்
Dr.S.Soundarapandian
பழ.முத்துராமலிங்கம்
SK
ayyasamy ram
T.N.Balasubramanian
heezulia
11 posters

Page 14 of 29 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 21 ... 29  Next

Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 14 Empty தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia Sat Dec 16, 2017 6:47 pm

First topic message reminder :

16.12.2017

'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.

சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார்.  அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?

எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?

உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.

Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4953
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 14 Empty தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia Sat Jan 13, 2018 4:00 am

13.01.2018 

நீர்க்குமிழி  1965 

இதுவும் பாலச்சந்தரின் மேடை நாடகம். படங்களுக்கு வசனமும், கதையும் மட்டுமே எழுதிகிட்டே இருந்தவருக்கு, இந்த படத்தில முதல் முதலா டைரக்ட் செய்ய ஒரு சான்ஸ் அடுச்சிருச்சு. ரொம்ப நா………..ளா அவர் டைரக்ட் செய்ய படமே கெடக்கலியேன்னு    எதிர்பாத்துகிட்டே   இருந்தாராம்.   இந்த   படம்  கெடச்ச உடனே சொல்லணுமா?  ஒரே சந்தோ…………….சம்தான்.  ஜாக்பாட் அடிச்ச மாதிரி.  

நாடகத்தல  சௌகார் ஜானகி, நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், 
V கோபாலகிருஷ்ணன் இவங்க படத்திலேயும்  நடிச்சிருக்காங்க. ஏ.கே.வேலனாலதான் பாலசந்தர் டைரக்டர் ஆனாராம். சர்வர் சுந்தரம் படத்தையே இயக்க ஆசைப்பட்டாராம் பாலசந்தர்.  அது முடியாமல் போச்சு. அந்த ஆச இந்த நீர்க்குமிழி மூலமா நிறைவேறிடுச்சாம்.
 
நீர்க்குமிழின்னு அது நிலையில்லாததுதானே, முதல் முதல் இயக்கப் போற படத்துக்கு அதே பேர்தான் வைக்கணுமா, பேரை மாத்தலாமேன்னு நண்பர்கள் வட்டாரம் சொல்லுச்சாம். பாலசந்தர் கேக்...............கலியே. அந்த பேர்ல தானே நாடகம் வெற்றிகரமா நடந்துச்சு, அதனால அந்தப் பேரே இருக்கட்டும்னு சொல்லிட்டாராம். சரிதானே.
 
குறைந்த பட்ஜெட் படம்தான். ஆனால் வெற்றிப்படம்.
- ஹிந்து

Heezulia
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4953
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 14 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia Sat Jan 13, 2018 4:59 am

13.01.2018

வெண்ணிற ஆடை 1965

முழுக்க முழுக்க புதுமுகங்கள வச்சி இந்த படம் எடுக்கணும்னு ஸ்ரீதர் நெனச்சு துணிஞ்சு அவர் எடுத்த படம்.   முக்கியமா ஜெயலலிதா,   ஸ்ரீகாந்த்,  நிர்மலா, மூர்த்தின்னு நாலு ஸ்டார்கள தமிழ் சினிமாவுக்கு அறிமுக படுத்திய பெருமை ஸ்ரீதருக்கே சேரும். 

ஹீரோயினா யார போடலாம்னு ஸ்ரீதர் யோசிச்சாராம்.  அவருக்கு ஒரே குழப்பம்.  அந்த சமயத்தில கன்னட படங்களில ஜெயலலிதா நடிச்சிக்கிட்டு இருந்தாராம்.  அவரபத்தி  ஸ்ரீதர் கேள்விப்பட்ட்டாராம். அவரோட  படங்களையும் பார்த்திருக்கார். புடிச்சுப்போச்சு. ஒடனே book  செஞ்சுட்டாராம்,  இந்த படத்த்துக்காக. 
 
படமும் முடிஞ்சுது.  அதுக்கப்புறமா ஒரு இடத்துக்கு போகுமே!  அதாங்க.............  சென்ஸார்னு ஒண்ணு இருக்கே.  அங்க போய் வந்துச்சாம் இந்தப் படம்.  எல்லாரும் அதிர்ந்து போனாங்க.  அவங்க அதிர்ச்சிக்கு என்ன காரணம்னு நெனைக்கிறீங்க!  இந்த படம் இருக்கே 'வெண்ணிற ஆடை'  அதுக்குங்க 'A'  சர்டிபிகேட் குடுத்துட்டாங்களாம்டோய்.  ஏதோ ஒரு சீன் வந்துச்சாம்.  அதாங்க, ஜெயலலிதா கையில்லாத சட்டை போட்டுட்டு “அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டு பாடும்”னு பாடிட்டே அருவியில குளிக்கிறாரே, அதுக்காம்.  அதுக்கு போய் தேவையில்லாம அப்டீ ஒரு சர்டிபிகேட் குடுத்துட்டாங்களாம்.  இடிஞ்சு போய்  உக்காந்துட்டாராம் ஸ்ரீதர்.


இதுல ஒரு வேடிக்கையும், காமெடியும் என்னன்னா, ‘A’ சர்டிபிகேட் படம்னாக்கா, 18 வயசுக்கு மேல உள்ளவங்கதானே இந்தப் படத்தை பார்க்கணும். ஆனா.................. இந்தப் படத்தில நடிச்ச ஜெயலலிதாவே .......................... இந்தப் படத்தை அப்போ பாக்க முடியாதுல்ல. ஏன்னா............ அப்போ அவருக்கு 17 வயசுதானே. ஹஹஹஹாஹஹா .............. 

 
‘A’ சர்டிபிகேட் கொடுத்ததும், sex படம்னு நெனச்சு, தியேட்டர்கள்ல ஈயோட்டிட்டு இருந்தாங்களாம்.  இளவட்டங்கள் தான் படத்தை பாக்க போனாங்களாம்.  அதுவும் முதல் நாள் முதல் ஷோ.  ஆனா  அவங்கள்லாம் படம் முடிஞ்சு வெளியே போகும்போது தியேட்டர்ல உக்காந்திருந்த சீட்ட எல்லாம் கிளிச்சுட்டு போனாங்களாம்.  அதுமட்டுமா?   கலாட்டா வேற செஞ்சாங்களாம். 

சில தியேட்டர்கள்ல  பாதி படத்திலேயே கலாட்டா  செய்ய ஆரம்பிச்சுட்டாங்களாம்.  இதுக்கெல்லாம் என்ன காரணம்?  படம்  பார்த்த  அவங்களுக்கு படா பேஜா....................................ரா போச்சாம். என்னாத்துக்கு?  ‘இந்த படம்  முழுக்க முழுக்க ஒரு நல்ல குடும்ப கதை’னு இந்தப் படத்தின் போஸ்டர்ல போட்டிருந்துச்சாம்.  அதாங்க காரணம்.  எப்படி இருக்கும் ஸ்ரீதருக்கு? யோசிச்சு பாருங்க.

இப்பேர்பட்ட ரசிகர்கள வச்சுகிட்டு படத்த எப்படீங்க  ஓட்ட முடியும்?  தியேட்டர்காரங்க பாத்தாங்களாம். மூணே வாரத்துல நிறைய தியேட்டர்லே இருந்து   எடுத்துட்டாங்களாம்.  


அப்புறமாங்க,  இந்த படம் ஓடோ ஓடுன்னு ஓடுச்சாம். அதுக்கு என்ன காரணம்னு நெனைக்கிறீங்க?    உங்களுக்கெல்லாம் தெரியாததா என்ன?  இருந்தாலும் சொல்றேன், கேளுங்க.   இல்ல இல்ல ................ எழுதுறேன் படிங்க.  படம் நல்லா ஓடினதுக்கு காரணம்  பத்திரிகைகள் தானாங்க.  படத்த பார்த்த  பத்திரிகைகாரங்க   எழுதின  விமர்சனங்கள் 
தான். இதுதாங்க ஒரு திருப்புமுனையா இருந்துச்சாம்.  

அப்படியே பாருங்க கொஞ்சம் கொஞ்சமா............ கிராமங்களில இந்த படம் pickup ஆச்சாம்.  "அட, படம் நல்லா இருக்கே" ன்னு பேச்சு அடிபட்டுச்சாம்.  உடனே ஸ்ரீதர் சுறுசுறுப்பாயிட்டாராம்.  வேற தியேட்டர்கள்ல படத்த ரிலீஸ் செஞ்சாராம்.  அப்புறம் என்ன?  நிக்கா.............ம ஹௌஸ்புல்தான்.  ஸ்ரீதருக்கு இந்த படம் இந்த வருஷத்துல பெரிய பாராட்டை  வாங்கி தந்துச்சாம். நிர்மலாவையும்,  மூர்த்தியையும் அவங்க பேருக்கு முன்னால 'வெண்ணிற ஆடை' ன்னு சொன்னாதான் தெரியுறமாதிரி ஆயிருச்சு.  
 
"நீராடும் கண்கள் நீயே " ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல?   அந்த அழகான பாட்டை  ஜனங்க ஏத்துக்குவாங்களா 
மாட்டாங்களான்னு ஸ்ரீதருக்கு ஒரு குழப்பம் வந்துருச்சாம்.  அதனால அந்த பாட்டு படத்துல இல்லியாமே!!    அப்டீயா?  எனக்கு ஞாபகம் இல்ல.

இந்த ஒரே படத்தில ஜெயலலிதாவுக்கு நட்சத்திர அந்தஸ்து கெடச்சிருச்சு. அதனாலதானே அடுத்த படமே மக்கள் திலகத்துடன் நடிக்க போய்ட்டார்.

ஸ்ரீதரின் படங்களில் வின்சென்ட்தான் எப்பவும் ஒளிப்பதிவு செய்வாராம். ஆனா இந்தப் படத்தில அவர் இல்லியாம். சமூகப்பட டைரக்டர் சாந்தாராம், தன்னுடைய படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்த பாலகிருஷ்ணாவை வெண்ணிற ஆடை படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீதரிடம் அனுப்பி வச்சாராம்.
- சில பகுதிகள் ஹிந்து 

Heezulia   மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4953
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 14 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia Sat Jan 13, 2018 11:13 pm

13.01.2018 

செல்வம்  1966 

இந்த படத்தோட கதை அழுத்தமில்லா..........த, சீரியஸ் இல்லா…………..த கதையாம்.  கே.ஆர்.விஜயா, சிவாஜி ஜோடியாக நடிச்ச முதல் படமாம்.  'கை கொடுத்த தெய்வம்' படத்துக்கப்புறம் கே.எஸ்.ஜியும், சிவாஜியும் சேர்ந்த படமாம். 

வி.கே.ராமசாமி கொஞ்ச கஷ்ட காலத்தில இருந்தாராம்.  அப்போ அவர் சிவாஜிட்டே போய் உதவி கேட்டாராம்.  சிவாஜியும் ஒடனே ஒத்துகிட்டு இந்த படத்த குறைந்த செலவில எடுக்க ஹெல்ப் செஞ்சாராம்.  1966 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி 1967 பொங்கல் வரை ஓடுச்சாம்.  

'எனக்காகவா.. நான் உனக்காகவா' முழுப்பாடலையும் காட்சியமைப்பையும், கே.எஸ்.ஜி., தான் எடுத்த (முத்துராமன். பிரமீளா நடித்த) வாழையடி வாழை (1973) படத்தில பயன்படுத்தியிருப்பாராமே. அப்டியா?  'என்னடி இத்தனை வேகம்' பாடலும், 'அவளா சொன்னாள்.. இருக்காது' பாடலும் தஞ்சை மாவட்டம் கல்லணையில் படமாக்கப்பட்டவையாம்.  செல்வம் ரிலீஸானபோ சரஸ்வதி சபதம் பல ஊர்களில் நல்லா  ஓடிட்டிருந்துச்சாம். செல்வம் 
படத்தோடு வெளியான மத்த  கலர்ப்படங்கள் செல்வம் அளவுக்கு ஓடலியாம். 

பாட்டூஸ் : 
என்னடி இத்தனை வேகம் - சுசீலா 
அவளா சொன்னாள் இருக்காது - TMS
லல்லி லில்லி ஜிம்மி ஜிக்கி - LR ஈஸ்வரி 
ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல - சுசீலா & TMS 
எனக்காகவா நான் உனக்காகவா - ஜமுனாராணி & தாராபுரம் சுந்தரராஜன் 

Heezulia 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4953
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 14 Empty தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia Sun Jan 14, 2018 12:07 am

13.01.2018

மேஜர் சந்திரகாந்த் 1966 

சென்னை Accountant General Office ல பாலச்சந்தர் வேலை பார்த்தவராம். அந்த அலுவலகத்திருக்கு தமிழ் தெரியாத ஒருத்தர்  அக்கௌண்டன்ட் ஜெனரலா பதவி ஏற்க வந்தாராம். அவருக்கு வரவேற்பு கொடுக்க, பாலச்சந்தர் இங்லிஷ்ல ஒரு சின்ன நாடகத்தை எழுதினாராம். அந்த நாடகம் அந்த அலுவலகத்தில ரொம்ப பிரமாதமா பேசப்பட்டதாம். 

உடனே பாலச்சந்தருக்கு  ஒரு ஆசை. அதே நாடகத்தை வெளாவாரியா நாடக மேடையில அரங்கேற்றுர மாதிரி  தமிழில பெரீ.............ய நாடகமா எழுதி 'மேஜர் சந்திரகாந்த்' னு பேரையும் வச்சாராம். அந்த நாடகமும் அட்டாகாசமாய் பேர் வாங்கி, பாலச்சந்தரும், சுந்தரராஜனும் புகழடஞ்சாங்களாம். 

இந்த நாடகத்தில நாகேஷ் நடிப்பதாக மொதல்ல முடிவாகலியாம்.  
மணவாளன் என்றவர்தான் ஆரம்பத்தில மோகன் என்கிற அந்த பாத்திரத்தில் நடிச்சிக்கிட்டு இருந்தாராம். இவர் பாலச்சந்தர் நாடகங்களில் வழக்கமா நடிக்கிரவராம். அப்புறமாதான் பாலச்சந்தர் நாகேஷோட மத்த நாடகங்களை பார்த்து தன்னோட நாடக க்ரூப்பில் சேர்த்துக்கிட்டாராம். நாகேஷுக்காகவே......... பாலச்சந்தர் எழுதிய கதைதான் 'சர்வர் சுந்தர'மாம்.

மெய்யப்ப செட்டியார் 'சர்வர் சுந்தரம்' நாடகத்தை பார்த்து ரொம்பவும் இம்ப்ரெஸ் ஆயிட்டாராம். அப்போதான் 'மேஜர் சந்திரகாந்த்' நாடகத்தை ஏ.வி.எம். பேனர்ல படமா எடுக்க சொன்னாராம். உடனே பாலச்சந்தர் திரைக்கதையை எழுத ஆரம்பிச்சுட்டாராம். 

ஏ.வி.எம்.குமரன், வி குமார் கிட்ட போய் இந்த படத்துக்கு ம்யூசிக் போட  சொன்னாராம்.  அவரும் சரி சொல்லிட்டு பாலச்சந்தர் கூட இசையமைக்கிறத பத்தி டிஸ்கஸ் செய்ய ஆரம்பிச்சுட்டாராம். 
கொஞ்ச நாள் கழிச்சு ஏதோ சொல்ல முடியாத காரணங்களால படத்த பத்தி பேச்சு மூச்ச காணோமாம். இந்த சமயத்தில குமாரை ம்யூசிக் டைரக்டரா வச்சுக்கலாமா வேண்டாமான்னு ஒரு சர்ச்சை வந்துருச்சாம். 

செட்டியார் எம்.எஸ்.வி. தான் வேணும்னு சொன்னாராம். குமார் கவலைப்பட ஆரம்பிச்சுட்டாராம். ஆனா பாலச்சந்தர் குமாரை உடும்பு பிடியாய் பிடிச்சுகிட்டு இருந்தாராம். செட்டியார் விருப்பமில்லாம சம்மதிச்சாராம். கொஞ்ச நாள் கழிச்சு படப்பிடிப்பு சூடு பிடிக்க ஆராம்பிருச்சாம்.  குமார் திருப்..................தியாய் ஒரு பெருமூச்சு விட்டாராம். அவர்தான் MDன்னு தெரிஞ்சிருச்சுல்ல! 

பாட்டுகளில "துணிந்து நில் துணிந்து செய் துணிந்து செல்" என்கிற பாட்டு மட்டும் சுரதாவும், மத்த நாலு பாட்டுகளையும் வாலி எழுதியிருக்கிறார். 

இந்த படம் இந்தியில 'ஊன்ச்சே லோக்' என்கிற பேர்ல எடுக்கப்பட்டதாம். இது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லீங்க.  அதுல ஜெயலலிதா ரோல்ல யார் நடிச்சாங்கன்னு தெரியுமாக்கும்.  கே.ஆர்.விஜயா!!!

சுந்தரராஜன் என்கிற பேர் மேஜர் சுந்தரராஜன்னு மாருச்சு. பாலச்சந்தரின் படத்துல ஜெயலலிதா நடிச்ச ஒரே படமாமே. இந்த வருஷத்தில வி.குமாரின் இசையில வந்த ஒரே படமாம்.

பாட்டூஸ் : 
ஒரு நாள் யாரோ என்ன பாடல் - சுசீலா 
கல்யாண சாப்பாடு போடவா - TMS 
நேற்று நீ சின்ன பப்பா - சுசீலா & TMS 
நானே பனி நிலவு வருவேன் - சுசீலா 

Heezulia 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4953
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 14 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by Guest Sun Jan 14, 2018 12:34 am

சுசிலாவின் குரலில் இனிமை...

ஒரு நாள் யாரோ என்ன பாடல்...

..........................
avatar
Guest
Guest


Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 14 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by Dr.S.Soundarapandian Sun Jan 14, 2018 4:05 pm

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 14 3838410834 தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 14 3838410834 தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 14 1571444738 தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 14 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 14 Empty தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia Sun Jan 14, 2018 4:48 pm

14.01.2018 

இந்த அருமையும், நன்றியும் நான் அனுப்பிய தகவல்களுக்கா, 

மூர்த்தி அனுப்பின பாடலுக்காகவான்னு தெரியலியே.  

Heezulia 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4953
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 14 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia Sun Jan 14, 2018 5:15 pm

13.01.2018

நன்றி மூர்த்தி. 

நான் இதுவரை நூற்றுக்கணக்கா........................ன பாட்டு அனுப்பியிருக்கேன்.  அனுப்பிட்டும்  இருக்கேன்,  ஈ.............. ஸியா இருக்கு. நீங்க இப்ப அனுப்பியிருக்கீங்களே, இதே.............. மாதிரிதான் பாட்டு வரி மேல கிளிக்கினா பாட்டு வரும். 

ஆனா இங்க உள்ள முறைதான் தெரியல, புரியல. இப்ப இது உங்களுடைய பாட்டு லிங்க். 

a href="http://cloud3.raag.me/Tamil/Best%20Of%20P%20Susheelaa%20CD%202-(P%20Susheela)/Oru%20Naal%20Yaaro-P%20Susheela[48]::Raag.Me::.mp3

இதை என்ன செஞ்சீங்கன்னு ஸ்டெப் பை ஸ்டெப்பாக சொல்லுங்க. கத்துக்குறேன். 

என்னோட அத்...........................தனை பாட்டுக்களையும் mediafire & 4shared ல இருக்கு.  இதுல இருக்கிற என்னுடைய பாட்டுக்களை நான் எப்படி அனுப்புறது?  

வெளாவா......................ரியா சொல்லுங்க. 

அட்வான்ஸ் நன்றி

Heezulia 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4953
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 14 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by Guest Sun Jan 14, 2018 8:54 pm

அதிலென்ன சந்தேகம்.நிச்சயமாக பாராட்டுகளும் நன்றியும் Heezulia  உங்களுக்கானதுதான். பாடல்களை YouTube அல்லது வேறு பாடல் தளங்களில் இருந்து நேரடியாக இணைத்து விடலாம். சுலபம். ஆனால் கேட்ட படித்த தகவல்களை தொகுத்து தருவது என்பது பெரிய வேலையாகும். அதனால் எல்லாப் பாராட்டுகளும் நன்றியும் உங்களுக்குக்கானது தான்.சந்தேகமே வேண்டாம்.
avatar
Guest
Guest


Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 14 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by Guest Sun Jan 14, 2018 9:06 pm

பாடல்களையோ அல்லது வேறு எந்தப் பதிவையோ ஒரேயடியாக பதிவிட்டால் யாரும் படிக்க மாட்டார்கள். சிறிய பதிவுகளாக பதிவிடும் போது படிப்பதற்கு ஆர்வத்தை கொடுக்கும். பதிவிடும் பதிவுகளுடன் சம்பந்தப்பட்ட பாடல்களையும் இணைக்கலாம்.

ஏனெனில் பலரும் பாடல்களை CD/DVD ,YouTube என வேறிடங்களில் கேட்டிருப்பார்கள்.பலரும் கேட்காத,அரிதான,நல்ல பாடல்களை இணைக்கும் போது ஆர்வத்துடன் கேட்பார்கள்,படிப்பார்கள். இது என்னுடைய கருத்தாகும்.தவறாகவும் இருக்கலாம்.

ஈகரை தளத்திலேயே வசதிகள் பல உண்டு.இந்தப் படத்தில் உள்ளது போல் செய்யவும்.

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 14 MkjRV6lnQcejVqbw7lTT+Capture3

வேறு Blog (Wordpress/blogger) போன்ற தளங்களில் பதிவிட அதே போன்று சிறிய வேறுபாட்டுடன் இருக்கும்.

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 14 Insert-Link

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 14 Hyperlink-Wordpress-Window
avatar
Guest
Guest


Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 14 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 29 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 21 ... 29  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum