ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

2 posters

Go down

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!   Empty ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 13, 2017 8:47 pm

ராமர் பாலம் இருந்தது உண்மை தான்-அமெரிக்க ஆராய்ச்சி முடிவுகள்- வீடியோ

வாஷிங்டன்: இந்தியா மற்றும் இலங்கை நடுவே ராமேஸ்வரம் பகுதியில் கடலுக்கு அடியில் பாலம் இருப்பது உண்மையா, பொய்யா என்ற விவாதத்திற்கு அமெரிக்க டிவி சேனல் விடையளித்துள்ளது. 'சயின்ஸ் சேனல்' இதுகுறித்த ஆய்வு ப்ரமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ராமர் சேது குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. ராமாயண இதிகாசத்தின்படி, இந்தியா-இலங்கை நடுவே கற்களால் பாலம் கட்டப்பட்டதாகவும், ராமர், தனது பரிவாரங்கள், வானர படையின் உதவியோடு பாலம் கட்டி இலங்கைக்கு போர் தொடுத்து சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!   GKx0fUpIRXKFkW8HxGyF+13-1513147111-ram-setu-is-man-made-claims-promo-on-us-tv-channel-2
சேது சமுத்திர திட்டம்

அதேநேரம், இது இயற்கையாக அமைந்த மணல் திட்டுதான் என்றும், ராமாணயத்தில் கூறப்படுவது கற்பனை என்றும் வாதிடுவோரும் உண்டு. இந்த நிலையில்தான் சேது சமுத்திர திட்டம் என்ற பெயரில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒரு கடல் வழி திட்டம் கொண்டுவந்தது. இலங்கைக்கும், இந்தியாவுக்கும் நடுவேயான ராமர் பாலம் பகுதியிலுள்ள மணல் திட்டுகளை இடித்துவிட்டு அந்த வழியாக கப்பல் போக்குவரத்து நடத்த திட்டமிடப்பட்டது.

நன்றி
ஒன்இந்தியா தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!   Empty Re: ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 13, 2017 8:51 pm

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!   HXGpTKFTsyrfTnZ5oehj+13-1513147119-ram-setu-is-man-made-claims-promo-on-us-tv-channel-1

சேது சமுத்திர திட்டத்திற்கு எதிர்ப்பு

ஆனால், சேது சமுத்திர திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்துக்களின் நம்பிக்கை சார்ந்த எதிர்ப்பாக மட்டுமின்றி, சுற்றுச்சூழலியளாளர்கள் சிலரும் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த கடல் பிராந்தியத்தின் சுற்றுச்சூழலை இத்திட்டம் கெடுத்துவிடும் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும், ராமாயணம் தொடர்பான வாத விவாதங்களே இந்த திட்டத்தில் அதிகம் எதிரொலித்தது.

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!   Xr3OVNKR9C3eE35NuIFe+13-1513147103-ram-setu-is-man-made-claims-promo-on-us-tv-channel-3

அமெரிக்க சேனல்

இந்த நிலையில், அமெரிக்காவின் சயின்ஸ் சேனல் வெளியிட்ட வீடியோவில், ராமர் பாலம் அல்லது ஆதாம் பாலம் என அழைக்கப்படும் இந்த பாலம், மனிதர்களால்தான் கட்டப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதுவரை அந்த வீடியயோ 10 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அந்த வீடியோவை டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!   Empty Re: ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 13, 2017 9:43 pm

7000 ஆண்டுகள் பழமையானது

அந்த வீடியோவில் கூறப்பட்ட தகவல் இதுதான்: இந்தியா-இலங்கை நடுவேயான இந்த பாலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கற்கள் சுமார் 7000 ஆண்டுகள் பழமையானவை. இந்த பாலம் 30 மைல்கள் நீளமானவை. அங்கு மணல் திட்டுங்கள் உருவாகியுள்ளது உண்மைதான். ஆனால் அவை கற்களால் பாலம் அமைக்கப்பட்ட பிறகே உருவாகியுள்ளன. மணல் திட்டுக்களின் வயது சுமார் 4000 ஆண்டுகள்தான். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா ஆய்வு

"மணல் திட்டுக்கு முன்பே அங்கு கற்களை கொண்டு மனிதர்கள் பாலம் அமைத்துள்ளனர். எனவே இதில் பல கதைகள் ஒழிந்துள்ளன" என்கிறார் தெற்கு ஒரேகான் பல்கலைக்கழக வரலாற்று அகழ்வாராய்ச்சியாளர் செல்சியா ரோஸ். இதனிடையே அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளதை பல நெட்டிசன்கள் வரவேற்றாலு சிலரோ, இதை இந்திய அரசே ஆய்வு செய்திருக்க வேண்டும். அமெரிக்க சேனல் கூறிதான் நாம் தெரிந்து கொள்ள வேண்டுமா என ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளதையும் பார்க்க முடிகிறது.

நன்றி
ஒன்இந்தியா தமிழ்



Last edited by பழ.முத்துராமலிங்கம் on Wed Dec 13, 2017 9:54 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!   Empty Re: ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 13, 2017 9:48 pm

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!   Empty Re: ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 13, 2017 9:52 pm

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!   Empty ராமர் பாலம் உண்மைதானா?'- அறிவியல் சேனலின் முன்னோட்டம்; நன்றி தெரிவித்த ஸ்மிருதி இராணி

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 14, 2017 6:52 am

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!   IT7HKwvoTMOxain1IrNz+ree1jpg



வானரங்கள் கூடி கட்டி முடித்ததாக ராமாயணத்தில் கூறப்படும், இந்தியா - இலங்கையை இணைக்கும் ராமர் பாலம் உண்மையா? இல்லையா? அதை அழித்துவிட்டு சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றலாமா? கூடாதா?- இது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நீண்ட கால வழக்கு. நாம் அதைப்பற்றி விவாதிக்கப்போவதில்லை.

நமது கோணம் வேறு. அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி குழுமமான டிஸ்கவரி சேனல் குழுமத்தினுடைய சயின்ஸ் சேனல் (Science Channel) ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ தொடர்பானது இந்தச் செய்தி.

பழம்பெரும் இந்துப் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியா - இலங்கை இடையேயான கடற்பாலம் உண்மையானதா? அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆம் என்கின்றன." (Are the ancient Hindu myths of a land bridge connecting India and Sri Lanka true? Scientific analysis suggests they are.”) என சயின்ஸ் சேனல் ட்வீட் செய்துள்ளது.

நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!   Empty Re: ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 14, 2017 6:55 am

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!   QzFTQHUmRomuBPZrCCGB+reejpg

அந்த ட்வீட்டுடன் ஒரு முன்னோட்ட வீடியோவை சயின்ஸ் சேனல் வெளியிட்டது அதில், "செயற்கைக்கோள் ஒன்று இந்தியப் பெருங்கடலில் உள்ள ஆழமற்ற கடல்பரப்பின்மீது தன் பார்வையை குவிக்கிறது. அந்த செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படத்திலிருந்து இந்தியா - இலங்கை இடையே இந்தியப் பெருங்கடலில் தொடர் சங்கிலிபோல் தோற்றமளிக்கும் சில படிமங்கள் இருப்பதைக் காண முடிகிறது" என்று அறிவிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து சில ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கருத்துகளை முன்வைக்கின்றனர். அவர்களில் ஓர் ஆராய்ச்சியாளர், "இந்தியா - இலங்கை இடையே அமைந்துள்ள மணல் திட்டின் மேற்பரப்பில் ஆங்காங்கே சில பாறைகள் உள்ளன. மணல் பரப்பின் தன்மைக்கும் அந்த பாறைகளின் தன்மைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது" என்கிறார்.

மற்றுமொரு ஆராய்ச்சியாளர், "இதைத்தான்.. மந்திரப் பாலம் என இந்து புராணப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர். கடவுள் ராமர் அமைத்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்" எனக் கூறுகிறார்.

செல்ஸீ ரோஸ் என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர், "அந்த மணல்திட்டின் மேல்பரப்பில் இருக்கும் பாறைகள் மணல்திட்டைவிட முந்தைய காலத்தில் உருவாகியிருக்கிறது. மணல் திட்டு வெறும் 4,000 ஆண்டுகளுக்கு முந்தையதே ஆனால் அந்தப் பாறைகள் 7000 ஆண்டுகளுக்கு முந்தையது" எனப் பேசுகிறார்.
ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!   FCw6Z9ZRyiUEVImfwWAD+DQx3HqPX4AAGTe7
இந்த செய்தி பதிவிடப்பட்ட நேரத்தில் இந்த முன்னோட்ட வீடியோவை சுமார் 2,92,000 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.

சயின்ஸ் சேனல் பகிர்ந்த ட்வீட்டை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தனது ட்விட்டர் பக்கத்தில் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று வணங்கி ரீட்வீட் செய்திருக்கிறார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!   Empty அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவால் ராமர் பாலம் குறித்த பாஜ.வின் நிலைப்பாடு உறுதியாகியுள்ளது

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 14, 2017 7:48 am

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!   XrpgPY8RQb2ywweCdPrY+Dkn_Daily_News_2017_8306041955948
புதுடெல்லி : ராமர் பாலம் தொடர்பான அமெரிக்காவின் ஆய்வு, பாஜ.வின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரம் அருகே கடலுக்கடியில் அமைந்துள்ள ராமர் பாலம் ராமாயண காலத்தில் சீதையை மீட்க சென்றபோது கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால், இது இயற்கையாக எழுந்த மணல் திட்டுக்களே என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் ராமர் பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் என்று கண்டறிந்துள்ளனர். டெல்லியில் பாஜ தலைமையகத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அளித்த பேட்டியில், ‘‘இந்து மதம் குறித்த கேள்விகள் வரும்போது காங்கிரஸ் கட்சி எப்பொழுதும் மன்னிப்பு கோரும் நிலைக்கு தள்ளப்படுவது துரதிர்ஷ்டவசமானது. அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வை அடுத்து ராமர் பாலம் குறித்த சர்ச்சைகள் முடிவுக்கு வந்துள்ளன. ராமர் பாலத்திற்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்.

அதற்கு எந்த சேதமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நம்முடைய மதம் குறித்து நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்’’ என்றார். முன்னதாக அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகள் பாஜ.வின் நீண்டகால நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி உள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘‘ராமர் பாலம் இயற்கையான மணல் திட்டுக்கள் அல்ல. அது மனிதர்களால் கட்டப்பட்டதுதான் என்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் தற்பொழுது கண்டறிந்துள்ளனர். நமது நம்பிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முந்தைய காங்கிரஸ் அரசு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. இந்த ஆய்வு முடிவுக்கு அந்த கூட்டணி தற்பொழுது என்ன பதில் சொல்லப் போகிறது? ராமர் பாலம் நமது பாரம்பரியத்தை பறைசாற்றும் சின்னமாகும்” என்று கூறியுள்ளார்.
நன்றி
தினகரன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!   Empty Re: ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

Post by T.N.Balasubramanian Thu Dec 14, 2017 3:12 pm

நன்றி பழ முத்துராமலிங்கம் அவர்களே.ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!   1571444738

வெவ்வேறு தலைப்பில்/ பகுதியில் நீங்கள் வெளியிட்டு இருந்த ராமர் பாலம் பற்றிய செய்திகள்
வாசகர்கள் ஒரே பகுதியில் படிக்கும் படியாக அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!   Empty Re: ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 14, 2017 9:41 pm

T.N.Balasubramanian wrote:நன்றி பழ முத்துராமலிங்கம் அவர்களே.ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!   1571444738

வெவ்வேறு தலைப்பில்/ பகுதியில் நீங்கள் வெளியிட்டு இருந்த ராமர் பாலம் பற்றிய செய்திகள்
வாசகர்கள் ஒரே பகுதியில் படிக்கும் படியாக அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1253286
அனைத்தையும் தொகுத்து வழங்கியமைக்கு நன்றி ஐயா

ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!   Empty Re: ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum