புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய துப்பறியும் நாவல்கள். Poll_c10பழைய துப்பறியும் நாவல்கள். Poll_m10பழைய துப்பறியும் நாவல்கள். Poll_c10 
155 Posts - 79%
heezulia
பழைய துப்பறியும் நாவல்கள். Poll_c10பழைய துப்பறியும் நாவல்கள். Poll_m10பழைய துப்பறியும் நாவல்கள். Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
பழைய துப்பறியும் நாவல்கள். Poll_c10பழைய துப்பறியும் நாவல்கள். Poll_m10பழைய துப்பறியும் நாவல்கள். Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பழைய துப்பறியும் நாவல்கள். Poll_c10பழைய துப்பறியும் நாவல்கள். Poll_m10பழைய துப்பறியும் நாவல்கள். Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
பழைய துப்பறியும் நாவல்கள். Poll_c10பழைய துப்பறியும் நாவல்கள். Poll_m10பழைய துப்பறியும் நாவல்கள். Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பழைய துப்பறியும் நாவல்கள். Poll_c10பழைய துப்பறியும் நாவல்கள். Poll_m10பழைய துப்பறியும் நாவல்கள். Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பழைய துப்பறியும் நாவல்கள். Poll_c10பழைய துப்பறியும் நாவல்கள். Poll_m10பழைய துப்பறியும் நாவல்கள். Poll_c10 
1 Post - 1%
Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய துப்பறியும் நாவல்கள். Poll_c10பழைய துப்பறியும் நாவல்கள். Poll_m10பழைய துப்பறியும் நாவல்கள். Poll_c10 
320 Posts - 78%
heezulia
பழைய துப்பறியும் நாவல்கள். Poll_c10பழைய துப்பறியும் நாவல்கள். Poll_m10பழைய துப்பறியும் நாவல்கள். Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பழைய துப்பறியும் நாவல்கள். Poll_c10பழைய துப்பறியும் நாவல்கள். Poll_m10பழைய துப்பறியும் நாவல்கள். Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
பழைய துப்பறியும் நாவல்கள். Poll_c10பழைய துப்பறியும் நாவல்கள். Poll_m10பழைய துப்பறியும் நாவல்கள். Poll_c10 
8 Posts - 2%
prajai
பழைய துப்பறியும் நாவல்கள். Poll_c10பழைய துப்பறியும் நாவல்கள். Poll_m10பழைய துப்பறியும் நாவல்கள். Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
பழைய துப்பறியும் நாவல்கள். Poll_c10பழைய துப்பறியும் நாவல்கள். Poll_m10பழைய துப்பறியும் நாவல்கள். Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பழைய துப்பறியும் நாவல்கள். Poll_c10பழைய துப்பறியும் நாவல்கள். Poll_m10பழைய துப்பறியும் நாவல்கள். Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய துப்பறியும் நாவல்கள்.

Page 1 of 2 1, 2  Next

கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Wed May 10, 2017 5:49 pm

ஈகரை சொந்தங்களே,பழம் பெரும் எழுத்தாளர்களான ஆரணி குப்புசாமி முதலியார்,வடுவூர் துரைசாமி ஐயங்கார்,ஜே.ர்.ரெங்கராஜு ஆகியோர் படைத்த அற்புதமான துப்பறியும் கதைகள் இருந்தால் பகிருமாறு அன்புடன் வேண்டுகிறேன்

badri2003
badri2003
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/11/2014

Postbadri2003 Fri May 12, 2017 11:31 am

நண்பரே உங்களுக்காக,   [இணையத்திலிருந்து].
பழைய துப்பறியும் நாவல்கள். 6P2VfZtdQ4euo5zr6A8l+vadu

www.mediafire.com/file/qtdw4whvepqncdx/DiwanLotapataSinghBahadur.pdf
badri2003
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் badri2003

கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Sat May 13, 2017 5:03 pm

badri2003 wrote:நண்பரே உங்களுக்காக,   [இணையத்திலிருந்து].
பழைய துப்பறியும் நாவல்கள். 6P2VfZtdQ4euo5zr6A8l+vadu

www.mediafire.com/file/qtdw4whvepqncdx/DiwanLotapataSinghBahadur.pdf
மேற்கோள் செய்த பதிவு: 1241995 மிக்க நன்றி நண்பரே ..வேறு எந்த கதைகள் கிடைத்தாலும் பகிரவும்.. பழைய துப்பறியும் நாவல்கள். 1571444738

funpriyan
funpriyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 23/05/2017

Postfunpriyan Wed May 24, 2017 1:39 am

மிக அருமையான புத்தகம் எப்போதும் பொருந்துகிறது 100 வருசத்துக்கு முன் எழுதிய புத்தகம் wow simply சூப்பர். காட்டிக்கொடுத்தமைக்கு நன்றி

badri2003
badri2003
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/11/2014

Postbadri2003 Thu May 25, 2017 12:01 pm

ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜே.ஆர். ரங்கராஜு ஆகிய மூவரைத் துப்பறியும் நாவல்களின் ”முன்னோடி மும்மூர்த்திகள்” என்றே சொல்லலாம்.

இவர்களைப் பற்றி நாரண. துரைக்கண்ணன் ஒரு ‘கலைமகள்’ கட்டுரையில் சொல்கிறார்:

“ ஆங்கில நாவல்களை ஆரணியார் நேராக மொழி பெயர்த்துத் தந்தார். ஐயங்கார் அந்நாவல்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு தம் கற்பனைகளையும் சேர்த்து வருணனைகளைப் புகுத்தித் தம் சொந்தச் சரக்குப் போலத் தரமுயன்றார். ரங்கராஜு அவற்றைத் துப்பறியும் கதைகளாக மாற்றிக் கொடுத்தார்”

பழைய துப்பறியும் நாவல்கள். ZXbjf4vCTEOW7qWC4PPF+jrr_kalki
ஜே.ஆர்.ரங்கராஜு ( 1875-1959) வின் முழுப் பெயர்: ஜெகதாபி ரகுபதி ரங்கராஜு.

வடுவூர் துரைசாமி ஐயங்கார் துப்பறியும் நாவல்கள் எழுதி புகழுடன் இருந்து வந்த அதே காலத்தில், அவரைப் போலவே துப்பறியும் நாவல்கள் எழுதுவதில் மிகவும் திறமை வாய்ந்த மற்றுமொரு எழுத்தாளர் ஜே.ஆர். ரங்கராஜு. ’ராஜாம்பாள்’ என்கிற இவரது நாவல் இதே பெயரில் திரைப்படமாக 1935இல் வெளிவந்தது. மீண்டும் இக்கதை இரண்டாவது முறையாக 1951இல் தயாரிக்கப்பட்டு இதே ‘ராஜாம்பாள்’ என்கிற பெயரில் வெளிவந்தது. நாடகக்காவலர் என்று பின்னாளில் பெயர்பெற்ற ஆர்.எஸ்.மனோகரின் அறிமுகப்படம் இது. இதில் மனோகர் கதாநாயகனாகத்தான் அறிமுகமானார்.

கதாநாயகி சிலரால் கடத்திச் செல்லப்படுகிறார். கடத்தியவர்கள் அறியாதவாறு ஒரு துண்டுச்சீட்டில் ‘மோசம் போனேன் கோபாலா’ என்கிற வாக்கியம் ஒன்றை எழுதி அதைத் தரையிலே வீசிவிட்டுச் செல்வார். அதைக் கண்டெடுத்து அதை வைத்தே குற்றவாளிகளைக் கண்டுபிடித்துவிடும் துப்பறியும் நிபுணர் கதாநாயகன் மனோகர். படம் மிகவும் நன்றாக ஓடியது. திரை உலகில் மனோகர் என்கிற நடிகர் உதயமானார்.

இதே 1951இல் இன்னுமொரு திரைப்படம் டி.ஆர்.மகாலிங்கம் தயாரிப்பில் வெளிவந்தது. படத்தின் பெயர் மோகன சுந்தரம். இதுவும் ஜே ஆர். ரங்கராஜுவின் ஒரு துப்பறியும் நாவல்தான். டி ஆர் மகாலிங்கம் – எஸ்.வராட்சுமி பிரபலமான ஜோடி. ‘பாட்டு வேணுமா, உனக்கொரு பாட்டு வேணுமா?’ என்று டி.ஆர்.மகாலிங்கம் பாடியிருந்த இப்பாடல் பிரபலமான பாடல். இப்படம் ஒரு வெற்றிப்படம்.

‘சந்திரகாந்தா’ என்கிற இவரது நாவல் மிகவும் பிரபலமான நாவல். இந்தப் பெயரில் 1936இல் வெளிவந்த படம் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட படம். போலிச் சாமியார்களை கிண்டல் செய்யும் பல பகுதிகள் இக்கதையில் உண்டு. அவைகள் படமாகவும் ஆக்கப்பட்டிருந்தன. காளி என்.ரத்தினம் என்னும் நகைச்சுவை நடிகர் இப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்றார். தேகாப்பியாசம் செய்ய அழகிகளை அழைப்பதான காட்சிகள் அக்காலத்தில் சற்று விரசமாக இருந்தது என்று பெரியவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் படம் வெற்றியடைந்ததாகத் தகவல்கள் இருக்கிறது.

இதே படம், மறுபடியும் 1960இல் ‘சவுக்கடி சந்திரகாந்தா’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. டி.எஸ். பாலையா, டி.கே. ராமச்சந்திரன், காகா ராதாகிருஷ்ணன், சௌகார் ஜானகி, தாம்பரம் லலிதா போன்றோர் இப்படத்தில் நடித்திருந்தனர். ஆனால் படம் வெற்றி பெறவில்லை. இதன் பிறகு ஜே.ஆர்.ரங்கராஜுவின் கதைகள் எதுவும் படமாக்கப்படவில்லை. இவர், சினிமாவாகத் தயாரிக்கப்பட்ட சந்திரகாந்தா, மோகன சுந்தரம் நாவல்கள் தவிர ஆனந்த கிருஷ்ணன், ராஜேந்திரன் போன்ற நாவல்களும் எழுதியிருக்கிறார்.

இவருடைய ‘இராஜாம்பாள்’ நாவலைப் பற்றிக் ‘கல்கி’ எழுதிய மதிப்புரையைக் கீழே காணலாம்:

"இந்த நாவலின் கதாநாயகியாகிய இராஜாம்பாள் இப்போதுதான் வயது பன்னிரெண்டு பூர்த்தியாகி பதின்மூன்றாவது வயதில் இருப்பவள். அவளுடைய பேச்சும், சிந்தனையும், செய்கைகளும் பதின்மூன்று வயதுப் பெண்ணுக்க உரியவைகளாவென்ற சந்தேகம் இந்தத் தடவை படித்தபோது எனக்கு ஏற்பட்டது. அவ்வாறே கோபாலனைக் காதலிக்கும் லோகநாயகி, கொலையுண்ட தாஸி பாலாம்பாள் இவர்களுடைய செய்கைகளெல்லாம் நடக்கக் கூடியனவா என்ற சந்தேகத்தை உண்டு பண்ணுகின்றன. ஆனால் இப்படியெல்லாம் பார்த்தால் பின்னர் நாவல்தான் எப்படி எழுதுகிறது?

ஸ்ரீமான் ரங்கராஜு மிகுந்த தாராள மனதுடையவரென்பதில் சந்தேகமில்லை. அவருடைய கதாபாத்திரங்களெல்லாம் கோடீஸ்வரார்களாகவும், லக்ஷாதிபதிகளாகவும் இருக்கின்றனர். சாமிநாத சாஸ்திரிகள் தம்முடைய மைத்துனன் நடேச சாஸ்திரிக்கு அறுபது லக்ஷம் ரூபாய் பெறுமான கிராமங்களையும், தம் மகள் இராஜாம்பாளுக்கு மற்றோர் அறுபது லக்ஷம் ரூபாய் பெறுமான கிராமங்களையும் உயில் எழுதி வைக்கிறார். 'அர்பத்நாட் பாங்கி' யில் ('அர்பத்நாட் பாங்க்' என்று வெள்ளைக்காரர்கள் நடத்திய ஒரு பிரபலமான வங்கி அந்த நாட்களில் சென்னையில் இருந்தது. அது திவாலானதும், அதில் பணம் போட்டிருந்த பலர் தெருவுக்கு வந்ததும் அந்த நாளைய 'தலைப்புச் செய்தி) வேறு அவருக்கு ரொக்கம் இருக்கிறது. நீலமேக சாஸ்திரிகள் தம்முடைய கல்யாணத்திற்குப் பூர்வாங்கமான ஏற்பாடுகளில் ஐந்து லக்ஷம் ரூபாய் செலவு செய்கிறார். லோக சுந்தரியின் சொத்துக்குக் கணக்கு வழக்கே இல்லையென்று தோன்றுகிறது.

ஸ்ரீமான் ரங்கராஜுவின் தமிழ்நடை பேசும் நடை; எனவே உயிருள்ள நடை. அவருடைய நாவல்கள் தமிழ் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதற்கு இது ஒரு முக்கிய காரணமென்பதில் சந்தேகமில்லை."

இராஜாம்பாள் 1951-இல் திரைப்படமாக வெளிவந்தது.

1951 – ராஜாம்பாள் – அருணா பிலிம்ஸ்

18850 அடி – நெ.2180 – 14.9.51 – வெளியான தேதி 14-9-1951

தயாரிப்பு-வி.சி.சுப்புராமன், இயக்கம்-ஆர்.எம்.கிருஷ்ணசாமி, கதை-ஜெ.ஆர்.ரங்கராஜு, வசனம்-எ.டி.கிருஷ்ணசாமி, இசை-எம்.எஸ்.ஞானமணி, பாடல்-மருதகாசி-கு.சா.கிருஷ்ணமூர்த்தி, ஒளி-ஆர்.எம்.கிருஷ்ணசாமி, கலை-டி.வி.சர்மா, எடிட்டிங்-சி.வி.ராஜு-பால்ஜியாதவ், நடனம்-குமார், ஸ்டில்-நாகராஜராவ்-லேப்-விஜயா

மனோஹர், மாதுரிதேவி, எஸ்.பாலசந்தர், பி.கே.சரஸ்வதி, கே.சாரங்கபாதி, சி.ஆர்.ராஜகுமாரி, பி.ஆர்.பந்துலு, சி.ஆர்.சரஸ்வதி.

பழைய துப்பறியும் நாவல்கள். YIf7bSNPShqAWrstUclv+Rajambal1951

நூல் : இராஜாம்பாள்
ஆசிரியர் : ஜே.ஆர். ரங்கராஜு .

நண்பர்களே உங்களுக்காக [இணையத்திலிருந்து]

www.mediafire.com/file/oi7gu4mgvgwe0ag/JRRangaraju_Raajaambaal.pdf

கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Fri May 26, 2017 12:21 pm

badri2003 wrote:ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜே.ஆர். ரங்கராஜு ஆகிய மூவரைத் துப்பறியும் நாவல்களின் ”முன்னோடி மும்மூர்த்திகள்” என்றே சொல்லலாம்.

மேற்கோள் செய்த பதிவு: 1242833 மிக்க நன்றி நண்பரே..ஒத்த ரசனை உடைய நீங்கள் அளித்த பகிர்விற்கு இரட்டிப்பு nandri

badri2003
badri2003
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/11/2014

Postbadri2003 Tue May 30, 2017 3:46 pm

பழைய துப்பறியும் நாவல்கள். F8aUXZ0GRfKrSKE9rbUH+maneka

புத்தக வடிவில்
www.mediafire.com/file/1ouudi4icb1xl3l/Menaka1.pdf

www.mediafire.com/file/c9k27dg6lgb6ny5/Menaka2.pdf

1931ல் தமிழ் சினிமா பேசத் தொடங்கியதற்குப் பிறகு எடுக்கப்பட்ட படங்களின் கதைகள் அனைத்துமே புராண இதிகாசங்களிலிருந்து உருவப்பட்டு சினிமாவாகத் தயாரிக்கப்பட்டவை. கதாகாலட்சேபம் மாதிரி பாடல்களுக்கிடையே கதையைத் திணித்துவிடுவார்கள். ஒரு படத்தில் ஐம்பது அறுபது பாடல்கள் என்பது சர்வ சாதாரணம். கச்சேரி கேட்கப்போகிறேன் என்பதற்குப் பதிலாக கச்சேரி பார்க்கப்போகிறேன் என்று சொல்லும் அளவில்தான் அக்காலப் படங்கள் இருந்திருக்கின்றன.

அம்மாதிரியான சூழலில் 1935இல் ‘மேனகா’ என்றொரு படம் தயாரிக்கப்பட்டு வெளிவந்தது. அது சமகாலப் படம். சமூகப் படம். டி.கே.எஸ் சகோதரர்கள் முதலில் நாடகமாக நடித்துக்கொண்டிருந்ததைத் திரைப்படமாகத் தயாரித்தார்கள். இயக்குநர் அக்காலத்தில் பிரபலமாக இருந்த ராஜா சாண்டோ. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் இப்படத்தின் மூலமாகத் திரை உலகில் பிரவேசித்தார்.

இந்தப் படத்தின் கதை வடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாவல். வடுவூர் துரைசாமி ஐயங்கார் அப்போது மிகவும் பிரபலமாக விளங்கிய துப்பறியும் நாவல்கள் எழுதும் எழுத்தாளர். எனவே சினிமாவில் நுழைந்த ஆரம்பகால எழுத்தாளராக வடுவூராரைச் சொல்லலாம்.

மேனகா (1935) திரைப்படத்தைத் தொடர்ந்து 1937இல் மைனர் ராஜாமணி, மற்றும் பாலாமணி அல்லது பக்காத் திருடன் என்ற இவரது கதைகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. 1941இல் இவரது கதையொன்று திருவள்ளுவர் என்கிற பெயரில் படமாகத் தயாரிக்கப்பட்டு வெளிவந்தது. சில கால இடைவெளிகக்குப் பின் 1946இல் ‘வித்யாபதி’ என்கிற இவரது நாவல் திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது.

இவரது துப்பறியும் கதைகளுக்கு மவுசு குறையாத காரணத்தால் 1950இல் இவரது பிரபலமான நாவல் ‘திகம்பர சாமியார்’ மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியை ஈட்டியது.

‘ஊசிப்பட்டாசே, வேடிக்கையாய் தீ வைத்தாலே வெடி டமார் டமார்’ என்கிற இப்படப்பாடல் அப்போதெல்லாம் பட்டி தொட்டிகள் எங்கும் முழக்கமிட்டிருக்கின்றன. அதேபோல் இதே படத்தில் மிகவும் வெற்றி பெற்ற இன்னுமொரு பாடல் ‘பாருடப்பா, பாருடப்பா, பாருடப்பா பார், கல்ல உடைடப்பா உடைடப்பா உடை டப்பா நீ’ என்கிற பாடல், இந்தப் பாட்டின் மெட்டு ஒரு பிரபலமான இந்திப் பாடலின் அப்பட்டமான தழுவல் என்றாலும், இப்பாடல் தமிழ்நாட்டில் மிகவும் விரும்பிக் கேட்கப்பட்டது!

எம்.என்.நம்பியார் இப்படத்தில் துப்பறியும் சிங்கமாக நடித்திருப்பார். குடுகுடுப்பைக்காரன், சாமியார் மற்றும் ஏராளமான வேஷங்களில் நடித்து பிரமிப்பூட்டுவார். நம்பியாருக்கு மிகவும் புகழை ஏற்படுத்திக் கொடுத்த ஆரம்ப காலப்படங்களில் இது மிகவும் முக்கியமான திரைப்படம்.

டி.ஆர்.மகாலிங்கம் நடிப்பின் உச்சத்திலிருந்தபோதே படத்தயாரிப்பிலும் இறங்கினார். ‘சின்னதுரை’ என்றொரு படம் இவரது தயாரிப்பில் 1952இல் வெளிவந்தது. இதில் மகாலிங்கத்தின் ஜோடி எஸ் வரலட்சுமி. இதன் கதை வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய ‘இருமன மோகினிகள்’ என்கிற நாவல். இவரது மற்றொரு நாவலைத்தழுவி 1959இல் வெளிவந்த படம் சுமங்கலி. பாலாஜி கதாநாயகனாக நடித்த இப்படம் வெற்றி பெறவில்லை.

1935இல் தயாரிக்கப்பட்டு வெளிவந்த ‘மேனகா’ கதையை மறுபடியும் 1959இல் தயாரித்தார்கள். இப்படத்தில் கே.ஆர் ராமசாமி, லலிதா ஜோடி, இப்படமும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. வடுவூர் துரை சாமி ஐயங்கார் சில காலம் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மனுக்கள் எழுதிக் கொடுத்து பிழைத்து வந்தார் என்கிற செய்தியும் உண்டு. கடைசி வரை சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்து அங்கேயே மறைந்தார் வடுவூரார்.

---[இணையத்திலிருந்து]

sudhagaran
sudhagaran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 23/10/2016

Postsudhagaran Wed Dec 06, 2017 6:57 am

மேலும்வ சில வடுவூர் துரைசாமி ஐயங்கார் நாவல்கள்
https://poovascollections.blogspot.in/p/vaduvur-kduraisamy-iyyangar-novels.html?m=1

K.Jayakumar
K.Jayakumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 17/09/2016

PostK.Jayakumar Wed Dec 06, 2017 7:03 pm

நன்றி

கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Wed Dec 06, 2017 7:35 pm

[quote="sudhagaran"]மேலும்வ சில வடுவூர் துரைசாமி ஐயங்கார் நாவல்கள்
மிக்க நன்றி நண்பரே .. :வணக்கம்: :வணக்கம்:

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக