ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?

Go down

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?  Empty வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 09, 2017 7:39 pm

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?  MNYcI6fRYmK2tafwUC28+19-09-1512797941

கோயில்களை கட்ட ஆரம்பிப்பதற்கு முற்காலத்திய முன்னோர்கள், மலைகளை குடைந்து கோயில் அமைப்பை உருவாக்கினர் என்பது நாம் அறிந்த செய்திதான். இந்தியாவில் எண்ணற்ற குடைவரைக் கோயில்கள் அமைந்துள்ளன. இவை பெரும்பான்மை இளைஞர்களை ஈர்த்து தன்னைக் காண வரச் செய்கின்றன. கோவையின் வெள்ளையங்கிரி மலையைப் போல அரிட்டாப்பட்டியில் அமைந்துள்ள இந்த கோயில் மிகச்சிறப்பு மிக்கதாகும். வாருங்கள் ஒரு டிரிப் போயிட்டு வரலாம்.

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?  DlqysFERQlSiBWKXg3hF+09-1512797537-1

உலகின் முதல் குடைவரைக் கோயில்

உலக அளவில் குடைவரைக் கோயில்கள் கட்டும் பழக்கம் இருந்தாலும், எல்லாவற்றிற்கும் முன்னதாகவே பாண்டிய மன்னர்கள் தான் இதை ஆரம்பித்தனர் என்று கூறப்படுகிறது. திருநெல்வேலி, மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் எண்ணற்ற குடைவரைக் கோயில்கள் சிறிய அளவில் காணப்படுகின்றன.

நன்றி
ஒன் தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?  Empty Re: வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 09, 2017 7:43 pm

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?  1Z6FlP5RPSu9JFEm3ixQ+09-1512797546-2

ஓவா மலை

உள்ளூர் மக்களால் ஓவா மலை என்றழைக்கப்படும் அரிட்டாபட்டி மலையில் அமைந்துள்ளது லகுலீசர் கோயில். இது ஒரு சிவன் தலமாகும்.

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?  22jWQooQFiJ0KfXgBPHQ+09-1512797554-3

சிறப்பு

உலகிலேயே குடைவரைக் கோயிலாகக் கட்டப்பட்ட முதல் சிவன் தலம் இதுவாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இது மிகவும் சிறிய அளவிலான கோயில் ஆகும். ஆனால் இதன் சக்தி அப்படி அல்ல.. அதுதான் வட இந்தியர்களைக் கூட பொறாமை கொள்ளச்செய்யும் என்கிறார்கள் இந்த கோயிலுக்கு அடிக்கடி வரும் பக்தர்கள்.



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?  Empty Re: வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 09, 2017 7:47 pm

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?  DBb3Y5mRo6y5zandkqqG+09-1512797562-4

எங்குள்ளது

மதுரை அருகே அமைந்துள்ளது அரிட்டாபட்டி. இங்குள்ள மலையில்தான் லகுலீசர் குடைவரைக் கோயில் அமைந்துள்ளது.

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?  FEiN03vCR1Pq9NpW585w+09-1512797570-5

தென்னகத்தின் ஏழுமலை

அரிட்டாபட்டி ஒரு கிராமமாக இருந்தாலும், இங்கு ஏழு மலைகள் அருகருகே அமைந்துள்ளன.

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?  IEporae2T8Or3zvuU3Yd+09-1512797579-6

மலைகள்

கழிஞ்சாமலை, நாட்டார் மலை, வயிற்றுப்பிள்ளான் மலை, ராமன் ஆய்வு மலை, அகப்பட்டான் மலை, கழுகுமலை, தேன்கூட்டு மலை என ஏழு மலைகள் இந்த ஊரில் காணப்படுகிறது.





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?  Empty Re: வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 09, 2017 7:51 pm

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?  QPJiCfQ3REGfuLRpCpA8+09-1512797587-7

பழமை

இந்த கோயில் கட்டப்பட்டது கிபி எட்டாம் நூற்றாண்டு எனத் தெரிகிறது. பாண்டியமன்னர்களின் மிக முக்கிய கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?  T70n8cKDT8mMCOgylR9k+09-1512797595-8

மூலவர்

இந்த குடைவரைக் கோயிலின் மூலவர் சிவபெருமான் லிங்கமாக வீற்றிருக்கிறார். கருவறைக்கு முன்பாக துவாரபாலகர்களின் சிற்பங்கள் உள்ளன.

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?  AJ9c0wuvQDGqJP5BF4pE+09-1512797603-9

உலகிலேயே இது ஒன்றுதான்

வேறெங்கும் காண இயலாத லகுலீசுவரரின் புடைப்பு சிற்பம் இந்த மலையில் மட்டுமே காணப்படுகிறது. லகுலீசர் என்பது சிவபெருமானின் அவதாரமாகப் பார்க்கப்படுகிறது.




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?  Empty Re: வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 09, 2017 7:59 pm

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?  AurEilEQS2teVxd7a0Kb+09-1512797611-10

லகுலீசர் அமைப்பு

சுகானத்தில் தொடை மீது ஒரு கை வைத்து காட்சிதருகிறார் லகுலீசர். சைவத்தில் லகுலீசர் சைவம் என்ற ஒரு பிரிவு இருக்கிறது. அவர்கள் சிவபெருமானை லகுலீசராகத்தான் வழிபடுகின்றனர்.

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?  2qFsCvNXQ3Om7sQLrzBQ+09-1512797620-11

விநாயகர்

இதன் தெற்கு பகுதியில் விநாயகர் சிற்பம் ஒன்று புடைப்பு சிற்பமாக இருக்கிறது. மேற்கு திசையை நோக்கிய இந்த குடைவரையைச் சுற்றியுள்ள மலைகளும், பாறைகளை ஒன்றன்மீது ஒன்றாக வைத்தது போல இருக்கும் அமைப்பும் பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றன.






பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?  Empty Re: வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 09, 2017 8:01 pm

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?  8GZEbeKTdW5sIqoNjFF0+09-1512797629-12

சுற்றுலா செல்வோம்

இந்த பகுதிக்கு வருவதற்கு தமிழ் நேட்டிவ் பிளானட் வழிகாட்டியாக வருகிறது. முதலில் நீங்கள் செய்யவேண்டியது மதுரைக்கு அருகிலுள்ள மேலூருக்கு வரவேண்டும். அங்கிருந்து பத்து, பதினைந்து நிமிடங்களில் கோயிலை அடைந்துவிடலாம்.

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?  BaDcR6TRaRnkOXtW2pWw+09-1512797637-13

மேலூருக்கு எப்படி செல்வது?

சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வருபவர்கள் திருச்சி வழியாகவும், பொள்ளாச்சி, கோவை, நாமக்கல்,கரூர், ஈரோடு, ஊட்டியிலிருந்து வருபவர்கள் திண்டுக்கல் வழியாகவும் மேலூரை அடையலாம்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?  Empty Re: வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 09, 2017 8:07 pm

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?  CZlrpXCYQGuGvfD6FLUe+09-1512797646-14

வடக்கு மாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு வழி

பெங்களூருவிலிருந்து ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், முசிறி வழியாக திருச்சியை அடையலாம். இந்த வழியில் ஏற்காடு, கல்ராயன் மலை, காவிரி ஆறு உள்ளிட்ட இடங்கள் வரும். சென்னை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 6 மணி நேரத்தில் வந்தடையலாம். திருச்சியிலிருந்து மேலூருக்கு விராலிமலை, கொட்டாம்பட்டி வழியாக 1.30மணி நேரத்தில் வந்தடையலாம்.

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?  31NReN9qQNui9eIknUBM+09-1512797655-15


மேற்கு மாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு

கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வருபவர்கள் திண்டுக்கல் வழியாக மேலூரை அடையலாம். கோவையிலிருந்து மேலூர் 5 மணி நேரம் ஆகிறது. மொத்தம் 229கிமீ தூரம் பயணிக்க வேண்டிவரும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?  Empty Re: வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 09, 2017 8:11 pm

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?  EcGoJuxIRFONeGwTdQHe+09-1512797665-16


தெற்கு மாவட்டங்களிலிருந்து வருபவர்கள்

கன்னியாகுமரியிலிருந்து 4 மணி நேர பயணத்தில் மதுரையை அடையலாம். தேசிய நெடுஞ்சாலை எண் 44 வழியாக கன்னியாகுமரியிலிருந்தும், திருநெல்வேலியிலிருந்தும் மதுரையை அடையமுடியும். நாகர்கோயிலிலிருந்து காவல்கிணறு வந்து இந்த நெடுஞ்சாலையை அடையவேண்டும். ராமேஸ்வரத்திலிருந்து தே நெ எ 87 வழியாகவும், தூத்துக்குடியிலிருந்து தே நெ எ 38 வழியாகவும் எளிதில் மதுரையை அடையலாம். அங்கிருந்து 40 நிமிட பயணத்தில் மேலூரை அடையலாம். இப்படி தமிழகம் முழுவதிலிருந்தும் மேலூருக்கு வந்தடைய இந்த வழி போதுமானதாக இருக்கும்.

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?  CUQ4uKR2RpakBaErrskz+09-1512797673-17


மேலூர் - அரிட்டாபட்டி


அரிட்டாபட்டி செல்வதற்கு மேலூர் - கொங்காம்பட்டி - சிங்கம்புரி சாலையில் நம் பயணத்தைத் தொடங்கவேண்டும். மேலூர் - அழகர்கோயில் சாலையில் பயணத்தை தொடர்ந்து செல்க.. மாநில சாலையான இது 72A என்று குறிக்கப்படுகிறது. புறப்பட்ட சில நிமிடங்களில் அங்கு பெட்ரோல் பங்க் இருக்கிறது. தேவையென்றால் பயன்படுத்திக்கொள்வது நல்லது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?  Empty Re: வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 09, 2017 8:14 pm

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?  4wAUWcWMQu2Whfyhxru7+09-1512797683-18


அரிட்டாபட்டி


பயணம் தொடரும்போது இடதுபுறமாக சாலைகள் பிரியும். முதல் இரு சாலைகளையும் தாண்டி, மூன்றாவதாக பிரியும் சாலையில் இடப்புறமாக செல்லவேண்டும். இந்த வழியில் சின்னையன் கோயில், சுற்றிலும் வயல்வெளிகள் நிறைந்த சாலைகள் என இரண்டு கிமீக்குள் அரிட்டாபட்டியை அடைந்துவிடலாம்.

மந்தை கருப்பசாமிகோயில் அருகே பேருந்து நிலையம் உள்ளது. பின் அங்கிருந்து வலப்புறமாக திரும்பி சிறிது தூரம் சென்று இடப்புறம் திரும்பினால் அங்கு சாலை முடிகிறது. பின் மலையில் ஏறவேண்டும்.

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?  0tI5OXrgRceZCfdBOFrE+09-1512797692-19

நீரூற்றுகள்

இங்கு 200க்கும் மேற்பட்ட நீரூற்றுகள் உள்ளன. இதில் முருகன் நீரூற்று வருடம்முழுவதும் வற்றாமல் இருக்கிறது. கோயிலுக்கு சென்று வழிபடுவதுடன், இந்த இடத்தைச் சுற்றிப் பார்த்து பரவசமடையுங்கள். மேலும் இன்னொரு இடத்தோட தேடிப்போலாமா வில் சந்திக்கிறோம். தொடர்ந்து இணைந்திருங்கள் நேட்டிவ் பிளானட் தமிழுடன்.

நன்றி
ஒன் தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?  Empty Re: வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum