ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார்

2 posters

Go down

ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் Empty ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 09, 2017 7:48 am

Coimbatore:
சென்னையில், ஏர்டெல் நிறுவனத்தின், பல்வேறு வாடிக்கையாளர்களின் சிம் கார்டுகளை ஹேக் செய்து, அதன் மூலம் வங்கிக் கணக்கையும் ஹேக் செய்து, 1 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கடந்த ஏப்ரல் மாதத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அதே பாணியில், கோவையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இம்முறை ஆறுமுகம் என்ற தொழிலதிபரின் வங்கிக் கணக்கு குறிவைக்கப்பட்டது.
ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் KDmpl24QTpi9pdYiKpya+d3e7ceab89e4f569d995feab5fed3bf9

கோவை, பேரூரில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியாவில், கடன் கணக்கான ஓவர் டிராஃப்ட் கணக்கு வைத்துள்ளார். 20 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்த நிலையில், அதில் 12.75 லட்சம் ரூபாய் இருந்தது. அதை சிம் கார்டு மூலம் ஹைடெக்காக கொள்ளையடித்துள்ளனர்.
இதுபற்றி போலீஸிடம் விசாரித்தோம்," முதலில் ஆறுமுகத்தின் மெயில் ஐடி-யை ஹேக் செய்து, அதிலிருந்து சில ஆவணங்களை எடுத்துள்ளனர். அந்த ஆவணங்கள் மூலம், ஏர்செல் ஏஜென்சியில், அவரது (ஆறுமுகம்) சிம்கார்டு தொலைந்துவிட்டதாகக்கூறி, டூப்ளிகேட் சிம் கார்டு எடுத்துள்ளனர். ஆறுமுகத்தின் வங்கி பரிவர்த்தனைக்கு இந்த சிம்கார்டுதான் பயன்படுத்தப்படுகிறது. பரிவர்த்தனைக்கான ஒன் டைம் பாஸ்வேர்டு இந்த சிம்கார்டுக்குதான் வரும். அதைப்பயன்படுத்தி, ஆர்.டி.ஜி.எஸ் பரிவர்த்தனை மூலம் 12.75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
பாங்க் ஆஃப் இந்தியாவில் இருந்து, பஞ்சாப் நேஷனல் பாங்க் மற்றும் லக்னோவில் ஓரியன்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் ஆகிய இரண்டு வங்கிக்கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டுள்ளது. அந்தக் கணக்குகளில் இருந்து, கிட்டத்தட்ட 10 வங்கிக்கணக்குகளுக்கு இந்தப் பணம் மாறியுள்ளது" என்றனர்.
ஆறுமுகத்திடம் பேசினோம், "எனது சிம்கார்டு ஹேக் செய்யப்பட்டதே எனக்கு ஒருநாள் கழித்துத்தான் தெரியவந்தது. பின்னர், சுதாரித்துக்கொண்டு வங்கிக் கணக்கை பிளாக் செய்வதற்குள், 12.75 லட்சத்தை சுருட்டிவிட்டனர். வங்கியில் இருந்து எங்களுக்கு சரியான ஒத்துழைப்பு வழங்குவதில்லை. சரி சிம்கார்டு எடுத்தவர்கள் யார் என்று ஏர்செல் ஏஜென்சியிடம் விசாரித்தால், "எங்களுக்கு தெரியவில்லை. இங்கு இரண்டு மாதங்களாக சி.சி.டி.வி கேமராவும் வேலை செய்யவில்லை" என்கின்றனர். மேலும், எங்களது நிறுவனத்தின் மீது தவறில்லை எனவும் ஏர்செல் கூறியுள்ளது.
ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் PSCgOeI6R6WOcKBRS3Dj+f33172f19159bd7c67536234391558d3

பணப் பரிமாற்றம் நடந்த ஓரியன்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் கணக்கில், எனது 1.50 லட்சம் ரூபாய் பணம் உள்ளது. அந்த வங்கிக் கணக்கை முடக்கி விட்டனர். ஆனால், இன்னும் என் கைக்கு பணம் வரவில்லை. ஆர்.பி.ஐ-யிடமும் புகார் அளித்துள்ளேன். கொள்ளை போன பணத்துக்கு இப்போதும் வட்டிக் கட்டிக் கொண்டு இருக்கிறேன். பணம் கொள்ளை போனதால், வெளியில் இருந்து கடன் வாங்கி அதற்கும் வட்டிக் கட்டிவருகிறேன்" என்றார் வேதனையுடன்.
நேஷனல் சைபர் சேஃப்டி அண்ட் செக்யூரிட்டி ஸ்டாண்டர்ட்ஸ் அமைப்பின் இயக்குநர் அமர் பிரசாத் ரெட்டி கூறுகையில், "தற்போதைய சூழலுக்கு மெயில் ஐ.டி-யை ஹேக் செய்வது மிகவும் எளிதான ஒன்று. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட சிம்கார்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களின் உதவியுடன்தான் கொள்ளை நடந்திருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால், சிம் கார்டு வாங்குவது அவ்வளவு எளிதான ஒன்றில்லை. நம்மைப் பற்றி நன்கு தெரிந்தவர்களால்கூட, மெயில் அக்கவுன்ட்டை எளிதாக ஹேக் செய்ய முடியும். ஹேக்கிங் என்றாலே, நைஜீரியர்கள் என்று சொல்லப்படுவது ஃபேஷனாகிவிட்டது. ஆனால், இதுபோன்ற ஹேக்கிங்கில் நம் ஊரைச் சேர்ந்வர்கள்தான் ஈடுபட்டுவருகிறார்கள். தற்போது, டெக்னாலஜி வேகமாக முன்னேறி வருகிறது. நமது முகத்தையேக்கூட பாஸ்வேர்டாக பயன்படுத்தி இதுபோன்ற கொள்ளையில் இருந்து தப்பிக்கலாம்" என்றார்.
சென்னை, கோவையைத் தொடர்ந்து தற்போது திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி உரிமையாளர்களின் மெயில் ஐ.டி-க்களும் ஹேக் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

 நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் Empty Re: ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார்

Post by SK Sat Dec 09, 2017 5:54 pm

அநியாயம் அநியாயம் அநியாயம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் Empty Re: ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 09, 2017 6:44 pm

பேங்கில் போன் நம்பர் கொடுப்பதில் இப்படி கூட ஆபத்து உள்ளது
இதில் உள்ள ஆபத்தை பார்த்து நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் Empty Re: ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum