ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_m10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா?

Go down

அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Empty அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா?

Post by ksikkuh Thu Dec 07, 2017 4:20 pm



புற்றுநோய், நாம் உண்ணும் உணவாலும் வரலாம், சூரியஒளி அதிகம் படுவதாலும் வரலாம் என்கிறபோது கதிரியக்கங்களாலும் வர அதிக வாய்ப்புள்ளது. ஆம், புற்றுநோயும் கதிரியக்கமும் ஒன்றை விட்டு ஒன்று பிரிக்க முடியாதவை. புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளில் முக்கிய இடம் கதிரியக்கத்துக்கு உண்டு. ஆனால் நமக்கு ஏற்படும் சில உடல் கோளாறுகளைக் கண்டறிய

மேற்கொள்ளப்படும் எக்ஸ்-ரே, ஸ்கேன் போன்ற கதிரியக்கப் பரிசோதனைகளின்போது கதிர்களை நம் உடலில் செலுத்தியே முடிவுகள் பெறப்படுகின்றன. வெளியிலிருந்து வரும் கதிர்களே புற்றுநோயை ஏற்படுத்தும் என்னும்போது நமது உடலை ஊடுருவிச் செல்லும் இந்தக் கதிர்களும் ஆபத்தானவையா? ஒரு மருத்துவப் பரிசோதனையே மற்றொரு நோய்க்கு வழிவகுக்கிறதா? எக்ஸ்-ரே எடுக்கலாமா, கூடாதா? இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள் பலருக்கும் இருக்கும். அவற்றுக்கு விடைகள் அறிவோமா?

கதிரியக்கம்

ஆற்றலானது துகள் வடிவத்தில் ஏதாவது ஓர் ஊடகத்தின் மூலமாக ஊடுருவிச் செல்லும்போதுதான் கதிரியக்கம் ஏற்படுகிறது. கதிரியக்கத்தை அவற்றின் பண்புகளைப் பொறுத்து அயனியாக்கக் கதிரியக்கம், அயனியற்ற கதிரியக்கம் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன்

எக்ஸ்-ரே, டிஜிட்டல் எக்ஸ்-ரே என எக்ஸ்-ரே எடுக்க இரண்டுவிதமான இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எக்ஸ் கதிர்களை உருவாக்கித் தரும் கருவியின் ஸ்விட்சை அழுத்தியதும் எக்ஸ் கதிர்கள் வெளிப்படுகின்றன. பயனாளியை நிற்கவைத்தோ, படுக்கவைத்தோ எக்ஸ்-ரே எடுக்கலாம். முதலில் எந்த உறுப்புக்கு எந்த நிலையிலிருந்து எக்ஸ்-ரே எடுக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்படும். அதன்பிறகு பரிசோதனைக்கு உட்படும் நபரின் உடல் அளவுக்கேற்ப எவ்வளவு எக்ஸ் கதிர்கள் தேவை என்பதும் கணக்கிடப்படும். பரிசோதனை செய்துகொள்பவரின் எதிர்ப்புறம் எக்ஸ் கதிர்களைப் படியச்செய்யும் தட்டு பொருத்தப்பட்டு எக்ஸ் கதிர்களை ஒரு குழாயின்மூலம் பரிசோதனை செய்து கொள்பவரின்மீது செலுத்த வேண்டும். இந்தக் கதிர்கள் உடலை ஊடுருவி எக்ஸ் கதிர்களைப் படியச்செய்யும் தட்டில் உள்ள எக்ஸ்-ரே ஃபிலிமைச் சென்று படியும். அதன்பிறகு அந்த ஃபிலிமில் எடுத்துக் கழுவி அதில் தெரியும் உடலமைப்பை, நார்மலாக இருக்கும் உடலமைப்புடன் ஒப்பிட்டு என்ன குறைபாடு என்பதைக் கண்டுபிடிக்க முடியும். இதே தொழில் நுட்பம்தான் சி.டி ஸ்கேனிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் எக்ஸ்-ரே என்பது ஒரு நிமிடத்தில் ஒரேயொரு புகைப்படம் எடுப்பது போன்றது. அதுவே சி.டி ஸ்கேன் என்றால் ஒரே நேரத்தில் உடலை அனைத்துக் கோணங்களிலிருந்தும் 100 புகைப்படங்கள் எடுப்பது போன்றது. இதனால்தான் சி.டி ஸ்கேனில் வெளிப்படும் கதிரியக்கத்தின் அளவும் அதிகமானது.

கதிரியக்கத்தால் புற்றுநோய் வருமா?

நம் உடலிலுள்ள அனைத்து செல்களிலும் டி.என்.ஏ காணப்படும். பாலிநியூக்ளியோடைடுகளால் (Polynucleotide) ஆன ஈரிழை அமைப்பான இந்த டி.என்.ஏ தான் ம‌ரபியல் பண்புகளைக் கடத்த அவசியமானதும்கூட. கதிரியக்கத்தின்போது வெளிவரக்கூடிய அயனியாக்கக் கதிர்கள் இந்த ஈரிழை அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதால்தான் பிரச்னைகள் உண்டாகின்றன. அதிகப்படியான கதிரியக்கம் உடலினுள் செலுத்தப் படுவதால் அதிகப்படியான ஆற்றலோடு செல்களை ஊடுருவிச் செல்லும். இந்த அதிகப்படியான ஆற்றலானது டி.என்.ஏ-வின் ஓரிழையில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தினால், அதனை நமது உடலே இயற்கையாகச் சரி செய்துவிடும். ஆனால் ஈரிழைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தினால் உடலினால் அதனைச் சரி செய்ய முடியாது. அப்போது டி.என்.ஏ-வின் அமைப்பு பழுதாகி திடீர்மாற்றம் ஏற்படுகிறது. பழுதான டி.என்.ஏ செல் பிரிதலில் ஈடுபட்டு, பழுதான செல்களின் வள‌ர்ச்சியைக் கட்டுப்பாடின்றி அதிகளவில் தூண்டி விடும். இந்த அளவுக்கதிகமான செல்களின் வளர்ச்சிதான் புற்றுநோயை ஏற்படுத்தும். எக்ஸ்-ரே கதிரியக்கத்தால் ஆண்களில் பிறப்புறுப்புப் பகுதிகளில் புராஸ்டேட் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம். மேலும், அதிகப்படியான கதிரியக்கம் தைராய்டு புற்றுநோயையும்கூட ஏற்படுத்தும்.

கதிரியக்கத்தை அனுமதிக்கலாமா?

மருத்துவப் பரிசோதனைகள் செய்யாவிட்டாலும் தினமும் நாம் கதிரியக்கத்துக்கு உட்பட்டுதான் இருக்கிறோம். சூரியனிலிருந்து வெளிவரும் காஸ்மிக் கதிர்கள், மணலில் உள்ள தோரியம் அணுக்கள் சிதைவதால் வெளிப்படும் கதிர்கள், தொலைபேசி டவர்கள், கைப்பேசிகள், வீட்டில் பயன்படுத்தப்படும் விளக்குகள் என அனைத்திலிருந்தும் ஒரு குறிப்பிட்ட கதிர்கள், குறிப்பிட்ட அளவில் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. எனவே, கதிர்களற்ற சூழல் என்பதெல்லாம் கிடையாது. எவ்வளவு கதிரியக்கத்துக்கு உட்படுகிறோம், எந்தக் கதிரியக்கத்துக்கு உட்படுகிறோம் என்பதே முக்கியமானது.

ஒரு மனிதனின் உடலில் ஒரு வருடத்துக்கு 50 mSv (மில்லி சீவர்ட்) வரை கதிரியக்கத்தை அனுமதிக்கலாம். சூரியன் மற்றும் மின்னணுச் சாதனங்கள் மூலம் வருடத்துக்கு சராசரியாக 3 mSv அளவு கதிரியக்கம் நமக்கு வந்துவிடுகிறது. மீதி 47 mSv வரை கதிரியக்கம் ஏற்பட்டால் நமக்கு ஆபத்து இல்லை. எனவே, ஆண்டுக்கு ஒருமுறை முழுப் பரிசோதனையின் போது கதிரியக்கப் பரிசோதனை செய்துகொள்வதால் எந்த உடல் பாதிப்புகளும் ஏற்படாது. புற்றுநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் கதிர்கள்தான் அதிக ஆற்றலை உடையவை. இவைதான் வேறு இடங்களில் புற்றுநோயை மீண்டும் உருவாக்கும். ஆனால், குறைந்த ஆற்றலை உடைய கதிர்கள்தான் கதிரியக்கப் பரிசோதனையில் பயன்படுத்தப் படுகின்றன. எனவே, இதனால் ஏற்படும் கதிரியக்கத் தாக்கம் குறைவாகத்தான் இருக்கும்.

யாருக்கு வேண்டாம்?

கர்ப்பக் காலத்தில் எக்ஸ்-ரே எடுப்பதை பொதுவாக மருத்துவர்களே அனுமதிப்பதில்லை. குறிப்பாக கர்ப்பமான முதல் இரண்டு மாதங்கள் மிகவும் முக்கியம். இந்தக் காலகட்டத்தில் கதிரியக்கப் பரிசோதனைக்கு உட்படும்போது அது குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும். திருமணமான பெண்களில் சிலர் தாங்கள் கர்ப்பமாக இருப்பதை அறியாமலே சீரற்ற மாதவிலக்குப் பிரச்னைக்காக எக்ஸ்-ரே எடுப்பதுண்டு. இதுவும் கருவிலுள்ள சிசுவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே கர்ப்பமான பெண்களில் தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக மட்டும் காரீயத்தாலான உறையை வயிற்றின்மேல் போர்த்திவிட்டுதான் எக்ஸ்-ரே எடுக்க வேண்டும். மற்றபடி அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையே போதுமானது. பெரியவர்களைவிட குழந்தைகள், மத்தியில் அதிகக் கதிரியக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பிறந்த குழந்தைகளுக்கு முதல் மூன்று மாதங்கள் வரை எக்ஸ்-ரே, ஸ்கேன் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

அதிக கதிரியக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள முடியுமா?

* சி.டி. ஸ்கேன் செய்யப் பரிந்துரைக்கும்போது, அதற்குப் பதிலாக எம்.ஆர்.ஐ அல்லது அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்யலாமா என மருத்துவரிடம் கேட்கலாம். ஏனெனில், எம்.ஆர்.ஐ ஸ்கேனில் காந்த அலைகளும், அல்ட்ராசவுண்ட் ஸ்கேனில் ஒலி அலைகளும்தான் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றில் கதிரியக்கம் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால் சிறந்த மாற்றாக அமையும்.

* எக்ஸ் ரே எடுப்பவரையும், எடுத்துக் கொள்பவரையும் தவிர, வேறு யாரையும் அறையினுள் அனுமதிக்கக் கூடாது.

* எக்ஸ்-ரே அல்லது சி.டி. ஸ்கேன் பரிசோதனையின்போது, கதிரியக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் மார்புப்பகுதி, கழுத்துப் பகுதியிலுள்ள தைராய்டு சுரப்பி மற்றும் ஆண்களின் பிறப்புறுப்புப் பகுதி ஆகியவற்றை காரீய உறையை வைத்து மூடிவிடலாம். இதனால் இந்தப் பகுதிகளிலுள்ள செல்களை அதிக அளவிலான கதிரியக்கத்திலிருந்து காப்பாற்றலாம்.

* ஒரே பிரச்னைக்காகப் பல மருத்துவர்களிடம் செல்லும்போது ஒவ்வொரு மருத்துவமனையிலும் புதிதாக ஸ்கேன், எக்ஸ்-ரே எடுக்கக் கூடாது. முதலில் பரிசோதிக்கும் இடத்தில் பரிசோதனை முடிவுகளை சிடியில் போட்டு வாங்கிக் கொள்ளலாம். இது தேவையற்ற செலவுகளைக் குறைப்பதோடு, உடலின் ஒரே பகுதி அதிகமுறை கதிரியக்கத்துக்கு உட்படுவதையும் தடுக்கும்.

* எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் போன்ற எந்தவொரு கதிரியக்க ஆய்வுகளின்போதும் பரிசோதனை முடிவுகளுடன், அந்த நபரின் உடலில் செலுத்தப்பட்ட கதிரியக்கத்தின் அளவும் குறிப்பிடப்பட வேண்டும். ஒவ்வொரு பரிசோதனையின்போதும் இந்த அளவுகளைக் குறிப்பிடுவதன் மூலம் ஒரு வருடத்தில் நம் உடலில் செலுத்தப்பட்ட கதிரியக்க‌த்தின் அளவை அறிந்துகொள்ள முடியும். இந்த அளவுகளின் அடிப்படையிலேயே அடுத்தடுத்த பரிசோதனைகளின் தேவைகளும் தீர்மானிக்கப்பட வேண்டும்.

ksikkuh
ksikkuh
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum