ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின்

Go down

விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Empty விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின்

Post by KavithaMohan Thu Dec 07, 2017 3:32 pm

விஷால் மனு தள்ளுபடி போன்ற விவகாரங்களை பார்க்கும்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெறும் என்ற நம்பிக்கையை மக்களுக்கும் எங்களுக்கும் ஏற்படுத்திடும் வகையில் தலைமைத் தேர்தல் ஆணையம் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதிட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். வார்டு 69 திக்காகுளம் பகுதி சலவைத் தொழிலாளர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். 64, 65 மற்று 67 வார்டு பகுதிகளுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இதையடுத்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

மு.க.ஸ்டாலின்: இன்று என்னுடைய கொளத்தூர் தொகுதியில் நடந்துக் கொண்டிருக்கின்றபணிகளையும், நடைபெற்று முடிந்திருக்கின்ற பணிகளையும் கண்காணிக்கும்விதத்தில், சட்டமன்ற உறுப்பினர் என்கிற முறையில் ஆய்வுப் பணிகளைமேற்கொண்டுள்ளேன்.

அந்த அடிப்படையில், இன்னும் முடிவடைய வேண்டியபணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன். குறிப்பாக, கொளத்தூர் பகுதியில்போக்குவரத்து தடைப்பட்டு பேருந்துகள் நிற்கின்றன என்ற செய்தி வந்தது. அந்தசெய்தி வந்தவுடனே போக்குவரத்துத் துறை அதிகாரிகளை எல்லாம்தொடர்புகொண்டு என்ன காரணத்தால் நெடுஞ்சாலையில் போக்குவரத்துநிறுத்தப்பட்டிருக்கிறது என்று கேட்ட நேரத்தில், அவர்கள் எனக்கு தந்த விளக்கம்,அண்மையில் பெய்திருக்கும் மழையின் காரணத்தால், சாலைகள் எல்லாம்மோசமாக பழுதடைந்திருக்கின்றன.

எனவே தான், பேருந்துகள் ஓட்ட முடியாதநிலை ஏற்பட்டிருப்பதாகவும், உடனே நெடுஞ்சாலைத் துறையின் மூலமாகவும்,மாநகராட்சியின் மூலமாகவும் அந்த சாலைகளை செப்பனிடும் பணிகளைவேகவேகமாக முடித்து, உடனடியாக போக்குவரத்து மீண்டும் சீர்செய்யப்படும்என்று என்னிடத்தில் உறுதியளித்திருக்கிறார்கள்.

செய்தியாளர்: ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள்எப்படியிருக்கிறது? தேர்தல் சுதந்திரமாக நடைபெறும் என்று நினைக்கிறீர்களா?

மு.க.ஸ்டாலின்: கடந்த முறை 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடாவை கண்டுப்பிடித்தவுடன் தேர்தலை நிறுத்தினார்கள். அதற்குரிய நடவடிக்கையை எடுத்திருந்தால், இந்த தேர்தல் நியாமாக நடைபெறும் என்ற நம்பிக்கையோடு நாம் இருக்கலாம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

யார் மீதும் எஃப்.ஐ.ஆர் போடப்படவில்லை. அதில் சம்பந்தப்பட்டிருப்பது, ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஏழெட்டு அமைச்சர்கள் அந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். அந்த ஆவணங்கள் எல்லாம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்துதான் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அவர்கள் மீதெல்லாம் துளியளவுக்கூட இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான், இடைத்தேர்தலுக்கு மீண்டும் இடைத்தேர்தல் வந்திருக்கிறது.

இந்தஇடைத்தேர்தலையாவது முறையாக நடத்திட வேண்டும் என்பதனால் தான் தேர்தல் ஆணையம் கூட, தேர்தலை முறையாக நடத்துவோம் என்று அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் தேர்தலை முறையாக நடத்தினால் நிச்சயமாக, உறுதியாக திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும்.

ஆனால், ரிட்டர்னிங் ஆபிசர் என்றுசொல்லப்படும் ஆர்.ஓ நடிகர் விஷால் விவகாரத்தில் எப்படி நடந்துக் கொண்டிருக்கிறார் என்பதை பார்க்கும் போது, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையம் இது குறித்து விசாரித்து, என்ன நடந்திருக்கிறது என்பதை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுத்தால் தான் இந்த தேர்தல் முறையாகநடைபெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கும் ஏற்படும், மக்களுக்கும் ஏற்படும்.

செய்தியாளர்: தேர்தலை நிறுத்துவதற்கான சதி நடப்பதாக உங்களுடையகூட்டணிக் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறாரே?

மு.க.ஸ்டாலின்: இருக்கலாம். ஏற்கனவே திமுக வெற்றிப்பெற போகிறது என்பதனால் தானே 89 கோடி ரூபாய் விவகாரத்தை அடிப்படையாக வைத்து தேர்தலை நிறுத்தினார்கள். இப்போதும் அதுபோல செய்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால், திமுக மிகப்பெரிய வெற்றியை பெறக்கூடிய நிலை இன்று உருவாகியிருக்கிறது.

செய்தியாளர்: ஆளுநர் தொடர்ந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.அமைச்சர்கள் தேர்தல் பணியில் ‘பிசி’யாக இருக்கிறார்கள். இதனை எப்படிபார்க்கிறீர்கள்?

மு.க.ஸ்டாலின்: ஏற்கனவே கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களுக்கு ஒரு முதலமைச்சரை போல அல்லது அமைச்சர்களை போல ஒரு பெரிய சுற்றுப்பயணத்தையே நடத்தியிருக்கிறார், ஆய்வுப் பணிகளை நடத்தியிருக்கிறார். இப்போது திருநெல்வேலியில் ஆய்வு நடத்தியிருக்கிறார். கன்னியாகுமரிக்கும் செல்லவிருப்பதாக செய்திகள் வந்துக் கொண்டிருக்கிறது. ஆளுநரை பொறுத்தவரையில், அரசியல் சட்ட விதிகளின்படி பார்த்தால் ஆய்வுநடத்துவதற்கோ அல்லது மாவட்டவாரியாக சென்று மக்கள் பணிகளைகவனிப்பதற்கோ அதிகாரமும் உரிமையும் இல்லை என்றுதான் எடுத்துச்சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் இருக்கின்ற இந்த ஆட்சியைப் பொறுத்தவரையில், ஒரு அடிமை ஆட்சியாக நடந்துக் கொண்டிருப்பதால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. ஒருவேளை நடக்கின்ற ஆட்சி, ஒரு ஆட்சியே இல்லை என்று ஆளுநர் முடிவு செய்து ஆய்வுப் பணியில் இறங்கியிருக்கிறாரா என்ற சந்தேகமும் எழுகிறது. இந்த பணிகளில் ஈடுபடும் ஆளுநர் அவர்களை நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, மெஜாரிட்டி இல்லாத இந்த அதிமுக ஆட்சி உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க கூடிய வகையில் சட்டமன்றத்தைக் கூட்டி, அந்த பணியை நிறைவேற்றுவார் என்றால், எல்லோரும் ஆளுநரை பாராட்டக் காத்திருக்கிறோம்.

செய்தியாளர்: கன்னியாகுமரி மாவட்டத்தி இன்னும் 2000 மீனவர்களைகாணவில்லை என்று மக்கள் கூறிவருகின்றனர். ஆனால், மாநில அரசு முறையானதகவல் வழங்கினால் மட்டுமே உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என்று மத்திய அரசின் அமைச்சர்களே தெரிவித்திருக்கிறார்களே?

மு.க.ஸ்டாலின்: கடந்த மாதம் 29ம் தேதி புயல் தாக்கிய சம்பவம் நடைப்பெற்றது. இன்று தேதி 7. இடையில் கிட்டத்தட்ட 10 நாட்கள் ஆகிவிட்டது. பத்து நாட்களாக எந்தகணக்கும் எடுக்கப்படவில்லை. கணக்கெடுப்பதற்கான பணிகளிலும் அரசு ஈடுபடவில்லை. மீன்வளத்துறை அமைச்சர் ஒரு கணக்கு சொல்கிறார், தலைமைச்செயலாளர் ஒரு கணக்கு சொல்கிறார், துணை முதலமைச்சர் ஒரு கணக்குசொல்கிறார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு கணக்கு சொல்கிறார், பாதுகாப்புத் துறை அமைச்சராக இருக்கும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு கணக்கு சொல்கிறார். இப்படிதான் குழப்பிக் கொண்டிருக்கிறார்களே தவிர, முறையான கணக்கு எடுக்க அவர்களால் முடியவில்லை. ஏன், முடியவில்லை என்பது எனக்கு தெரியவில்லை.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நன்றி
TheHindu
KavithaMohan
KavithaMohan
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 28/11/2017

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெ., சிகிச்சை வீடியோ விவகாரம்: பாய்கிறது வழக்கு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு...!
» தேர்தல் களத்தில் பலமான எதிரி வேண்டும்: மு.க.ஸ்டாலின்
» வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
» கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் 30-ந் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum