ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பி.சி.ஜி தடுப்பூசி

2 posters

Go down

பி.சி.ஜி தடுப்பூசி Empty பி.சி.ஜி தடுப்பூசி

Post by ksikkuh Wed Dec 06, 2017 1:29 pm



தடுப்பூசி என்பது தமிழ் சூழலுக்குப் புதிய விஷயம் அல்ல. 'வெள்ளம் வரும் முன் அணை போடு’ என்பது காலங்காலமாய் நம் சூழலில் உலவிவந்த சொலவடைதான். தடுப்பூசி என்பது அந்தக் கருத்தாக்கத்தில் விளைந்த கருவிதான்.



குழந்தைக்கு உரிய காலத்தில் போடப்படும் தடுப்பூசி, பிற்காலத்தில் அந்தக் குழந்தையின் ஆரோக்கியத்தைக் காக்கும் அரணாக அமையும். பெரும் செலவையும் மன உளைச்சலையும் தவிர்க்கும். அதனால், தடுப்பூசி விஷயத்தில் அலட்சியம் கூடாது. செலவு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அரசாங்கமே, அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்களிலும் பெரும்பாலான ஊசிகளை இலவசமாகப் போடுகின்றது. பெற்றோராகிய நம்முடைய மிகப் பெரிய பொறுப்பு... உரிய காலத்தில் அவற்றை எல்லாம் குழந்தைகளுக்குப் போடுவது மட்டும்தான்.

பி.சி.ஜி தடுப்பூசி (BCG Vaccine):

குழந்தை பிறந்ததும் போடப்படும் முதல் தடுப்பூசி, பி.சி.ஜி (BCG Bacillus Calmette Guerin ). 'தோல் ஊசி’ என்று இதைச் சொல்வார்கள். டி.பி. (Tuberculosis) எனப்படும் காச நோய் வருவதைத் தடுக்கும். இன்றைய நிலவரப்படி இந்தியாவில் மட்டும் 1.40 கோடி பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், சுமார் 20 சதவீதம் பேர் குழந்தைகள். அப்படியெனில், இந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டியதன் அவசியம் புரிந்திருக்கும்.

காசநோய்:

காசநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவுக்கு 'மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்’ (Mycobacterium Tuberculosis) என்று பெயர். நுரையீரல்களைத்தான் இந்த நோய் அதிகம் பாதிக்கிறது. என்றாலும், குடல், தோல், எலும்பு, மூளையுறை, சிறுநீரகம், நிணநீர்த் தாரைகள் போன்ற பகுதிகளையும் இது பாதிக்கும். காசநோய்க் கிருமிகள் நோயாளியின் சளியில் வெளியேறும். இந்த நோயுள்ளவர் இருமும்போது, தும்மும்போது, சளியைக் காறித் துப்பும்போது, இந்தக் கிருமிகள் சளியுடன் காற்றில் கலந்து, அதைச் சுவாசிக்கும் நபருக்கும் தொற்றிக்கொள்ளும்.

காசநோயின் அறிகுறிகள்:

இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருமல், மாலைநேரக் காய்ச்சல், சளியில் ரத்தம், பசியின்மை, உடல்எடை குறைதல், நெஞ்சு வலி, இரவில் உடல் வியர்ப்பது, எந்த நேரமும் களைப்பு ஏற்படுதல் இவையே காசநோயின் முக்கிய அறிகுறிகள்.

பிரைமரி காம்ப்ளெக்ஸ் (Primary complex):

குழந்தைகளுக்கு ஏற்படும் காசநோயை 'பிரைமரி காம்ப்ளெக்ஸ்’ என்கிறோம். குழந்தைக்கு அடிக்கடி சளியுடன் காய்ச்சல், தொடர் மூச்சிறைப்பு, பசியின்மை, உடல் எடை குறைவது அல்லது வயதுக்கு ஏற்றபடி உடல்எடை அதிகரிக்காதது, கழுத்தில் நெறிக்கட்டிகள் நீடிப்பது போன்றவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகள்.

பரிசோதனை என்ன? சிகிச்சை என்ன?

காசநோயை சளிப் பரிசோதனை, மார்பு எக்ஸ்ரே, 'மாண்டோ’ பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, எலிசா பரிசோதனை, ஜீன்எக்ஸ்பெர்ட் (Gene Xpert Test) போன்ற பரிசோதனைகள் மூலம் தெரிந்துகொள்ள முடியும். இந்த நோய்க்குச் சரியாகவும் ஆறு மாதங்கள் தொடர்ச்சியாகவும் மருந்துகள் எடுத்துக்கொண்டால், இதை முற்றிலும் குணப்படுத்த முடியும்.

இவ்வளவு சிரமப்படவேண்டிய அவசியமும் இல்லை. காசநோயைத் தடுக்க இருக்கவே இருக்கிறது பிசிஜி தடுப்பூசி.



பிசிஜி’யைப் போட்டுக்கொள்ளும் முறை:

குழந்தை பிறந்தவுடன் 0.1 மி.லி. அல்லது 0.05 மி.லி. அளவில் இடது புஜத்தில் தோலுக்குள் போடப்பட வேண்டும். குழந்தை பிறந்தவுடன் இது போடப்படவில்லை என்றால், அடுத்த ஒன்றரை மாதத்தில் போட்டுக்கொள்ளலாம்; அப்போதும் போடப்படவில்லை எனில், 5 வயதுக்குள் போட்டுக்கொள்ளலாம். அதன் பிறகு, இதைப் போட்டுக்கொள்ளத் தேவை இல்லை. குழந்தையின் தனிப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து, இது வேலை செய்யும். தடுப்பூசி போடப்பட்ட இடத்தை இரண்டு நாட்களுக்குத் தேய்க்கக் கூடாது. குழந்தையைக் குளிப்பாட்டக் கூடாது. அந்த இடத்தில் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

புஜத்தில் தழும்பு அவசியமா?

பிசிஜி போடப்பட்ட புஜத்தில் அறு வாரங்கள் கழித்து, சிறு கொப்புளம் ஏற்படும். அது பெரிதாகி நீர்க்கொப்புளம் ஆகி, சில நாட்களில் சீழ்க்கொப்புளமாகும். பிறகு, அது உடைந்து புண்ணாகும். 12 வாரங்களுக்குள் அது தானாகவே சரியாகி, அந்த இடத்தில் நிரந்தரத் தழும்பு உருவாகும். இந்தக் கொப்புளத்திலும் தழும்பிலும் எந்த மருந்தையும் தடவக் கூடாது. இந்தத் தழும்பு, தடுப்பூசி நன்றாகச் செயல்படுகிறது என்று அறிவிக்கும் அறிகுறி. இவ்வாறு தழும்பு ஏற்படாதவர்கள், 5 வயதுக்குள் எப்போது வேண்டுமானாலும் இந்தத் தடுப்பூசியை மீண்டும் ஒருமுறை போட்டுக்கொள்ளலாம்.

இலவச தடுப்பூசி!

இந்திய அரசின் சுகாதாரத் துறை, குழந்தை பிறந்தது முதல் போடவேண்டிய தடுப்பூசிகள் மற்றும் சொட்டு மருந்துகள் பற்றிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. இவற்றுடன் பெற்றோரின் விருப்பத்தின் பெயரில் போடக்கூடிய புதிய தடுப்பூசிகளையும் சேர்த்து, 'இந்தியக் குழந்தைகள் நல மருத்துவர் கூட்டமைப்பு’ (IAP) ஒரு அட்டவணையைப் பரிந்துரைக்கிறது. இதில் பெரும்பாலான ஊசிகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களில் இலவசமாகவே போடப்படுகின்றன.




ksikkuh
ksikkuh
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Back to top Go down

பி.சி.ஜி தடுப்பூசி Empty Re: பி.சி.ஜி தடுப்பூசி

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 06, 2017 6:52 pm

ksikkuh wrote:
பி.சி.ஜி தடுப்பூசி (BCG Vaccine):
குழந்தை பிறந்ததும் போடப்படும் முதல் தடுப்பூசி, பி.சி.ஜி (BCG Bacillus Calmette Guerin ). 'தோல் ஊசி’ என்று இதைச் சொல்வார்கள். டி.பி. (Tuberculosis) எனப்படும் காச நோய் வருவதைத் தடுக்கும். இன்றைய நிலவரப்படி இந்தியாவில் மட்டும் 1.40 கோடி பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், சுமார் 20 சதவீதம் பேர் குழந்தைகள். அப்படியெனில், இந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டியதன் அவசியம் புரிந்திருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1252658
பி.சி.ஜி தடுப்பூசி 103459460 பி.சி.ஜி தடுப்பூசி 3838410834 பி.சி.ஜி தடுப்பூசி 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum