ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம்

Go down

டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Empty டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம்

Post by ksikkuh Wed Dec 06, 2017 1:09 pm




டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம்!
காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால், ‘இது டைபாய்டு காய்ச்சலாக இருக்குமோ?’ என்று சாதாரண மக்களே சந்தேகப்படும் அளவுக்குப் பரவலானது டைபாய்டு காய்ச்சல். பொது சுகாதாரக் குறைவால் உருவாகின்ற தொற்றுநோய் இது. சுகாதாரம் மிகுந்த ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் டைபாய்டு காய்ச்சல் இல்லை. சுகாதாரம் குறைந்த வளரும் நாடுகளில்தான் இதன் பாதிப்பு அதிகம்.
மழைக் காலங்களில் சுற்றுப்புறம் மாசடைந்து, குடிநீரும், தெருச் சாக்கடை நீரும் கலந்து, நோய்க்கிருமிகள் வாழ வசதி செய்து தருவதால், செப்டம்பர் தொடங்கி டிசம்பர் வரை டைபாய்டு காய்ச்சலுக்கான காலகட்டம்தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவரையும் பாதிக்கும் தன்மைகொண்டது டைபாய்டு.
நோய் வரும் வழி:
‘சால்மோனெல்லா டைபி’ (Salmonella typhi) எனும் பாக்டீரியாக் கிருமிகள், நம் குடல் திசுக்களைத் தாக்குவதால், இந்தக் காய்ச்சல் ஏற்படுகிறது. நோயாளியின் சிறுகுடலிலும், அதைச் சார்ந்த நிணநீர்த் திசுக்களிலும் இந்தக் கிருமிகள் வாழ்கின்றன. நோயாளியின் மலம் மற்றும் சிறுநீரில் இவை வெளியேறுகின்றன. இதன் காரணமாக அசுத்தமான இடங்களிலும், பொதுமக்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தும் தெரு ஓரங்களிலும் இந்தக் கிருமிகள் கோடிக்கணக்கில் வாழ்கின்றன. இந்த இடங்களில் வாழும் ஈக்கள், இந்தக் கிருமிகளைச் சுமந்துகொண்டு வீட்டில் உள்ள பாதுகாப்பில்லாத குடிநீரிலும், உணவிலும் கலந்துவிடுகின்றன. இந்த அசுத்த உணவையும், குடிநீரையும் பயன்படுத்துவோருக்கு டைபாய்டு காய்ச்சல் வருகிறது.
ஏற்கனவே டைபாய்டு காய்ச்சல் வந்து குணமானவரின் குடலில் இந்தக் கிருமிகள் குறைந்தது மூன்று மாதங்கள்வரை வசிக்கும். அப்போது அந்த நபரின் மலத்திலும் சிறுநீரிலும் இவை வெளியேறி, அடுத்தவர்களுக்கு நோயைப் பரப்பும். இந்த நபர்களை ‘நோய்க் கடத்துநர்கள்’ (Carriers) என்கிறார்கள்.
அறிகுறிகள்:
ஒவ்வொரு நாளும் காய்ச்சல் படிப்படியாக அதிகரித்து, தலைவலியும் உடல் வலியும் கடுமையாகும். நாக்கில் வெண்படலம் தோன்றும். பசி இருக்காது. வாந்தி, வயிற்றுவலி வரும். உணவு சாப்பிட முடியாது. இதனால், சோர்வு அதிகரித்து, மயக்கம் வரும்.
சிக்கல்கள்:
இந்தக் காய்ச்சல் குழந்தைகளைப் பாதிக்கும்போது, ‘காய்ச்சல் வலிப்பு’ வரலாம். குடலில் ரத்தக்கசிவு, ரத்த வாந்தி ஏற்படலாம். நோயின் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைபெறத் தவறினால், ரத்தத்தில் இந்தக் கிருமிகளின் நச்சுத்தன்மை அதிகரித்து, ‘நச்சுக் குருதிநிலை’ (Septicaemia) ஏற்படலாம். இதன் மூலம் உயிருக்கு ஆபத்து நேரலாம்.
தடுப்பு ஊசியும் தடுப்பு மாத்திரையும்:
டைபாய்டு காய்ச்சல் வராமல் தடுக்க, தடுப்பூசியும் தடுப்பு மாத்திரையும் உள்ளன. தசை ஊசியாகச் செலுத்தப்படும் டைபாய்டு தடுப்பூசியில் (Typhoid vaccine – Injection) ‘விஐ கேப்சுலர் பாலிசாக்கரைடு தடுப்பூசி (Vicapsular polysaccharide (Vi-PS) vaccine), ‘விஐபிஎஸ் டிடி இணைக் கூட்டுப்பொருள் தடுப்பூசி’ (Vi-PS TT Conjugate vaccine) என்று இரண்டு வகை உள்ளன. வாய் வழி விழுங்கப்படும் ‘டைபாய்டு தடுப்பு மாத்திரை’ (Typhoid vaccine – Oral) வெளிநாடுகளில் இருக்கிறது. இந்தியாவில் இந்த மாத்திரை தற்போது பயன்பாட்டில் இல்லை.
விஐபிஎஸ் தடுப்பூசி போடப்படும் முறை:
குழந்தைக்கு 2 வயது முடிந்ததும் இந்தத் தடுப்பூசியைப் போட்டுவிட வேண்டும். ஒருமுறை போடப்படும் தடுப்பூசியின் அளவு அரை மில்லி. இதைத் தசை ஊசியாகத் தொடை அல்லது புஜத்தில் போட்டுக்கொள்ளலாம். ஒருமுறை இதைப் போட்டுக்கொண்டால், 3 ஆண்டுகளுக்கு டைபாய்டு வருகின்ற வாய்ப்பு குறையும். ஆகவே, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம்.
விஐபிஎஸ் டிடி இணைக் கூட்டுப்பொருள் தடுப்பூசி:
இதன் வீரியமும் செயலாற்றலும் அதிகம் என்பதால், இந்தத் தடுப்பூசியைத்தான் இப்போது அதிகம் பயன்படுத்துகின்றனர். குழந்தைக்கு 9 மாதம் முடிந்ததில் இருந்து ஒரு வயதுக்குள் இதைப் போட்டுக்கொள்ளலாம். ஊக்குவிப்பு ஊசியாக குழந்தைக்கு 2 வயது முடிந்ததும் ஒருமுறை இதைப் போட்டுவிட வேண்டும்.
முக்கியத் தகவல் மற்றத் தடுப்பூசிகள் போடப்படும்போது அவற்றுடன் டைபாய்டு தடுப்பூசியையும் போட்டுக்கொள்ளலாம். தற்போது, குழந்தைகளுக்கு 9 மாதங்கள் முடிந்ததும் எம்.எம்.ஆர் தடுப்பூசி போடுவது உண்டு. அப்படிப் போடப்பட்ட குழந்தைக்கு 4 வாரங்கள் இடைவெளிவிட்டு டைபாய்டு தடுப்பூசியைப் போட வேண்டும்.
டைபாய்டு காய்ச்சல் உள்ளவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு 2 வாரங்களுக்கு முன்பு, டைபாய்டு தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தடுப்பூசி வேலை செய்யும். இது தடுப்பு மாத்திரைக்கும் பொருந்தும். ‘ஆன்டிபயாட்டிக்’ மருந்துகளைச் சாப்பிடுபவர்கள், அவற்றைச் சாப்பிட்டு முடித்த பிறகு, குறைந்தது 3 நாட்கள் இடைவெளி விட்டு, தடுப்பு மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும்.
டைபாய்டு வந்தவருக்குத் தடுப்பூசி போடலாமா?
டைபாய்டு ஏற்பட்டவர்கள் கடந்த 3 வருடங்களுக்குள் டைபாய்டுக்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவில்லை எனில், டைபாய்டுக்கு முறைப்படி சிகிச்சை எடுத்துச் சரியான பிறகு 4 வாரங்கள் கழித்து இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.
யாருக்குப் பயன்படுத்தக் கூடாது?
தடுப்பூசி அல்லது தடுப்பு மாத்திரைக்கு அலர்ஜி உள்ளவர்கள் பயன்படுத்தக் கூடாது. டெங்கு, மலேரியா போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அந்த நோய்கள் குணமான பிறகு பயன்படுத்தலாம்; தடுமம், சளி போன்ற சிறிய தொந்தரவுகள் இருக்கும்போதும் பயன்படுத்தலாம்.

பக்கவிளைவுகள்:
இந்தத் தடுப்பூசிக்கான பக்கவிளைவுகள் மிதமாகவே இருக்கும். ஊசி போடப்பட்ட இடத்தில் தோல் சிவப்பது, லேசான வலி, சிறிய வீக்கம், மிதமான காய்ச்சல், தலைவலி போன்ற தொல்லைகள் உண்டாகலாம். இவை தானாகவே சரியாகிவிடும்.
டைபாய்டு புள்ளி விவரம்
உலகில் வருடத்துக்கு இரண்டரைக் கோடிப் பேருக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்படுகிறது. இவர்களில் 6 லட்சம் பேர் இறந்துவிடுகிறார்கள். இந்தியாவில் இந்தக் காய்ச்சல் ஏற்பட்ட பத்து நோயாளிகளில் மூன்று பேருக்கு இந்த நிலைமை ஏற்படுவதாக மருத்துவப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
வரவிடாமல் தடுக்க வழி!
டைபாய்டு காய்ச்சலை வரவிடாமல் தடுக்கத் தடுப்பு ஊசி அல்லது தடுப்பு மாத்திரை மட்டுமே போதாது. காரணம், இவற்றின் நோய் தடுக்கும் சக்தி 80 சதவிகிதம் மட்டுமே. எனவே, மற்றத் தடுப்பு வழிகளையும் பின்பற்ற வேண்டியது மிக அவசியம்.
கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதிலும் கழிப்பறைக்குச் சென்று வந்த பிறகு கைகளை நன்கு சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.
தெருக்களைக் கழிப்பறைகளாகப் பயன்படுத்தக் கூடாது.
குடிநீரை நன்கு கொதிக்கவைத்து ஆறவைத்துக் குடிக்க வேண்டும்.
காய்கறி மற்றும் பழங்களை நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்திய பிறகே சமையலுக்கும் சாப்பிடவும் பயன்படுத்த வேண்டும்.
சமைத்த உணவுகளை திறந்துவைக்கக் கூடாது. ஈக்கள் மொய்க்காமல் பாதுகாக்க வேண்டும். திறந்தவெளிகளில் ஈக்கள் மொய்க்கும் வகையில் விற்கப்படும் உணவுகளையும் சாப்பிடக் கூடாது.
வீடுகளிலும் தெருக்களிலும் சுற்றுப்புறச் சுகாதாரம் காக்கப்பட வேண்டும்.

ksikkuh
ksikkuh
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum