ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Today at 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

துறை அறிமுகம்: புவியோடு உறவாடி...

Go down

துறை அறிமுகம்: புவியோடு உறவாடி...  Empty துறை அறிமுகம்: புவியோடு உறவாடி...

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 05, 2017 8:33 pm

துறை அறிமுகம்: புவியோடு உறவாடி...  0pHFcvjdTWyHMP6D57rS+remotesensing


சிலர் அறிவியல் துறை வழங்கும் படிப்புகளை மட்டும் விரும்பலாம். இன்னும் சிலரோ தொழில்நுட்பத் துறை சார்ந்த படிப்புகளை மட்டும் விரும்பலாம். இந்த இரண்டும் கலந்த துறை என்றால், அங்கே சவாலுக்கும் பஞ்சம் இருக்காது. படிக்கிறபோது மட்டுமல்ல, அந்தப் படிப்பு தருகிற வேலையும் சவால் நிறைந்ததாகவே இருக்கும். அத்தகையதுதான் ‘ரிமோட் சென்சிங்’ என்றழைக்கப்படும் தொலையுணர்வு, ‘ஜியோ இன்ஃபர்மேடிக்ஸ் டெக்னாலஜி’ என்றழைக்கப்படும் புவித் தகவலியல் தொழில்நுட்பப் படிப்பு.

தொடக்கம்

ரிமோட் சென்சிங், ஜியோ இன்ஃபர்மேடிக்ஸ் தொழில்நுட்பப் படிப்புகள் இந்தியாவில் உருவானதன் பின்னணியில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறு உள்ளது. இந்தியாவில் முதன்முதலாகத் தொலையுணர்வு கல்வி 1966-ல் டேராடூனில் அறிமுகம்செய்யப்பட்டது. சர்வே ஆஃப் இந்தியா துறையின் கீழ் செயல்பட்ட அந்தக் கல்வி நிறுவனம், ஆரம்ப காலத்தில் இந்திய போட்டோ-இன்டர்பிரடேஷன் (Photo Interpretation) கல்வி நிறுவனம் என்று அழைக்கப்பட்டது. 1972-ல் படிப்புகளை வழங்கத் தொடங்கிய அந்தக் கல்வி நிறுவனம் தொலையுணர்வு, புவித் தகவலியல் தொழில்நுட்பம் போன்ற படிப்புகளை வழங்கத் தொடங்கியது. இந்திய விண்வெளித் துறையின்கீழ் கொண்டுவரப்பட்ட, இந்தக் கல்வி நிறுவனம் ‘இந்திய ரிமோட் சென்சிங் நிறுவனம்’ என்று பெயர் மாற்றப்பட்டது.

தொலைதூரத்தை ஆராயலாம்

ரிமோட் சென்சிங், ஜியோ இன்ஃபர்மேடிக்ஸ் தொழில்நுட்பப் படிப்புகள் சற்றுச் சவாலானவை. இயற்கை வளத்தைக் கண்டறியும் சர்வே, கடல் ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, பேரிடர் மேலாண்மை, வான்வெளி அறிவியல், புவி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் போன்றவை இதன் கீழ்தான் வருகின்றன. இஸ்ரோவின் பல்வேறு ஆராய்ச்சி நடவடிக்கைகளில் பங்குகொள்வதும் அதுதொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதும் இந்தப் பிரிவின் வசம்தான் உள்ளன.
நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

துறை அறிமுகம்: புவியோடு உறவாடி...  Empty Re: துறை அறிமுகம்: புவியோடு உறவாடி...

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 05, 2017 8:34 pm

ரிமோட் சென்சிங், ஜியோ இன்ஃபர்மேடிக்ஸ் தொழில்நுட்பம் என்பது நேரடியாக நெருங்காமல் தொலை தூரத்தில் உள்ள ஒரு பொருள் அல்லது இடத்தைப் பற்றி ஆராயும் படிப்பு. இதில் அறிவியலும் இருக்கும்; தொழில்நுட்பமும் இருக்கும். ஆவலுக்குத் தீனி தரும் ரிமோட் சென்சிங், ஜியோ இன்ஃபர்மேடிக்ஸ் துறைகள் இந்திய அளவிலும் தமிழக அளவிலும் எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் வழங்கப்படும் படிப்பு அல்ல. தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சில நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் மட்டுமே இப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

எதைப் படிக்கலாம்?

பெரும்பாலும் முதுகலை அளவில் மட்டுமே இப்படிப்புகள் வழங்கப்படுவது இத்துறையின் சிறப்பு. இப்படிப்பில் சேர ஏதாவது ஒரு இளங்கலை அறிவியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ரிமோட் சென்சிங், ஜியோ இன்ஃபர்மேடிக்ஸ், இயற்கைச் சீற்றங்கள், பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளில் எம்.எஸ்சி. படிப்புகள்.

ரிமோட் சென்சிங் மற்றும் ஜி.ஐ.எஸ். பயன்பாடு என்ற துறையில் எம்.டெக். படிப்பு.

ஜியோ இன்ஃபர்மேடிக்ஸ் தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகள் பி.எச்.டி. ஆய்வுக்கான பாடங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

சில பல்கலைக்கழகங்களில் ஜியோடெக்னாலஜி, ஜியோஇன்ஃபர்மேடிக்ஸ் என்ற 3 ஆண்டுகள் பி.டெக். விரைவுப் படிப்பும் வழங்கப்படுகிறது.

டிப்ளமோ படிப்பு

இந்தத் துறையின் கீழ் குறுகிய காலப் படிப்புகள்கூட உள்ளன. டேராடூனில் உள்ள இந்திய ரிமோட் சென்சிங் கல்வி நிறுவனத்தில் ரிமோட் சென்சிங் மற்றும் இமேஜ் இன்டர்பிரிடேஷன் என்ற பிரிவில் 8 வாரக் காலச் சான்றிதழ் படிப்பு வழங்கப்படுகிறது. 3 மாதங்கள், 4 மாதங்கள், 10 மாதங்கள் என முதுநிலை டிப்ளமோவிலும் இங்குப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

துறை அறிமுகம்: புவியோடு உறவாடி...  Empty Re: துறை அறிமுகம்: புவியோடு உறவாடி...

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 05, 2017 8:34 pm

வேலைவாய்ப்பு

அதெல்லாம் சரி, இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தால், எங்கெங்கு வேலைக்குப் போகலாம்? வரைபடங்கள் (மேப்) தயாரித்தல், விண்வெளி ஆய்வு, வானிலை ஆய்வு, விவசாய நில ஆய்வு, வன ஆய்வு, வள ஆய்வுகள் என அரசுத் துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. ரிமோட் சென்சிங் படிப்புகளைப் படித்தவர்கள் இயற்கை வள ஆய்வுகள், புவி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல், கடல் பற்றிய ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுச்சூழல் மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளில் உலக அளவில் ஈடுபடுகின்றனர். எனவே, இதைப் படித்தவர்களுக்கு வெளிநாடுகளிலும் அதிகம் வரவேற்பு உள்ளது.

இதைப் படிப்பவர்கள் நிலநடுக்கம் தொடர்பாக மிகவும் நுணுக்கமான ஆய்வை மேற்கொள்ள முடியும். மலைப்பிரதேசங்களில் நிலச்சரிவைத் தடுப்பதற்கான ஆலோசனைகளை அரசுக்கு வழங்க முடியும். எந்தெந்தப் பகுதியில் என்னென்ன வளங்கள் மறைந்து கிடக்கின்றன என்பதையும் கண்டுபிடிக்கலாம். இப்போது சொல்லுங்கள், இது சவாலான படிப்புதானே!

நிலச்சரிவு அபாயம் கண்டுபிடிப்பு

புகழ்பெற்ற திருமலா திருப்பதி மலையில் எங்கெங்கு நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்பது ரிமோட் சென்சிங் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டது. திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ரிமோட் சென்சிங் மையத்தின் உதவியுடன் 2007-ல் இது சாத்தியமானது. திருப்பதி மலையில் 42 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, அது பற்றிய ஆய்வறிக்கை ஆந்திர அரசுக்கும் திருப்பதி தேவஸ்தானத்துக்கும் வழங்கப்பட்டது. ரிமோட் சென்சிங் பற்றிய படிப்புக்கு இது ஒரு சிறு உதாரணம்தான். இதேபோல் பல பல்கலைக்கழகங்களில் உள்ள ரிமோட் சென்சிங் மற்றும் ஜியோ இன்ஃபர்மேடிக்ஸ் துறை சார்பாக பலவிதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

துறை அறிமுகம்: புவியோடு உறவாடி...  Empty Re: துறை அறிமுகம்: புவியோடு உறவாடி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum