ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ் திரைப்படங்கள்

+6
ராஜா
krishnaamma
SK
T.N.Balasubramanian
Dr.S.Soundarapandian
heezulia
10 posters

Page 6 of 17 Previous  1 ... 5, 6, 7 ... 11 ... 17  Next

Go down

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 6 Empty பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia Sun Dec 03, 2017 5:13 pm

First topic message reminder :

தமிழ்  சினிமாவை  பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள்  இருக்கு. அனுப்பலாமா?

நன்றி Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Back to top Go down


பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 6 Empty பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia Mon Jan 01, 2018 7:33 pm

01 .01 .2018 

11. பீஷ்மா 1936
 
KR காந்திமதி பாய் - கங்கை [நாடக நடிகை] 
TS ஜெயா - சத்தியவதி 
MS தாமோதர ராவ் - சாந்தனு மஹராஜா 
PS சிவபாக்யம் - காமெடி ட்ராக் 
KR லட்சுமி - காமெடி டிராக் 
 
ஜெயலட்சுமி, CK செலவாம்பாள், பேபி MR மங்களம், சிவானந்தம், M மீனாட்சிசுந்தரம், லட்சுமிநாராயண பாகவதர்,  தாடி RVK முதலியார், N சண்முகம்,    TP மானோஜி ராவ் 
 
உங்களுக்கு தெரிஞ்ச பீஷ்மரின் கதைதான். பீஷ்மர் மகாபாரத 
கதையில் ரொம்ப சிறப்பான பாத்திரம்னு  நினைக்கிறாங்க, இல்ல? 

பர்ஷ்வநாத் யஷ்வந்த் ஆல்டெகர்னு ஒருத்தராம்.  பேசாத படம் வந்ததில் இருந்து இந்தக்கதை கிட்டத்தட்ட பத்...........து தடவ சினிமாவாக எடுக்கப்பட்டுச்சாம். 

முதல் பேசாத படம் 1921ல வந்துச்சாம். அப்போ இந்திய 
திரைப்பட முன்னோடியாக இருந்த R சூரியபிரகாஷ் 
என்கிற RS பிரகாஷ் இந்தப் படத்தை தயாரிச்சு, டைரக்ட்டும் 
செஞ்சாராம்.  இவர் தன்  அப்பா வெங்கையாவின் 
விருப்பப்படி வெளிநாட்டுக்கு போய் சினிமா நுணுக்கங்களை படிச்சுட்டு வந்தவராம். 

வெங்கையா சென்னையில், முதல் தியேட்டர் கட்டினவராம். திரைப்படங்களை தயாரிக்க விரும்பினாராம். 
அவருக்கு உறுதுணையா இருந்தது அவருடைய மகன் பிரகாஷ். 

வெங்கையாவுக்கு சென்னை புரசைவாக்கத்தில் ஸ்டார் ஆஃப் தி ஈஸ்ட் ன்னு பேர்ல ஒரு ஃபிலிம்  கம்பெனி இருந்துச்சாம். இந்த கம்பெனிக்காக பிரகாஷ் ஒரு லட்சம் செலவில் சினிமா 
ஸ்டூடியோவை அமைத்தாராம். சென்னையில இதுதான் முதல் 

ஸ்டூடியோவாமே. இந்த ஸ்டூடியோல 1922 ல முதல் முதலா 

தயாரிக்கப்பட்ட படம்தான் பீஷ்ம  பிரதிக்ஞாவாம்.  12,000 ரூபாய் செலவில எடுக்கப்பட்ட இந்த படம், 60,000  ரூபாய் வசூலிச்சு கொடுத்துச்சாம். 
 
1922ல பீஷமரின் கதை ரெண்டு ஊமை படமா  வந்துச்சாம். ஒரு சில படங்களுக்கு 'பீஷ்ம பிரதிக்ஞா'ன்னு பேர் 
வச்சாங்களாம். பீஷ்மர் கதை முதல்ல  ஹிந்தியில் 1937லும், 

ரெண்டாவது ஹிந்தி பதிப்பு 1950லயும் 'பீஷ்ம பிரதிக்ஞா'ன்னு  பேர்ல வந்துச்சாம். 1942ல பெங்காலில  வந்துச்சாம். 1944ல தெலுங்கில் முதல் பதிப்பு வந்துச்சாம். 1962ல வந்த ரெண்டாவது தெலுங்கு பதிப்புல  NTR உம், அஞ்சலிதேவியும் நடிச்சிருந்தாங்களாம். 

இப்படியாக மகாபாரதத்தின் மூத்தமனிதர் பீஷ்மர்  பிரபலம் ஆகிட்டார். 

TV தூர்தர்ஷன்  தொலைக்காட்சில 'மகாபாரத்'னு சீரியல் 
போட்டாங்க. அதனால  பீஷ்மரின் கதை ரொம்ப பிரபலமாயிருச்சு. 
 
ஷாந்தனு மகராஜான்னு ஒரு ராஜா. இவருடைய கதையைத்தான் இந்தப் படம் சொல்லுது. அவருக்கு நதிகளின் கடவுள் கங்கையில் மேலே ஒரு இதுவாகி,  அவங்களுக்கு  7 பெண் பிள்ளைங்க பிறக்குது. கங்கை என்னான்னா அந்த ஏழு பிள்ளைங்களையும், பிறந்த உடனே கங்கை ஆற்றிலே போட்டுர்றா. 

எட்டாவது பிள்ளைதான் பீஷ்மர். பீஷ்மர் என்ன செஞ்சார்னா. 
ஒரு சத்தியம் பண்றார். தன் அப்பா சந்தோஷமா  இருக்கணும், கங்கைக்கு கொடுத்த சத்தியத்தையும் 
காப்பாத்தணும். அதுக்குத்தான்  பீஷ்மர், தான் கண்ணாலமே 

செஞ்சுக்க போறதில்லேன்னு சத்தியம் செய்றார். 
பீஷ்மா படத்தை சேலம் ஃபிலிம்ஸ் தயாரிச்சுதாம். 23 பாட்டு. 
வழக்கம்போல ஹிந்தி ட்யூன்ல. மீனவர்கள் பாட்ற மாதிரி ஒரு 

பாட்டு இருக்காம். இந்தப் பாட்ல "அச்சா", "குஷி", "பேஷ் 

பேஷ்" னு ஹிந்தி வார்த்தைகள் இருந்துச்சாம். 
மத்தபடி, பாட்டுக்களை பத்தியும், ம்யூஸிக் போட்டவங்களை 

பத்தியும் எதுவும் தெரியலியாம். இருந்தாலும் பாபநாசம் சிவம் பாட்டுகளை எழுதி, ம்யூஸிக் போட்டார்னு 
பேசிகிட்டாங்களாம். 
கொல்கத்தாவில் இருக்கிற 'கிழக்கிந்திய  ஃபிலிம்  
ஸ்டூடியோ'வில்  இந்தப்படம் தயாரிக்கப்பட்டுச்சாம். 

'தயாரிப்பாளர்களின் அற்புதமான முதல் தமிழ் பேசும் படம்' னு பாட்டுப்  புத்தகத்தில விளம்பரப்படுத்தி இருந்தாங்களாம். 
 
புராணக் கதைங்கறதாலேயும், நல்ல இசைக்காகவும் இந்தப் 
படம் பேசப்பட்டுச்சாம்.  

Heezulia
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 6 Empty பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia Mon Jan 01, 2018 8:31 pm

01.01.2018

12. சந்திர மோகனா OR சமூக தொண்டு 1936

TN மீனாட்சி - மோகனா / ஹீரோயின் 
MK ராதா- சந்திரமோகன் / ஹீரோ  
KR ஜெயலட்சுமி - டான்ஸ் ஆடும் பெண்  
KP காமாட்சி, SV வெங்கடராமன் - மில் மேனேஜர் கமலநாதன், வில்லன்  
கிளௌன் MS சுந்தரம், 

இயக்கம் : ராஜா சந்திரசேகர் 
வசனம் : M கந்தசாமி முதலியார்  
திரைக்கதை : கொத்தமங்கலம் சுப்பு 

முதல் தடவயா கொத்தமங்கலம் சுப்பு நடிச்ச படம். இவர் பிரபலமான கதாசிரியர், பாடலாசிரியர், நாட்டுப்புறப்பாடல்  எழுதுபவர், நடிகர், 
இயக்குனர். இவர் இந்தப் படத்துக்கு கதை எழுதியிருக்கார். டைட்ல்ல இவர் பேர் SM சுப்பிரமணியம், கொத்தமங்கலம்னு போட்டிருந்துச்சாம். பிறகுதான்  தன்  பெயரை சுருக்கி கொத்தமங்கலம் சுப்பு ன்னு வச்சுகிட்டாராம். 

இவர் ஜெமினி ஸ்டூடியோவில் சேர்ந்த பின்னால, SS வாசனுக்கு வலது கையா இருந்து, பல வருஷங்களா வேல செஞ்சுட்டு இருந்தாராம். SS வாசன் இந்திய சினிமாவின் The Cecil B DeMille ஆக கருதப்பட்டாராம். இந்த  Cecil  அமெரிக்க திரைப்படங்களின் தந்தை,  இயக்குனர்,  தயாரிப்பாளராம். 

இந்தப் படத்தில் MK ராதா ஒரு பட்டதாரியாம், சமூக ஆர்வலரும் கூட. மக்கள்,  சுத்தி இருக்கிறவங்க, எல்லோருடைய மேம்பாட்டிற்காகவும் தீயா வேல செய்றாராம்.  மது குடிக்கிறதால வரும் தீமைகளை பற்றி ஜனங்களுக்கு சொல்லி, அவங்கள  திருத்துறாராம். மதுவிலக்கு பற்றிய பாடல்களையும் பாட்ராறாம்.  இதுக்காகத்தான் இந்தப் படத்திற்கு இன்னொரு பேரை வச்சாங்களாம், சமூகத் தொண்டு. 

சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள், சம்சாரம், சதிலீலாவதி போன்ற பல ஹிட் படங்களில் MK ராதா ஹீரோவா நடிச்சிருந்தாராம். 

படத்தின் கதை : சமூக உணர்வு கொண்ட சந்திரமோகன், மோகனாவை காதலிக்கிறான். எல்லா காதல் படங்களில் வர்ற மாதிரி,  இவங்க பல பிரச்சினைகளை சந்திக்கிறாங்க. காதலர்களை ஈ............ஸியா சேர விட்ருவாங்களா என்ன? கமலநாதன் இவங்கள பிரிக்கிறதுக்காக பல திட்டங்கள் போடறான். அதையெல்லாம் தாண்டி ரெண்டு பேரும் ஒண்ணு சேர்றாங்க. 

பிரபல பாடலாசிரியர் KP காமாட்சி இந்தப் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிச்சிருந்தாராம். இவர் முழு பெயர் காமாட்சிசுந்தரனார். நடன பெண்ணாக நடிச்ச ஜெயலட்சுமி ஹீரோயின், ஹீரோவை பிரிக்க நாடகம் நடத்த அனுப்பப்படுராராம். இந்தப் படத்தில் ஜனங்களை ஈர்த்த விஷயமா ஒண்ணு இருக்காம். அந்த காலத்தின் பிரபலமான, நடனம் ஆடுபவர் ராகினிதேவியின் நடனம். இவர் பதிமினியின் தங்கச்சியா இருப்பாரோ? 

இந்தப் படத்தில வில்லனா நடிச்ச வெங்கடராமன், எல்லோருக்கும் தெரிஞ்ச பிரபலமான இசையமைப்பாளர்தான், நாடக நடிகர். இவர் நடிச்ச புதுசுல புகழ் பெற ஆரம்பிச்சாராம். வில்லன் உட்பட வேற முக்கியமான பாத்திரங்களில் நடிச்சிட்டு இருந்தவராம். நடிச்சுட்டு இருந்தப்போ இவருக்கு ஒரு விபத்து நடந்துச்சாம். அதுக்கு பின்னால நடிப்பை தொடர முடியாம போச்சாம். இதனாலதான் அவர் இசை அமைக்கிறதை ஆரம்பிச்சு அதில் வெற்றியும் அடைந்தார். மீரா, சகுந்தலை போன்ற படங்களுக்கு இசை போட ஆரம்பிச்சார். சில பாடல்கள் இன்றும் நினைவில் நிக்கிற மாதிரி இருக்காம். 

இந்தப் படத்துக்கு வசனம் எழுதிய M கந்தசாமி முதலியார் தமிழ் எழுத்தாளர், மேடை நாடகங்களை தயாரிப்பவர், திரைக்கதை எழுதுபவர், தமிழ் இலக்கியத்தில் புகழ் பெற்றவராம்.

இந்தப் படத்தின் இயக்குனர், பம்பாயில் கலை இயக்கத்தினை படிச்சவராம். தென்னிந்தியா  சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் நடிச்சு புகழ் பெற்ற சில படங்களை இவர் இயக்கியிருக்காராம்.  

இந்தப் படம் மதுரையில் இருந்த மோகன் மூவிடோன் கம்பெனியால்,  பம்பாயில் இருந்த ஃபிலிம் ஸ்டூடியோ கம்பெனியில் தயாரிக்கப்பட்டுச்சாம். பாடலாசிரியர், இசையமைப்பாளர் இவங்கள பத்தி ஊஹூம் , ஒண் .................. ணும் தெரியாது.  

இந்தப் படத்தின் கடைசிப் பாட்டு, விடுதலை இயக்கத்தையும், பாரத மாதாவைப் பற்றியதாம். 

சரியா ஓடலியாம். அந்த காலத்தில் உள்ளவங்களுக்கு இந்தப் படம் கொத்தமங்கலம் சுப்புவின் முதல் படம்ங்கறதால பாத்தாங்களாம். கொத்தமங்கலம் சுப்பு எழுதிய சமூக உணர்வு கொண்ட சுவாரயமான கதைக்காகவும், MK ராதாவின் சிறந்த நடிப்புக்காகவும், இனிமையான இசைக்காகவும் இந்தப் படம் பேசப்பட்டுச்சாம். 

Heezulia
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 6 Empty பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia Mon Jan 01, 2018 10:29 pm

01 .01 .2018 

13. சந்திரஹாசன் 1936

மாஸ்டர்  ராமுடு - சின்ன சந்திரஹாசன்  
மாஸ்டர் VN சுந்தரம் - சந்திரஹாசன் 
PB ரங்காச்சாரி - மந்திரி  
CS சாரதாம்பாள் - இளவரசி விஷயா
MR சந்தானலட்சுமி - இளவரசி 

Dr. PC  சீதாராமன்,  J சுசீலாதேவி, MR சுப்பிரமணிய முதலியார், KS சுப்பிரமணிய அய்யர், S கல்யாணசுந்தரம்  அய்யர், D சுந்தரம் அய்யர்,  மிஸ் ராஜம், P ராமையா சாஸ்திரிகள் 

இது சந்திரஹாசன் என்ற இளவரசனை  பற்றிய நாட்டுப்புற புராண கதையாம். சமஸ்கிருதத்தில இந்தக் கதைக்கு  'சந்திரஹாஸோ பாக்கியானம்'னு பேராம். அப்போ இருந்த டைரக்டர்களுக்கெல்லாம் இந்த மாதிரி புராணக் கதைகள் கெடச்சா லட்டு, அல்வா சாப்பிட்ற மாதிரி. 

இந்தக் கதையை,  பிரபல டைரக்டர் காஞ்சிலால் ராதோட் என்பவர், முதல் பேசாத படமாக 1921ல எடுத்தாராம். இந்தப் படம் வெற்றிகரமா ஓடுச்சாம். அதனால இவர் மறுபடியும் 1928ல பேசாத படமாவே எடுத்தாராம். 1929ல தாதாசாகிப் பால்கே, இதே கதையை அவருடைய பாணியில் படம் எடுத்தார். 

இந்தக் கதை பேசும் படமாக, 1933லயும், 1947லயும்  ஹிந்தியில சந்திரஹாசன் என்கிற பேர்ல வந்துச்சாம். 1933ல வந்த ஹிந்தி படம், அப்போ முன்னணி டைரக்டரா இருந்த சர்வோதம் பதானி, அவருடைய சாகர் மூவிடோன் நிறுவனத்துக்காக எடுத்தாராம். இவர் தமிழ் உட்பட பல மொழிகளிலும் படங்கள் எடுப்பவராம். 

சந்திரஹாசன் கதையை 1941ல, ML ரங்கையா என்பவரும் தெலுங்கில் எடுத்தாராம்.  BS ரங்கா என்பவர் இந்தக் கதையை 1965ல கன்னடத்திலேயும், தெலுங்கிலேயும் எடுத்தாராம். ரங்கா பிரபல ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், டைரக்டராம்.  இது மட்டுமல்லாம, இவருக்கு சொந்தமா சினிமா ஸ்டூடியோவும் இருந்துச்சாம். 

1936ல தமிழ்ல வந்த சந்திரஹாசன் படம் பிரபல வங்காள டைரக்ட்டர் ப்ரொஃபுல்லா கோஷ் என்பவரால் எடுக்கப்பட்டது. கல்கத்தாவில் இருந்த பயோனியர் ஸ்டூடியோவில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டதாம். இந்த ஸ்டூடியோ அப்போ பல தமிழ் படங்கள் எடுக்கப்பட்ட பிரபல ஸ்டூடியோவாம். 

கதை : சந்திரஹாசன் என்ற அழகான இளவரசன். பிற்காலத்தில அரசனாவுறதுக்கு எல்லா தகுதியும் உள்ளவன்.  எல்லா ராஜா கதைல வர்ற மாதிரி கெட்ட எண்ணம் கொண்ட ஒரு மந்திரி. இளவரசனை கொல்ல திட்டம் போட்டு, ஆளையும் ஏற்பாடு செய்றான்.  அவர் போட்ட திட்டங்களிலிருந்து  தப்பி, இளவரசன் எல்லா................ர் கண்ணும் படறமாதிரி, "கண்ணு பட போகுதையா"ன்னு சொல்ற அளவுக்கு வாலிபனாகிறான். 

இளவரசன் இன்னும் உயிரோடு இருக்கானேன்னு மந்திரி ஒரு யோசனை செய்றான். 

மந்திரிக்கு தெரிஞ்ச இன்னொரு  ராஜாட்ட, இளவரசனை அனுப்புறான். இளவரசன் கையில ஒரு லெட்டரையும் கொடுத்து அனுப்புறான்.  அந்த லெட்டர்ல இளவரசனுக்கு விஷம் கொடுத்து கொல்ல சொல்லி எழுதியிருந்தான். இளவரசனும் லெட்டர்ல என்ன எழுதியிருக்குன்னே தெரியாம அதை வாங்கிட்டு போறான். ரொம்ப நே.................... ரம்  travel செஞ்சதால tired ஆயிட்டான். போற வழியில ஒரு காடு இருந்துச்சு. அங்க படுத்து அசந்.................து தூங்கிட்டான். 

அந்த வழியா விஷயான்னு அழகான ஒரு இளவரசி வர்றா. அவன் அழகைப் பார்த்து கிறங்கி, அவன் மேல் ஆசைப்பட்றா. அந்த லெட்டர் அவள் கண்ல படுது. எடுத்து வாசிச்சு பார்க்கிறாள். அதிலுள்ள வாசகங்களை மாத்தி  'விஷம்'ங்றதை 'விஷயா'ன்னும்  மாத்தி எழுதிர்றாள். 

அந்த அரசன்ட்ட போன இளவரசன் லெட்டரை கொடுக்கிறான். அத பாத்துட்டு, இளவரசி விஷயாவை அவனுக்கு கண்ணாலம் முடிச்சு வச்சுர்றான். 

இதுல இன்னொரு பிரச்ச்னை என்னான்னா இன்னொரு இளவரசியும் சந்திரஹாசன் மேல ஆசைப்படறா. புராண கதைகள்லதான், அங்கங்க பாத்த இளவரசியை எல்லாம் கண்ணாலம் கட்டிக்குவாங்களே. இங்கேயும் அப்டித்தான். அவளையும் கட்டிக்கிட்டு, ரெண்டு மனைவிங்களோடும் சந்தோ..................ஷமா குடும்பம் நடத்துறான். சுபம்

VN சுந்தரம் நடிக்கிறதுக்கு அதிகமா சான்ஸ் கிடைக்காததால் பின்னணி பாட ஆரம்பிச்சுட்டாராம்.  இந்தப் படத்தில் 40 பாட்டாம். வழக்கம்போல ஹிந்திப் பாட்டு ட்யூன்ல. மதுரகவி பாஸ்கரதாஸ் என்பவர் பாட்டு எழுதியிருந்தாராம். 40 பாட்டுல சுந்தரம் நிறைய பாட்டு பாடியிருந்தாராம். இதுக்காகவே இந்தப் படம் ஓடுச்சாம். 

Heezulia
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 6 Empty பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia Mon Jan 01, 2018 11:43 pm

01 .01 .2018 

எனக்கே ஆச்சரியமா இருக்கு, நான் அனுப்புற பழைய திரைப்படங்கள் வரிசையில் இது 14வது படம்னு. இத்தனை படங்கள் அனுப்பியிருக்கேனான்னு. 

ஈகரையில பழைய தமிழ் படங்களை பற்றி தெரிஞ்சவங்க யா ..................... ருமே இல்ல போல. எல்லாருமே என்னை போல தெரியாதவங்கதான்.  இத்தனை படங்களை அனுப்புறேன், யாருக்குமே, இந்தப் படத்தில் நடிச்சவங்களை பற்றி, டைரக்டரை பற்றி எதுவுமே சொல்லக் காணோம். யாருக்குமே எந்த சந்தேகமும் வர்றதில்ல. ஆனா புது படங்களை பற்றி எது கேட்டாலும் டக்கு டக்குன்னு ஆர்வமாய் பதில் வரும்போலியே. 

பழைய தமிழ் படங்களை 859  பேர் படிச்சிருக்கீங்களே.

14. கருட கர்வ பங்கம் 1936 

MD பார்த்தசாரதி - ஹனுமான் 
இவர் ஜெமினி ஸ்டூடியோஸின் பிரபல இசையமைப்பாளர்.
 
MS மோகனாம்பாள் - சத்தியபாமா 
செருகளத்தூர் சாமா - கிருஷ்ணன் 
அப்போ இவர் பிரபல பாடகர். 

வித்வான் ஸ்ரீனிவாசன் - நாரதர் 
TS மணி, விமலா, MD சுப்பிரமணிய முதலியார்  & பலர். 

ருக்குமணி, சத்தியபாமா, கிருஷ்ணன், பலராமன், கருடன் இவங்களை  பற்றிய வழக்கமான புராணக்கதைதான்.  
இந்த பிரபலமான கதை பல மொழிகளில், பல  தடவை  
படமா எடுத்தாங்களாம். 

தென்னிந்திய டைரக்டர்களின் முன்னோடி R பத்மநாபன், இந்தக் கதையை, முதல் பேசும் படமா எடுத்தாராம். ஓரியன்ட்டல் ஃபிலிம்ஸ் என்ற  இவருடைய bannerலேயே, ஏற்கனவே இவர் படங்கள் எடுத்துட்டு இருந்த கல்கத்தாவில்  பயோனியர் ஸ்டூடியோஸில் எடுத்தாராம். K சுப்பிரமணியம்  &  ராஜா சாண்டோ, இவங்கல்லாம் சினிமா உலகத்துக்கு வர இந்த பத்மநாபன்தான் காரணமா இருந்தாராம். 

அந்தக்காலத்தில் சினிமாக்களில் இருந்ததுபோல, இந்தப் படத்திலும் ஒரு காமெடி பாட்டு இருந்துச்சாம்.  இந்தப் பாட்டில் ஹல்வா, குஷி, சபாஷ் போன்ற வார்த்தைகள் இருந்துச்சாம். 

இந்தப் படத்தின் பாட்டு புத்தகத்தில், "நகைச்சுவையான  சிறந்த புராண, பேசும் படம்"னு போட்டிருந்துச்சாம். புராணக் கதையும், MD பார்த்தசாரதியின் நடிப்பும் பேசப்பட்டதாம். 

முதல் முதலா 1929ல பேசாத படமா A நாராயணன்  
எடுத்தாராம். இதுக்கு இங்க்லீஷ்ல இன்னொரு பேர் இருந்துச்சாம், 'Pride Of Sathyabhama'.  

பல மொழிகளில படங்களை எடுத்த YV ராவ்  கிருஷ்ணனாவும், தேவகி என்பவர்  சத்தியபாமாவாவும்  இந்தப் படத்தில நடிச்சாங்களாம்.
 
கருட கர்வ பங்கம் என்கிற பேர்லியே தெலுங்கில் 1943ல 
கண்டசாலா பலராமையா என்பவர், இந்தக் கதையை படமா எடுத்தாராம். இதுல P பானுமதி, வேதாந்தம் ராகவையா, பிரபல நாடக & சினிமா நடிகர் வெமுரி கக்கய்யா,  ராமகிருஷ்ண சாஸ்த்திரி இவங்கல்லாம் நடிச்சாங்களாம். 

Heezulia 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 6 Empty பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia Tue Jan 02, 2018 12:46 am

02.01.2018 

லீலாவதி சுலோசனா 1936

PV ராவ் - டைரக்டர் 
TM சாரதாம்பாள் 
அப்போ இவர் புகழ் பெற்ற நடிகையாம். 

CD ஜானகி
பெண் பாகவதரா நடிச்சு, சில பாட்டுக்களை பாடியிருக்காராம்.

CS ஜெயராமன் - ஹீரோ 
ஆமா, நம்ம தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற அதே பாடகர்தான். 

PS கோவிந்தன்
இவர் சில வருஷங்களா தமிழ் திரைப்படங்களில் பாடகரா இருந்தவர்.  

PS சிவபாக்கியம்
இது பெண் பேர்னு நெனச்சேன். ஆனா இவர் ஆண். பரமகுடிகாரராம். 

K மகாதேவன் 
இவர் 'நாரதர்' நாகர்கோயில் K மகாதேவன்னு  அழைக்கப்பட்டாராம். 

CK செல்வாம்பாள், KR லட்சுமி, TM பங்கஜம், S ராஜகோபாலன்,இசக்கி, TP மனோஜிராவ், MS சுந்தரம் 

தமிழ் நாடகங்களுக்கு புத்துயிர் கொடுத்தவங்க ரெண்டு பேராம், பம்மல் சம்பந்த முதலியார், சங்கரதாஸ் ஸ்வாமிகள். சம்பந்த முதலியார் ஜட்ஜா வேலை பார்த்தவராம். சென்னை ப்ரெசிடென்ஸி காலேஜ்ல படிச்சிட்டு இருக்கும்போதே சுகுணா விலாஸ் சபான்னு ஒரு நாடக சபாவை ஏற்படுத்தினாராம். தன் நண்பர்களுடன் சேர்ந்து, பல நாடகங்களை நடத்தினாராம். சில நாடகங்களால் ஷேக்ஸ்பியரும், மோலீரும் ஈர்க்கப்பட்டாங்ளாம்.
 
1895ல சம்பந்த  முதலியார் 'லீலாவதி சுலோசனா' என்ற 'இரு சகோதரிகள்'ன்னு ஒரு நாடகத்தை எழுதினாராம். ஒரு சுவாரசியமான செய்தி என்னான்னா, சம்பந்த முதலியாரின் நண்பர் ஸ்ரீனிவாச அய்யங்கார், இந்த நாடகத்தை ஒரு நாவல் புத்தகமா எழுதி ஒரு பிரதி வெளியிட்டாராம். அந்த ஒரு பிரதிக்கு  முன்னுரையையும், கதைச்சுருக்கத்தையும்  இங்க்லீஷ்ல  எழுதினாராம். 

இன்னொரு   சுவாரசியம் இருக்கு. என்னான்னா, இந்தப் பிரதி லண்டனிலுள்ள ப்ரிட்டிஷ் ம்யூஸியத்தில், தமிழ் பிரிவில் வைக்கப்பட்டிருக்காம்.  இது யாருக்குமே தெரியாத ஒரு விஷயம் என்று நினைக்கிறேன். இந்த நாடகம் சென்னையில் எல்லா  இடங்களிலும், பர்மாவில் சில இடங்களிலும் நூற்றுக்கணக்கான தடவை நடந்துச்சாம். 

இந்தக் கதை 1935ல படமாக தயாரிக்கப்பட்டு, 1936ல ரிலீஸ் ஆச்சாம். அந்தக் கால படங்களை போல இந்தப் படத்திலும் நிறையபாட்டுக்களாம்,  45 பாட்டு. 

இந்தப் படத்தில் இரு இன்ட்ரெஸ்டிங் விஷயம் என்னான்னா, டைட்டில் பாட்டு ஒரு பின்னணியில் பாடப்பட்ட கோரஸ்பாட்டாம். பின்னணியிலேயே இந்திய திரைப்பட கம்பெனியின் பேரை சொல்லி வாழ்த்தி,  பாரதமாதாவை வணங்குற மாதிரியும் அமைத்திருந்தாங்களாம்.

வழக்கம்போல ராஜா கதை. ரெண்டு சகோதரிகள்,  இளவரசிகள், ஒரு இளவரசனை  காதலிக்கிற கதை. 

என்னப்பா இது, அப்போ வந்த எல்லா படங்களுமே புராண கதைங்க மட்டுமில்லாம, ரெண்டு பெண்கள் ஒருத்தன லவ்வுற கதைதானா? 

மூத்தவள் வில்லி. இளவரசன் தனக்கு கிடைக்கணும்னு,  கடத்தல்,  கொலைன்னு என்னவெல்லாமோ செய்றாள். ஆனா கடைசியில இளையவள்தான் அந்த இளவரசனை கல்யாணம் செஞ்சுகிறா. மூத்தவள் தற்கொலை செய்துக்கிறாளாம்.

சம்பந்த  முதலியாரின் கதைக்காகவும், இசைக்காகவும் இந்தப் படம் பேசப்பட்டதாம். 

சேலத்திலுள்ள ஏஞ்சல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிச்சுதாம். அந்தக்கால வழக்கப்படி, கல்கத்தாவில் இருந்த 'நியூ தியேட்டர் ஸ்டுடியோ'வில் படமாக்கப்பட்டதாம். ஏன்னா அப்போல்லாம் படமெடுக்கும் வசதி இங்க இல்ல. சேலத்திலிருந்த மாடர்ன் தியேட்டர்ஸின் TR சுந்தரம், இந்திய திரைப்படங்களின் ஜாம்பவான், ஏஞ்சல் ஃபிலிம்ஸில் நிறைய படங்கள் எடுத்திருக்காராம். அசம்பாவிதமாக இந்த நிறுவனம் தீக்கிரையாயிட்டுதாம்.

Heezulia  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 6 Empty பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia Tue Jan 02, 2018 10:59 am

02 .01 .2018 

16. மகாத்மா கபீர்தாஸ் 1936
 
A நாராயணன் – டைரக்டர்
TS வேலம்மாள் – கபீரின் மனைவி  
PDV கிருஷ்ணன் – கபீர்

V ரங்கசாமி அய்யர், LV நாயுடு, AB மூர்த்தி, MVR செட்டி, K பத்மநாபன், மாஸ்டர் பாகிரதன், MR ராஜரத்தினம்

************************************
இந்தப் படம் ஒரு துறவியை பற்றியது. அவர் தன் மனைவி சுந்தரிபாயுடன்  வறுமையில் வாழ்க்கை நடத்தி வருகிறார். இவங்களுக்கு கமல் என்கிற சிறுவன் மகன். பணக்காரன் ஒருத்தன் சுந்தரிபாயின் அழகில மயங்கி, எப்படியாவது அவளை அடையணும்னு என்னவெல்லாமோ திட்டம் போட்டு பார்க்கிறான். ஆனா ஒண்ணும் சரிபட்டு வரல. ராமனின் அருளால கபீர்தாஸ் தம்பதியர் வாழ்க்கையில்  பல அதிசயங்கள் நடக்குது. அந்த பணக்கார அயோக்கியன் தன் தவறை உணர்ந்து, அவங்கள்ட்ட மன்னிப்பு கேட்கிறான். இதுதான் இந்தப் படத்தின் கதை.
 
ஹீரோ கிருஷ்ணனின் நடிப்பு ரொம்ப நல்ல இருந்துச்சாம். இவர் இந்தப் படத்தில நடிச்சது மட்டுமில்லாம, திரைக்கதை, பாட்டுக்களும் எழுதியிருந்தாராம். தவிர இந்தப் படத்தின் ஆர்ட் டைரக்டர் இவர்தானாம். ஹீரோயின் வேலம்மாள் அப்போ நல்ல நடிகையாம்.
 
இந்தப் படத்தின் டைரக்டர், நாராயணன் தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருத்தராம். கோயம்புத்தூரில் இருந்த 
PS சாத்தப்ப செட்டியாருக்கு சொந்தமான சுந்தரம் டாக்கீஸ்காக இந்தப் படத்தை எடுத்தாராம். சென்னை அடையாரிலிருந்த சுந்தரம் சவுண்ட் ஸ்டூடியோவில் இந்தப் படம் உருவாச்சாம். இப்போ இந்த ஸ்டூடியோ MGRக்கு சொந்தமான சத்யா ஸ்டூடியோவா இருக்கு.
 
இந்தப் படத்துக்கு P சாம்பமூர்த்தி என்றவர் இசையமைத்திருக்கார். இவர் தனக்கு சொந்தமா இசைக் கருவிகள் வச்சிருந்தாராம். இந்தப் படத்தில 21 பாட்டாம். இசையமைப்பு பேசும்படி இருந்துச்சாம். Box ஆfiஸ் ஹிட் படமாம். இந்தப் படத்தின் ப்ரிண்ட் இல்லியாம்.
 
மடையர்கள் சந்திப்பு என்ற நகைச்சுவை குறும்படம், மகாத்மா கபீர்தாஸ் படத்துடன் போட்டு காட்டினாங்களாம். அந்த குறும்படத்தின் கதையை பம்மல் சம்பந்த முதலியார் எழுதி நடிச்சிருந்தாராம்.

Heezulia 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 6 Empty Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia Tue Jan 02, 2018 11:20 am

02.01.2018 

17. மோகினி ருக்மாங்கதா 1936

PB ரங்காச்சாரி – ருக்மாங்கதன்  
KR சாரதாம்பாள் – ருக்மாங்கதனின் மனைவி
MS விஜயாள் – மோகினி
  
வித்வான் ஸ்ரீனிவாசன், D சுசீலாதேவி, TS கிருஷ்ணசாமி, V நடராஜ அய்யர், MC சரோஜினி

இசை, பாடல்கள், கதை : KV சந்தானகிருஷ்ண நாயுடு
********************************************
தமிழ்நாடு டாக்கீஸை நிறுவியவர் S சௌந்தரராஜ அய்யங்கார். பேசாத படம் இருந்த காலத்ல இவர் படத் தயாரிப்பாளராம். அப்புறமா இவர் இயக்குனராவும், பட விநியோகஸ்தராவும் ஆனாராம்.

இவர் தமிழ்லயும், தெலுங்குலயும் படம் எடுத்துட்டு இருந்தாராம். வசுந்தராதேவி, ரஞ்சன், கிருஷ்ணகுமாரி, ராம சர்மா [தெலுங்கு நடிகர்], டைரக்டர் BS ரங்கா, ஜோசஃப் தளியத் ஜூனியர் போன்றவங்களை சினிமாவில அறிமுகப்படுத்தினாராம்.

இவர் ஆரம்பத்தில எடுத்த படங்கள்ல ‘மோகினி ருக்மாங்கதா’ படம் பிரபலமானதாம். இந்தப் படத்தின் கதை ஏகாதசி விரத மகாத்மியம் பற்றிய நாட்டுப்புற கதையாம். சௌந்தரராஜன் இந்தக் கதையை இசையாய் எடுத்திருக்காராம். இந்தப் படத்தின் பாட்டுப் புத்தகத்தில், இந்தப் படத்தின் பாடல்களை “சந்தங்கள் உள்ள 50 பாடல்கள்” னு போட்டிருந்துச்சாம்.

இந்த படத்ல ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுறாங்களாம், 21 பேர். இந்தப் பாட்டை ஆச்சரியப்படும்படியாக  top angleல எடுத்திருந்தாங்களாம். கலைடாஸ்கோப் பாத்திருக்கீங்களா? நான் பார்த்திருக்கேன். அதை சுத்தி சுத்தி பார்த்தா, கலர் கலரா, அழகழகா, டிசைன் டிசைன் டிசைனா வடிவங்கள் வரும்ல. அதே மாத்ரிதாங்க, இந்த டான்ஸும் அப்டி இருந்துச்சாம். பழைய படம் எப்படி கலர் கலரான்னு கேக்காதீங்க. அம்புட்டு அழகா இருந்துச்சாம். நம்ப முடியாத அளவுக்கு அட்டகாசமா இருந்துச்சாம். பாம்புகள் ஊர்ந்து போற மாதிரியும், பூக்கள் மலர்வது போலவும் அழகா ஆடினாங்களாம். அந்த காலத்தில, 1930 கள்ல டான்ஸை இப்படித்தான் ஷூட் செய்வாங்களாம். 

சௌந்தரராஜன் இந்திய சினிமா குழுவோடு, ஹாலிவுட்க்கு போயி, அங்க அப்போ இருந்த பிரபலங்களை meet செஞ்சிருக்காராம். அதனால அங்க ஆடுற டான்ஸ் மாதிரி, இங்கேயும் செய்யணும்னு ஆசைப்பட்டு, இந்த டான்ஸையும் அமைத்தாராம். Busby Berkeley என்ற ஒருத்தர், அமெரிக்காவின் நடன இயக்குனரும், பட இயக்குனருமாம். அவர் அங்க டான்ஸை இப்படித்தான் அமைப்பாராம்.

ருக்மாங்கதனா நடிச்ச PB ரங்காச்சாரி, அந்த கால நாடக, சினிமா நடிகராம். இவர் மனைவியா சாரதாம்பாள் நடிச்சிருந்தாங்களாம். நம்மாளு ருக்கு என்ன செஞ்சாரோ என்னவோ, அவரை கடவுள்களுக்கு புடிக்காம போச்சு. அந்த கடவுள்களின், குறிப்பா பார்வதியின் கோபத்துக்கு ஆளாகிறார். 

பார்வதி என்னான்னா மோகினி என்ற பெண்ணை, ருக்மாங்கதன்ட்ட அனுப்புறா. எதுக்கு, அவன் மனசை கலைக்க, கெடுக்க. மோகினி  ருக்மாங்கதனோடு பழகுறா. ஒரு கட்டத்தில என்ன ஆச்சுன்னா, ருக்குவின் மகனை தனக்கு பலி கொடுக்க சொல்றா மோகினி. இந்த மக்கு ருக்குவும் அந்தப் பாவி மோகினியின் சந்தோஷத்துக்காக சரீன்னுட்டானாம். அதோடு விட்டானா, அதுக்கான ஏற்பாடும் செஞ்சுட்டு இருந்தானாம். இதை தெரிஞ்சுகிட்ட ருக்குவின் மனைவி சாரதாம்பாள் மயங்கி விழுறா.

என்னங்க இது, நான் படிச்சதில, கதை இம்புட்டுதான் இருக்கு. இதே மாத்ரி எத்தன புராண படம் பார்த்திருக்கோம். அந்தப் பையன் எப்படி தப்பிச்சான், மோகினி என்ன ஆனா, ருக்கு எப்படி மனசு மாறினான், பார்வதி காட்சி கொடுத்தாளா, ருக்கு & familiyய ஆசீர்வாதம் செஞ்சாளா? எதுவுமே தெரியலியே. சரி நாமளே கற்பனைசெஞ்சு பாத்துக்க வேண்டியதுதான்.

மோகினியா நடிச்சது விஜயாள். இவரும் அந்தக் கால பிரபலமான நடிகையாம். இவர் நடிப்பை விடாம இருந்தாராம்.  அம்மாவா, ஏன் பாட்டியா கூட நடிச்சிட்டு இருந்தாராம்.

நம்ம ருக்கு தன் மகனை வெட்றதுக்கு வாளை உறையிலிருந்து உருவி, மகனை வெட்ட ரெடீ........................ யா நிக்கிற மாதிரியும், அவருடைய மனைவி மயங்கி விழுதிருக்கிற மாதிரியும், இவங்களை மோகினி பாத்துட்டு நிக்கிற மாதிரியும் பெயிண்டிங் வரஞ்சிருந்தாங்களாம். இந்த படத்தை யார் வரஞ்சுது? பெயிண்டிங்ல சிறந்த ராஜா ரவி வர்மா. அவர் வரஞ்ச சிறந்த பெயிண்டிங்ல இதுவும் ஒண்ணாம்.

இந்தப் படம் நல்லா ஓடுச்சுச்சாம். Box office ஹிட்டாம். விமர்சகர்கள் இந்தப் படத்தை பாராட்டி எழுதியிருந்தாங்களாம். ஜனங்க இந்தப் படத்ல வந்த அந்த டான்ஸை பாராட்டி பேசினாங்களாம்.

Heezulia 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 6 Empty Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by SK Tue Jan 02, 2018 11:35 am

மேலும் தொடருங்கள்

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 6 103459460 பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 6 103459460


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 6 Empty பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia Tue Jan 02, 2018 11:48 am

02 .01 .2018

18. ருக்மணி கல்யாணம் 1936 


பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 6 ?ui=2&ik=25ecfa0c99&view=fimg&th=16096b08c42c98bb&attid=0

கிருஷ்ணனுக்கு ரெண்டு மனைவீங்க. அதான் தெரியுமேன்னு சொல்றீங்களா? உங்களுக்கு தெரியும்னு எனக்கும் தெரியுங்க. இருந்தாலும் நானும் சொல்லிர்றேனே. எதுல விட்டேன். ஆங், கிருஷ்ணனுக்கு ரெண்டு மனைவீன்னு சொன்னேன்ல. ஆமா, ருக்மணி & சத்தியபாமா.

ருக்மிணி இந்து புராணத்தில முக்கியமான பாத்திரமாமே. சத்தியபாமா அழகா இருப்பாங்களாம். அவசியம் ஏற்பட்டா வில்லையும், அம்பையும் எடுத்துட்டு கிருஷ்ணன் போருக்கு போறபோ, அவர் கூட இவரும் கெளம்பிர்வாங்களாம். அப்படித்தான், கிருஷ்ணன் நரகாசுரனை அழிக்க போனார்ல, அந்த சமயத்தில சத்தியபாமாவும் கிருஷ்ணனுக்கு துணையா போனாங்களாமே, “ங்கொப்பன் மவனே, வர்றோம்டா உன்னை அழிக்க”ன்னு சண்ட போட்றதுக்கு.

இந்தக் காவியக் கதைல ரொமான்ஸ், பக்தி இதெல்லாம் இருக்குது. இதனாலேயே சினிமா எடுக்கிறவங்க, இந்தக் கதைய படமா எடுக்கலாம்னு, பேசாத பட காலத்ல இருந்தே ஆசப்பட்டாங்களாம்.

முதல் முதலா 1922ல, R நடராஜ முதலியார் பேசாத படம் எடுத்தாராம். அதுக்கப்புறமா 1927ல, இந்திய சினிமாவின் தந்தை தாதாசாஹீப் பால்கே ‘ருக்மிணி ஹரண்’ என்கிற பேர்ல படம் எடுத்தாராம். இன்னொரு பேசாத படம் 1929ல  Sarbotdarனு ஒருத்தர் எடுத்திருக்கார்.

பேசாத படங்கள் வந்தது போதும்னுட்டு, இதுக்கப்புறமா பேசுற படத்தை எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. எத்தன நாளக்கிதான் ஊமை படத்தையே ............ பாத்துட்டு இருக்க முடியும், இல்ல?

முதல் பேசும் படம் – குஜராத்தி மொழி – 1930களின் ஆரம்பத்தில. தமிழ் – 1936 ; தெலுங்கு – 1939 ; ஹிந்தி – 1946.

இப்ப நம்ம படத்துக்கு வருவோம். ருக்மணி கல்யாணம். Balji  Phendarkar ன்னு ஒருத்தர் இந்தப் படத்தை தயாரிச்சு, டைரக்ட் செஞ்சாராம். இவர் யாருன்னு நெனக்கிறீங்க, இவர் மராத்தி பட டைரக்டராம். பால்கே விருது வாங்கினவர். மராத்தி சினிமா நிறுவனர் Baburao Phendarkar என்பவரின் தம்பி. இவங்க ரெண்டு பேரும் Phendarkar சகோதரர்களாம். மராத்தி சினிமாவுக்கும், இந்திய சினிமாவுக்கும் இவங்க பங்களிப்பு அதிகமாம்.

இந்தப் படத்ல, MS விஜயாள் ருக்மிணியா நடிச்சாங்களாம். 
S ராஜம் கிருஷ்ணனா நடிச்சாராம். 

ராஜம் பொம்பள பேர்னு நெனச்சேன். ஆனா இல்ல. இவர் பேரு, சுந்தரம் ராஜம்.  

இவர் இசைத்துறைல வல்லவராம். சென்னை மைலாப்பூர்ல சுந்தரம் அய்யர், சுந்தரம் அய்யர்னு ஒரு வக்கீல் இருந்தாராம். ரெண்டு பேரான்னு கேக்காதீங்க, ஒருத்தர்தான். இவர் மகனாம் அந்த ராஜம். பாபநாசம் சிவன் மைலாப்பூர்ல இருந்தாராமே. ராஜம் இவருக்கு முதல் சீடராம்.

சீதா கல்யாணம்னு ஒரு படம் வந்துச்சாம். அந்த படம் ஓஹோன்னு ஓடினதால, அதுக்கப்புறம் ராதா கல்யாணம் [1935], இப்போ ருக்மணி கல்யாணம். இந்த மூணு படத்திலேயும் ஒரு ஒற்றுமை என்னான்னு தெரிமோ? மூணு படத்திலேயும் நம்ம ராஜம்தான் கிருஷ்ணனா நடிச்சாராம். அந்த காலத்து NT ராமாராவ் போல.

சீதா கல்யாணம் வெற்றிகரமா ஓடின அளவுக்கு, ருக்மணி கல்யாணம் ஓடலியாம். அதனால அதுக்கப்புறம் ராஜம் நடிக்கிறதை விட்டுட்டாராம். அவர் மனைவி நடிக்க வேண்டாம்னு சொல்லிட்டங்களாம். இருந்தாலும் 1943ல தியாகராஜ பாகவதர் நடிச்ச சிவகவி படத்தில முருகனா நடிச்சாராம். 1949ல வந்த ஹிந்தி படம் Apna Desh இன் தமிழ் டப்பிங் படத்துக்கு ம்யூசிக் போட்டாராம். அது என்ன தமிழ்  படம்னு தெரீமா? எனக்கு நிச்சயமா தெராது. 


ஆக மொத்தத்தில, ராஜம் கிருஷ்ணனாக நல்லா நடிச்சிருந்தாராம். Balji Phendarkar இந்த புராணக்கதையை எடுத்த விதமும் நல்லா இருந்துச்சாம்.

Heezulia  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 6 Empty Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by SK Tue Jan 02, 2018 2:26 pm

சீதா கல்யாணம்
ராதா கல்யாணம்
ருக்மணி கல்யாணம்

அப்போ பாமாவோட கல்யாணம் பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 6 745155 பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 6 745155 பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 6 745155

பின்னூட்டம் எழுதுங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 6 Empty Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 17 Previous  1 ... 5, 6, 7 ... 11 ... 17  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum