புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
prajai
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Pradepa
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10 
18 Posts - 2%
prajai
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Rutu
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ் திரைப்படங்கள்


   
   

Page 3 of 17 Previous  1, 2, 3, 4 ... 10 ... 17  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Dec 03, 2017 5:13 pm

First topic message reminder :

தமிழ்  சினிமாவை  பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள்  இருக்கு. அனுப்பலாமா?

நன்றி Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 20, 2017 11:46 am

ஒரு Heezulia வையே சமாளிக்க முடியல்ல ....இந்த லக்ஷனதில்லே ---பேபி ஹீராஜான்,மெஹ்ருன்னிஸா பேகம் ......
பிச்சுக்கிட்டு ஓடமுடியுமா ? இரவு நேரம் ......தூங்குவதற்கு போய் கொண்டு இருந்தேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Dec 20, 2017 7:55 pm

20.12.2017

என்னது, Heezuliaவ சமாளிக்க முடியலியா? என்ன சார் நெனச்சுட்டு இருக்கீங்க மனசில? வேற வழியே ............................ இல்ல சார் உங்களுக்கு. சமாளிச்சுதா .............................. ன் ஆகணும். ஓடவும் முடியாது ...................  ஒழியவும் முடியாது.  அதனாலதான் பிச்சுக்கிட்டு ஓட முடியுமான்னு கேட்டிருக்கீஹல்ல !!! 

இந்த லட்சணத்துல, பேபி, ஹீராஜான், மெஹருன்னிஸா, பேகம், இவங்ககிட்டேயும் நல் ................. லா மாட்டியிருக்கீங்க. 

சமாளிங்க சமாளிங்க. 

"இரவு நேரம் ............. தூங்குவதற்கு  போய்க்கொண்டிருந்தேன்."

நீங்க மெஸேஜ் அனுப்பிய நேரம் காலைல 11.46. பின்ன, இரவு நேரம் தூங்க போயிட்டு இருந்தீங்கன்னு எழுதியிருக்கீங்க. என்ன சமாச்சாரம்

Heezulia மீண்டும் சந்திப்போம் 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 20, 2017 8:34 pm

heezulia wrote:20.12.2017

என்னது, Heezuliaவ சமாளிக்க முடியலியா? என்ன சார் நெனச்சுட்டு இருக்கீங்க மனசில? வேற வழியே ............................ இல்ல சார் உங்களுக்கு. சமாளிச்சுதா .............................. ன் ஆகணும். ஓடவும் முடியாது ...................  ஒழியவும் முடியாது.  அதனாலதான் பிச்சுக்கிட்டு ஓட முடியுமான்னு கேட்டிருக்கீஹல்ல !!! 

இந்த லட்சணத்துல, பேபி, ஹீராஜான், மெஹருன்னிஸா, பேகம், இவங்ககிட்டேயும் நல் ................. லா மாட்டியிருக்கீங்க. 

சமாளிங்க சமாளிங்க. 

"இரவு நேரம் ............. தூங்குவதற்கு  போய்க்கொண்டிருந்தேன்."

நீங்க மெஸேஜ் அனுப்பிய நேரம் காலைல 11.46. பின்ன, இரவு நேரம் தூங்க போயிட்டு இருந்தீங்கன்னு எழுதியிருக்கீங்க. என்ன சமாச்சாரம்

Heezulia மீண்டும் சந்திப்போம் 
மேற்கோள் செய்த பதிவு: 1254021

ஓஹோஹோ ரொம்ப சாமர்த்தியம் என்று நினைப்பா? அவசரப்பட்டு விட்டீர்களே Baby அவர்களே.!
நீங்க சொல்ற மாதிரி நான் பிச்சுக்கிட்டே ஓடற பதிவு #24 . அப்போதைய மணி

by T.N.Balasubramanian Yesterday at 9:35 pm
அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை
நான் உங்களுக்கு ,விளக்கமாக கூறியது 11.46 காலை பதிவு #26

என்னை பற்றி நீங்கள் புரிந்து கொள்வதற்கு இன்னும் கொஞ்சம் experience தேவை  படுமென்றே நினைக்கிறேன் புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Dec 21, 2017 12:29 am

21.12.2017 

அப்படியா ................... 

நீங்க பிச்சுகிட்டு ஓடினது தூங்றதுக்கா? ............. 

நீங்க என்னவோ சமாளிக்கமுடியாம ஓட்ங்கறீங்கன்னுல்ல  நெனச்சேன். இப்போ நம்பிக்கை வந்துருச்சு, நீங்க நல்லாவே சமாளிப்பீங்கன்னு. 

Heezulia 

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 23, 2017 12:58 am

23.12.2017

வித்தியாசமான படங்கள் 

3. சிந்தாமணி 1937

இந்தப் படத்தின் ஹீரோயின் அசுவத்தம்மான்னு ஒருத்தராம்.  இந்த படத்தை 

பாத்தவங்க, அசுவத்தம்மாவை லவ்வ ஆரம்பிச்சுட்டாங்களாம். அவரை 
பாக்கணும்னு வயசு பசங்க அலஞ்சாங்களாம். அத ஏன் கேக்குறீங்க. அவங்கள பார்க்க இலங்கையில் இருந்து கூட கப்பல்ல இந்தியாவுக்கு வந்தாங்கன்னா பாத்துக்கோங்களேன்.

இதே மாதிரிதாங்க இந்தப் படத்தின் கதையும். சிந்தாமணி தாசி குலத்ல 

பொறந்தவளாம். அவள் தாயின் வற்புறுத்தலால அவள் குலத்தொழில் செய்ய வலுக்கட்டாயமா தள்ளப்பட்றா. அங்க வர்ற பெரிய மனுஷங்க, 
சிந்தாமணியின் அழகில மயங்கி, தங்களுடைய சொத்து, நகை 
எல்லாத்தையும், எல் ......................... லாத்தையம்  பறிகொடுக்குறாங்க. 
சிந்தாமணியின் அம்மா அதோடு விட்டாளா அவங்கள? எல்லாத்தையும் 
வாங்கிட்டு, பறிகொடுத்தவங்கள அங்க மறுபடியும் தல வச்சு படுக்காத 
மாதிரி வெரட்டி விட்டுர்றா.

இப்டீ பத்திக்கப்பட்டவங்கள்ல தியாகராஜ பாகவதரின் தோஸ்த் ஒருவர். அவர் 
சொத்து நகையெல்லாம் இழந்துட்டார். ஆனாலும் அவரால சிந்தாமணியை மறக்க முடியல. மத்தவங்களை போல அவரும் அவளுடைய அழகில சொக்கி போயிருக்காரே. அவர் இப்படி ஆனது மட்டுமில்லாம, தன் ஃப்ரெண்ட் பாகவதருக்கு சிந்தாமணியை இண்ட்ரொdueஸ் செஞ்சு வைக்கிறார்.

ஒரு கோயில்ல சிந்தாமணியின் daaன்ஸ் ப்ரோgராம் நடக்குது. அதை 

பாகவதர் பார்க்கிறார். அம்புட்டுதான், அவரும் சரெண்deர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், 
சிந்தாமணியின் வீட்டிலேயே. பொறவென்ன, சிந்தாமணியின் அம்மா 
அவள் வேலைய காட்ட ஆரம்பிச்சுட்டா. அவள்தான் பேராசைக்காரியாச்சே. மெதுவா மெதுவா பாகவதரின் வீட்டிலுள்ள காஸ்ட்லி பொருட்களெல்லாம் அவகிட்ட வந்து சேர ஆரம்பிச்சுது. இதை கேள்விப்பட்ட பாகவதரின் அப்பா, எல்லா சொத்துக்களையும், தன் மருமகளின் பேருக்கு மாத்திர்றார். அப்போ 
பொம்பளைங்க இருந்த மாதிரிதான், பாகவதரின் தர்மபத்தினியும். 
கல்லானாலும் கணவன், அவன் fuல் ................ லா குடிச்சாலும் புருஷன். 
பாகவதர்தான் குடிக்கலியேன்னு கேக்குறீங்களா? குடிக்கிறதால போதை 
வரும். பாகவதர் போலவங்களுக்கு, சிந்தாமணியை போலவங்க 
போதைதானே. பாகவதரின் மனைவி எல்லா சொத்தையும், நகைகளையும் 
அவர்ட்ட கொடுத்துட்டு, அவரை தன்னோடு வாழும்படி கேட்டு அழுதாளாம். 
ஆனா அவர் சொத்தை பற்றி கவலபடல. சிந்தாமணிதான் வேணும்னு 
அவகிட்ட போயி அவள் காலடில விழுது கெடந்தார்.

ஒருநாள் திடீர்னு பார்த்தா பயங்கரமான இடி, மழை. இந்த சமயத்தில 
பாகவதரின் அப்பா இறந்து போறார். அவருடைய மனைவி கங்கையில் மூழ்கி இறந்து போறா. பாகவதர் இதையெல்லாம் கண்டுக்கவே இல்ல, 
சிந்தாமணிமேலுள்ள மோகத்தில.

இதுல ஒரு த்ரில் என்னானா, பெய்யிற மழையில, ஊரெல்லாம் ஒரே 

வெள்ளக்காடு, 2015ல சென்னையில வந்த மாதிரி. அந்த மழையிலும், 
பாகவதர், தன் அப்பாவும், மனைவியும் செத்துபோனதையும்கூட மறந்து. அந்த வெள்ளத்தில சிந்தாமணியை பார்க்க போறார். வெள்ளத்தில ஒரு கட்டை வருது. அதை புடிச்சுட்டே நீந்தி, சிந்தாமணி வீட்டுக்கு போறார். சிந்தாமணி வீட்டை சுத்தி மதில் சுவர் இருக்கு. அந்த மதில்ல ஏறணும். பக்கத்தில இருந்த மரத்தில ஒரு கொடி தொங்கிட்டு இருந்துச்சு. அதை புடிச்சு ஏறி வீட்டுக்குள்ள போறார். சிந்தாமணி அவர் கையில ரத்தம் இருக்கிறதை பார்க்கிறா. எப்படி ரத்தம் வந்துச்சூன்னு கேக்குறா. பாகவதர் அப்போதுதான் தன் கையில ரத்தம் இருக்கிறதை பார்த்து பதைக்கிறான். வெள்ளத்தில வந்த ஒரு கட்டையை புடிச்சுட்டு வந்து, மரத்தில தொங்கிட்டு இருந்த ஒரு கொடியை புடிச்சிட்டுதானே ஏறி வந்தேன். அப்போ எப்படி ரத்தம் வந்துச்சுன்னு தெரியலயேன்னு சொல்லியிருக்கார். சிந்தாமணிக்கு ஆச்சரியமா இருந்துச்சு. 

சிந்தாமணி வெளியே வந்து பார்க்கிறா. வீட்டுக்கு வெளியே வெள்ளத்தில 
அடிச்சிட்டு வந்த ஒரு பிணம் ஒதுங்கி கிடக்குது. பாகவதர் கட்டைன்னு 
நெனச்சு புடிச்சுட்டு வெள்ளத்தில நீந்தி வந்தது அந்த பிணம்தான். அது யார்னு பார்த்தா, கங்கையில மூழ்கி இறந்து போன அவருடைய மனைவி. மரத்தில தொங்கிட்டு இருந்தது கொடியில்ல. ஒரு மலைப்பாம்பு. இதுங்களோட சப்போர்ட்டாலதான் பாகவதர் சிந்தாமணி வீட்டுக்கு வந்தது.

அம்புட்டுதான். பாகவதர் கதி கலங்கி போய்ட்டார். பாகவதரும், 

சிந்தாமணியும் கிருஷ்ண பக்தர்களா மாறிட்டாங்க. அதுவரை செஞ்ச 
பாவங்களுக்கெல்லாம் பிராயசித்தம் பண்றதுக்காக, பாகவதர் 
தனக்குத்தானே தண்டனை கொடுத்துகிறார். என்ன தண்டனைன்னு 
நெனைக்கிறீங்க. அவர் தன் ரெண்டு கண்களையும் குருடாக்கிகிறார். அந்த 
கண்கள்தானே அழகான சிந்தாமணியை பார்த்து, அவருடைய 
வாழ்க்கைப்பாதையே மாறிப்போச்சு. இதுதாங்க சிந்தாமணி படத்தின் கதை.

‘சிந்தாமணி அல்லது பில்வமங்கள்’ ன்னுதான் படம் பேராம். ஆனா 

சிந்தாமணின்னு மட்டும்தான் படத்தின் பேர் நெலச்சு நின்னுச்சாம்.

இந்தப் படத்தில நடிச்சவங்க :

அசுவத்தம்மா – சிந்தாமணி

பாகவதர் – பில்வமங்கள்

அரங்கநாயகி - பாகவதரின் மனைவி

YV ராவ் – பாகவதரின் நண்பன்
இவர் நடிகை லட்சுமியின் அப்பாவாம்.

பாடல்கள் – பாபநாசம் சிவன்

வசனம் – A அய்யாலு சோமயாஜுலு

ஒளிப்பதிவு – YB வாஷிர்

டைரடக்கர் – YV ராவ்

தயாரிப்பு – மதுரை ராயல் டாக்கீஸ்

ஆந்திராவில் சிந்தாமணி என்ற நாடகம் ரொம்ப நா ............... ள் நடந்துச்சாம். 
அந்த நாடகம்தான் இந்தப் படம். ஒரு வருஷத்துக்கு மேலா ஓடுச்சாம். இந்தப் படம் ஓஹோன்னு ஓடினதால, இந்த படத்தை தயாரிச்ச மதுரை ராயல் டாக்கீஸ், சிந்தாமணி தியேட்டர்னு மாறுச்சாம். இதுல உள்ள பாட்டுக்கள்ல ஒரு பாட்டு, "ராதே உனக்கு கோபம் ஆகாதடி".

இந்தப் பாட்டு  பிற்காலத்தில வந்த 'கிருஷ்ண விஜயம்' [1946 ] படத்தில TMS பாடிய ஒரு பாட்டுக்கு முன்னோடியாம். ஆனா வார்த்தைகள்தான்  கொஞ்சம் வேற மாதிரி இருக்கு. 

"ராதே நீ என்னை விட்டு போகாதடி" - இப்படி   

அப்புறமா 'குலமகள் ராதை' [1963] படத்தில் TMS “ராதே உனக்கு கோபம் ஆகாதடி” ன்னு பாடியிருக்கார். 

சரி முழுசும் படிச்சுட்டீங்களா? நல்லா இருந்துச்சா? சொல்லுங்க.


Heezulia 


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Dec 23, 2017 2:35 pm

சிந்தாமணி கதை அருமை

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 3838410834 பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 3838410834



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Dec 27, 2017 1:44 pm

27.12.2017 

வித்தியாசமான படங்கள் 

அசோக்குமார் 1941 

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 WLcMlloTq6aeHLeC7R2Q+Ashok_kumar_1941
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 YqRzg67HSEqetlcNjAVO+Ashokkumar

தயாரிப்பு : மதுரை முருகன் டாக்கி ஃபிலிம் கம்பெனி, சென்னை ந்யூடோன் ஸ்டூடியோ
ராஜா சந்திரசேகர் : டைரடக்கர்
ஆலத்தூர் சிவசுப்ரமண்யம் : இசை
இளங்கோவன் : வசனம்
பாட்டுக்கள் : பாபநாசம் சிவன், பாபநாசம் ராஜகோபால், ஆனை வைத்யநாதன் 

V நாகையா : சாம்ராட் அசோகர்
கண்ணாம்பா : 
திஷ்யரட்சதை, அசோகரின் மனைவி
பாகவதர் : குணாளன், அசோகரின் மகன் 
TV குமுதினி : காஞ்சனமாலா, குணாளனின் மனைவி 
TA மதுரம் : பிரமீளா, திஷ்யரட்சதையின் நண்பி
NS கிருஷ்ணன் : தேரையன், வைத்தியர்
MGR : மகேந்திரன், சேனாதிபதி[இவர் பேர் டைட்டல்ல MG ராம்சந்தர்னு போட்டிருக்கு.]
ரஞ்சன் : புத்தர்

இது ஒரு கேவலமான கதை. இருந்தாலும் வெள்ளி விழா கொண்டாடிய படமாம்.

மகத சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி சாம்ராட் அசோகன். இவருக்கு ரெண்டு மனைவீங்க. இளைய மனைவி திஷ்யரட்சதை. மூத்த மனைவியின் மகன் குணாளன். இவனுடைய மனைவி காஞ்சனமாலா.

போர் நடக்குது. போர்ல குணாளன் ஜெயிச்சுட்டு வர்றான். குணாளன் போருக்கு போயிருந்த சமயத்ல அசோகர் கல்யாணம் செஞ்சுகிட்ட ரெண்டாவது மனைவி திஷ்யரட்சதையை குணாளனுக்கு அறிமுகம் செஞ்சு வைக்கிறான். அந்தப் பாவி சித்தி என்ன செஞ்சா தெரியுமா? மகனா நினைக்கவேண்டியவன, அவனை பார்த்த மாத்திரத்திலேயே அவன் அழகில மயங்கிர்றா. அவன் மேல மோகம் கொள்றா.

அந்த காலத்திலேயே ஏன்தான் இப்படி கதைல்லாம் எழுதுறாங்களோ தெரியல. அதுவும் மாசக்கணக்கா, வருஷக்கணக்கா ஓடுதுல்ல. ஒருவேளை ஜனங்களுக்கு வேற பொழுதுபோக்கு இல்லாததனால கூட இருக்கலாம்.

சரி கதைக்கு வர்றேன். மகன் போர்ல ஜெயிச்சு வந்த கையோட, அவனுக்கு பட்டாபிஷேமும் செஞ்சு வச்சுரலாம்னு சொல்லி, அறிவிப்பும் செஞ்சுர்றார், அசோகர். பட்டாபிஷேகம் முடிஞ்சவுடனே, திஷ்யரட்சதை குணாளனுக்கு ஆரத்தி எடுத்து, பொட்டு வச்சு விடுறா. அவள் எப்போதும் அவனை பார்க்கும் பார்வையே காமப்பார்வைதான்.

குணாளனும், அவன் மனைவியும் ஜாலியா பாட்டு பாடிக்கொண்டிருந்ததை அவள் பார்த்து, அவள் காதுல புகை வருது. அவன் பாட்டை கேட்டு, அவள் மனசு படாத பாடு படுது.

ஒரு நாள் அசோகர் திஷ்யரட்சதையுடன் பேசிக்கொண்டிருக்கார். குணாளனை கூப்ட்டு அனுப்புறார். அவனும் வர்றான். “உன் அம்மா உன் பாட்டை கேட்கணும்னு ஆசைப்படறா. பாடிக்காட்டு”ன்னு மகனிடம் சொல்கிறார். “அதுக்கென்ன பாடிக்காட்றேன் அப்பா” ன்னு சொல்லிட்டு பாடுறான். அவளும் தன்னை மறந்து ரசிச்சு கேக்குறா. பாடி முடுச்ச பிறகு, மந்திரி வந்து அசோகர் காதில ஏதோ சொல்றார். அசோகர் அங்க இருந்து போக வேண்டிய கட்டாயம். அவர், மகனிடம் “நீ வேற ஏதாவது பாடிட்டு இரு. நான் வந்துர்றேன்” ன்னு சொல்லிடு போயிர்றார். அவளுக்கு அது சாதகமா போயிருது. ‘குணாளா, நீ பாடு நான் ஆடுறேன்” ன்னு சொல்றாள். அவன் மறுக்கிறான். அது இது சொல்லி சம்மதிக்க வைக்கிறாள். அவன் பாடுறான். அவள் ஆடுறாள். பாடி ஆடி முடிச்சதும், அவள் ஆசையை அவனிடம் சொல்றாள். அப்போதான் அவனுக்கு அவளுடைய கீழ்த்தரமான நோக்கம் புரியுது. அங்கிருந்து போக நெனச்சாலும், அவள் பேசிப் பேசியே bளேd போட்டுட்டு இருந்தா.

அப்போ அசோகர் வந்துகொண்டிருந்தார். அவர் வர்ற சமயத்தில, அவள் குணாளனின் கையை பிடித்துக் கொண்டிருந்தா. அசோகர் வர்றத பாத்தவுடனே, “குணாளா, என்ன விட்டுவிடு”ன்னு சொல்லி அவனை விட்டு விலகி போறாள். அசோகர் இதைப் பார்த்து கொஞ்சம்கூட யோசிக்காம, மகனை திட்றார். “தாயை தாரமாக்க எப்படியடா மனசு வந்தது?”ன்னு திட்றார். இதுதாண்டா சாக்குன்னுட்டு, அவள் அவனை பற்றி, அவள் பேசிய அசிங்கத்தை எல்லாம், அவன் பேசியதாவும், தன்கிட்ட கேவலமா நடந்துகிட்டான்னும் குணாளனை பற்றி தப்பு தப்பா சொல்றா. ஆனா அவன் தாயை பற்றி களங்கமாக சொல்ல மனசில்லாம பேசாம நிக்கிறான்.

அசோகர் கோவமாகி, அவனை நாடு கடத்த உத்தரவிட்றார். குணாளனிடம் அன்பு வைத்திருந்த மந்திரி அவனிடம் நடந்ததை கேட்கிறார். அவன் சொல்லமாட்டேங்கறான். நாடு கடத்தப்பட்ட குணாளனை, அந்நாட்டின் சேனாதிபதி மகேந்த்ரனுடன் தங்க சொல்லி, அசோகரை சமாதானப்படுத்தி, மறுபடியும் குணாளனை கூப்பிட்டு கொள்வதாக மந்திரி சொல்றார். அதன்படி அவனும் மகேந்திரனுடன் தங்குறான். அந்த சமயத்தில் மகேந்திரனுக்கு ஒரு ஓலை வருது. அதுல குணாளனின் கண்களை குருடாக்கணும், தவறினா, மகேந்திரனையும், அவன் குடும்பத்தையும் எரித்து விடறதா எழுதியிருந்துச்சு. ஆனா அசோகர் கட்டளையின்படி அவர் பாகவதரின் கண்களை குருடாக்கல. அவருக்கு மனசு வரல. அதனால பாகவதரே தன் கண்களை குருடாக்கிகிறார்.

அதுக்குப்பின்னால குணாளன் அங்கிருந்து போயிர்றான். இதற்கிடையில் மூணு மாச கர்ப்பிணியான காஞ்சனமாலாவை, அசோகரின் மனைவி வெளியே வெறட்டிர்ரா. குருடனான குணாளன் பாட்டு பாடிக்கொண்டே தெருவில நடந்து போயிட்டு இருக்கான். அவன் பாட்டு சத்தம் கேட்டு, அவன் மனைவி அவனை சந்திக்கிறாள். அவன் கண்கள் பறிபோன கதையை கேட்டு அழுறா. ரெண்டு பேரும் பிச்சையெடுத்து பிழைக்கிறாங்க.

இப்படி இருக்கும்போது நாட்கள் நகருது. காஞ்சனாவுக்கு கொழந்த பொறக்குது. அவங்க பொழப்பு எப்படியோ போவுதுன்னு வச்சுக்கோங்க. ஆனா, அவங்களுக்கு சோகத்துக்கு மேல சோகம். குழந்தை இறந்து போவுது. இந்த சோகத்தோடும் அவங்க வாழ்க்கை ஓடுது.

நடுவில என்னான்னா, சக்கரவர்த்திக்கு மனைவிமேல ஒரு சின்ன சந்தேகம் வந்துச்சு. ஆனாலும், அவள் அப்படி செஞ்சிருக்கமாட்டான்னு மனசை சமாதனப்படுத்திக்கிறார். மகன் ஞாபகத்திலேயே நோய்வாய்பட்றார். ஒரு நாள் தெருவில பாடிட்டு போற குரல் கேக்குது. இவருக்கு மகன் ஞாபகம் வருது. பாடிட்டு போறது யாரோன்னு நெனச்சு, அவனை கூப்ட்டு வரச்சொல்லி பாடச்சொல்றார். குணாளனும் மனைவியுடன் வந்து பாட்றான். அப்பாவும் மகனும் சந்திச்சுகிறாங்க. மகன் கண்ணிழந்து நிக்கிறதை பார்த்து துடித்து போறார். “நீங்கள் தானே கடிதத்தில் என்னை குருடாக்க சொல்லியிருந்தீர்கள்” ன்னு மகன் சொல்றான். “இல்லியே, உன்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லி, உன்னை கூட்டிட்டு வரும்படித்தானே நான் கையெழுத்து போட்டேன்” ன்னு அரசர் சொல்லியிருக்கார். அப்போதான் அரசருக்கு மனைவிமேல தப்பு இருக்கிறதை நம்புறார். அவளை திட்டுறார். அவர் திட்டுறதை அவர் மனைவி வெளியே இருந்து கேக்குறாள். தன்னை பற்றி உண்மை தெரிஞ்சிருச்சுன்னு, விஷம் சாப்ட்டு தற்கொலை செய்துகிறா.

அரசர் மகனை கூப்ட்டுட்டு புத்தர் கோவிலுக்கு போறார். அங்க ஒரு பாட்டு பாட்றார், குணாளன். புத்தர் நேர்ல தோன்றி அவனுக்கு கண்களை கொடுக்கிறார். எல்லாருக்கும் சந்தோஷம்.

கண்ணாம்பாவுக்கு இரண்டாவது படமாம். இவருக்கு தமிழ் தெரியாததால, தெலுங்கில வசனங்களை எழுதி, கத்துகிட்டு பேசினாராம். கிரேட்ல? “உன்னைக் கண்டு மயங்காத” ன்னு ஒரு பாட்டு இருக்காம். ஆச்சரியம் என்னான்னா, அந்தப் பாட்டை பாகவதர் பாட, கண்ணாம்பா டான்ஸ் ஆடுவாராம். இந்த டான்ஸ் ஆடுறதுக்கு ரொம்ப ப்ராக்டிஸ் செஞ்சாராம். ஒரே ராத்திரியில இந்த டான்சை ஷூட் செஞ்சாங்களாம்.

ரஞ்சன் ஒரு சின்ன ரோல்ல நடிச்சிருந்தாராம். அதுவும் கடைசி ஸீன்ல புத்தரா. இவருக்கு முதல் படம்.

இந்தப் படத்ல 19 பாட்டு. பாகவதரை ஒரு படத்தில புக் செஞ்சாங்கன்னா, அந்தப் படத்தில கண்டிப்பா பாபநாசம் சிவனும், வசனகர்த்தா இளங்கோவனும் இருந்தாகணும்னு பாகவதரின் வற்புறுத்தலாம். பாபநாசம் சிவன் பாட்டுக்களை எல்லாம் எழுதுவது மட்டுமில்லாம, அதை எந்த ராகத்தில பாடணும்னும் சொல்லிருவாராம். 

குறிப்பிடத்தக்க பாட்டுக்கள் :

சத்வகுண போதன் – பாகவதர் 
பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர் – பாகவதர்
உனைகண்டு மயங்காத பேர்களுண்டோ – பாகவதர்

ப்ரிட்டிஷ் அகோஸ்டிக் த்வனிப்பதிவு முறையில் தயாரிக்கப்பட்டுச்சாம். இது என்ன? ஹிந்தீல வீர் குனால் என்கிற பேர்ல ரிலீஸ் ஆச்சாம். 



Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Dec 27, 2017 3:00 pm

27.12.2017

வித்தியாசமான படங்கள் 

5. மங்கம்மா சபதம் 1943

வசுந்தரா – மங்கம்மா [இவர் வைஜயந்திமாலாவின் அம்மாவாம்]
ரஞ்சன் – சுகுணன், ஜெயபாலன் 
NS கிருஷ்ணன், TA மதுரம்,


இசை : MD பார்த்தசாரதி & ராஜேஸ்வரராவ்
பாட்டூஸ் : பாபநாசம் சிவன், கொத்தமங்கலம் சுப்பு
தயாரிப்பு : SS வாசன்
கதை, வசனம் & டைரக்டர் : ஆச்சார்யா


ஒரு ராஜகுமாரன். அவனை சுற்றி அரண்மனையில எப்பவுமே பெண்கள் கூட்டம் இருந்துட்டே இருக்கும். மங்கம்மா ஒரு ஏழை பெண். அழகா இருப்பா. புறாக்கள்னா அவளுக்கு ரொம்ப புடிக்கும். வளர்க்கிறாள். அவளை ஒரு தடவை ராஜகுமாரன் அரண்மனை தோட்டத்தில பார்த்து, அவ அழகில மயங்கி, அவளை அடைய நினைக்கிறான். அவள் இடம் தரல. அவனை அவமானப்படுத்திட்டு தப்பிச்சு ஓடி போயிர்றா.

அரண்மனை தோட்டத்தில அவங்க ரெண்டு பேரும் பேசிகிட்டது இங்க. கேள்வியை எல்லாம் இழுத்து இழுத்து கேக்குறான். 

இந்தப் பட ஆரம்பத்தில, மங்கம்மாவின் புறா ஒண்ணு அரண்மனை தோட்டத்தில பறந்து வந்துர்து. மங்கம்மா அரண்மனை தோட்டத்துக்குள்ள புறாவைத் தேடி வர்றா. அதை சுகுணன் பால்கனிலே இருந்து பார்க்கிறான். அப்பவே அவள் அழகில கிறக்கம் கொள்றான். பால்கனிலே இருந்து அவள் நிக்கிற இடத்துக்கு வர்றான். மங்கம்மா அவன யார்னு கேக்குறா. அவன் தோட்டத்து மேஸ்த்திரின்னு சொல்றான். அவள் புறா தோட்டத்துக்குள்ள வந்துட்டதாக சொல்றாள். 

சுகுணன் : என்ன புறா.................?

மங்கம்மா : மாட புறா

சுகுணன் : அது என்ன மாடம்.................?

மங்கம்மா : ஏய், என்ன புதுர் போட்ற, ம்?

சுகுணன் : எனக்கு புதுர் போட்றதுன்னா ரொம்ப புடிக்கும். ஒனக்கு புடிக்காதோ?

மங்கம்மா : எனக்கும் புடிக்கும். அந்த பொறாவ புடிச்சு குடேன்.

சுகுணன் : புடிச்சு தரே .................. ன். அது என்ன மாடம்..................?

மங்கம்மா : கன்னிமாடம்

சுகுணன் : என்ன கன்னி.....................?

மங்கம்மா : [கோபமா] நாகக்கன்னி. பொறாவ புடிச்சு தறேன்னியே, [மரத்தை பார்த்து] குக்கு

சுகுணன் : அது என்ன நாகம்......................?

மங்கம்மா : [கோபமா அவனை திரும்பி பார்த்து] ஜடநாகம். என்ன ஜட, திரிஜட, என்ன திரி, மே ................... ஸ்த்திரி. பொறாவ புடிச்சு தர்றேன்னு சொல்லிட்டு ............... குக்

புறா அரண்மனைக்குள் பறந்து போகுது. சுகுணன் புறா வேணும்னா அரண்மனைக்குள் வான்னு சொல்லி, மங்கம்மாவை உள்ளே கூட்டிட்டு போறான். அங்கே அவளிடம் தவறா நடக்க முயற்சி செஞ்சு, அவன் அவன்ட்டே இருந்து தப்பிச்சு வந்துர்றா. 

இன்னொரு தடவை அவள களத்து மேட்டில பாட்டு பாடிட்டு இருக்கும்போது பார்க்கிறான். அப்பவும் அவளை அடைய முயற்சி செய்றான். இந்த தடவையும் முடியல. இந்த சமயத்தில்தான் ரெண்டு பேரும் ஆளுக்கொரு புதிரும், சபதமும் போட்டுக்கிறாங்க.

சுகுணன் புதிர் : எள்ளிலே பிறந்து எள்ளிலே வளர்ந்த யவ்வன பெண்ணே, எள்ளிலும் சிறிய இலை என்ன இலை? 

மங்கம்மா பதில் புதிர் :
 பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூமண்டல ராஜாவே, பூவில் இரண்டிதழ் பூ என்ன பூ?

சபதம் வசனங்கள் :

மங்கம்மா : என்ன அவ்ள கேவலமா நெனச்சுடாத. என்ன கல்யாணம் பண்ணிக்கிற புருஷன தவ்ற, வேற யாரும் என்ன தொட்டுக்கொள்ள முடியாது.

சுகுணன் : நீ ஒரு புருஷனை கல்யாணம் பண்ணி உருப்பட போறியோ? அப்டி உட்டுர்வேன்னு நெனக்காதே. நான் ஒரு ராஜ்குமாரன்னு உண்மையானா, நானே உன்ன கல்யாணம் பண்ணி, உன்ன சிறைச்சாலைல வச்சு, ஒங் கர்வத்த ஒழிக்கிறேன். ஒங் கொழுப்ப அடக்கி, உயிருள்ள வரைக்கும், உன்ன வாழாவெட்டியாவே வைக்கிறேன் பார்.

மங்கம்மா : நான் மாத்ரம் ஒரு சரியான பொண்புள்ளையா இருந்தா, அப்படி நீ என்னை கல்யாணம் பண்ணி, வாழாவெட்டி ஆக்கும் பட்சத்தில், உன்னையறியாமல், உனக்கே ஒரு புள்ளைய பெற்று, அந்த புள்ள கையில ஷவுக்க குடுத்து, அந்த ஷவுக்கால ஒன்ன அடிக்க வைக்கிறேன் பாரு.

சுகுணன் : பாக்கலாம்.

மங்கம்மா : பாக்கலாம்.

ராஜகுமாரன் அரண்மனைக்கு வந்து, அவன் அப்பாட்ட மங்கம்மா தன்னை அவமானப்படுத்திட்டதனால, அவளை தனக்கு கல்யாணம் செஞ்சு வைக்க சொல்றான். அதுக்கு அவள் சம்மதிக்கணுமே. ஊஹும், அவளுக்கு பிடிக்கல. மங்கம்மா அவனை கல்யாணம் செஞ்சுக்க மறுத்தாளா? சுகுணனுக்கு வந்துச்சே கோவம். இந்த நாட்டு ராஜகுமாரன் சொல்றத கேக்காத ஒரு பெண்ணான்னு நெனச்சு, அவள சும்மா விடல. பலவந் ............................. தமா, ஆ ஆ ஆ ........அ, நிறுத்துங்க, நிறுத்துங்க சும் .............................. மா கற்பனையை பறக்க விடாதீங்க. பலவந்தமா மங்கம்மாவை தூ ............................. க்கிட்டு போய், கட்டாய கல்யாணம் செஞ்சுகிறான்.

எப்படி கட்டாய கல்யாணம்? மந்திரியை அவள் வீட்டுக்கு அனுப்பி, மங்கம்மா அப்பாட்ட, கல்யாணத்துக்கு சம்மதம் வாங்க சொல்றான். மறுத்தா அப்பாவ ஜெயில்ல போட சொல்றான். மந்திரி வந்து கேட்டபோ, அப்பா சம்மதம் சொல்லல. அவன் கைகளில் வெலங்கு மாட்டி கூட்டிட்டு போற சமயத்தில, மங்கம்மா பொறுக்காம, கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிர்ரா. கல்யாணமும் நடக்குது. இதுதான் கட்டாயக் கல்யாணம். அம்புட்டுதான்.

மங்கம்மா கல்யாணம் முடிஞ்சு அரண்மனைக்கு வர்றா. அவ இருக்கிற இடத்த ரூம்னும் சொல்லமுடியாது, ஹால்னும் சொல்லமுடியாது. அரண்மனையாச்சே, பெரிய இடம். அந்த இடத்தில first nightக்கான சூழ்நிலை. பால் பழங்கள். அலங்கார மெழுகுவர்த்தி ஸ்டாண்டுகள். ஆனா ஒரே ஒரு மெழுகுவர்த்திதான் எரிஞ்சுக்கிட்டு இருக்கு.

மங்கம்மா அழுதுட்டு உக்காந்திருக்கா. சுகுணன் உள்ளே வந்து கதவை சாத்துறான். அவள் அழுதுட்டு இருக்கிறதை பார்க்கிறான். அவன் வர்றதை பார்த்து, இவள் எந்திருச்சு நிக்கிறா. சந்தோஷமா அவன் விசிலடிச்சிட்டு வர்றான். இன்னொரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கிறான். அங்க இருந்த திராட்சையில் ரெண்டை எடுத்து வாயில போட்டுகிட்டான். Bedல படுக்கிறான். அவபாட்டுக்கு தூரத்தில திரும்பி நின்னுட்டு இருக்கா. படுக்கையில படுத்துட்டே, அவளை கூப்பிடுறான்.

சுகுணன் : ஏய்

அவகிட்ட இருந்து பதிலையும் காணோம். திரும்பி பார்க்கவும் இல்ல. அழுதுட்டு நிக்கிறா.

சுகுணன் : ஏய், பேசாமடந்த.

எந்திரிச்சு அவ பக்கத்தில வர்றான்.

சுகுணன் : என்னை கேவலம், கையாலாகாதவன்னு நெனச்சே, இல்லே.

அவளை முரட்டுத்தனமா தன் பக்கம் திருப்புறான்.

சுகுணன் : அடடே, ஹ ஹ ஹ... அழவா அழற? ச்சு ச்சு ச்சு .... அழுதா ....... ஒடம்புக்கு நல்லதுதான். அழு, அழு.

மங்கம்மா அமைதியா : ஒண்ணுமில்ல, நான் ஒண்ணும் அழல.

கண்ணீரை தொடக்கிறா. அந்த எடத்த விட்டு போறாள். சுகுணன் சந்தோஷத்தில ஜா ............... லியா ரெண்டு சுத்து சுத்தி,

சுகுணன் : அப்படி சொல்லுடி என் கோகாகுட்டின்னா.

அவனும் அவள் நிக்கிற எடத்துக்கு போறான்.

சுகுணன் : நீ ஒரு பெரீ ............. ய பாசாங்கு கள்ளி. என்ன ஆட்டம் ஆடினியே. என்ன பேச்சு பேசினே. இப்போ, ஒன்ன என்ன செய்யபோறேன்னு தெரியுமா?

மங்கம்மா : தெரியுமே [அமைதியா பேசுறா] அப்பவே சொன்னதுதானே.

அவன் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கான். இவள் அழுதுட்டே சட்டென்று அவன் காலை புடிச்சு,

மங்கம்மா : நான் ஒண்ணு சொல்றேன் கேளுங்க. நீங்கள் ஏதோ கோபத்ல, சபதம் பண்ணிட்டேள். நானும் பெண் புத்தியால, பதிலுக்கு பதில் பேசிட்டேன். அப்ப நமக்கு கல்யாணம் ஆகல. இப்ப கல்யாணம் ஆயிருச்சு. போனதெல்லாம் போகட்டும். மறந்துடுங்க. என் வாழ்க்கைய வீணாக்க வேண்டாம்.

சுகுணன் கோபமா : நீலித்தனமா பண்ற.

அவளை காலால் எட்டி உதைத்து தள்ளுறான். அவள் கீழ விழுந்து கெடக்குறா. அவன் எந்திரிச்சு நிக்கிறான். இவளும் எந்திரிக்கிறா.

சுகுணன் : ஷபதம் ஷபதம்தான். நீ வாழாவெட்டி வாழாவெட்டிதான்.

அவள் திராட்சை கொத்திலிருந்து, திராட்சைகளை உதிர்த்து போட்டுக்கொண்டிருக்கா.

சுகுணன் : இந்த பட்டணத்தின் வெளிப்புறத்தில் ஒரு சிங்காரமான அரமன கட்டி, அதில் வேண்டிய சாமான்கள் சேகரிச்சு வச்சு, அதில் ஒன்ன குடியேத்தி, ஒனக்கொரு தாதிய காவல் வச்சு, அந்த அரமனயின் கதவ சாத்தி, பூட்டி முத்ர போட்டு, அந்த சாவிய என் இடுப்ல வச்சுக்கிற போறேன். உன் உயிருள்ளவர அங்கியே இருந்து கெடந்து தவிக்க வேண்டியதுதான்.

மங்கம்மா உதிர்த்த திராட்சையில் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்றா. அவன் வாங்கிக்கிறான்.

சுகுணன் : ரொம்ப ஆசையா இருக்கியே.

மங்கம்மா : இல்ல, வேகமா பேசி, தொண்ட வறண்டு போச்சே ............ ன்னு பயந்தேன்.

சுகுணன் கோபமா : ரொம்ப வேடிக்கயா பேசுறியோ?

அங்கே இருந்து வேகமா கொஞ்ச தூரத்தில போய் நின்னு திரும்பி பார்த்து,

சுகுணன் : ஒன்னை சிறைல கொண்டு போய் வச்சுட்டு, வெளில நின்னுட்டு கோக்கோன்னு கொக்கரிக்கிறேன் பாரு.

கோவத்தோடு வெளியே போய் கதவை படார்னு சாத்துறான். இவ வேலைய continue பண்றா, அழுறா.

அவன் சொன்னபடியே, தனி அரண்மனை கட்டி, அதில் மங்கம்மாவை அடச்சு வச்சுர்றான். ஆனா அவள் அப்பா மட்டும் அப்பப்போ அவளை வந்து பார்க்க பர்மிஷன் உண்டு. இதுக்கு நடுவில, மங்கம்மா தன் அப்பா கூட சேர்ந்துட்டு ஒரு பயங்கரமான underworld வேல செயறா. மங்கம்மா சொன்னபடி, அவள் அப்பா, இந்த அரண்மனைக்கும், அப்பா வீட்டிற்கும் இடையே சுரங்கப்பாதை தயாராச்சு. இந்த சுரங்கப் பாதை மூலமா, மங்கம்மா அப்பாவுடன் அப்பப்போ வெளியே போய் வர்றா.

மங்கம்மாவின் அப்பா, ஒரு கழைக்கூத்தாடியின் உதவியோடு, மங்கம்மாவுக்கு அவங்க வித்தையெல்லாம் அவளுக்கு சொல்லிகொடுக்க சொல்லி, மங்கம்மாவும் கழைக்கூத்தாடியாகிறா. அவள் ஆடுறதை பார்த்த சுகுணன், அவள் மேல் ஆசைப்பட்டு, அவளிடம் நெருங்கி பழகி, மங்கம்மா கர்ப்பமாகிறா. அவன் என்னவோ அவன் வலையில் கழைக்கூத்தாடி விழுந்துட்டான்னு நெனச்சான். ஆனா உண்மையில் அவன்தானே அவள்ட்ட மாட்டிகிட்டான். அவள் தனி அரண்மனைல இருக்கா. அவளை சுகணன் பார்க்கிறதே இல்ல. அதனால அவள் கர்ப்பமானதும் தெரியாது, அவளுக்கு ஆண் குழந்தை பிறந்ததும் தெரியாது.

மகனும் ரஞ்சன்தான். ரஞ்சனுக்கு ரெட்டை வேஷம்.

அப்பா ரஞ்சன் சுகுணன், மகன் ரஞ்சன் ஜெயபாலன்.

அரண்மனையில் ஒரு திருடன் நுழஞ்சு, தூங்கிட்டு இருந்த சுகுணனின் கழுத்தில் இருந்த நகையை திருடிட்டு, அவன் மூஞ்சியில கரியை தடவிட்டு போயிர்றான். அவனைப் பிடிக்க சுகுணன் ஏற்பாடுகளை செய்றான். எப்படியோ சுகுணன் தன் மகன் ஜெயபாலனை பார்க்கிறான். ஆனா மகன்னு தெரியாம. மகன் அப்பாவை சாக்கில் ஒளிந்து கொள்ள சொல்றான். திருடன் வந்ததும் அவனை புடிச்சு வச்சுட்டு, மூட்டையை அவுத்து விடுவதா சொல்றான், மகன். சுகுணனும் சாக்கில் ஒளிஞ்சுகிறான். ஜெயபாலன் சாக்கின் வாயை கட்டிர்றான். உடனே “திருடன், திருடன் மாட்டிகிட்டான்”ன்னு கத்துறான். பக்கத்தில ஒளிஞ்சுட்டு இருந்த காவலாளிகள் ஓடி வாராங்க. சாக்கு மூட்டையை தூக்கிட்டு அரண்மனைக்கு முன்னால கொண்டு போய் வைக்க, ஊர் ஜனங்கல்லாம் கூடுறாங்க.

ஜெயபாலன் : ஏய், கட்ட அவுத்து விடு.

காவலாளி மூட்டையை அவுக்குறான். மூட்டையிலிருந்து சுகுணன் வேகமாக வெளியே வந்து, ஜெயபாலனை காட்டி,“இவன்தான் திருடன்”.

இப்படி சொல்லிட்டு ஜெயபாலனை நோக்கி பாயறான். காவலாளிகள் சுகுணனை வந்து பிடிக்கிறாங்க.

சுகுணன் : என்னை விடுங்கள். நான் ராஜகுமாரன்.

ஜனங்களுக்குள்ளே சலசலப்பு.

ஜெயபாலன் : பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூமண்டல ராஜாவே, எள்ளிலே பிறந்த பெண்ணின் சபதம். என்ன தெரியுமா?

இப்படி சொல்லி கையிலிருந்த சவுக்கால் சுகுணனை அடிக்க கையை ஓங்குறான், ஜெயபாலன்.

“நிறுத்து” ன்னு ஒரு பெண் அலறிட்டு வர்றாள். மங்கம்மா.

வேகவேகமா வர்றா. சுகுணன் திகைத்து முழிக்கிறான். மங்கம்மாவை அதிர்ச்சியுடன் பார்க்கிறான். மங்கம்மான்னு முணுமுணுக்கிறான். அவளையும், ஜெயபாலனையும் பார்க்கிறான். ஜெயபாலன் அழக் ....................... கா, நக் ........... கலா ஸ்மைல் பண்றான்.

மங்கம்மா : அரஷே, அவன் உமது பிள்ளை.

சுகுணன் : பிள்ளை

ஜெயபாலனையும், மங்கம்மாவையும் மாறி மாறி பார்க்கிறான். ஜெயபாலன் புன்னகைக்கிறான். ஒட்டு மீசையை எடுக்கிறான். மறுபடியும் ஸ்மைல்.

சுகுணன் மங்கம்மாவையே பார்க்கிறான்.


மங்கம்மா : ஆம், உமது பிள்ளைதான். [கொஞ்சம் இடைவெளி] 17 வருஷங்களுக்கு முன், வசந்த மண்டபத்தில், ஒரு கழைக்கூத்தாடிச்சியோடு, 


சுகுணன் அவளை அடையாளம் கண்டுக்காம இருக்க, வேற ஏதோ பாஷையும் பேச சொல்லிக்கொடுத்திருக்கான். மங்கம்மா கழைக்கூத்தாடி வேஷத்தில சுகுணனோடு பழகிட்டு இருக்கும்போது, அந்த பாஷையை பேசுவாள். இப்போ அவள் அந்த பாஷையில் சுகுணன்ட்ட அந்த பாஷையில் ஏதோ சொல்றா. கழைக்கூத்தாடிதான் மங்கம்மான்னு சுகுணனுக்கு தெரியருதுக்காக. 


மங்கம்மா : இந்த நகை, இந்த மோதிரம், [அவள் போட்டிருந்த நகைகளை காட்டி சொல்றாள்.]

சுகுணன் முழிச்சு முழிச்சு மங்கம்மாவையே பார்க்கிறான். 


இந்த சமயத்தில சுகுணனுக்கு மூஞ்சிக்கு முன்னால, கொசுவத்தி சுருள் சுருளா சுத்துச்சு. Flashback

மங்கம்மா உருவத்ல, முதலிரவு நாளன்னிக்கி, மங்கம்மா சுகுணனின் காலை புடிச்சு பேசினது ஞாபகத்துக்கு வருது. “எல்லாத்தையும் மறந்துருங்க, என் வாழ்க்கையை வீணாக்காதீங்க”ன்னு சொன்னாளே, அது.

சுகுணன் சாந்தமாக : மங்கம்மா, உன்னை மங்கையர்க்கரசி என்றுதான் சொல்ல வேண்டும். நீதான் ஜெயித்தது.

மங்கம்மா [அழுதுட்டே]: ஜெயித்தது. ஜெயம். நானா ஜெயித்தேன்? உலகமறிய தோற்றவள் நான். எது ஜெயித்தது? வாழ்நாளெல்லாம் வீணாய், பொய்யாய், மனம் தடுமாறி, பெண்ணாக வாழ்வதை விட்டு பேயை போல வாழ்ந்தேன். இதுவா என் ஜெயம். இந்த இருபது வருஷ காலமாய், தன்னந்தனியாய், உலக வாசனையற்று, ஒரு பட்சி தனிப்பட்டு கூண்டில் அடைந்தது போல், சிறையில் கிடந்து வாடினேன். இதுவா என் ஜெயம்? கொண்ட புருஷனை அடைய, பொய் சொல்லி, மானத்தை விட்டு, கூத்தாடிகளுடன் சேர்ந்து, மாறுவேஷம் போட்டு, பத்து பேருக்கு முன் வெட்கமில்லாமல் ஆடினேன். இதுவா என் ஜெயம்? பெண்ணாய் பிறந்து, புரிந்து கொள்ள முடியாத பேதை நான். வேறு எந்த ஸ்த்ரியாவது, என் நிலையிலிருந்தால், அவளுக்கு பைத்தியம் பிடித்திருக்கும். தன் பிராணனையே விட்டிருப்பாள். ஆனால் என்றைக்காவது ஒரு நாள், நான் உங்களுடன் வாழ்வேன், உங்கள் அன்பை பெறுவேன், என்ற திடமான நம்பிக்கையில், எனக்கு பைத்தியம் பிடிக்கவில்லை. நான் உயிரை மாயத்துக்கொள்ளவில்லை. [அழுதுகிட்டே இத்தனையும் சொல்றா.]

சுகுணன் : மங்கம்மா போதும்.

அவள் அருகில் வந்து

சுகுணன் : என்னை மன்னித்துவிடு. நான் உனக்கு எவ்வளவோ தீமைகள் செய்திருக்கிறேன். நீ மகா உத்தமி. உன்னை நான் தெரிந்து கொள்ளவே இல்லை. மூடத்தனத்தால், அதிகார திமிர் கொண்டு, உன்னை திட்டினேன். காலால் உதைத்தேன். பிரம்பு கொண்டு அடித்தேன். ஆனால் அடித்த கையை நீ அன்புடன் அணைத்தாய். நான் செய்த கொடுமையை மறந்து, இனி நான் [அவள் ரெண்டு கைகளையும் புடிச்சு] ஒரு நாளும் உன்னை விட்டு பிரிந்திருக்க மாட்டேன்.

அவள் கைகளை கண்களில் ஒத்திகிறான்.

அப்புறம் என்ன, ரெண்டு பெரும் ஜா ..................... லியா படகில பாட்டு பாடிகிட்டே போறாங்க.

இந்த வசனம் எல்லாம் எனக்கு புடிச்சிருந்துச்சு. உங்களுக்கும் புடிச்சிருக்கலாமோன்னு எழுதிட்டேன். இப்பதான் ரஞ்சனின் நடிப்பை பார்த்தேன். நல்ல நடிச்சிருக்கார். வசுந்தராவும் நல்ல நடிப்பு. மதுரம், அடையாளமே தெரியல. அவ்வளவு சின்னவங்களா இருக்காங்க. NSK காமெடி நல்லா இருக்கு.

NSK, மதுரம் ஜோடியா நடிச்ச முதல் படமாம். கழைக்கூத்தாடியாக நடிச்ச NSK, அவங்க செய்றதை எல்லாம், மொதல்ல அவர் தனியா ப்ராக்டிஸ் செஞ்சுட்டுதான், ஷூட்டிங்க்கு வந்தாராம்.

ஒரிஜினல் வசனங்களோடு எழுதுறது புடிச்சிருக்ஆஆஆஆஆஆஆ

Heezulia


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Dec 27, 2017 3:58 pm

27.12.2017 

பழைய தமிழ் படங்கள் 


மனோன்மணி 1942


 பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Fv49T2NSA62i44IHr9Y2+Manonmani_Movie_Poster

TR ராஜகுமாரி - மனோன்மணி 
PU சின்னப்பா - இளவரசன் 
செருகளத்தூர் சாமா - ராஜகுரு
TRB ராவ் - மந்திரி குடிலன் 
TS பாலையா - குடிலன் மகன் 
TR மஹாலிங்கம் - சின்ன role 
KK பெருமாள் - ராஜா, இவர் அனேகமாக மாடர்ன் திடேட்டர்ஸ் படங்களிலெல்லாம் நடிப்பவராம். 
L நாராயண ராவ் - காமெடி 
A சகுந்தலா - மனோன்மணியின் தோழி & இளவரசனின் சின்னவீடு 

TA மதுரம், CT ராஜகாந்தம், PR மங்களம், JMG சாரதா, 
G சரஸ்வதி, NS கிருஷ்ணன், காளி N ரத்னம், SS கொகொ, PG வெங்கடேசன், ME மாதவன், Bafoon சண்முகம் 

பாடல் வரிகள் : பாபநாசம் ராஜகோபால் ஐயர் [இவர் பாபநாசம் சிவனின் சகோதரர்] & வேல்சாமி கவி. 

இசை : கல்யாணம் & மகாதேவன் 

திரைக்கதை : DV சாரி 

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிச்ச இந்தப் படத்தை TR சுந்தரம் டைரக்ட்டினார். எக்கச்சக்கமா செலவு செஞ்சு எடுக்கப்பட்ட படம். எம்பூட்டுன்னு நினைக்கிறீங்க, ஒரு நாளைக்கு 2 லட்சம் ரூபாய், அதுவும் அந்தக் காலத்திலேயே. சுந்தரம் ஒரு புதுமையான முறையை கையாண்டாராம். அதா................... வது, படத்துக்கு ஹீரோயின், ஹீரோவை செலெக்ட் செய்றதுக்கு மக்களிடம் கருத்து கேட்டாராம். அதுக்கு ப்ரஸ்ஸுக்கு போயி, விளம்பரம் கொடுத்தாராம். எப்டீன்னு? சினிமா பார்க்கிறவங்கல்லாம் ஹீரோயின், ஹீரோவை செலெக்ட் செய்யுங்கன்னு சொன்னாராம். அந்த விளம்பரத்தை பாத்த ஜனங்க, யாரை சொன்னாங்க தெரீமா? தமிழ் சினிமாவின் அந்தக்கால கனவுக்கன்னி TR ராஜகுமாரிய மனோன்மணியாவும், PU சின்னப்பா ஹீரோவாவும் நடிக்க வைக்கணும்னு எல்லோரும் ஒரு மனதா சொன்னாங்களாம். உலக சினிமா நிகழ்ச்சிகளில, அதுவும் இந்திய சினிமாவில இப்படி நடந்திருப்பது இதுதான் முதல் தடவையா இருக்கும்போல. 

பாண்டிய நாட்டு இளவரசி மனோன்மணி. இவளுக்கு ஒரு கனவு வருது. அதுல ஒரு இளவரசன் வர்றான். அப்புறம் என்ன, லவ்விர்றா. ஒரு அதிசயம் என்னான்னா, வேடிக்கையும் கூட, அதேமாதிரி அந்த இளவரசனும் கனவு கண்டு இவளை பார்க்காமலே லவ்வுறான். ரெண்டு பேருமே மனசுக்குள்ளேயே பலமான காதல் கோட்டை கட்டிட்டாங்க. [காதல் கோட்டை படம், அதாங்க, அஜீத் & தேவயானி, ஞாபகம் வருமே, எனக்கு வந்துச்சுப்பா.] அந்த காலைத்திலேயே இப்படி. மனோன்மணியின் நாட்டையும், அந்த இளவரசன் நாட்டையும் ஒன்று சேர்க்க எண்ணி, ரெண்டு நாட்டுக்கு நடுவிலயும் ரகசிய வழியை உண்டாக்குறார், ராஜகுரு. 

சூழ்ச்சிகள் செய்றதுக்குன்னே யாராவது இருக்கணுமே, அதாவது வில்லன். இங்க, மந்திரி குடிலன். இவன் கைப்பிடில ராஜா. மந்திரியின் மகனுக்கு வழக்கமான கதைபோல, இளவரசி மேல ஒரு இது. 

அப்பனும், மவனும் சே......... ந்து ராஜாவை brainwash செஞ்சுட்டு இருந்தாங்க, ராஜாவின் மகளை மவனுக்கு கட்டி வைக்க. படத்தில நிறைய ட்விஸ்ட்டுங்க. இளவரசியும், இளவரசனும் அப்டீ இப்டீன்னு 
meet பண்றாங்க. கல்யாணமும் பண்ணிக்றாங்க. 

ராஜாக்களின் கதை, 
இளவரசியும் இளவரசனும் 
ராஜகுருவும், கெட்ட மந்திரியும் 
இந்த buildupல, 
TR ராஜகுமாரியும், PU சின்னப்பாவும் நடிக்க, அதுவும் பொது ஜனங்க செலெக்ட் பண்ணவங்க, இந்த காரணங்களால ஓஹோன்னு ஓடுச்சு மனோன்மணி. காமெடிக்கு பஞ்சம் இருந்திருக்காது. NS கிருஷ்ணன் & மதுரம் இருந்தாங்களே. இவங்களோடு நாராயணராவ், இவரும் காமெடி trackல இருந்திருக்கார். 

இதுல நடிச்ச கொகொன்னு ஒருத்தர், முன்னால சர்க்கஸ்ல கழக்கூத்தாடியா இருந்தாராம். இவர் ஒரு விஷயத்துல ஸ்பெஷலிஸ்ட்டாம். எதிலேன்னு நினைக்கிறீங்க. எனக்கு ஒரே ஆச்சரியமா போச்சு. சிகரெட்ட மேல தூக்கி போட்டு உதடுகளில் பிடிக்கிறது. [எல்லாருக்கும் ரஜினி ஞாபகம் வந்திருக்கணும், இல்லேன்னு பொய் மட்டும் சொல்லாதீங்க, ஆ.................மா] என்ன காரணத்தினாலோ இந்த கொகொ suicide பண்ணிகிட்டாராம். 

S வேல்சாமின்னு ஒருத்தர் இந்தப் படத்துக்கு அசிஸ்டண்ட் டைரடக்கராம். சுந்தரம் இயக்கின நிறைய படங்கள்ல இவர் இருந்திருக்காராம். இந்தப் படத்தில ஒரே ஒரு பாட்டு மட்டும்தான் ரசிக்கிற மாதிரி இருக்குமாம். மதுரம் & NSK பாடினதாம். "ஊஊஊஊஊஊஊஊஊஊன்னு ஒரு வார்த்தை" ன்னு வருமாம் அந்தப் பாட்டு. 

ஆக மொத்தத்தில, நடிகை, நடிகர்களின், முக்கியமா TR ராஜகுமாரி, 
PU சின்னப்பாவின் நல்ல நடிப்பு, சிறந்த கதை அம்சம் இதெல்லாம்தான் இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணமாம். 

Heezulia 


avatar
Guest
Guest

PostGuest Wed Dec 27, 2017 11:28 pm


ப்ரிட்டிஷ் அகோஸ்டிக் த்வனிப்பதிவு என்பது ஒலிப்பதிவு முறையாகும். தொடக்கத்தில் acoustic பின்னர் electrical- அதன் பின் magnetic தற்போது digital முறை கையாளப்படுகிறது.
படச்சுருள் -Qube ,
இசைத்தட்டு-டேப்-CD -DVD -........ என....
தவறானால் திருத்திக் கொள்ளவும்.

Sponsored content

PostSponsored content



Page 3 of 17 Previous  1, 2, 3, 4 ... 10 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக