ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ் திரைப்படங்கள்

+6
ராஜா
krishnaamma
SK
T.N.Balasubramanian
Dr.S.Soundarapandian
heezulia
10 posters

Page 15 of 17 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17  Next

Go down

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 15 Empty பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia Sun Dec 03, 2017 5:13 pm

First topic message reminder :

தமிழ்  சினிமாவை  பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள்  இருக்கு. அனுப்பலாமா?

நன்றி Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Back to top Go down


பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 15 Empty Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by Guest Fri Mar 09, 2018 11:44 pm



Last edited by மூர்த்தி on Fri Mar 09, 2018 11:57 pm; edited 1 time in total
avatar
Guest
Guest


Back to top Go down

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 15 Empty Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by Guest Fri Mar 09, 2018 11:47 pm

நீங்கள் தான் சென்னையில இருக்கீங்க.SK தமிழ் நாட்டில் இல்லை.
avatar
Guest
Guest


Back to top Go down

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 15 Empty Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia Thu Mar 22, 2018 1:00 am

22.03.2018

பழைய திரைப்படம் 

28. தேச முன்னேன்றம் 1938

KR செல்லம், SR பத்மா, சீதா தேவி, கோகிலம், 
பேபி ருக்மிணி – மாதவி, முருகனின் மகள்
மாதிரிமங்கலம் நடேச அய்யர் – முருகன்
ஸ்ரீபாத சங்கர், கோவிந்தராஜுலு நாயுடு, M லட்சுமணன்,
KS கோபாலகிருஷ்ணன்


டைரக்டர் : மகிந்திரா
தயாரிப்பு : சர்வோத்தம் பதாமி
கதை & திரைக்கதை : NR தேசாய்
வசனம் : AN கல்யாணசுந்தரம்
பாட்டு & இசை : பாபநாசம் சிவம்


=====================================


1931ல பேசும் படம் வந்தப்போ, சில சமூக உணர்வு கொண்ட டைரக்டருங்க, மகாத்மா காந்தியும், அவரைத் சேந்தவங்களும்  நடத்திய சுதந்திர இயக்கத்தை பற்றி படம் எடுக்க ஆரம்பிச்சாங்க.

அந்த சமயத்தில தீண்டாமையை பற்றி எடுக்கப்பட்ட படம் ‘தேச முன்னேற்றம்’. பம்பாயின் சாகர் மூவிடோன் தயாரிச்சது. சர்வோத்தம் பதாமி இந்தப் படத்தை தயாரிச்சார். இவர் பலமொழிகள்ல படங்களை தயாரிச்சுட்டு இருந்தவர். கல்யாணசுந்தரம், டைரக்டர் மகிந்திராவுக்கு,  டைரக்ட் செய்றதில உதவி செஞ்சார்.

ஒரு சின்ன ராஜ்ஜியம். அங்க முருகன் கீழ்ஜாதி வகுப்பில் பிறந்தவன். தீண்டாமையை ஒழிப்பதுக்காக பாடுபட்றான். இவனோடு இவன் எட்டு வயசு மகள் மாதவியும்  சேர்ந்துகிறா. அவங்க கிராமத்தில ஒரு விழா நடக்குது. அந்த விழாவில மாதவியும், கூன் விழுந்த அவள் தோழியும் கோயிலுக்குள்ள போயி, சாமி முன்னால நிக்கிறாங்க. அந்த ஊர் பெரியவங்களுக்கு கோவம் வருது. அந்த ரெண்டு சின்ன பொண்ணுங்களையும் அடிக்கிறாங்க. அதுதான் அதுக்கு தண்டனையாம்.

அந்த குட்டி ராஜ்ஜியத்தின் இளவரசன் ஒரு விபத்தில சிக்குறான். அவனை யார் காப்பாத்துறாங்க, மாதவியா? இல்ல. அவள் அப்பா முருகன். அதுக்கு கைமாறாக இளவரசன் முருகனுக்கு பணம் குடுக்குறான். இதை முருகன் எதிர்பார்க்கல. அந்த பணம், அவன் மகளை படிக்க வைக்க ரொம்ப உதவியாக இருக்குது. அப்டி இப்டீன்னு, மாதவி  MA................... வரைக்கும் படிச்சுர்றா. காலேஜ் படிக்கும்போது, மாதவி ஒரு இளைஞனை லவ்வுறா. இவளை பற்றி தெரியாம, அவள் கீழ்ஜாதி பொண்ணாச்சே, இது தெரியாம, அவனும் இவளை லவ்விட்டான்.

உள்ளூர்ல உள்ள கோயிலுக்குள்ள, கீழ்ஜாதி ஜனங்கள் போயிர்றாங்க போல. அது ப்ரச்னையாகுது. இப்டி ஏ..............கப்பட்ட சிக்கல் வருது. கடே..............................சில என்ன ஆச்சுன்னாக்கா, எல்லாரும் சேர்ந்து கோயிலுக்கு போற மாதிரி நிலை வந்துர்து. இதுக்கப்புறம் என்ன நடக்கும்னுதான் தெரியுமே. மாதவிக்கும், இளவரசனுக்கும் டும் டும் டும்தான்.

இந்த படத்தின் சுவாரஸ்யம் என்னான்னா, ஹீரோ நடேச அய்யர் ப்ராமணர். இதே மாதிரி, குட்டி குட்டி................ ரோல்ல நடிச்ச பொம்பளைங்களும் பிராமணர்கள்தானாம். அப்போ இருந்த பிரபல நடிகைங்க. இவங்களை, ப்ராமணர்களை, வேணுன்னுக்கே தயாரிப்பாளர் நடிக்க வச்சார். வகுப்புவாத சமத்துவத்தை காட்றதுக்காக.

பேபி ருக்மிணி ரொம்ப நல்லா நடிச்சிருந்தாராம். இவர் வளர்ந்த பின்னால, குமாரி ருக்மிணியாக, ஸ்ரீவள்ளி, பக்த நாரதர் போன்ற படங்கள்ல ஹீரோயினா நடிச்சார். இவர் நடிகை லட்சுமியின் அம்மான்னுதான் எல்லாருக்கும் தெரியும்ல?

ஸ்ரீபாத சங்கர்னு ஒரு சமூக சேவகர். நாடகத்திலேயும் நடிச்சிட்டு இருந்தார். இவர் இந்தப் படத்தில துணை நடிகராக நடிச்சார். கொஞ்ச படங்களில நடிச்சார். அப்புறமா AC பிள்ளை கூட சேர்ந்து, 1955ல மங்கையர் திலகம் படத்தை தயாரிச்சார்.

தேச முன்னேற்றம் படத்தில நடேச ஐயர் கொஞ்ச பாட்டுகளை பாடினார். மகாத்மா காந்திக்கு பிடிச்ச மாத்ரி, தேசப்பற்று பாட்டுக்கள் இந்தப் படத்தில இருந்துச்சு. “ஜெய ஜெய வந்தே மாதரம்”னு இந்தப் படத்தில கடேசி பாட்டாம். இந்தப் பாட்டு அப்போ பிரபலமாச்சு.



இந்தப் படத்தின் சில பாட்டுக்கள் :
உள்ளது போதுமென்ற சாந்தம் வேண்டும் – நடேச அய்யர்
இனிமேல் நாமும் ஒன்றாய் வாழுவோமே

சினிமா விமர்சகர்களும், பத்திரிகைகாரங்களும் இந்தப் படத்தை பற்றி நல்ல ரிப்போர்ட் கொடுத்தாங்க. நல்லா ஓடின படம். வழக்கம்போல, அந்த கால கட்டத்தில காணாம போன மாதிரி, இந்தப் படத்தின் காப்பியும் இல்லியாம்.

இந்தப் ப்படத்தின் கரு, நாட்டுப்பற்று பாட்டுக்கள், ருக்மிணி, நடேச அய்யர் நடிப்பு இவை தான் இந்தப் படம் தேச முன்னேற்றம்.


- இந்து

Heezulia  மீண்டும் சந்திப்போம் 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 15 Empty Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by SK Thu Mar 22, 2018 9:54 am

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 15 3838410834 பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 15 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 15 Empty Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia Mon Mar 26, 2018 12:16 pm

26.03.2018 

29. பழைய திரைப்படங்கள்

தருமபுரி ரகசியம் 1938

லீலா, பிரமிளா, ரத்னாம்பாள், நாட் அண்ணாஜிராவ், MD பார்த்தசாரதி, VS மணி, ராஜாமணி, நாராயண அய்யங்கார்.

இந்த வருஷத்தில 37 படங்கள் தயாரிக்கப்பட்டன. புராணம், நாட்டுப்புறம், காமெடி, சமூகம் போல படங்கள். திருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த அரசியலை பற்றி இந்த படம் எடுக்கப்பட்டுச்சு. அதுதான் ராஜதுரோகி அல்லது தர்மபுரி ரகசியம். இங்க்ளிஷ்ல இந்த படத்துக்கு ‘Traitor’ னு பேர் வச்சாங்க.

தமிழ்நாடு டாக்கீஸ் இந்தப் படத்தை தயாரிச்சுது.
தயாரிப்பாளரும், டைரக்டருமான S சௌந்தரராஜன் தயாரிச்சார்.

சர் CP ராமசாமி அய்யர்னு ஒருத்தர். இவர் திருவாங்கூர் சமஸ்தானத்தில திவானாக இருந்த காலகட்டத்ல, அவருடைய வாழ்க்கைல நடந்தது பற்றி இந்த படம் எடுக்கப்பட்டது. இவரது தவறான போக்கு, அவருக்கு கெட்ட பேர் வாங்கி குடுத்துச்சு.
அவரோடு முழு பேரு, சர் சேத்துப்பேட் பட்டாபிராம ராமசாமி அய்யர். இந்தியாவின் புத்திசாலிகளில் அவரும் ஒருத்தர்.

சர் CPனு சொன்னாதான் எல்லாருக்கும் தெரியுமாம். பல துறைகளை பற்றியும் தெரிஞ்சவர். நல்.................ல வக்கீல். சிறந்த சொற்பொழிவாளர், எழுத்தாளர், சிறந்த அரசியல்வாதி, எதையும் சமாளிக்கிற யுக்தி தெரிஞ்சவர். இம்புட்டு மட்டுமில்ல. இவருக்குன்னு தனித்தன்மை இருந்துச்சாம்.

இவர் காலத்தில் இருந்த நேரு, காந்தி போல பெரியவங்ககூடல்லாம் பழகியவர். அப்புறமா, இங்க்ளிஷ்காரங்க கூட கூட்டு சேர்ந்துட்டார். இந்தியாவின் ராஜாக்கள், மகாராஜாக்களுக்கு ஆலோசகராய் இருந்தவர். உயர்ந்த பதவிகள்ல இருந்து, அப்டீ இப்டீன்னுட்டு, திருவாங்கூர் சமஸ்தானத்து திவான் ஆயிட்டார். பேருக்குத்தான் இவர் திவான். ஆனா அந்த சமஸ்தானத்ல, இவர்தான் ராஜாவாட்டம் இருந்தார். இவருடைய கட்டளையே, இவரோட சாஸனம்.

இவரோட திவான் என்கிற ஆட்சில, நாட்டின் மத்த பகுதிகள்லயும், தொழில், சக்தி, கல்வி போலவற்றில், முன்னேற்றம் அடஞ்சுது. ஊழல் செய்யவும் வழி வகுத்துச்சு. திவான் செஞ்ச நல்லது, கெட்டது எல்லாத்தையும், எல்லாரும் பாத்துட்டுதான் இருந்தாங்க.

இதைத்தான், சௌந்தரராஜன் ராஜ துரோகி என்ற தர்மபுரி ரகசியம் என்ற படமாக எடுத்தார்.

ஒல்..............லியா, உயரமா இருந்த நாட் அண்ணாஜிராவ், திவானாக நடிச்சார். அவரோட தோற்றம், மேக்கப் இதெல்லாம், அவர் யாரைபோல நடிக்கிறார்னு நல்லாவே தெரிஞ்சுது. லீலா அழகா இருந்தாங்களாம். இவங்க ஒரு முக்கியமான ரோல்ல நடிச்சாங்க.

இந்தப் படத்தை பற்றி செய்யப்பட்ட விளம்பரம், ஜனங்களுக்கு படத்தை பார்க்கணும்ங்கற ஆசையை தூண்டுச்சாம். துண்டு சீட்டு விளம்பரத்தில, இங்க்லீஷ்ல இந்தப் படத்தின் பேரை ‘Traitor’ னு போட்டிருந்துச்சாம். இந்த துண்டு சீட்டு விளம்பரங்களை கன்னியாகுமரி, திருநெல்வேலி போன்ற பல இடங்கள்ல ஓடுற பஸ்ல இருந்து வீசினாங்களாம். நாகர்கோயில், அப்புறம் உள்நாட்டில கூட இந்த விளம்பரங்களை ரகஸ்ஸியமாக கொண்டு போய் கொடுத்தாங்களாம். அந்த நாட்டு திவான் பற்றிய நெஜ............. கதையாச்சே. அதனாலதான் அந்த ரகசிய விநியோகம்.

இந்தப் படம், வள்ளியூர்ல இருந்த டெண்ட்டு கொட்டாய்ல ரிலீஸ் ஆச்சாம். இந்த கொட்டாயி, British Indiaகுள்ள இருந்துச்சு. திருவாங்கூர் மகாராஜா இருந்த எல்லையிலிருந்து, தள்.................ளி இருந்துச்சாம். இந்தப் படத்தை பற்றி CP அய்யர் எப்படியோ கேள்விப்பட்டுட்டார். சரி நாமளும்தான் படத்தை பாத்துட்டு வரலாமேன்னு, மாறுவேஷம் போட்டுக்கிட்டு, வள்ளியூருக்கு பொறப்பட்டு போய்ட்டார்.

தில்லானா மோகனாம்பாள் பத்மினியின் ஆட்டத்தை பார்க்க, “நாமும் அவ ஆட்டத்தை பாக்”னு பயந்து பயந்து சொல்லிட்டு, பாலையா ஒழிஞ்சு ஒழிஞ்சு போய் பார்த்த ஞாபகம் வரல?

CP படத்தை பாத்துட்டு வந்து............................., “அட, என் வாழ்க்கையை பத்தீல படமா எடுத்திருக்காங்க. இதுக்கு மேல இந்த படத்தை ஓட விடக்கூடாது”னு நெனச்சு, திருவாங்கூர்ல அந்த படத்தை போடக்கூடாதுன்னு தடை போட்டுட்டார். இப்டி செஞ்சவுடனே, படத்தை பாக்காத திருவாங்கூர் ஜனங்கள் என்ன செஞ்சாங்க? இங்க படத்துக்கு தடை போட்டாங்கன்னா, படத்தில என்னவோ இருக்கு..............., நாம எப்படியாவது படத்தை பாத்தே ஆகணும்னு ஆர்வம் வந்துருச்சு போல. சும்மா இருந்தாங்களா? வள்ளியூருக்கே போய்ட்டாங்க. டெண்ட்டு கொட்டாயியா இருந்தா கூட பரவாயில்லேன்னு, கூட்..................டம் கூட்டமா போய் படத்தை பாத்துட்டு வந்துட்டாங்க. அதனால அந்தப் படம் ஏ.....................ழு வாரம் ஓடுச்சாம்.

திருநெல்வேலி போன்ற இடங்களில வெற்றிகரமாக ஓடின படம் தர்மபுரி ரகசியம். சில இடங்களில 15 வாரம் கூட ஓடுச்சு. வழக்கம்போல படத்தின் பிரிண்ட் இல்ல.

- இந்து

Heezulia
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 15 Empty Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 26, 2018 12:29 pm

முழு கதையையும் திவான் அவர்களே வந்து சொல்லியிருந்தாலும் இப்படி சொல்லி இருக்க முடியாது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 15 Empty Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia Mon Mar 26, 2018 12:45 pm

26.03.2018 

நன்றி முத்து சார். என்னவோ என்னால முடிஞ்சுது. இப்டி, வெளாவா............ரியா, தெளிவா எழுதினாத்தானே படிக்க நல்லா இருக்கும். சுவாரஸ்யமா இருக்கோ இல்லியோ, படிச்சா புரியுற மாறி இருக்கணும்ல.


Heezulia
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 15 Empty Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia Wed Mar 28, 2018 12:19 am

28.03.2018

12. வித்தியாசமான படம்

தாலி பாக்கியம் 1966

வயசான ஒருத்தர். இவருக்கு ரெண்டாவது கல்யாணம் செஞ்சுக்கணும்னு ஆச வந்துச்சு. பக்கத்து வீட்ல ஒரு இளைஞன். அவன தொணக்கி கூட்டிகிட்டு, பொண்ணு பார்க்க போறார், அந்த வயசானவர். பொண்ணு பார்க்க போன இடத்ல ஒரு தப்பு நடந்துருச்சு. அந்த பொண்ணு, இளைஞனின் அழகை பார்த்து கெறங்கிட்டா. அவன்தான் மாப்ளேன்னு நெனச்சுட்டா. கல்யாணத்துக்கு சம்மதமும் சொல்லிர்றா. சந்தோ................ஷ கற்பனை கடல்ல தொபுக்கடீ.......................ர்னு விழுந்துட்டா. எப்படா......................... கல்யாண நாள் வரும்..........................னு ஏங்கிட்டு இருக்கா.

இன்னொரு முக்கியமா.....................ன விஷயத்தை சொல்ல மறந்துட்டேனே. பெரியவருக்கு ஒரு பொண்ணு இருக்கா. அந்தப் பொண்ணைத்தான், அந்த இளைஞன் டாவடிச்சுட்டு இருந்தான்.  

கல்யாண ஏற்பாடெல்லாம் தட்.................டபுடலா நடக்குது.

கல்யாண மண்டபம்.

பெரியவர் மாப்ள கோலத்தில மணவறைல உக்காந்திருக்கார்.

“முகூர்த்த நேரமாச்சு, பொண்ண கூட்டிட்டு வாங்கோ”

பொண்ணு வர்றா. மாப்ள பக்கத்ல உக்கார்றா. தாலி கட்ற நேரம். மாப்ள தாலி கட்ட போ.........................றார். அப்பதான் மாப்ளய.................. பொண்ணு........................  பாக்குறா. பாத்துட்டா.......................... அதிரிச்சியோ அதிர்ச்சி. தெகச்சு போய் உக்காந்திருக்கா.

“அட நம்மள பொண்ணு பாக்க வந்தது இந்த கிழமா? அந்த இளைஞன் இல்லியா?”ன்னு திகைக்கிறா. அந்த சமயத்தில என்........................ன செய்ய முடியும். சந்தர்ப்ப சூழ்நிலை அப்டியாயிருச்சு. தாலியை வாங்கிகிட்டா. கையில இல்ல கழுத்லதான். ஆனா அந்த இளைஞன் தனக்கு தாலி கட்றதாக நெனச்சுகிட்டா.

இருபதாம் நூற்றாண்டு படமா இருந்தா தாலிய கையில வாங்கியிருப்பா. அது மட்டுமா, மாலையை கழட்டி வீசிட்டு, எந்திரிச்சு போயிருப்பா.

கல்யாண பொண்ணு தன் மனசுல, ஒரு வீடு கட்டி, அதுவும் காங்க்ரீட் வீடு, அதுல அந்த இளைஞனை குடி வச்சுட்டா, வாடகை இல்லாமலே. அதனால அவனை மறக்க முடியாம தவிக்கிறா. ஊருக்காக தாலி, ஆனா மனசுல இளைஞன்.

ஒரு நாள் அந்த இளைஞன், பெரியவரின் வீட்டுக்கு வர்றான். பக்கத்து வீட்டுக்காரராச்சே. பாத்துட்டு போலாமே..................ன்னு வந்தான். இந்தப் பாவி பொம்பள என்னானா, அதான், அந்த பெரியவரின் பொண்டாட்டி, தன்னுடைய ஆசையை அந்த இளைஞன்ட்ட சொல்லிபுட்டா. “இன்னாங்கடா இது, விபரீதமான ஆசை”ன்னு அதிர்ச்சியாக, “என்னங்க இது, இதெல்லாம் தப்புங்க. நீங்க இன்னொருத்தரின் மனைவி. உங்க மனசை மாத்திகோங்க”ன்னு எவ்வளவோ............................. புத்தி சொல்லிப் பார்க்கிறான். ஊஹும், கேக்கணுமே. அவன் மேல கோபம்தான் வந்துச்சு.

ஒழுங்காத்தானே போயிட்டிருக்கு. கதையில சுவாரஸ்யம், திருப்பம் எதுவுமில்லியா?

ஏன் இல்ல. இதோ, வந்துட்டானே ஒரு வில்...............................லன். அவங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்ததை ஒழிஞ்சிருந்து கேட்டுட்டா...................ன். விடுவானா? தன் வில்லத்தனத்தை செய்ய ஆரம்பிச்சுட்டான்.  

என்ன செஞ்சான்? சொல்லு சொல்லு.

இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, இளைஞனின் குடும்பத்துக்கும், பெரியவரின் குடும்பத்துக்கும், சண்டைய மூ..............ட்டி விட்டுட்டான். இது மட்டுமா? பெரியவரின் மனைவியை, தான் சொல்றபடி செய்யச்சொல்லி மிரட்றான். அவளும் ஒத்துகிட்டா. இளைஞன் மேல ஏற்கனவே கோவமா இருந்தாளா? பெரியவரின் குடும்பத்துக்கும், இளைஞனின் குடும்பத்துக்குமான பிரச்னைகளை அதிகமாக்கிட்டா. பின்ன எப்டி பெரியவரின் பொண்ணும், இளைஞனும் கண்ணாலம் கட்டிக்க முடியும்?

MGR சவால் விட்றார், பெரியவரின் மகளை கல்யாணம் செய்து காட்டுவதாக.

இதுல கோபமடைந்த பெரியவர், ஒரு திட்டம் போட்றார். தன் மனைவியை வச்சு, தன் மகள் கழுத்தில் தாலி கட்ட வைக்கிறார். இளைஞன்தான் தன் மகள் கழுத்தில திருட்டுத் தாலி கட்டிவிட்டதாக பஞ்சாயத்துல சொல்றார். தன் மகளையும் மிரட்டி, அப்படி சொல்ல வைக்கிறார். அதனால் பஞ்சாயத்தார் இளைஞனை ஊரை விட்டு தள்ளி வச்சுட்டாங்க. 

அதுக்கப்புறம் என்னவெல்லாமோ நடந்து, இளைஞன் மேல தப்பில்லேன்னு தெரிஞ்சு போச்சு. பெரியவரின் மனைவியின் கெட்ட எண்ணமும் தெரிய வந்து, அவள் தற்கொலை பண்ணிகிறா. அப்புறம், பெரியவரின் பொண்ணோட, இளைஞன் கல்யாணம் நடக்குது. சுபம்.  

இதுதாங்க இந்தப் படத்தின் கதை.


பெரியவர் : SV சுப்பையா ; மகள் : சரோஜாதேவி ;
இளைஞன் : MGR ; பெரியவரின் மனைவி : MN ராஜம் ; வில்லன் : நம்பியார்

V நாகையா, மனோரமா, நாகேஷ் இவங்களும் நடிச்சிருந்தாங்க.
 
மூலக்கதை – பூவாளூர் சுந்தரராமன்
திரைக்கதை, வசனம் – ஆரூர்தாஸ்
பாட்டுக்கள் – வாலி
இசை – KV மகாதேவன்
டைரக் ஷன் – KB நாகபூஷணம் [
நடிகை கண்ணாம்பாவின் கணவர்]


இந்தப் படத்தை மொதல்ல திருமுகம்தான் டைரக்ட் செய்றதாக இருந்துச்சாம். ஆனா நாகபூஷணம், தன்னோட சொந்தப் படம்ங்கறதால, தானே தயாரிப்பதாக சொல்லிட்டார்.

அசோக்குமார் படத்தில, கண்ணாம்பா பாகவதருடன் நடிச்சார். அந்த படக்கதைகூட இந்தப் படம் ‘தாலி பாக்கியம்’ படத்தை போன்ற கதை. அதை வச்சுதான் இந்தப் படத்தை எடுத்தாங்களாம்.

இந்த படத்தின் ஷூட்டிங் கர்நாடகாவில நடந்துச்சு. நடிகைகள், நடிகர்கள், நூத்துக்கணக்கா.............................ன தொழிலாளர்கள் ஷூட்டிங்காக போயிருந்தாங்க. அன்னிக்கி ஷூட்டிங் முடிஞ்சுது. எல்லாருக்கும் சம்பளம் கொடுக்கணும். தயாரிப்பாளர்தானே இதுக்கு பொறுப்பு. ஆனா அங்க பணத்தை காணோம். மொத்..............த படப்பிடிப்புக்கான பணம் காணாம போயிருச்சு. யாரோ திருடிட்டாங்க. என்ன செய்றதுன்னு தெரியாம நாகபூஷணம் திணறினார். எல்லா.................ருக்கும் சம்பளம் கொடுக்கணுமே.

இப்டீ outdoorக்கு வந்து மாட்டிகிட்டோமே, என்ன செய்றதுன்னு தயாரிப்பாளர் கவலைப்பட்டார். பணத்தை காணாம போன சமாச்சாரம், எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு. யார் யார்ட்டல்லாமோ கேட்டு பாத்தாச்சு. பணம் கெடச்...........ச பாடில்ல. காணாம போன பணம் காணாம போனதுதான்.

இப்ப என்ன செய்றது? படத்தை கேன்ஸல் செஞ்சுட்டு போயிர்றதா, இல்ல படப்பிடிப்பை தொடர்றதான்னு தெரியாம முழிச்சார் தயாரிப்பாளர். கேன்ஸல் பண்ணிட்டு போறதா இருந்தா, எல்லாருக்கும் சம்பளம் செட்டில் பண்ணனுமே. அதுக்கு பணம் இல்லியே. நடிகைகள், நடிகர்கள், தொழிலாளர்கள் எல்லாரும் இந்த விஷயத்தை MGR காதுல போட்டு வச்சாங்க.

தயாரிப்பாளரும், அவரை சேர்ந்தவங்களும் இடிஞ்சு போய் உக்காந்திருந்தாங்க. MGR வந்தார். எல்லாரையும் கவலைப்படாம இருக்கசொன்னார். “ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்துங்க. பணத்தை பற்றி எந்த கவலையும் வேண்டாம். எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்” னு எல்லாருக்கும் ஆறுதல் சொன்னார்.

தன்னோட சத்யா ஸ்டூடியோவுக்கு ஃபோன் செஞ்சார், MGR. உடனே அஞ்சு லட்சம் கொண்டு வரசொன்னார். ஷூட்டிங் நடக்கிற இடத்துக்கு பணம் வந்து சேர்ந்துச்சு. எல்லாருக்கும் சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டுச்சு. திட்டமிட்டபடி ஷூட்டிங்கும் நல்லபடியா நடந்து முடிஞ்சுது. ப்ராப்ளம் சால்வ்ட். அம்புட்டுதேன். தயாரிப்பாளர் MGRக்கு ஸ்பெஷலா நன்றி சொன்னார்.


- ரமணி
- Oneindia Tamil 


Heezulia மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 15 Empty Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by SK Wed Mar 28, 2018 9:46 am

ஷூட்டிங் நடக்கிற இடத்துக்கு பணம் வந்து சேர்ந்துச்சு. எல்லாருக்கும் சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டுச்சு. திட்டமிட்டபடி ஷூட்டிங்கும் நல்லபடியா நடந்து முடிஞ்சுது. ப்ராப்ளம் சால்வ்ட். அம்புட்டுதேன். தயாரிப்பாளர் MGRக்கு ஸ்பெஷலா நன்றி சொன்னார்.

அவர் பணத்தை திருப்பி கொடுத்தாரா இல்லையா அதை சொல்லவே இல்ல


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 15 Empty Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia Wed Mar 28, 2018 11:13 am

28.03.2018

என்ன கேள்வி இது செந்தில்? பணத்தை திருப்பி கொடுக்கிற பேச்சு எப்படி வரும்? வள்ளல் கொடுத்த பணம் கொடை. அதை கொடுக்க வேண்டிய அவசியம் இல்ல. 

கண்ணாம்பாவும், அவர் கணவர் நாகபூஷணமும் ஒரு தடவை, பணமில்லாமல் கஷ்டப்பட்டுட்டு இருந்தாங்க. கண்ணாம்பாவின் கடைசி காலத்தில், அவங்க வசிச்சிட்டு இருந்த வீட்டை வித்துறலாம்னு நெனச்சாங்களாம். காத்து வா...............க்குல இந்த செய்தி MGR காதுக்குள்ள  போய் விழுந்துச்சு. அவரே அந்த வீட்டை வாங்கிட்டார்.  அவருக்காக இல்ல. கண்ணாம்பாவுக்காக. கண்ணாம்பா இருக்கிற வரைக்கும்  அந்த வீட்ல இருந்துக்க சொல்லிட்டார். இது எவ்வளவு பெரிய விஷயம்? 

தாலி பாக்கியம் படத்தை பற்றி எழுதும்போதே, இதை எழுதலாம்னுதான்  நெனச்சேன். படத்துக்கு சம்பந்தப்படா......................த சமாச்சாரமா  இருக்கேன்னு விட்டுட்டேன். அதான். 

சர்ர்ர்ரியான கேள்வி கேட்டு, இதை எழுத வச்சுட்டீங்க. நன்றி செந்தில் 

Heezulia 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 15 Empty Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 15 of 17 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum