ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யானைகளின் வருகை 91: புலிகள் பின்புலத்தில் கிலி!

2 posters

Go down

யானைகளின் வருகை 91: புலிகள் பின்புலத்தில் கிலி! Empty யானைகளின் வருகை 91: புலிகள் பின்புலத்தில் கிலி!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 02, 2017 7:42 am

யானைகளின் வருகை 91: புலிகள் பின்புலத்தில் கிலி! 2DUY3iGqTPCCIhOKHpBz+91y2jpg
கூடலூர் மக்கள் போராட்டம்.

ஆனால் அதை வனத்துறையோ, அரசோ செய்வதில் முனைப்பு காட்டவில்லை. ஏனென்றால் பெரும் பணக்காரர்களை அரசாங்கத்தின் உயர்பீடத்தில் உள்ளவர்களே காப்பாற்றுகிறார்கள் என்றால், இங்குள்ள வனக் கொள்ளையர்கள் எல்லோருமே ஏதாவது ஒரு கட்சி பின்புலத்திலேயே உள்ளார்கள். அவர்களை பகைத்துக் கொள்ள இவர்களால் முடியாது.

இதனால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர், வாயில்லா பிராணிகளான வனவிலங்குகளும்தான் அவலத்திற்குள்ளாகி அழிந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில்தான் புலிகள் காப்பகம் என்ற பெயரால் முதுமலையைச் சுற்றியுள்ள மசினக்குடி உள்ளிட்ட பூர்வீக கிராம மக்களை 2008-ம் ஆண்டு முதல் தொந்தரவுபடுத்த ஆரம்பித்தனர் வனத்துறை அதிகாரிகள்.

ஆங்கிலேயே ஆட்சியின் வழிமுறைகள் சுதந்திர இந்தியாவிலும் தொடரப்பட்ட காலத்திலேயே. ஆதிவாசிகள், மலைமக்களின் கண்ணியம் கேள்விக்குறியானது. தொடர்ந்து காப்புக்காடுகள் (reserve forest) என்ற வகைப்பாட்டில் பழங்குடி நிலங்களே வனத்துறையினரால் கையகப்படுத்தப்பட்டது. 1961 முதல் 1981 வரை 4.1 கோடி ஹெக்டேர் என்றிருந்த வனத்துறையின் காப்புக்காடுகள் பின்னர் 6.7 கோடி ஹெக்டேர் ஆக விரிவாக்கப்பட்டது.

நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

யானைகளின் வருகை 91: புலிகள் பின்புலத்தில் கிலி! Empty Re: யானைகளின் வருகை 91: புலிகள் பின்புலத்தில் கிலி!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 02, 2017 7:43 am

இந்திய வன சர்வே கருத்துப்படி 4.2 கோடி நிலம் வனம் சாரா நடவடிக்கைக்கு வழங்கப்பட்டது. குறிப்பாக 1.6 கோடி ஹெக்டேர் நிலம் சாலைகள் மற்றும் தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் எதிராக பாதிக்கப்பட்ட மக்கள் போராட, போராட 1988ல் தேசிய வனக் கொள்கை அறிவிக்கப்பட்டது.

முதுமலை வனப்பகுதியில் தென் மற்றும் கிழக்குப்பகுதி, நீலகிரி வடக்கு, கூடலூர் பகுதி (சிங்காரா, சீகூர்) நீலகிரி தென்பகுதியான தெங்குமரஹாடா பகுதி என 367 சதுர கிலோமீட்டர் பகுதி வனத் தாங்குதள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே முதுமலை சரணாலயப்பகுதி 321 சதுர கிலோமீட்டர் ஆகும். இந்த தாங்குதளப்பகுதியுடன் சேர்த்து 688 சதுர கிலோமீட்டர் வனக் காப்பாளரின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.

காடுகளை வெட்டி வருவாயாக மாற்ற வனத்துறையையும் ஏற்படுத்தினர். இந்த வனத்துறை மக்களுக்கானதாக செயல்படுவது போலவே வெளிப்பார்வைக்கு தெரிந்தாலும், உள்ளூர அது ஆட்சியாளர்களுக்கு ஏதுவாகவே செயல்படுகிறது என்பதை ஊன்றிப் பார்த்தாலே தெரியும்.

நாம் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பவர்கள்தானே ஆட்சியாளர்கள் என்ற வாதத்தின்படி ஜனங்களுக்கு ஏற்பவே அவர்கள் நடந்து கொள்கிறார்கள் என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. அதுவும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஓட்டெடுப்புக்கான நாடகமே அன்றி, ஆட்சியாளர்கள் பெருந்தனக்காரர்களின் கையில் இருந்து கொண்டுதான் தன்னை இயக்குகிறார்கள்; தன்னையும் பெருந்தனக்காரர்கள் ஆக்கிக் கொள்கிறார்கள் என்பதுதான் கடந்த கால யதார்த்த வரலாறாக பதிவாகியிருக்கிறது. எனவே அந்த கண்ணோட்டத்தில் மட்டுமே இதையும் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

யானைகளின் வருகை 91: புலிகள் பின்புலத்தில் கிலி! Empty Re: யானைகளின் வருகை 91: புலிகள் பின்புலத்தில் கிலி!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 02, 2017 7:57 am

யானைகளின் வருகை 91: புலிகள் பின்புலத்தில் கிலி! L55CiWXRS6kgyvbo1Cbx+91y1jpg

கூடலூரில் கொல்லப்பட்ட ஆள்கொல்லிப்புலி.
உதாரணத்திற்கு சரணாலயம் புலிகள் காப்பகமாக மாறிய பின்பு நடந்த சில அவல, அரசியல் சம்பவங்கள்:

நீலகிரி மாவட்ட பந்தலூர் வட்டம், பாட்டவயல் சோளக்கடவு பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில் 2014 செப்டம்பர் 14-ம் தேதி காலை 11.30 மணிக்கு தேயிலை பறித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீர் என்று ஒரு புலி வந்து 34 வயது மகாலட்சுமி என்ற பெண்ணை கடித்துக்குதறி கொன்றது. (இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்). இதனால் அதிர்ச்சியில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள் மகாலட்சுமியின் சடலத்தை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்தப் புலி அதற்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் கேரள எல்லையில் ஆலப்புழா அருகே முகங்குன்னு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாஸ்கரன் என்பவரை (வயது 60) அடித்துக் கொன்றது. மேலும் அதே புலி ரதீஷ் (வயது 28) என்பவரையும் தாக்கி காயப்படுத்தியதால் அவர் ஆஸ்பத்திரியில் குற்றுயிராய் சேர்க்கப்பட்டார். இதற்கான சாலை மறியல் போராட்டம்உதாரணத்திற்கு சரணாலயம் புலிகள் காப்பகமாக மாறிய பின்பு நடந்த சில அவல, அரசியல் சம்பவங்கள்:

நீலகிரி மாவட்ட பந்தலூர் வட்டம், பாட்டவயல் சோளக்கடவு பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில் 2014 செப்டம்பர் 14-ம் தேதி காலை 11.30 மணிக்கு தேயிலை பறித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீர் என்று ஒரு புலி வந்து 34 வயது மகாலட்சுமி என்ற பெண்ணை கடித்துக்குதறி கொன்றது. (இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்). இதனால் அதிர்ச்சியில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள் மகாலட்சுமியின் சடலத்தை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்தப் புலி அதற்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் கேரள எல்லையில் ஆலப்புழா அருகே முகங்குன்னு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாஸ்கரன் என்பவரை (வயது 60) அடித்துக் கொன்றது. மேலும் அதே புலி ரதீஷ் (வயது 28) என்பவரையும் தாக்கி காயப்படுத்தியதால் அவர் ஆஸ்பத்திரியில் குற்றுயிராய் சேர்க்கப்பட்டார். இதற்கான சாலை மறியல் போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

யானைகளின் வருகை 91: புலிகள் பின்புலத்தில் கிலி! Empty Re: யானைகளின் வருகை 91: புலிகள் பின்புலத்தில் கிலி!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 02, 2017 7:59 am

ஆட்சியர் சங்கர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறந்த மகாலட்சுமி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம், குழந்தைகளுக்கு அரசு வேலை, குடியிருப்பு வசதிகள் செய்து கொடுப்பதோடு, ஆட்கொல்லிப் புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் மற்றும் வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் அங்கு முன் வைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் ரூ.3 லட்சத்தை மட்டும் மகாலட்சுமி குடும்பத்துக்கு கொடுத்துவிட்டு, மீதி ரூ.7 லட்சம் கேட்டு அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும், இதர கோரிக்கைகளும் நிறைவேற்றித்தருவதாக உறுதியளித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள முக்கட்டி (நிலாக்கோட்டை) கிராமத்தில் இருந்த வனத்துறை அலுவலகத்தையும், ஜீப் மூன்றையும் தீ வைத்துக் கொளுத்தியதோடு, வனத்துறை அலுவலகத்தில் இருந்த சில கோப்புகளையும் சூறையாடியது ஒரு கும்பல். மேலும் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த 3 பெண் போலீஸாரையும் கடுமையாகத் தாக்கி கலவரத்தில் ஈடுபட்டனர்.

மேலும் நீலகிரி வனக்கோட்ட அலுவலர் பத்ரசாமியின் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து உள்ளேயிருந்த ரூ,40 ஆயிரம் மதிப்பிலான மடிக்கணினி, செல்போன், வாக்கி டாக்கி, ஒயர்லெஸ் கருவிகள், அதீத ஒளிபாய்ச்சும் டார்ச் லைட்டுகள். ஜி.பி.எஸ்.கருவி எடுத்ததோடு, வாகனத்தில் இருந்த ரூ.50 ஆயிரத்தையும் எடுத்துக்கொண்டனர். இந்த சம்பவத்திற்கும் சாலைமறியலில் ஈடுபட்டவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதுதான் நிஜம். வனத்துறை அதிகாரிகளும் கூட இதை ஒப்புக் கொள்கிறார்கள். இந்த வன்முறையை வனக் கொள்ளையர்கள்தான் தன் குண்டர் படையை விட்டுச் செய்துள்ளனர் என்பதையும் அவர்கள் ஏற்கின்றனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

யானைகளின் வருகை 91: புலிகள் பின்புலத்தில் கிலி! Empty Re: யானைகளின் வருகை 91: புலிகள் பின்புலத்தில் கிலி!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 02, 2017 8:00 am

யானைகளின் வருகை 91: புலிகள் பின்புலத்தில் கிலி! QNyLdHVBQaeTPq7JK6E6+91y3jpg

முதுமலை வனத்துறை அலுவலகம்.


காட்டில் உள்ள முக்கியமான காட்டு மரங்கள் பல ஆண்டுகளாகவே வெட்டிக் கடத்தப்பட்டு வருகிறது. அந்த காட்டுக் கொள்ளையர்களுக்கும், கூடலூர் அரசியல் புள்ளிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு, இது தொடர்பாக பல புகார்கள் அளிக்கப்பட்டு, பிதிர்காடு ரேஞ்சர் சோமசுந்தரம் மற்றும் பல வன ஊழியர்கள் இவர்களால் பல்வேறு துன்பம் அனுபவித்தும் உள்ளார்கள்.

அப்படியிருக்க, அவர்களைக் கைது செய்து விசாரிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 35 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர் போலீஸார். இதைக் கண்டித்து 24.12.2015 அன்று பந்தலூரில் முழு கடையடைப்பு, பந்த் போன்றவை அனுஷ்டிக்கப்பட்டது. கண்டனக் கூட்டங்களும் நடத்தப்பட்டன.

மகாலட்சுமி புலி தாக்கி இறந்த பின்பு ராக்வுட் எஸ்டேட்டில் புவனேஸ்வரன் என்பவரும் இறந்து விட்டார் (17.03.2015). சடலம் அவர் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டபோது பெரிய அதிர்ச்சி. அந்த உடலில் எந்த இடத்திலும் புலி அடித்ததற்கான காயங்களே இல்லை. அதில் மக்கள் கொந்தளிக்க, புலி அடித்த இடம், மற்றும் புவனேஷ்வரனின் உடல் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. கூரான கம்பியில் தலையிலும், கழுத்திலும் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அதில் தெரிய வந்தது. இது கொலையாக இருக்கும், முக்கட்டி பிதிர்காடு பகுதியில் கலவரத்தில் ஈடுபட்ட மாஃபியா கும்பல் வேலையாக கூட இருக்கலாம் என்ற சந்தேகமும் கிளம்பியது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

யானைகளின் வருகை 91: புலிகள் பின்புலத்தில் கிலி! Empty Re: யானைகளின் வருகை 91: புலிகள் பின்புலத்தில் கிலி!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 02, 2017 8:03 am

ஊட்டி அருகே உள்ள சோலாடா என்ற கிராமத்தில் கவிதா என்பவரையும் 4.1.2014 புலி தாக்கிக் கொன்றது. மாலை மளிகைக் கடைக்கு பொருட்களை வாங்க கடைக்குச் சென்றார். அப்போது அவர் மீது பாய்ந்த புலி அடித்து இழுத்து சென்று கவிதாவை முழுமையாகவே தின்று தீர்த்தது. தொட்டபெட்டா ஊராட்சியைச் சேர்ந்த அட்ட பெட்டுவைச் சேர்ந்த சின்னப்பன் என்பவரை புலி தாக்கிக் கொன்றது. ஊட்டி அருகே உள்ள கம்மன் ஹட்டி கச்சேரி பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரையும் புலி அடித்துக் கொன்றது. இவர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது அவரின் கணவரின் கண்ணெதிரிலேயே புலி அடித்து இழுத்துச் சென்றது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே முத்துலட்சுமியின் கணவர் பிரகாஷிற்கு பல மாதங்கள் ஆகிவிட்டன.

இதனால் அக்கம் பக்கம் கிராமத்தினர் புலி பீதியில் ஆழ்ந்தனர். வீடுகளை விட்டு பகலில் கூட வெளியே செல்லாமல் முடங்கினர். இப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கும் கூட 47 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆட்கொல்லிப் புலியை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். அதன் உச்சகட்டமாக அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் 140 வீரர்கள் தொடர்ந்து புலி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன்

நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

யானைகளின் வருகை 91: புலிகள் பின்புலத்தில் கிலி! Empty Re: யானைகளின் வருகை 91: புலிகள் பின்புலத்தில் கிலி!

Post by Dr.S.Soundarapandian Sat Dec 02, 2017 9:41 am

சோகம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

யானைகளின் வருகை 91: புலிகள் பின்புலத்தில் கிலி! Empty Re: யானைகளின் வருகை 91: புலிகள் பின்புலத்தில் கிலி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum