ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபேஸ்புக், யூடியூபால் யாருக்கு லாபமோ இல்லையோ சுந்தரி அக்காவுக்கு கொள்ளை லாபம்!

Go down

ஃபேஸ்புக், யூடியூபால் யாருக்கு லாபமோ இல்லையோ சுந்தரி அக்காவுக்கு கொள்ளை லாபம்! Empty ஃபேஸ்புக், யூடியூபால் யாருக்கு லாபமோ இல்லையோ சுந்தரி அக்காவுக்கு கொள்ளை லாபம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 01, 2017 4:08 pm

ஃபேஸ்புக், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களால் யாருக்கு லாபமோ இல்லையோ சுந்தரி அக்காவுக்கு மட்டும் லாபமோ லாபம்! 24 மணி நேரமும் இணையத்திலேயே குடும்பம் நடத்துபவர்களுக்கு சுந்தரி அக்காவைத் தெரியாமலிருக்க முடியாது. ஃபேஸ்புக்கிலும், யூ டியூபிலும் சுந்தரி அக்காவைத் தேடிப்பாருங்கள், அவரது ரசிக சிகாமணிகள் சுந்தரி அக்காவின் சமையல் சேவையைப் பற்றிப் பக்கம், பக்கமாகப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். ஏனெனில், சென்னை போன்ற பெருநகரங்களில் நட்சத்திர உணவகங்களுக்குச் சென்று மதியச் சாப்பாடு சாப்பிட்டால் இன்றைய ஜிஎஸ்டி யுகத்தில் பில்லைப் பார்த்ததும் பிரஸ்ஸர் எகிறி ஹார்ட் அட்டாக் வரக்கூடிய நிலையிலிருக்கும் நம் அனைவருக்குமே மதிய உணவை மீன், கறி, முட்டை, சிக்கன் என சகலவிதமான செளகரியங்களுடன் வெறும் 30, 400 ரூபாய்களுக்குள் முடித்து திருப்தியாக ஏப்பம் விட்டுக் கொள்ள அனுமதிக்கும் சுந்தரி அக்கா மாதிரியானவர்களின் சாப்பாட்டுக்கடை நிச்சயம் தேவகிருபையில்லாமல் வேறென்ன?! விலை குறைவு என்பது மட்டுமல்ல, வரும் வாடிக்கையாளர்கள் முகம் சுளிக்காவண்ணம் தனது கடையில் சுத்தம், சுகாதாரத்தையும் தொடர்ந்து பேணி வருகிறார் சுந்தரி அக்கா. இவரது உணவகத்தின் பெயர் கானாவூர் உணவகம். ஆனால் நெட்டிஸன்களுக்கு ‘சுந்தரி அக்கா கடை’ என்று சொன்னால் தான் சட்டெனப் புரியும். இங்கே அசைவ உணவுகள் மட்டுமல்ல சைவ உணவு வகைகளும் கிடைக்கும். முன்பெல்லாம் மதிய உணவு மட்டும் தான் சமைத்துக் கொடுத்துக் கொண்டு இருந்ததாகவும் தற்போது வெகு தூரத்திலிருந்து வரும் சில வாடிக்கையாளர்களுக்காக இரவுச் சாப்பாடும் தயார் செய்து தருவதாகவும் சுந்தரி அக்கா யூ டியூப் வீடியோ ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
நன்றி
தினமணி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஃபேஸ்புக், யூடியூபால் யாருக்கு லாபமோ இல்லையோ சுந்தரி அக்காவுக்கு கொள்ளை லாபம்! Empty Re: ஃபேஸ்புக், யூடியூபால் யாருக்கு லாபமோ இல்லையோ சுந்தரி அக்காவுக்கு கொள்ளை லாபம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 01, 2017 4:09 pm

சுந்தரி அக்கா கடையில் அப்படி என்ன விசேஷம்?!
மெரினா பீச்சில் சாப்பாட்டுக் கடை போட்டிருக்கும் சுந்தரி அக்கா கடையில் சாப்பிட இப்போதெல்லாம் கூட்டம் கும்முகிறதாம். வாடிக்கையாளர்களில் ஒருவர், தயவு செய்து டோக்கன் முறை இல்லாவிட்டால் சுந்தரி அக்கா கடைக்கென தனி ஆப் மூலமாக முன்னரே ஆர்டர் செய்துகொள்ளும் வசதி என எதையாவது ஏற்பாடு செய்யுங்கள். சுந்தரி அக்கா கடையில் சாப்பிடும் ஆசையுடன் நேரடியாக கடை இருக்கும் இடத்துக்கே வந்தால் இங்கிருக்கும் கூட்டத்தைச் சமாளித்து சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்டு முடிப்பதற்குள் மூச்சு முட்டி உயிர் போகிறது என்று குதூகலமாகத் தனது சாப்பாட்டு அனுபவத்தை விவரிக்கிறார். இப்படி கூட்டம், கூட்டமாக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் அளவுக்கு சுந்தரி அக்கா சமைக்கும் உணவுகளில் அப்படி என்ன விஷேசம் என்று சுந்தரி அக்காவிடமே கேட்டால்;
‘காலையில 3 மணிக்கெல்லாம் காசிமேட்டுக்குப் போய் மீன் வாங்கி வருவேன். என் கடையில மீன் எல்லாம் அன்னன்னைக்கே வாங்கி, அப்பப்போ வெட்டி சமைக்கிறது தான். 3 மணிக்கு எழுந்து மீன், கோழி, கறி, மரக்கறி எல்லாம் வாங்கியாந்து வச்சாத்தான் அதையெல்லாம் பக்குவமா சுத்தப் படுத்தி நறுக்கி சமையலுக்குத் தயார் செஞ்சு சமைச்சு முடிச்சு 1 மணிக்கு டான்னு சாப்பாட்டுக் கடையைத் திறக்க சரியா இருக்கும். என் கடைல எப்பவுமே 1 மணிக்கு சாப்பாடு தயாரா இருக்கும். நைட்டு பத்துமணி வரைக்கும் கடை தான். அப்புறம் 11 மணிவாக்குல கடையை மூடிட்டு தூங்கப் போவேன். மறுநாள் 3 மணிக்கெல்லாம் எந்திருக்கனுமே. எனக்கு தினமும் தூக்கம் வெறும் 4 மணி நேரம் தான். இல்லனா 1 மணிக்கு எந்தக்குறையுமில்லாம எல்லா கஸ்டமர்ங்களுக்கும் சாப்பாடு போட முடியாத போய்டுமே. அதான். இங்க அல்லாமே ஃப்ரெஷ் மீனு, கொஞ்சம் மின்னால கடல்ல எண்ணெய் கொட்டிச்சுன்னாங்களே அப்பக்கூட நான் நாகபட்டிணத்துல இருந்து ஐஸ்பொட்டில மீன் எறக்கி என் கஸ்டமர்ங்களுக்கு சாப்பாடு செஞ்சு போட்டேன். அவங்க அதையெல்லாம் நேர்ல பார்க்கறாங்க இல்ல. நான் என்ன பொய்யா சொல்லப்போறேன். இங்கே சமையலும் கஸ்டமர்ங்க முன்னாடி வச்சுத்தான் நடக்குது. நான் என்னல்லாம் பொடி போடறேன், எப்படியெல்லாம் சமைக்கிறேன்? நான் எப்படியெல்லாம் மீன் சுத்தம் செய்றேன்னு அல்லாத்தையும் அவங்க பார்க்கறாங்க. அது அவங்களுக்கு பிடிச்சிருக்கு சுத்தமா சமைக்கிறாங்க, சாப்பாடு ருசியாவும் கீதுன்னு தான் ஒரு நம்பிக்கைல என் கடைல வந்து சாப்பிட்டுப் போறாங்க. அப்புறம் இப்ப ஃபேஸ்புக் எல்லாம் வந்ததாங்காட்டி என் கடைல சாப்பிட்டுப் போறவங்க அதுல போய் எழுதி வைக்கிறாங்க, அதைப் பார்த்தும் இப்ப நிறைய பேர் இங்க சாப்பிட வர்றாங்க. அதான் நம்ம கடையோட விசேஷம். என்கிறார் சுந்தரி அக்கா!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஃபேஸ்புக், யூடியூபால் யாருக்கு லாபமோ இல்லையோ சுந்தரி அக்காவுக்கு கொள்ளை லாபம்! Empty Re: ஃபேஸ்புக், யூடியூபால் யாருக்கு லாபமோ இல்லையோ சுந்தரி அக்காவுக்கு கொள்ளை லாபம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 01, 2017 4:12 pm

ஃபேஸ்புக், யூடியூபால் யாருக்கு லாபமோ இல்லையோ சுந்தரி அக்காவுக்கு கொள்ளை லாபம்! Aw1cRVVIRqi7Z9F4hLAE+a2993b9f00fc040304ede4cf7a53a641
மீனோ, கறியோ மிஞ்சிப்போனா என்ன செய்வீங்க, வச்சிருந்து மறுநாள் சமைப்பீங்களா? என்றால்;
அய்யே... அதெல்லாம் கூடாது, நம்மள நம்பி சாப்பிட வரவங்கள ஏமாத்தலாமா, அது கூடாது, இன்னைக்கு இவ்ளோ மிஞ்சப் போகுதுன்னு சமைக்கிறவங்களுக்கு முன்னவே தெரிஞ்சுடும்ல, ராத்திர சாப்பிட வர கஸ்டமருங்க கிட்ட, இன்னைக்கு இவ்ளோ மீந்திருக்கு பாதி விலைக்குத் தாரேன் நீங்க எடுத்துக்குங்க.. இதை வச்சிருந்து நாளைக்கு வர கஸ்டமருங்களுக்குத் தர எனக்கு விருப்பமில்லன்னே கேட்டுப் பார்ப்பேன். நிறைய பேர் சாப்பாடு ருசியா இருக்கறதாலயும், விலை குறைவுங்கறதாலயும் இல்லாத ஏழை, பாழைங்க வாங்கிச் சாப்பிட்டுப்பாங்க. வச்சிருந்து மறுநாள் அதையே சமைச்சுப் போட்டா என் கடைக்கு இவ்ளோ கூட்டம் வருமா? அதெல்லாம் நம்பிக்கை! என்கிறார் சுந்தரி அக்கா.
2000 ஆவது ஆண்டில் கணவர் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட கடை வேண்டாம் என ஒதுங்கியவரை மெரினா பீச்சில் சுந்தரி அக்கா கடையின் அருகிலிருந்த ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் தான் ‘அக்கா, மறுபடியும் சாப்பாட்டுக்கடையைப் போடுங்க, நாங்க இருக்கோம் உங்களுக்கு’ என்று ஊக்கப்படுத்தி மீண்டும் பீச்சில் மீன் கடையும், சாப்பாட்டுக்கடையும் போட உதவியிருக்கிறார்கள். அந்த நன்றியை மறவாமல், ஒவ்வொரு ஆண்டும் தன் கணவர் இறந்த தேதியில் அவரது நினைவு நாளன்று அக்கம் பக்கமிருக்கும் ஆட்டோ டிரைவர்கள் அனைவருக்கும் அசைவ உணவு வகைகளைச் சமைத்து இலவசமாகச் சாப்பாடு போட்டு வரும் வழக்கத்தை கடைபிடித்து வருகிறாராம் சுந்தரி அக்கா!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஃபேஸ்புக், யூடியூபால் யாருக்கு லாபமோ இல்லையோ சுந்தரி அக்காவுக்கு கொள்ளை லாபம்! Empty Re: ஃபேஸ்புக், யூடியூபால் யாருக்கு லாபமோ இல்லையோ சுந்தரி அக்காவுக்கு கொள்ளை லாபம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 01, 2017 4:17 pm

சாப்பாட்டுக் கடை வருமானத்தை வைத்தே தனது இரு மகன்களின் ஒருவரை கப்பல் படிப்பும், சமையற்கலையும் படிக்க வைத்தேன் என்கிறார் சுந்தரி அக்கா.
சுந்தரி அக்கா கடையைப் பற்றி இணையத்தில் வாசித்தும், வீடியோ பார்த்தும் அறிந்து கொண்டு அனைத்து தரப்பு மக்களும் வந்து சாப்பிட்டுச் செல்கிறார்கள் இப்போது. இதை, சுந்தரி அக்கா ஸ்டைலில் சொல்வதென்றால், ‘என் கடைல இப்போ A டு X வரைக்கும் ஜனங்க வந்து சாப்பிட்டுப் போயிட்டாங்க Y யும் Z ம் தான் பாக்கி, அப்படியாப்பட்ட மக்களும் வந்து சாப்பிடத்தான் போறாங்க. நம்ம கடை ருசி அப்படி என்கிறார் அந்த வெள்ளந்தி சாப்பாட்டு வியாபாரி.
அவரது நம்பிக்கை பலிக்கட்டும்.
எளியவர்களின் கடின உழைப்பும், முயற்சியும் எப்போதும் வெல்லும் என்பதற்கு சுந்தரி அக்கா ஒரு உதாரணம்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!
நன்றி
தினமணி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஃபேஸ்புக், யூடியூபால் யாருக்கு லாபமோ இல்லையோ சுந்தரி அக்காவுக்கு கொள்ளை லாபம்! Empty Re: ஃபேஸ்புக், யூடியூபால் யாருக்கு லாபமோ இல்லையோ சுந்தரி அக்காவுக்கு கொள்ளை லாபம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum