Latest topics
» சமைப்போம், ருசிப்போம்by ayyasamy ram Today at 14:22
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
4 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
First topic message reminder :
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! -- ௧- ( 1 )
வரலாற்றில் ஓலைச் சுவடிகளின் பங்கு - ௧ ( 1 )
வரலாறு என்பதன் அவசியம் கடந்து போன காலத்தை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்ப்பதற்காக மட்டும் அன்று . வரலாற்றின் தேவை நிகழ்காலத்தின் தேவைக்கேற்ப மாறக்கூடியது . சொல்லப் போனால் வாழ்வின் வளர்ச்சியே நாம் புறப்பட்ட இடத்தையும் இதுவரை கடந்து வந்த பாதையை நினைவு படுத்திக் கொள்வதையும் அதிலிருந்து பாடங்கள் பெறுவதையும் பொறுத்துத்தான் அமைகிறது .வரலாறு எத்தனை ஆழமாகப் பாடங்களை ஒரே ரீதியில் கூறினாலும் அதன் பாடங்களைச் சரிவரப் புரிந்து கொள்ளாதவர்கள் வரலாற்றில் இடம் பெறுவதில்லை.
வரலாற்றுக்கு ஆதாரமான காலத்தை ஆய்வதற்கு அந்தக் காலத்தைய இலக்கியமும், நிகழ்காலத்தில் செய்யப்படும் தொல்பொருள் ஆய்வும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. அகழ்வாய்வில் பெறப்படும் முடிவுகளை அந்தக் காலத்தைய இலக்கியச் செய்திகளோடும், அந்தக் காலத்தைய இலக்கியச் செய்திகளை அகழ்வாய்வில் பெறப்படும் சான்றுகளோடும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் . அப்போதுதான் ஓர் உறுதியான முடிவுக்கு வரஇயலும்.
ஆனால் உலகின் பெரும்பாலான இடங்களில் இதுவரை அகழ்வாய்வில் பெறப்பட்ட சான்றுகள் இலக்கியத்தோடு ஒப்பிடப்பட்டு முடிவுகள் பெறப் படவில்லை .காரணம் அங்கே தொல்லிலக்கியங்கள் அகப்படவில்லை.
எகிப்தில் பிரமிடுகள் வரலாற்றைப் பறை சாற்றிக் கொண்டு கண்ணுக்கேதிரே இன்னும் நிற்கின்றன. காலத்தை வென்ற சான்றுகள்தாம் அவை. ஆனால் ஒரே குறை ஒப்பு நோக்கத் தொல்லிலக்கியங்கள் மட்டும் அங்கே இல்லை .நம் நாட்டிலேயே கூட வட இந்தியாவில் சிந்து வெளியில் மொகஞ்சோதரோ , ஹாரப்பா அகழ்வாய்வில் கிடைத்த முடிவுகள் சான்றுகள் இருக்கின்றன . ஆனால் அந்த ஆய்வை நிலை நிறுத்தும் வகையில் ஒப்புநோக்கத் தக்க தொல்லிலக்கியங்கள் தான் கிடைக்கப் பெறவில்லை .
ஆனால் தமிழ்நாட்டின் நிலையோ நேர்மாறானது. இங்கே தொல்லிலக்கியங்கள் கொட்டிக் கிடக்கின்றன ஒப்பிட்டுப்பார்க்க. தொல்லி லக்கியங்கள் கூறும் சான்றுகளைத் தேடும் தொல்பொருள் ஆய்வுதான் அத்தனை இல்லை. பூம்புகாரின் சிறப்புக்களைக் கூறும் சிலப்பதிகாரம் நம்மிடம் உண்டு; ஆனால் பூம்புகார் இன்னும் ஆழ்கடலில் பத்திரமாகத் தேடுவாரின்றி உறங்கிகொண்டு இருக்கறது . அங்கே எகிப்தில் பிரமிடுகள், சிந்து வெளியில் மொகஞ்சோதரோ , ஹாரப்பா அகழ் வாய்வில் கிடைத்த முடிவுகள், சான்றுகள் இருக்கின்றன .ஆனால் நிலை நிறுத்த இலக்கியங்கள் போன்ற புறச் சான்றுகள்தான் இல்லை .
ஆனால் தமிழ்நாட்டின் வரலாற்றை நிலை நிறுத்த எந்த அகழ்வாய்வும் தேவைப்படாத அளவில் நம்மிடம் மிக முக்கிய ஆதாரங்கள் உள்ளன. அதுவே வழி வழி வந்து இன்றும் நிலைத்திருக்கும் பழந்தமிழர் மரபு ஆகும் . தொல்லிலக்கியங்களில் பேசப்படும் அதே மொழியை இன்றும் வழி வழியாகப் பேசிவரும் பழங்குடிகளான தமிழர் மரபு இன்றும் நீடித்து வருகிறது .இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட அதே இலக்கண விதிப்படி இன்னும் அதே போல் பாடல் இயற்றும் வல்லமை கொண்ட தமிழர் மரபு இழை இன்னும் அறுபடாமல் வாழ்ந்து வருகிறது; சீரிளமை குறையாமல் தமிழ்க்குடி வாழ்ந்து வருகிறது. ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என வாழ்ந்த குலம் இன்னும் வாழ்ந்து வருகிறது .
வாழும் வரலாற்றுச் சின்னங்கள்தான் தொல் தமிழர்கள் .
அவர்களிடமே இன்னும் தொல்லிலக்கியங்கள் ஓலைச் சுவடிகளிலே எழுதப்பட்டு ஆண்டாண்டு காலமாகப் பாதுகாப்பாக உள்ளன; வாழும் தொல்குடிகளும் இருக்கின்றனர்; ஆனால் இதை அனைவரும் ஒப்புக் கொள்ளும் வகையில் புறச் சான்றுகளான அகழ்வாய்வுகள் தான் தேவை .
தமிழர்களான நாம் உண்மையில் அதிர்ஷ்டம் செய்தவர்கள். ஆயிரம், இரண்டாயிரம் வருஷத்திற்கு முன் வாழ்ந்த ஒரு கவியின் உள்ளத்தை அறியக்கொடுத்து வைத்திருக்கிறோம்; அந்த மொழி இன்னும் அதே வடிவில் இருக்கிறது . இன்னும் அதில் உள்ள சொற்கள் நமக்குப் புரிகின்றன. அதே பொருளில் இன்னும் அதே சொல் புழக்கத்தில் இருக்கிறது .
ஆயிரம் வருடத்திற்கு முந்தைய இத்தாலிய, லத்தீன் நூல்களை அவற்றைத் தாய் மொழியாகக் கொண்டு வாசிப்பவர் தற்போது இல்லை; ஆயிரம் வருஷத்திற்கு முன் இருந்த ஆங்கில நூல் எதையும் தற் காலத்து ஆங்கிலேயர்களால் படித்து விட முடியாது.
இது எப்படித் தமிழ் நாட்டில் மட்டும் நிகழ்ந்தது ?
இதில்தான் தமிழர் தம் தொல்லறிவு வெளிப்படுகிறது . தன்னைச் சுற்றி இருந்த இயற்கையின் கொடையான செடி கொடி மரங்கள் இவை களைத் தனது உணவு மற்றும் உடல் நலம் பேணும் மருத்துவ குணங் களைக் கண்டு அவற்றைத் தக்கவாறு பயன்படுத்த அறிந்த தொல் தமிழ் இனம் மன வழி , செவி வழி பெற்ற கருத்துக் கோவைகளை வரி வடிவில் மாற்றுவதற்கு ஏற்ற சாதனம் ஒன்றைத் தங்கள் ஆற்றல்மிகு அறிவால் கண்டனர் .
கற்பக விருக்ஷமான பனை மரத்தின் ஓலைகளின் பெரும் பயன் பாட்டைக் கண்டனர். பனை ஓலைகளில் எழுதப்பட்டவை எவ்விதப் பராமரிப்பு இல்லாத போதும் குறைந்தது 300 ஆண்டுகளாவது இருக்கும் திறன் அறிந்தனர் . தொடர்ந்த பராமரிப்பு இருப்பின் ஓலைகளின் ஆயுள் நீடிப்பதையும் கண்டனர் . இவ்வாறு பழந்தமிழர் தொல் இலக்கி யங்கள் , அறிவுச் செல்வங்கள் காலம் காலமாக ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுத் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டன. வட இந்தியாவில் பனை ஓலைகள் கிடைக்காத இடங்களில் பத்திரங்கள் எனப்படும் இலைகளில் எழுதும் வழக்கம் இருந்தது .
.இதுவே தமிழ் நாட்டின் தொல் இலக்கியங்கள் தொடர்ந்து பாதுகாப் பட்டதன் காரணம் ஆனது. தமிழின் குன்றாத சீரிளைமைக்கு ஓலை களே ஒருவகையில் காரணம் ஆனது .
தொன்ம இலக்கியங்களை ஓலைகளில் பாதுகாத்துப் படிஎடுத்துப் பாதுகாத்து வருங்கால சமுதாயத்திற்கு தங்கள் மரபின் செல்வங்களாக வழங்கியதே அன்றிருந்த மொழியும், இலக்கணமும் இன்னும் ஜீவனுடன் விளங்குவதற்குக் காரணமானது எனலாம் . இன்றும் தமிழின் தொன்மைக்குச் சான்றாக நமக்குக் கிடைத்துள்ள எண்ணற்ற இலக்கியங்களுக்கும், அறிவுசார் நூல்களுக்கும் காரணம் ஓலைச் சுவடிகளில் எழுதும் பழக்கமே ஆகும் . பனையின் கொடையால்தான் நமக்கு ஜீவனுள்ள நமது தமிழ்மொழியும் அதன் தொன்மை இலக்கியங்களும் கிடைத்துள்ளன .
.
முன்னையோரின் புலமை, அவர்களுடைய கல்வி பண்பாட்டுப் பெருமை முதலியவற்றை அறிந்து கொள்வதற்குத் துணை நிற்பது ஓலை சுவடிகள் மூலம் அவர்கள் விட்டுச் சென்ற அறிவுசார்ந்த சொத்துக்களேயாகும். சென்ற நூற்றாண்டுவரை அவற்றைச் செல்வமாக மதித்துப் பூசித்து வந்தனர். சுவடிகள் இல்லாத வீடுகளே தமிழ் நாட்டில் இல்லை என்று சொல்லும்படி, அவை சிற்றூர்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருந்தன . தமிழின் தொன்மையை அறிவதற்குத் துணையாக நிற்கும் சங்க நூல்களைச் சுவடிகளில்தான் எழுதித் தொடர்ந்து போற்றிப் பாதுகாத்தனர். பனை ஓலையை நன்கு பதப்ப டுத்தி ஒழுங்குபட நறுக்கிச் சுவடிவடிவில் அமைத்து எழுதினர். இன்றும் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஓலைச் சுவடிகள் தமிழ் நாட்டின் கிராமங்களில் பரவலாகக் காணப்படுவது நமது பண்டையோரின் அறிவின் ஆழத்தை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
சீனர், கிரேக்கர், பினிசியர், உரோமர், எபிரேயர், அர்மீனியர், அராபியர் ஆகியோர் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை பைரஸ் என்னும் ஒருவகை புல்லையே எழுதப்படும் பொருளாகப் பயன்படுத்தினர். பேப்பர் என்ற சொல்லும் ''பைபரஸ்'' என்னும் சொல்லிலிருந்து உருவானது என்பர். ஆனால் இவை நமது தொல்தமிழர் பயன்பாட்டில் இருந்த ஓலைச் சுவடிகளுக்குத் தரத்தில் ஈடாகாது .
பழஞ்சுவடிகளுள் பல போற்றுவாரின்றி அழிந்து போனமையால் நமக்குக் கிடைக்க வேண்டிய பல அரிய நூல்களும் கிடைக்கவில்லை. இலக்கண இலக்கியங்கள், மருத்துவம், சோதிடம், வானசாத்திரம் முதலான பல்வேறு சுவடிகள் இன்னும் அச்சிடப் பெறாத நிலையில் கிராமங்களில் இருக்கக் கூடும். அவற்றையெல்லாம் தொகுத்து முறைப் படுத்தி ஆராய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். சுவடிகளைப் படித்து அவற்றைப் படியெடுத்துப் பாதுகாக்கும் அரிய கலையைப் பயிற்றுவிக்க ஆர்வம் கொண்டோர் அருகிப் போனதால் படி எடுக்கப் படாமலும் , பாதுகாக்கும் முறை அறியாததாலும் கொஞ்சம் கொஞ்ச மாகச் சுவடிகள் நமது கிராமங்களில் இருந்து மறையத் தொடங்கின. அப்போதுதான் எஞ்சிய ஓலைச் சுவடிகளைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தையும், அவசரத்தையும் உணர்ந்த மத்திய அரசின் கலாசாரத் துறை 2003 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் இந்தியா முழுவதும் பரவிக் கிடக்கும் பழமை வாய்ந்த ஓலைச் சுவடிகள் , காகித சாசனங்கள் இவற்றைக் காக்க ஓர் இயக்கம் ( NMM) தொடங்கியது .
இந்த இயக்கம் தமிழ் நாட்டில் NSS மாணவர்களைக் கொண்டு அந்தந்தப் பகுதியில் இருந்த கிளை நூலகர்களைக் கொண்டு ஒரு மாபெரும் கணக்கெடுப்பு நடத்தித் தமிழ் நாட்டில் மட்டும் சுமார் ஐந்து லக்ஷம் சுவடிகள் சுமார் 16,000 இடங்களில் இருப்பதாக அறிவித்தது .
இன்னும் சுவையான இனிய பல அனுபவங்கள், ஓலையைத் தேடி நாங்கள் ஓடிய போது சந்தித்த பெரிய மனிதர்கள் , அவர்கள் காட்டிய பெருந்தன்மை ,தங்களின் பாரம்பர்ய சொத்தாகப் பாதுகாத்து வந்த அறிவின் செல்வங்களை நாங்கள் கொடையாகக் கேட்டபோது எந்தப் பொருளாதார எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் முக மலர்ச்ச்சியோடு அவர்கள் தஞ்சைப் பல்கலைக்கு வழங்கிய பண்பு ,அப்போது அவர்கள் காட்டிய உபசரிப்பு இவற்றை வாழ்நாள் முழுதும் மறக்க இயலாது .
தஞ்சைத் தமிழ்ப் பல்கலையும், தமிழ் மரபு அறக்கட்டளையும் சேர்ந்து செய்து கொண்ட MOU வின்படி மேற்கொள்ளப்பட ஓலைச் சுவடிகள் சேகரிப்புத் தொடர்பாக அண்ணாமலை சுகுமாரன் ஆகிய நான், செல்வமுரளி இருவரும் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாகவும் முனைவர் கோவை மணி அவர்கள் தஞ்சைப் பல்கலை சார்பாகவும் கடந்த பெப்ருவரி, மார்ச் மாதங்களில் சென்னை ,திருவள்ளூர், காஞ்சி புரம், நாமக்கல், திருநெல்வேலி ,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மேற்கொண்ட தேடுதலின் முக்கியமான சுவையான சந்திப்புகள் அடங்கிய இத்தொடர் அவர்களுக்கு நன்றி கூறும் முகத்தான் இங்கு எழுதப்படுகின்றது .
இந்தத் திட்டத்தின் பின்புலமாக இயக்கும் சக்தியாகச் செயல்பட்ட THF நிர்வாகிகள் சுபா ,கண்ணன், ஆண்டோ இவர்களின் அன்பும் ஆதரவும் என்றும் மறக்க முடியாதவை .
------------------------------------
ஏதோ தேடும் போது , எனது இந்தப் பழைய கட்டுரை கண்ணில் பட்டது .அதை மீண்டும் நண்பர்களின் பார்வைக்குப் பகிர்கிறேன் .--
இந்தக்கட்டுரை தொடர் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன் எனது முதல் கட்ட சுவடித்த தேடல் முழுமைபெற்றபின் ,கிடைத்த ஓய்வின் போது எழுதியது
எனது இரண்டாம் கட்ட தேடலில் பேராசிரியர் கோவைமணி , கணினி நிபுணர் செல்வமுரளி ஆகியோர் வரவில்லை .நான் மட்டுமே பயணித்தேன் .
அந்த இரண்டாம் கட்டத்தில் மட்டுமே பேருஇம்பாலான சுவடிகள் சுமார் 70,000 ஏடுகள் கண்டுபிடிக்கப்பட்டு தமிழ்ப் பலகலைக் கழகத்தில் ஒப்படைக்கப்பட்டது .
இந்த செய்திகளும் அப்போதேஇணையத்தில் பதிவு செய்யப்பட்டுவிட்டது .
அண்ணாமலை சுகுமாரன் M.A,
21/11/17

sugumaran- இளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
மிக ஆர்வத்தை தூண்டும் வகையில் எழுதி உள்ளீர் சுகுமாரன்.
அயராத உழைப்பு .
ரமணியன்
அயராத உழைப்பு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! --- ௧௪ (14 )
இப்போது ஸ்ரீபெரும்புதூராக அழைக்கப்படும் இந்த ஊர் முன்னொரு காலத்தில் பூதபுரி என்ற பெயரில் இருந்தது என்கிறது புராண. பின் அதுவே புதூர் என மாறி , ஸ்ரீமத் ராமானுஜர் அவதரித்ததினால் ஸ்ரீபெரும்புதூராக மாறியது. அத்தகைய புண்ணிய பூமியான ஸ்ரீபெரும் புதூரில் இரு இடங்களில் சுவடிகளைப் பெற்று பின் அதன் அருகில் இருக்கும் சில இடங்களையும் பார்த்துவிட்டு
Dr Dharmalingam and Dr Gunaseelan Thennam pettai Sriperumbudur
என்று இருந்த முகவரிக்கு சென்றோம். நாங்கள் என்னவோ சாதார ணமாக நினைத்துச் சென்றோம் ஆனால் அங்கு இருந்ததோ ஒரு மிகப் பிரம்மாண்டமான சித்தவைத்தியக் கல்லூரியும், அதனைச் சார்ந்த மருத்துவமனையும் ஆகும். தம் தந்தை வேலு மயிலு ஆசான் என்பவரின் பெயராலும், தமது பெயராலும் தர்மலிங்கம் எனும் மருத்துவர் பல நிறுவனங்களை அங்கே சிறப்பாக நடத்தி வருகிறார் .
அதனுள்ளே சென்று நீண்ட நேரம் காத்திருந்தோம்; ஆனால் வேலையில் மும்முரமாக இருந்ததால் மருத்துவரைக் காண முடிய வில்லை. அவர்களிடமும் சுமார் 150 கட்டுகள் மருத்துவச் சுவடிகள் இருக்கின்றன. அவற்றை மின்னாக்கம் செய்வதை அவர்களே செய்வ தாக கூறியதால் அவரைப் பார்ப்பதால் பயனினில்லை என அங்கிருந்து கிளம்பினோம். ஆனாலும் அங்கிருக்கும் சுவடிகளை மருத்துவ உலகம் ஆராய்ந்தால் அரிய பல தகவல்கள் புதிதாகவும் கிடைக்கக் கூடும். .
பிறகு உத்திரமேரூர் சென்றோம். தமிழகத்தின் மக்களாட்சி பாரம்பரி யத்திற்கு உதாரணமாக ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உத்திர மேரூர் கல்வெட்டுகளில் காணப்படும் குடவோலை முறையில் ஆன வாரியத்தேர்தல் பற்றிய குறிப்புகளை மேற்கோளாகக் காட்டுவார்கள். .
அத்தகைய பழமையும், புகழும் வாய்ந்த ஊர் உத்திரமேரூர்.
உத்திரமேரூரில் இருந்த முகவரிகளில் கைலாச ஈஸ்வரர் கோயில் என்ற முகவரியில் ஒரு ஓலைச் சுவடிக் கட்டு இருந்ததாக எங்கள் பட்டியலில் இருந்தது; ஆனால் அங்கே யாரையும் பார்க்க இயல வில்லை. அந்தக் கோயிலைத் தான் REACH நிறுவனம் புனரமைத்து வருகிறது.
கந்தசாமி குருக்கள் என்பவர் சுப்ரமணியசாமி தெரு என்னும் இடத்தில் இருப்பதாக எங்கள் பட்டியலில் இருந்தது. நாங்களும் வழக்கம் போல் விசாரித்தபடி சென்றோம். அங்கே போனால் அவர் இறந்து சில ஆண்டுகள் ஆகியிருந்தது. அங்கே ராஜப்பா குருக்கள் என்பவரை சந்தித்தோம். அவர்களிடம் முன்னர் சில சுவடிக்கட்டுகள் இருந்ததாகவும், அவற்றைப் புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனத்திற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னே தந்து விட்டதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் சகோதரர் சம்பந்த குருக்கள் அங்கே பணி புரிவதாகவும் தெரிவித்தார். எங்கேயோ ஒரு நல்ல இடத்தில் பாதுகாப்பாகப் போய்ச் சேர்ந்தால் அதுவே சுவடிக்கும் நல்லது, நாட்டிற்கும் நல்லது என்று நினைத்தபடி அங்கிருந்து புறப்பட்டோம்.
அடுத்து உத்திரமேரூரில் ' தண்டரை வைத்தியர் ' சி கார்த்திகேயன் ,
எண் 30, என்று இருந்தது; தெருப் பெயர் இல்லை; ஆனால் அதிக அலைச்சல் இல்லாமல் அந்த முகவரியைக் கண்டுபிடித்தோம்.
அங்கே கார்த்திகேயன் என்பவரை சந்தித்தோம். சிறிய வீடுதான், ஆனால் பெரிய உள்ளம். எங்களுக்கு ஓலைச்சுவடிகள் தந்ததால் மட்டும் இப்படிக் கூறவில்லை. நாங்கள் உள்ளே சென்றதும் அவர்கள் எங்களை உபசரித்த பண்பு, அமரச்சொன்ன விதம், நாங்கள் கூறுவதைப் பரிவுடன் கேட்டது, ஓலைச்சுவடிகள் இருப்பதாக ஒப்புக்கொண்டது, அவற்றைக் காட்டியது, நாங்கள் அவற்றை நன்றாகப் பாதுகாப்போம் என்று கூறி அந்த ஓலைச் சுவடிகளைக் கேட்டபோது இது பற்றிக் குடும்பத்தினருடன் பேசியபின் முடிவு சொல்வதாகக் கூறியது இவை அனைத்திலும் திரு கார்த்திகேயனின் பண்பும், பாரம்பரிய முதிர்ச்சியும் தெளிவாகத் தெரிந்தன.
நாங்களும் அவர்களிடம் வழக்கம்போல் அவரிடம் இருந்த சுமார் ஆயிரம் மருத்துவச் சுவடிகளையும் தஞ்சைப் பல்கலைக்குக் கொடையாகக் கேட்டோம்.
" இந்தச் சுவடிகள் அத்தனையும் பரம்பரையாக எங்கள் குடும்பத்தில் இருந்து வருகிறது; எங்கள் தாத்தா, அவரின் தாத்தா அனைவரும் மூலிகை மருத்துவர்களே, தண்டரை வைத்தியர்கள் என்று இந்தப் பகுதியில் எங்கள் பரம்பரை மிகப் புகழ் பெற்றது" என்றார் அவர்.
"எத்தகைய மருத்துவங்களில் உங்கள் பரம்பரையினர் பெயர் பெற்ற வர்கள்? ” இது நாங்கள்.
"தோல் மருத்துவத்திலும் , வாதம் குணப்படுத்துவதிலும் எங்கள் மருந்துகள் மிகப்பெயர் பெற்றவை."
"நீங்களும் இப்போது அதே மருந்துகளை செய்துவருகிறீர்களா ?"
"இப்போதெல்லாம் அத்தனை மருந்துகளும் செய்ய வேண்டிய வேலை இல்லை. சில மருந்துகள் மட்டும் செய்து சிறிய அளவில் வீட்டில் இருந்து வைத்தியம் செய்து வருகிறேன் "
"அத்தனை ஓலைச் சுவடிகளும் உங்கள் பயன்பாட்டில் உள்ளனவா ?"
" இல்லை ! இவற்றைப் பார்த்துக் குறிப்புகள் முன்பே எழுதி வைத்துள் ளேன்; எனவே குறிப்பைப் பார்த்துச் சில மருந்துகள் மட்டுமே செய்கி றேன். அதுவும் பெரும்பாலும் அனுபவத்தில் வந்து விட்டது "
நாங்கள் மீண்டும் எங்கள் வேண்டுதலை ஆரம்பித்தோம்;
அவர்களது பூர்விகமாக அறிவையும், அவர்களின் பரம்பரையில் வந்த முன்னோர்களின் அனுபவ பூர்வமான பட்டறிவையும் நவீன விஞ்ஞானத்தின் மூலம் பாதுகாக்கும் வசதிகள் இருப்பதையும், அவற்றை மின்னாக்கம் செய்து கணினியில் பயன்பாட்டில் கொண்டு வரும் சாத்தியக்கூறுகள் பற்றியும், அவர்களின் மருத்துவ அறிவின் மூலமான இந்த ஓலைச் சுவடிகளைக் காக்கும் அவசியம் பற்றியும் மேலும் கூறியதும், " சரி, நான் எங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரின் அனுமதியையும் , முக்கியமாக எனது அம்மாவின் அனுமதியைப் பெறவேண்டும். பெரியவர்கள் அனுமதி இல்லாமல் நான் மட்டும் முடிவெடுக்க முடியாது " என்று கூறி எங்களைச் சற்று நேரம் காத்திருக்கச் சொல்லிவிட்டு வீட்டின் உள்ளே சென்றார். இதனிடையே அவரது மனைவி எங்களுக்கு மோர் கொடுத்து உபசரித்தார். “சாப்பாடு தயாரிக்கட்டுமா? இருந்து சாப்பிட்டுப் போக முடியுமா?” என அன்புடன் கேட்டார்.
நாங்கள் அவரின் விருந்தோம்பலுக்கு நன்றி கூறி, நாங்கள் இன்னும் போக வேண்டிய ஊர்கள் நிறைய இருப்பதால் அதிக நேரம் காத்திருக்க இயலாதாகையால் எங்களுக்கு இப்போது உணவு வேண்டாம் என்று பணிவுடன் கூறினோம். இதனிடையே தண்டரை வைத்தியர் தம் தாயுடன் நாங்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தார். அவரது அம்மா எங்களிடம் , " தம்பி எல்லாம் கூறினான், நீங்கள் எடுத்துப் போய்ப் பாதுகாப்பது குறித்து எனக்கு மறுப்பு இல்லை; நல்லபடியாக மக்களுக்குப் பயன்பட்டால் போதும்" என்றார். எங்களுக்கும் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது.
பிறகு அவர்கள் ஓலைகளைப் பரப்பி வைத்து, அவர்களது பரம்பரையின் மருத்துவச் சிறப்புகளையும், மக்கள் அவர்கள் மருந்துகளின் மேல் நீண்ட காலம் வைத்திருந்த நம்பிக்கையைப் பற்றி மலரும் நினைவுகளில் முழ்கினார்கள். அவர்களின் முன்னோரின் புகைப்படங்களைக் காட்டி அவர்களின் அனுபவ அறிவைப் பற்றிக் கூறினார்கள். பிறகு தற்போது மக்கள் பாரம்பரிய மருந்துகளின் மேல் நம்பிக்கை இழந்து இப்படி ஆங்கில மருந்தின் மோஹம் பிடித்து அலைகிறார்களே எனக் கவலையைப் பகிர்ந்து கொண்டார்கள். சுவடிகளைப் பெற்றுக் கொண்டு அவர்களிடம் இருந்து ஒருவாறு விடை பெற்றோம்; ஆனாலும் நீண்ட நேரம் அவர்களின் தொழிலின் மூலதனமான ஓலைகளை, அவர்களின் பரம்பரையின் வைத்திய அறிவின் சான்றான ஓலைகளை அப்படியே எங்களிடம் கொடுத்ததையும், அவர்களின் தியாக உள்ளத்தையும், சீலத்தையும் குறித்து மனத்தில் வியந்தவாறே அடுத்த இடம் நோக்கிப் புறப்பட்டோம் .
காஞ்சியில் அடுக்கடுக்காக ஓலைச் சுவடிகளைக் காணப்போவதை அறியாமல் காஞ்சியை நோக்கி விரைந்தது எங்கள் ஓலைச் சுவடி ஊர்தி. இன்னும் அதிக விபரம் அடுத்ததில் பார்க்கலாம் .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
எந்தவிதப் பிரதி பலனும் எதிர்பாராமல் ,தங்களிடம் இருந்த அரிய பொக்கிஷங்களை இனாமாக, எந்தப் பொருள் உதவியோ, விலையோ, விளம்பரமோ இல்லாமல் தந்தனர். இத்தகைய உதாரண மனிதர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு இந்த தேடுதல் பயணம் முழுவதுமே கிடைத்து வந்துள்ளது.
0000000000000000000999999999999999999999999999999999999999999999999999999999999999
-- இந்தப்பகுதி 2010 ஜூன் மாதம் எனது பிறந்த நாளை ஒட்டி எழுதியிருக்கிறேன் .
இப்போது மீள் பதிவுக்காக இதை மீண்டும் படிக்கும் போது எனக்கு உடல் சிலிர்க்கிறது . அந்த தண்டரை வைத்தியக்குடும்பம் என்னிடம் காட்டிய அன்பு , அவர்களின் பண்பு இவைகளை நினைத்ததும் என் கண்ணில் நீரை வரவழைக்கிறது .இதில் குறிப்பிடும் எதுவும் கற்பனை இல்லை .இது 2010 லேயே எழுதப்பட்டது பலரால் பாராட்டப்பட்டது .அப்போது எடுத்தப் பலப்படங்கள் இன்னமும் என்னிடம் இருக்கிறது .
இதில் இப்போதுஇட்டிருக்கும் அத்தனை படங்களும் அப்போதுஎடுத்ததுதான் .
அவர்களை மீண்டும் சந்தித்து வணங்கவும் , எனது அன்பைத்ததெரிவிக்கவும் விரும்புகிறேன் .மேலும் நான் குறிப்பிட்டிரும் மருத்துவர் தர்மலிங்கம் அவர்களிடம் நான் கண்டா 150 கட்டுகளும் ஆராயப்பட்டு பதிப்பிக்கப்பட்டதா எந் தெரியவில்லை .
இது மாதிரி இந்தப்பயணத்தில் நான் சந்தித்த அத்தனை பெரியவர்களையும் மீண்டும் சந்திக்க விரும்புகிறேன் .எத்தனை அரிய அனுபவங்கள் !
இன்னமும் சொல்ல நிறைய உண்டு .
அண்ணாமலை சுகுமாரன்
19/1/18
sugumaran- இளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! ---- ௧௫ (15)
தற்போது தொண்டை நாடு எனப் பொதுவாக அறியப்படும் காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட பல்லவ நாடு அதற்குமுன், முற்காலச் சோழர் ஆட்சியிலும் அதையே தலைநகராகக் கொண்டு சிறப்புற விளங்கி இருந்திருக்கிறது. அப்போதும் அதற்குத் தொண்டை நாடு என்றுதான் பெயர் இருந்திருக்கிறது. ஏறத்தாழ 700 ஆண்டுகள் பல்லவர்கள் தென்னிந்தியாவில் நிலைத்து ஆட்சி புரிந்திருந்தும், அவர்களைப் பற்றிய பல பட்டயங்களும் கல்வெட்டுக்களும் கிடைத்திருந்தும் அவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர் என்பன போன்ற கேள்விகட்கு விடையளித்தல் இன்னமும் சிரமமானதே.
இது குறித்துப் பல்வேறு கருத்துக்கள் இன்னும் ஆராய்ச்சியாளர் மத்தியில் விளங்கி வருகின்றன. இந்திய வரலாற்று நூலாசிரியரான வின்ஸென்ட் ஸ்மித் என்பார், தமது 'பழைய இந்திய வரலாறு' என்னும் நூலின் முதற் பதிப்பில், 'பல்லவர் என்பவர் பஃலவர் என்னும் பாரசீக மரபினர்' என்று கூறுகிறார்; பிறகு அவரே மறுபதிப்பில் தம் கூற்றை மறுக்கிறார். ஆராய்ச்சியாளராகிய எலியட் செவேல் முதலியோர் தொண்டை மண்டலத்துப் பழங்குடியினரான குறும்பர் மரபினரே பிற்காலப் பல்லவர் என்றும் முடிவு செய்தனர். குறும்பர் ஆடுமாடுகளை மேய்ப்பவர். இதனைக் கருத்திற் கொண்டு. பால்-அவர் (பால் கறப்பவர் - குறும்பர்) என்பதே பல்லவர் எனத் திரிந்திருக்கலாம் என முடிவு செய்தவரும் பலருண்டு.
மணிமேகலையில் கூறப்படும் ஆதொண்டச்சக்கரவர்த்தி குறும்பரை வென்று, அவர்தம் குறும்பர் பூமியைத் தனதாக்கித் தன் பெயர் இட்டுத் தொண்டை மண்டலம் என வழங்கினான்' என்பது செவிவழி வரும் செய்தியாகும். வடபெண்ணை முதல் தென்பெண்ணை வரை இருந்த நிலப்பரப்பே அக்காலத்தில் தொண்டை மண்டலம் எனப்பட்டது. அது அருவா நாடு, அருவா வடதலைநாடு என இரண்டு பிரிவுகளாக இருந்தது. அருவா நாடு என்பது காஞ்சிநகரம் உட்பட்டது. பின்னது காஞ்சி முதல் வடபெண்ணை வரை இருந்த நாடாகும். இது குன்று களும் காடுகளும் சூழ்ந்த இடமாகும்; காளத்தி முதலிய மலையூர் களைத் தன்னகத்தே பெற்றது. அவ்விடம் இன்றும் 'தொண்டைமான் மாகணி' (மாகாணம்) எனப்படும். கரிகாற்சோழன் காடு கெடுத்து நாடாக் கினான், விளை நிலங்களை ஆக்கினான். ஏரி குளங்களை வெட்டு வித்தான்; தொண்டை மண்டலத்தை நாடாக்கினான்; நாகரிகத்தைத் தோற்றுவித்தான் என்று பட்டினப்பாலை முதலிய தமிழ் நூல்கள் கூறு கின்றன. இங்ஙனம் தொண்டை மண்டலம் சோழர் ஆட்சிக்கு வந்தது. முதல் சோழர் மரபினர் ஒருவர் தொண்டை மண்டலத்தை ஆண்ட செய்தி சங்க நூல் களில் காணக் கிடைக்கின்றது. திரையன் எனும் மன்னன் அருவா வட தலை நாட்டை ஆண்டபோது, இளந்திரையன் அருவா நாட்டை ஆண்ட னன் என்பதும் அறியக்கிடக்கிறது. தொண்டைமான் இளந்திரையன் என்பவன் காஞ்சியை ஆண்ட தமிழ் அரசனாகப் பெரும் பாணாற்றுப் படையில் சிறப்பிக்கப்படுகிறான். இத்தனை மாறுபாடுகள் கொண்ட கருத்துக்கள் உலவும் தொண்டை மண்டலம் பெயரில் ஒரு மடம் காஞ்சிபுரத்தில் இருந்து வருகிறது.
எங்கள் பட்டியலில்
*gnanaprakasham ,
thondai mandala aathinam
57, ubathalaivar brama sivam st ,
kanchipuram -2*
என ஒரு முகவரி இருந்தது .அதிக சிரமமில்லாமலேயே, அதைத் தேடிக் கண்டுபிடித்தோம்; .
மிகப்பெரிய விஸ்தாரமான கட்டிடம் ! கூடம் கூடமாக நீண்டது கட்டிடம் .
எத்தனை பெரிய மாளிகை என வியந்து கொண்டே மேலே சென்றோம். கடைசியில் இருந்த ஒரு கூடத்தில் தனிமையில் சாயந்தபடி அமர்ந்திருந்தார் ஆதீனம். இத்தனை பெரிய மாளிகையில் இப்படித் தனியே இருப்பது எத்தனை கொடுமை என எண்ணியவாறே ஆதீனத்திற்கு வணக்கம் கூறி எங்களைப் பற்றிய அறிமுகம் நிகழ்த்தினோம்.
அங்கே ஒரு சாரியில் இருந்த மர அடுக்குகளில் அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருந்த ஓலைச் சுவடிகள் எங்கள் கண்ணையும் கருத்தையும் சுண்டி இழுத்தன. ஓரக்கண்ணால் அவற்றைப் பார்த்தபடி ஆதீனத்திடம் பேசிக்கொண்டிருந்தோம். ஆதீனம் எங்களைச் சற்று அமரச்சொல்லிவிட்டு உள்ளே சென்று தலையில் அணியும் உருத்திராக்க முடியையும், கழுத்தில் அணியும் மாலைகளையும் அணிந் தபடி திரும்பி வந்து அவரது அரியாசனத்தில் அமர்ந்தார்.
அவரது புதிய கோலம் அவரது பெருமையையும், பாரம்பரியத்தையும் சொல்லா மலேயே சொல்லும் விதத்தில் அமைந்திருந்தது. எங்கள் பேச்சிலும் ஒரு வினயமும், மரியாதையும் வந்தது. ஆதீனத்தின் பேச்சிலும் ஒரு கம்பீரம் வந்தது. அந்த அரியாசனத்திற்குரிய கொடை குணமும், அற வழிச்சீலமும் ஆதீனத்திடம் தானே வந்துவிடும் என்னும் நம்பிக்கையில் நாங்களும் பேச ஆரம்பித்தோம். ஆதீனமும் எங்களுடன் மிகப் பரிவுடன் பேசினார். அவர் இந்த ஆதீனத்தின் 232 வது சந்நிதானம். நாங்கள் அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சுவடி வரிசைகளைச் சுட்டிக் காட்டி அவற்றை அருகில் சென்று கையில் எடுத்துப் பார்க்கலாமா எனக் கேட்டோம்
ஆதீனமும் சம்மதித்துப் பூட்டியிருந்த அல மாரிகளைத் திறந்து விட்டார். ஆவலுடன் அருகில் பாயத் தயாரா னோம். அப்போது ஆதீனம் அவை அத்தனையும் அவர்கள் மடத்தின் கணக்கு வழக்குப் பற்றியது என்று கூறியதும், உடன் வந்த முனைவர் கோவை மணிக்குச் சற்று சுவா ரஸ்யம் குறைந்துவிட்டது. அவர் எதிர்பார்த்தது ஏதாவது பழந்தமிழ் இலக்கியம் சிக்காதா என்று. எனினும் கிடைத்த வாய்ப்பை விட்டுவிட மனமில்லாமல் அருகில் சென்று அவற்றைப் பார்த்தோம். எங்களுக்கு வியப்பளிக்கும் விதமாக அதில் இருந்த மூன்று பெரிய சுவடிக்கட்டுகள் தேவாரம், நிகண்டு முதலியவையாக இருந்தன. அவற்றை மட்டும் தனியே எடுத்து வந்து ஆதீனத்திடம் காட்டினோம்.
அவர் "நீங்களே பாருங்கள், நாங்கள் இந்த சுவடிகளை எத்தனை சீராக வைத்திருக்கிறோம் என்று ? இவற்றை நிபுணர்களின் துணையுடன் அவ்வப்போது சுத்தி செய்து எண்ணெய் இட்டு வைத்திருக்கிறோம்; எனவே உங்கள் துணை தொண்டை மண்டல ஆதீனத்திற்குத் தேவையில்லை " என்றார். உண்மையிலேயே ஓலைச் சுவடிகள் நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டிருந்தன. எனவே எங்கள் முதல் அஸ்திரம் கூர் மழுங்கிப்போனதால் அடுத்ததை எடுத்தோம் .
"ஐயா, இவை சுவடிகளாக இங்கேயே இருந்தால் ,குடத்தில் இட்ட விளக்கு போல் ஆகிவிடுமே ! மேலும் காலத்தை வென்ற இந்தச் சுவடிகளில் உள்ளதைப் பாதுகாக்க வேண்டுமானால் இவற்றை மின்னாக்கம் செய்து கணினி வழிப் பயன்பாட்டில் கொண்டுவர வேண்டும் "
இதைக்கேட்டதும் அதற்க்கு உடன்பட்ட ஆதீனம் ,"இந்த நூல்களை நீங்கள் இங்கேயே வந்து
மின்னாக்கம் செய்து கொண்டு போவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை " என்றார்.
முனைவர் கோவை மணியும் இந்த மூன்று கட்டுகளையும் விரைவில் வந்து மின்னாக்கம்
செய்து கொள்வதாக உறுதி கூறினார் .
ஆதீனனம் பிறகு எங்களுக்கு திருநீறு அளித்து எங்கள் தேடுதல் முயற்சி
நல்லவித்தமே நடைபெற ஆசி கூறினார் .
தமிழ்நாட்டில் நாடி சாஸ்திரம்அல்லது ஏடு பார்த்தல் என்று ஒரு கலை பல
இடங்களில் வழங்கி வருகிறது. மூன்று காலத்தையும் ஜாதகருக்குக் கூறும் அந்த ரிஷிகளின் கூறப்படும் பலன்கள் பாடல்களின் வடிவில் பனை ஓலையால் ஆன ஏட்டுச்சுவடிகளில் எழுதப்பட்டிருக்கின்றன.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ரிஷிகளும் சித்தர்களும் எதிர்காலத்தில் வாழப்போகும் குறிப்பிட்ட மனிதர்களைப் பற்றியும், அவர்களின் ஜாதக அமைப்புகளைப் பற்றியும், வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பற்றியும் அந்த ஏடுகளில் எழுதி வைத்திருக்கின்றனர் என நம்பப்படுகிறது . ஜாதகரின் பெயர், ஊர், பெற்றோர், உருவ அமைப்பு, முதற்கொண்டுஅந்த ஏடுகளில் காணப்படும் எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் வழங்கும் நாடிகளில் காகபுசுண்டர் நாடி, கெளசிக நாடி, சப்த ரிஷி நாடி, அகத்தியர் நாடி போன்றவை மிக முக்கியமானவை. இந்தப் பிரபஞ்சத்தில் நடைபெறும் அனைத்து செயல்களும் ஓர் ஒழுங்கு முறையும் நியதியும்,கட்டுக்கோப்பும் கொண்டே விளங்கு கின்றன. இதையே "Cosmic Order" என்று கூறுவார்கள்.இதில் விளங்கும் அனைத்துப் பொருள்களும், அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரு நியதிக்குட்பட்டு ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவையாக விளங்கு கின்றன. காலதத்துவத்தின் ரகசியங்களையும் "Cosmic Order" எனப்படும் பிரபஞ்ச நியதியையும் தன்னுள்ளடக்கிக் காட்டும் நூல்களில் நாடி சாஸ்திரமும் ஒன்று என நம்பப்படுகிறது; ஆனால் இந்த நாடிகள் குறிப் பிட்ட சில ஊர்களிலேயே மிகப் பிரபலமாக வழக்கத்தில் உள்ளன.
நாங்கள் இதுவரை பார்த்த மூன்று மாவட்டங்களில் சுமார் இருபது நாடி ஜோதிடர்களின் முகவரிகள் இடம் பெற்றிருந்தன; ஆனால் இவற்றில் பெரும்பாலானோர் அவர்கள் வைத்திருந்த சுவடிகளை அருகில் சென்று பார்ப்பதையோ ,அதைத் தொடுவதையோ விரும்ப வில்லை. எங்களை முதலில் இடத்தை விட்டுக் கிளப்புவதிலேயே குறியாக இருப்பார்கள். எனக்கு இது பற்றிய உண்மையை அறியும் வாய்ப்பு வராதா என்ற ஏக்கம் நீண்ட காலமாக உண்டு .இதன் உண்மை அறியவே நானும் நிறைய நாடி ஜோதிடர்களிடம் ஜோதிடம் பார்ப்பது போல் தொடர்ந்து சென்று நட்பாக இருக்க முயன்றதுண்டு; ஆயினும் எவ்வளவு பணம் செலவு செய்தாலும் அவர்கள் தங்கள் ரகசியங்களை காப்பதிலேயே குறியாக இருந்தனர்; ஆனால் இந்த ஓலைச் சுவடி தேடும் படலத்தில் ஒரு நாணயமான, திறந்த மனம் கொண்ட ஜோதிடரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது .அது குறித்து அடுத்த பகுதியில் விரிவாக எழுதுகிறேன் .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
-- -------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதுவும் 2010 எழுதியாக கட்டுரைதான் .
ஆதீனம் அனுமதிக்கொடுத்த மின்னாக்கம் பணி நிறைவேறியதா என இன்னம் தெரியவில்லை . பிறக்காலத்திலயாரவது செய்வார்கள் என்றுதான் செய்திகளை ஆற்றுப்படுத்தி சென்றேன் .
தேடலில் இன்னம் நிறைய ஆதினங்களை சந்தித்தேன் .நிரயத் தகவல்கள்களை
அப்போதே சொல்லியிருக்கிறேன் .
இன்னமும் நிறைய சொல்ல இருக்கிறது
அண்ணாமலை சுகுமாரன்
24/1/18
sugumaran- இளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
சொல்லுங்கள் ,அறிய காத்திருக்கிறோம்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
ஓலைச்சுவடிகள் தேடிய படலம் -- ௧௭ (17)
அடுத்து நாங்கள் தேடுதலுக்குப் புறப்பட்ட ஊர் மதுராந்தகம்.
பெயரைக் கேட்ட உடனேயே கல்கியின் பொன்னியின் செல்வன் பாத்திரமான மதுராந்தகனை நினைவுபடுத்தும் ஊர். உத்தம சோழன் எனப் பெயர் பெற்ற மதுராந்தகன் கி.பி 950 முதல் கி.பி 957 வரை சோழ நாட்டை ஆண்ட கண்டராதித்தியரின் மகன் ஆவார். இவர் 12 ஆண்டுகள் சோழநாட்டை ஆட்சி புரிந்தார் . இவருக்கு பின் இவர் முடிதுறந்ததுமே அகிலம் போற்றும் ராஜராஜர் ஆட்சிக்கு வந்தார். இது பற்றி ஏதாவது சரித்திர ஆதாரங்கள் இந்த ஊரில் கிடைத்ததா எனத் தெரிய வில்லை; அதுதான் பெயர்க் காரணமா என்றும் தெரியவில்லை. கடலூர் மாவட்டத்தில் கூட ஒரு மதுராந்தக நல்லூர் உள்ளது. மதுராந் தகத்தில் இருக்கும் ஏரிகாத்த ராமர் பலர் உள்ளம் கவர்ந்தவர். இதுவே ஸ்ரீமத் ராமானுஜர் தீட்சை பெற்ற இடம்.
மதுராந்தகத்தையும் சோழ வரலாற்றையும் இணைக்கும் ஆதாரம் இருக்கிறதா என சந்தேகம் இருந்தாலும், பல்லவர்களும் சோழர்களும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸம்ஸ்க்ருதப் படிப்புக்கும், இலக்கிய வளர்ச் சிக்கும் நிலையான ஆதரவு தந்ததற்குப் பல ஆதாரங்கள் இந்த மாவட்டத்திலும், அருகில் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் எண்ணாயிரத்திலும் கிடைத்துள்ளன. வேதங்களும் தத்துவங்களும் படிப்பதற்குக் கல்லூரிகளும் மடங்களும் ஏற்படுத்தி அவற்றுக்கு அறக்கட்டளைகள் ஏற்படுத்தப் பட்டிருந்தன. பிரபாகர மீமாம்ஸமும், ரூபாவதாரமும் பெருவாரியாகப் படிக்கபெற்றதற்குக் கல்வெட்டுகள் சான்று பகர்கின்றன . முதலாம் ராஜேந்திரன் ஆணைப்படி அவர் காலத்தில் தற்போது தென்னாற்காடு மாவட்டத்தில் இருக்கும் எண் ணாயிரம் ராஜராஜ சதுர்வேதி மங்கலத்துச் சபையார் அந்த ஊர்க் கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு உணவளிப்பது என்றும், ஆசிரி யர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்வதென்றும் அரசாங்க அதிகாரி ஒருவர் முன்னிலையில் முடிவு செய்திருந்தார்கள். இளநிலை மாணவர்கள் 270 பேரும், முதுநிலை மாணவர்கள் எழுபது பேரும் ஆசிரியர்கள் 14 பேரும் இருந்திருக்கக் கூடும் என்று தெரிகிறது; பிரும்மசாரிகளான இளங்கலை மாணவர்கள் 270 பேரில் ரூபாவதார இலக்கணத்தை 40 பேர் படித்தார்கள்; ஏனையோர் மூன்று பிரிவினராக ரிக் வேதத்தை 75 பேரும், யஜுர் வேதத்தை 75 பேரும், வாஜபேய ஸாமவேதத்தை இருபது பேரும் , சந்தோக ஸாமவேதத்தை இருபது பேரும், தலவகார ஸாமவேதத்தை இருபது பேரும் , அதர்வண வேதத்தைப் பத்துபேரும் , எஞ்சிய பதின்மர் போதாயான கிருஹ்ய சூத்திரம், போதாயான கல்ப சூத்ரம், போதாயான ஞான சூத்திரம் ஆகிவவற்றையும் பயின்றனர் எனத் தெரிகிறது. இந்த இளநிலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் நாள்தோறும் ஆறு நாழி நெல் கொடுக்கப்பட்டது. சாத்திரர் அல்லது முழு நிலை மாணவரான 70 பேருக்கு 10 நாழி நெல் நாள்தோறும் வழங்கப்பட்டது. இந்தச் செய்திகள் எல்லாம் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியின் ’சோழர்கள்’ என்னும் நூலில் விரிவாக இடம் பெற்றுள்ளன.
நாங்கள் செல்ல இருப்பதும் மதுராந்தகத்தில் இருக்கும் Sanskrit School, Ahobila matam , Madurantakam என்று இருந்த முகவரிக்குத் தான்; எனவே எங்கள் சிந்தனையும் ஸம்ஸ்க்ருத கல்லூரிகளுக்கு அந்த நாளில் அரசர்கள் ஆதரவளித்த முறைகளைப் பற்றியே ஓடியது வியப்புக்குரியதன்று.
நாங்கள் அன்று காலையும் வழக்கம் போல் எட்டு மணிக்கு நாங்கள் தங்கி இருந்த செங்கல் பட்டு விடுதியில் இருந்து புறப்பட்டு ஒன்பது மணிக்கே மதுராந்தகத்தில் அந்த ஸம்ஸ்க்ருத கல்லூரியின் வாசலில் போய் நின்றுவிட்டோம். உள்ளே சென்று தலைமை ஆசிரியர் முனைவர் பதரியைச் சந்தித்தோம். அப்போது அவர் பாண்ட்டு சட்டை அணிந்து எங்களைப் போலவே சாதாரணமாகக் காட்சியளித்தார்.
இன்னும் சிறிது நேரத்தில் வகுப்புகள் ஆரம்பிக்கும் போது வேதகாலச் சீருடைக்கு மாறிவிடுவோம் என்றார் அவர். அவர்களின் சீருடை என்ன தெரியுமா? பஞ்சகச்சம் வைத்து வேட்டியும். மேலே சட்டையில்லாத உடம்பை மூடும் அங்கவஸ்திரமும், சீராக முடிக்கப்பட்ட சிகையும் ஆகும். மாணவர்களும் அவ்வாறே சீருடை அணிந்து அப்போது காலை வழிபாட்டிற்காகக் கூட ஆரம்பித்திருந்தார்கள் .இவ்வாறு வித்தியாச மான முறையிலே வேதகால பாணியில் உடையணிந்து கல்வியில் சிரத்தையுடனும், ஒழுக்கத்துடனும் முகத்தில் தேஜசுடன் குழும ஆரம்பித்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் பார்த்த கணமே எங்களுக்கும் உடலெங்கும் ஒரு புனிதச் சுழலின் தாக்கம் பரவ ஆரம்பித்தது; ஆனால் வழிபாட்டு சமயம் வெளியாட்கள் இருக்கக் கூடாது என்ற சம்பிரதாயமோ என்னவோ தலைமை ஆசிரியர் முனைவர் பதரி எங்களை வற்புறுத்தி அருகில் இருந்த காப்பிக் கடைக்கு அழைத்துச் சென்றுவிட்டார்; எங்களுக்கு அங்கேயே இருந்து அந்த மாணவர்களின் வழிப்பாட்டைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் முனைவர் பதரியின் அன்பைத்தட்ட முடியாமல் அவருடன் சென்றோம். அங்கே காபி அருந்தியவாறு அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர் ஓரியன்ட் உயர் நிலைப்பள்ளி என்று அரசின் கல்வித் திட்டத்துடன் உயர்நிலைப் பள்ளியும், ஸம்ஸ்க்ருத கல்லூரியும் அங்கே நடைபெறுவதாகவும், முனைவர் பதரி தாம் உயர்நிலை பள்ளிக்குத் தலைமை ஆசிரியர் ஆகவும், ஸம்ஸ்க்ருதக் கல்லூரிக்குத் தனியாக ஒரு முதல்வர் இருப்பதாகவும் தெரிவித்தார். அங்கே அவர்களிடம் கல்விக்காகப் பண்டைய நூல்கள் ஓலைச் சுவடி வடிவில் சுமார் 152 கட்டுகள் இருப்பதாகவும், ஏடுகளின் எண்ணிக்கையில் அவை சுமார் 20,000 இருக்கலாம் என்றும் தெரிவித்தார்; ஆனால் அவை அவர்களின் பயன்பாட்டில் இருப்பதால் அவற்றை நாங்கள் காணலாமே தவிரக் கொடையாகப் பெற இயலாது என்றார். எங்களுக்கு இத்தனை கட்டு களையும் ஒரு சேரக் காணப் போகும் மகிழ்ச்சி உண்டானது.
ஒருவாறு காப்பி அருந்தியபிறகு பள்ளிக்குச் சென்றோம். சென்றபோது காலை வழிபாடு முடிந்து பல்வேறு வயதில் இருந்த மாணவர்கள் சாரி சாரியாக அவரவர் வகுப்புகளுக்குச் சென்றுகொண்டு இருந்தனர்; வித்தி யாசமான இந்தக் காட்சி எங்கள் மனத்திலும் சற்று வித்தியாசத்தை ஏற்படுத்தியது. அந்த வித்தியாசம் ஒரு அசாதாரணப் பரவசம். எங்களுடன் வந்த முனைவர் பதரியும் எங்களை அமரச்சொல்லிவிட்டு தனியே போய் உடை மாற்றிக்கொண்டு, புதிய மனிதராக வந்து அமர்ந் தார். தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரும் அந்த பாரம் பரிய உடை அவரிடம் தலை முதல் பாதம் வரை ஒரு தெய்விகத் தோற்றத்தை ஏற்படுத்தியது. பிறகு எங்களை நூலகத்திற்கு அழைத்துச் சென்று சுவடிகளைக் காண்பிக்குமாறு அலுவலர் ஒருவரை எங்களுடன் அனுப்பினார். நூலகத்தைப் பார்த்துவிட்டுப் பிறகு முதல்வரையும் சந்தித்துப் பேசிவிட்டு வருமாறு எங்களிடம் கூறினார். நாங்களும் அவரின் அன்பிற்கு நன்றி கூறிவிட்டு அலுவலருடன் மாடிக்குச் சென்றோம்.
நூலகத்தில் அடுக்கடுக்கான சுவடிகள் சீராகப் பாதுகாக்கப்பட்டு, ஒவ்வொரு கட்டும் தனித்தனியே அதற்கெனத் தைக்கப்பட்டிருந்த துணிப் பைகளில் வைத்துப் பாதுகாக்கப்பட்டிருந்தன . அங்கே அமர்ந்து இருவர் சுவடிகளைப் பிரித்து எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஓலைச் சுவடிகள் நல்ல முறையில் பாதுகாக்கப்படுவதாக முனைவர் கோவை மணி கூறினார்; பிறகு நாங்கள் முதல்வர் V. ராஜகோபால் அவர்கள் அறைக்குச் சென்றோம்; அவர் எங்களை வரவேற்று அமரச் சொன்னார். அவரும் ஓலைச்சுவடிகள் எல்லாம் அஹோபில மடத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன; மிக உயர்ந்த நூல்கள் இங்கே சுவடியில் இடம் பெற்றுள்ளன என்று கூறினார். எனவே அவற்றை நல்ல முறை யில் பாதுகாத்து வருவதாகக் கூறினார். நாங்கள் சுவடிகளை மின் னாக்கம் செய்யவேண்டியதன் தேவை பற்றி அவரிடம் விளக்கிக் கூறினோம். அவரும் இந்தகைய முயற்சி அவசியம் செய்ய வேண்டியதே எனக் கூறினார். இங்கேயே வந்து சுவடிகளை மின்னாக்கம் செய்வது குறித்து அவர்களுக்கு மறுப்பு ஏதும் இல்லை எனக் கூறினார்.
நாங்களும் பிறகு அவர்களைத தொடர்பு கொள்வதாகக் கூறி விடை பெற்றோம். பிறகு அங்கே இருந்து மதுராந்தகத்தின் அருகில் இருந்த சில கிராமங் களுக்குச் சென்றோம். மின்னலே சித்தாம்மூர் என்ற கிராமத்தின் அருகில் கீழ அத்திவாக்கம் என்ற இடத்தில் சேதுபதி என்று ஒரு முகவரி இருந்தது; ஆனால் அங்கே சேதுபதிக்குப் பதில் அவர் வீட்டில் இருந்த ஆனந்த கவுண்டர் என்பவரை சந்தித்தோம். அவரிடம் ஒரு கட்டு மாந்திரீகச் சுவடி இருந்தது .நாங்கள் அதை வாங்கிப் பார்த்தோம். அது குழந்தைகளுக்கு வரும் நோய்களை மாந்திரீகம் மூலம் நீக்கும் முறைகள் அடங்கியது; பால கிரகம் என்று பெயர்; ஆனால் ஆனந்தக் கவுண்டர் அவற்றைக் கொடையாகத்தர மறுத்துவிட்டார். அவற்றைத் தாம் உபயோகித்து வருவதாகவும், அதை வைத்தே ஜீவனம் நடத்துவ தாகவும் கூறினார் . இன்னமும் ஓலைச் சுவடிகள் பயன்பாட்டில் இருப்பதும், அது அவரின் ஜீவனத்திற்குப் பயன்படுவதும் எங்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. கிராமத்தில் இருக்கும் ஒருவர் ஓலைச் சுவடியில் கூறப்பட்டிருப்பதை வைத்துத் தம்மை நாடி வரும் மக்களின் குழந்தை களுக்கு மாந்திரீகம் மூலம் நிவாரணம் தரும் நம்பிக்கை இன்னும் நீடித்திருப்பது வியப்பையளித்தது. அது மனோதத்துவமோ மாயமோ, மந்திரமோ தெரியாது; ஆனால் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அவர்களுக்குப் பயனளிக்கிறது . கையில்லாமல் கூட வாழ்ந்து விடலாம், ஆனால் நம்பிக்கை இல்லாமல் வாழ்க்கை ஏது ?
இந்தச் சுவடிகள் தான் அவரின் வாழ்வாதாரம் என்று சொல்லும் போது அவரை எப்படி மேலும் கட்டாயப்படுத்துவது என நாங்களும் விட்டு விட்டோம்; ஆனால் ஆனந்த கவுண்டர் எப்போது வேண்டுமானாலும் வந்து சுவடிகளை மின்னாக்கம் செய்து கொள்ளுங்கள் என அப்போதே அனுமதி வழங்கி விட்டார்.
மதுராந்தகத்தின் அருகில் பவுண்சூர் என்னும் பகுதியில் திருவாத்தூர் கிராமத்தில் E.L.Narendra kumar என்று ஒரு முகவரி இருந்தது ,சிறிய கிராமமாயிற்றே, எப்படியும் கண்டுபிடித்து விடலாம் என்று சுற்றினால் சுற்றிச் சுற்றி வருகிறோமே தவிர எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
சோர்ந்து போய்த் திரும்பலாமா? என எண்ணியபடி என்று ஒரு சிறிய கடைக்குச் சென்று கடைசியாகப் புறப்படுவதற்கு முன் ஒரு முறை கேட்டுப் பார்க்கலாம் என்று முயற்சி செய்தோம். ஆச்சரியமாக அங்கே நின்று கொண்டிருந்த சிறுவன் ஒருவன் நரேந்திரன் என்ற ஒருவரை தனக்குத் தெரியும் என்றும், ஆனால் அவர் தற்போது காஞ்சியில் வசிக் கிறார் என்றும் கூறினான். மேலும் நரேந்திரன் தம்பி கமல் என்பவர் அருகே வசிப்பதாகவும், அவரிடம் சென்றால் நரேந்திரன் கைபேசி எண் கிடைக்கும் என்றும் கூறினான். கைவிட்டு விடலாம் என்று எண்ணிய தருணத்தில் அது எங்களுக்குக் கைவசமாவது குறித்து மகிழ்ச்சி உண்டானது. அடித்துக் கொண்டே இருக்கும்போது எந்த அடியில் கல் உடையும் என்று யாருக்குத் தெரியும்? கல் உடையவேண்டும் என முடிவு செய்து விட்டால் அடித்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான். நாங்களும் எப்போதும் நாலா திசையும் எங்கள் விசாரிப்பை வீசிக் கொண்டே இருப்போம். எங்காவது உபயோகமான தகவல் அல்லது வழிகாட்டல் எங்களுக்கு வந்து சேரும். இதுவே இந்தப் பயணமெங்கும் வாடிக்கை ஆனது.
நாங்களும் அந்த சிறுவனைக் கைப்பிடியாகச் சிக்கெனப் பிடித்துக் கொண்டு தம்பி கமலைப் பிடித்தோம். எங்கள் நல்ல நேரம் கமல் வீட்டில் இருந்தார்; அவரது அண்ணன்தான் நரேந்திரகுமார் என்றார். அவர் வக்கீலாகப் பணிபுரிந்து வருவதாகவும், ஓலைச் சுவடிப்பற்றி அவரிடம் பேசலாம் என்றும் கூறி அவரது கைபேசி எண்ணைத் தந்தார் .
உடனே அங்கிருந்தே அவரது சகோதரரிடம் பேசினோம். இவ்வளவு சிரமப்பட்டதற்குப் பலன் இல்லாமல் போகவில்லை; அவரிடம் மூன்று கட்டு ஓலைச் சுவடிகள் இருப்பதாகத் தெரிவித்தார்; எங்களுக்கும் திருப்தியானது.
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
----------------------------------------------------------------------
எத்தனை உற்ச்சாகமாக 2010 இல் நான் கண்ட சுவடிகளைப்பற்றி தகவல்களை
கூறியிருக்கிறேன் என்பதை இந்தப் பதிவை மீள்பதிவு செய்ய மீண்டும் நான் படித்தபோது உணர்ந்து மகிழ்ந்தேன் .ஆனால் அப்போது நடந்தவை பரவலாக அறியப்படாமையால் குறிப்பிட்ட மதுராந்தகம் ஓலைகள் யாராலும் மின்னாக்கம் செய்யப்படவில்லை .நிச்சயம் சம்பந்தப்பட்டவர்கள் செய்திருப்பார்கள் .
இப்போது போனால் அவர்கள் என்ன சொல்வார்கள் எனத் தெரியாது .எத்தகைய நூல்கள் அவர்களிடம் இருந்தது எனத் தெரிந்துக்கொள்ளும் சந்தர்ப்பம் நழுவிப்போனது .
இந்தத் தேடல் நடைபெற்றப் எனக்கு வயது 62 நிச்சயம் வருவாயத் தேடி இதை செய்ய முயலவில்லை அதற்க்கு எத்தனையொத் துறைகள் வேறு உள்ளன .பணம் ஈட்ட யாரும் சுவடித்தேடல் களப்பணியில் ஈடுபட்டிருக்க மாட்டாட்கள் .
நான் எனது 20 வயதில் இருந்து அரசுப்பணி செய்தவன் .
சுமார் ஐந்து ஆண்டுகள் 1979 முதல் வெளிநாட்டில் பணிபுரிந்தவன் . முன்பே பார்த்துவிட்டேன்
தமிழ் மேல் கொண்ட பற்றும் சித்தர்களின் இலக்கியங்களை மீட்டெடுக்க வேண்டும் ஆர்வம் மட்டுமே என்னை உந்தியது .
எனது மனம் முழுவதும் அந்தத் துடிப்பும் அவாவும் மட்டுமே நிறைந்திருந்தது .என்னை சுற்றி நடைபெற்ற எதையும் நான் அப்போது பொருட்படுத்தவில்லை .
இப்போது எனக்கு 68 வயது இப்போது ஏன் பழயதைக்கூறுகிறேன் என்றால் இத்தகைய ஒரு முயற்ச்சி சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றதை பரவலாக பலராலும் அறியப்படவில்லை .
இந்தத் தேடலில் இருந்து 2010 இல் நான் விலகியப்பிறகும் மழைவிட்டும் விடாத தூவானம் போல என்னிடம் சேர்ந்த சில சுவடிகளையும் ,எனது தொடர் முயற்ச்சியால் என்னிடம் சேர்த்த பல ஆயிரம் பழைய ,மற்றும் பதிப்பில் இராத சித்தர்நூல்களையும் தக்கபடி பாதுகாத்து , பொது மக்கள் பயன்பாட்டிற்காக
ஓரிடத்தில் அமைக்கவேண்டும் என்பதுவும் ,
நான் சந்தித்த வயது மூத்த சித்தர் இயல் ஆய்வாளர்களிடம் மறைந்துக் கிடைக்கும் முப்பு , சித்தவைத்தியம் , காயகலப்பம் , வேதியல் , மாந்திரீக மருத்துவம் போன்றவற்றைத் திரட்டி ஓரிடமாக்கி , அவைகளை பதிவு செய்து வரும் கால வளரும் சமுதாயத்திடம் ஒப்படைக்கவேண்டும் என்பதுவும் ,
எனது தேடலில் நான் பெற்ற பட்டறிவைக்கொண்டு மீண்டும் ஒரு முறை தீவிரத் தேடல் செய்து காலத்தின் ஆளுமையில் அழிவின் விளிம்பில் இருக்கும் சித்தர்களின் சுவடிகளை எப்படியாவது சேகரித்து மின்னாக்கம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் .என்பதுவும் ஆகும்
இதுவே கடைசி வாய்ப்பு , இன்னமும் சில ஆண்டுகளில் சுவடிகள் எதுவும் மிஞ்சி இராது .இதை நான் எனது நெஞ்சின் ஆழத்தில் இருந்துக் கூறுகிறேன் .
இதில் எந்த வித போலியும் இல்லை
களப்பணி எத்தனைக் கடினம் என்பது செய்துப்பார்த்தவர்களுக்குத் தெரியும் .
தொடர்ந்து பல நண்பர்கள் இந்தத் தொடரை படித்துப்பாராட்டுவது தெம்பளிக்கிறது .நான் அவர்களுக்குத் தக்கமுறையில் அவ்வப்போது பதிலளிக்க இயலவில்லை .
பல்வேறுப் பணிச் சுமைகள் குடும்ப பொறுப்புக;ள அழுத்துகிறது..
தயைக்கூர்ந்து பொருத்தருள்க !
ஆனால் தாமதமாகவேனும் பதில் அளிப்பேன் .
அண்ணாமலை சுகுமாரன்
31/1/18
படங்கள்
மதுராந்தகம் நூலகம் ,
மற்றும் சுவடிகள்
sugumaran- இளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
ஓலைச்சுவடிகள் தேடிய படலம் --- ௧௮ (18)
செங்கல்பட்டில் இருக்கும் சில முகவரிகளைப் பார்த்துவிட்டுப் பிறகு காஞ்சிபுரம் நகரம் சென்று பார்த்துவிட்டு எங்கள் காஞ்சி மாவட்டத் தேடலை அன்று முடிக்க எண்ணினோம். ஒரு மாவட்டத்திற்கு ஐந்து நாள்கள் வீதம்தான் ஒதுக்க முடிந்தது. எங்களுக்கு மார்ச் மாதம் 31க் குள் அதிகபட்சம் முடிந்தவரை சென்று பார்க்க வேண்டிய நெருக்கடி வேறு இருந்தது; எனவே ஒய்வு என்பதைப் பற்றி நினைத்துப் பார்க்கக் கூட எங்களுக்கு நேரம் இல்லை. 133 முகவரிகள் ஐந்து நாள்களில் பார்ப்பது என்றால் சும்மாவா ? செய்யும் வேலை மனத்திற்குப் பிடித்தி ருந்தால் வேலையே பொழுதுபோக்கு ஆகிவிடுகிறது . செய்யும் வேலை யில் சுகம் காணத்தொடங்கி விட்டால் பிறகு தனியே எதற்கு ஒய்வு ? மனத்திற்கு ஒய்வு தேவைப்படாத போது உடலும் மனத்துடன் சேர்ந்து ஒத்துழைக்கிறது; உண்மையில் களைப்படைவது மனமா, உடலா ? மனமே நீ செய்யும் மாயங்கள்தான் எத்தனை ?
இரவு ஏழு மணிக்கு எங்கள் வேலையை முடிவுக்குக் கொண்டு வந்தாலும் விடுதி வந்து சேர எட்டு மணி ஆகிவிடும்; உடனே சிறிது ஒய்வு எடுத்துக் கொண்டு ஒரு சிறிய குளியல்; பிறகு அருகில் இருக் கும் கணினி இணையக் கடையைத்தேடி ஒரு வேக வேகமான நடை. நாங்கள் போய்ச் சேரும் நேரம் அங்கு கடை மூடும் நேரம் ஆகிவிடும். ”சார்! சீக்கிரம் சீக்கிரம்” எனக் கடைக்காரர் அவசரப் படுத்தலுக்கு இடையே சுபாவுக்கு அன்றைய பணிச் சுருக்கம் பற்றித் தெரிவிப்போம். விரிவாக எழுதவோ, சிந்தனை செய்யவோ எங்களுக்கும் நேரம் இருக்காது; கடைக்காரரும் விடமாட்டார்.
பணி எங்களால் தாமதம் ஆனதாக எப்போதுமே இருந்ததில்லை; செங்கல்பட்டில் இருக்கும் முகவரிகள் ஒவ்வொன்றாகத் தேட ஆரம் பித்தோம்.
Kumuthavalli .Dr
District library office
Chengal pattu
என்று ஒரு முகவரி இருந்தது. ஆனால் அங்கே குமுதவல்லியைப் பார்க்க இயலவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன் மாறுதல் பெற்றுச் சென்று விட்டாராம். நாங்கள் முயன்று D.L.O எனப் படும் மாவட்ட நூல கரைச் சந்தித்தோம்; ஆனால் அவர் அங்கு மூன்று கட்டு ஓலைச் சுவடிகள் முன்பு இருந்ததாகவும், ஆனால் அதைச் சென்னைப் பல் கலைக்குத் தந்து விட்டதாகவும் கூறினார். நாங்கள் தொடர்ந்து இரண்டு நாள்களாக அலைந்து அன்றுதான் இதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. எங்கிருந்தாலும் சரியான இடத்திற்குப் போய்ச் சேர்ந்தால் நன்மை தானே என்று அடுத்த இடத்தை நோக்கி நடந்தோம் .
அடுத்து பெரிய மணியகாரர் வீதியில் கருணாகரன் என்று ஒரு முகவரி இருந்தது, முழுமையான முகவரியாக இல்லாததால் கொஞ்சம் அலைய நேர்ந்தது. ஆனால் நாங்கள் ஒரு கேள்விக் கொத்து இதற்குள் தயாரித்து வைத்திருந்தோம். இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்க ஆரம்பித்தால் எப்படியும் எங்களுக்கு முகவரி இருக்கும் இடம் தெரிந்து விடும். அத்த கைய மாயக் கேள்விகள் அவை. சீராக பதிலளிப்பவரிடம் இருந்து சிந்தனையைச் சரியாகக் கொண்டு செல்லும் பாதை அடங்கிய கேள்விக் கொத்து அது. அதன்படி கருணாகரனின் முகவரியை சரியாகக் கண்டு பிடித்து விட்டோம். அங்கே சென்றால் அவர் எங்களை ஆச்சரியப்படுத்தினார். எங்களை வரவேற்று அவரிடம் இருந்த ஒரு கட்டுச் சுவடியைக் காட்டிய கருணாகரன் ," இதை வாங்க யாரோ வருவார்கள் என்பது எனக்குத் தெரியும், சித்தர்கள் எந்த ரூபத்தில் வருவார்களோ தெரியாது ஆனால் எதிர்பார்த்தேன் "எனக் கூறி எங்களை வியப்பில் ஆழ்த்தினார்; சுவடியைக் கொடையாகவும் தந்து விட்டார். என்னமோ அவரின் உள்ளுணர்வு அப்படிக் கூறி இருக் கிறது . பிறகு "இத்தனை வேர்க்க விருவிருக்க வந்திருக்கிறீர்களே, ஏதாவது குளிர் பானம் சாப்பிடுகிறீர்களா ? "என அன்புடன் வினவினார். எங்களுக்கோ அதிகம் பேசாமலேயே ஒரு கட்டு ஓலைச் சுவடி கிடைத்தது பரம சந்தோஷம் ஆயிற்று. எனவே அவருடைய அன்பிற்கு நன்றி கூறி விடை பெற்றோம். எங்களுடைய வழக்கமான வளவளப் பேச்சு அடுத்த இடத்திற்காக சேமிப்பு ஆனது. பேச்சைக் குறைத்தால் தானே பெரிய சாதனைகள் செய்யமுடியும் !
அடுத்துக் கிள்ளிவளவன் என்று ஒரு முகவரி. அங்கே போய்ப் பார்த்த போது அவர் செங்கல்பட்டு அரசு கலைக்கல்லூரியில் துறைத் தலைவ ராகப் பணிபுரிவது தெரிந்தது. அவர் எங்களுக்குப் பயனுள்ள குறிப்புகள் பல கொடுத்தார். அவரிடம் நன்றி கூறிப் புறப்பட்டோம் .
பெரிய நெமிலி என்ற இடத்தில் கோவிந்த நாயக்கர் என்பவரிடத்தில் ஒரு கட்டுப் பெற்றோம் .
அடுத்துக் காஞ்சிபுரம் சென்றோம் . அங்கே
NARAYANA SEVASRAMA
VAITHHIYA SALAI
என்று ஒரு முகவரி இருந்தது . அந்த இடத்திற்குப் பலரை விசாரித்தபடி சென்றோம். அது ஒரு சிறந்த வைத்திய சாலையாக விளங்கியது. அது ஆன்மிகம் சம்பந்தப்பட்ட ஒரு வைத்திய சாலை. பல நோயாளிகள் அங்கே காத்துக் கிடந்தனர். சிறப்புச் சிகிச்சைகள் பல இங்கே அளிக் கப்படுவதாக அங்கே காத்திருந்தவர்கள் கூறினார்கள். அங்கே ஒரு தெய்விகக் களை வீசியது. எங்களுக்கும் இங்கே ஏதாவது சுவடிகள் கிட்டும் என்ற ஆசை மனத்தில் துளிர்த்தது.
எங்கள் அலைச்சலுக்கு பதிலளிக்க ஓர் அலுவலர் வந்து சேர்ந்தார். அவர் எங்களை அமரச்சொல்லி, அவர்களுடைய வைத்தியச் சிறப்பு களைக் கூறி, ஓலைச் சுவடிகள் ஏதும் தற்போது இல்லை என்றார். அங்கே ஜீவ சமாதி ஆன முந்தைய மூன்று சாமிகளைப் பற்றிக் கூறி மூன்று இடங்களைக் காட்டினார்; அவை கோவில்களாக தற்போது விளங்குகின்றன. மீண்டும் ஒரு முறை வரவேண்டும் என்ற பட்டியலில் இதையும் மனத்தில் சேர்த்துக் கொண்டு, நன்றி கூறி அடுத்த இடம் நோக்கிவிரைந்தோம்.
அடுத்து
SRINIVASA BHATTAR
LITTILE KANCHIPURAM
SOUTH MADA STREET
KANCHIPURAM
என்ற முகவரிக்குச் சென்றோம். தெற்கு மாட வீதியா? மாட வீதியா என்ற சந்தேகம் வந்தது; ஆனாலும் விசாரித்துச் சென்றோம். அது தெற்கு மாட வீதிதான். வரதராஜ ஆலய மாட வீதி அது; ஆனால் நாங்கள் போவதற்குள் ஸ்ரீனிவாச பட்டர்தான் அவசரப்பட்டு இறந்து விட்டார் .
இறந்து சில ஆண்டுகள் ஆவதாக அவர் மகன் ரங்க பட்டர் தெரிவித்தார். அவர் நல்ல சாஸ்திர நிபுணராகத் தென்பட்டார். அவரின் தந்தையைக் காண முடியாமல் போனது குறித்து அவரிடம் வருத்தம் தெரிவித்தோம். குடும்பமே பாரம்பரியமான அறிவு ஜீவிகள். வேத
விற்பனர்கள், சாஸ்திர நிபுணர்கள். ரங்க பட்டர் அவர்களிடம் மூன்று கட்டுகள் கோயில் கட்டும் கலை பற்றிய சாஸ்திரம் பரிபூரணமான ஒரு நூலாக இருந்ததாகவும், அதில் கோயில் எழுப்ப முதலில் பூமி பரீக்ஷை செய்வது எப்படி என்பதில் தொடங்கி, கும்பாபிஷேகம் செய்வது எப்படி என்பது வரை அனைத்து விபரங்களும் பூரணமாக இருந்ததாகவும், அதன் தொன்மையையும் அருமையையும் அறிந்த பல வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் ஜெர்மனி ,அமெரிக்கா முதலிய இடத்தில் இருந்து வந்து பார்த்துக் குறிப்பெடுத்துச் சென்றதாகவும் எங்களிடம் கூறினார். அவர் கூறக் கூற எங்களின் ஆவலும் அதிகம் ஆயிற்று.
இப்போது அந்தச் சுவடிகள் எங்கே? நாங்கள் பார்க்கலாமா என்றோம் ;ஆனால் அவர் அந்தச் சுவடிகளை ஆராய்ச்சிக்காக பரோடா பல்கலையில் இருந்து வாங்கிச் சென்றிருப்பதாகவும் , அவைகளைக் கொடை யாகத் தரவில்லை, இரவலாகத்தான் தந்திருக்கிறோம் என்றார். எங்களுக்கு இத்தகைய அருமையான சுவடிகளைக் கண்ணால் பார்த்துக் கையால் தொட இயலவில்லையே என்ற ஏமாற்றம் உண்டாயிற்று. பிறகு ரங்க பட்ட்ர் எதிரே இருந்த ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் இத்தகைய சாஸ்திர பிரமாணமாக, ஒரு முன் மாதிரியாகக் கட்டப் பட்டிருப்பதாக அக்கோவிலைப் பற்றியும் விரிவாகக் கூறினார்.
மீண்டும் வந்து பார்க்க வேண்டிய பட்டியலில் அவரையும் வரதராஜப் பெருமாளையும் சேர்த்துக் கொண்டு அவசரமாக அங்கிருந்து புறப் பட்டோம் இத்தனையும் நடந்து கொண்டிருக்கும் போதே இடை இடையே முனைவர் கோவை மணி வக்கீல் நரேந்திர குமாரிடம் பேசிக் கொண்டி ருந்தார். முதலில் கொஞ்சம் பிடி கொடுக்காமல் பேசிய நரேந்திரன் கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் இருந்த மூன்று சுவடிக் கட்டுகளை யும் கொடையாகத் தர சம்மதித்தார். எங்களைப் பற்றிய எல்லா விபரங்களையும் விரிவாகக் கேட்டதோடு அறிமுக அட்டை இருக்கிறதா என்றும் கேட்டார். எங்களிடம் இந்த தேடுதல் பயணத்திலேயே அறிமுக அட்டையைப் பற்றிக் கேட்ட முதல் மனிதர் இந்த வக்கீல் நரேந்திரன் தான். வக்கீல் அல்லவா ? அவர் தொழிலில் கெட்டிக்காரராக இருந்தார் . எங்களை மாலையில் காஞ்சிபுரத்தில் ஒரு முகவரி தந்து அங்கே வரச் சொன்னார். நாங்களும் அவர் கூறிய முகவரிக்கு அவர் சொன்ன நேரத்தில் சரியாகப் போய்ச் சேர்ந்தோம் .
அங்கே வக்கீல் நரேந்திரன் எங்களுக்காகக் காத்திருந்தார். அது ஒரு அச்சகம். அதன் பெயர் அன்பு அச்சகம் என்று இருந்தது. நரேந்திரன் மூன்று சுவடிக் கட்டுகளையும் எடுத்து வந்து காண்பித்தார். திரு வேங்கட மாலை, அருணாசல புராணம், தவிர நாலடியார் போன்ற நீதி நூல்களும் அவற்றில் இருப்பதாக அவர் கூறினார்.
அவர் தரும் இந்தக் கொடையில் அவரது தாத்தாவான தம்பிரான் நாயக்கர், மகன் லட்சுமணன், பேரன்கள் மூன்று பேர் மேலும் அவர்கள் அம்மா பெயரும் இடம் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் அவரது உறவினரான பேரா. ஸ்ரீநிவாசன் வளசரவாக்கம் சென்னை என்பவரிடம் நிறையச் சுவடிகள் இருப்பதாகத் தகவல் தெரிவித்து அவரின் தொலைபேசி எண்ணும் தந்தார். முனைவர் கோவை மணி உடனே அவரிடம் தொலைபேசியில் பேசினார். நரேந்திரனும் அவரிடம் எங்களைப்பற்றிக் கூறி எங்களிடம் சுவடிகளைத் தரலாமா என மீண்டும் கேட்டார். நீண்ட நேரம் எங்களுடன் பேசினார். அவரிடம் சுவடிக் கட்டுகளைப் பெற்றுக்கொண்டு நன்றி கூறி விடை பெற்றோம். அத்துடன் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் எங்கள் தேடுதல் பயணம் முடிவடைந்தது. ஐந்து நாட்கள் ஓடியதே தெரிய வில்லை; எங்கள் ஓட்டத்தைப் போலவே நாட்களின் செல்லும் வேகமும் இருந்தது.
அடுத்து நாமக்கல் மாவட்டத்தில் தேடுதல் ஆரம்பிக்கத் திட்டம் வகுத்து அனைவரும் அவரவர்கள் இடம் நோக்கிய பயணத்தை நிறைந்த மனத்துடன் தொடங்கினோம். முனைவர் கோவை மணியும் பெட்டிகள் நிறைய ஓலைச்சுவடிகளுடன் தஞ்சை நோக்கிப் பயணம் தொடங்கினார்.
இன்னும் கொஞ்சம் சுவடிகளைப் பார்க்க அடுத்த பகுதிவரை காத்திருக்கவேண்டும் .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
--------------------------------------------------------
இந்தப் பதிவும் 2010 இல் எழுதப்பட்டதுதான் .இதை எழுதும் போது எனக்கும் இரண்டாம் கட்டத் தேடல் நடைபெறுமாஎன்பதுத தெரியாது . அப்போது என்னிடம் நிறைந்திருந்தெல்லாம் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி திட்டத்தை வெற்றியடைய செய்யவேண்டும் இதன் மூலம் தமிழ் சித்தர்கள் , அறிவியலார் சிந்தனைகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு அளிக்க வேண்டும் எனும் உத்வேகம் மட்டுமே
அதிர்ஷ்ட்டவசமாக அடுத்தக்கட்ட தேடல் நடைபெற்றது .அதில் நான் மட்டுமே இடம் பெற்றேன் மேலும் சுவடிகள் கண்டெடுக்கப்பட்டது .
இவ்வரிகளை இப்போது பதிவிட்டு நினைவுபடுத்தக்காரணம் , அப்போது இருந்த சூழலே இன்னமும் நிலவுகிறது . இன்னமும் தேடியெடுக்கப்படவேண்டிய சுவடிகள் நிறைய கிராமங்களில் உள்ளன .
மேலும் தமிழ் சித்தர் இலக்கியங்கள் இன்னமும் ஒப்பு நோக்கி செம்பதிப்பிக்கப்படவில்லை . ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரிப்பதிப்பின்றனர்
தொலைந்து போன , பெயர் மட்டுமே கொண்டதொல் தமிழ் நூல்கள் நிறைய இன்னமும் தேடப்படாமல் உள்ளது . சுவடிகள் முழுவதும், தேடித் தொகுக்கப்பட்டால் தமிழக வரலாற்றிலும் நிறைய மாறுதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது .
இன்னமும் சொல்லிக்கொண்டேபோக நிறைய காரணங்கள் இருக்கிறது .
அண்மையில் மறைந்த யோகி ( 92)முத்துசாமியின் பிரிவு எனக்கு நிறைய பாடங்களைத்தந்திருக்கிறது . மேலும் எனக்குத்தெரிந்த ஞானிகளை நான் இழப்பதற்குல் முடிந்தவரை அவர்களின் அனுபவங்களை ஆவணப்படுத்தவேண்டும் .
இப்போது என்னிடம் உள்ள சில சுவடிகளை ஆவணப்படுத்தவேண்டும் .
மின்னாக்கம் செய்வது முன்பு இருந்தது போல இப்போது கடினம் இல்லை .ஒரு சிறந்த கைபேசிக்கூட இப்போது .
போதும் எனவே மீண்டும் ஒரு அலசல் செய்ய ஆசைப்படுகிறேன் .இம்முறை களத்திலேயே அவைகளை ஆவணப்படுத்தப்படவேண்டும் .அவைகளை உடனேயே படித்தறியவேண்டும் சிறந்தவற்றை அப்போதே பதிப்பிக்கவேண்டும் .
இத்தனையும் கொண்ட ஒரு இணைந்த திட்டமாக அதை வடிக்க எண்ணுகிறேன் .அதற்க்கான வல்லுநர் குழுவை நான் முன்பேத திரட்டியிருக்கிறேன்
அதையும் விரைந்து செய்ய எண்ணுகிறேன் எனக்கு வயது இப்போது 68 இதுவேத் தருணம் .
எனவே முன்பு நடைபெற்றதைமீண்டும் நினைவூட்டி பின் செய்ய இருப்பதை மற்றும் செய்ய வேண்டியதை நாம் சேர்ந்தே முடிவு செய்யவே இதை எழுதுகிறேன் .ஆர்வலர்கள் இப்போது அதிகம் தேவை .
அண்ணாமலை சுகுமாரன்
11/2/18
sugumaran- இளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
உங்களுடைய அனைத்து கடின உழைப்பு
ஒரே பதிவில் போட்டு அசத்தி விட்டீர்கள்.
ஒவ்வொரு நிகழ்வும்
திகைப்பை ஏற்ப்படுத்துகிறது
அனைத்தும் அருமை.
நன்றி
ஐயா
ஒரே பதிவில் போட்டு அசத்தி விட்டீர்கள்.
ஒவ்வொரு நிகழ்வும்
திகைப்பை ஏற்ப்படுத்துகிறது
அனைத்தும் அருமை.
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1
» பால காண்டம்
» “கான்வென்டுப் படலம்”
» மனிதம் தேடிய வ.உ.சி. !
» பெண் பார்க்கும் படலம்
» பால காண்டம்
» “கான்வென்டுப் படலம்”
» மனிதம் தேடிய வ.உ.சி. !
» பெண் பார்க்கும் படலம்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum