Latest topics
» சுழியன், போளி, & கார வகைகள்-by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
4 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
First topic message reminder :
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! -- ௧- ( 1 )
வரலாற்றில் ஓலைச் சுவடிகளின் பங்கு - ௧ ( 1 )
வரலாறு என்பதன் அவசியம் கடந்து போன காலத்தை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்ப்பதற்காக மட்டும் அன்று . வரலாற்றின் தேவை நிகழ்காலத்தின் தேவைக்கேற்ப மாறக்கூடியது . சொல்லப் போனால் வாழ்வின் வளர்ச்சியே நாம் புறப்பட்ட இடத்தையும் இதுவரை கடந்து வந்த பாதையை நினைவு படுத்திக் கொள்வதையும் அதிலிருந்து பாடங்கள் பெறுவதையும் பொறுத்துத்தான் அமைகிறது .வரலாறு எத்தனை ஆழமாகப் பாடங்களை ஒரே ரீதியில் கூறினாலும் அதன் பாடங்களைச் சரிவரப் புரிந்து கொள்ளாதவர்கள் வரலாற்றில் இடம் பெறுவதில்லை.
வரலாற்றுக்கு ஆதாரமான காலத்தை ஆய்வதற்கு அந்தக் காலத்தைய இலக்கியமும், நிகழ்காலத்தில் செய்யப்படும் தொல்பொருள் ஆய்வும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. அகழ்வாய்வில் பெறப்படும் முடிவுகளை அந்தக் காலத்தைய இலக்கியச் செய்திகளோடும், அந்தக் காலத்தைய இலக்கியச் செய்திகளை அகழ்வாய்வில் பெறப்படும் சான்றுகளோடும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் . அப்போதுதான் ஓர் உறுதியான முடிவுக்கு வரஇயலும்.
ஆனால் உலகின் பெரும்பாலான இடங்களில் இதுவரை அகழ்வாய்வில் பெறப்பட்ட சான்றுகள் இலக்கியத்தோடு ஒப்பிடப்பட்டு முடிவுகள் பெறப் படவில்லை .காரணம் அங்கே தொல்லிலக்கியங்கள் அகப்படவில்லை.
எகிப்தில் பிரமிடுகள் வரலாற்றைப் பறை சாற்றிக் கொண்டு கண்ணுக்கேதிரே இன்னும் நிற்கின்றன. காலத்தை வென்ற சான்றுகள்தாம் அவை. ஆனால் ஒரே குறை ஒப்பு நோக்கத் தொல்லிலக்கியங்கள் மட்டும் அங்கே இல்லை .நம் நாட்டிலேயே கூட வட இந்தியாவில் சிந்து வெளியில் மொகஞ்சோதரோ , ஹாரப்பா அகழ்வாய்வில் கிடைத்த முடிவுகள் சான்றுகள் இருக்கின்றன . ஆனால் அந்த ஆய்வை நிலை நிறுத்தும் வகையில் ஒப்புநோக்கத் தக்க தொல்லிலக்கியங்கள் தான் கிடைக்கப் பெறவில்லை .
ஆனால் தமிழ்நாட்டின் நிலையோ நேர்மாறானது. இங்கே தொல்லிலக்கியங்கள் கொட்டிக் கிடக்கின்றன ஒப்பிட்டுப்பார்க்க. தொல்லி லக்கியங்கள் கூறும் சான்றுகளைத் தேடும் தொல்பொருள் ஆய்வுதான் அத்தனை இல்லை. பூம்புகாரின் சிறப்புக்களைக் கூறும் சிலப்பதிகாரம் நம்மிடம் உண்டு; ஆனால் பூம்புகார் இன்னும் ஆழ்கடலில் பத்திரமாகத் தேடுவாரின்றி உறங்கிகொண்டு இருக்கறது . அங்கே எகிப்தில் பிரமிடுகள், சிந்து வெளியில் மொகஞ்சோதரோ , ஹாரப்பா அகழ் வாய்வில் கிடைத்த முடிவுகள், சான்றுகள் இருக்கின்றன .ஆனால் நிலை நிறுத்த இலக்கியங்கள் போன்ற புறச் சான்றுகள்தான் இல்லை .
ஆனால் தமிழ்நாட்டின் வரலாற்றை நிலை நிறுத்த எந்த அகழ்வாய்வும் தேவைப்படாத அளவில் நம்மிடம் மிக முக்கிய ஆதாரங்கள் உள்ளன. அதுவே வழி வழி வந்து இன்றும் நிலைத்திருக்கும் பழந்தமிழர் மரபு ஆகும் . தொல்லிலக்கியங்களில் பேசப்படும் அதே மொழியை இன்றும் வழி வழியாகப் பேசிவரும் பழங்குடிகளான தமிழர் மரபு இன்றும் நீடித்து வருகிறது .இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட அதே இலக்கண விதிப்படி இன்னும் அதே போல் பாடல் இயற்றும் வல்லமை கொண்ட தமிழர் மரபு இழை இன்னும் அறுபடாமல் வாழ்ந்து வருகிறது; சீரிளமை குறையாமல் தமிழ்க்குடி வாழ்ந்து வருகிறது. ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என வாழ்ந்த குலம் இன்னும் வாழ்ந்து வருகிறது .
வாழும் வரலாற்றுச் சின்னங்கள்தான் தொல் தமிழர்கள் .
அவர்களிடமே இன்னும் தொல்லிலக்கியங்கள் ஓலைச் சுவடிகளிலே எழுதப்பட்டு ஆண்டாண்டு காலமாகப் பாதுகாப்பாக உள்ளன; வாழும் தொல்குடிகளும் இருக்கின்றனர்; ஆனால் இதை அனைவரும் ஒப்புக் கொள்ளும் வகையில் புறச் சான்றுகளான அகழ்வாய்வுகள் தான் தேவை .
தமிழர்களான நாம் உண்மையில் அதிர்ஷ்டம் செய்தவர்கள். ஆயிரம், இரண்டாயிரம் வருஷத்திற்கு முன் வாழ்ந்த ஒரு கவியின் உள்ளத்தை அறியக்கொடுத்து வைத்திருக்கிறோம்; அந்த மொழி இன்னும் அதே வடிவில் இருக்கிறது . இன்னும் அதில் உள்ள சொற்கள் நமக்குப் புரிகின்றன. அதே பொருளில் இன்னும் அதே சொல் புழக்கத்தில் இருக்கிறது .
ஆயிரம் வருடத்திற்கு முந்தைய இத்தாலிய, லத்தீன் நூல்களை அவற்றைத் தாய் மொழியாகக் கொண்டு வாசிப்பவர் தற்போது இல்லை; ஆயிரம் வருஷத்திற்கு முன் இருந்த ஆங்கில நூல் எதையும் தற் காலத்து ஆங்கிலேயர்களால் படித்து விட முடியாது.
இது எப்படித் தமிழ் நாட்டில் மட்டும் நிகழ்ந்தது ?
இதில்தான் தமிழர் தம் தொல்லறிவு வெளிப்படுகிறது . தன்னைச் சுற்றி இருந்த இயற்கையின் கொடையான செடி கொடி மரங்கள் இவை களைத் தனது உணவு மற்றும் உடல் நலம் பேணும் மருத்துவ குணங் களைக் கண்டு அவற்றைத் தக்கவாறு பயன்படுத்த அறிந்த தொல் தமிழ் இனம் மன வழி , செவி வழி பெற்ற கருத்துக் கோவைகளை வரி வடிவில் மாற்றுவதற்கு ஏற்ற சாதனம் ஒன்றைத் தங்கள் ஆற்றல்மிகு அறிவால் கண்டனர் .
கற்பக விருக்ஷமான பனை மரத்தின் ஓலைகளின் பெரும் பயன் பாட்டைக் கண்டனர். பனை ஓலைகளில் எழுதப்பட்டவை எவ்விதப் பராமரிப்பு இல்லாத போதும் குறைந்தது 300 ஆண்டுகளாவது இருக்கும் திறன் அறிந்தனர் . தொடர்ந்த பராமரிப்பு இருப்பின் ஓலைகளின் ஆயுள் நீடிப்பதையும் கண்டனர் . இவ்வாறு பழந்தமிழர் தொல் இலக்கி யங்கள் , அறிவுச் செல்வங்கள் காலம் காலமாக ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுத் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டன. வட இந்தியாவில் பனை ஓலைகள் கிடைக்காத இடங்களில் பத்திரங்கள் எனப்படும் இலைகளில் எழுதும் வழக்கம் இருந்தது .
.இதுவே தமிழ் நாட்டின் தொல் இலக்கியங்கள் தொடர்ந்து பாதுகாப் பட்டதன் காரணம் ஆனது. தமிழின் குன்றாத சீரிளைமைக்கு ஓலை களே ஒருவகையில் காரணம் ஆனது .
தொன்ம இலக்கியங்களை ஓலைகளில் பாதுகாத்துப் படிஎடுத்துப் பாதுகாத்து வருங்கால சமுதாயத்திற்கு தங்கள் மரபின் செல்வங்களாக வழங்கியதே அன்றிருந்த மொழியும், இலக்கணமும் இன்னும் ஜீவனுடன் விளங்குவதற்குக் காரணமானது எனலாம் . இன்றும் தமிழின் தொன்மைக்குச் சான்றாக நமக்குக் கிடைத்துள்ள எண்ணற்ற இலக்கியங்களுக்கும், அறிவுசார் நூல்களுக்கும் காரணம் ஓலைச் சுவடிகளில் எழுதும் பழக்கமே ஆகும் . பனையின் கொடையால்தான் நமக்கு ஜீவனுள்ள நமது தமிழ்மொழியும் அதன் தொன்மை இலக்கியங்களும் கிடைத்துள்ளன .
.
முன்னையோரின் புலமை, அவர்களுடைய கல்வி பண்பாட்டுப் பெருமை முதலியவற்றை அறிந்து கொள்வதற்குத் துணை நிற்பது ஓலை சுவடிகள் மூலம் அவர்கள் விட்டுச் சென்ற அறிவுசார்ந்த சொத்துக்களேயாகும். சென்ற நூற்றாண்டுவரை அவற்றைச் செல்வமாக மதித்துப் பூசித்து வந்தனர். சுவடிகள் இல்லாத வீடுகளே தமிழ் நாட்டில் இல்லை என்று சொல்லும்படி, அவை சிற்றூர்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருந்தன . தமிழின் தொன்மையை அறிவதற்குத் துணையாக நிற்கும் சங்க நூல்களைச் சுவடிகளில்தான் எழுதித் தொடர்ந்து போற்றிப் பாதுகாத்தனர். பனை ஓலையை நன்கு பதப்ப டுத்தி ஒழுங்குபட நறுக்கிச் சுவடிவடிவில் அமைத்து எழுதினர். இன்றும் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஓலைச் சுவடிகள் தமிழ் நாட்டின் கிராமங்களில் பரவலாகக் காணப்படுவது நமது பண்டையோரின் அறிவின் ஆழத்தை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
சீனர், கிரேக்கர், பினிசியர், உரோமர், எபிரேயர், அர்மீனியர், அராபியர் ஆகியோர் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை பைரஸ் என்னும் ஒருவகை புல்லையே எழுதப்படும் பொருளாகப் பயன்படுத்தினர். பேப்பர் என்ற சொல்லும் ''பைபரஸ்'' என்னும் சொல்லிலிருந்து உருவானது என்பர். ஆனால் இவை நமது தொல்தமிழர் பயன்பாட்டில் இருந்த ஓலைச் சுவடிகளுக்குத் தரத்தில் ஈடாகாது .
பழஞ்சுவடிகளுள் பல போற்றுவாரின்றி அழிந்து போனமையால் நமக்குக் கிடைக்க வேண்டிய பல அரிய நூல்களும் கிடைக்கவில்லை. இலக்கண இலக்கியங்கள், மருத்துவம், சோதிடம், வானசாத்திரம் முதலான பல்வேறு சுவடிகள் இன்னும் அச்சிடப் பெறாத நிலையில் கிராமங்களில் இருக்கக் கூடும். அவற்றையெல்லாம் தொகுத்து முறைப் படுத்தி ஆராய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். சுவடிகளைப் படித்து அவற்றைப் படியெடுத்துப் பாதுகாக்கும் அரிய கலையைப் பயிற்றுவிக்க ஆர்வம் கொண்டோர் அருகிப் போனதால் படி எடுக்கப் படாமலும் , பாதுகாக்கும் முறை அறியாததாலும் கொஞ்சம் கொஞ்ச மாகச் சுவடிகள் நமது கிராமங்களில் இருந்து மறையத் தொடங்கின. அப்போதுதான் எஞ்சிய ஓலைச் சுவடிகளைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தையும், அவசரத்தையும் உணர்ந்த மத்திய அரசின் கலாசாரத் துறை 2003 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் இந்தியா முழுவதும் பரவிக் கிடக்கும் பழமை வாய்ந்த ஓலைச் சுவடிகள் , காகித சாசனங்கள் இவற்றைக் காக்க ஓர் இயக்கம் ( NMM) தொடங்கியது .
இந்த இயக்கம் தமிழ் நாட்டில் NSS மாணவர்களைக் கொண்டு அந்தந்தப் பகுதியில் இருந்த கிளை நூலகர்களைக் கொண்டு ஒரு மாபெரும் கணக்கெடுப்பு நடத்தித் தமிழ் நாட்டில் மட்டும் சுமார் ஐந்து லக்ஷம் சுவடிகள் சுமார் 16,000 இடங்களில் இருப்பதாக அறிவித்தது .
இன்னும் சுவையான இனிய பல அனுபவங்கள், ஓலையைத் தேடி நாங்கள் ஓடிய போது சந்தித்த பெரிய மனிதர்கள் , அவர்கள் காட்டிய பெருந்தன்மை ,தங்களின் பாரம்பர்ய சொத்தாகப் பாதுகாத்து வந்த அறிவின் செல்வங்களை நாங்கள் கொடையாகக் கேட்டபோது எந்தப் பொருளாதார எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் முக மலர்ச்ச்சியோடு அவர்கள் தஞ்சைப் பல்கலைக்கு வழங்கிய பண்பு ,அப்போது அவர்கள் காட்டிய உபசரிப்பு இவற்றை வாழ்நாள் முழுதும் மறக்க இயலாது .
தஞ்சைத் தமிழ்ப் பல்கலையும், தமிழ் மரபு அறக்கட்டளையும் சேர்ந்து செய்து கொண்ட MOU வின்படி மேற்கொள்ளப்பட ஓலைச் சுவடிகள் சேகரிப்புத் தொடர்பாக அண்ணாமலை சுகுமாரன் ஆகிய நான், செல்வமுரளி இருவரும் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாகவும் முனைவர் கோவை மணி அவர்கள் தஞ்சைப் பல்கலை சார்பாகவும் கடந்த பெப்ருவரி, மார்ச் மாதங்களில் சென்னை ,திருவள்ளூர், காஞ்சி புரம், நாமக்கல், திருநெல்வேலி ,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மேற்கொண்ட தேடுதலின் முக்கியமான சுவையான சந்திப்புகள் அடங்கிய இத்தொடர் அவர்களுக்கு நன்றி கூறும் முகத்தான் இங்கு எழுதப்படுகின்றது .
இந்தத் திட்டத்தின் பின்புலமாக இயக்கும் சக்தியாகச் செயல்பட்ட THF நிர்வாகிகள் சுபா ,கண்ணன், ஆண்டோ இவர்களின் அன்பும் ஆதரவும் என்றும் மறக்க முடியாதவை .
------------------------------------
ஏதோ தேடும் போது , எனது இந்தப் பழைய கட்டுரை கண்ணில் பட்டது .அதை மீண்டும் நண்பர்களின் பார்வைக்குப் பகிர்கிறேன் .--
இந்தக்கட்டுரை தொடர் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன் எனது முதல் கட்ட சுவடித்த தேடல் முழுமைபெற்றபின் ,கிடைத்த ஓய்வின் போது எழுதியது
எனது இரண்டாம் கட்ட தேடலில் பேராசிரியர் கோவைமணி , கணினி நிபுணர் செல்வமுரளி ஆகியோர் வரவில்லை .நான் மட்டுமே பயணித்தேன் .
அந்த இரண்டாம் கட்டத்தில் மட்டுமே பேருஇம்பாலான சுவடிகள் சுமார் 70,000 ஏடுகள் கண்டுபிடிக்கப்பட்டு தமிழ்ப் பலகலைக் கழகத்தில் ஒப்படைக்கப்பட்டது .
இந்த செய்திகளும் அப்போதேஇணையத்தில் பதிவு செய்யப்பட்டுவிட்டது .
அண்ணாமலை சுகுமாரன் M.A,
21/11/17
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! -- ௧- ( 1 )
வரலாற்றில் ஓலைச் சுவடிகளின் பங்கு - ௧ ( 1 )
வரலாறு என்பதன் அவசியம் கடந்து போன காலத்தை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்ப்பதற்காக மட்டும் அன்று . வரலாற்றின் தேவை நிகழ்காலத்தின் தேவைக்கேற்ப மாறக்கூடியது . சொல்லப் போனால் வாழ்வின் வளர்ச்சியே நாம் புறப்பட்ட இடத்தையும் இதுவரை கடந்து வந்த பாதையை நினைவு படுத்திக் கொள்வதையும் அதிலிருந்து பாடங்கள் பெறுவதையும் பொறுத்துத்தான் அமைகிறது .வரலாறு எத்தனை ஆழமாகப் பாடங்களை ஒரே ரீதியில் கூறினாலும் அதன் பாடங்களைச் சரிவரப் புரிந்து கொள்ளாதவர்கள் வரலாற்றில் இடம் பெறுவதில்லை.
வரலாற்றுக்கு ஆதாரமான காலத்தை ஆய்வதற்கு அந்தக் காலத்தைய இலக்கியமும், நிகழ்காலத்தில் செய்யப்படும் தொல்பொருள் ஆய்வும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. அகழ்வாய்வில் பெறப்படும் முடிவுகளை அந்தக் காலத்தைய இலக்கியச் செய்திகளோடும், அந்தக் காலத்தைய இலக்கியச் செய்திகளை அகழ்வாய்வில் பெறப்படும் சான்றுகளோடும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் . அப்போதுதான் ஓர் உறுதியான முடிவுக்கு வரஇயலும்.
ஆனால் உலகின் பெரும்பாலான இடங்களில் இதுவரை அகழ்வாய்வில் பெறப்பட்ட சான்றுகள் இலக்கியத்தோடு ஒப்பிடப்பட்டு முடிவுகள் பெறப் படவில்லை .காரணம் அங்கே தொல்லிலக்கியங்கள் அகப்படவில்லை.
எகிப்தில் பிரமிடுகள் வரலாற்றைப் பறை சாற்றிக் கொண்டு கண்ணுக்கேதிரே இன்னும் நிற்கின்றன. காலத்தை வென்ற சான்றுகள்தாம் அவை. ஆனால் ஒரே குறை ஒப்பு நோக்கத் தொல்லிலக்கியங்கள் மட்டும் அங்கே இல்லை .நம் நாட்டிலேயே கூட வட இந்தியாவில் சிந்து வெளியில் மொகஞ்சோதரோ , ஹாரப்பா அகழ்வாய்வில் கிடைத்த முடிவுகள் சான்றுகள் இருக்கின்றன . ஆனால் அந்த ஆய்வை நிலை நிறுத்தும் வகையில் ஒப்புநோக்கத் தக்க தொல்லிலக்கியங்கள் தான் கிடைக்கப் பெறவில்லை .
ஆனால் தமிழ்நாட்டின் நிலையோ நேர்மாறானது. இங்கே தொல்லிலக்கியங்கள் கொட்டிக் கிடக்கின்றன ஒப்பிட்டுப்பார்க்க. தொல்லி லக்கியங்கள் கூறும் சான்றுகளைத் தேடும் தொல்பொருள் ஆய்வுதான் அத்தனை இல்லை. பூம்புகாரின் சிறப்புக்களைக் கூறும் சிலப்பதிகாரம் நம்மிடம் உண்டு; ஆனால் பூம்புகார் இன்னும் ஆழ்கடலில் பத்திரமாகத் தேடுவாரின்றி உறங்கிகொண்டு இருக்கறது . அங்கே எகிப்தில் பிரமிடுகள், சிந்து வெளியில் மொகஞ்சோதரோ , ஹாரப்பா அகழ் வாய்வில் கிடைத்த முடிவுகள், சான்றுகள் இருக்கின்றன .ஆனால் நிலை நிறுத்த இலக்கியங்கள் போன்ற புறச் சான்றுகள்தான் இல்லை .
ஆனால் தமிழ்நாட்டின் வரலாற்றை நிலை நிறுத்த எந்த அகழ்வாய்வும் தேவைப்படாத அளவில் நம்மிடம் மிக முக்கிய ஆதாரங்கள் உள்ளன. அதுவே வழி வழி வந்து இன்றும் நிலைத்திருக்கும் பழந்தமிழர் மரபு ஆகும் . தொல்லிலக்கியங்களில் பேசப்படும் அதே மொழியை இன்றும் வழி வழியாகப் பேசிவரும் பழங்குடிகளான தமிழர் மரபு இன்றும் நீடித்து வருகிறது .இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட அதே இலக்கண விதிப்படி இன்னும் அதே போல் பாடல் இயற்றும் வல்லமை கொண்ட தமிழர் மரபு இழை இன்னும் அறுபடாமல் வாழ்ந்து வருகிறது; சீரிளமை குறையாமல் தமிழ்க்குடி வாழ்ந்து வருகிறது. ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என வாழ்ந்த குலம் இன்னும் வாழ்ந்து வருகிறது .
வாழும் வரலாற்றுச் சின்னங்கள்தான் தொல் தமிழர்கள் .
அவர்களிடமே இன்னும் தொல்லிலக்கியங்கள் ஓலைச் சுவடிகளிலே எழுதப்பட்டு ஆண்டாண்டு காலமாகப் பாதுகாப்பாக உள்ளன; வாழும் தொல்குடிகளும் இருக்கின்றனர்; ஆனால் இதை அனைவரும் ஒப்புக் கொள்ளும் வகையில் புறச் சான்றுகளான அகழ்வாய்வுகள் தான் தேவை .
தமிழர்களான நாம் உண்மையில் அதிர்ஷ்டம் செய்தவர்கள். ஆயிரம், இரண்டாயிரம் வருஷத்திற்கு முன் வாழ்ந்த ஒரு கவியின் உள்ளத்தை அறியக்கொடுத்து வைத்திருக்கிறோம்; அந்த மொழி இன்னும் அதே வடிவில் இருக்கிறது . இன்னும் அதில் உள்ள சொற்கள் நமக்குப் புரிகின்றன. அதே பொருளில் இன்னும் அதே சொல் புழக்கத்தில் இருக்கிறது .
ஆயிரம் வருடத்திற்கு முந்தைய இத்தாலிய, லத்தீன் நூல்களை அவற்றைத் தாய் மொழியாகக் கொண்டு வாசிப்பவர் தற்போது இல்லை; ஆயிரம் வருஷத்திற்கு முன் இருந்த ஆங்கில நூல் எதையும் தற் காலத்து ஆங்கிலேயர்களால் படித்து விட முடியாது.
இது எப்படித் தமிழ் நாட்டில் மட்டும் நிகழ்ந்தது ?
இதில்தான் தமிழர் தம் தொல்லறிவு வெளிப்படுகிறது . தன்னைச் சுற்றி இருந்த இயற்கையின் கொடையான செடி கொடி மரங்கள் இவை களைத் தனது உணவு மற்றும் உடல் நலம் பேணும் மருத்துவ குணங் களைக் கண்டு அவற்றைத் தக்கவாறு பயன்படுத்த அறிந்த தொல் தமிழ் இனம் மன வழி , செவி வழி பெற்ற கருத்துக் கோவைகளை வரி வடிவில் மாற்றுவதற்கு ஏற்ற சாதனம் ஒன்றைத் தங்கள் ஆற்றல்மிகு அறிவால் கண்டனர் .
கற்பக விருக்ஷமான பனை மரத்தின் ஓலைகளின் பெரும் பயன் பாட்டைக் கண்டனர். பனை ஓலைகளில் எழுதப்பட்டவை எவ்விதப் பராமரிப்பு இல்லாத போதும் குறைந்தது 300 ஆண்டுகளாவது இருக்கும் திறன் அறிந்தனர் . தொடர்ந்த பராமரிப்பு இருப்பின் ஓலைகளின் ஆயுள் நீடிப்பதையும் கண்டனர் . இவ்வாறு பழந்தமிழர் தொல் இலக்கி யங்கள் , அறிவுச் செல்வங்கள் காலம் காலமாக ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுத் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டன. வட இந்தியாவில் பனை ஓலைகள் கிடைக்காத இடங்களில் பத்திரங்கள் எனப்படும் இலைகளில் எழுதும் வழக்கம் இருந்தது .
.இதுவே தமிழ் நாட்டின் தொல் இலக்கியங்கள் தொடர்ந்து பாதுகாப் பட்டதன் காரணம் ஆனது. தமிழின் குன்றாத சீரிளைமைக்கு ஓலை களே ஒருவகையில் காரணம் ஆனது .
தொன்ம இலக்கியங்களை ஓலைகளில் பாதுகாத்துப் படிஎடுத்துப் பாதுகாத்து வருங்கால சமுதாயத்திற்கு தங்கள் மரபின் செல்வங்களாக வழங்கியதே அன்றிருந்த மொழியும், இலக்கணமும் இன்னும் ஜீவனுடன் விளங்குவதற்குக் காரணமானது எனலாம் . இன்றும் தமிழின் தொன்மைக்குச் சான்றாக நமக்குக் கிடைத்துள்ள எண்ணற்ற இலக்கியங்களுக்கும், அறிவுசார் நூல்களுக்கும் காரணம் ஓலைச் சுவடிகளில் எழுதும் பழக்கமே ஆகும் . பனையின் கொடையால்தான் நமக்கு ஜீவனுள்ள நமது தமிழ்மொழியும் அதன் தொன்மை இலக்கியங்களும் கிடைத்துள்ளன .
.
முன்னையோரின் புலமை, அவர்களுடைய கல்வி பண்பாட்டுப் பெருமை முதலியவற்றை அறிந்து கொள்வதற்குத் துணை நிற்பது ஓலை சுவடிகள் மூலம் அவர்கள் விட்டுச் சென்ற அறிவுசார்ந்த சொத்துக்களேயாகும். சென்ற நூற்றாண்டுவரை அவற்றைச் செல்வமாக மதித்துப் பூசித்து வந்தனர். சுவடிகள் இல்லாத வீடுகளே தமிழ் நாட்டில் இல்லை என்று சொல்லும்படி, அவை சிற்றூர்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருந்தன . தமிழின் தொன்மையை அறிவதற்குத் துணையாக நிற்கும் சங்க நூல்களைச் சுவடிகளில்தான் எழுதித் தொடர்ந்து போற்றிப் பாதுகாத்தனர். பனை ஓலையை நன்கு பதப்ப டுத்தி ஒழுங்குபட நறுக்கிச் சுவடிவடிவில் அமைத்து எழுதினர். இன்றும் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஓலைச் சுவடிகள் தமிழ் நாட்டின் கிராமங்களில் பரவலாகக் காணப்படுவது நமது பண்டையோரின் அறிவின் ஆழத்தை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
சீனர், கிரேக்கர், பினிசியர், உரோமர், எபிரேயர், அர்மீனியர், அராபியர் ஆகியோர் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை பைரஸ் என்னும் ஒருவகை புல்லையே எழுதப்படும் பொருளாகப் பயன்படுத்தினர். பேப்பர் என்ற சொல்லும் ''பைபரஸ்'' என்னும் சொல்லிலிருந்து உருவானது என்பர். ஆனால் இவை நமது தொல்தமிழர் பயன்பாட்டில் இருந்த ஓலைச் சுவடிகளுக்குத் தரத்தில் ஈடாகாது .
பழஞ்சுவடிகளுள் பல போற்றுவாரின்றி அழிந்து போனமையால் நமக்குக் கிடைக்க வேண்டிய பல அரிய நூல்களும் கிடைக்கவில்லை. இலக்கண இலக்கியங்கள், மருத்துவம், சோதிடம், வானசாத்திரம் முதலான பல்வேறு சுவடிகள் இன்னும் அச்சிடப் பெறாத நிலையில் கிராமங்களில் இருக்கக் கூடும். அவற்றையெல்லாம் தொகுத்து முறைப் படுத்தி ஆராய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். சுவடிகளைப் படித்து அவற்றைப் படியெடுத்துப் பாதுகாக்கும் அரிய கலையைப் பயிற்றுவிக்க ஆர்வம் கொண்டோர் அருகிப் போனதால் படி எடுக்கப் படாமலும் , பாதுகாக்கும் முறை அறியாததாலும் கொஞ்சம் கொஞ்ச மாகச் சுவடிகள் நமது கிராமங்களில் இருந்து மறையத் தொடங்கின. அப்போதுதான் எஞ்சிய ஓலைச் சுவடிகளைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தையும், அவசரத்தையும் உணர்ந்த மத்திய அரசின் கலாசாரத் துறை 2003 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் இந்தியா முழுவதும் பரவிக் கிடக்கும் பழமை வாய்ந்த ஓலைச் சுவடிகள் , காகித சாசனங்கள் இவற்றைக் காக்க ஓர் இயக்கம் ( NMM) தொடங்கியது .
இந்த இயக்கம் தமிழ் நாட்டில் NSS மாணவர்களைக் கொண்டு அந்தந்தப் பகுதியில் இருந்த கிளை நூலகர்களைக் கொண்டு ஒரு மாபெரும் கணக்கெடுப்பு நடத்தித் தமிழ் நாட்டில் மட்டும் சுமார் ஐந்து லக்ஷம் சுவடிகள் சுமார் 16,000 இடங்களில் இருப்பதாக அறிவித்தது .
இன்னும் சுவையான இனிய பல அனுபவங்கள், ஓலையைத் தேடி நாங்கள் ஓடிய போது சந்தித்த பெரிய மனிதர்கள் , அவர்கள் காட்டிய பெருந்தன்மை ,தங்களின் பாரம்பர்ய சொத்தாகப் பாதுகாத்து வந்த அறிவின் செல்வங்களை நாங்கள் கொடையாகக் கேட்டபோது எந்தப் பொருளாதார எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் முக மலர்ச்ச்சியோடு அவர்கள் தஞ்சைப் பல்கலைக்கு வழங்கிய பண்பு ,அப்போது அவர்கள் காட்டிய உபசரிப்பு இவற்றை வாழ்நாள் முழுதும் மறக்க இயலாது .
தஞ்சைத் தமிழ்ப் பல்கலையும், தமிழ் மரபு அறக்கட்டளையும் சேர்ந்து செய்து கொண்ட MOU வின்படி மேற்கொள்ளப்பட ஓலைச் சுவடிகள் சேகரிப்புத் தொடர்பாக அண்ணாமலை சுகுமாரன் ஆகிய நான், செல்வமுரளி இருவரும் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாகவும் முனைவர் கோவை மணி அவர்கள் தஞ்சைப் பல்கலை சார்பாகவும் கடந்த பெப்ருவரி, மார்ச் மாதங்களில் சென்னை ,திருவள்ளூர், காஞ்சி புரம், நாமக்கல், திருநெல்வேலி ,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மேற்கொண்ட தேடுதலின் முக்கியமான சுவையான சந்திப்புகள் அடங்கிய இத்தொடர் அவர்களுக்கு நன்றி கூறும் முகத்தான் இங்கு எழுதப்படுகின்றது .
இந்தத் திட்டத்தின் பின்புலமாக இயக்கும் சக்தியாகச் செயல்பட்ட THF நிர்வாகிகள் சுபா ,கண்ணன், ஆண்டோ இவர்களின் அன்பும் ஆதரவும் என்றும் மறக்க முடியாதவை .
------------------------------------
ஏதோ தேடும் போது , எனது இந்தப் பழைய கட்டுரை கண்ணில் பட்டது .அதை மீண்டும் நண்பர்களின் பார்வைக்குப் பகிர்கிறேன் .--
இந்தக்கட்டுரை தொடர் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன் எனது முதல் கட்ட சுவடித்த தேடல் முழுமைபெற்றபின் ,கிடைத்த ஓய்வின் போது எழுதியது
எனது இரண்டாம் கட்ட தேடலில் பேராசிரியர் கோவைமணி , கணினி நிபுணர் செல்வமுரளி ஆகியோர் வரவில்லை .நான் மட்டுமே பயணித்தேன் .
அந்த இரண்டாம் கட்டத்தில் மட்டுமே பேருஇம்பாலான சுவடிகள் சுமார் 70,000 ஏடுகள் கண்டுபிடிக்கப்பட்டு தமிழ்ப் பலகலைக் கழகத்தில் ஒப்படைக்கப்பட்டது .
இந்த செய்திகளும் அப்போதேஇணையத்தில் பதிவு செய்யப்பட்டுவிட்டது .
அண்ணாமலை சுகுமாரன் M.A,
21/11/17
sugumaran- இளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !- ௮ (8 )
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கரிவலம் வந்த நல்லூரில் வரகுணபாண்டியருடைய ஏட்டுச் சுவடிகள் எல்லாம் ஆலயத்தில் வைத்திருப்பதாக கேள்விப்பட்டு இரண்டாம் முறையாக போகலானேன் . தேவஸ்தானத்தின் தர்ம கர்த்தாவைத் தேடிச் சென்றபோது அவரைச் சேர்ந்த ஒருவரைக் கண்டேன் .
"வரகுணபாண்டியர் வைத்திருந்த ஏட்டுச் சுவடிகள் எல்லாம் ஆலயத்தில் இருக்கின்றனவாமே ?"
"அதெல்லாம் எனக்குத்தெரியாது என்னவோ வைக்கோற் கூளம் மாதிரிக் கணக்குச் சுருணையோடு எவ்வளவோ பழைய ஏடுகள் இருந்தன "
"வாருங்கள் போகலாம் "
"அந்தக் கூளங்களையெல்லாம் எனன செய்வதென்று யோசித்தார்கள் .ஆகம சாஸ்திரத்தில் சொல்லியபடி செய்து விட்டார்கள்"
"எனன செய்துவிட்டீர்கள் ? "
"பழைய ஏடுகளைக் கண்ட கண்ட இடங்களில் போடக் கூடாதாம் .அவற்றை நெய்யில் தோய்த்து ஹோமம் செய்துவிட வேண்டுமாம் ,
இங்கே அப்படித்தான் செய்தார்கள் "
"ஹா ! " என்று என்னையும் மறந்து விட்டேன்
--- என்சரித்திரம் (உ வே சா) பக்கம் 666
நாங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் ஓலைச்சுவடி தேடுதல் ஆரம்பித்தபோது முதலில் போன இடம் கரிவலம் வந்தநல்லூர் தான்.
யார் சொல்லியும் அங்கே போகவில்லை! ஆனால் ஏனோ சென்றோம்.
என்னவோ சங்கரன் கோயிலில் தங்கியிருந்த ஐந்து நாளும் அங்கே போக நேர்ந்தது .அதன் அருகில் இருந்த ஓர் ஊரில் நான்கு இடங்களில் இருந்து ஓலைகளைப் பெற்றோம். ஓரிடத்தில் அதிகச் சுவடிகள் கிடைத்தது.
ஆனால் கரிவலம் வந்த நல்லூரில் கோயிலுக்கு மட்டும் போக வில்லை; காரணம் வழக்கம் போல் நேரமின்மை.
ஆச்சரியம் என்னவென்றால் அப்போது எங்களுக்கு இந்த வரலாறு தெரியாது. இந்தச் செய்தியை நான் படித்ததே சில நாட்களுக்கு முன்தான் இந்த நூலைச் சில வருடம் முன் படித்தது உண்டு ஆனால் ஊரின் பெயர் முற்றிலும் நினைவில் இல்லை.
ஆனாலும் இன்னும் ஹோமத்தில் இடப்படாமல் பல ஓலைச் சுவடிகள் அங்கே கிட்டியது நம்பிக்கையைத் தூண்டுகிறது. ஏன் நேரே கரிவலம் வந்த நல்லூர் சென்றோம் ? ஏன் திரும்பித் திரும்பி அங்கே போக நேர்ந்தது ? இதற்கெல்லாம் பதில் இன்னொரு முறை அங்கே போனால்தான் தெரியும் போலிருக்கிறது !
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திருவள்ளூரில் !
பிப் மாதம் 13 ஆம் நாள் அன்று எங்கள் திருவள்ளூர் மாவட்டம் ஓலைச் சுவடிகள் தேடுதல் துவங்கியது. குறிப்பிட்ட நேரத்தில் நாங்கள் மூவரும் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்தோம். திருவள்ளூர் மணவாள நகர் நாங்கள் சந்திக்கக் குறிப்பிட்டிருந்த இடம். அங்கே இருந்து ஒரு மகிழ்வுந்து ஏற்பாடு செய்து கொண்டோம். திருவள்ளூர் மாவட்டம் 8 வட்டம் , 14 ப்ளாக் கொண்டது.
இதில் 650 கிராமங்கள் இருக்கின்றன. எங்களிடம் இருக்கும் NMM பட்டியலில் மொத்தம் 126 முகவரிகள் இருந்தன . நாங்கள் இந்த மாவட்டத்தையும் ஐந்து நாட்களில் முடிக்கத் திட்டமிட்டிருந்தோம் .
எங்கள்" ஓலைச் சுவடி ஊர்தி" பயணத்தைத் தொடங்கியது. ஒரு நீண்ட ஆற்றின் பாலத்தைக் கடந்த போது 'இதுதான் குசஸ்தலை ஆறு’ என்றதோடு அங்கிருந்த அகஸ்தியர் கோயிலையும் போகும்போதே பார்த்தோம் . அந்த ஆற்றின் கரையில் பல சிவன் கோயில்கள் இருப்பதைப்பின் அறிந்தேன். அங்கே இருந்த அகஸ்தியர் கோயிலை நோக்கி மனத்தில் ஒரு வேண்டுதலை விடுத்தோம்.
அகத்தியர் கோயில் இல்லாத மாவட்டமே தமிழ் நாட்டில் கிடையாது .ஆனால் அவர் வடக்கே கயிலாயத்தில் இருந்துதானே வந்ததாக வரலாறு கூறுகிறது எனவே திருவள்ளூர் வந்திருக்க வாய்ப்பு இருக் கிறது என்று எண்ணி இந்த மாவட்டத்தில் கையில் கொஞ்சமாவது ஓலைச் சுவடிகள் கிடைக்க அவர் அருள் வேண்டினோம். முதலில் திருவாலங்காடு பிளாக் பாதையை தேர்ந்தெடுத்து எங்கள் பயணம் அமைந்தது. வழக்கம் போல் பட்டியலில் இருந்த பெயர்கள் சில சமயம் கொஞ்சம் குழப்பத்தை அளித்தன.
ஒரு பிளாக் என்று கொள்ளாமல் போகும் வழியில் இருந்த ஊர்க ளையும் பார்த்துக் கொண்டு சென்றோம். அலைந்து திரிந்து முகவரி களைத் தேடியபோதும் இல்லை என்ற பதிலையே பெறமுடிந்தது.
அம்மையார் குப்பம், அருங்குளம், திருமுல்லை வாயில் எனப் பார்த்த ஊர்கள்; ஊர்கள் வரிசைதான் நீண்டன .
A ARUMUGAM
AMMAIYARKUPPAM
AMOIL TAMIL SANGA ST,
TIRUVALLUR DIST
என்று இருந்த முகவரியைத்தேடி ,அலைந்து ஓய்ந்த போதுதான் தெரிந்தது அது அறநெறி தமிழ்ச் சங்க தெரு என்று! இப்படிப்பட்ட குழப்பங்கள் நிறையவே இருந்தன.
அருங்குளம் எனும் சிற்றூர் எங்களை வியப்பில் ஆழ்த்தியது .எங்கள் பட்டியல்படி சிவன் கோயில், சமணர் கோயில் என இரண்டு முகவரி கள் இருந்தன. ஆனால் சமணர் கோயில்தான் எங்களை வியப்பில் ஆழ்த்தியது . அருகில் சென்ற போது ஏனோ திருவதிகை சிவாலயம் நினைவு வந்தது; உள்ளே சென்று பார்த்தால் மிகப்பெரிய பிரகாரங்கள், மண்டபங்கள் நடுவில் அமைத்த கருவறை, உள்ளே சென்று பார்த் தாலோ சமணர்களின் தீர்த்தங்கரர் வடிவம். இத்தனை பெரிய கருங்கல் பாறைகளால் அமைந்த சமணக் கோயிலை நான் இதுவரைக் கண்ட தில்லை; ஆனால் நின்று பார்க்க நேரம் இல்லாததால் மீண்டும் ஒரு முறை இதைப் பார்க்கவென்று வரவேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். அங்கே இருந்த அகஸ் தீஸ்வரர் கோவிலையும் தொலைவில் இருந்தே ஒரு பார்வை பார்த்து நகர்ந்தோம்.
இந்த மாவட்டப் பட்டியலிலும் நிறையக் கோயில்கள் இடம் பெற்றி ருந்தன; எதையும் விடமனமில்லாமல் கோயில் கோயிலாக அலைந் தோம் . திருமுல்லைவாயில் கோயிலிலே வெள்ளெருக்கு வேர்களினா லேயே கருவறைத் தூண்கள் அமைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம்; குருக்கள் உள்ளே இருந்ததால் அங்கே செல்ல நேர்ந்தது .
பெரியபாளையம் கோயிலுக்குச் சென்று ஓலைச் சுவடிகளைப்பற்றிப் புலன்விசாரணை செய்து விட்டு இல்லை என்றதும் கிளம்பினோம்; கோயில் அதிகாரி "இருந்து அம்மனை தரிசித்துவிட்டுப் போங்களேன் " என்று கூறியபோது நேரமில்லை எனக் கூறி விரைந்த எங்களை வியப் பாகவே பார்த்தார் அந்த அதிகாரி. எனன செய்வது எங்கள் அவசரம் எங்களுக்கு; ஐந்து நாளில் 126 முகவரியைப் பார்க்க வேண்டுமே !
திருநின்றவூர் என்ற அழகிய ஊர் அந்த ஊரின் ஆலயம் மிகப் பழமை வாய்ந்தது; சிறந்த வைணவத் தலம். அங்கும் அப்படிதான் "என்னைப் பெற்ற தாயார்" எனப் பெயர் பெற்ற அந்தப் பிராட்டியையும் பார்க்க நேரம் இல்லாமல் விரைந்தோம்; வீட்டோடு மாப்பிள்ளையாக அங்கேயே தங்கிவிட்ட பக்தவத்சலனாரையும் பார்க்க நேரமில்லை.
திருமழிசைக் கோயில் எங்கள் பட்டியலில் இல்லை; எனவே உள்ளே செல்லும் பேறும் கிட்டவில்லை. கோபுர தரிசனம் மட்டுமே கிடைத்தது. பிராயம் பத்து என ஓர் ஊர்; திருமழிசை ஆழ்வார் 10 வயதுவரை அங்கு இருந்ததால் அந்தப் பெயராம் அந்த ஊருக்கு. அங்கும் இந்தக் கதை சொல்ல வந்த பெண்மணியிடம் பேச நேரம் இல்லை என ஓட்டம்.
திருவாலங்காடு இருமுறை செல்ல நேர்ந்தது ஆனாலும் கோயிலின் மதில் சுவரை மட்டுமே தரிசித்தோம். அத்தனை வேகம் எங்கள் குறி யெல்லாம் ஓலை சுவடியிலே ! திருவேற்காடு சென்றோம், அங்கேயும் அப்படித்தான்; கோயில் அருகில் கூடச் செல்லவில்லை. ஓலைச் சுவடி இல்லாத இடத்தில் எங்களுக்கு என்ன வேலை என்பது போல் ஒரே ஓட்டம்தான்; எப்படியாவது இந்த மாவட்டத்தில் ஓலைச் சுவடிகளைப் பெற்றிடவேண்டும் என்னும் துடிப்பு எங்கள் அனைவரிடமும் இருந்தது.
அங்கே ஐயப்ப சாமி மடம் என ஒரு முகவரி இருந்தது. எங்களுக்கு உண்மையிலேயே அதன் முக்கியத்துவம் தெரியாது. வழக்கம் போல் விசாரிப்புக்கு உள்ளே சென்றோம். சென்றதும் வியப்படைந்தோம் ! தஞ்சைப் பெருவுடையாருக்குக் குடமுழுக்கு நடத்திவைத்த வயது எண்பதுக்கு மேல் ஆகிப் பழுத்த ஞானியாக விளங்கும் ஐயப்ப சுவாமி கள் அங்கே அனைவருக்கும் ஆசி வழங்கிக் கொண்டிருந்தார் .
நாங்களும் அருகில் சென்று எங்கள் ஓலைச் சுவடி தேடுதல் பற்றிப் பணிவுடன் கூறினோம் ; எங்கள் மூவரையும் தலையில் கைவைத்து வெற்றி பெற வாழ்த்தினார். ஆனாலும் அங்கேயும் ஓலைச் சுவடி கிடைக்காதது கொஞ்சம் வருத்தம்தான். ஆனால் அங்கே ஆசியுடன் சுவையான சாப்பாடும் எங்களுக்குக் கிடைத்தது. சுவாமிகளின் அன்புக் கட்டளையைத் தட்ட இயலாமல் அங்கே கிடைத்த உணவை உண்டு அடுத்த இடம் நோக்கி புறப்பட்டோம்.
திருத்தணி வட்டம் ராமன்சேரி என்ற கிராமத்தில் ஒரு வித்தியாசமான கோயிலை கண்டோம். சிவனையும் விஷ்ணுவையும் அருகருகே அமைத்து இரண்டையும் சேர்த்து வழிபடும் வியப்பினை அங்கே கண்டோம். சிவனும் விஷ்ணுவும் ஒரே கோயிலில் வேறு வேறு இடங் களில் இருப்பதைக் கண்டதுண்டு. சிவனும் விஷ்ணுவும் பாதி பாதி உடலாக அமைத்த ஓருருவம் கொண்ட சங்கர நயினார் கோயிலும் கண்டதுண்டு. ஆனால் சிவனையும் விஷ்ணுவையும் அருகருகே நிறுத்தி வழிபடுவதை இங்குதான் கண்டேன்.
இப்படியாக எங்கள் தேடல் அலைச்சல் முதல் சுவடிக்கட்டுகளைப் பெறப்போகும் பழவேற்காடு போகும் வரை நீண்டது .அதன் பிறகு தொட்டதெல்லாம் வெற்றிதான். பழவேற்காட்டில்தான் எங்கள் தேடுதலின் முதல் வேட்டை கிடைத்தது. அந்த விபரம் அடுத்த பதிவில் பார்ப்போம்.
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வழக்கம் இந்தக்கட்டுரை 2010 எழுதப்பட்டது எனக் கூறவிரும்புகிறேன் .
அப்போது அருங்குளம் என்ற ஊரில் கண்டசமணர்கள் கோயில் போல பலவற்றைத் தொடர்ந்து சென்று பார்த்தேன் .இன்றுவரை அத்தகைய சமணர் கோயில் பயணம் தொடர்கிறது .சமீபத்தில் கூட உப்புவேலூர் எனும் சமணததலம் சென்றுவந்தோம் .
அனுபவங்கள் சேர்ந்து கொண்டே வருகிறது .
தேடலும் தொடர்கிறது !
பயணங்களும் நீள்கிறது !
மூப்பைத்தேடி , அதை முடித்தவர்கள் அனுபவங்களை சேகரிக்க , 66 வருடங்களாக இதே ஆய்வில் தொடந்து வரும் வாசி யோகி முத்துசாமியுடம் (92)பயணித்தோம் .
அப்போது ஒரு ஓலைச் சுவடி கட்டும் பழனியில் பெற்றேன் . அது சுமார் 180 ஏடுகள் கொண்டது .ரோமரிஷி எழுதியது .
அதை சுத்தம் செய்து , எண்ணெயிட்டு மையிட்டு பத்திரப்படுத்தி அதை படிக்கச் செய்ய வேண்டும் .
இது பட்டியல் படி படித்துத் தேடியது இல்லை . நண்பர்களின் தகவல் மூலம் பேற்றது .
கடந்த சில வருடங்களாக நண்பர்களின் , பழகிய யானைகள் போல் , முன்பே கொடையளித்த பலர் தரும் தகவல் மூலமே பெறப்பட்டது .
கீழே உள்ள படம் இரண்டுநாட்கக்கு முன் பழனியில் பெற்ற ரோமரிஷியின் சுவடியுடையது .
அண்ணாமலை சுகுமாரன்
15/12/17
sugumaran- இளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
அருமை .
தமிழின் அருமை சிலருக்கே தெரியும் /புரியும்.
ரமணியன்
தமிழின் அருமை சிலருக்கே தெரியும் /புரியும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
ஓலைச்சுவடிகளைத தேடிய படலம் ! - ௯ (9 )
ஓலைச் சுவடி தேடல் என்பது பன்முகம் கொண்டது. சரியான சுவடியைச் சரியான நபர் இடத்தில் இருந்து பெறுதல் (acquire ) என்பது தொடக்கம்; அதன் பிரதிகளைத் திரட்டல் ( collect ) - ஓலையிலும் தாளிலும் படிகள் கிடைக்கின்றனவா என முயற்சி மேற்கொள்ளுதல், அதுபற்றிய பிற தொடர்புடைய தகவல்களை நூலகப் பதிவுகள் (cataloque ) போன்றவற்றில் இருந்து பெறுதல் அடுத்த தளமாகும்.
.
சுவடியின் வரலாறு என்பது இதில் முக்கியமானது. மூலமா, படியா என்பதுடன் தனி நபர், மடம், கல்வியாளர் என யாரால் கையாளப் பெற்றது என்ற நெறியும், யாரை எட்டியது, யாரால் ஏற்கப்பட்டது ( reach and reception ) என்பன இதனால் புலப்பட்டு அச்சுவடிக்கான வரவேற்பைப் பற்றி அறிய முடியும்.
விருப்பம், ஆர்வம், முயற்சி என்பதுடன் ஆய்வு நுணுக்கமும், அறிவுத் திறனுமே இச்சுவடி தேடல் உழைப்புக்கு உறுதுணையாகும் .
- டாக்டர் அன்னி தாமஸ்
(பதிப்பியல் எண்ணங்கள் )
பழவேற்காட்டில்!
சென்னையைப் போல் பொலிவுடன் விளங்கி இருக்கவேண்டிய பழவேற்காடுவரலாற்றின் ஒரு சிறிய மாறுபாட்டால் இன்று அது ஒரு மீன்பிடிகிராமமாக அத்தனைப பரபரபின்றிக் கழிமுகங்களும் காடு நிலம்,ஏரி, கழிமுக நீர் என நாலா பக்கமும் விதவிதமாக விரிந்து கிடக்கிறது . இங்கிருக்கும் ஏரி இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரியாகும்.
பல இடங்களில் சுற்றி அலைந்தபடியே பழவேற்காடு வந்து சேர்ந்த போது மதியம் மணி இரண்டு ஆகிவிட்டது. ஆலய வழிபாடு செய்ய வில்லை என்றாலும் வயிற்றுக்கு வழிபாடு செய்தாக வேண்டுமே ! உணவு படைத்தல் என்றுதானே கூறுகிறோம். அங்கும் இங்கும் உணவு தேடியலைத்து ஒருவழியாக எதோ கிடைத்த உணவை அள்ளிப் போட்டுக் கொண்டு புறப்பட்டோம். புலிகாட் எனப்படும் பழவேற் காட்டில் எங்கள் பட்டியல்படி ஆறு முகவரிகள் இருந்தன.
B. Haridaas
PULICAT - 601205
என்று ஒரு முகவரி; நல்ல வேளையாக மீனவர் குப்பங்களைத் தவிர்த்துப் பழவேற்காட்டில் ஒரு சில தெருக்களே இருந்தன.
கிராமங்களில் முகவரி தேடும்போது நபரின் தந்தை பெயரோ அல்லது ஜாதியோ தெரிந்து விட்டால் கண்டுபிடிப்பது சுலபம். ஜாதி தெரிந்து விட்டால் அந்த ஜாதியினர் இருக்கும் தெருவை சுலபமாக்க் காட்டி விடுவார்கள்; அல்லது அந்த ஜாதியை சேர்ந்த வேறு யாராவது ஒருவரைக் கை காட்டுவார்கள்.முதலெழுத்து மட்டும் இருக்கும் போது நாங்கள் அதற்கு விரிவுரை தருவோம். B என்றால் பாலசுப்ரமணியமாக இருக்கலாம்; பாஸ்கராக இருக்கலாம் எனச் சொல்லிக்கொண்டே போவோம். வழி சொல்பவரும் ஏதாவது தெரிந்த பெயர் வந்தால் நாங்கள் கூறும் பட்டியலின் ஓட்டத்தைச் சற்று நிறுத்தி விபரம் கூறுவார். ஜாதிக்கு இன்னும் கிராமங்களில் அதிக முக்கியத்துவம் இருக்கிறது.
ஒருவாறு ஹரிதாஸ் வீட்டை கண்டுபிடித்தோம். வீட்டின் கதவோ மூடப்பட்டிருந்தது ; " சார் சார் " என்று கதவைத் தட்டிக்கொண்டு நின்றோம். கதவைத் திறந்து ஒரு பெண்மணி வெளியில் வந்தார்;
நாங்கள் நிறைய மார்க்கெட்டிங் தந்திரங்களைக் கையாளுவோம்; முதலில் அதிக நேரம் நம்மை இருக்க அனுமதித்தால்தான் நம்மால் அதிக விபரம் அவர்களிடம் இருந்து பெறமுடியும். எனவே சீராகப் பேசி நல்ல எண்ணம் பெற முயல்வோம் .
"அம்மா நாங்கள் தஞ்சைப் பலகலையில் இருந்து ஓலைச் சுவடி தேடி வந்திருக்கிறோம் ; சார் இல்லையா ? உங்களிடம் உங்களிடம் சில ஓலைச் சுவடிகள் இருப்பதாகக் கேள்விப்பட்டோம்" என்று கூறியபடி அங்கிருந்த திண்ணையில் அமர்ந்து விட்டோம். அந்த அம்மையார் "ஆமாம், இருக்கிறது" என்றது எங்கள் சோர்வு போனஇடம் தெரிய வில்லை; சற்று நிமிர்ந்து உட்கார்ந்தோம். "ஐயா எங்கே ? " எனக் கேட்ட போது அவர் கணவர் தலைமை ஆசிரியராக அருகில் இருக்கும் பள்ளியில் வேலை செய்வதாகக் கூறினார். எங்கள் பேச்சைச் சற்றே வளர்த்தோம்; அருகில் இருக்கும் கோயில்கள், திருவிழாக்கள் முதலி யன பற்றிப் பேசி அவரிடம் எங்கள்பால் ஓர் ஈடுபாட்டினை உருவாக் கினோம். அம்மையார் உடனே “களைப்பாக இருக்கிறீர்களே, மோர் வேண்டுமா?’ என்றார்; இது அவர்களிடம் இன்னும் சற்று நெருங்க ஒரு வழி ! "இருந்தால் கொஞ்சம் தாருங்கள்; தாகமாத்தான் இருக்கு" என்றோம். மோர் குடித்தவுடன் ”ஐயா கைபேசி எண் தந்தால் அவருடன் பேசுகிறோம் ” என்றோம். பொதுவாக அவர்களின் நல்ல எண்ணத் தையும், நம்பிக்கையையும் பெறாமல் கைபேசி எண் கேட்கக் கூடாது. அப்படி அவசரப்பட்டுக் கேட்டால் ”எனக்குத் தெரியாது” என்ற உஷா ரான பதில் உடனே கிடைத்துவிடும் . இதில் மிக நுட்பமான மன விளை யாட்டுக்களைப் பயன்படுத்த வேண்டும். அந்த அம்மையாரும் மனமு வந்து இப்போது ஒத்துழைக்கும் நிலையில் இருந்தார். அவரே அவரது கைபேசியில் அவரது கணவரின் எண்ணைப் போட்டு ”இதில் நீங்களே பேசுங்கள்; இதில் பேசினால் அவர் உடனே எடுப்பார்” என்று கூறினார். அதே சமயம் எங்களிடம் எண்ணைக் கொடுக்காமல் தவிர்த்த சாமர்த் தியமும் புரிந்து விட்டது.கொடுத்தால் ’ஏன் எண்ணைக் கொடுத்தாய்?’ என அவர் கணவர் கோபிக்கும் சாத்தியக்கூறு உண்டு. நம்ம கிராமத்துத் தாய்மார்கள் மிகவும் சாமர்த்தியம்; அதுவும் கணவர் நலம் காப்பதில் மிகுந்த உஷார் !
முனைவர் மணி பேசினார். அவர் தான் வர இரவு ஆகிவிடும் என்றும், தன்னிடம் ஓலைச் சுவடிகள் இருந்தது உண்மைதான் எனவும், சில ஆண்டுகளுக்கு முன் கணக்கெடுத்தபோதே அதைப் பொன்னேரி கிளை நூலகரிடம் தந்துவிட்டதாகவும் கூறினார்.
"ஐயா இப்போது வேறு சுவடிகளே இல்லையா ? அம்மா எதோ சுவடி இருப்பதாக கூறினார்களே" எனப் பணிவுடன் கேட்டோம்.
"ஆமாம் இருக்கிறது ஆனால் அது உங்களுக்கு பயன்படாது. அது கணக்கு வழக்குப் பற்றிய ஓலைச் சுவடி"
.
"அதைப் பார்க்கலாமா ? "
"அதைப் பார்த்து நீங்கள் என்ன செய்யபோகிறீர்கள்? இதை முன்பே பார்த்துவிட்டு வேண்டாம் என்று சொல்லிப் போய்விட்டார்கள் "
.
"வந்துவிட்டோம்; எதற்கும் பார்க்கிறோமே? "
"இல்லை; அது எங்கே இருக்கிறது என்று தேடமுடியாது. அது நான் வந்துதான் செய்யவேண்டும்; நீங்கள் போய் வாருங்கள் "
அம்மையாரின் முகத்தில் அதன் இருப்பிடம் தெரியும் என்ற குறிப்பும் தெரிந்தது; ஆனாலும் கணவர் கூறிவிட்டாரே இனி எப்படிக் காட்டுவது என்ற விசனமும் தெரிந்தது. "சரி மீண்டும் அவர் இருக்கும் போது வாருங்கள், நான் காட்டுகிறேன் " என்று கனிவுடன் கூறினார். அந்த சகோதரிக்கு நன்றி கூறி அந்த இடத்தைக் காலி செய்தோம்; ஆனால் பொன்னேரி சென்று கிளை நூலகரைப் பார்க்க வேண்டும் என உறுதி செய்து கொண்டோம்.
அடுத்தமுகவரி
K.GANESAN
PULICAT 601205 என்பதுதான் .
எங்கள் அதிர்ஷ்டம் அவர் வீட்டில் இருந்தார். இவர் பழவேற்காட்டில் இருக்கும் நூலகத்தில் பகுதி நேரப்பணி செய்கிறார்.
அவரிடம் பேசி நடப்பாகிப் பொன்னேரிக் கிளை நூலகர் கைபேசி எண் பெற்றோம். கணேசனும் அவர் வீட்டில் இருந்த இரண்டு கட்டு ஓலை சுவடிகளைப் பொன்னேரி நூலகரிடம் கொடுத்ததாகக் கூறினார்.
நாங்கள் அந்த "யானை பிடிக்கும் தந்திரத்தை" கையாண்டு அவரையும் காரில் தூக்கிப் போட்டுக்கொண்டோம். அவரே பழவேற்காட்டில் இருக்கும் இதர முகவரிகளுக்கும் அழைத்துப் போனார். பாவப்பட்ட பழவேற்காட்டு மக்கள் எங்கள் கேள்விக் கணைகளில் இருந்து தப்பித் துக் கொண்டனர். முகவரி கிடைக்கும் வரை எதிரில் அகப்படும் பொது ஜனத்தை அப்படிக் கேள்விகள் கேட்டுப் பாடாகப் படுத்தி விடுவோம். எங்களுக்கு ’டீ’ எல்லாம் வாங்கிக் கொடுத்துத் தப்பித்துக் கொண்டவர்களும் உண்டு.
கணேசன் எங்களைக் கந்தசாமி குருக்கள் என்பவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த ஒரு முதியவர் தம்மிடம் இருந்த ஓலைச் சுவடிகளை சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனத்திற்குக் கொடுத்துவிட்டதாகக் கூறினார். ஆனால் அவர் வீட்டில் இன்னும் ஆகமங்களைப் பற்றிய ஏராளமான வடமொழிப் புத்தகங்களைச் சேர்த்து வைத்திருக்கிறார். அவற்றை எங்களுக்குக் காட்டினார். நாங்கள் மின்னாக்கத்தின் பயன் பற்றி அவருக்கு எடுத்துக் கூறினோம். அவரும் அவற்றை மின்னாக்கத்திற்குத் தர சம்மதம் தெரிவித்தார்; ஆனால் அங்கேயே வந்து செய்ய வேண்டும் என்றார்.
வேறு பல இடங்களுக்கு கணேசன் அழைத்து சென்றார். பெரும்பாலான இடங்களில் யாரும் இல்லை; ஓலையும் கிடைக்கவில்லை.
பிறகு கணேசனிடம் பெற்ற கைபேசி எண் வைத்துப் பொன்னேரிக் கிளை நூலகர் போனிக் பாண்டியனிடம் பேசினோம். .அவரிடம் எங்களை அறிமுகப் படுத்திக்கொண்டு அவரைப் பார்க்க இப்போது பொன்னேரி வருவதாகக் கூறினோம்; அவரும் வரச் சொன்னார். ஆனால் அவரிடம் பழவேற்காட்டில் இருந்து பெற்ற ஓலைச் சுவடிகளைப் பற்றிக் கேட்கவில்லை; அவரை நேரிலேயே பார்த்துக் கேட்கலாம் என்று முடிவு செய்தோம்.
விரைவாகப் பொன்னேரி சென்றோம்; ஒருவழியாக நூலகம் சென்றால் அங்கே நூலகர் போனிக் பாண்டியன் இல்லை. எங்களுக்கு ஏமாற்றம் ! அவரது உதவியாளர்தான் எங்களை வரவேற்று ” நூலகர் அவசர வேலையாக வெளியே சென்றுவிட்டார்; நீங்கள் வந்தால் வேண்டிய உதவி செய்யச் சொன்னார்” என்று கூறி காபி ஆர்டர் செய்தார் .
நாங்கள் பழவேற்காட்டில் திரு.போனிக் வசம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஓலைச் சுவடிகளைப் பற்றிக் கூறி அவரை அவசியம் பார்க்கவேண்டும் என்றோம். அவரும் அப்படி இங்கே எந்த ஒலைச் சுவடியும் இல்லையே என்று கூறி நூலகருக்குக் கைபேசியில் பேசினார் .
போனிக் பாண்டியனும் போனில் எங்களிடம் பேசும்போது "என்னிடம் எந்த ஓலைச் சுவடியும் இல்லையே, அப்போதே திருப்பித் தந்து விட்டேனே "என்று கூறினார். என்னடா இது இந்த ஓலை நம்மிடம் இப்படிக் கண்ணாமூச்சி காட்டுகிறதே என சற்று மயங்கினோம்; ஆனாலும் எப்படியும் பெற்றே தீருவது என முடிவு செய்து சில அதிரடித் திட்டங்களை வகுத்தோம்; பிறகு பொன்னேரியில் இருந்த சில முகவரிகளைப் பார்க்க ஆரம்பித்தோம் .
மறுநாள் அந்த ஓலைச் சுவடிகளை எப்படிக் கையில் வாங்கினோம் என்பதை அடுத்த இழையில் பார்ப்போம்.
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2010 இல் நடைபெற்ற இந்தத்தேடலைத் தொடர்ந்து எனக்கு எந்த வித அதிக முயற்சி இல்லாமல் நண்பர்கள் சிலர் மூலம் தொடர்ந்து சுவடிகள் கிடைத்துவந்தன .தமிழ் சித்தர்கள் ஓலைச் சுவடிகள் ஆய்வு நிறுவனம் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை ஆரபித்து அதன் மூலம் பெற்று வருகிறேன் .கிடைத்த சுவடிகள் பிரெஞ்சு நிறுவனம் , பிரிட்டிஷ் நூலகம் இவைகள் வாயிலாக அப்போதோதே சுத்தம் செய்து மையிட்டு மின்னாக்கம் செய்யப்பட்டு சுவடிகள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது .
கடந்த மூன்று நாட்களுக்கு முன் பழனியில் பெற்ற ரோமரிஷியின் சுவடியைத் தெரிவித்திருந்தேன் .
கிழேஉள்ளப்படம் மூன்று மாதங்களுக்கு முன் புதுச்சேரிக்கு அண்மையில் உள்ள காலாய் பட்டு என்னும் இடத்தில் இருந்து நண்பர் தியாக ராஜன் என்பவர் மூலம் இரண்டு கட்டுகள் கிடைத்தது .அதில் ஒரு கதைப்பாடல்களும் சிற்றிலக்கியமும் உள்ளதாகத் தெரிகிறது .விரைவில் அதன் விளக்கங்கள் வெளியாகும் .
அடுத்தபடம் சென்னைக்கு அருகில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பழவேற்காடு
அருகில் உள்ள ஏரியின் அழகியாக காட்சி
அண்ணாமலை சுகுமாரன்
19/12/17
sugumaran- இளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
ஐயா உங்கள் ஓலைச்சவடிகள் தேடுதல் படலத்தை படிக்கும்
போது உங்களின் உழைப்பின் உறுதி ,சிரமம், உற்சாகம் அலைகழிப்பு
அனைத்தும் தென்படுகிறது.
பிரமிப்பு அதிகரிக்கிறது.
உங்கள் பதிவுகள் அற்புதம் உங்கள் பணி தொடரட்டும்.
நன்றி
ஐயா
போது உங்களின் உழைப்பின் உறுதி ,சிரமம், உற்சாகம் அலைகழிப்பு
அனைத்தும் தென்படுகிறது.
பிரமிப்பு அதிகரிக்கிறது.
உங்கள் பதிவுகள் அற்புதம் உங்கள் பணி தொடரட்டும்.
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
ஓலைச் சுவடிகளைத தேடிய படலம் - 10
சுவடிகளில் இருக்கும் எழுத்துக்கள் செவ்வனே தெரிவதற்காகச் சுவடியில் வசம்பு, மஞ்சள் , மணத்தக்காளி இலைச் சாறு அல்லது ஊமத்தை இலைச்சாறு ,மாவிலைக் கரி ,தர்பைக் கரி முதலியவற்றைக் கூட்டிச் செய்த மையை அதில் தடவுவார்கள். அந்த மை எழுத்துக்களை விளக்கமாகக் காட்டுவதோடு கண்ணுக்கும் குளிர்ச்சியைத் தரும் .
இங்ஙனம் சுவடி படிக்கத்தொடங்கும் முன் மை தடவுவதால் அக்ஷராப்பியாசத்தை "மையாடல் விழா" என்று சொல்லுவார்கள் ..
உவேசா அவர்களின் "நல்லுரைக் கோவை" தொகுதி
-------------------------------------------------------------------------------------------------------------------------------- முதல் சுவடிக்கட்டு !
காலை 8.00 மணி. அது தமிழ் நாட்டு மக்கள் ’டீ’ அருந்தியபடி ஆங்காங்கே அமர்ந்து அரசியலை அலசும் நேரம். நானோ தேடியலைந்து காலை உணவை எப்படியோ முடித்துக்கொண்டு திருவள்ளூர் கோயில் வாசலில் எங்கள் ஓலைச் சுவடி வாகனத்தின் வருகைக்காகக் காத்திருந்தேன். எதிரில் தெரிந்த திருவள்ளூர் வீரராகவ சுவாமியின் நெடிய அழகிய கோபுரத்தைப் பார்த்தபடி நின்றேன். இன்று காலை வழக்கத்துக்கு முன்னமே தயாராகிக் காலை ஆறு மணிக்கே கோயிலுக்குச் சென்றுவிட்டேன். ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட கோலத்தில் காட்சியளுக்கும் வீரராகவப் பெருமாளையும் அருகில் உறையும் வசுமதி என்ற கனகவல்லியும் கண்டு "இன்றாவது எங்கள் ஓலை பெறும் கணக்கைத் துவக்கி வைத்திட" மனமுருகி வேண்டினேன்.
மன அமைதியுடனும், உணவுண்ட திருப்தியுடனும் காத்திருந்த போது சிறிது நேரத்தில் எங்கள் ஊர்தியும் வந்துவிட்டது. பழவேற்காட்டில் திரு ஹரிதாஸ் வீட்டில் பேசும்போதே அவர் எங்கே வேலை செய்கிறார் என்று கேட்டு முகவரி வாங்கி இருந்தோம். அவர் திருப்பாலைவனம் என்ற ஊரில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றுகிறார் என்பதையும் அறிந்தோம். முன்பே ஒரு முறை அந்த திருப்பாலைவனம் ஊர் வழியாக சென்றிருக்கிறோம். அங்கே இருக்கும் அழகிய கோயிலும் எங்களைக் கவர்ந்தது.
அருகில் சென்று பார்க்க இயலவில்லையே என்ற வருத்தம் மனத்திலிருந்தது. இப்போது மீண்டும் திருப்பாலை வனம் செல்லும் வாய்ப்பு கிடைத்ததும் மனத்தில் மகிழ்ச்சி கூடியது; ஆனால் அங்கும் கோயிலைப்பார்க்க நேரம் ஒதுக்க இயலவில்லை. ஆனாலும் பலா மரம் அங்கு ஸ்தல விருக்ஷமாகவும், யோகாம்பாள் உடனுறை திருப்பாலீஸ்வரர் அங்கே அருள் பாலிப்பதாலும் அந்தப் பெயர் வந்ததாக அறிந்தேன். இதை அறிந்த உடன்தான் ஏன் பாலை வனம் எனப் பெயர் வந்தது தமிழ் நாட்டில், அருகில் ஏதாவது பாலை வனம் இருந்திருக்குமா என்ற என்னுடைய மனதில் அரித்துக் கொண்டிருந்த அறியும் வேட்கை சற்றுத் தணிந்தது.
சரியாகப் பள்ளிக்கூடம் ஆரம்பித்ததும் நாங்கள் பள்ளிக்கூடத்தில் நுழைந்து விட்டோம். ஹரிதாஸ் அவர்களுடன் அவரது பணிக்கு இடையூறு இல்லாமல் சற்று நேரம் தனியே பேச விரும்புவதாகக் கூறினோம். அவரும் அங்கே காலியாக இருந்த ஒரு வகுப்பறையில் சென்று சற்று நேரம் காத்திருக்குமாறு கூறினார். நாங்களும் சென்று வகுப்பறையில் சமர்த்துப் பிள்ளைகளாக அமர்ந்திருந்தோம்.
எங்களை அதிகநேரம் காக்க வைக்காமல் ஹரிதாஸ் அவர்களும் வந்துவிட்டார். அவரிடம் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம் .
"ஆமாம் நேற்று வீட்டுக்கு வந்து போனதாக வீட்டில் கூறினார்கள் "என்றபடி "அதுதான் நேற்றே போனில் கூறினேனே, வீட்டில் இருக்கும் ஓலைச்சுவடி எங்கள் நிலம் பற்றிய ஆவணம். அது உங்களுக்குத் தேவை இராதே " என்றார். நாங்கள் "ஐயா நாங்கள் இங்கே தேடி வந்தது அதுபற்றிப் பேச இல்லை " "வேறு எனன வேண்டும் உங்களுக்கு ?" என்றார் அவர் முகத்தில் லேசான உஷார் நிலை, ஒரு விறைப்பு தன்மை வந்தது. "அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை ஐயா, உங்கள் ஊரைச்சேர்ந்த கணேசனும் நீங்களும் உங்களிடம் இருந்த ஓலைச் சுவடிகளைப் பொன்னேரி நூலகரிடம் தந்ததாகக் கூறினார், அது பற்றி உங்களிடம் பேசிவிட்டுப் போகலாம் என்றுதான் வந்தோம். உங்கள் வீட்டில் இருக்கும் சுவடிகள் எங்களுக்கு வேண்டாம்" என்றோம்.
ஒருவாறு சற்று இறுக்கம் நீங்கியவராக ஹரிதாஸ் "அப்படியா ! ஆமாம் நாங்கள் எங்களிடம் இருந்த ஓலைச் சுவடிகள் அனைத்தையும் நான்கு வருடம் முன்பு இதுபற்றிக் கணக்கெடுக்க வந்த பொன்னேரி நூலகர் வசம் தந்துவிட்டோம்."
"அப்புறம் பிறகு அவரைப் பார்த்தீர்களா "
"இல்லையே பிறகு பார்க்கவில்லை "
”அந்த ஓலைச் சுவடி யார் மூலமாவது உங்களிடம் திரும்பி வந்ததா?”
"இல்லையே ! இதுவரை யாரும் வநது ஓலைச் சுவடியைத் தர வில்லையே "
”ஐயா, நீங்கள் அந்த ஓலைச் சுவடிகளை நூலகரிடம் தந்ததற்கு ஏதாவது ரசீது வாங்கினீர்களா ?”
"இல்லையே, அது அவ்வளவு முக்கியமா ? ஏதோ வீட்டில் இருந்தது, வந்து கேட்டார்கள், கொடுத்துவிட்டேன் " என்றார்.
அவரைப் பொருத்தவரை அதன் முக்கியத்துவம் அவ்வளவே !
"ஒன்றும் இல்லை சார்! நேற்று பழவேற்காட்டில் இருந்து நேராக போன்னேரிதான் போனோம் .ஆனால் அங்கே விசாரித்தபோது நூலகத்தில் அந்த ஓலைச் சுவடிகளை உங்களிடம் திருப்பித்தந்து விட்டதாகக் கூறுகிறார்கள் "
"என்ன இது புதுத் தொந்தரவு ! என்னிடம் எதுவும் திரும்ப வர வில்லையே "
”இல்லை ஐயா, நீங்கள் ஏதாவது ஞாபக மறதியாக எங்காவது வாங்கி வைத்திருக்கபோகிறீர்கள் என்றுதான் பள்ளிக்கூடத்திற்கே தேடி வந்தோம் "
"இல்லை இல்லை ! என்னிடம் யாரும் திரும்பக் கொடுக்கவில்லை. சரி நீங்கள் ஒருவாரம் கழித்து வாருங்கள்; நான் பொன்னேரி போனால் விசாரிக்கிறேன் "என்று சாவதானமாகக் கூறினார்.
"ஐயா, நாங்கள் இந்த மாவட்டம் வந்து நான்கு நாள் ஆகப்போகிறது.
நாளையுடன் இங்கு எங்கள் பணி முடிவடைகிறது. நாங்கள் பொன்னேரி நூலகர் கைபேசி எண் வைத்திருக்கிறோம். உங்கள் முன்னேயே அழைக்கிறோம்; அவர் எனன சொல்கிறார் பாருங்கள் " என்றபடி பொன்னேரி நூலகர் கைபேசி எண்ணிற்கு அழைத்தோம். அவர் நேற்று நாங்கள் வந்தபோது இல்லாமல் போனதற்கு அவசரக் காரியங்கள் திடீர் என வந்துவிட்டது எனக் கூறினார். நாங்கள் மீண்டும் பழவேற்காட்டில் பெற்ற ஓலைகளைப் பற்றிக் கேட்டோம். அவர் அதை அப்போதே வாங்கிய ஆசிரியரிடமே தந்துவிட்டதாகக் கூறினார்.
நாங்கள் பணிவாக "சார், நாங்கள் இப்போது ஓலைச் சுவடிகளைக் கொடுத்த அந்த ஆசிரியரின் பக்கத்தில்தான் இருக்கிறோம்; தயவு செய்து சற்று நேரம் அவரிடம் பேசுங்கள் " என்று கூறியபடி திரு ஹரிதாஸ் வசம் கைபேசியைத் தந்தோம். வேறு ஒன்றும் கூறவோ செய்யவோ முடியாமல் இருவரும் சற்றுத் திகைத்துப் போயினர். அவர்களிடையே நீண்ட நேரம் பேச்சு நடைபெற்றது. நாங்கள் அவர்களைத் தனியே பேசவிட்டுச் சற்று தூரத்தில் போய் நின்றோம். ஒருவாறு இருவரின் பேச்சும் ஒரு முடிவுக்கு வந்தது.
திரு ஹரிதாஸ் எங்களை அழைத்தார். நூலகர் உங்களுடன் பேசவேண்டுமாம் என்று கைபேசியைத் தந்தார். நூலகர் "சார், இன்று மாலை ஐந்து மணிக்கு நூலகம் வாருங்கள்; அதற்குள் நான் தேடி எடுத்துவைக்கிறேன் " என்று கூறினார். எங்களுக்கு மகிழ்ச்சி தாளவில்லை.
பிறகு நாங்களும் இதைக் கிளறவில்லை. யார் பக்கம் தவறு என்று கண்டுபிடிப்பதில் என்ன ஆதாயம்? எங்களுக்கு வேண்டியது கிடைத்து விட்டது. பின்னர் மகிழ்ச்சியுடன் திருப்பாலநாதர் பற்றி யெல்லாம் பேசி விட்டு ஹரிதாஸ் வாங்கிக் கொடுத்த தேநீரை அருந்திவிட்டு அங்கிருந்து கிளம்பினோம் .
பிறகு வேறு பல இடங்களுக்குச் சென்றுவிட்டு சரியாக ஐந்து மணிக்கு பொன்னேரி நூலகத்தில் நுழைந்தோம்.; அங்கு நூலகரும் காத்திருந்தார்; உடனே எங்களை அமரச்சொல்லிவிட்டு அங்கிருந்த அலமாரியில் இருந்து காகிதத்தில் சுற்றப்பட்ட ஓலைச் சுவடிக் கட்டுகளை எடுத்தார் . நாங்களும் நன்றி கூறிப் பெற்றுக்கொண்டோம்; வேறு ஒன்றும் அதிகம் பேசவில்லை; நேற்று ஏன் இல்லை என்றார், இப்போது எப்படி வந்தது என்றெல்லாம் கேட்கவில்லை .அது தெரிந்து என்ன செய்யப் போகிறோம்? ஓலைதான் கைக்கு வநது விட்டதே !
எங்களுக்கு உடலெங்கும் சிலிர்ப்பு 9 நாட்கள் சுற்றி முதல் ஓலைச் சுவடிகளைக் கொடையாகப் பெற்றுவிட்டோம். மனத்திற்குள் இறை வனுக்கு நன்றி கூறினோம்.
விரைவில் அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டோம். எப்போதுமே ஓலைச் சுவடிகள் பெற்றால் உடனே அந்த இடத்தைக் காலி செய்து விட வேண்டும். ஏனெனில் கொடுத்தவரே மனம் மாறிவிடலாம் .அல்லது வேறு யாராவது சுக்கிராசாரியார் மாதிரிக் கொடுக்கும் தானத்தைக் கெடுக்கலாம்; எதற்கு வம்பு என்று உடனே இடத்தை காலி செய்து விடுவோம்.
இன்னும் சில சுவடிகளைப் பற்றிய துப்பு அன்றே கிடைத்ததைப் பற்றி அடுத்துப் பார்க்கப் போகிறோம்.
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முதல் சுவடிக்கட்டைப் பெற்றதைப்பற்றி இத்தனை விரிவாகக் கூறியது .ஏன்னெனில் சுவடிகள் தேடும் பயணத்தில் எப்படியெல்;லாம் அனுபவம் இருக்கும் என தெளிவாக்கவே .அத்தோடு எங்களிடம் இருந்த பட்டியலின் உண்மைத்தன்மையை சோதனை செய்து தெளிந்து விட்டேன் .அதனாலேயே பிறகு சுவடிகள் தொடர்ந்து கிடைக்க ஆரபித்தது /சென்னை திருவள்ளூர் பகுதி தேடல் முடியும் முன்பேத தெளிவு பிறந்து விட்டது .
பிறகு இரண்டாம் கட்ட த் தேடலில் போது கிடைத்த சுவடிகளின் பொதி மற்றும் பயணித்த வாகனம் .
அடுத்த படம் நாங்கள் சென்னையில் சுவடி தேடி 2010இல் சென்ற ராமானுஜர் நிவைவிடத்தில் எடுத்தது .இன்று கணித மேதை ராமானுஜரின் பிறந்த தினம் என்று ஒரு பதிவுப் பார்த்தேன் .நான்இன்றுத தேடும் போது இந்தப்படம் கிடைத்தது என்னுடன் இருப்பது முனைவர் கோவைமணி அவர்கள் .
அக்ண்ணாமலை சுகுமாரன்
22/12/17
sugumaran- இளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
உங்களின் மறு பெயர் பொறுமை, கடும் உழைப்பு .
வாழ்த்துகள்
ரமணியன்
வாழ்த்துகள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
ஓலைச்சுவடிகளைத தேடிய படலம் ! - ௧௧ (11 )
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆறுமுகமங்கலத்திலிருந்து ஆழ்வார்திருநகரிக்குப் போய்விட்டுத் திருநெல்வேலி வந்தேன். தெற்குப் புதுத் தெருவிலிருந்த வக்கீல் சுபபையா பிள்ளை என்பவரிடம் சில ஏடுகள் உண்டென்று கேள்வியுற்று அங்கே சென்றேன்.
"எங்கள் வீட்டில் ஊர்க்காட்டு வாத்தியார் புத்தகங்கள் வண்டிக்கணக்கில் இருந்தன. எல்லாம் பழுதுபட்டு ஒடிந்து உபயோகமில்லாமல் போய் விட்டன. இடத்தை அடைத்துக்கொண்டு யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல் இருந்த அவற்றை எனன செய்வதென்று யோசித்தேன். ஆற்றில் போட்டு விடலாமென்றும் ஆடிப்பதினெட்டில் சுவடிகளைத் தேர் போலக்கட்டி விடுவது சம்பிரதாயமென்று சில முதிய பெண்கள் சொன்னார்கள்; நான் அப்படியே எல்லா ஏடுகளையும் ஓர் ஆடிப் பதினேட்டில் வாய்க்காலில் விட்டுவிட்டேன்" என்றார்.
உ வே சா அவர்களின் ’என் சரித்திரம்’ எனும் நூலில் இருந்து
சிறியவயதில் ஆடிப் பதினெட்டில் சப்பரம் எனும் சிறிய தேர் செய்து அதை இழுத்துக்கொண்டு ஆற்றங்கரை சென்றதுண்டு; ஆனால் நல்ல வேளையாக அதில் சுவடிகளை வைத்து யாரும் இழுத்து சென்றதைப் பார்த்ததில்லை; ஆனால் இந்தப் பழக்கம் ஏன் வந்திருக்கிறது என்று தெரிந்தபோது மனம் பதறுகிறது.
உலகின் எந்த ஒரு நாட்டிலும் அவர்களின் பழைய அறிவுச் செல்வங்களான சுவடிகளுக்கு இத்தகைய ஒரு முடிவு கிடைத்ததாக எந்தச் சான்றும் இல்லை; ஆனால் நாம் மட்டும் ஏன் அப்படிச் செய்தோம ? சுவடிகள் ஹோமத்தீயில் ஆஹுதி ஆகிறது.
கட்டுக்கட்டாக ஆற்றில் வரும் புது வெள்ளத்தில் பூசனை செய்து விடப்படுகிறது ! ஏன் இப்படி ? நம் மரபுச் செல்வங்கள் மட்டும் ஏன் நம்மால் மதிக்கப்படவில்லை ?
இப்படி அழிந்த செல்வங்கள் எத்தனை எத்தனையோ !
------------------------------------------------------
முடிவடைந்த திருவள்ளூர்த் தேடல்
ஆடவல்லான் நாட்டியமாடிய பஞ்ச சபைகளில் முதல் தலமாவதும், ரத்தினசபை என்றழைக்கப்படுவதுமான திருவாலங்காட்டுக்கு நாங்கள் மீண்டும் போக நேர்ந்தது. பலாவனத்தில் இருந்து ஆலங்காட்டிற்குச் சென்றோம். ஆலங்காட்டிலும் சிதம்பரம் மாதிரி ஒரு ரகசியம் மறைந்து கிடக்கிறது. நடராஜருக்குப் பின்புறம் சன்னிதியில் பாதியை மறைத்துச் சுவர் கட்டப் பட்டுள்ளது; இதற்குள் எப்போதும் காரைக் காலம்மையார் சிவ தாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருப்பதாக ஒரு வரலாறு இருக்கிறது. காரைக்காலம்மையார் மூத்த திருப்பதிகம் பாடி, முக்தியடைந்த ஸ்தலம் இதுவே.
திருவாலங்காட்டில் பட்டியலின் படி நிறைய முகவரிகள் இருந்தன.
நாங்கள் ஒவ்வொன்றாகப் பார்த்து வந்தோம். பலருக்கும் ஓலைச் சுவடியுடன் தொடர்பே இல்லை எனக் கூறிவிட்டார்கள். ஆனால் அதில் கணேசன் என்பவர் மட்டும் ” சுமார் 120 ஆண்டுகளுக்கு முன் எம் முன்னோர் வருடாவருடம் நாடகம் போடுவது உண்டு. அது சம்பந்த மான மகா பாரதக்கதைகளைக் கவிதையாக எழுதிய ஓலைச்சுவடிப் பாடங்கள் எங்கள் வீட்டில் இருந்தன; ஆனால் நாங்கள் படித்துவிட்டு வேறுவேறு வேலைகளுக்கு இரண்டு தலைமுறையாக போகத் தொடங்கியதும் இந்த நாடகம் போடும் வழக்கம் எங்கள் குடும்பத்தை விட்டுப் போய்விட்டது" என்றார்.
அவரது பாட்டனார் பெயர் தாண்டவ ராய ரெட்டியார். அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற சகோதரர்கள் பெயர்கள் எங்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தன. ஆவலை அடக்க முடியாத நாங்கள் "எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருக்கி றோம் கொஞ்சம் தேடிப்பாருங்கள் " என்று நயமாகப் பேசத்தொடங்கி னோம் . அவர் ” நான் அரசுப் போக்கு வரத்துத்துறையில் நடத்துனராக இருக்கிறேன் . எனக்கு இந்த ஓலைச் சுவடி பற்றிய அறிவோ, ஆவலோ கொஞ்சம் கூடக் கிடையாது; நான் வீடு கட்டிக்கொண்டு தனியே வந்து விட்டேன்; அப்போதில் இருந்தே நான் வீட்டில் எந்தச் சுவடிகளையும் எப்போதும் கண்டதில்லை ; எனவே தேடவேண்டிய அவசியமே இல்லை” என்றார்; ஆனாலும் வாடத்தொடங்கிய எங்கள் முகத்தைக் கண்டு எனன நினைத்தாரோ " சரி, வாருங்கள். எங்கள் பூர்வீக வீட்டில் இப்போது எங்கள் அண்ணன்தான் இருக்கிறார்; அவரிடம் அழைத்துப் போகிறேன்" என்றார். எங்கள் முகவரிப் பட்டியலில் அவர் அண்ணன் பெயரும் இருந்தது; எப்படியும் போகத்தான் போகிறோம்; ஆனால் அலைந்து திரிந்து போவதைவிட வழி தெரிந்தவர் கூடப் போவது சுலபமல்லவா? எனவே சந்தோஷத்துடன் அவருடன் புறப்பட்டோம் .
அவர் அண்ணன் திரு கோதண்டம் வீட்டிற்குச் சென்றடைந்தோம் .
தம்பி உள்ளே சென்றுவிட்டு வெளியில் வந்தார் ."அண்ணன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். நீங்கள் வந்திருப்பதைக் கூறிவிட்டேன், அவர் உட்காரச் சொன்னார் " என்றார். உட்கார்ந்ததும் ஆசைகள் கிளை விட்டுப் பெருக ஆரம்பித்தன. நிச்சயம் ஏதோ பெரிதாக இங்கே கிடைக்கப் போகிறது என எண்ணங்கள் ஓடத்தொடங்கின. உட்காரச் சொன்ன தம்பி அதற்குள் போய் எங்களுக்கு குளிர்பானம் வாங்கி வந்துவிட்டார். நாங்கள் இந்த இரண்டு மாதத்தில் நாங்கள் சென்னையில் இருந்து கன்னியாகுமரிவரை சுற்றி வந்து விட்டோம். இதில் வாழும் தமிழரிடம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அதிசய குணம் இந்த விருந்தோம்பல்தான். அனைவருமே கட்டாயமாக வீட்டுக்கு வருவோருக்கு ஏதாவது உண்பதற்கோ, குடிப்பதற்கோ தர விரும்புகிறார்கள்; அதை மறுப்பது அவர்களுக்குப் பிடிப்பதில்லை. எனவே நாங்களும் விருப்பமுடன் ஏற்றுக் கொள்வோம்; இது மேலும் ஒரு சுமுக நிலையையும் அங்கே தோற்றுவிக்கும்.
சில இடங்களில் குடிக்க நீராவது கொடுக்காமல் இருப்பதில்லை.
நீரை மட்டும் வாங்கிப் பேசாமல் கொஞ்ச நேரம் கையில் வைத் திருந்து, பிறகு அவர்கள் பார்க்காத போது மெல்லக் கீழே வைத்து விடுவோம். ஓர் இடத்தில் இப்படித்தான் உற்சாக மிகுதியில் தட்ட மாட்டாமல் அவர்கள் கொடுத்த தண்ணீரைக் குடித்த்தால் அன்றைய இரவே மாத்திரை வாங்க நூறு ருபாய் செலவு செய்ய நேர்ந்தது; எனவே அது ஓர் எச்சரிக்கையாக எங்கள் பயணம் முழுவதும் அமைந்தது.
நாங்கள் குளிர்பானம் அருந்தி முடிப்பதற்குள் அண்ணன் கோதண்டமும் சாப்பிட்டுவிட்டு அருகில் வந்து திண்ணையில் அமர்ந்தார்; கிராமங் களில்தான் இன்னும் சில இடங்களில் திண்ணை இருக்கிறது, இப்படி உட்கார்ந்து பேச வசதியாக. காற்றோட்டமான திண்ணைப் பேச்சின் சுகமே தனி !
வழக்கம் போல் எங்கள் அறிமுகம் , எங்கள் பயணத்தின் நோக்கம் இவை பற்றிய விளக்க உரை எங்களால் அளிக்கப்பட்டது.
அவரும் அவரது மலரும் நினைவுகளில் ஆழ்ந்தார்.
பிறகு " தம்பி சொன்னது உண்மைதான்; நிறையச் சுவடிகள் பலகாலம் எங்களிடம் இருந்தன. இரண்டு தலைமுறையாக எங்கள் குடும்பத்தில் அவற்றைப் படிப்பவர் குறைந்து போனதால் நாங்களும் சுவடிகளைக் கவனிப் பதில்லை; அவைகளே மெல்ல மெல்ல அழியத்தொடங்கின. சரஸ்வதி பூஜை காலங்களில் அவற்றைத் தேடி எடுத்து வைத்துப் படைப்ப துண்டு; பிறகு பரண் மேலேயே வைத்துவிடுவோம். " என்றார்.
”இப்போ இருப்பவைகளைக் கொஞ்சம் காட்டுங்களேன், அவைகளை யாவது அழிவில் இருந்து காப்பாற்றுவோம் "
" கொஞ்ச நாள் முன்னே வந்திருக்கக் கூடாதா? ஒரு மூன்று மாதத்திற்கு முன் நீங்கள் வைத்திருக்கும் அதே பட்டியலை வைத்துக்கொண்டு வருவாய்த் துறை அதிகாரிகள் எனது வீட்டிற்கு வந்தார்கள்; அவர்களும் நீங்கள் சொல்வதுபோல் கூறி எங்களிடம் இருக்கும் ஓலைச்சுவடி பற்றிக் கேட்டார்கள். எங்களால் அப்போதும் உடனே ஓலைச் சுவடிகளைத் தேடி எடுக்க முடியவில்லை. நாங்கள் அவர்களிடம் தேடிப்பார்க்கிறோம் என்று கூறினோம் . பிறகு ஒரு வாரத்தில் சுவடிகளைத் தேடி எடுத்து நாங்களே நேரில் திருத்தணி சென்று திருத்தணி தாசில்தாரிடம் கொடுத்துவிட்டோம். "
" எத்தனை கட்டுகள் கொடுத்தீர்கள் ?"
"நான்கு கட்டுகள், சுமார் 200 ஏடுகள் இருக்கும்; நாங்கள் தாசில்தாரிடம் ஓலைச் சுவடிகளைத் தந்ததும் அவர்கள் ஓர் ஒப்புதல் கடிதம் கொடுத் தார்கள் ; அதை வேண்டுமானால் காட்டட்டுமா ? "
"வேண்டாம் வேண்டாம் அதைப் பார்த்து எனன செய்யப்போகிறோம் ?"
முனைவர் கோவை மணி அவரிடம் தஞ்சைப் பல்கலைதான், அனைத்து மாவட்டத் தலைவர்களுக்கும் கடிதம் எழுதியிருப்பதாகவும், அதன் தொடர்பாகவே திருவள்ளூர் மாவட்டத்தலைவர் மூலம் நடவ டிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்; பிறகு நாங்கள் சென்ற பல இடங்களிலும் வருவாய்த் துறை அதிகாரிகள் வந்தார்கள்; ஓலைச்சுவடி பற்றிக் கேட்டார்கள் என்ற தகவல்களை எங்களுக்கு அந்த அந்த மாவட்டத்தில் கூறினார்கள். பிறகு திருத்தணி சென்று தாசில்தாரை சந்திக்கவேண்டும் என்று முனைவர் கோவைமணி கூறினார் .
பிறகு அடுத்த இடங்களையும் பார்க்க விரைந்தோம். நல்லாத்தூர் எனும் கிராமத்தில் தேடி அலைந்து பட்டியலில் இருந்த பாலசுப்ரமணித்தைப் பார்க்க அவர் வீட்டிற்குச் சென்றடைந்தோம் .அங்கே அவர் இல்லை; அவரின் சிறிய தந்தை ஆறுமுக உடையாரை சந்தித்தோம் . ” எங்க குடும்பம் பரம்பரையில் வைத்திய குடும்பம்; சுற்றுப்பட்டு ஐம்பது கிராமங்களில் இருந்து ஒரு காலத்தில் மக்கள் தேடிவந்து காத்துக் கிடப்பார்கள். நோய்களை மருந்து, மாந்திரீகம் இவைகளால் எங்கள் முன்னோர்கள் நீக்கினார்கள்" எனப் பெருமையுடன் தம் பரம்பரை பற்றிக் கூறினார். பிறகு அவரே “ இரண்டு தலைமுறையாக இப்போது வைத்தியம் செய்வதில்லை; எல்லோரும் வேறு வேலைக்குப் போய்விட்டார்கள்” என்றார்.
நாங்களும் " உங்கள் முன்னோர் பயன்படுத்திய ஓலைச் சுவடிகள் எல்லாம் எங்கே ? நாங்கள் அவற்றைப் பார்க்க வேண்டும் " என்றோம். அதற்கு முருகேச உடையார் இருபது வருடத்திற்கு முன்னேயே திருப்பதிப் பல்கலை ஆசிரியர் என்று ஒருவர் வநது அவற்றை வாங்கிக்கொண்டு போய்விட்டதாகக் கூறினார்.
” கொஞ்சம் தேடிப்பாருங்களேன், ஏதாவது மீதி இருக்கிறதா ?
நாங்கள் உங்களைத்தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். எங்களை வெறுங்கையுடனா அனுப்புவது ? " என்றோம்.அவர்களும் உள்ளே சென்று சிறிது நேரம் கழித்து “ஓலைச் சுவடிகள் ஒன்றும் இல்லை; இவை ஏதாவது பயன்படுமா பாருங்கள்” என்றபடி இரண்டு எழுத்தாணிகளின் கைப்பிடியை கொண்டுவந்தார். நன்றி சொல்லி அவற்றை முனைவர் கோவை மணி பெற்றுக் கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையின் அருகில் இருக்கும் அம்பத்தூர், கொரட்டூர் , முகப்பேர் முதலியவை இருந்தன. இவற்றை திருவள்ளூர் மாவட்டம் தேடுதல் முடியப்போகும் கடைசி நாளான ஐந்தாம் நாள் மாலையில் வைத்துக்கொண்டு பயணத்தை முடிப்பதாக முன்பே திட்டமிட்டிருந்தோம். அவ்வாறே அந்தப் பகுதிகளுக்குச் சென்றோம்.
பல இடங்களில் எங்களுக்கு பயனளிக்கும் பதில் கிடைக்கவில்லை; .ஆனால் கொரட்டூரில் பழனியப்பன் என்பவரின் முகவரியைத் தேடிய லைந்து அங்கு போய்ச் சேர்ந்தபோது அங்கே இருந்தவர்கள் பழனி யப்பன் இறந்து சில தினங்களே ஆனதாகக் கூறினார்கள் .
நாங்கள் வந்த நோக்கத்தை எவ்வாறு தெரிவிப்பது எனத் தயங்கி நின்றபோது அவரது மருமகன் பாலசந்தர் என்பவர் , " பரவாயில்லை சார், நீங்க வந்த விஷயம் சொல்லுங்க " என்று எங்களை உள்ளே கூப்பிட்டு அமரச் சொன்னார்; நாங்களும் எங்களைப் பற்றிய சிறிய முகவுரை கூறினோம்.
அவர் " திரு பழனியப்பன் ஒரு மிகப் பெரிய ஜோதிடர்; ஜோதிட சாஸ்திரத்தையே கரைத்து குடித்தவர்; .பல சிறந்த கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதியவர்; உயர் அதிகாரியாகப் பணியாற்றி ஒய்வு பெற்றதும் ஜோதிடம் சம்பந்தமாக நீண்ட ஆராய்ச்சிகள் செய்து வந்தார்” என அவரது மாமனாரைப்பற்றி மிக உயர்வாகப் பேசினார்.
மேலும் மாடியில் ஓர் அறை முழுவதும் சுமார் 2000 சோதிடம், மற்றும் பல பண்டைய நூல்கள் சேர்த்து வைக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் தற்போது அவரது மகன் தந்தையின் இறப்பிற்கு வந்து விட்டு அமெரிக்கா சென்றுவிட்டதாகவும், அவரிடம் அனுமதி வாங்கினால் நாம் விரும்பும்படி அவற்றைப் பார்ப்பதோ, மின்னாக்கம் செய்வதோ முடியும் என்று கூறிவிட்டார். திரு பழனியப்பனைச் சந்திக்க முடியா மல் போனதை எண்ணி வருத்தம் தெரிவித்து அவரது மகனின் முகவரி யைப் பெற்றுக்கொண்டோம்.
எப்படியும் நிச்சயம் அந்தப் புத்தகக் குவியலைப் பார்த்தே தீர வேண்டும் என்ற உறுதியுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.
இவ்வாறு எங்கள் ஐந்து நாள் திருவள்ளூர் தேடல் அன்று முடிவுக்கு வந்தது. அடுத்ததாக்க் காஞ்சீபுரம் மாவட்டம் பார்ப்பதாக உறுதி செய்து கொண்டு அவரவர் உடைகள் அடங்கிய மூட்டையுடன் எங்கள் வீடு நோக்கிய பயணத்தை தொடங்கினோம். பல்லவர் காலத்திலேயே நகரம் என்றால் காஞ்சி என்று பெயரெடுத்த காஞ்சியில் ,நாலந்தா போல் சிறந்த கல்விக் களமாக விளங்கிய காஞ்சியில் எங்களுக்குக் கிடைக்கப்போகும் சுவடிக்குவியல்களை மனம் வட்டமிட எங்கள் பயணம் அமைத்தது. மனத்தில் எண்ணியபடியே உண்மையில் நாங்கள் கண்ட சுவடிக் குவியல் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம் .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
---------------------------------------------------------------------------------------
இந்தத்தொடர் 2010 இல் எழுதப்பட்டது .இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் கொரட்டூர் திரு பழனியப்பன்வீட்டில் சென்று அந்த அரிய புத்தகக் குவியலைக் காணமுடியவில்லை .இப்படி இந்தத் தொடரில்; குறிப்பிட்ட பல இடங்களுக்கு மீண்டும் செல்லவில்லை .
தக்க சூழல் அமையவில்லை .இப்போது போனால் என்ன கிடைக்கும் என்பதும் தெரியவில்லை .
இவ்வாறாரு எனது பயணம் 2010 முடிவடைதானும் விடுபட்ட பல செயல்கள் உள்ளன ..
பணி செய்ய ஆர்வமும் முயற்சியும் இன்னமும் இருக்கிறது .
விதி என்ன செய்ய எண்ணியிருக்கிறது எனப்பார்க்கலாம் ?
அண்ணாமலை சுகுமாரன்
25/12/17
sugumaran- இளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
இப்படி அழிந்த செல்வங்கள் எத்தனை எத்தனையோ !
ஆம் அய்யா, மிகவும் வருந்த வேண்டிய ஒன்று. சோகம்தான் தான் மிஞ்சுகிறது
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! ௧௨ - ( 12 )
சிலநாள் ஓய்வுக்குப் பின் மீண்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓலைச் சுவடி தேடுதலுக்காக நாங்கள் மூவரும் 22 / 02/ 10 அன்று செங்கல்பட்டில் ஒன்றாகக் கூடினோம். இந்த முறை காஞ்சிபுரம் மாவட்டத் தேடலுக் காக நாங்கள் தங்குவதற்குச் செங்கல்பட்டைத் தெரிவு செய்தோம்.
மாவட்டத்தின் நடுவே நான்குபுறமும் செல்வதற்கு வாகாக செங்கல் பட்டே அமைந்திருந்தது. காஞ்சிபுரம் நகரம் ஒரு ஓரமாக ஒதுங்கி இருந்தது. எப்போதும் ஒன்றுகூடியபின் நாங்கள் உடனே தங்குவதற்கு விடுதியைத் தேடமாட்டோம் , உடனே எங்கள் சுவடி தேடுதலைத் தான் ஆரமிப்போம் . இரவில் திரும்பிவந்து அலைந்து திரிந்து ஏதாவது ஒரு விடுதியைத் தேர்ந்தெடுத்துத் தங்குவோம்; இதனால் எங்களுக்கு ஒரு நாள் தங்கும் செலவு மிச்சமாகும். அவ்வாறே வழக்கம் போல் முதலில் ஒரு வாகனத்தை அமர்த்திக்கொண்டு எங்கள் தேடுதலைத் தொடங்கினோம்.
ஆயிரம் கோயில்களின் நகரம் என்று வழங்கப்பெறும் காஞ்சிபுரம் அந்த மாவட்டத்தின் தலைநகரம் ஆகும் .இது ஒரு பாரம்பரியமான தலை நகரம். இது முந்தய சோழர் காலத்திலேயும் ,பல்லவர்கள் காலத்தி லேயும் தலைநகராக விளங்கி "நகரேஷு காஞ்சி " (நகரென்றால் காஞ்சிதான்) என மாபெரும் கவிஞர் பாரவியால் புகழப்பெற்றது. மணி மேகலை, பெரும்பாணற்றுப்படை , பத்துப்பாட்டு இவற்றில் காஞ்சியின் பெருமை பலவாறு கூறப்பட்டுள்ளது. இந்நகர் பண்டைய நாளில் கல்வியின் முக்கிய இருப்பிடமாக விளங்கியது; எனவே மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் எங்கள் தேடுதல் துவங்கியது .
காஞ்சிபுரம் மாவட்டம் பத்து வட்டங்கள் அடங்கியது; எங்களது MNN முகவரிப்பட்டியல் படி அனைத்து வட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 133 முகவரிகள் இருந்தன. நாங்கள் இவற்றை ஐந்து நாட்களில் முடிக்கத் திட்டமிட்டிருந்தோம்.
எங்கள் வாகனம் திருக்கழுகுன்றம் கடந்து செல்ல ஆரம்பித்தது.
திருக்கழுகுன்றம் ஊரில் இரு முகவரிகள் இருந்தன. கடம்பாடி ,வீராபுரம் ,ஓரகடம் முதலிய பகுதியில் ஒவ்வொரு முகவரி. நாங்கள் முதலில் ஓரகடம் சென்றுவிட்டுத் திரும்பிவரும்போது வழியில் இருப்பனவற்றைப் பார்த்துவரலாம் எனத் திட்டமிட்டோம் .
ஓரகடத்தில்
விஜயராகவன்.ஆர்
ஓரகடம்
என்று ஒரு முகவரி இருந்தது. நாங்களும் வழக்கம் போல் எங்கள் விசாரிப்பைத் தொடங்கினோம். ஓரகடம் ஓரளவு பெரிய ஊராகவே விளங்கியது. எனவே நாங்கள் தேடுவதும் சிரமம் ஆயிற்று. விஜயராகவன். ஆர் என்ற பெயரில் இருந்து அவரின் தொழிலை ஊகிக்க முடியவில்லை. சில முகவரிகளில் பட்டர் ( வெண்ணையன்று), குருக்கள் ,ஜோதிடர், சாஸ்திரிகள் எனச் சில' CLUE' இருக்கும் .இதில் அப்படி ஏதும் இல்லை. நாங்களும் எதையும் அவ்வளவு எளிதில் விடுவதாக இல்லை. அப்படியே விசாரித்துக் கொண்டு பிராமணர் தெருவுக்கு வந்தோம். அங்கும் யாருக்கும் இந்த விஜய ராகவன் யாரெனத் தெரியவில்லை. ஒரு முதியவர் மட்டும் எங்கள் முழுக்கதையையும் பொறுமையுடன் முழுமையாகக் கேட்டு விட்டு "யார், பாஷ்யத்தைப் பார்க்கணுமா ?" என்றார்; நாங்களும் ’ஆமாம் ஆமாம் அவரேதான்’ என்றோம். எங்க ளுக்கு ஏதாவது பிடிப்புக் கிடைக்காதா என்ற ஆவல். எது கிடைத் தாலும் பிடித்துக்கொள்வோம். அதில் இருந்து பாதை போடமுடியுமா என்று பார்ப்போம்.
அந்த முதிய அந்தணர் ஒரு சிறிய ஓட்டு வீட்டைக் காட்டினார்.
"சார் சார் " என்று அழைத்தபடி உள்ளே சென்றோம்; அங்கே ஒரு பெரியவர் தன்னந்தனியே ஒரு ஈசிச்சேரில் சாய்ந்திருந்தார்.
"ஐயா வணக்கம் "
"நமஸ்காரம், என்ன வேணும் ?"
"ஐயா உங்களிடம் ஓலைசுவடிகள் நிறைய இருப்பதாக தகவல் "
"ஆமாம், அதற்கு என்ன இப்போ ?"
"ஐயா, நாங்கள் தஞ்சைப் பல்கலையில் இருந்து வருகிறோம் ; உங்களிடம் இருக்கும் ஓலைச் சுவடிகளைப் பார்க்கவேண்டுமே "
அவர் சற்று தூரத்தில் இருந்த ஓர் இரும்புப் பெட்டியை டிரங்க் பெட்டி என்று சொல்லும் ஒரு ரகப்பெட்டியை சுட்டிக்காட்டி அதை எடுங்கள் என்றார்; அதை எடுத்தோம் .
பார்த்தால் அது முழுவதும் ஓலைச் சுவடிகள் !
நாங்கள் இத்தனைநாள் தேடியது மொத்தமாக ஒரே இடத்தில். அதை ஒன்று ஒன்றாக வெளியில் எடுக்க ஆரம்பித்தோம்; எங்களைச் சுற்றி ஓலைச் சுவடி, கடை பரப்பப்பட்டது. மெதுவாக ”ஐயா இவை அத்தனையும் பயன்பாட்டில் இருக்கிறதா ? " என்று ஆரம்பித்தோம். அவரும் " ஆம், நான் படித்ததுதான் அனைத்தும், எப்போதாவது எடுத்துப் பார்ப்பேன் " என்றார். " தக்கபடி பாதுகாக்க வசதியாக இவற்றைத் தஞ்சைப் பல்கலைக் கழகத்துக்குக் கொடையாகத் தாருங்களேன். நாங்கள் நல்லபடி உங்கள் பெயரிலேயே பாதுகாக்கிறோம் " என்றோம். " ஊஹும், அது எப்படி! நான் இவற்றை அவ்வப்போது பார்ப்பதுண்டு” என்றார். "ஐயா, இங்கிருந்தால் மேலும் மேலும் வீணாகும், நாங்கள் உங்கள் பெயரால் பாதுகாத்து வைக்கிறோம்” என்றோம்.
யாரையும் கட்டாயப்படுத்தியோ, கட்டளையிட்டோ சுவடி களைப் பெற இயலாது; அது அவர்களது சொத்து. அவர்களை உணர வைத்து நயமாகத்தான் பெறவேண்டும். என்ன செய்வது! இவை அத்தனையும் எப்படிப் பெறுவது? என்ற கவலை வந்தது. அப்போது அக்கவலையைத் தீர்க்கக் கடவுளே அனுப்பியமாதிரி அவரது மனைவி வேகமாக வீட்டினுள் நுழைந்தார்.
எங்கோ ஊருக்குப் போகப் புறப்பட்டு பஸ்ஸுக்கு காத்திருந்தவரை
ஊர்ஜனங்கள் சிலர் ’உங்கள் கணவரை யாரோ மூன்று பேர் தேடிக் கொண்டு உங்கள் வீட்டுக்குப் போகிறார்கள்’ என்றதும் பார்த்து விட்டுப் போகலாமே என்று வீட்டுக்கு திரும்பிவிட்டார். நாங்கள் தான் வழியில் அத்தனைபேரை விசாரித்திருக்கிறோமே ! நாங்கள் விசாரித்ததில் யாரோ சிலர் அவரிடம் சொல்லிருக்கிறார்கள்.
வந்த அவர் மனைவி " நீங்கள்தான் நேற்று போன் செய்தீர்களா? " என்றார் ."இல்லையம்மா, நாங்கள் இப்போதுதான் வருகிறோம்" என்றோம். " இல்லை, யாரோ பத்திரிகையில் இருந்து இவரிடம் பேச வருவதாக போன் செய்தார்கள்; காமரா எல்லாம் எடுத்துக்கொண்டு வந்ததும் நீங்கள்தான் என்று நினைத்தோம் " என்றார் அந்த அம்மா.
பிறகு நாங்கள் விபரமாக எங்கள் தேடுதல் பயணம் இவற்றைப் பற்றி கூறினோம்; அவரும் பரிவுடன் கேட்டார். பேச்சை கேட்ட அம்மா உடனே " உங்களுக்கு இந்த ஓலைச் சுவடிகள் தானே வேண்டும் எடுத்துக் கொள்ளுங்கள் " என்றார்.
அவரது கணவரால் ஒன்றும் பேச முடிய வில்லை; அவரது மனைவியை முறைத்தார்.
ஆனால் அவர்கள் ஒருவர் போல் ஒருவர் கொண்ட அன்பு தெளிவாக வெளிப்பட்டது .மனைவி சொல்வதை அவர் தட்டவில்லை. "இவர் ஆசைப்படுவார்; ஆனால் இனி அவரால் படிக்க முடியாது.வயதும் ஆகிவிட்டது ,கண்ணும் சரிவரத் தெரியவில்லை. இனி இவரால் படிக்க முடியாது. நீங்கள் எடுத்துப் போய்ப் பாதுகாத்து வைத்திருங்கள் " என்றார் .அந்த அம்மா. அத்தோடு விட்டாரா " இன்னும் ஏராளமான புத்தகங்கள் பரணில் தூங்குகிறது பாருங்கள் ! இனி அவற்றையும் அவரால் படிக்க முடியாது; ஆசைப் படுகிறார் ,ஆனால் படிக்க முடிவதில்லை " என்று கூறிப் பரணைக் காண்பித்தார்.
நாங்களும் பரணில் ஏற முஸ்தீபுகள் செய்ய ஆரம்பித்தோம். பரணில் அடுக்கடுக்கான மூட்டைகள்; அவ்வளையும் கீழே இறக்கி னோம். மெதுவாகப் புத்தகங்களைப் பிரித்தெடுக்க ஆரம்பித்தோம். எங்களைச் சுற்றி புத்தகங்களும் ஓலைச் சுவடிகளும் குவிந்தன !
பெரியவரோ ஒன்றும் செய்ய இயலாது சோகமாக எங்களைப் பார்க்க ஆரம்பித்தார். அதற்குள் அம்மா உள்ளே சென்று மோர் எடுத்துவந்து குவளை குவளையாக வழங்க ஆரம்பித்தார். நாங்கள் பரணில் இருந்து புத்தகங்களையும் ஓலைச் சுவடிகளையும் எடுத்த மாதிரியே, அம்மாவும் அடுக்களையில் இருந்த பழங்கள், தின் பண்டங்களை எங்கள் முன் பரப்பினார்.
நாங்கள் பரப்பிய ஒவ்வொரு புத்தகத்தையும் அவர் எடுத்துத் தன் பக்கம் திரும்ப அடுக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு புத்தகத்தின் மேலும் அவரது ஒரு இனிய நினைவு பொதிந்திருந்தது. அவர் அவற்றைக் கூற ஆரம்பித்தார் - "இது என் பையன் வாங்கிக் கொடுத்தது; இதை வைத்து இந்தப் பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதினேன்" என்று தம் நினைவுகளை விவரிக்க ஆரம்பித்து விட்டார்; எங்களுக்கோ பாவமாகிவிட்டது. ஆனாலும் எதையும் விட மனமில்லை.
நாங்கள் அடுக்குவதும் அவர் திருப்பி எடுப்பதுமாக சிறிது நேரம் போனது; ஆனாலும் அவர் மனைவி சொல்லை அவர் தட்டவில்லை. அவரது மனைவிக்கும் அவர் கவலை புரிந்து விட்டது. அவர் முகம் வாடியதை அந்த அம்மா உணர்ந்து கொண்டார்கள்.
" சரி, அப்படியானால் ஒன்று செய்யுங்கள்; ஓலைச் சுவடி களை நீங்கள் எடுத்து கொள்ளுங்கள் ! புத்தகங்களைச் சிறிது காலம் கழித்து எடுத்துக் கொள்ளலாம் " என்றார். பெரியவரும் புத்தகங்கள் கிடைத்ததும் சற்று அமைதியாகி விட்டார்; எங்களுக்கோ ஓலைச் சுவடிகள் கிடைத்த சந்தோஷம் .
பெரியவர் புத்தகங்களிலேயே மீண்டும் ஆழ்ந்துவிட்டார் . எங்களுக்கு அந்தப் பெரியவரின் வாட்டம் புரிந்தது. வாழ்நாள் முழுவதும் அவர் படித்த புத்தகங்களை அவர் நண்பர்போல் கருதுகிறார்; நண்பர்களைப் பிரிவது போல் அவர் மனம் வருந்தினார். நாங்கள் ஒருவழியாக அவ்வளவு ஓலைச்சுவடிக் கட்டுகளையும் ஒரு அட்டைப்பெட்டியில் அடுக்கினோம். அவரிடம் இருந்த எழுத்தாணியையும் பெற்றுக் கொண்டோம்.
அவருக்கும் அவரது மனைவிக்கும் நன்றி கூறினோம்; அவருக்கு நமஸ்காரம் செய்தேன். ஒருபுறம் மிக்க மகிழ்ச்சி, ஒருபுறம் இந்தப் பெரியவருக்குப் பிடிக்காத காரியத்தைச் செய்கிறோமே என்ற வேதனை.
இருந்தாலும் முதல்நாளே ஒரு மிகப்பெரிய சுவடிப் புதையல் ஒன்று கிடைத்ததில் மனத்தில் மிக்க மகிழ்ச்சி; எல்லாம் இறைவன் செயல் என்று மன மகிழ்வுடன் விடுதியில் அறை போடும் போதே சுவடிப் பொதியுடன் சென்றோம். இறையரு ளால் அனேகமாக வரும் நாட்களில் சில நாட்களைத் தவிர தினமும் ஓலைச் சுவடிகளைத் தொடர்ந்து பெற ஆரம்பித்தோம்.
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த நிகழ்வு நடந்தது 2010 இல் .அவர்களின் அன்பை என்னால் மறக்கவே இயலவில்லை .மீண்டும் சிலமாதங்கள் கழித்து நசன் மட்டும் சென்று அவர்களை மீண்டும் சந்தித்தேன் .அப்போதும் அவர்களிடம் இருந்த கிரந்த பழைய புத்தகங்களைக் கண்டேன் .
ஆசையிருந்தும் அவைகளை மின்னாக்கம் செய்ய அப்போது அமைப்பு எதுவும் என்னிடம் இல்லை .2010 இல் சேகரித்த சுவடிகளை அனைத்தையும் முறைப்படி அப்போதையதமிழ்ப் பல்கலைக் கழகத் துறைத் தலைவர் முனைவர் திரு மாதவன் அவர்களிடம் முற்றிலுமாக ஒப்படைத்தப் பின் , தேடல் பணியில் இருந்து விடுபட்டுவிட்டேன் .
ஆனால் மழை விட்டும் தூவானம் விடாததுபோல , எனக்கு சில மாதங்களுக்கு ஒரு முறையாவது சுவடிகள் இருக்கும் தகவல்கள் தானே என்னைத் தேடிவந்தது
எனவே 2013 இல் தமிழ் சித்தர்கள் ஓலைச் சுவடிகள் ஆய்வு மையம் என ஒரு அறக்கட்டளைப்பதிவு செயதேன் அதைப்பற்றிய செய்திகள் ஒரு நாள் மட்டும் சில ஆங்கில இதழ்களில் வந்தது .
இவாறு இந்தத் தேடல் பயணத்தில் நான் சந்தித்த பலரும் இன்னமும் என்னுடன் நண்பர்களாகத் தொடர்பில் இருந்து வருகிறார்கள் .
உலகில் எத்தனை நல்ல மனிதர்கள் , பண்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பது அவர்களின் குடும்ப சொத்தான அவர்களின் அரிய சுவடிகளை என்னிடம் ஒப்படைத்தும் கூட என்னையும் நண்பராக ஏற்றுக்கொண்டது என்னை இன்னமும் நெகிழ்ச் செயகிறது அவர்களுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறோனோத் தெரியவில்லை .
இன்னமும் சொல்ல நிறைய அனுபங்களை உள்ளது .
அண்ணாமலை சுகுமாரன்
9/1/18
இந்தப்படங்கள் அப்போது எடுத்தது .ஏடுகள் கிடைக்க சிபாரிசு செய்த்த அந்த அன்னையாரும் படத்தில் இருக்கிறார் .பெரியவரின் சோகம் படிந்த முகத்தை பா
ருங்கள் .இவ்வரிகளை இப்போது மீண்டும் பார்க்கும் போது அந்த நாள் ஞாபகம்
மீண்டும் வந்தது
sugumaran- இளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் - ௧௩ (13 )
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சுவடிகளைத் தேடி அவற்றை அச்சில் பதிப்பிக்கும் துறையின் முன்னோடிகளாகத் திகழ்ந்தோர் –
அ. தாண்டவராய முதலியார்,
சிவக்கொழுந்து தேசிகர்,
திருத்தணிகை விசாகப் பெருமாளையர்,
களத்தூர் வேதகிரி முதலியார்,
புஷ்பரதஞ் செட்டியார்,
ஆறுமுக நாவலர்,
சி.வை. தாமோதரம் பிள்ளை,
மழவை மகாலிங்கையர்,
உ.வே. சாமிநாதையர்,
ச. வையாபுரிப்பிள்ளை
இவர்கள் அத்துணை பேர்களின் அரிய தமிழ்த் தொண்டும், சீரிய பதிப்பு முயற்சிகளும் தமிழுக்குப் பல தொல் இலக்கியங்களை மீட்டுத் தந்தன. இவர்கள் அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
-- ------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் - ௧௩ (13 )
ஒரகடத்தில் இருந்து நாங்கள் நேரே செங்கல்பட்டு திரும்பவில்லை; வழியில் இருந்த ஊர்களையும் பார்த்துவிட்டு ஏழு மணிக்குத்தான் செங்கல் பட்டு திரும்பினோம்.
இது எங்களின் தினசரி வாடிக்கை ஆனது; உடல் களைத்து இருப்பினும் ‘திரும்பி வந்தோமா? உணவுண்டு படுத்தோமா?’ என்று இருக்காமல், பிறகு இணைய இணைப்பு எங்கே கிடைக்கும் என்று அங்கே அலைவதும், அதற்கு மேல் அடுத்த நாளைய பயணம் பற்றி ஒரு சிறிய திட்டம் வகுப்பதுமாக நேரம் ஓடிவிடும்; பிறகு மனம் ஒடுக்கம் பெறச் சிறிய அவகாசம் தேவைப் படும். காலையில் பெரும் பாலும் எட்டு மணிக்கு முன்னே புறப்பட்டு விடுவோம்; இதில் பல் வேறு பயன்கள் உண்டு. இன்று ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தொடங்க எண்ணி அங்கே விரைந்தோம் .
விட்ட இடத்தில் தானே தொடர வேண்டும் !
இன்றும் நாங்கள் பார்க்க வேண்டிய முகவரி விஜய ராகவன் டீ .ஆர் .!
ஆனால் ஓரகடம் அன்று ! ஸ்ரீபெரும்புதூர் .
ஆனால் இதில் ஆச்சரியமாக தெருப் பெயரும் இருந்தது; எனவே நேரே அந்தத் தெருவுக்கு நாங்கள் விரைந்தோம். முகவரிக்கும் சற்று எளிதில் போகமுடிந்தது; ஓலைச் சுவடியையும் சற்று எளிதாகவே வாங்க முடிந்தது !
ஏதோ காத்துக்கொண்டு இருப்பவர்கள் போல் திரு விஜயராகவன் அவரது மகன் ஸ்ரீதர் இருவரும் எங்களை வரவேற்றனர். கேட்டவுடன் அவர்களிடம் ஓலைச் சுவடிகள் இருப்பதை ஒப்புக்கொண்டனர். நாங்கள் கூறிய ஓலைச் சுவடிப் பாதுகாப்பு விஷயங்களை அவர்களும் ஒப்புக் கொண்டனர். இத்தகைய அரிய அறிவின் எச்சங்களைப் பாதுகாக்க வேண்டியது இன்றைய தலையாய கடமை என அவர்களும் கருதினர்.
அவர்களிடம் வடமொழிச் சுவடிகள் மூன்று கட்டுகள் இருந்தன. அவை நீத்தார் கடன்கள் செய்வது பற்றிய மந்திரங்களும், அதன் முறைகளும், சாம வேதக் குறிப்புகளும் அடங்கிய சுவடிகள் என அவர்கள் கூறினர். நன்றி கூறி அவர்களிடம் இருந்து அந்த மூன்று சுவடி கட்டுகளைப் பெற்றுக்கொண்டோம்; அவர்களும் எங்களை மகிழ்வுடன் வழி அனுப்பினர் .
அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் அடுத்த முகவரி.
திரு பாஸ்கரர்
ஸ்ரீபெரும்புதூர்
வியப்பாக அது ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமத் ராமானுஜர் சன்னிதிக்கு நேர் எதிர் வீடு. நாங்கள் ஸ்ரீபெரும்புதூரிலும் கோவிலுக்குச் செல்ல முயலவே இல்லை. என்னுடன் வரும் அனைவரையும் வற்புறுத்திக் கோயிலுக்கு அழைப்பதை நான் விரும்புவ தில்லை. செய்யும் தொழிலே தெய்வம் என்று இந்த தேடுதல் வேட்டை முடியும் வரைஎண்ணியிருந்தேன்
ஆனால் ராமானுஜர் சன்னிதிக்கு எதிர்வீடாகவே திரு பாஸ்கரர் வீடு அமைத்தால் , கோயிலைப் பார்த்து மனத்தில் பிரார்த்தனை செய்தவாறே அந்தப் பாரம்பரிய வீட்டில் நுழைந்தோம். வீடும் பார்ப்பதற்கு ஓலைச் சுவடிகளைப் பேணும் இடம் போலவே கலையுடனும், மரபு அழகுடனும் விளங்கியது.
திரு. பாஸ்கரர் எங்கள் அழைப்பிற்கு பதிலொலி தந்தபடி வெளியே வந்தார்; அப்படியே அசரவைக்கும் முக ஒளி. நெறி தவறாத தீவிர நோன்பு மிகுந்த வாழ்க்கையாலும், ஆழ்ந்த ஞானத்தாலும் கண்களின் கூர்மை முதலில் எங்களைக் கவர்ந்தது; "வாங்க" எனப் பரிவுடன் வரவேற்றார் . நாங்கள் எங்களைப்பற்றிக் கூறிக்கொண்டோம் . " ஓலைச் சுவடிகள் இருப்பது உண்மைதான்; ஆனால் அவற்றைத் தருவது என்பதுதான் சற்று சிரமம்; எனக்கும் மகன் இருக்கிறான். அவனுக்கும் இதில் நாட்டம் உண்டு. எனவே சற்று யோசிக்கணும் " என்றார்.
"சுவாமி ! அவற்றைக் கண்ணாலாவது பார்க்க முடியுமா ? "
”செத்தே இருங்கோ !" என்றபடி தனது மகனை அழைத்து எங்களுக்கு அறிமுகப்படுத்தினார் .
அவரிடம் ஏதோ கூறினார். அவரும் உள்ளே சென்று முதலில் சில சுவடிகளைக் கொணர்ந்து திண்ணையில் வைத்தார் . நாங்கள் அவற்றை ஆர்வமுடன் பார்த்தபடி பேச ஆரம்பித்தோம் .பேச்சு பல திசையில் நீண்டது. பாஸ்கரர் விரும்பும் வண்ணம் பேச்சு அமைத்தது; அவரும் எங்களை விரும்ப ஆரம்பித்தார். யாருமுணராமல் திண்ணையில் இருந்த ஓலைச் சுவடிகளின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போனது.
சிறிது நேரத்தில் மகனை நோக்கிய பாஸ்கரர் "எல்லாம் வெளியில் வநது விட்டதா? ” என்றார்.
"இன்னும் கொஞ்சம் மீதி இருக்கிறது "
” சரி ! எல்லாத்தையும் எடுத்து வந்துடு ! இவாதான் இப்படி சொல்லுகிறார்களே !"
மீண்டும் உள்ளே சென்ற அவரது மகன் தம் இருகை கொள்ளாமல் சுவடிகளை அடுக்கிச் சுமந்துவந்தார் .
" எல்லாம் இவ்வளவுதாம்பா "
"சுவாமி, இவ்வளவும் தாங்கள் படித்திருக்கிறீர்களா ?"
"ஆமாம் அத்தனையும் படித்திருக்கிறேன் ."
"இவைகளில் தமிழ் ,கிரந்தம் ,தெலுங்கு இவை கலந்துள்ளது ”
"இவைகளில் எத்தகைய நூல்கள் இருக்கின்றன ? "
"இவற்றில் திருவாய் மொழி ,பிள்ளை லோகாசார்யர், தத்வ போதினி, தத்வ மாலிகா, பாணினி சூத்திரம் இன்னும் பல அரிய வேதாந்த நூல்கள் இருக்கின்றன. இவை பூர்விகமாக எங்கள் வீட்டில் இருந்து வருகின்றன; நாங்களும் இவற்றை மிகப் புனிதமாக மதித்து வருகிறோம் "
நான் முன்னே சொன்னபடி இது ஒரு மன விளையாட்டு , சரியாகக் கையாண்டால் நிச்சயம் ஓலைச் சுவடி கிடைத்து விடும்.
அதுவும் நாங்கள் வாங்கியது அத்தனையும் கொடை!
எந்த விதப் பணமோ, விலையோ பேசப்படாமல் இவை அன்புடன் தரப்பட்டன. தற்போது இருக்கும் காலநிலையில் யாராவது இத்தகைய அரிய பொருட்களை இனாமாகத் தருவார்களா ?
"சுவாமி இவற்றைப் பாருங்கள் ! சிறுகச் சிறுக முனை முறிந்து, இடையில் ஒடிந்து, மையில்லாமல், எண்ணெய் இல்லாமல் எப்படிப் பொலிவிழந்து இருக்கிறது பாருங்கள்! இத்தனை உயர் தத்துவங்கள் நமது முன்னோரின் அறிவு செல்வங்கள் இப்படி இந்த ஓலைகளோடு முடிவடைந்து, இவை இல்லாமல் மறைந்து போக நீங்கள் விடலாமா ?"
" இவற்றைப் பாதுகாப்பதும் உங்கள் கடமையல்லவா? இத்தனை காலம் உங்கள் முன்னோர் பாதுகாத்து உங்களுக்குத் தந்தது போல், நீங்களும் பாதுகாத்து வரப்போகும் தலைமுறைக்குத் தரவேண்டாமா ? இதுவே சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் பெரும் தொண்டாக அமையுமே ! தெய் வங்களின் ஆசியும் இதற்குக் கிடைக்குமே ! இவற்றை எழுதிய பெரிய வர்கள் இவை இப்படி அழிந்து போகவேண்டும் என்றா எழுதிருப்பார்கள் ? இத்தனை புனிதர்கள் கைப்பட்ட ஓலைச்சுவடி இது ! இவை இப்படி அழிந்து போகலாமா? நாம் இன்றைய நவீனக் கண்டுப்பிடிப்புக்களை இவற்றைப் பாதுகாக்கப் பயன்படுத்தலாமே ."
" இதுவே எங்களிடம் இருந்தால் இவற்றைப் பராமரித்து, மையிட்டு, எண்ணெயிட்டு , சிங்காரித்து, புதுக் கயிற்றில் கோத்து, இப்போது இதில் குடிகொண்டிருக்கும் பூச்சிகளை அழித்து , இவற்றை குளிரூட்டப்பட்ட அறைகளிலே வைத்து இன்னும் சில நூறாண்டுகள் சுவடிகளின் வாழ்வை அதிகரிக்கச் செய்வோம்.
இத்தனையும் செய்தாலும் அவற்றில் உங்கள் பெயரையே, இந்த இடத்தில் எடுத்தது , இவர்கள் கொடையாகத் தந்தது எனக் குறிப்பிடுவோம். உங்கள் பரம்பரைப் பெயர்கள் அத்தனையும் குறிப்பிடுவோம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் சுவடிகளைத் தஞ்சை வந்து பார்க்கலாம் படிக்கலாம். சுத்தம் செய்தவுடன் இவற்றை மின்னாக்கம் செய்து, சில சி டி களில் அத்தனையும் பதிவுசெய்து உங்களிடம் தந்துவிடுவோம். தாங்கள் அவற்றைக் கணினியிலோ ,டீ வீ யிலோ இட்டு வேண்டும்போது பார்த்துக் கொள்ளலாம்" இவ்வாறு மீண்டும் மீண்டும் பேச ஆரம்பித்ததும், அவர்களும் மெளனமாக யோசனை செய்ய ஆரம்பித்தனர்; அவர்களுக்கும் இவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை; நாங்கள் இவற்றைப் பாதுகாக்கிறோம் என்று சொன்னதும் அந்தத் தன்னல மில்லாப் பெரிய உள்ளங்கள், தங்கள் பிள்ளைகளைப் பிரிவது போல் பாசத்துடன் அவற்றை எங்களிடம் ஒப்படைக்க முன்வந்தனர்.
ஒருவாறு ஒரு மிகப்பெரிய சுவடிக் குவியல் ஸ்ரீ பெரும்புதூர் ராமானுஜர் சன்னிதிக்கு எதிரில் கிடைத்தது எங்களுக்கும் பெரும் மகிழ்ச்சி தந்தது. வழக்கம் போல் கையோடு கொண்டு சென்று இருந்த ஒரு பெரிய அட்டைப் பெட்டி நிறைய அங்கிருந்த சுவடிகள் அனைத்தையும் அடுக்கி கொண்டு பெரியவரிடம் விடை பெற்றோம்.
அவர்களும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தனர்; எங்களுக்கும் மனத்திற்குள் வேதனைதான் ! ஆயினும் அறிவுச் செல்வங்கள் எப்படியும் காக்கப்படவேண்டும். தமிழர் பண்டைய கலைகள் இன்னும் உலகோரின் அங்கீகாரம் பெறக் காத்திருக்கின்ற னவே எந்தவித ஆய்வும் இல்லாமல்! தகுதியில்லை என முதல் சுற்றிலேயே நிராகரிக்கப்படும் அவலம் தொடர்கிறதே !
இன்னும் இத்தகைய அறிவுகளின் மூலமும் அழிந்து விட்டால், பிறகு சொல்வது எல்லாம் வீணர்களின் பிதற்றல் என்றுதானே ஒதுக்கப்படும். முதலில் மூலத்தைப் பாதுகாப்போம். பிறகு அதில் என்ன இருக்கிறது என்பதைப் பதிவு செய்வோம். பிறகு அதைப் பன்னாட்டு மொழிகளிலேயும் மொழி மாற்றம் செய்து உலகத்தார் யாவரும் அறியச் செய்வோம். இவ்வா றாக எங்கள் சிந்தனை அடுத்த இடத்தை அடையும் வரை என்னை ஆட்கொண்டிருந்தது
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தக்கட்டுரை முதல் காட்டாத தேடுதல் முடிந்தது கிடைத்த ஓய்வில் 2010 ஜூன் மாதம் எழுதியது .
மீள்பதிவுக்காக இப்போது மீண்டும் நான் எழுதியதைப்பமீள்பதிவுக்காக படிக்கும் போதே நெஞ்சை அடைக்கிறது .
பிராமணர் இல்லாத என்னை நம்பி இத்தனை காலம் அவர்களின் குடும்ப சொத்தாக இருந்ததை ஒரு ஆசார பிராமணர் , கற்றறிந்த பண்டிதர் எப்படிக்கொடுத்தார் என்னும் போது வியப்பு மேலுழுகிறது .
இது எங்களால் நடைபெற்றதில்லை ,சித்தர்களின் அருளும் ஆசியும் இல்லாது நடைபெற்றிருக்க இயலாது என பரிபூரணமாக நம்புகிறேன் .
படங்கள் நான் அப்போது எடுத்தது .
முதல்கட்ட இரண்டாம் கட்ட தேடுதல் பற்றிய அனுபவங்கள்எழுதி முடிந்ததும் ,
சொல்ல வேண்டியவை நிறைய இருக்கிறது
எங்களுக்குள் நடைபெற்ற சம்பாஷணைகளை இத்தனை விரிவாக எழுதுவதின் காரணம் 2010 இல் இதை எழுதும் போது , இந்த திட்டத்தின் முக்கியஅங்கமான தமிழ் மரபு அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு களத்தில் என்ன நடைபெறுகின்றது? , எப்படி சுவடிகள் பெறப்பட்டது என்பதைத் தெரிவிக்கவும் , அப்போது மின்தமிழில் ஆர்வமுடன் செயல்பட்ட நண்பர்களின் புரிதலுக்காகவே ஆகும்
போகப்போக இத்தனை விரிவாக சம்பாஷணைகள் இடம் பெறாது .
சுவடிகள் கொடுத்த அனைவரையும் மீண்டும் கரம் கூப்பி வணங்குகிறேன்
தொடர்ந்து படித்து பயணித்து பாராட்டும் அனைத்து முக நூல் நண்பர்களுக்கும் நன்றி
அண்ணாமலை சுகுமாரன்
12/1/18
sugumaran- இளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1
» பால காண்டம்
» “கான்வென்டுப் படலம்”
» மனிதம் தேடிய வ.உ.சி. !
» பெண் பார்க்கும் படலம்
» பால காண்டம்
» “கான்வென்டுப் படலம்”
» மனிதம் தேடிய வ.உ.சி. !
» பெண் பார்க்கும் படலம்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum