ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?

2 posters

Go down

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?  Empty ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Nov 18, 2017 8:44 pm

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?  Htr3akhThio1h3UngUhv+shutterstock661707415Converted


மற்றவர்களிடம் இனிமையாக நடந்துகொள்ள வேண்டும் என்று குழந்தைப் பருவத்திலிருந்தே நமக்குச் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. இதனால், மற்றவர்களைக் காயப்படுத்திவிடுமோ என்ற எண்ணத்தில் பல நேரங்களில் நம் முடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் புதைத்துவிடுகிறோம். இந்த மாதிரி உணர்ச்சிகளை அடக்கிவைப்பதன் விளைவாக பதற்றம், பயம், மன அழுத்தம், அமைதியின்மை உள்ளிட்ட சிக்கல்களுக்குள் தள்ளப்படுகிறோம். பெரும்பாலும் உணர்ச்சிகள் சற்றுச் சிக்கலானவைதான். ஆனால், உணர்ச்சிகளை புரிந்துகொண்டு அவற்றை நேர்மறையாக வெளிப்படுத்தும்போது நம்முடைய ஆளுமைத் திறன் மேம்படும்.

எளிமையும் சிக்கலும்

உணர்ச்சியில் சரி, தவறு என்று எதுவும் கிடையாது. உணர்ச்சி அவ்வளவுதான். உணர்ச்சிகள் ஒட்டுமொத்த உடம்பின் எதிர்விளைவுகளுடன் சம்பந்தப்பட்டவை. உணர்ச்சிவயப்பட்ட தருணங்களில் உடம்பில் ஏற்படும் அதிக இதயத் துடிப்பு, படபடப்பு, மூச்சு திணறல் ஆகியவை மூலம் உணர்ச்சிகளை உணர முடியும்.
நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?  Empty Re: ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Nov 18, 2017 8:45 pm

உணர்ச்சிகள் நமது எண்ணங்களாலும் கண்ணோட்டங்களாலும் பாதிக்கப்படுகின்றன. ஒரு சூழ்நிலையை எப்படிப் புரிந்துகொள்கிறோம் அல்லது எடுத்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அது சம்பந்தப்பட்ட உணர்ச்சிகள் அதிகரிக்கின்றன. உதாரணத்துக்கு, ஒருவரைச் சுயநலவாதி என்று நாம் கருதினால், நமக்கு அவரைப் பார்க்கும்போது கோப உணர்ச்சி அதிகரிக்கும். அதேநேரம் நம்மைக் காட்டிலும் அந்த நபர் வளர்ந்துவிட்டார் என்கிற ஆதங்கத்தோடு நாம் இருந்தால் அவரைப் பார்க்கும்போது பொறாமை உணர்ச்சி அதிகரிக்கும்.

உணர்ச்சிகள் எளிமையானவையாகவும் இருக்கலாம், சிக்கலானவையாகவும் இருக்கலாம். நம் சிந்தனைகளால் இணைக்கப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட எளிய உணர்ச்சிகள் சிக்கலான உணர்ச்சிகளாக மாறும். கோபம், வருத்தம், துக்கம், பயம், காதல், அன்பு, பரவசம், சந்தோஷம் போன்றவை எளிய உணர்ச்சிகள். எளிய உணர்ச்சிகள் அனிச்சையாகத் தோன்றிக் கொஞ்ச நேரம் நிலைத்துப் பின் மறையும். சிந்தனைகளுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் சிக்கலான உணர்ச்சிகள் நீண்டநேரம் நிலைக்கும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?  Empty Re: ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Nov 18, 2017 8:46 pm

உணர்ச்சிகள் பரவும் தன்மை கொண்டவை. சந்தோஷமோ வருத்தமோ கோபமோ எரிச்சலோ மற்றவர்களிடமிருந்து நம்மை எளிதில் தொற்றிக்கொள்ளும். உணர்ச்சிகள் நமக்கு ஆற்றலை அளிக்கும். உணர்ச்சிகளை உணர்ந்து முறையாக வெளிப்படுத்துவது நம்மைச் சுறுசுறுப்பு அடைய வைக்கும்.

உணர்ச்சிகளை அறிதல்

மனதையும் உடம்பையும் நிதானமாக கவனிக்கப் பழகினால் உணர்ச்சிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது எளிது. கைகொடுக்கும் எளிய வழிமுறைகள் இதோ:

1. அன்றாடம் உடற்பயிற்சி மூலம் உடலை ஆசுவாசப்படுத்துதல், தியானம் மூலம் மனதைச் சாந்தப்படுத்துதல்.

2. “நாம் இப்போது என்ன உணர்கிறோம்?” என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளுதல்.

3. கோபம், பயம், வருத்தம் போன்ற உணர்ச்சிகளால் நம் உடம்பில் உண்டாகும் மாற்றங்களை உற்றுகவனித்தல்.

4. உணர்ச்சிகளை மதிப்பீடு செய்யாமல் மவுன பார்வையாளராக இருத்தல்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?  Empty Re: ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Nov 18, 2017 8:46 pm

உணர்ச்சிகளை வெளிப்படுத்துதல்

மனம்விட்டுப் பேசுங்கள்:

உணர்ச்சிகளை நம்பிக்கையான நண்பரிடமோ உறவினரிடமோ பகிர்ந்துகொள்வது நல்லது. கேட்கும் அந்த நபர் உங்கள் உணர்ச்சிகளை மதிப்பிடாமல், நீங்கள் சொல்வதை வெறுமனே கேட்டு நீங்கள் வெளிப்படுத்துவதை ஊக்குவிப்பவராக இருக்க வேண்டும்.

உணர்ச்சிகளை எழுதுங்கள்:

பேசுவது சிரமமாக இருந்தால், உங்களுடைய உணர்ச்சிகளை எழுதுவது நல்ல பலன் தரும். நீங்கள் எழுதியதை அவ்வப்போது வாசிப்பது மிகவும் நல்லது. உணர்ச்சிகளைப் பற்றி எழுதுவது ஓர் ஆரோக்கியமான வடிகால். படம் வரைதல், கவிதை எழுதுதல், கதை எழுதுதல் போன்றவை உங்கள் உணர்ச்சிகளுக்கு ஆக்கப்பூர்வமான வடிகாலாக அமையும்.

சோகத்தை வெளியேற்றுதல்:

சோகத்தை உள்ளுக்குள் அடக்கிவைத்தால் அது நம் மனம், உடல் மீது பாரத்தை ஏற்றி வைக்கும். சோகத்தின்போது அழுவது, அதை இறக்கி வைப்பதற்கான எளிய வழி. முடிந்த அளவு சோகத்தை உடனடியாக வெளியேற்றுவது மிகவும் அவசியம். இல்லையென்றால் சோகத்தின் அளவு கூடி அதற்குக் காரணமான மனிதரின் மீது கோபமாக மாறும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?  Empty Re: ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Nov 18, 2017 8:47 pm

கோபத்தை வெளியேற்றுதல்:

மனதையும், உடலையும் விரைந்து ஊடுருவி ஆக்கிரமிக்கும் தன்மை கொண்டது கோபம். சின்ன எரிச்சலில் தொடங்கி கட்டுக்கடங்காத வெறிவரை வளரக்கூடிய தன்மை கோபத்துக்கு உண்டு. இதை அடக்கிவைப்பது மிகவும் தீங்கானது. மற்றவர்களிடம் இனிமையாக நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கோபத்தைப் புதைத்துவைப்பது நம் மனநலனைப் பாதிக்கும். இது நம்மைப் பதற்றம்கொள்ளச் செய்யும். எனவே, கோபத்தை அடக்கிவைப்பதற்கு பதிலாக அதைக் களையும் அறிவுப்பூர்வமான செயலில் ஈடுபட வேண்டும்.

எனவே, உணர்ச்சிகளை ஒருபோதும் உள்ளே புதைத்துவைக்காமல் அவற்றைக் கண்டுணர்ந்து முறையாக வெளிப்படுத்தினால், வெற்றி நெருங்கி வரும்.

நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?  Empty Re: ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?

Post by Dr.S.Soundarapandian Sun Nov 19, 2017 12:21 pm

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?  103459460 ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?  1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?  Empty Re: ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 19, 2017 7:11 pm

Dr.S.Soundarapandian wrote:ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?  103459460 ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?  1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1251296
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?  Empty Re: ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum