ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!

Go down

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா! Empty முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!

Post by ayyasamy ram Sat Nov 18, 2017 3:36 am

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா! IMG71691JPG
-
10 ஆண்டுகளுக்கும் மேலாக கொலை, கொள்ளையில் ஈடுபடும்
கும்பலை பிடிக்கச் செல்லும் ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கை
எப்படி மாறுகிறது என்பதே 'தீரன் அதிகாரம் ஒன்று'.

டிஎஸ்பியாக பயிற்சி பெற்று பணிக்கு சேர்கிறார் தீரன் திருமாறன்
(கார்த்தி). மக்களுக்குத் தொந்தரவு தருகிற, கடத்தல் சம்பவங்களில்
ஈடுபடுகிற குற்றவாளிகளைக் கைது செய்வதால் அவர் அடிக்கடி
பணியிடமாற்றம் செய்யப்படுகிறார்.

மாற்றலாகி வேறு மாவட்டத்துக்குச் சென்றாலும் சளைக்காமல்,
சவால் மிக்க வழக்குகளைத் திறம்படக் கையாள்கிறார். அவரிடம்
வித்தியாசமான ஒரு வழக்கு சிக்குகிறது.

தேசிய நெடுஞ்சாலை ஓரமாக இருக்கும் வீடுகளைக் குறிவைத்து
அங்கிருக்கும் நகை, பணத்தைக் கொள்ளையடித்து, மனிதர்களைக்
கோரமாகக் கொலை செய்து தப்பி ஓடுகிறது ஒரு கும்பல்.

அந்தக் கும்பல் இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில், தங்கள்
கைவரிசையைக் காட்டுகின்றன. ஆனால், அவர்கள் எந்த வழக்கிலும்
சிக்குவதில்லை. போலீஸிடம் கைரேகை தவிர அவர்கள் எந்த
தடயத்தையும் விட்டுச் செல்வதுமில்லை. 25 வருஷமாக
இன்ஃபார்மராக இருப்பவர்களே துப்பு கிடைக்காமல் மண்டையைப்
பிய்த்துக்கொள்ள, அந்த கொள்ளைக் கூட்டத்தால் 18 பேர் கொலை
செய்யப்படுகின்றனர்.

63 பேர் படுகாயம் அடைந்து மோசமான நிலைக்குத் தள்ளப்
படுகின்றனர். இந்தக் கும்பலைக் கண்டுபிடிக்கும் பெரும் பணி
தீரன் திருமாறனிடம் (கார்த்தியிடம்) ஒப்படைக்கப்படுகிறது.
அதை தீரன் திருமாறன் கண்டுபிடித்தாரா, தடயங்கள் கிடைத்ததா,
தேடல் படலம் எவ்வளவு நாள் நீடிக்கிறது, இதனிடையே தீரனுக்கு
ஏற்படும் விளைவுகள் என்ன என்று திரைக்கதை விரிகிறது.
-
------------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா! Empty Re: முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!

Post by ayyasamy ram Sat Nov 18, 2017 3:37 am



சூப்பர் மேன் போலீஸ், காமெடி போலீஸ், ஹீரோயிசத்தை
மட்டுமே முன்னிறுத்தும் போலீஸ் என நிறைய போலீஸ் படங்கள்
வந்துவிட்டன. ஆனால், நிஜமான போலீஸ் அதிகாரியின் கதையை
கண் முன் நிறுத்தி சபாஷ் பெறுகிறார் இயக்குநர் வினோத்.

'சதுரங்க வேட்டை'யில் அசரவைத்தவர் 'தீரன் அதிகாரன் ஒன்று'
மூலம் வேட்டைக்கான வியூகங்களை திரைக்கதை நுட்பத்தில்
பதிவு செய்திருக்கும் விதம் அபாரம்.

தீரன் திருமாறனாக கார்த்தி கச்சிதமான நடிப்பை வழங்கி
இருக்கிறார். பஞ்ச் வசனம், குரல் உயர்த்தி சத்தமாகப் பேசுவது,
அதிகாரம் செலுத்துவது என வழக்கமான போலீஸ் ஹீரோவுக்கான
அம்சங்களைத் தவிர்த்துவிட்டு, உண்மையான போலீஸ்
அதிகாரியின் இயல்பை, குணநலனைப் பிரதிபலித்திருக்கிறார்.

பிரச்சினையின் வேர் தெரிந்து கண்டுபிடிக்கப் புறப்படுவது,
எதற்கும் சளைக்காமல் பயணம் மேற்கொள்வது, தன் குழுவுக்கு
எதுவும் ஆகிவிடக் கூடாது என எச்சரிக்கையுடன் இருப்பது,
பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருப்பதால் யாருக்கும்
எதுவும் தப்பாக நடந்துவிடக் கூடாது என பதறுவது, இழப்புகளைத்
தாண்டி நடக்கும் விளைவுகளை இயல்பாய் எதிர்கொள்வது என
போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்துக்கு கம்பீரம் சேர்த்திருக்கிறார்.

ரகுல் ப்ரீத் சிங் உடனான காட்சிகளில் மிகச் சிறந்த காதலன்
என்பதையும் கார்த்தி பதிவு செய்யத் தவறவில்லை.

ரகுல் ப்ரீத் சிங் சில காட்சிகளில் கவனிக்க வைக்கிறார்.
பல இடங்களில் குழந்தைத்தனமான பெண்ணாக தன்னை
முன்னிலைப்படுத்துகிறார். எத்தனை டிரான்ஸ்ஃபர், ஒழுங்கா
லஞ்சம் வாங்கிட்டு வேலை பார்க்க மாட்டியா என்று பொய்க்
கோபத்தில் கொஞ்சும் விதம் ரகளை.
-
-----------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா! Empty Re: முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!

Post by ayyasamy ram Sat Nov 18, 2017 3:37 am



போஸ் வெங்கட் படத்தில் மிக முக்கியமான பாத்திரம் ஏற்று
பக்குவமான நடிப்பை வழங்கியிருக்கிறார். 'என்னை வேணும்னா
உங்க டீம்ல இருந்து அனுப்பிடுங்க' என சங்கடமும்,
அக்கறையுமாகச் சொல்லும் விதத்தில் தேர்ந்த நடிகனாக
அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

பனே சிங் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரோஹித் பத்தாக்
தோற்றத்தாலேயே மிரட்டுகிறார். அவரின் கதாபாத்திரம்
திரைக்கதைக்கு வலு சேர்க்கிறது. ஓமார் கதாபாத்திரத்தில்
நடித்திருக்கும் அபிமன்யு சிங் தன் பாத்திரத்துக்கு நியாயம்
செய்திருக்கிறார்.

சத்யன், மனோபாலா, கல்யாணி நடராஜன், சோனியா, பிரவீணா,
அபிராமி உள்ளிட்ட பலரும் படத்தில் இருக்கிறார்கள்.
அவர்களுக்குப் பெரிதாக எந்த வேலையும் இல்லை.

வறண்ட மண், மழை, வெயில், புதை மணல், தேசிய நெடுஞ்சாலை
என எல்லாவற்றிலும் சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு பிரமிப்பை
ஏற்படுத்துகிறது. ஜிப்ரானின் பின்னணி இசை படத்துக்குப் பலம்
சேர்க்கிறது.

சிவநந்தீஸ்வரன் காதல் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் கத்தரி
போட்டிருக்கலாம். திலீப் சுப்பராயனின் ஆக்‌ஷன் காட்சிகளில்
நம்பகத்தன்மை மேலோங்குகிறது. கிராபிக்ஸ் காட்சிகள் தனித்த
கவனம் பெறுகின்றன.

ஒரு உண்மைச் சம்பவத்தை விரிவாகவும், ஆழமாகவும் அலசி
ஆராய்ந்து அதற்கான காரணங்களைக் கண்டறிந்து சினிமாவாக
உருவாக்குவது பெரிய கலை.

அந்தக் கலையை வினோத் எளிதாக கைவரப் பெற்றிருக்கிறார்.
கொள்ளைக் கும்பலின் வரலாறு, அவர்கள் கொள்ளையடிக்கும்
விதத்தை வரலாற்றுப்பூர்வமாக ஆய்வு செய்து விளக்கும் விதம்
துல்லியத்தன்மைக்கு மிகச் சிறந்த உதாரணம்.

காவல்துறை அதிகாரிகளின் உழைப்பு, அவர்களின் பணிநேரம்,
அவர்களுக்குள் இருக்கும் பாகுபாடு, அவர்கள் சந்திக்கும் தடைகள்,
பிரச்சினைகள், சக அதிகாரிகளே மட்டம் தட்டுவது என
எல்லாவற்றையும் போகிற போக்கில் சாதுர்யமாகப் பதிவு
செய்கிறார்.
-
------------------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா! Empty Re: முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!

Post by ayyasamy ram Sat Nov 18, 2017 3:37 am



போலீஸ் கேஸ் எடுக்கும் விதம், அதை விசாரிக்கும் விதம்,
கைதிகளுக்கு பிரியாணி தரப்படும் விதம், குதிரை சவாரிப்
பயிற்சி பயன்படும் விதம், புதைமணலில் மறைந்திருந்து தாக்கும்
விதம் ஆகியவற்றை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி
இருக்கிறார்.

போலீஸ் வர்றார் எட்டிப் பார்க்கிறார் இந்த மக்களை யார்
காப்பாற்றுவது என்று பொதுஜனம் கேட்க, அதற்கு பதில்
சொல்லும் விதமாக ஸ்டேஷன்ல இருக்கிற 10 பேர் எப்படி
எல்லாருக்கும் பாதுகாப்பு கொடுக்க முடியும் என்று போலீஸ்
தரப்பின் யதார்த்தம் பேசுகிறது.

அதே சமயத்தில், ''பவர்ல இருக்குறவன் உயிருக்குத் தர்ற
மரியாதையை பப்ளிக் உயிருக்கு ஏன் சார் கொடுக்க
மாட்டேங்குறீங்க'', ''நாம கெட்டவங்ககிட்ட இருந்து
நல்லவங்களை காப்பாத்துற போலீஸ் வேலையை விட்டுட்டு,
நல்லவங்ககிட்ட இருந்து கெட்டவங்களைக் காப்பாத்துற
அடியாள் வேலைதானே சார் பார்த்துக்கிட்டு இருக்கோம்'
' என்று போலீஸ் அதிகாரியைப் பேச வைத்து ஒருதலைப்
பட்சமாக போலீஸ் படம் எடுக்கவில்லை என்று தன் படைப்பின்
நேர்மையைப் பதிவு செய்கிறார்.

இரண்டாம் பாதியில் இடம்பெறும் அந்தக் குத்துப்பாட்டு
திரைக்கதையின் விறுவிறுப்புக்கு தடங்கலை ஏற்படுத்துகிறது.

படத்தில் நுணுக்கமான யுக்திகளைக் கையாண்ட இயக்குநர்
போலீஸுக்கு யூனியன் இல்லை என்பதையும் சொல்லி தன்
சமூக அக்கறையை வெளிப்படுத்தி இருக்கும் விதம்
வரவேற்கத்தக்கது. மொத்தத்தில் உண்மையும் உயிர்ப்புமாய்
ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையைச் சொன்ன விதத்தில்
'தீரன் அதிகாரம் ஒன்று' நேர்த்தியான போலீஸ் சினிமாவாக நிமிர்ந்து
நிற்கிறது.
-
----------------------------------
தமிழ் தி இந்து

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா! Empty Re: முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum