ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat

2 posters

Go down

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat Empty நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat

Post by ayyasamy ram Fri Nov 17, 2017 6:21 am

உடல்பருமன், நம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கும்
பெரிய பிரச்னை. உயர் ரத்தஅழுத்தம், இதயநோய்
போன்ற பல உடல்நலக் கோளாறுகளை வரவேற்கும்
வாசல்.

அதிக அளவில் பெரியவர்களைப் பாதித்துக்கொண்டிருந்த
இந்தப் பிரச்னை, இப்போது குழந்தைகளையும் விட்டு
வைக்கவில்லை. `உடல்பருமன் குழந்தைகள் அதிகமுள்ள
நாடுகளில் இந்தியா’ இரண்டாவது இடத்தில் இருக்கிறது
என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முந்தைய நிலவரப்படி,
இந்தியாவில் ஒரு கோடியே 44 லட்சம் குழந்தைகள் உடல்ப
ருமனோடு இருக்கிறார்கள்.

சரி.. உடல்பருமன் எப்படி ஏற்படுகிறது. நம் உடல்
இயக்கத்துக்கு உதவும் கொழுப்பு, உணவின் மூலமாகத்தான்
கிடைக்கிறது. உணவின் வழியாக நமக்குக் கிடைக்கும்
அதிகப்படியான கொழுப்பு உடலில் தேங்கும்போது உடலின்
தோற்றமே மாறிவிடும்.

அந்தக் கூடுதல் கொழுப்பினால்தான் நாம் உடல்பருமன்
பிரச்னையை எதிர்கொள்கிறோம். ``நம் உடலில் இருக்கும்
இன்னொரு கொழுப்பே உடல் எடை குறைப்பதற்கும் உதவும்
என்பதை அண்மையில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அதன் பெயர் பிரௌன் ஃபேட் (Brown Fat)’’ என்கிற
பிசியோதெரபிஸ்ட் ரம்யா, அது குறித்து விரிவாகப் பேசுகிறார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat Empty Re: நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat

Post by ayyasamy ram Fri Nov 17, 2017 6:22 am

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat P62a_13528
-
அது என்ன பிரௌன் ஃபேட்?

நம் உடலில், `மஞ்சள் நிறக் கொழுப்பு’, `பிரௌன் நிறக் கொழுப்பு’
(Brown adipose tissue (BAT) or Brown fat) என்று
இரண்டு வகைக் கொழுப்புகள் உள்ளன.

உணவிலிருந்து கிடைக்கும் மஞ்சள் கொழுப்பு உடல் எங்கும்
படியும். பெண்களுக்கு இடை, வயிறு ஆகிய இடங்களில் படியும்.
ஆண்களுக்கு வயிற்றுப் பகுதியில் படியும். உணவிலிருந்து
பெறப்படும் இந்த வகைக் கொழுப்பு எனர்ஜியாக மாற்றப்பட்டு
உடல் இயக்கத்துக்கு உதவும். தசைகளில் கொழுப்பாகப் படியும்.

பிரௌன் ஃபேட் உடலில் இயற்கையாகவே இருக்கிறது.
இது கழுத்து மற்றும் தோள்பட்டைப் பகுதியில் படிந்திருக்கும்.
குழந்தைப் பருவத்தில் சுறுசுறுப்பாக இயங்கும். உடல் வெப்ப
நிலையைக் கட்டுப்படுத்தும். உணவிலிருந்து கிடைக்கும்
எனர்ஜியை எரிக்கும் வேலையை பிரௌன் ஃபேட் செய்கிறது.

குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்னர் இந்தக்
கொழுப்பு கும்பகர்ணனைப்போலத் தூங்க ஆரம்பித்துவிடும்.
குளிர் அதிகரிக்கும்போது பிரௌன் ஃபேட் தூண்டப்படும்.
குளிரான சூழலில் உடல் வெப்பநிலையை அதிகரிக்கும்
வேலையை பிரௌன் கொழுப்பு செய்யும். இதனால்தான்
குழந்தைகள் குளிரில் அதிகமாக நடுங்குவதில்லை.
-
-----------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat Empty Re: நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat

Post by ayyasamy ram Fri Nov 17, 2017 6:22 am


நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat Child_sleeping_long_13103

ஆய்வாளர்கள் பிரௌன் ஃபேட்டை அதிகரிக்கவும், அதைத்
தூண்டி இயக்கவும் ஆய்வுகள் செய்துவருகிறார்கள்.

பெட் ஸ்கேன் (Pet scan) மூலம் நம் உடலில் எங்கெல்லாம்
பிரௌன் கொழுப்பு இருக்கிறது என்பதைத் தெரிந்து
கொள்ளலாம். ஆனால், இந்த ஸ்கேன் பரிசோதனை
காஸ்ட்லியானது. உடலில் புற்றுநோய் செல்கள் இருக்கின்றனவா
என்பதைக் கண்டறிய உடலில் பெட் ஸ்கேன் பரிசோதனை
செய்வார்கள்.

புற்றுநோய் செல்களைக் கண்டறிய ரேடியோஆக்டிவ்
மெட்டீரியல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப்
பரிசோதனையின்போது புற்றுநோய் செல்களின் நிறம்
மாறுகின்றன. இதைவைத்து, உடலில் எங்கெல்லாம் புற்று
நோய் செல்கள் இருக்கின்றன என்பது கண்டறியப்படுகிறது.

அதேபோல் உடலில் எந்தெந்த இடங்களில் பிரௌன் ஃபேட்
இருக்கிறது என்பதைக் கண்டறிய பெட் ஸ்கேனின்போது
ரேடியோஆக்டிவ் சுகர் மாலிக்கியூல்
(Radioactive Sugar Molecules) உடலில் இன்ஜெக்ட்
செய்யப்படும்.

உடலில் செலுத்தப்படும் சுகர் மாலிக்கியூலை, பிரௌன்
கொழுப்பு ஈர்த்துவிடும். இதன் மூலமாக உடலில் எங்கெங்கு
பிரௌன் ஃபேட் இருக்கிறது என்பதைக் கண்டறியலாம். இந்த
பிரௌன் ஃபேட்டை செயல்படச் செய்வதன் மூலம் உடல்
எடையைக் குறைக்க முடியும் என்கின்றன சில ஆய்வுகள்.
அப்படி, உடற்பயிற்சி செய்வதன் மூலமாக இதைத் தூண்ட
முடியும்.

இதைத் தூண்டிச் செயல்படவைக்க கூல் தெரபியும்
(Cool Therapy) கொடுக்கப்படுகிறது. வயிற்றுப் பகுதியில்
இருக்கும் கொழுப்பைக் கரைக்க கூல் தெரபியைப் பயன்
படுத்துகிறார்கள். உடலின் மார்பகப் பகுதி மற்றும் இடுப்பின்
கீழ்ப்பகுதியை மறைத்துவிட்டு அறையை மைனஸ் டிகிரியில்
குளிரச் செய்வார்கள்.

அப்போது வயிற்றுப் பகுதியில் இருக்கும் பிரௌன் ஃபேட்
தூண்டப்பட்டு, அதிகமாகச் சேமிக்கப்பட்டுள்ள மஞ்சள் கொழுப்பு
கரைக்கப்படும். கூல் தெரபி மூலம் உடல் எடையைக் குறைக்க
முடியும்.


Last edited by ayyasamy ram on Fri Nov 17, 2017 6:32 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat Empty Re: நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat

Post by ayyasamy ram Fri Nov 17, 2017 6:23 am

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat 19p10_13119_13236
-
நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat IMG-20170907-WA0027_14474
ரம்யா
------------------------
இதுவரை பிரௌன் ஃபேட்டை அதிகரிப்பதற்கான உணவுகள்
என்று எதுவும் கண்டறியப்படவில்லை. பிரௌன் கொழுப்பைச்
செயல்படவைக்க உடற்பயிற்சி உதவும். உங்கள் உடல்
எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், குறைக்கவும்..பிரௌன்
கொழுப்பைத் தூங்கவிடாமல் வைத்திருந்தாலே போதும்’’
என்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா.
-
உடல் எடை குறைப்புக்கான கொழுப்புகள் குறித்து
டெர்மடாலஜிஸ்ட் (Dermatologist) ரேவதியிடம் பேசினோம்..
. ``உடல் எடைக் குறைப்புக்கு மெஷினரியை
நம்புறவங்களுக்கு தோல் பகுதியில் படியும் வெண் கொழுப்பைக்
கரைத்து, குறைக்கிறோம்.

இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே கொழுப்பைக்
குறைக்க முடியும். இன்னொன்று, உடல் உறுப்புகளில் உள்ள
விஸிரல் ஃபேட் (Visceral Fat (Active Fat). இது இயற்கையா நம்
உடல் உறுப்புகள்ல இருக்கும் கொழுப்பு. வயிற்றுப் பகுதியில்
இருக்கும் உள் உறுப்புகள்ல இந்த விஸிரல் ஃபேட் காணப்படும்.

இதை டயட் மற்றும் உடற்பயிற்சி மூலமா குறைக்கலாம்.
பேலியோ டயட்ல இது போலத்தான் நடக்குது.

கார்போ ஹைட்ரேட் எடுத்துக்காதபோது உடலில் இருக்கும்
கொழுப்பை, நம்ம உடம்பில் உள்கட்டமைக்கப்பட்டிருக்கிற
மெக்கானிசம் கார்போ ஹைட்ரேட்டா மாத்துது.

அப்போ உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு கரைந்து,
உடல் எடை குறையும். உடற்பயிற்சி மூலமாவும் உடல்
உறுப்புகளில் இருக்கும் விஸிரல் ஃபேட்டைக் குறைக்க முயற்சி
செய்யலாம்.

ஆனாலும் இதற்கு கடுமையான டயட் மற்றும் உடற்பயிற்சி
செய்யணும். கொழுப்பு மெதுவாகத்தான் குறையும்.டாக்டர் ரேவதி

உடலில் தேங்கியிருக்கும் பிரௌன் ஃபேட்டை
`நல்ல கொழுப்பு’னு சொல்றோம். இந்தக் கொழுப்புல இரும்புச்
சத்து அதிகம் இருக்கிறதால அடர் சிவப்பு நிறத்துல இருக்கும்.

பிரௌன் ஃபேட் அதிகளவில் ஆக்சிஜனை எடுத்துக்கும்.
இது கழுத்தைச் சுற்றி கவசம் மாதிரி படர்ந்திருக்கு. பிரௌன்
ஃபேட் செயல்படும்போது உடல் வெப்பத்தை அதிகரிக்க,
வெண் கொழுப்பைக் கரைக்கும் வேலையையும் பார்க்குது.

மனிதர்கள், மிருகங்கள் குளிர் பிரதேசங்கள்ல இருக்கும்போது
உடல் வெப்பத்தைத் தக்கவைக்கிற வேலையை பிரௌன்
ஃபேட் செய்யும்.

பிறந்த குழந்தைகளிடம் இது அதிக சுறுசுறுப்பாகச் செயலாற்றும்.
உடலில் பிரௌன் ஃபேட் ஆக்டிவாக இருப்பவர்கள் அவ்வளவு
எளிதில் குண்டாக மாட்டாங்க.

குண்டாக இருப்பவர்களின் உடலில் இருக்கும் பிரௌன் ஃபேட்
செம தூக்கத்தில் இருக்கும். குறைப்பிரசவத்தில் பிறந்த
குழந்தைகளை ஹைப்போதெர்மியா (Hypothermia) நோயிலிருந்து
பாதுகாக்கும் வேலையை பிரௌன் ஃபேட் செய்கிறது.
-


Last edited by ayyasamy ram on Fri Nov 17, 2017 6:29 am; edited 2 times in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat Empty Re: நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat

Post by ayyasamy ram Fri Nov 17, 2017 6:25 am

உடல் எடை பிரச்னையைச் சமாளிக்க பல்வேறு ஆய்வுகள்
நடந்துவருகின்றன. அவற்றில், பிரௌன் ஃபேட்டைச் செயல்ப
டவைத்து, உடல் எடை கூடுவதைத் தடுக்க முடியுமா என
அறியும் ஆய்வுகளைத் தீவிரப்படுத்தியிருக்காங்க.

உண்மையில் உடலில் உள்ள பிரௌன் ஃபேட் அளவைக்
கூட்டுவதற்கான வழி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
குறைஞ்ச வெப்பநிலையில் உடலில் உள்ள பிரௌன் ஃபேட்
ஆக்டிவேட் செய்யப்பட்டவர்களின் உடலில் அதிக கலோரி
செலவு செய்யப்பட்டதுனு ஓர் ஆய்வுல கண்டுபிடிச்சிருக்காங்க.

இதுக்கான சிகிச்சைகள் இன்னும் பரவலாக்கப்படலை.
பிரௌன் ஃபேட்டைவெச்சு வெண் கொழுப்பைக் கரைக்கவும்
ஆய்வுகள் நடக்கின்றன.

எதிர்காலத்துல உடல் எடை குறைப்புல இந்த பிரௌன் ஃபேட்டோட
பங்கு முக்கியமானதா இருக்கும்’’ என்கிறார் மருத்துவர் ரேவதி.
-
ஸ்ரீதேவி.கே
நன்றி - விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat Empty Re: நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 17, 2017 11:37 am

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat 3838410834 நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat 3838410834
நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat 103459460 நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat Empty Re: நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum