புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளைகாப்பு எனும் வரவேற்பு  Poll_c10வளைகாப்பு எனும் வரவேற்பு  Poll_m10வளைகாப்பு எனும் வரவேற்பு  Poll_c10 
336 Posts - 79%
heezulia
வளைகாப்பு எனும் வரவேற்பு  Poll_c10வளைகாப்பு எனும் வரவேற்பு  Poll_m10வளைகாப்பு எனும் வரவேற்பு  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
வளைகாப்பு எனும் வரவேற்பு  Poll_c10வளைகாப்பு எனும் வரவேற்பு  Poll_m10வளைகாப்பு எனும் வரவேற்பு  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
வளைகாப்பு எனும் வரவேற்பு  Poll_c10வளைகாப்பு எனும் வரவேற்பு  Poll_m10வளைகாப்பு எனும் வரவேற்பு  Poll_c10 
8 Posts - 2%
prajai
வளைகாப்பு எனும் வரவேற்பு  Poll_c10வளைகாப்பு எனும் வரவேற்பு  Poll_m10வளைகாப்பு எனும் வரவேற்பு  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வளைகாப்பு எனும் வரவேற்பு  Poll_c10வளைகாப்பு எனும் வரவேற்பு  Poll_m10வளைகாப்பு எனும் வரவேற்பு  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வளைகாப்பு எனும் வரவேற்பு  Poll_c10வளைகாப்பு எனும் வரவேற்பு  Poll_m10வளைகாப்பு எனும் வரவேற்பு  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வளைகாப்பு எனும் வரவேற்பு  Poll_c10வளைகாப்பு எனும் வரவேற்பு  Poll_m10வளைகாப்பு எனும் வரவேற்பு  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வளைகாப்பு எனும் வரவேற்பு  Poll_c10வளைகாப்பு எனும் வரவேற்பு  Poll_m10வளைகாப்பு எனும் வரவேற்பு  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வளைகாப்பு எனும் வரவேற்பு  Poll_c10வளைகாப்பு எனும் வரவேற்பு  Poll_m10வளைகாப்பு எனும் வரவேற்பு  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளைகாப்பு எனும் வரவேற்பு


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Nov 11, 2017 9:49 pm

வளைகாப்பு எனும் வரவேற்பு  QErChDCcQImxdTFIULNP+valai
வளைகாப்பு எனும் வரவேற்பு  C3TSiURQTmV1AFF4Iq3g+valai2
!வளைகாப்பு எனும் வரவேற்பு !

மணமானப் பெண்களுக்கு மனைவி எனும் பொறுப்பில் இருந்து தாய் எனும் உயரிய மதிப்பை அடையப்போகும் மகிழிச்சியின் வெளிப்பாடே வளைகாப்பு எனும் சீமந்தம் .

எந்த ஒரு பெண்ணுக்கும் இதைவிட உற்சாகம் தரும் சொல் வேறு எதுவும் இருக்கமுடியாது. கேட்டமாத்திரத்தில் உள்ளம் குளிரும்.இதமான உணர்வு பொங்கி பிரவாகித்து, முகத்தில் சந்தோஷம் பூக்கும்.பெண்குலத்துக்கென்றே இயற்கை அளித்திருக்கும் இணையற்றவரம் தாய்மை!

நம் கலாச்சாரத்தில் எந்த ஒரு துவக்கத்தையும் முடிவையும் முத்தாய்ப்பாக நினைத்து கொண்டாடுவது வழக்கம். நம் மரபில் எந்த ஒரு சடங்கு சம்பிரதாயங்களும் தனி ஒரு மனிதரின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு கட்டாயத்தின் பெயரால் செய்யப்பட்டு வந்ததாகஎப்போதும் இருந்ததில்லை. பலரது வாழ்வில் உணர்ந்து தெளிந்த விஷயங்களை உளப்பூர்வமாக ஆராய்ந்து அது சரியென ஒருங்கே எல்லோருமாய் உணரும் போது அது சடங்காக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு ஒவ்வொரு பெரியோர்களும் வாழ்ந்து பார்த்து கடைபிடித்த சடங்குகளில் ஒன்றே வளைகாப்பு அல்லது சீமந்தம்.

பொதுவாக கர்பிணிப்பெண்களுக்கு வளைகாப்பு சடங்கு கர்பம் தரித்து ஆறாவது முதல் எட்டாவது மாதம் வரை அவரவர் குடும்ப வழக்கப்படி நடத்தப்படுவதுண்டு.

அதாவது ஆறாம் மாதம் முதல்தாயின் வயிற்றில் ஒரு சாண்அளவுள்ள குளத்தில் கவலையின்றி நீந்திக்கொண்டிருந்தக் குழந்தை வெளியுலக விசித்திரங்களை கவனிக்கத் துவங்குகிறது.
உஷ்ணம், குளிர், சப்தம் என்று தன்னைச் சுற்றி நடக்கும் சகல விஷயங்களையும் குழந்தை கவனிக்கத் துவங்குவது அந்த காலக்கட்டத்தில் இருந்து தான். எட்டாம் மாதம் முதல் கருவிலிருக்கும் குழந்தை நன்றாக கேட்க துவங்குகிறது.
ஒரு குழந்தை முதன் முதலாக உலகை கவனிக்கும் அந்தத் தருணத்திலேயே அதன் கவனத்தை அந்த துவக்கத்தை வளைகாப்பு நடத்தி வரவேற்கிறோம். உன்னைச் சுற்றி நாங்கள் தான் இருக்கிறோம். உன் வரவை எதிர்பார்த்து உனக்காகவே காத்திருக்கும் உனது உறவுகள் நாங்கள் இருக்கிறோம் என்று குழந்தைக்கு உறுதி கூறும் சடங்கு தான் வளைகப்பு.
சில பகுதிகளில் உள்ள குடும்பங்களில் கர்பிணிப் பெண்ணின் வயிற்றை விளக்கேற்றி ஆராத்தி போல் நலங்கு எனும் சடங்கு செய்வார்கள் ! இருட்டுக்குள் இருக்கும் குழந்தைக்கு வெளிச்சம் காட்டி இதோ நாங்கள் தான் உனது உறவுகள். நன்றாகப் பார்த்துக்கொள். நீ வெளியே வந்தவுடன் உன்னை வரவேற்கப்போகும் சொந்தங்கள் நாங்கள் என்பதை உள்ளே இருக்கும் குழந்தைக்கு உறுதிப்படுத்தும் விதமாக சடங்கு செய்வார்கள். விளக்கொளி குழந்தைக்குத்தெரியுமா? என்றால் தெரியும் என்றுதான் சொல்லவேண்டும் .தாயை பாதிக்கும் ஒளி, உஷ்ணம், ஒலி என எல்லாவற்றையும் வயற்றில் இருக்கும் குழந்தை உணர முடியும்.இது நிருபிக்கப்பட்ட உண்மை .

தாயின் கருவறையில் இருக்கும் போதே குழந்தை கேட்டல் திறனை விருத்தி செய்யத் தொடங்குவதாகவும் தாயின் குரல் என்பவற்றை அடையாளம் கண்டு கொள்வதாகவும் இவ்வாய்வு கூறுகிறது அவற்றில் சில முடிவுகளைக் கொஞ்சம் வரிசைப்படுத்தினால் அவை இவ்வாறு அமையும் .

1. கருவிலிருக்கும் போதே குழந்தைகள் சப்தங்களை கவனிக்கின்றது. அதீத சப்தத்தால் சில சமயங்களில் பாதிக்கப்படுவதும் உண்டு.

2. கருவிலிருக்கும் குழந்தையால் இசையைக் கேட்கமுடியும். ஒரு வயலின் வாசிப்பை விட ட்ரம்ஸ் வாசிப்பின் அதிர்வலைகளை குழந்தை எளிதில் உணர்கிறது.

3. கருவிலிருக்கும் குழந்தை தாயின் குரலையும் இதர சப்தத்தையும் சரியாக பிரித்துப் பார்த்து அறிந்து கொள்கிறது.

4. அமைதியான ஒரு இடத்தில் வாக்குவம் க்ளீனரின் சப்தம் முதல் பக்கெட்டில் தண்னீர் கொட்டும் சப்தம் வரை குழந்தையால் கவனிக்க முடியும்.

5. மனிதக் குரல்களின் மூலமாகவே வெளி உலகை குழந்தை பரிச்சியம் செய்து கொள்கிறது.

6. மற்ற சப்தங்களை விட தாய் மற்றும் தந்தையின் குரல்களை இயற்கையாகவே குழந்தை அடையாளம் கண்டு கொள்கிறது.

7. ஃப்ளாஷ் லைட் அடிக்கப்படும் போது குழந்தை அதனை எதிர் கொள்ளும் முகமாக அசைவதை ஆராய்ச்சிகளின் போது பல தாய்மார்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால் இந்த விஷயங்களை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நமது முன்னோர்கள் சடங்குளாக கடைபிடித்து கருவிலிருக்கும் போதே புதிதாக வரப்போகும் ஜீவனுடன் உரையாடி உறவாடிப் பழகியிருக்கிறார்கள் என்பது ஆச்சரியம் தான்.

வளைகாப்பு அல்லது சீமந்தம் எனும் சடங்கில் நமது தமிழகத்தில் கடைப்பிடிக்கும் பொதுவான சில முறைகளைக் காணலாம் .
முதலில் நல்ல நாளாகத் தேர்ந்தெடுக்கலாம்.
இந்த சடங்கு பெரும்பாலும் பெண்ணின் கணவரின் வீட்டில் நடைபெற்று , பின் பெண்ணின் தாய் வீட்டுக்கு பிரசவத்திற்காக அழைத்துவருவது ஆகும் .

அன்று காலையில், மங்கள ஸ்னானம் செய்யவேண்டும். நல்லப்பட்டுபுடவை , உடுத்தி வளை அடுக்குவது வழக்கம்.
கோலம் போட்ட மணை அருகில், விளக்கு ஏற்றி வைத்து, தட்டில், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பழம், சர்க்கரை, கல்கண்டு எடுத்து வைப்பார்கள்
மணையில் கிழக்கு நோக்கி உட்கார வைப்பார்கள்
நாத்தனார் பக்கத்தில் இருந்தால், அவர் மாலை போடலாம்.

சில குடும்பங்களில், வளைச்செட்டியை ( அந்த நாளைய கிராமத்து வளையல் வியாபாரி ) வளை அடுக்கச் சொல்லுவார்கள். அன்று அவர் தாய் மாமனுக்கு சமானம்ஆகக் கருதப்படுவார் .
அப்படி இல்லாவிட்டால், ஒரு கைக்கு அம்மாவும், மற்றொரு கைக்கு மாமியாரும் அடுக்குவது சில வீடுகளில் வழக்கம்.அல்லது வயதில் பெரியார்கள் யார் வேண்டுமானாலும் அடுக்கலாம்.
முதலில், குல தெய்வத்திற்கும், கோவிலில் அம்மனுக்கு சாத்துவதற்கும், சிவப்பு, பச்சை நிற வளைகள் 5, 5 எடுத்து சுவாமி சன்னிதியில் வைப்பார்கள்
இடதுகைக்கு ஒற்றைப் படையும், வலது கைக்கு இரட்டைப் படையும் அடுக்க வேண்டும், (14, 15 - 21, 22)
முதலில் வேப்பிலைக் காப்பு போட வேண்டும். பொன் காப்பு, வெள்ளி காப்பு போடவேண்டும்.
கடைசியில், கொலுசு வளையோ அரக்கு வளையோ சற்றே சிறிய அளவில் போட்டால், வளைகள் ஓடாமல் இருக்கும்.
மணையில் இருந்து எழுந்ததும் சபைக்கு ஒரு நமஸ்காரம் பொதுவாகப் பண்ண வேண்டும்.
பின்னர் ஆரத்தி எடுக்க வேண்டும்.
வந்த பெண்கள் எல்லோர்க்கும் வளை கொடுப்பது வழக்கம்.
5 வித பக்ஷணங்கள் செய்ய வேண்டும்.
ஒரு ஜோடி பருப்பு தேங்காய், வறுபயறு (பொரிகொள்ளு அல்லது வரவரிசி), திரட்டு பால் தவிர ஒரு உப்பு பக்ஷணமும், ஒரு செய்யலாம்.
வந்தவர்களுக்கு வெற்றிலை பாக்குடன் சிறிது வறுபயறு கொடுப்பது வழக்கம்.

சாப்பட்டிற்குச், சித்திரான்ன வகைகள் ஐந்து செய்ய வேண்டும். வளைகாப்புப் பெண் சாப்பிட உட்கார்ந்ததும், அந்தப் பெண்ணின் மடியில், ஒரு மிகச் சிறிய ஆண் குழந்தையையும், பெண் குழந்தையையும் உட்கார்த்தி, ஒரு அப்பளத்தில், சிறிது சாத வகைகளை வைத்துக் கொடுப்பதும் உண்டு .
வயிற்றில் வாழும் குழந்தைக்கு எப்போதும் நல்ல ஒரு ஓசை இடைவிடாமல் கேட்கவேண்டும் என்றே தாய்க்கு அடுக்கடுக்காக கண்ணாடி வளையல்கள் இருகைகளில் அடுக்கப்படுகிறது வளையல்கள் கிளிங் ,கிளிங் எனும் குலுங்கும் ஓசை குழந்தைக்கு பிடிக்குமாம் .
வளைகாப்பு கூட வளையல் சத்தம் குழந்தையை மகிழ்விக்கும் என்பதற்காகவே செய்யப்படுகிறது!

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை 6வது மாதம் முதலே நல்ல கேட்கும் திறனைப் பெறுகிறது! அதிலும் குறிப்பாக தன் தாயின் இதயத்துடிப்பு முதல் அவளின் குரல், பேச்சு என அனைத்தையும் கூர்ந்து கேட்கும்।பிறர் குரலும், மற்ற சத்தங்களும் ஓரளவு கேட்டாலும் தாயின் குரல் நன்றாகக் கேட்கும், விரைவில் தாயின் குரல் குழந்தைக்குப் பரிச்சயமாகிவிடும்!உதாரணமாக வானம் எப்படி இருக்கும் என்று கருவில் இருக்கும் போது தாய் விளக்கியிருந்தால் வானத்தை குழந்தை விரைவில் அடையாளம் காணும்!
வீண் வாக்குவாதங்கள், விவாதங்கள் தவிர்த்து நேரம் கிடக்கும்போது நல்ல பாட்டுக்கள், ஸ்லோகங்கள் கேட்கலாம். மனது நிம்மதியுடன் இருந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்


இத்தகைய ஒரு நுட்பமான விஷயத்தை வாழ்ந்தறிந்து கருவிலிருக்கும் குழந்தையோடு எப்படிப்பழகினார்கள் என்பதற்கு சான்று மகாபாரதத்தில் கூறப்படும் அபிமன்யுவின் கதையே சான்று.

இவ்வாறு வயற்றில் வளரும் குழந்தையைப்பற்றிக்கூட ,கவனம் வைத்துப்போற்றும் நம்முடைய மரபின் பெருமையையும் , அதன் நீண்ட பாரம்பரியமும் நாமின் தொன்மைச் சிறப்பை வெளிப்படுத்தும் சான்றாக அமைகிறது ,
வளைகாப்புடன் வரப்போகும் வாரிசை கொண்டாட்டத்துடன் வரவேற்போம் !
அண்ணாமலை சுகுமாரன்
11/11/17

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக