புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோற்றவர்களின் கதை  Poll_c10தோற்றவர்களின் கதை  Poll_m10தோற்றவர்களின் கதை  Poll_c10 
113 Posts - 75%
heezulia
தோற்றவர்களின் கதை  Poll_c10தோற்றவர்களின் கதை  Poll_m10தோற்றவர்களின் கதை  Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
தோற்றவர்களின் கதை  Poll_c10தோற்றவர்களின் கதை  Poll_m10தோற்றவர்களின் கதை  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
தோற்றவர்களின் கதை  Poll_c10தோற்றவர்களின் கதை  Poll_m10தோற்றவர்களின் கதை  Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
தோற்றவர்களின் கதை  Poll_c10தோற்றவர்களின் கதை  Poll_m10தோற்றவர்களின் கதை  Poll_c10 
3 Posts - 2%
Pampu
தோற்றவர்களின் கதை  Poll_c10தோற்றவர்களின் கதை  Poll_m10தோற்றவர்களின் கதை  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தோற்றவர்களின் கதை  Poll_c10தோற்றவர்களின் கதை  Poll_m10தோற்றவர்களின் கதை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோற்றவர்களின் கதை  Poll_c10தோற்றவர்களின் கதை  Poll_m10தோற்றவர்களின் கதை  Poll_c10 
278 Posts - 76%
heezulia
தோற்றவர்களின் கதை  Poll_c10தோற்றவர்களின் கதை  Poll_m10தோற்றவர்களின் கதை  Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
தோற்றவர்களின் கதை  Poll_c10தோற்றவர்களின் கதை  Poll_m10தோற்றவர்களின் கதை  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தோற்றவர்களின் கதை  Poll_c10தோற்றவர்களின் கதை  Poll_m10தோற்றவர்களின் கதை  Poll_c10 
8 Posts - 2%
prajai
தோற்றவர்களின் கதை  Poll_c10தோற்றவர்களின் கதை  Poll_m10தோற்றவர்களின் கதை  Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
தோற்றவர்களின் கதை  Poll_c10தோற்றவர்களின் கதை  Poll_m10தோற்றவர்களின் கதை  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தோற்றவர்களின் கதை  Poll_c10தோற்றவர்களின் கதை  Poll_m10தோற்றவர்களின் கதை  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தோற்றவர்களின் கதை  Poll_c10தோற்றவர்களின் கதை  Poll_m10தோற்றவர்களின் கதை  Poll_c10 
3 Posts - 1%
Barushree
தோற்றவர்களின் கதை  Poll_c10தோற்றவர்களின் கதை  Poll_m10தோற்றவர்களின் கதை  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தோற்றவர்களின் கதை  Poll_c10தோற்றவர்களின் கதை  Poll_m10தோற்றவர்களின் கதை  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோற்றவர்களின் கதை


   
   
ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Sun Dec 03, 2017 11:00 am

சார்லி சாப்ளின்!

உலகிலேயே மிக அதிகமான மக்களை வயிறு குலுங்கச் சிரிக்கவைத்த மாபெரும் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின். 100 ஆண்டுகளுக்குப் பின்னரும் அவரது நகைச்சுவைப் படங்களைப் பார்த்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் குதூகலிக்கிறார்கள். சிரிப்போடு கூடவே, மனிதநேயச் சிந்தனையையும் பரிசளிப்பதே சார்லி சாப்ளினின் தனித்துவம்.

மற்றவர்களைச் சிரிக்கவைப்பதற்காக, தான் கடந்துவந்த வேதனைமிக்க பாதை பற்றி சார்லி சாப்ளின் சொன்ன வலி மிகுந்த வார்த்தைகள்: ‘‘நான் மழையில் நடந்துசெல்வதை விரும்புகிறேன். ஏனென்றால், மழைநீரில் நான் நடக்கும் போது, எனது கண்ணீரை மற்றவர்கள் பார்க்க முடியாது.’’

லண்டனில் 1889 ஏப்ரல் 16-ல் பிறந்தார் சார்லி சாப்ளின். தாயும் தந்தையும் நாடக நடிகர்கள். தந்தை குடிக்கு அடிமையாகி இறந்துவிட்டார். சாப்ளின், அவரது தாய் ஹன்னா, சகோதரர் சிட்னி மூவரும் குடியிருந்த வீடுகளிலிருந்து அடிக்கடி துரத்தப்பட்டனர். பல நாட்கள்
நடைபாதைகளிலும், பூங்காக்களிலும் தூங்கி எழுந்திருக்கும் கடினமான வாழ்க்கை.

வறுமையின் பிடியில் இருந்தபோதும், தாய் ஹன்னா சாப்ளினை மிகுந்த பாசத்துடன் வளர்த்தார். ‘‘எதிர்காலத்தில் நீ உலகிலேயே அதிக புகழ்பெற்ற மனிதனாக இருப்பாய்’’ என்ற தன்னம்பிக்கை சிந்தனையை டன் கணக்கில் சார்லியின் தலையில் ஏற்றிவைத்தார்.

சிறுவன் சார்லிக்கு 5 வயதாக இருந்தபோது, ஒருநாள் அவனது தாய் ஹன்னா தனது மேடைப் பாடல் நிகழ்ச்சிக்கு சார்லியையும் கூட்டிச் சென்றிருந்தார். பார்வையாளர் கூட்டத்தின் முன் பாடிக்கொண்டிருந்த ஹன்னாவுக்கு திடீர் என தொண்டை கட்டிக்கொண்டது. வார்த்தைகள் வரவில்லை. கூட்டத்தினர் கூச்சலிட்டனர்.



குட்டிப் பையன் சார்லிக்கு கொஞ்சம் நடிக்கத் தெரியும் என்பதை அறிந்திருந்த நிகழ்ச்சி நிர்வாகி, சார்லியை கூட்டத்தின் முன் நிறுத்தி, ‘‘எப்படியாவது கூட்டத்தைச் சமாளி… என் மானத்தைக் காப்பாற்று’’ என்று கெஞ்சினார். எந்த முன்தயாரிப்பும் இல்லாமல் இருந்த சிறுவன் சார்லி, சமயோசிதமாக தனது தாய்க்குத் தொண்டை கட்டி அவர் பாடச் சிரமப்பட்ட சம்பவத்தையே நடித்துக் காட்டினான். ஒரே பாராட்டு… ஆரவாரம். கூட்டத்தினர் அவனை நோக்கிக் காசுகளை வீசி உற்சாகப்படுத்தினர். ‘‘கொஞ்சம் அமைதி’’ என்று கையைக் காட்டியவாறே, மேடையில் விழுந்திருந்த காசுகளைப் பொறுமையாகப் பொறுக்கி எடுத்துக்கொண்ட சார்லி, பின் சில பாடல்களைப் பாடியும் நகைச்சுவையாக நடனமாடியும் கூட்டத்தைக் கலகலப்பாக்கினான்.

வறுமையான சூழலில் இருந்து மீள்வதற்குள், சாப்ளினின் தாய்க்கு உடல்நிலை பாதிப்படையவே, அவர் மனநோய் மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டார். ஹான்வெல் என்னும் ஆதரவற்றச் சிறுவர்களுக்கான இல்லத்தில் சாப்ளின் சேர்க்கப்பட்டார். விடுதிக் காப்பாளரிடம் அடிவாங்கி, நோயில் விழுந்து அவதியுற்ற சார்லிக்கு ஆறுதல் கூறுவதற்குக்கூட யாருமே இல்லை. ‘‘அந்தச் சூழலிலும்கூட, நான் உலகத்திலேயே சிறந்த நடிகர் ஆகப்போகிறேன் என்ற கற்பனை பிம்பம்தான் எனக்கு அசாத்தியமான தைரியத்தைக் கொடுத்தது’’ என்று பின்னாட்களில் சார்லி தன் மகனிடம் கூறியுள்ளார்.

சார்லி தனது 19-வது வயதில், ப்ரெட் கார்னோ கம்பெனியில் துணை நடிகராக வேலைக்குச் சேர்ந்தார். சார்லியின் ஒல்லியான உருவத்தைப் பார்த்த கம்பெனிக்காரர்கள் அவருக்கு பிச்சைக்காரன், குடிகாரன் போன்ற பாத்திரங்களையே கொடுத்தனர். எந்தப் பாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக நடிக்கிற பையன் என்ற பெயர் எடுத்தார். அமெரிக்காவுக்கு நாடகக் குழு ஒன்றை அனுப்ப வேண்டியிருந்தபோது, அந்தக் குழுவில் ஒருவராக சார்லி சாப்ளின் அமெரிக்கா அனுப்பி வைக்கப்பட்டார்.

கப்பல், அமெரிக்காவைச் சென்று சேர்ந்தபோது சார்லியுடன் சென்ற ஸ்டான் லாரல் என்பவர் அந்தக் காட்சியை இப்படி விவரிக்கிறார். ‘‘கப்பலில் இருந்து இறங்கியவுடன், அமெரிக்க நிலப்பரப்பைப் பார்த்துக் கை அசைத்த சார்லி சாப்ளின் நாடகப் பாணியில் இப்படிச் சொன்னார்: ‘அமெரிக்காவே உன்னை வெற்றிகொள்ள நான் வந்திருக்கிறேன். இன்னும் சில நாட்களில் இங்குள்ள ஒவ்வோர் ஆணும், ஒவ்வொரு பெண்ணும், ஒவ்வொரு குழந்தையும் சார்லி சாப்ளின் என்ற எனது பெயரைச் சொல்வார்கள்.’ அவரது வார்த்தைகளில் தன்னம்பிக்கை நிரம்பியிருந்தது.”
அவரது மேடை நாடகங்கள் அமெரிக்காவில் மிகவும் பிரபலமாகின. 1914-ம் ஆண்டில் அவரைத் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்தது கீஸ்டோன் ஸ்டுடியோ. தனித்துவம் காட்டுவதில் நிகரற்றவரான சார்லி, நாடோடிக் கதாபாத்திரத்தை விரைவில் உருவாக்கிக் கொண்டார். தலையில் உயர்ந்த தொப்பி, கையில் வளைந்த தடி, இறுக்கமான சூட்டு, நறுக்கு மீசை, கோமாளி நடைகொண்ட நாடோடிக் கதாபாத்திரம் வெகுவிரைவில் உலகையே கவர்ந்துவிட்டது.

ஒரே ஆண்டில் 35 படங்களில் நடித்தார். ஸ்டுடியோக்கள் அவரை ஒப்பந்தம் செய்ய வரிசையில் நின்றன. 28 வயதில் உலக சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் தருவதாக அவருடன் ஒப்பந்தம் போட்டது மியூச்சுவல் ஸ்டுடியோ. விரைவில் உலகிலேயே அதிகப் பணக்கார நடிகர் ஆகிவிட்டார். ஆனால், அவர் பணக்காரராக வாழவில்லை. சிறு வயதிலேயே பசி, பட்டினியோடு வளர்ந்தவரான சார்லி சாப்ளின், அடித்தட்டு மக்களின் மீதான தனது அளவுகடந்த அன்பினை வெளிப்படுத்தும் வகையில் பல படங்களை உருவாக்கினார்.

‘ஒரு நாயின் வாழ்க்கை’, ‘தி கிட்’, ‘தி சர்க்கஸ்’, ‘தி சிட்டி லைட்ஸ்’, ‘தி கோல்டு ரஷ்’ போன்ற படங்கள் சமூக அவலங்களை நகைச்சுவையுடன் சித்தரித்த குறுங்காவியங்கள். மனிதர்களை இயந்திரங்களாக மாற்றும் அவலத்தைக் கேலிசெய்து ‘மாடர்ன் டைம்ஸ்’ என்ற படம் தயாரித்தார் சாப்ளின். சர்வாதிகாரி ஹிட்லரை அம்பலப்படுத்தும் ‘தி கிரேட் டிக்டேட்டர்’ (மாபெரும் சர்வாதிகாரி) என்ற படமும் தயாரித்தார். இந்தப் படங்கள் சமூக அக்கறை மிக்க மகத்தான கலைப் படைப்புகள்.

இதுபோன்ற மனிதநேயம் மிக்க படங்களை உருவாக்கியதற்காக அவர் மீது அமெரிக்க உளவுத்துறை எதிர் பிரசாரத்தைத் தூண்டியது. 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்துவந்த சார்லி மீது அமெரிக்கக் குடியுரிமை பெறவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அவர் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இதனால் அவரது ‘யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்’ பட நிறுவனம் சரிந்தது. மீண்டும் தோல்விகள். ‘அயல்நாட்டானை அடித்துத் துரத்து’ என்று சார்லி சாப்ளினுக்கு எதிரான கோஷம் எழுப்பப் பட்டது. அவரைக் கம்யூனிஸ்ட் என்று தூற்றினார்கள். சாப்ளின் அஞ்சவில்லை. ‘‘நான் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல… ஒரு மனிதன்’’ என்று முழங்கினார்.

தனக்கு எதிரான அவதூறுப் பிரசாரம் உச்சத்தை அடைந்த நிலையில், சார்லி சாப்ளின் கடைசியில் அமெரிக்காவைவிட்டு வெளியேறினார். இங்கிலாந்து சென்றார். பின் சுவிஸ் நாட்டில் தங்கிவிட்டார். யுத்தவெறியை எதிர்த்துக் குரல்கொடுக்க அவர் எப்போதுமே தயங்கவில்லை, தவறவில்லை. சார்லி சாப்ளினை நாட்டை விட்டுத் துரத்தியது தவறு என்று 1970-களில் உணர்ந்துகொண்ட அமெரிக்கர்கள், அவரை மீண்டும் வரவழைத்து விருதுகள் வழங்கிப் போற்றிப் பாராட்டினார்கள்.

‘தி கிரேட் டிக்டேட்டர்’ படத்தின் இறுதிக் காட்சியில், ஓர் எளிய முடிதிருத்தும் தொழிலாளி கதாபாத்திரத்தின் மூலம் சாப்ளின் பேசுகிறார்: ‘‘ஒரு புதிய உலகைப் படைக்க நாம் அனைவரும் ஒன்று சேர்வோம். பேராசை, வெறுப்பு, சகிப்பின்மை இவற்றுக்கு முடிவுகட்டுவோம். அறிவார்ந்த உலகைப் படைப்போம். அறிவியலும், வளர்ச்சியும் மனிதகுல மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லட்டும். ஜனநாயகம் காக்க நாம் அனைவரும் ஒன்றுசேர்வோம்.’’

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 03, 2017 6:02 pm

தோற்றவர்களின் கதை  103459460 தோற்றவர்களின் கதை  103459460



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jan 24, 2018 5:27 pm

சூப்பருங்க



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக