புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் தீபாவளி Poll_c10வரலாற்றில் தீபாவளி Poll_m10வரலாற்றில் தீபாவளி Poll_c10 
25 Posts - 39%
heezulia
வரலாற்றில் தீபாவளி Poll_c10வரலாற்றில் தீபாவளி Poll_m10வரலாற்றில் தீபாவளி Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
வரலாற்றில் தீபாவளி Poll_c10வரலாற்றில் தீபாவளி Poll_m10வரலாற்றில் தீபாவளி Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
வரலாற்றில் தீபாவளி Poll_c10வரலாற்றில் தீபாவளி Poll_m10வரலாற்றில் தீபாவளி Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
வரலாற்றில் தீபாவளி Poll_c10வரலாற்றில் தீபாவளி Poll_m10வரலாற்றில் தீபாவளி Poll_c10 
4 Posts - 6%
Raji@123
வரலாற்றில் தீபாவளி Poll_c10வரலாற்றில் தீபாவளி Poll_m10வரலாற்றில் தீபாவளி Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
வரலாற்றில் தீபாவளி Poll_c10வரலாற்றில் தீபாவளி Poll_m10வரலாற்றில் தீபாவளி Poll_c10 
1 Post - 2%
Barushree
வரலாற்றில் தீபாவளி Poll_c10வரலாற்றில் தீபாவளி Poll_m10வரலாற்றில் தீபாவளி Poll_c10 
1 Post - 2%
M. Priya
வரலாற்றில் தீபாவளி Poll_c10வரலாற்றில் தீபாவளி Poll_m10வரலாற்றில் தீபாவளி Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
வரலாற்றில் தீபாவளி Poll_c10வரலாற்றில் தீபாவளி Poll_m10வரலாற்றில் தீபாவளி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்றில் தீபாவளி Poll_c10வரலாற்றில் தீபாவளி Poll_m10வரலாற்றில் தீபாவளி Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
வரலாற்றில் தீபாவளி Poll_c10வரலாற்றில் தீபாவளி Poll_m10வரலாற்றில் தீபாவளி Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
வரலாற்றில் தீபாவளி Poll_c10வரலாற்றில் தீபாவளி Poll_m10வரலாற்றில் தீபாவளி Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் தீபாவளி Poll_c10வரலாற்றில் தீபாவளி Poll_m10வரலாற்றில் தீபாவளி Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
வரலாற்றில் தீபாவளி Poll_c10வரலாற்றில் தீபாவளி Poll_m10வரலாற்றில் தீபாவளி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வரலாற்றில் தீபாவளி Poll_c10வரலாற்றில் தீபாவளி Poll_m10வரலாற்றில் தீபாவளி Poll_c10 
7 Posts - 2%
prajai
வரலாற்றில் தீபாவளி Poll_c10வரலாற்றில் தீபாவளி Poll_m10வரலாற்றில் தீபாவளி Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
வரலாற்றில் தீபாவளி Poll_c10வரலாற்றில் தீபாவளி Poll_m10வரலாற்றில் தீபாவளி Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வரலாற்றில் தீபாவளி Poll_c10வரலாற்றில் தீபாவளி Poll_m10வரலாற்றில் தீபாவளி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வரலாற்றில் தீபாவளி Poll_c10வரலாற்றில் தீபாவளி Poll_m10வரலாற்றில் தீபாவளி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் தீபாவளி


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue Oct 17, 2017 7:53 am


வரலாற்றில் தீபாவளி U4nOwDmCTJKhRlyPRcQk+depa1வரலாற்றில் தீபாவளி GSYLWynmQu2Qo0xnPtHF+depa2
வரலாற்றில் தீபாவளி - 1
அண்ணாமலை சுகுமாரன்

இந்தியா எப்போதுமே ஒரு விழாக்களுக்கான நாடு
வருடம் முழுவதுமே ஏதாவது திருவிழா எங்காவது நிகழ்ந்துகொண்டே இருக்கும் .சடங்குகளும் கொண்டாட்டமும் மிகுந்த வாழ்வியல் முறை நம்முடையது .
இந்தியாவில் தான் எத்தனை மதம் , மக்களுக்குள் எத்தனை விதமான சாதிகள் ,எத்தனை வித கலாச்சாரம் , எத்தனை மொழி அத்தனை பேரும் கொண்டாடஏதாவது விழா எங்காவது இருந்துகொண்டேதான் இருக்கிறது

ஆயினும் அத்தனை விழாவுக்கும் அரசனைப்போல் இந்தியர்வில் அனைவரும் கொண்டாடும் விழா ஒன்று இருக்கும் என்றால் அது தீபாவளிதான் .
இந்தியாவில் மட்டுமா ? இன்னமும் பல நாடுகளில் தீபாவளிக்கு விடுமுறை மற்றும் கொண்டாட்டம் உண்டு .அவைகள் ஸ்ரீலங்கா ,நேபால் ,மொரிஷியஸ்,மியன்மார் ,டிரினிடாட் ,கயானா ,சுரினாம் ,பியூஜி , சிங்கப்பூர் ,மற்றும் மலேசியா போன்ற நாடுகள் ஆகும் .
ஏன் இப்படி பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது என்றால்
தீபாவளி இந்துக்களின் பண்டிகை மட்டுமல்ல .

தீபாவளி புத்த , சமண , சீக்கிய ஆகிய பல மதங்களுக்கும் உரிமை உடையது இந்துக்களிலும் பல மாறுபட்ட புராணக்கதைகள,நம்பிக்கைகள் தீபாவளிப் பற்றி உண்டு .
வரலாற்றில் இத்தனைக்கும் ஆதாரங்கள் உள்ளன .வரலாறு கூறும் தீபாவளிப் பற்றிய தககவல்கள் ஒவ்வான்றையும் வரிசையாகப் பார்ப்போம் .

முதலில் சமண மத தீபாவளியைப்பார்ப்போம்

பகவான் வர்த்தமான எனும் மகாவீரர் சமணத்தின்
24 வது தீர்த்தரங்கரார் ஆவார் சமணத்தின் மிக முக்கிய குருவும் ஆனவர் அவர் மஹா நிர்வாணம் அடைந்தது
15, அக்டோபர் கி மு 527 ஆண்டு ஆகும் தற்போது பீகாரில் உள்ள பாவபுரி (Pavapuri) என்னும் ஊரில் மஹா நிர்வாணம்அடைந்தார் .அந்த15, அக்டோபர் கி மு
527, ஒரு தீபாவளித்தினமாக அமைந்தது
அப்போது அதற்க்கு முன்பேதீபாவளிபண்டிகை இந்தியாவில் கொண்டாடப்பட்டிருக்கிறது என்பது உறுதி ஆகிறது
அந்த புனித நாள் உலகெங்கும் உள்ள அனைத்து சமணர்களால் நினைவுக்கொள்ளப்படுகிறது .

மகா வீரர் மகா நிர்வாணம் அடைந்த அந்த நாள் அமாவாசைக்கு முந்திய சதுர்த்தசி நாள் எனவே அன்று இரவு இருள் சூழ்ந்து இருந்திருக்கும் .
மக்கள் அனைவரும் ,அப்போதைய பல மன்னர்களும் தங்கள் வீடுகளையும் ,அரண்மனைகளையம் ,தெருக்களையும் இந்த நிகழ்வை பார்க்க ஒளியுட்டினார்கள்
அந்த மஹா நிர்வாணம் அடையும் புனித நிகழ்வைக் காண பல கடவுளர்களும் ,தீர்தங்கர்களும்பாவபுரி வந்திருந்ததாகக் கூறப்படுகிறது .
அந்த இருளில் ஏற்றப்பட்ட ஒளிவெள்ளம் மஹாவீரர் ஞான ஒளி பெற்றத்தைக் குறிக்கும் விதமாக அமைந்தது .
மகாவீரரின் மஹா நிர்வாணம் அடையும் தினம் முன்பே அவரால் குறிக்கப்பட்டுவிட்டது .அதற்க்கு முந்தய இரண்டு நாட்கள் அவர் கடும் விரதம் மேற்கொண்டார் அவரின் புகழ்பெற்ற இறுதி உரையையும் அப்போது அவர் ஆற்றினார் அவைகள் விபக் சூத்திரா எனவும் உத்திரதாயன் சூத்ரா எனவும் போற்றப்படுகிறது .இரவு முழுவதும் அவர் தனது கடமையைத் தொடர்ந்தார் .அவர் நிர்வாணம் அடையும் நிகழ்வைக்கான மக்கள் அந்தசதுர்த்தசி இருண்ட இரவை
ஒளியூட்டினார்கள் .
எங்கும் இருள் அகன்று ஒளி நிரம்பியது .அதுவே அஞ்ஞானம் அகன்று ஞானம் பிறந்ததற்கு அறிகுறியாகக்
கூறப்படுகிறது .
ஆச்சார்ய பத்திரபாகுஎன்பவர் தனது கல்ப சூத்திரா என்னும் நூலில் இவைகளை விவரித்துள்ளதாகக் கூறப்படுகிறது .
ஆச்சிரியமாக இந்துமதமும் , சமண மதமும் தீபாவளியை
தீபத்திருநாளாக விவரிக்கின்றன .மஹா வீரருக்கு முன் தீபாவளி இருந்தது தெரிகிறது ஆனால் அப்போது தீப ஒளி நாளாக இருந்ததா எனது தெரியவில்லை .
ஆனால் ஜெயின் எனும் சமணர்களுக்கு இந்த தீப ஒளி முக்கியமானது .மஹா வீரர் முக்தி அடைந்து உடலை உதிர்த்து செல்லும் போது அவரின் உள்ளுடல் , ஒளியுடலாக மாறி அனைத்து பகுதியையும் ஒளிவெள்ளமாக ஆக்கியதாகக் கூறப்படுகிறது .
இவ்வாறு தனது ஹரிவம்ச புராணம் எனும் நூலில் ஜினசேனர் கூறுகிறார் .அது இந்துக்களின் மஹா பாரதத்தை ஒட்டி எழுதப்பட்ட நூலாகும் .ஜினசேனர் இந்த நூலை கி பி 705 இல் இயற்றி இருக்கிறார் .

tatastuh lokah prativarsham-araat ako
prasiddha-deepalikaya-aatra bharate
samudyatah poojayitum jineshvaram
jinendra-nirvana vibhuti-bhaktibhak
இதில் தான் வரலாற்றில் முதல் முறையாக தீபாளிக்கயாஎன்ற சொல் தீபாவளிக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது இதில் கடவுளர்கள் பாவனகிரியை மஹா வீரரின் நிர்வாணத்திற்காக ஒளிமயமாக ஆக்கியதாகவும் ,எனவே மக்கள் இந்த நாளை ஒளி நாளாக கொண்டாடவேண்டும் எனக் கூறுகிறார் .

சமணர்களுக்கு புதிய வருடம் தீபாவளிக்கு அடுத்து வரும் நாளாகும் ,அந்த நாளை சமணர்கள் வீர நிர்வாணா சம்வாத எனக்கொண்டாடுகிறார்கள் .சமணர்கள் பெருவாரியாக
வணிகர்கள் எனவே அன்று தங்களது வணிகத்தின் கணக்கு
புதிதாக எழுத துவங்குவார்கள் .அன்றைய தினத்தை
லக்ஷிமிக்கு உகந்த நாளாக கொண்டாடுவார்கள் .இத்தகைய
சடங்குகள் சமணர்களால் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது .
ஜெயின்ஆலயங்களில்விஷேச வழிபாடுகளும் ,
மதப் பாடல்கள் , மந்திரங்கள் என தொடர்ந்து நடைபெறும் .மேலும் பலர் மஹாவீரர மஹா நிர்வாணம் அடைந்த பாவபுரிக்கு புனிதப் பயணம் செய்து வழிபடுவார்கள் இவாறு தீபாவளி சமணர்களால் இன்றும் கொண்டாடப்படுகிறது தமிழ் நாட்டிலும் இன்னமும் சமணம்
பல்வேறு பகுதியில் முக்கிய ஆலயங்களில் நிலைபெற்று இருக்கிறது .புதுவைக்கு அருகில் உள்ள மேல்சித்தமூர் இந்தப்பகுதிக்கு தலைமையிடமாக விளங்கி வருகிறது

இப்போதே கட்டுரை நீண்டுவிட்டது இன்னமும் சீக்கிய மதம் மற்றும் புத்த மதத்தின் தீபாவளி இருக்கிறது .இந்து மதத்தின் தீபாவளியைப் பற்றி வரலாற்று செய்திகள் நீளமாக இருக்கிறது .எனவே இவைகளை அடுத்த மூன்று பகுதியில் பார்க்கலாம் .
அனைவர் வாழ்வில் ஒளிவெள்ளம் நிரம்பி ,
ஆனந்த வாழ்வை இந்த தீபாவளி நிரப்ப வாழ்த்துக்கள் !
--ஆனந்தம் தொடரட்டும் !
தொடரும்
அண்ணாமலை சுகுமாரன்
17/10/17

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 17, 2017 9:24 am

அரிய தகவல்கள்
உங்களுக்கும் எந்தன் தீபாவளி தின வாழ்த்துகள்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Oct 17, 2017 5:11 pm

வரலாற்றில் தீபாவளி 103459460 வரலாற்றில் தீபாவளி 3838410834 வரலாற்றில் தீபாவளி 1571444738
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue Oct 17, 2017 7:21 pm

T.N.Balasubramanian wrote:அரிய தகவல்கள்
உங்களுக்கும் எந்தன் தீபாவளி தின வாழ்த்துகள்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1249075
மிக்க நன்றி ,
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் --

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Oct 20, 2017 12:43 pm


வரலாற்றில் தீபாவளி LEiyFBUScSuVVlXB1IZg+dep7
வரலாற்றில் தீபாவளி EIqNpxNFQKeVc2GfqW1T+dee6
வரலாற்றில் தீபாவளி SILTcZQ4TX66f15M5CPg+dee4வரலாற்றில் தீபாவளி - 2

வரலாற்றில் தீபாவளி கட்டுரை பலரையும் கவர்ந்திருக்கிறது .சென்றயக் கட்டுரையில் சமணமதத் தொடர்புபற்றிப் பார்த்ததோம் . இனி தீபாவளிக்கும் புத்தமதத்திற்கும் இருக்கும் தொடர்பைக்காணலாம் .

உலகமெங்கும் இருக்கும் புத்தமதத்தவர்கள் தீபாவளி நாளை புனித நாளாக கொண்டாடுகிறார்கள் .அன்று புத்த மத மந்திரங்கள் ஓதுவதும் ,கொண்டாட்டங்களும் உண்டு .
அன்றய தினமே அசோகர் எனும் மாமன்னர் ,தனது வன்முறை மார்கத்தைவிட்டு , அமைதி வழிக்கு திரும்பிய நாளாகக் கருதப்படுகிறது .இது கலிங்கபோருக்கு பின் நடைபெற்ற மிகப்பெரிய உயிரிழைப்பையும் ,ஓடிய ரத்த ஆறைக்கண்டபின் நடைபெற்றது என்பது அனைவருக்கும்
தெரியும் . அன்றுதான் அசோகர் சமணமத்தில் இருந்து
புத்தமனத்திற்கு அமைதி வழிக்கு திரும்பினார் .
அது கி மு 265 இல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது .
அந்த நாள் அசோக் விஜயதசமி என்று புத்தமதத்தவர்களால்
அழைக்கப்படுகிறது .
புத்தமதத்தவரைப் பொறுத்தவரை தீபாவளி நாள் அஞ்ஞான
இருளைப்போக்க வந்த ஞான ஒளியின் திருநாள் என்றுதான் ஆன்மீக ரீதியாக எண்ணப்படுகிறது அதனால் தான் அசோகர் வன்முறையை விடுத்து புத்தமதத்தின் அமைதிவழிக்கு திரும்பியதை ஒப்பிட்டு நோக்குகிறார்கள் .
இந்த விழா நேபாளில் மிக சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது .
நேப்பாளின் ஆதிக் குடிகள் உலகின் எந்தப்பகுதியில் இருந்தாலும் தீபாவளியைக் கொண்டாடாமல் இருப்பதில்லை .
சிங்கப்பூரில் இந்துக்களைப்போல புத்தமதத்தவரும் அதிகம் .எனவே அன்று சிங்கப்பூரில் அரசு விடுமுறை .மேலும் அரசு சார்பில் கொண்டாட்டங்களும் உண்டு .லிட்டில் இந்தியா பகுதியில் இந்துக்களும் , புத்த மதத்தவரும் சேர்ந்தேக் கொண்டாடுவார்கள் .
இவ்வாறு தீபாவளி இந்துக்களுக்கு மட்டுமல்லாது , புத்தமதத்தவருக்கும் புனித நாளாக கார்த்திக் கொண்டாடப்படுகிறது .

இனி அடுத்த மதமான சீக்கியர்கள் தீபாவளியை எப்படி போற்றி கொண்டாடுகிறார்கள் என்பதைக் காணலாம் .
சிக்கிய மதம் அப்போதைய முகலாய மன்னர்களின் இந்து விரோத போக்கிற்கும் ,கொடுமைகளுக்கும் எதிராகத் தோன்றிய மதம் என்பது அறிந்ததே .
அவர்களின் குரு அர்ஜண் தேவ ஜி ,அவரது மறைவிற்கு முன் தனது வாரிசாக குரு ஹர் கோபிந்த் சிங் என்பவரை நியமித்து ,அவரிடம் இரண்டு போர்வாட்களை தந்ததாகக்
கூறப்படுகிறது அதற்குப்பிறகு குரு ஹர் கோபிந்த் சிங் அமித்சரசில் ஒரு கோட்டையைக்கட்டி அதில் 700 குதிரைகள் ,60 துப்பாக்கி வீர்கள் , 500 க்லாட்படை அடங்கிய ஒரு படையை அமைத்தார் .அவர்களுக்கு தீவிர ராணுவப்பயிற்சியும் அளிக்கப்பட்டது .அந்தப்படை அருகில் இருந்த 4 மொகலாயதளபதிகளையும் போரில் வென்றது
இவ்வாறு தமது நாட்டிற்கு உள்ளேயே ஒரு சுதந்திர நாடு உருவாகுவதை அறிந்த ஜஹாங்கிர் ,குரு .ஹர் கோபிந்த் சிங்கை கைது செய்து சிறையில் அடைக்க எண்ணினார் .ஆனால் அவரின் அமைச்சர்கள் ஹர் கோபிந்த் சிங் அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்க யோசனைக் கூறினார்கள் .ஜஹாங்கிரும் குருவை பேச்சுக்கு அழைத்தார் .
ஆனால் அவைக்கு வந்த ஹர் கோபிந்த் சிங் கைது செய்யப்பட்டார் .அவருடன் சேர்த்து 52 இந்து அரசர்களும்
சிறையில் அடைக்கப்பட்டனர் .
ஆனால் உடனே அப்போதில் இருந்து , மன்னர் ஜஹாங்கிர் மிகுந்த நோய்வாய்ப்பட்டார் .அவரது அமைச்சர்கள் குரு ஹர் கோபிந்த் சிங் சாபத்தால் தான் அப்படி ஆகியது எனவே அவரை சிறையில் இருந்து விடுவித்து விடுங்கள் என வலியுறுத்தினார் .அரசி நூர்ஜகானின் தொடர் வலியுறுத்தலால் அரசரும் குரு ஹர் கோபிந்த் சிங் மட்டும்
விடுவிக்க ஒப்புக்கொண்டார் .குரு ஹர் கோபிந்த் சிங் கூடவே 52 அரசர்களும் சிறையில் இருந்தனர் .அவர்களும் விடுவிக்கப்பட்டால் மட்டுமே தானும் வெளியே வருவேன் என குரு ஹர் கோபிந்த் சிங் கூறிவிட்டார் .
மன்னர் ஜஹாங்கிர் அரை மனசுதான் ஒரு நிபந்தனை விடுத்தார் அதாவது குரு ஹர் கோபிந்த் சிங் எத்தனை பேரைத் தொட்டுக்கொண்டிருக்கிறாரோ அவர்கள் மட்டும்
விடுதலை செய்யப்படுவார்கள் என்றுஆணை யிட்டார் .மன்னர் நினைத்தது அதிக பட்சம் நான்கைந்து பேரை மட்டும் தானே குருவால் தொடமுடியும் என்பதே .
ஆனால் குரு ஹர் கோபிந்த் சிங் அதை தனது அறிவால் வென்றார் .அவர் தனது மேலங்கியை 52 நாடாக்களை தைத்துக்கொண்டார் .52 மன்னர்களின் மேலங்கியுளும்
ஒரு நாடா தைக்கப்பட்டது .பிறகு குருவின் மேலங்கியின்
52 நாடாக்களுடன் அனைத்து அரசர்களும் இணைக்கப்பட்டனர் இவ்வாறு குரு ஹர் கோபிந்த் சிங் கூடவே அனைத்து 52 அரசர்களும் விடுதலை ஆயினர் .
அன்றைய நாள் தீபாவளியாக அமைத்தது .
முதல் நாள் இரவு முழுவதும் அவர்கள் அந்த தையல் வேலையில் ஈடுபட்டிருந்தனர் .
இது நடை பெற்ற வருடம் கி .பி 1619
தங்களது குரு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதை சீக்கியர்கள் அனைவரும் கொண்டாடினார்கள் .அன்று முதல் அந்த நாள் சீக்கியர்களின் திருவிழா நாளாக அமைந்தது .
அந்த நாளை அவர்கள் பிண்டி சோர் திவாஸ் எனப்பெயரிட்டு கொண்டாடாத தொடங்கினார்கள் .குரு ஹர் கோபிந்த் சிங்கின் அன்னை தனது மகனின் விடுதலையைக் கொண்டாட அனைவர் வீடுகளுக்கும் இனிப்புகளையும் ,விஷேச உணவுகளையும் தயாரித்து அனுப்பினார் .
சீக்கியர்கள் இன்னமும் அந்த நிகழ்வைத் தொடர்ந்து
அவர்கள் நண்பர்கள் ,உறவினர் வீடுகளுக்கு இனிப்புகளை தயாரித்து அனுப்புகிறார்கள் .இவ்வாறு இந்த தீபாவளி கொண்டாடப்படுகிறது .குரு அமிர்தசரஸ் திரும்பியதும் பொற் கோயில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது .உலகில் இருக்கும் அனைத்து குருத்துவாரா களும் இவ்வாறே ஒளிரும் விளக்குகளால்
தீபாவளி அன்று அலங்கரிக்கப்படுகிறது .

தீபாவளித்தினம் வேறு ஒரு வழியிலும் சீக்கியர்களுக்கு .
முக்கிய தினமாக அமைகிறது .அப்போதெல்லாம் முஸ்லீம்களாக இல்லாதவர்கள் ஒரு தனி வரியை
முஸ்லீம் அரசர்களுக்கு செலுத்தவேண்டும் .
இதை எதிர்த்து அவ்வப்போது மக்களின் கிளர்ச்சி இருந்து வந்தது .கி பி 1737 இல் பாய் மணி சிங் ஜி எனும் சீக்கிய குரு
பகிரங்கமாக அந்த வரியை மறுத்து கடிதம் எழுதினர் .
அவர் சீக்கியர்களின் முக்கிய அறிஞர் ஆவர் அவர்களின் புனித நூலான குரு கிரந்த சாஹிப் எனும் நூலின் சில இறுதிப்பகுதியை எழுதியவர் .
அவரின் இந்த வரிகொடாத மறுப்பை மொகலாய மன்னர் விரும்பவில்லை .எனவே லாகூரில் மக்கள் மத்தியில் பாய் மணி சிங் ஜி தலை காய் கால்கள் என சிறுக சிறுக வெட்டினார்கள் அப்போது பாய் மணி சிங் ஜி கிஜித்தும் பயம் இன்றி சீக்கியர்களின் சுகமணி சாஹிப் எனும் புனித வரிகளை உச்சரித்தவாறே உயிர்துறந்தார் .
அந்த நாளும் ஒரு தீபாவளி நாளில் நிகழ்ந்தது .
எனவே சீக்கியர்கள் அந்த தியாக நாளை தீபாவளியன்று
நினைவு கூறுகிறார்கள் .
இவ்வாறு தீபாவளி கொண்டாட்டம் இந்தியாவில் உதித்த சமணம் , புத்தம் சீக்கியம் என அனைத்து மதங்களிலும்
கொண்டாடப்படுகிறது .
இந்தியர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்டமாக திகழ்கிறது .இந்தியா என்றும் ஒன்றுபட்ட நாடு என்பதை உறுதி படுத்திடுகிறது
அடுத்த பகுதியில் தமிழர் களுக்கும் தீபாவளிக்கும் உள்ள இலக்கியத் தொடர்பையும் ,இந்தியா எங்கும் இந்துக்களால்
எவ்வாறு கொண்டடாடப்படுகிறது என்பதைக் காணலாம் .
தொடரும் -
அண்ணாமலை சுகுமாரன்
20/10/17
படம் 1 , 2 பொற்கோயிலில்சீக்கிய தீபாவளி
படம் 3 நேபாளத்தில் புத்த தீபாவளி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக