ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்

4 posters

Go down

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்  Empty அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்

Post by sugumaran Wed Oct 18, 2017 3:08 am

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்  PtMM6RXTTfGIzSEZ2SeQ+diwali
அந்தநாளாய தீபாவளி
--அண்ணாமலை சுகுமாரன்
இப்போதெல்லாம் தீபாவளி வரும்போதெல்லாம் இழந்துவிட்ட அந்த நாளைய சந்தோஷங்கள்தான் மனதை உறுத்துகிறது சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் நான் சிறுவனாக இருந்தபோது கொண்டாடிய தீபாவளிகள் இன்னமும் நினைவில் நிற்கிறது அப்போதெல்லாம் ஐப்பசிப்பிறந்தாலே அனைவருக்கும் தீபாவளி சந்தோசம் தொற்றிக்கொள்ளும் .
ஒரு மாதம் முன்பே தீபாவளி அட்வான்ஸ் , போனஸ் , கைத்தறி கடையில் கடன் ,காதியில் கடன் என தீபாவளிகளைக்கட்டும் .தினமும் ஒரு வேலை இருக்கும் .
அப்போதெல்லாம் இனிப்புக்கடைகள் அத்தனை இருக்கவில்லை .
ஆனால் அனைத்து வீடுகளிலும் தாங்களே இனிப்பும் , காரமும் சொந்தமாக செய்யும் பழக்கம் அதிகம் இருந்தது .
அதிகம் பலகாரங்கள் செய்து தங்கள் சாமர்த்தியத்தைக் காட்ட அப்போதைய பெண்கள் விரும்புவார்கள்
ஒரு மாதம் முன்பே அதற்க்கு வேண்டிய பொருள்களை கடைகளில் வாங்கி அவைகளை வெய்யலில் காயவைத்து ,அதை மாவு இயந்திரத்தில் கொண்டு சென்று அரைத்துக்கொண்டுவருவது சிறுவர்களின் வேலை .மாதம் முழுவதும்அந்த வேலை அப்போதெல்லாம்உண்டு கூடவே மழையும் உண்டு .ஐப்பசி அடைமழை என்று தவறாமல் பெய்யும் மழை அப்போதெல்லாம் உண்டு . தினமும் ஒரு தின்பண்டம் என வீடுகளில் செய்ய ஆரம்பிப்பார்கள் .தெருவே அப்போது மணக்கும் .சிறுவர்களுக்கு தினமும் குதுகோலம் தான்
புதுத்துணி வாங்க பயணம் , தையல் கடைகளில் அளவு கொடுத்து விட்டு தீபாவளி முதலிரவு வரை காத்திருந்து வாங்கிவருவது என எத்தனை சந்தோஷ அனுபவங்கள் அப்போது இருந்தது
அப்போதெல்லாம் ரெடிமேடுகள் கிடையாது .
வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வாங்கிய புதுப்புடவைப்பற்றியும் ,வீட்டில் செய்யும் திண்பண்டங்கள்
என பேச்செல்லாம் ஒரு மாதம் தீபாவளிப்பற்றியே இருக்கும் .தீபாவளிப்பற்றிய" கவுட்டவுன் " ஆரம்பம் ஆகிவிடும் .நினைவெல்லாம் தீபாவளி எதிர்பார்ப்பிலேயே சிறுவர்களுக்கு இருக்கும் .தினமும் கடைகளுக்கு சென்று கொஞ்சம் கொஞ்சம் பட்டாசுகள் வாங்கி நண்பர்களுடன் சேர்ந்து வெடிப்பது , பின்பு அதைப்பற்றியே பேசி நினைவில் மகிழ்வது என பல சந்தோஷங்கள் அப்போதைய தீபாவளிக்கு உண்டு .ஒருவாறு தீபாவளியும் வந்துவிடும் ,அன்று இரவு முழுவதும் வீடுகளில் பெண்கள் தூங்கமாட்டார்கள் .
விடியவிடிய திட்டம் போட்டு ,செய்யாமல் மிச்சம் இருக்கும் தின்பண்டங்களை செய்வதும் ,வடை சுழியன் என அன்றைய தின பலகாரங்கள் செய்வதில் இரவு போகும் .
சிறுவர்களும் தூங்கமாட்டார்கள் ,தாயார் ,சகோதரிகளுடன்
துணையாக இருப்பார்கள் .உற்சாக பேச்சு ,மனம் முழுக்க
மகிழ்ச்சி இவைகளே வீடு முழுவதும் நிறைத்திருக்கும் .
விடியும் முன் நாலு மணிக்கே வெந்நீர் சூடாகத்தொடங்கிவிடும் .விடியும் முன்பே தலை குளித்தால் தான் கங்காஸ்தானம் என ஆகும் என்ற கவலை பெரியவர்களுக்கு உண்டு ஐந்து மணிக்கே புதுதுணி போட்டுக்கொண்டு , தெருவில் வீடுகளுக்கு பலகார விநியோகமும் தொடங்கிவிடும் .
வீட்டில் செய்த தின்பண்டமும் ,புது ஆடைகளும் புகழப்படும் அப்போது சந்தோசம் கொஞ்சம் கூடும் .
பிறகு தொடங்கும் பட்டாசு வெடிப்பு நண்பர்களுடன் ஆரம்பமாகும் .இவையெல்லாம் இன்னமும் நீக்காத நினைவுகள் .தீபாவளி என்றாலே அப்போதெல்லாம்
சந்தோசம் தான் . பிறகு வீட்டுக்கு வீடு தீபாவளி மலர் வாங்குவது , அதைப்பற்றியே பேசுவது ,மாதம் முழுவதும் அதை பரிமாறிக்கொள்வது என்று பல சந்தோஷங்களை
அடங்கியதாக தீபாவளி அப்போது இருந்தது .
தீபாவளி எதற்க்காக கொண்டாடப்படுகிறது என்றகவலை யாருக்கும் இல்லை .தீபாவளி வருவதே அனைவருக்கும்
சந்தோசம்அளிப்பதற்காகவே என்பது அனைவரின் எண்ணம் .அப்போது ஏழைப் பணக்காரன் என்று பாகுபாடு இல்லாமல்
அனைவரும் அவரவர் தகுதிக்கு தக்கவாறு கொண்டாடி அனைவரும் சந்தோஷமாக இருந்தனர் .
அத்தகைய ஆண்டு முழுவதும் எதிர்பார்த்து சந்தோஷமாக கொண்டாடிய தீபாவளியின் இப்போதைய நிலை என்ன ?

இப்போது அனைவரிடமும் எதையும் வாங்கும் சக்தி இருக்கிறது .ஆனால் சந்தோஷத்தை தான் வாங்க முடியவில்லை எப்படி மகிழ்ச்சியாக இருப்பது ?போன்ற புத்தகங்கள் விற்பனை சக்கைப்போடு போடுகிறது .
மனிதனின் இயல்பே மகிழ்ச்சிதான் என்பது மறந்துவிட்டது ..
சின்னச் சின்னச் சந்தோஷ அனுபவங்களால் மனதை நிரப்பி மனத்தையும்உடலையும் எப்போதும் மகிழ்ச்சியாகவைத்துக்கொள்ளத் தவறிவிட்டோம்
பலரும் புன்னகைப்பதுகூடதினமுமல்ல .

இப்போதைய தீபாவளிக்கு இரவில் பூத்து காலையில் வாடும் மலர்களாக மாறிவிட்டது .வருவதும் தெரியவில்லை போவதும் தெரியவில்லை .
முதல் நாள் இரவு சென்று அனைவருக்கும் ஆயத்த ஆடையும் , ஆயத்த இனிப்புகளும் கொஞ்சமாக வாங்கி ,
விடிந்ததும் படைத்து , தலைகுளித்து புத்தாடை உடுத்தி ,
ஸ்மார்ட் போனைப்பார்த்துக்கொண்டே உணவருந்தி , விரைவில் விஜய் ,தலை படங்களை காண ஓட்டம் வயது குறைந்தவர்களுக்கு , மற்றவர்களுக்கோ முழு கவனமும்
டீ வி முன்தான் ,அன்பை பிறருக்கு கொடுப்பதற்கும் நேரமில்லை , எனவே அன்பை பெரும் வாய்ப்பும் இல்லை .
இப்போது தீபாவளி என்னமோ வருகிறது , அனால் அது தரும் சந்தோசம் தான் இல்லை .
அண்ணாமலை சுகுமாரன்
15/10/17
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே என்று அனைவரும் மகிழ்ச்சியாக தீபாவளிக்
கொண்டாட வாழ்த்துக்கள் !
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்  Empty Re: அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்

Post by ayyasamy ram Wed Oct 18, 2017 6:35 am

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்  103459460
-
மலரும் நினைவுகள்...
-
அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்  221FWnsoRxC540j7ekjv+d8
-
அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்  Bvj7xkC1SxG03C7kC9CU+d6
-
அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்  KtJ5Sbr5RWWKXyFAvnJB+dd
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்  Empty Re: அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்

Post by M.Jagadeesan Wed Oct 18, 2017 11:27 am

தீபாவளி மட்டுமல்ல . எல்லாப் பண்டிகைகளும் பொலிவிழந்துவிட்டன. காரணம் சீரியல்களும் , செல்போனும்தான் . பட்டிமன்றம் என்ற பெயரில் எல்லா சேனல்களிலும் ஒரு வெட்டிப்பேச்சு ! தல படங்களால் , தளபதி படங்களால் நாட்டுக்கு என்ன நன்மை ? மக்கள் சிந்திக்கவேண்டும்..


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்  Empty Re: அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்

Post by T.N.Balasubramanian Wed Oct 18, 2017 5:11 pm

ஐந்து ரூபாய்க்கு பட்டாசு வாங்கி
ஓய்ந்து போகும் வரை வெடித்தது அந்தக்காலம்.
ஐம்பத்து ஐந்துக்கு கம்பி மத்தாப்பு ஒரு பெட்டி இன்று .
சந்தோஷமா வரும் ? கண்ணீர்தான் வரும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்  Empty Re: அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum