ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரைமணிநேரத்தில் சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய ட்வீட்... ரயில்வே துறைக்கு போடலாம் ஒரு 'சபாஷ்'

2 posters

Go down

அரைமணிநேரத்தில் சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய ட்வீட்... ரயில்வே துறைக்கு போடலாம் ஒரு 'சபாஷ்' Empty அரைமணிநேரத்தில் சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய ட்வீட்... ரயில்வே துறைக்கு போடலாம் ஒரு 'சபாஷ்'

Post by ayyasamy ram Sun Oct 08, 2017 9:07 am

பெங்களூருவிலிருந்து டெல்லி செல்லும் கர்நாடகா எக்ஸ்பிரஸ்
நேற்று மாலை வழக்கம்போல் பெங்களூருவிலிருந்து புறப்பட்டது.

அதில் ஹரியானாவைச் சேர்ந்த ஒரு தம்பதி தன் 4 வயது மகனுடன்
பயணித்தனர். இரவு 9.30 சிறுவனுக்கு காய்ச்சல் உண்டானது.
காய்ச்சல் கட்டுப்படும் என நினைத்த பெற்றோருக்கு ஏமாற்றமே
மிஞ்சியது.

விறுவிறுவென கொஞ்சநேரத்தில் பையனின் உடல் வெப்பநிலை
104 டிகிரியை தொட்டது. காய்ச்சல் நீர்ச்சத்துக்குறைவு இவற்றால்
சிறுவன் மயக்கமடைந்தான்.

என்ன செய்வதென்று புரியாமல் தவித்து நின்றனர் அவனது
பெற்றோர். அடுத்த ரயில் நிலையம் வர இன்னும் அரை மணி
நேரத்திற்குமேல் ஆகும். அதற்குள் மகனுக்கு காய்ச்சல் அதிகமாகி
வலிப்பு வந்தால் என்ன நேரும் என தவித்துப்போனார்கள்.

தவிப்பினிடையே அந்த சிறுவனின் தந்தை சமயோசிதமாக, தான்
ஆபத்திலிருப்பதாகவும் தன் மகனின் உயிரைப்பாற்ற உதவ
வேண்டுமென்றும், தான் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கப்
போகிற தகவலையும் ட்வீட் செய்தார்.

அடுத்த இருபது நிமிடங்களில் அடுத்த ரயில் நிலையமான இடார்சி
ரயில் நிலையம் வந்தது. மயக்கமடைந்த தன் மகனை தோளில்
போட்டுக்கொண்டு கதறியபடி இறங்கிய அந்த பெற்றோரை
வரவேற்றது ரயில்வே சிறப்பு மருத்துவக்குழு.

இன்ப அதிர்ச்சிக்குள்ளானார் தந்தை. ரயில் நிலையத்திலேயே
சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

சிறுவன் இப்போது இடார்சியில் உள்ள ஒரு பிரபல தனியார்
மருத்துவமனையில் மருத்துவரின் கண்காணிப்பில் இருக்கிறான்.
சின்ன ட்வீட் தன் மகனின் உயிரைக்காத்ததை எண்ணி ஆனந்தக்
கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறார் அந்த தந்தை.

ஒரு சின்ன ட்வீட்டுக்கு மதிப்பளித்து ரயில்வே நிர்வாகம் மூலம்
ஒரு உயிரைக் காக்க உதவியவர் ரயில் பயணிகள் வசதிகள்
மேம்பாட்டுக்குழு உறுப்பினர் ஆசிர்வாதம் ஆச்சாரி. அவரிடம்
பேசினோம்.

“அரியானா மாநிலம், குர்காவ் என்ற இடத்தைச் சேர்ந்த அந்த
குடும்பம் ஒரு வேலையாக பெங்களூரு போய் மீண்டும் இன்று
டெல்லிக்கு திரும்பிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

அவசர அவசரமாக கிளம்பியதால் அப்போதே பையனுக்கு லேசான
காய்ச்சல் இருந்ததை பொருட்படுத்தவில்லை. ரயிலில் ஏறிய
பின்னர்தான் காய்ச்சல் அதிகமாகியிருக்கிறது.

என்ன செய்வதென்று புரியாமல் இருந்த நிலையில் ரயில் இடார்சி
ரயில் நிலையத்தை நெருங்கிக்கொண்டிருந்த சமயம் சிறுவனுக்கு
காய்ச்சல் அளவுக்கு அதிகமாகி மூர்ச்சையாகிவிட்டிருக்கிறான்.
பதறிய சிறுவனின் தந்தை அந்த தகவலை ட்வீட் செய்து உதவி
கோரியிருக்கிறார். அதைக்கண்டு வட இந்திய பெண்
பத்திரிகையாளர் ஒருவர் எனக்கு ரீட்வீட் செய்தார்.

முக்கிய விஷயமாக சகாக்களுடன் பேசிக்கொண்டிருந்த நான்
நிலைமையை புரிந்துகொண்டு துரிதமாக செயல்பட்டேன்.

உடனடியாக போபால் டிவிஷனல் ரயில்வே மேலாளர் சௌத்ரிக்கு
போன் செய்து, விஷயத்தைக் கூறி தாமதிக்காமல் உடனடியாக
ரயில்நிலையத்தில் ஒரு டாக்டர்கள் குழுவுடன் ஒரு முதலுதவி
வாகனத்தை நிறுத்தும்படி அறிவுறுத்தினேன். அவ்வாறே
செய்யப்பட்டது.

ரயில் இடார்சி ரயில் நிலையத்தை அடைந்த சில வினாடிகளில்
சிறுவனின் பெற்றோர் இறங்கிய பெட்டியின் அருகே போய்
முதலுதவி வாகனம் நின்றது. ரயில் நிலையத்தில் இறங்கி
மருத்துவமனையைத் தேடி ஓடிப்போய் மகனை காப்பாற்ற
நேரம் இருக்குமா என துயரமான முகத்துடன் பிளாட்பாரத்தில்
இறங்கிய சிறுவனின் பெற்றோருக்கு பிளாட்பாரத்திலேயே
முதலுதவி வாகனத்தை கண்டதும் இன்ப அதிர்ச்சியானது.
உடனடியாக சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

சிறுவன் கண்விழித்தபிறகும் காய்ச்சல் குறையாமல் ஆபத்தான
நிலைமையே தொடர்வதாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து
உள்ளுரில் உள்ள எனது பா.ஜ.க நண்பர்கள் மூலம் தாமதிக்காமல்
அந்த சிறுவனை இடார்சியில் உள்ள பிரபல தனியார்
மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தேன்.

சரியான நேரத்திற்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதால்
சிறுவன் இப்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும்
இன்னும் இரு நாள்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க
வேண்டும் என அறிவுறுத்தியிருப்பதாகவும் இப்போதுதான்
நண்பர்கள் தகவல் தந்தனர்.

இது ரயில் பயணிகள் வசதிகள் மேம்பாட்டுக்குழு உறுப்பினராக
என் கடமைதான் என்றாலும் ஒரு உயிரைக் காப்பாற்றியதில்
மகிழ்ச்சி” என்றவர், “இந்த விஷயத்தில் ரயில்வே நிர்வாகத்தின்
துரித நடவடிக்கையை பாராட்டுவது ஒரு பக்கம் என்றால் தகவல்
தொழில் நுட்பத்தின் வளர்ச்சி மலைக்கவைக்கிறது” என்றார்.


உண்மைதான், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் நன்மை தீமை
இரண்டுமே அதை அணுகுகிற விதத்தைப் பொறுத்ததுதான்
என்பது நிரூபிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

சபாஷ் ரயில்வே!
-
--------------------------------
-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரைமணிநேரத்தில் சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய ட்வீட்... ரயில்வே துறைக்கு போடலாம் ஒரு 'சபாஷ்' Empty Re: அரைமணிநேரத்தில் சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய ட்வீட்... ரயில்வே துறைக்கு போடலாம் ஒரு 'சபாஷ்'

Post by Dr.S.Soundarapandian Sun Oct 08, 2017 3:24 pm

:நல்வரவு:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» 'தொடர்வண்டி பயணச்சீட்டை ரத்து செய்தவர்களால் ரயில்வே துறைக்கு 5366 கோடி லாபம்'
» ஏழை மாணவர்களை வாழவைக்கும் "வாழை'க்கு ஜே... தாராளமாய் ஒரு "சபாஷ்' போடலாம்!
» அதிகாரிகள் அலட்சியம்: பலரின் உயிரைக் காப்பாற்றிய கேப் டிரைவர்!
» கொட்டும் பனியில் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய அமெரிக்க டாக்டர்
» கேரளா சிறுவனின் கலைப்படைப்பு; ரயில்வே அமைச்சகம் பாராட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum