ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 16:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளும் நானும்! (சிறப்பு சந்திப்பு)

Go down

கடவுளும் நானும்! (சிறப்பு சந்திப்பு) Empty கடவுளும் நானும்! (சிறப்பு சந்திப்பு)

Post by Pranav Jain Tue 3 Oct 2017 - 5:50

கடவுள்: "மானிடா!... மானிடா!... எங்க போனான் இவன்?"

நான்: "வாருங்கள் கடவுளே! நான் இங்கு தான் இருக்கிறேன்."

கடவுள்: "என்னப்பா... ரொம்ப நாளா நீ என்னைத் தேடி வரவேயில்லையே ஏன்?"

நான்: "நீங்க டூப்ளிகேட் கடவுள்னு தெரிஞ்சி போச்சி... அதான் வரல!"

கடவுள்: "என்னது நான் டூப்ளிகேட் கடவுளா? எவன் சொன்னது?"

நான்: "அவன் இவன் என்ற ஏக வசனங்கள் தேவையில்லை. எங்கள் அறிவியல் விஞ்சானிகள் தான் சொன்னார்கள்!"

கடவுள்: "உங்கள் அறிவியல் விஞ்சானிகள் எதைத்தான் நம்பியிருக்கிறார்கள்? என்னை நம்புவதற்கு?"

நான்: "ஹலோ..! எங்கள் விஞ்சானிகள் ஒன்றும் சும்மா சொல்லவில்லை. பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து கூறியிருக்கிறார்கள் "ஹிக்ஸ் போஸன்" தான் கடவுள் அதன் மூலம்தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று."

கடவுள்: "உங்கள் விஞ்சானிகள்தான் கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லி வந்தார்களே... பிறகு ஏன் ஹிக்ஸ் போஸன் என்பதற்கு "கடவுள் துகள்" என்று பெயர் வைத்தார்கள்? நாம் சொல்வதைத்தான் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். வேறு யார் சொன்னாலும் அதை முட்டாள்தனம் என்று சொல்வதுதான் உங்கள் அறிவியலாளர்களின் கண்டுபிடிப்பா?"

நான்: "தெரியவில்லையே கடவுளே..."

கடவுள்: "சரி, அதுதான் கடவுள் என்றால்.... இதுவரை மக்கள் கோவில்களில் கடவுள் இருப்பதாக சொன்னார்களே அது மடத்தனம் தானே? அந்தக் கடவுளிடம் சரணாகதியடைந்தால் நம்மை காப்பாற்றுவார் என்பதும் அறியாமை தானே? என்னை வைத்து ஏன் இப்படியெல்லாம் நீங்கள் விளையாடுகிறீர்கள்?"

நான்: "நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள் கடவுளே. அவர்கள் ஒன்றும் "ஹிக்ஸ் போஸன்" தான் கடவுள் என்று இறுதியாக சொல்லவில்லை. நீண்ட தேடலுக்குப் பிறகு அதை கண்டு பிடித்ததனால் அதற்கு "கடவுள் துகள்" என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அவ்வளவு தான்."

கடவுள்: "ஏண்டா இப்படி சொதப்புரே?"

நான்: "நான் ஒன்றும் சொதப்பவில்லையே..."

கடவுள்: "நீ தானே, உங்கள் விஞ்சானிகள் கடவுளைக் கண்டு பிடித்து விட்டார்கள் என்றும். நான் டூப்ளிகேட் கடவுள் என்றும் கூறினாய்?"

நான்: "ஓ! அப்படி சொல்லிருக்கேனா? கொஞ்சம் இருங்கள் மேலே படிச்சிட்டு வரேன்...

கடவுள்: "படித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிட்டு அப்படியே ஓடிடலாம்னு பாக்குறியா? அதெல்லாம் நீ ஒன்னும் படிக்க வேண்டாம். இங்கே வா!"

நான்: சரி கடவுளே... நீங்க தான் உண்மையான கடவுள் என்று நான் ஒத்துக் கொள்கிறேன். ஆமா, இந்த "ஹிக்ஸ் போஸன்" என்று ஏன் பெயர் வைத்தார்கள்? இதன் பொருள் என்ன?

கடவுள்: "இதை நீ உங்கள் அறிவியல் மேதைகளிடம்தானே கேட்க வேண்டும்."

நான்: "நீங்கள் தான் எல்லாவற்றையும் அறிந்தவராயிற்றே... அதனால்தான் உங்களிடம் கேட்டேன். தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்லுங்கள். அறிவியல் மேதைகளிடம் எனக்குக் கேட்கத் தெரியாதா?"

கடவுள்: "சரி கோபம் கொள்ளாதே மானிடா. சொல்கிறேன் கேள்... அதாவது, சுமார் 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பெரு வெடிப்பின் காரணமாக இந்தப் பேரண்டம் உருவானது என்றும்,(அப்ப நான் எதை உருவாக்கினேன்னு தெரியலை) பிறகு அந்தத் துகள்கள் ஒன்று சேர்ந்தே கோள்களும் நட்சத்திரங்களும் உருவாகின என்றும் உங்கள் விஞ்சானிகள் முடிவு செய்தனர். இதை தமது கோட்பாடுகள் மூலம் கண்டறிய முடியும் என்று கூறியவர்கள் "பீட்டர் ஹிக்ஸ்". இன்னொருவர் இந்தியரான "சத்தியேந்திர போஸ். இந்த இருவரின் பெயரின் கடைசிப் பாதிகளை இணைத்தே "ஹிக்ஸ் போஸன்" என்று பெயர் வைத்தனர்."

நான்: "நன்றி கடவுளே. ஆமா, இந்த ஆராய்ச்சிய எப்படி நடத்தினார்கள்?"

கடவுள்: "அதாவது இந்தப் பிரபஞ்சம் ஒரு பெரிய வெடிப்பின் மூலம்தான் உருவானது என்று உங்கள் விஞ்சானிகள் நம்பினார்கள் அல்லவா? எனவே அதே போன்ற ஒரு வெடிப்பை மீண்டும் நடத்திப் பார்த்தால் எஞ்சிய துகள்களையும் கண்டறிய முடியும் என்று க(தை)ருதினார்கள். அதன் அடிப்படையிலேயே இன்று கண்டறிந்துவிட்டதாகவும் அறிவித்து உங்களை திகைப்படைய செய்திருக்கின்றனர்!"

நான்: "அதாவது, நாம வீட்டுல ரூபாயை என்னும்போது அதிலருந்து ஒரு ரூபாய் கீழே விழுந்து காணாமல் போய்விட்டால்... மீண்டும் ஒரு ரூபாயை போட்டுப்பார்த்துத் தேடுவோமே அதைப் போலவா?"

கடவுள்: "நாம் தேடமாட்டோம் மானிடா! நீங்கள் தேடுவீர்கள்! என்னிடம் பேசும்போது இடம் பொருள் பார்த்துப் பேச வேண்டும் என்பதை கவனத்தில் வைத்துக்கொள்!"

நான்: "மன்னித்து விடுங்கள் கடவுளே! ஆமா... அந்த பெரிய வெடிப்பை எப்படி உண்டாக்கினார்கள்?"

கடவுள்: "அதாவது, பூமிக்கு அடியில் 300 அடி ஆழத்தில் 27 கி.மீ. நீளத்திற்கு ஒரு வட்டச்சுரங்க ஆய்வு நிலையத்தை அமைத்து, ஒளியின் வேகத்தில் புரோட்டான்களையும், நியூட்ரான்களையும் செலுத்தி மோதச்செய்து இந்த ஆய்வை மேற்கொண்டனர். இதன் மூலம் தான்...."

நான்: (குறுக்கிட்டு) "கொஞ்சம் இருங்க கடவுளே! என்ன சொன்னீங்க? திருப்பி சொல்லுங்க..."

கடவுள்: "ஏண்டா.., சொல்லும் போது தூங்கிட்டியா?"

நான்: "இல்லை கடவுளே. நீங்க திரும்ப சொல்லுங்க...."

கடவுள்: "அதாவது பூமிக்கு அடியில புரோட்டான்களையும், நியூட்ரான்களையும் மோதச்செய்து கண்டறிந்தனர்."

நான்: "பூமிக்கு அடியில மோதச் செய்தார்கள் என்றால்.... நிலநடுக்கம், பூமி அதிர்ச்சி வருவதற்கு இந்த மாதரி சண்டைக் காட்சிதான் காரணமா?"

கடவுள்: "நீ மட்டும் ஏண்டா இப்படி எல்லாம் யோசிக்கறே?"

நான்: "இல்லை கடவுளே.. இந்த கடவுள் துகள் கண்டு பிடிச்சதா சொன்னதற்கு முன்புதான் சென்னையிலயும் மற்ற சில பகுதிகள்லயும் நிலநடுக்கம் ஏற்பட்டது?!?! அப்படின்னா, அதற்கு இந்த "பைட் சீன்" தானே காரணமா இருக்க முடியும்?"

கடவுள்: "இருக்கலாம் மானிடா!"

நான்: "ஓ! அதனாலதான், 2012 முடிவுல உலகம் பேரழிவை சந்திக்கும்னு சொல்லிக்கிட்டு திரியிராங்களா? அப்ப, அந்த நேரத்துல இன்னொரு சண்டைக்காட்சி இருக்கு!?.."

கடவுள்: .................

நான்: "அதற்காகத்தான் செவ்வாய் கிரகத்துல இடம் வாங்கிப்போட எல்லாரும் "கியூரியா சிட்டி"க்கு போயிருக்காங்களா? பூமிய ஒடச்சிப் போட்டுட்டு மேல போயி உக்காந்துக்கலாம்-னு ஐடியா...? இருக்கட்டும்! இருக்கட்டும்! ஆமா, அந்தத் துகளைக் கண்டு பிடிச்சி இவங்க என்ன பண்ணப் போறாங்க?"

கடவுள்: "அங்கேயும் மனிதர்கள் வாழ முடியுமா? என்று ஆராய்ச்சி பண்ணத்தான்!"

நான்: "அங்க போயி வாழ்ந்துட்டா மட்டும்...? ம்கும்! பூமியிலேயே மனிதனுக்கு ஒழுங்கா வாழத் தெரியல. இந்த லட்சணத்துல அட்ரஸ் தெரியாத இடத்தில எல்லாம் வாழனும்னு ஆசைப்படுறான்."

கடவுள்: "மிகவும் சரியான சிந்தனை மானிடா!"

நான்: "என்ன சரியான சிந்தனை? எல்லாத்துக்கும் நீங்கதானே கடவுளே காரணம்!? இல்ல தெரியாமத்தான் கேக்குறேன்... இந்த உலகத்துல எதையுமே மனுசனுக்குப் புரியிற மாதரி நீங்க படைக்கவில்லையே ஏன் கடவுளே?"

கடவுள்: "ஆமா, இந்த "அந்தப்பார்வை"யோட அட்மின் பாஸ்வேர்டு எனக்கு தெரியலையே... அதை நீ ஏன் யாருக்கும் காட்டாம வச்சிருக்கே மானிடா?"

நான்: "ஹலோ! இது என்னோட பயன்பாட்டுக்கு! இதை ஏன் மத்தவங்களுக்கு சொல்லணும்?"

கடவுள்: "இந்த பிரபஞ்சமும் என்னோட பயன்பாட்டுக்குத் தாண்டா! இதை நீங்க தெரிஞ்சிக்கணும்னு ஆசைப்பட்டால்... கதம்! கதம்!..... ஹா! ஹா! ஹா!"

நான்: "மாப்பு... கடவுள் வைக்கப் போறாருடா ஆப்பு!"

எழுத்ததிகாரன் க்காக
- அந்தப்பார்வை
on 29th August 2012, 3:48 am
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum