புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜோதிடம் என்பது அறிவியலா?- Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- Poll_c10 
62 Posts - 57%
heezulia
ஜோதிடம் என்பது அறிவியலா?- Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
ஜோதிடம் என்பது அறிவியலா?- Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஜோதிடம் என்பது அறிவியலா?- Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜோதிடம் என்பது அறிவியலா?- Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- Poll_c10 
104 Posts - 59%
heezulia
ஜோதிடம் என்பது அறிவியலா?- Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
ஜோதிடம் என்பது அறிவியலா?- Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஜோதிடம் என்பது அறிவியலா?- Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோதிடம் என்பது அறிவியலா?-


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 30, 2016 6:21 pm

ஜோதிடம் என்பது அறிவியலா?

ஜோதிடம் என்பது அறிவியலா?- Hts8kHLQTaw3pQZ5ul3O+thumbnail_shutters_3096189f

ஜோதிடம் என்பதை எந்த அளவிற்கு நம்பலாம்? அதன்படி எல்லாம் சரியாக நடக்கிறதா? இது அறிவியல் பூர்வமானதா என்பது குறித்து பலர் பலவிதமாக சொல்லி வருகிறார்கள். முதலில் ஜோதிடம் என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சம் தெளிந்து கொள்வோம்.

பண்டைய காலத்தில் மக்கள் இயற்கையைக் கடவுளாக வணங்கி வந்தனர். அதில் மிக முக்கியமாக வானில் வலம் வரும் சூரியன் மற்றும் சந்திரனை கடவுளாக கொண்டு வழிபாடு செய்துவந்தனர். தாம் வழிபடும் சூரியன் மற்றும் சந்திரன் இருவரின் ஒளியை திடீரென்று மங்க செய்யும் சூரிய மற்றும் சந்திர கிரகணங்களை கண்ட முன்னோர்கள். இவ்வாறு நிகழ என்ன காரணம் என ஆராய ஆரம்பித்தனர். இதுவே வானிவியல் ஆராய்ச்சிக்கு வித்திட்டது.

வானவியலே கிரகங்களின் பருமன் முதற்கொண்டு இயக்கத்தையும், பால்வெளியில் இருக்கும் நட்சத்திர கூட்டத்தையும் மற்றும் கிரகங்களின் கட்டமைப்பையும், நிறத்தையும் மேலும் பல முக்கிய பண்புகளை மிக துல்லியமாக அளவிட உதவியது. இப்படியாக வானவியலில் இருந்து அறியப்பட்ட கிரக இயக்கங்கள் பூமியில் இருக்கும் உயிரினங்களை எவ்வாறு பாதிக்கும் என்ற ஆராய்ச்சி தொடங்கப்பட்டது அதன் பெயரே ஜோதிஷம் எனும் ஜோதிடம்.

ஜோதிஷம் என்னும் சமஸ்கிருத வார்த்தையின் பொருள் கிரகங்கள் பிரதிபலிக்கும் ஒளி மூலம் மனித வாழ்வியலை ஆராய்ந்து அறிவது என்பதாகும். மனித வாழ்வியலின் வழிகாட்டி என்பதாலேயே ஜோதிடம் 'வேதத்தின் கண்' என்று அழைக்கப்படுகிறது.

சூரியன் மற்றும் சந்திரன் நகர்வுகளை கண்ணால் கண்டு ஆராய்ச்சி செய்து, கிரகங்களின் இயக்கம் நட்சத்திரங்கள் கொண்டு அளவிடப்பட்டு பஞ்சாங்கம் உருவாக்கப்பட்டது. பஞ்சாங்கம் என்பது வாரம், திதி, கரணம், நட்சத்திரம் மற்றும் யோகம் என்ற ஐந்து காரணிகள் ஆகும்.

புவி மைய கொள்கையை (Geo-Centric) அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது ஜோதிடக் கலையாகும். அதாவது பூமியை மையமாக வைத்து அதனைச் சுற்றி இருக்கும் கிரகங்களின் இயக்கம் எவ்வாறு உயிரினங்களின் இயக்கத்தையும் வாழ்வியலையும் பாதிக்கிறது என்பதை கூறுவதே இக்கலையின் நோக்கமாகும்.

கிரகமும் ராசியும்

கிரகம் என்ற சமஸ்கிருத வார்த்தையின் பொருள் பற்றுதல் அல்லது பற்றி இழுத்தல் என்பதாகும். பிரபஞ்சத்தில் பல நட்சத்திர கூட்டங்கள் இருந்தாலும், சூரியன் எனும் நட்சத்திரம் மட்டுமே நமது பூமியின் இயக்கத்தையும் மற்றம் ஒன்பது கிரகங்களையும் பெருமளவில் பாதிக்கிறது. அது போலவே நமது பூமியின் துணைக் கோளான சந்திரனின் இயக்கம் பூமியை மிக அதிக அளவில் பாதிப்பதால்தான் பூமியை சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவரும் சந்திரன் முக்கிய கிரகமாக எடுத்து கொள்ளப்பட்டு இருக்கிறது.

நமது பூமி 23°1/2 பாகை சாய்ந்து, தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனை சுற்றி கொண்டு இருக்கிறது என்பதை வானியல் கணிதம் மூலம் உணர்ந்தனர். இந்த பூமியின் சுழற்சி மூலம் தட்பவெப்பநிலை மாற்றங்கள் உண்டாவதையும் உணர்ந்தனர். இத்தகைய புவியின் இயக்கம் சூரியனின் ஈர்ப்பு விசையாலும் மேலும் அதை சுற்றி இருக்கும் கோள்களின் பாதிப்பாலும் ஏற்படுகிறது.

தட்ப வெப்ப நிலை மாற்றங்கள் என்பவை நீர் நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களில் மூலமே பூமியில் நிகழ்கிறது. இந்த பஞ்சபூதங்கள் மூலமே கிரகங்கள் மனிதர்களை இயங்குகின்றன. இரவு பகலாக கண்விழித்து பூமி சுற்றி வரும் பாதையில் இருக்கும் நட்சத்திர கூட்டங்களைக் கூறுகளாக்கி ராசி என்று பெயர் வைத்தனர்.மேலும் ராசிகளின் வடிவமைப்பைக் கொண்டு அதற்கு தகுந்த பெயரிட்டனர்.

ஜோதிடம் ஒரு அறிவியலா?

இவ்வாறாக வானவியலில் இருந்து ஜோதிடம் தோன்றியது. கிரக இயக்கங்களைப் பஞ்சாங்கம் கொண்டு கணித்து, மேலும் பல கணித சூத்திரங்கள் கொண்டு மனித வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை சொல்வதால் ஜோதிடம் ஒரு அறிவியலே என்று கூறுகிறார்கள்.

இது எந்த அளவுக்கு உண்மை? மேலும் ஆராய்வோம்.

நன்றி மணிகண்டன் பாரதிதாசன் தமிழ் ஹிந்து    

தொடரும்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Dec 01, 2016 6:30 am

சந்தேகமேன் அதுவும் ஓர் அறிவியலேதான். முக்காலத்தையும் தெரிவிக்கும் என்கிறார்களே?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 01, 2016 3:17 pm

அருமையான பதிவு ஐயா ,

தொடர் திரியாக தொகுத்து வழங்குங்கள் படித்து பயன்பெறுகிறோம்
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 11, 2016 7:12 pm

ஜோதிடம் என்பது அறிவியலா?- 2: ராகு கேது - அறிவியல் விளக்கம்

தாம் கடவுளாக வணங்கிய சூரியன் மற்றும் சந்திரனை மறைக்கும் விஷயத்தை பற்றி அறிய முயன்று, வானவியல் துறை உருவானது.

ஒரு பொருள் தன்னைத் தானே சுற்றிக்கொண்டிருக்கும் போது அதை சுற்றி காந்தப் புலம் உருவாகும் என்று அறிவியல் (MAGNETIC SCIENCE) கூறுகிறது. இதை அறிவியல் உபகரணங்கள் இல்லாத காலத்திலேயே கண்டறிந்து வைத்திருந்தனர். இந்த காந்தப் புலம் மூலம் மனிதனின் வாழ்வியல் இயக்கங்கள் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை அறிந்தனர். எனவே இந்த காந்தப் புலத்தால் பூமியில் வாழும் மனிதர்கள் வாழ்வியல் பாதிக்கப்படுகிறது என்றும் அறிந்தனர். எனவே அந்த காந்தப் புலத்தை பற்றி ஆராய ஆரம்பித்தனர்.

ராகு - கேது

நமது பூமி சூரியனை ஒரு நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. அதுபோல சந்திரன் பூமியை ஒரு வட்ட பாதையில் சுற்றிவருகிறது. இரு வட்ட பாதைகளும் பூமி சுற்றி வரும் வடபுலத்திலும் மற்றும் தென்புலத்திலும் ஒன்றை ஒன்று வெட்டிக்கொள்ளும். இந்த வடபுல வெட்டு புள்ளி 'ராகு' எனவும், அதுபோல தென்புல வெட்டு புள்ளி 'கேது' எனவும் ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

அந்த வெட்டு புள்ளிக்கு இணையாக பூமி, சூரியன் சந்திரன் சம்பந்தப்படும்போது சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஏற்படுகிறது என்று அறிந்தனர். ராகு கேது இருவரும் தங்களுக்குள் பார்த்து கொள்ளமாட்டார்கள் என்பதை விளக்கவே, புராணக் கதைகளில் சொர்ணபானு அசுரன் தலைவேறு உடல்வேறாக வெட்டப்பட்டு, பாம்பின் உடல் மற்றும் தலை பொருத்தப்பட்டு ராகு மற்றும் கேது என பெயரிடப்பட்டு இருக்கிறனர். இருவரின் பண்புகளும் ஒன்றுக்கொன்று நேரெதிரானவை என்பதே இதற்கு சாட்சி.

தென்புலத்தை விட வடபுலம் எனும் ராகுவே ஈர்ப்புத் தன்மை அதிகம் கொண்டது என்கிறது மின்காந்தவியல். ராகு என்பதன் சமஸ்கிருத அர்த்தம் வேகமாய் பரவுதல் அல்லது விழுங்குதல் என்பதே ஆகும். அதாவது அறிவியல் நோக்கில் பார்த்தால் ராகு என்பது வடபுலம் (அதிக காந்த தன்மை கொண்ட பகுதி) என்பதால் கிரகங்களை அதிகமாக ஈர்க்கும் தன்மை கொண்டது. எனவே தான் ராகுவின் பண்புகளாக ஜோதிடத்தில் வேகமாய் பரவி, ஈர்த்து, இழுத்து, இணைத்து, அணைத்து, விழுங்கி, துப்புதல் அல்லது துண்டித்தல் என்பன கூறப்படுகிறது. இதை விளக்கும் குறியீடாக பாம்பின் தலை நிர்ணயம் செய்யப்பட்டது.

தென்புல புள்ளியை கேது என்கிறது ஜோதிடம். கேது என்பதன் சம்ஸ்கிருத அர்த்தம் புகை என்பதாகும். புகை போல் சூழ்ந்து ஒருவரை இயங்கவிடாமல் செய்வது என்கிறது . எனவே கேது என்ற கிரகத்திற்கு பாம்பின் வால் என்று உருவகப்படுத்தி இருக்கின்றனர் நமது முன்னோர்கள்.

மேலை நாடுகளில் வடபுலத்தை ட்ராகன் தலை என்றும் தென்புலத்தை ட்ராகன் வால் என்றும் கூறுகின்றனர். நமது வேத ஜோதிடத்தில் ராகுவை கரும்பாம்பு என்றும் , கேதுவை செம்பாம்பு என்று கூறுகின்றனர். இதை விளக்கும் குறியீடாக பாம்பின் வால் நிர்ணயம் செய்யப்பட்டது.

நன்றி தமிழ் ஹிந்து

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 11, 2016 8:07 pm

ஜோதிடம் என்பது அறிவியலா?- 3838410834 அன்பு மலர் நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 12, 2016 10:21 am

சுவாரஸ்யமான கட்டுரை, தொடருங்கள் ஐயா ! சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 07, 2017 7:12 pm

வக்கிரம் என்ற சொல் சம்ஸ்கிருத மொழியில் இருந்து வந்தது. இதன் பொருள் 'பின்னோக்கி நகர்த்தல்' என்றே அர்த்தம். தன் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வரும் கிரகம் எப்படி பின்னோக்கி செல்லும் என்ற கேள்விக்கான விடையை இந்த பதிவு கூறும்.
சூரிய ஈர்ப்பு விசையால், பூமி சுற்றுகிறது. பூமியின் ஈர்ப்பு விசையால், சந்திரன் சுற்றுகிறது. பூமி சுழற்சி வேகம், சுக்கிரன் புதனை விட குறைவு, என்னெனில் சுக்கிரன், புதன் சூரியனுக்கு அருகிலும், அவற்றின் சுற்று வட்டபதையின் ஆரம் குறைவாகவும், சூரிய ஈர்ப்பு விசை அதிகமாகவும் இருப்பதே காரணம். எனவே சுக்கிரன் மற்றும் புதன் வக்கிரம். பூமியின் சுற்று வட்ட பாதையில், வளைவுகளில் பூமி முன்னோக்கி குரு மற்றும் சனியை கடந்து செல்லும் போது, மெதுவாக நகரும், பெரிய சுற்று வட்ட பாதை ஆரமும் கொண்ட, சூரிய ஈர்ப்பு விசை குறைவாகவும் இருக்கும், குரு மற்றும் சனி கிரகங்கள், பூமியில் இருந்து பார்க்கும் போது பின்னோக்கி செல்வது போல் தெரியும் மாய தோற்றமே. வக்கிரம் என்ற நிகழ்வு தோன்ற காரணம். கிரகங்களின் சுழற்சி வேக வேறுபாடுகளை அறிந்தால் இதனை நன்கு அறியலாம்.
மாயத் தோற்றம்
இரு வேறு பட்ட மோட்டார் சைக்கிள்கள், ஒரு நீள்வட்ட பாதையில் செல்லும் போது, அதிக வேகம் கொண்ட மோட்டார் சைக்கிள் குறைவான வேகம் கொண்ட மோட்டார் சைக்கிளை, நீள் வட்ட பாதை வளைவில் தாண்டி செல்லும் போது, குறைவான வேகம் கொண்ட மோட்டார் சைக்கிள் பின்னோக்கி செல்லும் மாய தோற்றம் ஏற்படும். இதுவே பிரபஞ்ச கிரக வக்கிரத்தின் வக்கிரத்தின் உதாரணம்.
பெரும்பாலும் வக்கிரம் பெற்ற கிரகங்கள் பூமிக்கு அருகில் இருக்கும். இதன் காரணம் ஜாதக சக்கரத்தில் சூரியனுக்கு எதிர் திசையில் இந்த கிரகங்கள் வருவதே காரணம். ஏற்கனவே கூறியபடி சூரியனுக்கு 7 இடத்தில் பூமி இருக்கும் என்ற கோட்பாட்டின்படி, வக்கிரம் பெற்ற கிரகங்கள் பூமிக்கு அருகில் இருக்கும்.
கிரக வக்கிரமும், வக்கிர நிவர்த்தியும்
ஒரு கிரகம் இருக்கும் நட்சத்திரத்தில் இருந்து 10 நட்சத்திரத்தில் சூரியன் செல்லும் போது, அந்த கிரகம் வக்கிரம் பெறும். அது போல சூரியன் 21 நட்சத்திரத்தில் பயணிக்கும் போது அந்த கிரகம் வக்கிர நிவர்த்தி அடையும்.
குறிப்பு: சூரியனில் இருந்து முன்னோக்கி செல்ல செல்ல இருக்கும் கிரகங்களின் வக்கிர நாட்கள் அதிகரிக்கும்.
புதன் 24 நாட்கள் வக்கிரமாகவும்,
சுக்கிரன் 42 நாட்கள் வக்கிரமாகவும்,
செவ்வாய் 80 நாட்கள் வக்கிரமாகவும்,
குரு 120 நாட்கள் வக்கிரமாகவும்,
சனி 140 நாட்கள் வக்கிரமாகவும் இருப்பார்கள்.
(மேலும் அறிவோம்)




நன்றி 
தமிழ் ஹிந்து 


ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 07, 2017 7:20 pm

வக்கிர கதி (பின்னோக்கி செல்லுகின்றது)  என்று சொல்லுகின்றபோது அறிவியலுக்கு முரண்பாடாக இருக்கிறதே என்று கருதியதுண்டு. (விஞ்ஞானி நியூட்டன் விதிமுறைக்கு எதிர்மறை)


எனக்கு நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம் தீர்ந்துள்ளது.



ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 07, 2017 8:23 pm

T.N.Balasubramanian wrote:வக்கிர கதி (பின்னோக்கி செல்லுகின்றது)  என்று சொல்லுகின்றபோது அறிவியலுக்கு முரண்பாடாக இருக்கிறதே என்று கருதியதுண்டு. (விஞ்ஞானி நியூட்டன் விதிமுறைக்கு எதிர்மறை)


எனக்கு நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம் தீர்ந்துள்ளது.



ரமணியன்
எனக்கும் சில வருடங்களுக்கு முன் இந்த சந்தேகம் இருந்தது ஐயா , ஒரு நல்ல ஜோதிடரிடம் நகைச்சுவையாக எப்படிங்க முன்னாடி போயிகிட்டு இருக்குற ஒரு கிரகம் திடீரென்று reverse gear போட்டு போகும் என்று , அப்ப அவர் நீங்க சொன்னதை விளக்கி சொன்னார் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 09, 2017 8:24 pm

 ஜோதிடம் என்பது அறிவியலா?    3: சந்திரன் சுழற்சி ரகசியம்



பூமி என்னும் நாம் வாழும் கோள், சூரியனை சுற்றி வருகிறது. சூரியன் தன்னை தானே சுற்றிக்கொண்டு இருக்கிறது. தன்னை தானே சுற்றி கொண்டிருக்கும் பொருளின் மீது காந்தம் உருவாகும் என்ற அறிவியல் விதிப்படி. சூரிய காந்த புலம் உருவாக்கி, ஈர்ப்பு சக்தியை வெளிவிட்டு, மற்ற கிரகங்களை தன் கட்டுபாட்டில் வைத்திருகிறது.
அது போல பூமியும் சுற்றி வருகிறது. சந்திரன் பூமியில் இருந்தே உருவானது என்பது அறிவியல் கூறும் முன் நம் ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் புராண கதைகளில் கூறி இருக்கிறது. அந்த புராணக் கதையை சுருக்கமாக பார்ப்போம்.
நமது புராண கதைகளில் அமிர்தம் கடைய பாற்கடலை கடைந்தனர் தேவர்களும் அசுரர்களும், இதில் பாற்கடல் என்பது பால்வெளி என்று வரையறுத்தனர். பூமியின் சுழற்சியால் சூரியனின் ஒளியானது 
 ஒரு பகுதியில் மட்டுமே படும். மீதி பகுதி இருளாக இருக்கும். இதனை காரணமாகவே பகல் மற்றும் இரவு நேரங்கள் கண்டங்களுக்கு கண்டம். மாறுபடுகிறது. பூமியின் ஒளி படும் இடம் (பகல் நேரம்) தேவர்கள் என்றும், சூரிய ஒளி படாதபக்கம் (இரவு நேரம்) அசுரர்கள் என்றும் நிர்ணயம் செய்தனர். மேரு என்ற புனித மலையை நிலை நிறுத்தி அமிர்தம் கடையபட்டது. பூமியின் சுழற்சியில் இரவு பகல் மாறி மாறி வரும் என்பதை மேரு மலையைக் கடைதல் என்று உருவகப்படுத்தினர். இந்த புராணக் கதையில் சந்திரன் பால்வெளியில் வெளிப்பட்டான் என்கிறது புராணம்.
தற்கால அறிவியல் பால்வெளியில் பூமியின் அதிவேக சுழற்சியால், பூமியின் ஒரு பகுதி நிலவாக மாறியது என்கிறது. இப்பொழுதும் பூமியின் ஈர்ப்பு விசையலேயே சந்திரன் பூமியை சுற்றிவருகிறது.
முன்னோர்களின் கணக்கின்படி நிலவு 27.32 நாட்கள் பூமியை வலம் வர எடுத்துகொள்கிறது. அதுவே 27 நட்சத்திர பெண்களுடன் சந்திரன் இருக்கிறான் என்கிறது ஜோதிடம். அந்த 27 மனைவிகளில் சந்திரனுக்கு மிகவும் பிடித்த மனைவி என்று ரோஹிணி என்று கூறுகிறது. வான மண்டலத்தில் ரோஹிணி என்ற நட்சத்திரம் ரிஷப ராசி மண்டலத்தில் இருக்கும் நட்சத்திர கூட்டமாகும். மற்ற நட்சத்திரங்களை சாதாரணமாக கடந்து செல்லும் சந்திரன். ரோஹிணி நட்சத்திர கூட்டத்தில் மட்டுமே உள்நுழைந்து செல்கிறது. அதுவும் கலையின் கொம்பு போன்ற ரோஹிணி நட்சத்திர கூட்டத்தின் இடையே கடந்து செல்கிறது. இது போல முன்னோர்கள் சந்திரன் சுழற்சியை வைத்தே பூமி சுழலும் விதத்தை கணக்கிட்டனர்.
மேலைநாடுகளில் சூரியனை மையமாக வைத்தே ஜோதிடம் பார்க்கப்படுகிறது. இதை தான் SUN SIGN என்று மேலை நாட்டினர் கூறுகின்றனர். ஆனால் சந்திரன் பூமியின் ஈர்ப்பு விசையில் சுற்றுகிறது என்பதை அறிந்து சந்திரனை (MOON SIGN) வைத்தே இங்கு ஜோதிட பலன்கள் கூறப்படுகிறது. அது போல குழந்தை ஜனனம் செய்யும் நேரத்தில் சந்திரன் எந்த நட்சத்திர கூட்டத்திற்குள் சென்று கொண்டு இருக்கிறாரோ அதுவே ஜென்ம நட்சத்திரம் என்று வரையறுத்தனர்.
(மேலும் அறிவோம்)

நன்றி தமிழ் ஹிந்து 
ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக