ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை)

Go down

குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Empty குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை)

Post by Dr.S.Soundarapandian Fri Sep 15, 2017 10:22 pm

குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை)

கார் உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் கடை! இளங்கோதான் கடையில் எல்லாம் !; அவருக்கு அவ் வட்டாரத்தில் நல்ல பெயர்! விற்ற பொருளில் குறை இருந்தால் அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டு உடனே புதுப் பொருளைத் தந்துவிடுவார் ! விலையும் நியாயமாக அவர் கடையில் இருக்கும் என்று பலர் அங்கேதான் சாமான் வாங்க வருவர்! எல்லோரும் இளங்கோவை ’முதலாளி’ என்றுதான் கூப்பிடுவார்கள் !

ஒருநாள், கடையடைக்கும் நேரம்!

கடைக்கு அன்றுவந்திருந்த இளங்கோவின் அண்ணன் மகன் சுப்பு, “எங்கே பணத்தைக் கொண்டுபோகிறீர்கள்?” என்று கேட்டான் ! அவன் அப்போதுதான் கல்லூரியில் சேர்ந்துள்ள நேரம் !

இளங்கோவுக்கு அதிர்ச்சி !

“நாம் தூக்கி வளர்த்த பையன் ! என்றைக்குமில்லாமல் இன்றைக்கு விற்பனைப் பணத்தைப் பற்றிக் கேட்கிறானே?” – குழம்பினார்!

“ஏன்? வீட்டுக்குத்தான்! இன்று என் பீரோவில் வைத்திருந்து நாளை உங்கப்பா கணக்கில் எப்போதும்போல் போடுவேன் !” என்றார்.

“அதெல்லாம் வேண்டாம் ! என்னிடம் கொடுங்கள்; நான் வங்கியில் கட்டிக்கொள்கிறேன் !” என்று பணத்தைக் கேட்டான் சுப்பு!

தொடர்ந்து , சித்தப்பாவின் பதிலுக்குக் காத்திராமல் , “இது எங்க கடைதானே? உங்களுக்கு மாதம் இவ்வளவு என்று சம்பளம் மட்டும் என்னிடம் வாங்கிக்கொள்ளுங்கள்!” என்றான்!

இளங்கோ , செய்வதறியாது திகைத்தார்!

“சரி! அண்ணனிடம் பேசிக்கொள்ளலாம்” என்று சட்டென்று , “ விற்பனைப் பணம் தானே? இந்தா பிடி! நாளை அண்ணனிடம் பேசிக்கொள்வோம்” என்று கொடுத்துவிட்டார்!
அடுத்தநாள் , ஞாயிற்றுக்கிழமை! அண்ணனை ஒர்க்ஷாப்பில் இளங்கோவிம் சுப்புவும் பார்த்தனர்.

”என்ன அண்ணே? சுப்பு ஏதோ நேற்றுத் திடீரென்று ‘இது எங்க கடை; உங்களுக்குச் சம்பளம்தான்’னு சொன்னான்! கடையை நானும் ஒர்க்ஷாப்பை நீங்களும் கவனித்துக் கொள்கிறீர்கள்! கடைப் பணத்தை நான் உங்கள் கணக்கில்தான் செலுத்துகிறேன் ! வீட்டுச் செலவுக்குக்கூட உங்களிடம் கேட்டுத்தானே வாங்கிக்கொள்கிறேன் ! நாம் கூட்டுக் குடும்பமாகத்தானே இதுநாள் வரை இருந்துவருகிறோம்? நம் குடும்பத்தில் இப்படி ஒரு பேச்சு வந்ததே இல்லையே? நீங்க சுப்புவுக்குச் சொல்லுங்க! – தொண்டைக் கம்மலுக்கிடையேதான் இதைக் கூறினார் இளங்கோ!

அண்ணன் , அவரது மகன் சுப்புவை அதட்டுவார் என்று எதிர்பார்த்த இளங்கோவுக்கு ஏமாற்றம் !

அண்ணன் , இளங்கோ சொன்னதைக் காதில் போட்டுக்கொள்ளாமல் , “ஏம்பா ! அந்த
மூணுக்கு நாலு ஸ்பானர் எங்கேப்பா?” என்று வண்டிக்குள் தலையை விட்டார் !
இளங்கோ அடுத்த நாள் கடைக்குப் போகவில்லை!

ஒரு வாரம் கழிந்தது!

இளங்கோ இருந்த கடைக்கு எதிர்க் கடையும் மோட்டார் உதிரிப் பாகங்கள் விற்கும்கடைதான் !அந்தக் கடைக்காரர் இளங்கோவின் நிலையை அறிந்து உடனே தன்கடையில் சேர்த்துக்கொண்டார் ! அங்கு நின்றுகொண்டு சுறுசுறுப்பாக , எதுவும் நடக்காததுபோல – துயரத்தை மனதில் சுமந்தாலும்- விற்பனையைக் கவனித்து வரலானார்!
பழைய வாடிக்கையாளர்கள் இளங்கோ புதிதாகச் சேர்ந்த கடைக்கே வந்து பொருள்களை வாங்க ஆரம்பித்தனர் !

அன்று மாலை , “என்ன முதலாளி? எப்படி இருக்கீங்க?” என்றார்பழைய வாடிக்கையாளர் ஒருவர்!

‘முதலாளி’ என்ற சொல்லைக் கேட்டதும் , இளங்கோ முகத்தில் ஒரு புன்னகை !

அந்தப் புன்னகைதான் அவரது மாளாத் துயரத்தை – அதிர்ச்சியை- அவரிடமிருந்து விரட்டிய ஆயுதம் என்பது ‘முதலாளி’ என்று கூப்பிட்ட அந்த வாடிக்கையாளருக்குத் தெரியாது !

முதலாளி நிலையிலிருந்தவரை ஒரு நொடியில் வேலைக்காரராக்கியது குடும்பம் !
முதலாளி நிலையிலிருந்தவரை எப்போதும் , குணத்திற்காக, முதலாளியாகவே பார்க்கிறது உலகம்!
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum