புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன சொல்வது எதை சொல்வது  Poll_c10என்ன சொல்வது எதை சொல்வது  Poll_m10என்ன சொல்வது எதை சொல்வது  Poll_c10 
90 Posts - 77%
heezulia
என்ன சொல்வது எதை சொல்வது  Poll_c10என்ன சொல்வது எதை சொல்வது  Poll_m10என்ன சொல்வது எதை சொல்வது  Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
என்ன சொல்வது எதை சொல்வது  Poll_c10என்ன சொல்வது எதை சொல்வது  Poll_m10என்ன சொல்வது எதை சொல்வது  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
என்ன சொல்வது எதை சொல்வது  Poll_c10என்ன சொல்வது எதை சொல்வது  Poll_m10என்ன சொல்வது எதை சொல்வது  Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
என்ன சொல்வது எதை சொல்வது  Poll_c10என்ன சொல்வது எதை சொல்வது  Poll_m10என்ன சொல்வது எதை சொல்வது  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
என்ன சொல்வது எதை சொல்வது  Poll_c10என்ன சொல்வது எதை சொல்வது  Poll_m10என்ன சொல்வது எதை சொல்வது  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன சொல்வது எதை சொல்வது  Poll_c10என்ன சொல்வது எதை சொல்வது  Poll_m10என்ன சொல்வது எதை சொல்வது  Poll_c10 
255 Posts - 77%
heezulia
என்ன சொல்வது எதை சொல்வது  Poll_c10என்ன சொல்வது எதை சொல்வது  Poll_m10என்ன சொல்வது எதை சொல்வது  Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
என்ன சொல்வது எதை சொல்வது  Poll_c10என்ன சொல்வது எதை சொல்வது  Poll_m10என்ன சொல்வது எதை சொல்வது  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
என்ன சொல்வது எதை சொல்வது  Poll_c10என்ன சொல்வது எதை சொல்வது  Poll_m10என்ன சொல்வது எதை சொல்வது  Poll_c10 
8 Posts - 2%
prajai
என்ன சொல்வது எதை சொல்வது  Poll_c10என்ன சொல்வது எதை சொல்வது  Poll_m10என்ன சொல்வது எதை சொல்வது  Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
என்ன சொல்வது எதை சொல்வது  Poll_c10என்ன சொல்வது எதை சொல்வது  Poll_m10என்ன சொல்வது எதை சொல்வது  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என்ன சொல்வது எதை சொல்வது  Poll_c10என்ன சொல்வது எதை சொல்வது  Poll_m10என்ன சொல்வது எதை சொல்வது  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
என்ன சொல்வது எதை சொல்வது  Poll_c10என்ன சொல்வது எதை சொல்வது  Poll_m10என்ன சொல்வது எதை சொல்வது  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என்ன சொல்வது எதை சொல்வது  Poll_c10என்ன சொல்வது எதை சொல்வது  Poll_m10என்ன சொல்வது எதை சொல்வது  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
என்ன சொல்வது எதை சொல்வது  Poll_c10என்ன சொல்வது எதை சொல்வது  Poll_m10என்ன சொல்வது எதை சொல்வது  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன சொல்வது எதை சொல்வது


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 03, 2017 5:05 am


என்ன சொல்வது எதை சொல்வது
!


என்ன சொல்வது எதை சொல்வது  QFJKtuERQGqdzB9skonB+21230913_491638444539868_7066373355837730147_n


வீட்டு வேலைக்காரிக்கு (கத்தாமா) பாமிலி ஸ்டேட்டஸ்!
சவுதி அரேபியாவில் ஒரு அரபிக்கு திருமணம் முடிந்து 20 வருடங்கள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பல கம்பனிகளுக்கு
சொந்தக்காரர். அனைத்து சொத்துக்கும் வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் இருந்த அந்த குடும்பத்திற்குபொக்கிசமாக
வந்த குழந்தை.
இந்த வீட்டில் ஒரு ஸ்ரீலங்கா வை சேர்ந்த ஒரு பெண்மணி வேலைக்காரியாக பணிபுரிந்து வருகிறார். இந்த அம்மணிக்கு 3 குழந்தைகள்.
சிறு வியாபாரம் செய்து குழந்தைகளையும் கவனித்து வருகிறார் அவரின் கணவர்.
இந்த வேலைக்காரி அம்மணி தான் இந்த குழந்தைக்கு எல்லாேம. தாய்பாலை தவிர அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வது இவள் தான்.
தூங்கக் கூட இந்த குழந்தை பெற்றோரிடம் செல்லாது. தூங்கிய பின்பு, தூக்கிக்கொண்டு அவர்களின் ரூமுக்கு கொண்டு செல்லுவார்களாம்
பெற்றோர்கள்.
குழந்தைக்கு 2 வருடம் ஆகி இருக்கும். வேலைக்காரி பெண்மணி விடுமுறைக்கு ஊர் செல்ல பலமுறை அனுமதி கேட்டும், முடியாத சூழ்நிலையில்
தள்ளிக்கொண்டே போனது விடுமுறை.
மிகுந்த போராட்டத்திற்குப் பின்பு 3 மாதம் விடுமுறையில் ஸ்ரீலங்கா சென்றார் அம்மணி.
தன்னை பிரிந்த அடுத்த நிமிடத்தில் அழ ஆரம்பித்து விட்டது குழந்தை.
சரி, சிறிது நேரத்தில் சரியாகிவிடும் என்று இருந்து விட்டார்கள்.
இரவு உணவு உண்ணவில்லை. ஒரே அழுகை. அழுது.. அழுது.. துவண்டு தூங்கி விட்டது.
அப்படியே தூங்கட்டும். காலையில் விழித்ததும் பசிக்கும், சாப்பிடும். என்று விட்டு விட்டார்கள்.
காலையில் விழித்ததும் ஈனக்குரலில் அழ ஆரம்பித்து விட்டது. சாப்பாட்டு ஊஹூம். அருகில் இருக்கும் சாமான்களை பலம் இல்லாத கையால்
தூக்கி எறிவதும், துவண்டு விழுவதுமாக இருந்தது.
சில மணித்துளியில் மயங்கி விழுந்து விட்டது.
அடித்துப்பிடித்து மருத்துவமனையில்யில் அட்மிட் பண்ணி விட்டார்கள்.
அனைவர்களுக்கும் ஒரே கவலை.
மூன்று நாட்களாக ட்ரிப் மூலம் தான் அனைத்தும் நடந்து வருகிறது.
டாக்டர்களுக்கு ஒன்றும் ஓடவில்லை. எந்த மருத்துவமும் கைகொடுக்க வில்லை. மூன்று நாட்களாக கண் திறந்து பார்க்கவில்லை.
மருத்துவர்கள் கையை விரித்து விட்டார்கள்.
ஒரே மருந்து..!!!! அந்த வேலைக்காரி இங்கு வந்தே ஆகனும். இல்லை என்றால் இப்படியே கொமோவில் தான் குழந்தை இருக்கும்.
அதன் பின்பு ஒன்றும் நல்லது சொல்ல இயலாது என்று கூறி விட்டார்.
அந்த அரபி அந்த அம்மணியை தொடர்பு கொள்ள எவ்வளவோ முயன்றும் முடியாமல் ஒட்டு மொத்த குடும்பமும் உருக்குலைந்து இருந்தது.
பல வருடங்களுக்கு முன்பு, இந்த ஸ்ரீலங்கா பெண்மணி, என் கம்பனிக்கு அடுத்து இருக்கும் ஒரு வேலைக்கு ஆட்கள் எடுக்கும் நிறுவனம்
மூலம் வந்தவர். முதல் நாள் அவளை அழைத்து செல்ல வந்த சௌதி, அவள் பேசும் தமிழ் புரியாமல், என்னிடம் அனுப்பி வைக்கப்பட்டார்.
அதை நினைவில் வைத்துக்கொண்டு,என் ஊராக இருக்கும் என்று என்னிடம் வந்தார். விபரங்கள் கூறினார். குழந்தை போல அழுதார்.
ஒரு மல்டி மில்லினர், பல நிறுவனங்களுக்கு அதிபதி, குறைந்தது 15 ஆயிரம் நபர்களாவது இவரிடம் பணி புரிகிறார்கள், கூடவே மன்னர்
குடும்பத்தில் பெண் எடுத்தவர்..!!
விபரம் சொன்னார்.
நான் அவரிடம், தமிழ் மொழி பல நாடுகளில் பேசுகிறார்கள். நான் இந்தியா, அவள் ஸ்ரீலங்கா. என்று விவரித்துக்கொண்டு இருக்கும் போது,
மூலையில் ஒரு மின்னல் வெட்டியது.
அந்த அம்மணி கூறிய அவளுடைய ஊரும், எனக்கு பழக்கமான ஒரு ஸ்ரீலங்கா டிரைவரின் ஊரும் ஒன்று. அடுத்த அடுத்த தெரு. அவரை
பிடித்தேன், அவரின் மனைவிக்கு போன் போட்டு, அடுத்த தெருவில் இருந்த வேலைக்கார அம்மணியை தொடர்பு எல்லைக்குள் கொண்டு
வந்து, சௌதியிடம் பேச வைத்து விட்டேன்.
ஒரு 40 நிமிடத்தில் அனைத்தும் முடிந்து விட்டது.
ஆனால் அந்த வேலைக்கார அம்மணியோ, நான் வந்து 4 நாட்கள் தான் ஆகிறது, கணவனுக்கு இளைப்பு நோய் வந்து மருத்துவமனையில்
அட்மிட் பண்ணி இருக்கின்றோம்.நான் எப்படி வர இயலும் என்று தன்னுடைய இயலாமையை கூற,
சௌதி என்னிடம் பேச சொல்ல, நான் இந்த குழந்தையின் நிலைமையை சொல்ல, அவள் அழுக, அவளின் சூழ்நிலையை சொல்ல.
அனைத்தையும் சௌதியிடம் கூறினேன்.
அவரோ தேம்பி தேம்பி அழுதுக்கொண்டு, என் சொத்து அனைத்தும் போனாலும் பரவாஇல்லை, எனக்கு என் குழந்தை வேண்டும்
என்று கூறினார்.
சரி, அவளுடைய குடும்பத்திற்கு விசா ஏற்பாடு பண்ணுங்க என்று கூறி, அவளிடம் அனுமதியும் வாங்கி விட்டேன்.
அடுத்து கூடுதல் பிரச்சனை.அவளுடைய கணவருக்கும் குழந்தைகளுக்கும் பாஸ்போர்ட் இல்லை. சிறிலங்காவிற்குவிசா கிடைப்பது
அரிது. அதுவும் பாமிலி விசா-குதிரைக்கொம்பு. அப்படி விசா கிடைத்தாலும், ஸ்டாம்பிங் அடித்து வர குறைந்தது 4 வாரங்கள் ஆகும்.
அதுவரை குழந்தை தாங்குமா என்ற பல சங்கடங்களை அவரிடம் விவரித்தேன்.
அவரோ, நோ ப்ராப்ளம். என் மனைவி ஒரு அமீரா(இளவரசி). என்று கூறி, அதிசயத்திலும் அதிசயமாக 2 நாட்களில் அனைத்தும் முடிந்து,
அவர்கள் அனைவர்களும் தம்மாம் ஏர்போர்ட் வந்து இறங்கி விட்டார்கள்.
குழந்தையின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. கசக்கி போட்ட சிறு துண்டு போல கிடந்தது. ஒரு சிறு அசைவு கூட இல்லை.
நேராக அவர்களை அழைத்துக்கொண்டுசாத் மருத்துவமனைக்கு சென்றோம்.
மருத்துவமனையே பரபரப்பாக ஆகிவிட்டது. குடும்பத்தார்கள் கூட்டம் ஒருபக்கம். நண்பர்கள், நிறுவனத்தில் முக்கிய ஆட்கள் என்று
பெரும் கூட்டம்.
குழந்தை இருந்த அந்த சூட்-க்குள் சென்றோம். குழந்தை இருந்த நிலையை பார்த்ததும் அந்த வேலைக்கார அம்மணி கதறி விட்டார்.
அவளை தேற்றி ஆறுதல் படுத்தி, குழந்தைக்கு அருகில் அழைத்துச் சென்றோம்.
மெதுவாக அம்மணி, ஆதில், ஆதில், ராஜா (தமிழில் தான்) என்று கூற கூற காலின் பெருவிரல் அசைய ஆரம்பித்தது. இங்கிலாந்து
மருத்துவர் சைகை காட்ட காட்ட அந்த அம்மணி ஆதில் ஆதில்.. ராஜா.. ராஜா.. என் ராஜா.. என்று கூறக் கூற , ஒரே நிசப்தம்.
எனக்கோ எதோ ஒரு தியேட்டரில் படம்
பார்த்துக்கொண்டு இருப்பது போல ஒரு உணர்வு.
சிறிது சிறிதாக குழந்தையிடம் அசைவு தெரிய.. அனைவர்களின் முகத்திலும் பிரகாசம் தெரிய ஆரம்பித்தது.
ஒரு 20 நிமிடத்தில் கண்ணை திறந்தான், அருகில் இருக்கும் கத்தாமாவை பார்த்தான், எப்படி தான் அவன் உடலில் இவ்வளவு சக்தி
இருந்ததோ தெரியவில்லை, சடார்..... என்று எந்திரிக்க, உடலில் இணைக்கப்பட்ட வயர்கள், டியூப்கள் எல்லாம் தெறிக்க, அவளை
கட்டிப்பிடித்து, முதுகில் குத்து குத்து என்று குத்தி, கறுத்த அவளுடை முகத்திலும், கழுத்திலும், முத்தங்கள் பொழிய அனைவர்களுடைய
கண்களிலும் கண்ணீர் உருண்டு ஓடியது.
எத்தனை பாசமலர் படம் பார்த்தாலும் இந்த காட்சி கிடைக்காது.
அங்கு வந்து இருந்த அனைத்து பெண்மணிகளும் அந்த வேலைக்காரியை முத்தத்தால் நனைத்தார்கள்.
சிறிது நேரத்தில் அந்த வளாகம் குதூகலமாகவும், சந்தோசமாகவும், ஒரு பார்ட்டி ஹால் மாதிரி உருமாறி விட்டது.
அந்த வேலைக்கார பெண்மணி சாப்பிட்டுக்கொண்டு இருந்த எச்சில் பட்ட கேக்கை, அந்த குழந்தை பிடுங்கி தின்ன, கூடி இருந்த
அனைவர்களும் ரசித்து பார்க்க.. ஒரே பரவசம் தான்.
அப்புறம், அவருடைய கணவருக்கு அதே மருத்துவமனையில், அதே சூட்டில் மருத்துவம், அவர்களின் நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில்
வேலை, குழந்தைகளுக்கு நம்ப முடியாத பள்ளியில் உயர்ந்த கல்வி.
கொடுக்க நினைப்பவன் கொடுக்க நினைத்தால்.....!!!! வாழ்க்கை வசந்தமே.

நன்றி ரவிசங்கர் --முகநூல்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 03, 2017 9:15 am

என்ன சொல்வது எதை சொல்வது  103459460 என்ன சொல்வது எதை சொல்வது  3838410834 என்ன சொல்வது எதை சொல்வது  1571444738 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக