ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி

2 posters

Go down

முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Empty முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி

Post by ayyasamy ram Wed Sep 06, 2017 7:53 am

சென்னை,

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினரின்
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை)
கூட்டி இருக்கிறார்கள்.

இந்த கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு
வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.

அதை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.
தலைமை அலுவலகத்தில் நேற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
நடைபெற்றது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற
இந்த கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கியது. கூட்டத்திற்கு,
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள்
கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி,
பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி. சண்முகம், கே.பி.அன்பழகன்,
துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கொறடா
ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 109 பேர்
கலந்துகொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதி எம்.எல்.ஏ. கோவிந்தராஜ்
மட்டும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. உடல்நலக்குறைவு
காரணமாக கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என்று அவர்
தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துவிட்டார்.

கூட்டத்தில், அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவரும்,
முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று,
அவர் மேற்கொள்ளும் அனைத்து முடிவுகளையும் முழுமனதுடனும்,
உள்ள உறுதியுடனும் ஏற்றுக்கொள்வோம் என்று தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை அமைச்சர் திண்டுக்கல்
சீனிவாசன் முன்மொழிந்தார்.

அதனைத்தொடர்ந்து, பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி
பழனிசாமி, “நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
ஜெயலலிதாவின் ஆட்சி 5 ஆண்டுகளும் தொடர வேண்டும்.
உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் ஏதாவது குறை இருந்தால்,
அந்தந்த மாவட்ட அமைச்சர்களிடம் தெரிவியுங்கள்.

அவர்கள் நிறைவேற்றிக் கொடுப்பார்கள். அதில் ஏதாவது
பிரச்சினை ஏற்பட்டால் மூத்த அமைச்சர்களிடம் தெரிவியுங்கள்”
என்று கூறியதாக தெரிகிறது.

அதனைத்தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் எடப்பாடி
பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு அளித்துவரும் ஆதரவை
உறுதி செய்யும் வகையில் கையெழுத்து வாங்கப்பட்டதாக
கூறப்படுகிறது.

இந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் காலை 11.45 மணியளவில்
நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட செயலாளர்கள்
கூட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க.வில் நிர்வாக வசதிக்காக
50 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், 46 மாவட்ட
செயலாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பங்கேற்காத 4 மாவட்ட செயலாளர்கள் டி.டி.வி.தினகரன்
அணியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற
அனைவரிடமும், அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொதுக்குழு
உறுப்பினர்களின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது. பட்டியலில் உள்ளதுபடி, அனைத்து பொதுக்
குழு உறுப்பினர்களையும் 12-ந்தேதி நடைபெறும் பொதுக்குழு
கூட்டத்திற்கு அழைத்து வந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தப்
பட்டதாக தெரிகிறது.

அதன்பின்னர், கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம்
நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளுடன்
பொதுக்குழு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது குறித்தும்,
சிறப்பு அழைப்பாளர்களாக யார் யாரை அழைப்பது என்பது
குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதன்பின்னர், மதியம் ஒரு மணிக்கு
கூட்டம் நிறைவடைந்தது.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை, அந்த கட்சிக்கு சட்ட சபையில்
எம்.எல்.ஏ.க்களின் பலம் 135 ஆக இருந்தது.
இதில், 21 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி. தினகரன் அணியில் உள்ளனர்.
3 கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு ஆதரவு? என்பதை
இன்னும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

இதைவைத்து பார்க்கும்போது, எடப்பாடி பழனிசாமிக்கு
111 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவே தற்போது உள்ளது.
மெஜாரிட்டியை நிரூபிக்கும் சூழ்நிலை வந்தால், அதில்
சபாநாயகருக்கு ஓட்டளிக்க வாய்ப்பு வழங்கப்படாது.
இதனால் 110 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவே எடப்பாடி பழனிசாமிக்கு
உள்ளது.

அவர் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்றால், மேலும்
7 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாக இருக்கிறது.

கடந்த மாதம் (ஆகஸ்டு) 28-ந்தேதி நடைபெற்ற அ.தி. மு.க.
எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க் கள் கூட்டத்தின்போது, 71 எம்.எல்.ஏ.க்களே
கலந்துகொண்டனர். 39 எம்.எல்.ஏ.க் கள் கலந்துகொள்ளாத நிலையில்,
மாவட்ட வாரியாக எம்.எல்.ஏ.க்களை அழைத்து, கடந்த மாதம்
31-ந்தேதியும், இம்மாதம் 1-ந்தேதியும் எடப்பாடி பழனிசாமி சமரசம்
செய்தார்.

அந்த சமரசத்தை ஏற்றுக்கொண்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்
அனைவரும் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு தனது ஆதரவை
தெரிவித்துள்ளனர். என்றாலும், மெஜாரிட்டியை நிரூபிக்க
போதுமான எம்.எல்.ஏ.க்கள் பலம் இல்லாததால், தொடர்ந்து இழுபறி
நிலையே நீடிக்கிறது.
-
--------------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Empty Re: முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி

Post by M.Jagadeesan Wed Sep 06, 2017 6:45 pm

எட்டப்பாடிக்கு வெறும் 10 பேர் ஆதரவு கொடுத்தால்கூட , Floor Test க்கு கவர்னர் உத்தரவு இடமாட்டார் .ஏனென்றால் BJP க்கு உள்ளபயம் எல்லாம் DMK வந்துவிட்டால் என்னசெய்வது என்பதுதான் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» 117 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பு
» ரூ.200 கோடிக்கு கோழிப்பந்தயம் எம்.எல்.ஏ.க்கள்-நடிகர்கள் பங்கேற்பு
» ஜெயலலிதாவை கண்டித்து நாளை தி.மு.க. இளைஞரணி ஆர்ப்பாட்டம்: எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
» அமைச்சர் மைத்திரிபாலாவின் கூட்டத்தில் கைத்துப்பாக்கி, குறி வைத்தது யார்?
» அரசுக்கு 45,119 கோடி கடன் எம்.எல்.ஏ.க்கள் சம்பள உயர்வை எதிர்த்து மனு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum