புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேட்கை Poll_c10வேட்கை Poll_m10வேட்கை Poll_c10 
92 Posts - 61%
heezulia
வேட்கை Poll_c10வேட்கை Poll_m10வேட்கை Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
வேட்கை Poll_c10வேட்கை Poll_m10வேட்கை Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வேட்கை Poll_c10வேட்கை Poll_m10வேட்கை Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
வேட்கை Poll_c10வேட்கை Poll_m10வேட்கை Poll_c10 
1 Post - 1%
eraeravi
வேட்கை Poll_c10வேட்கை Poll_m10வேட்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேட்கை Poll_c10வேட்கை Poll_m10வேட்கை Poll_c10 
284 Posts - 45%
heezulia
வேட்கை Poll_c10வேட்கை Poll_m10வேட்கை Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
வேட்கை Poll_c10வேட்கை Poll_m10வேட்கை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வேட்கை Poll_c10வேட்கை Poll_m10வேட்கை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வேட்கை Poll_c10வேட்கை Poll_m10வேட்கை Poll_c10 
19 Posts - 3%
prajai
வேட்கை Poll_c10வேட்கை Poll_m10வேட்கை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வேட்கை Poll_c10வேட்கை Poll_m10வேட்கை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வேட்கை Poll_c10வேட்கை Poll_m10வேட்கை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வேட்கை Poll_c10வேட்கை Poll_m10வேட்கை Poll_c10 
7 Posts - 1%
mruthun
வேட்கை Poll_c10வேட்கை Poll_m10வேட்கை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேட்கை


   
   
anjjaani
anjjaani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 26/08/2017

Postanjjaani Mon Aug 28, 2017 3:58 am

அந்த பெரிய கார்ப்பரேட் ஹாஸ்பிடலின் வாசலில் ட்ராஃபிக் மொத்தமும் வலது புறம் ஒதுங்கியது.  சைரன் அடித்தபடி ஆம்புலன்ஸ் திரும்பியது. பின்னாலேயே அதன் வேகத்தை தொடர்ந்தபடி ராஜேஷ் பைக்கில் நுழைவதை பார்த்தேன்.  அவன் கன்னம் துடைத்ததை நான் கவனிக்க தவறவில்லை.  அப்படின்னா அவன் அப்பா இல்லை அம்மாக்கு ஏதாச்சும்….?

“ராஜேஷ்!” என்று என் குரல் சன்னமாய் வெடித்தது.  பைக்கில் பில்லியனில் இருந்த என் புது மனைவி, “என்னங்க ராஜேஷ்னு ஏதோ சொன்னீங்க?” என்று கேட்க ஆம்புலன்ஸை துரத்திய ராஜேஷ் பற்றி அவளிடம் கொஞ்சம் குறிப்பு சொன்னேன்.  “அவன் எனக்கு தம்பி மாதிரி.”

மீண்டும் ட்ராஃபிக்கில் விரைந்ததால் மனைவியிடம் ஏதும் பேச முடியவில்லை.  அவளை அலுவலகத்தில் இறக்கிவிட்டதும் மீண்டும் ராஜேஷ் நினைப்பு வந்தது.  அது நாள் முழுவதும் தொடர்ந்தது.

நான் பள்ளி போகும்போது ராஜேஷ் வீட்டின் அருகில் வாடகைக்கு குடியிருந்தோம்.  அவர்களுடையது சொந்தமாய் பெரிய மாடி வீடு.  சாதாரண எங்கள் குடும்பத்திற்கு நிறைய உதவிகள் செய்தார்கள்.  

எல்லோரும் சொல்லுவார்கள் ராஜேஷின் அப்பாவிற்கு என்னிடம் ரொம்ப பாசம்னு.  தன்னை அங்கிள் என்றே கூப்பிடும்படி சொல்லியும் அவரின் வெளுத்த முடி, அவருக்கு சமூகத்தில் உள்ள மரியாதை காரணமாய் அவரை சார் என்றே கடைசி வரை அழைத்தேன்.  

எங்கள் இரு வீட்டு பெரியவங்களுக்குள் என்னமோ பிரச்சனை.  காரணம் அப்போது எனக்கு தெரியவில்லை.  பிரச்சனையால் சாரின் குடும்பம் சொந்த வீட்டையே காலி செய்து வேறு பக்கம் குடிபோய்விட்டது.  அப்போதிருந்து எங்களுக்குள் பல வருஷங்களாய் தொடர்பில்லை.  

இரவு மனைவியிடம் கொஞ்சம் விவரத்துடன் இதை சொல்லி முடித்தபோது, “இப்பவும் சார் எனக்கு காட் ஃபாதர் மாதிரி!” என்றேன்.  “அப்புறம் ஏன் நம்ம கல்யாணத்துக்கு அவரை கூப்பிடலை?” என்று அவள் கேட்க, “மறந்துட்டேன்.  வந்திருந்தார்னா, உனக்கு அப்பா மாதிரி நகை போட்டிருப்பார். நம்மை தனிக்குடித்தனம் பண்ணவிடாமல் தன் வீட்டில் தங்க வைத்திருப்பார்,” என்றபோது என் மனைவி அதிசயத்துவிட்டாள்.

மறு நாள் அதிகாலை ஹாஸ்பிட்டல் ரிஷப்ஷனில் விசாரித்தேன்.  சாருக்குத்தான் பெரிய அளவில் ஹெல்த் பிரச்சனையாம்.  ஆபரேஷன் இன்று தொடங்கும்.  இந்த சமயத்தில் அவரை சந்திப்பது இங்கிதமில்லை என்று திரும்பினேன்.    

அடுத்து சில நாட்கள் வெளியூர் செல்ல வேண்டியிருந்தது.  பயணத்தின் போதும் சரி, வெளியூரில் வேலையாய் இருந்தபோதும் சரி, சாரின் நினைப்புதான் சுற்றி சுற்றி வந்தது.  அவர் வீடு திரும்பியதும் மனைவியுடன் சென்று அவரிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கணும்.  எங்களை பார்த்தால் சந்தோஷப்படுவார்.  

ஊர் திரும்பியதும் ஹாஸ்பிட்டல் போனால், அங்கே அதிர்ச்சியான செய்தி.  கடவுளே, இந்த நல்ல மனுஷனை ஏன் உன்னுடன் அழைத்துக்கொண்டாய்?  இப்போது காரியமும் முடிந்திருக்குமே!  

ராஜேஷுக்கும் சரி, அவன் அம்மா-அக்காவிற்கும் சரி எங்கள் குடும்பத்தின் மீது கசப்பு இருக்கும். அந்த கசப்பை என் மீது அவர்கள் கொட்டாமல் இருக்கணுமே.  அதனால் மனைவியுடன் செல்வதை விட துணைக்கு ஒருத்தர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று விவேகமாய் நினைத்தேன்.

அப்பாவின் நண்பரின் மகள் நினைவிற்கு வந்தாள்.  இந்த அக்கா மேல்படிப்பிற்கு சார் நிறைய உதவியிருக்கிறார்.  அதனால் இந்த அக்காவை கூட கூட்டிக்கொண்டு செல்வது உசிதம் என்று முடிவு செய்து அவளை சந்தித்தேன்.  

“நானும்தாண்டா போகலை.  உங்க குடும்பத்துக்கும் சாருக்கும் பிரச்சனை வந்தபோது அதற்கு என் அப்பாவும் காரணமாம். எனக்கு படிக்க அட்மிஷன் ஆகி ரொம்ப நாள் போனதும்தான் சாரே என்னிடம் கொஞ்சமாய் சொன்னார்.  பாரேன், சாருக்கு என் அப்பா துரோகம் பண்ணியிருந்தாலும் சார் எனக்கு உதவி செய்திருக்கார்னா அவர் உண்மையிலேயே பெரிய மனுஷன்தான்.  சார் ஒரு தப்பும் பண்ணலைன்றது புரியுது.  ஏன்னா அவர் மென்மையானவர்.  யாருக்கும் தீங்கு நினைக்காதவர்.  இப்போ என் அப்பாவால எனக்கும் சங்கடம் ஆயிடுச்சி.  இந்த நிலையில இப்போ சார் வீட்டுக்குப் போனா மதிக்க மாட்டாங்க.”

“என் அப்பா-அம்மாக்கு சாரிடம் என்னக்கா சண்டை? யாரும் இதுவரை என் கிட்ட சொல்லலை.”

“உன் அப்பா அந்த காலத்தில தொழில் இல்லாம இருந்தப்போ, சார்தான் புது தொழிலுக்கு ஏற்பாடு பண்ணினார்.  பண உதவிகூட செய்தாராம்.  ஆனால் உன் அப்பா தொழிலை சரிவர பார்த்துக்கலை.  சமயத்தில் சாரையே மறைமுகமாய் பழி சொல்லுவாராம்.  ஒரு நாள் சார் உன் அப்பாக்கு ரொம்ப அட்வைஸ் பண்ணினாராம்.  அப்போ உன் அப்பா கோபத்தில எகிறிட்டாராம்.  அதுவுமில்லாம பல பேர் முன்னால சாரை உன் அப்பா-அம்மா அவமரியாதை பண்ணிணாங்களாம்.”

மை காட்!  இருக்கும், நிச்சயம் இருக்கும்.  எதுக்கெடுத்தாலும் அடுத்தவங்க பேர்ல பழி சொல்லிட்டு ஊர் சுற்றிக்கிட்டிருப்பார் அப்பா.  சின்ன வயசிலிருந்தே என் கிட்ட அதிகம் பேசுவதில்லை.  அவரை பத்தி அம்மாக்கும் கவலை இல்லை.  அவர் குடிச்சிட்டு ஊர்ல வம்பு பண்ணினாகூட கண்டுக்க மாட்டாங்க.  முடிந்தா புகார் சொல்றவனையே குத்தம் சொல்லுவாங்க அம்மா.  சமயத்தில படிச்சவங்க மாதிரி நடந்துக்க மாட்டாங்க.  

“அப்புறம் ஒரு நாள் உன் அம்மா சாரை நடு ரோட்டில் வைத்து அவமரியாதை பண்ணியிருக்காங்க.  அப்பதான் சார் ரொம்ப நொந்துட்டாராம்.  நான் சொல்றேன்னு கோச்சிக்காதே.  இப்படி சாரை இன்ஸல்ட் பண்ணினதை உன் அம்மா ஊர் பூராம் சொல்லி பீத்திக்கிட்டாங்களாம், தெரியுமா?”

நம்பத்தான் வேணும்.  சாரை அப்பா மரியாதை கெடுத்தப்போ அம்மா சும்மா இருந்தாங்கன்னா நிச்சயம் அம்மாவே சாரை இன்ஸல்ட் பண்ணியிருப்பாங்க.  என் அம்மா எதுக்கெல்லாம், எப்படியெல்லாம், என்னவெல்லாம் கணக்கு பார்ப்பாங்க என்பது நான் இளைஞன் ஆனதும்தானே புரிகிறது.

“எதுக்கு உங்க அம்மா அப்படி இன்ஸல்ட் பண்ணாங்க தெரியுமாடா?  சார் உங்க அப்பா தொழிலுக்கு நிறைய பண உதவி செய்தாரில்லையா, அதை திருப்பிக் கொடுக்காம இருக்கறதுக்குத்தான்.”

உண்மை பார்த்தால் என் அம்மா ரொம்ப சுயநலக்காரி.  நன்றி மறக்கணும்னா அடுத்தவரை அவமானப்படுத்துவதை ஆயுதமாய் உபயோகிப்பவள்.  என்னை பெத்தவங்களால்தான் சார் வேண்டாத அவமானத்தில் கொஞ்ச கொஞ்சமாய் செத்திருக்கிறார்னு புரிந்தது.  

கனத்த மனசுடன் அம்மா வீட்டுக்கு போனேன்.  அங்கே நான் நியாயம் கேட்க வேண்டியிருக்கிறது.  இருவரும் என்ன மௌன கொலையாளிகளா என அவர்களிடம் கத்த வேண்டும் போலிருந்தது எனக்குள் இருந்த அடக்கமாட்டாத வேட்கை.  

“அம்மா, சார் செத்துப்போனதை ஏன் என்கிட்டே சொல்லலை? நான் ஸ்கூல் படிக்கறப்போ தாத்தா சாவுக்கு அப்பாக்கும் சித்தப்பாக்கும் சார் கோடித்துணி போட்டாரே, இப்போ சார் பையனுக்கு நாம் போடணும்னு மரியாதை, மனிதாபிமானம் கூடவா இல்லை உங்க ரெண்டு பேருக்கும்?”

அப்பா படியிறங்கினார்.  என் கேள்வியில் இருக்கும் விஷயத்தால் இவருக்கென்ன துக்கமா?   தூக்கம் இழந்துவிடக்கூடாது என்பதற்காக க்வார்ட்டர் அடிக்க கிளம்பிட்டார்னுதான் சொல்லனும்.  வாழ்நாள் பூராம் சாரை நிம்மதி இழக்க வைத்தவர் ஒரு இரவு தூக்க இழப்பை நினைத்து கவலைபடுகிறார்.    

அம்மாவோ கதவை சாத்திக்கொண்டாள்.  கல் மனசுக்காரி அவள் நிச்சயம் அழமாட்டாள். கதவு சாத்திக்கொண்டதே என்னை வெளியே போடான்னு துரத்துவதற்குத்தான்.  

பிழைக்க வக்கற்ற அப்பா, பணத்தை திருப்பிக் கொடுக்காமல் நன்றி மறந்த அம்மா, தவறு புரிந்தும் வீண் கர்வத்தால் ஆடும் இவர்களை கடவுளும் மன்னிக்க மட்டார்.

வீடு திரும்பியதும் மனைவியிடம் வேறு வழியின்றி நடந்ததை விளக்க வேண்டியதாகிற்று.  “நாம் சார் வீட்டுக்கு போனால் அவங்க மனக்கசப்பை காட்டினா?  போக வேணாம்னு தோணுது.”

“பரவாயில்லைங்க, போகலாம்.  அவங்க திட்டட்டும்.  தப்பே இல்லை. திட்டு வாங்கிக்கலாம்.  மன்னிப்பு கேட்கலாம்.  நாம் சின்னவங்க, நமக்கு ஒன்னும் குறைந்துவிடப்போவதில்லை. ராஜேஷுக்கு கோடித்துணி கொடுக்கலாம்.  அவன் வாங்கிக்கலைன்னாலும் பரவாயில்ல, விடுங்க.  கொஞ்ச நேரம் யோசிப்பாங்க, அப்புறம் நம்ம ரெண்டு பேர்லயும் தப்பில்லைன்னு புரிஞ்சிக்குவாங்க.  நாமும் அந்த ஆண்டிக்கு குழந்தைங்க மாதிரிதானே?”

மனைவியின் கைகளை பற்றினேன்.  இந்த மாதிரி என் அப்பாவிற்கு அம்மா எடுத்து சொல்லியிருந்தால் என்றைக்கோ விலகிய குடும்பங்கள் இன்று ஒன்றாய் இருந்திருக்கலாமே?  வறட்டு கௌரவம் வேண்டாம்னு என் இளம் மனைவிக்குக்கூட தெரிகிறது.  உண்மையிலேயே இவளிடம்தான் உருப்படியான டிப்ளமஸி இருக்கிறது.  


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 28, 2017 9:45 am

வேட்கை 3838410834 :நல்வரவு:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக