புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம் Poll_c10பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம் Poll_m10பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம் Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம் Poll_c10பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம் Poll_m10பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம் Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம் Poll_c10பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம் Poll_m10பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம் Poll_c10பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம் Poll_m10பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம் Poll_c10பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம் Poll_m10பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம் Poll_c10பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம் Poll_m10பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம் Poll_c10பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம் Poll_m10பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 15, 2017 10:36 am

பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம் WN1PcPodScmDTDGQabaO+cinema1
-

-
தன் ஊர் கூத்தப்பட்டிக்கு நல்லது செய்வதையே ஒரே
லட்சியமாக வைத்து வெட்டியாக சுற்றிவருபவர் கணேஷ்
(உதயநிதி). தன் ஊர் நல்லதுக்காக பக்கத்து ஊரின்
பணக்காரன், வில்லங்கமான வில்லன் ஊத்துக்காட்டான்
(பார்த்திபன்) மகள் லீவாவதியை (நிவேதா பெத்துராஜ்)
காதலித்து கல்யாணம் செய்ய நினைக்கிறார்.
-
இறுதியில் கல்யாணம் நடந்ததா? ஊருக்கு நல்லது
நடந்ததா? இதுதான் 'பொதுவாக எம்மனசு தங்கம்'
படத்தின் ஒன் லைன்.
-
கிராமத்துக் கதைக் களம், ஜிகு ஜிகு கலர் சட்டை, முறுக்கு
மீசை என கொஞ்சம் வருத்தப்படாத ரஜினிமுருகன் டைப்
கதையில் களம் இறங்கியிருக்கிறார் உதயநிதி.
நிச்சயமாக அது ஓரளவுக்கு அவருக்கு கைகொடுத்தும்
இருக்கிறது. 'என்னா மாப்ள', 'எங்க ஊருக்கு நான் திரும்ப
வருவேன்டா' போன்ற வசனங்கள் பேசி சிரமப்படாமல்
நடித்துவிட்டுப் போகிறார்.

நடனத்தில் முன்பைவிட முன்னேறியிருப்பவர், நடிப்பில்
இன்னும் கொஞ்சம் முன்னேறியிருக்கலாம். சில
மாதங்களுக்கு முன் பார்த்த 'சரவணன் இருக்க பயமேன்'
படத்தில் இருந்த அதே எக்ஸ்பிரஷன்கள்தான் இதிலும். 

ஊத்துக்காட்டானாக வரும் பார்த்திபன் கதாபாத்திரம்
கொஞ்சம் சுவாரஸ்யம். காது குத்தும் போது.... குத்திக்
காட்டிப் பேசுவேன், 'மடி....ச்சு வை' என அவர் வரும்
சீன்களில் எல்லாம் கூடவே வரும் அவரின் ட்ரேட் மார்க்
நக்கல்கள் சில இடங்களில் நச், பல இடங்களில் ப்ச்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 15, 2017 10:37 am

பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம் B1E1UKpFRYyrz8qqseiS+cinema2
--
-
சூரியின் காமெடி பன்ச்கள் வழக்கம் போல் போராக
இருந்தாலும், அந்த போட்டோ ஷூட் காட்சிக்கும், பாட்ஷா
பட ரீ-க்ரியேஷன் காட்சிக்கும் தியேட்டரே சிரிப்பில்
அதிர்கிறது. இதற்கு முன்பு பல கிராமத்து  படங்களில்

ஹீரோயின்களுக்கு என்ன வேலையோ அதேதான்
நிவேதா பெத்துராஜுக்கும். பாடலில் ஓகே, நடிப்பிலும்
அடியே அழகே மோடிலேயே இருந்தா எப்படி?

கூத்தப்பட்டி ஆட்களால் ஒரு நாள் அசிங்கப்படும்
பார்த்திபன், அந்த ஊருக்கும் கிடைக்க வேண்டிய நல்ல
விஷயங்கள் எல்லாவற்றையும் அண்டர்கவர் ஆபரேஷன்
நடத்தி கெடுத்துவிடுகிறார். பல குடும்பங்களை ஊரை
விட்டே ஓடச் செய்கிறார்.

இப்படி பல கெடுதல்களைச் செய்து அங்கிருக்கும்
அம்மனை தன் ஊருக்கு கொண்டுவந்துவிடலாம் என்பதே
ஊத்துக்காட்டானின் அந்த லாங் டேர்ம் ப்ளான். 

கூத்தப்பட்டியைச் சேர்ந்த கணேஷ், அந்த ஊர்
நல்லாசிரியரின் மகன். தனது அப்பா எப்படி அந்த
ஊருக்காக அரும்பாடு பட்டாரோ, அதே அளவுக்கு இவரும்
படுவார்.

‘நான் ஊரையே காலி செய்யணும்னு திட்டம் போடுறேன்.
இவன் என்னான்னா ஊருக்கு நல்லது பண்றேன்னு
சுத்திக்கிட்டு இருக்கான்’னு உதயநிதி மேல் வெறுப்பாகிறார்
பார்த்திபன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 15, 2017 10:39 am

பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம் A6KpZMERuiHMVnyyDxSg+cinema3
-

தனது ஊருக்கு கெடுதல் செய்வது ஊத்துக்காட்டான் தான் 
என உதயநிதிக்கு தெரியவந்த பிறகு இருவருக்குமான நேரடி
மோதல் ஆரம்பமாகிறது. இப்படி கிராமமும் கிராமம்
சார்ந்தும் யோசித்த கதையை முடிந்த வரை
சுவாரஸ்யமாக நகர்த்த முயற்சி செய்திருக்கிறார் 
பொன்ராமின் உதவி இயக்குநரான தளபதி பிரபு.

ஆனால், தனது குருவின் ஸ்டைலை நைட் ஸ்டடி மேற்
கொண்டு அப்படியே மக்கப் பண்ணியிருக்கிறார். படம்
முழுக்க 'வருத்தப்படாத வாலிவர் சங்கம்' படத்தின் சாயல்
அப்பட்டமாக தெரிகிறது.

ஹீரோவின் கலர் கலர் சொக்காவில் ஆரம்பித்து, ஊதா கலர்
ரிப்பன் பாடல் சாயல் வரை. போதாகுறைக்கு சூரி, இமான்,
ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெத்தில் தொடங்கி
டீ கடைக்காரர், பஞ்சாயத்து திண்ணையில்
உட்கார்ந்திருக்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் வரை
'வருத்தப்படாத வாலிவர் சங்கம்', 'ரஜினிமுருகன்' ஆகிய
படங்களைப் பல இடங்களில் நினைவுபடுத்துகிறது. 

அங்க சத்யராஜ் இங்க பார்த்திபன். அவ்வளவே. கிராமத்துக்
கதை என்றாலே கலர் கலர் சட்டைதான், ஊர்திருவிழாதான்
என்ற வழக்கமான அதே ஸ்டீரியோ டைப் திரைக்கதை
படத்தின் பெரிய மைனஸ்.
-
கொஞ்சமும் வஞ்சனை இல்லாமல் முழுப்படத்தையும்
வண்ணமயமாக்குகிறது பாலசுப்ரமணியெமின் ஒளிப்பதிவு.
'அம்மணியே', 'சிங்கக் குட்டி' என இமானின் சிக்னேசர் டைப்
பாடல்கள், கேட்க இதம்.

ஆனா, எங்கயோ கேட்டாப்ள இருக்கு பீலைத் தவிர்க்க
முடியவில்லை. வண்டி பெட்ரோல்ல ஓடுது... ஏன், டயர்ல
ஓடலையா போன்ற ஒன் லைனர்களைத் தவிர்த்து,
சுவாரஸ்யமான கதை,
திரைக்கதை இருந்திருந்தால், மனசு போல படமும் தங்கமாக
இருந்திருக்கும்.
-
--------------------------------
நன்றி- விகடன்
 
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக