புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_c10பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_m10பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_c10 
56 Posts - 74%
heezulia
பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_c10பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_m10பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_c10பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_m10பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_c10பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_m10பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_c10பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_m10பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_c10 
221 Posts - 75%
heezulia
பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_c10பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_m10பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_c10பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_m10பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_c10பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_m10பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_c10 
8 Posts - 3%
prajai
பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_c10பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_m10பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_c10பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_m10பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_c10பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_m10பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_c10 
3 Posts - 1%
Barushree
பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_c10பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_m10பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_c10பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_m10பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_c10பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_m10பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை !


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 11, 2017 9:09 pm

பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை !

1940- 1970 ஆண்டுகளில் பிறந்தோர் பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை வாழ்ந்தவர்கள்!
அந்நாட்களில் பல வீடுகளில் பழைய சைக்கிள்தான் இருக்கும் ! அதனோடு மல்லாடுவதுதான் அந்த ‘வாழ்க்கை’!

சைக்கிள் ஓடிக்கொண்டே இருக்கும் ; திடீரென்று கால் விசுக்விசுக் கென்று வேகமாகக் கீழும் மேலும் போய்வரும் ! என்னடாவென்று பார்த்தால் செயின் கழன்றுகொள்ளும் ! செயின் அறுந்துபோகாமல் இருந்தால் அவன் அதிர்ஷ்டம் ! சைக்கிளை ஓரமாக நிறுத்தி , செயினின் ஒரு பகுதியைப் பெரிய பல்லுச் சக்கரத்தில் மாட்டிக்கொண்டு மெதுவாகச் சுற்றவேண்டும்; செயின் இரு சக்கரங்களிலும் பொருந்தும் ; பிறகு வண்டி ஓடும் !

வண்டி ஓடிக்கொண்டே இருக்கும் ; திடீரென்று ஒரு பெடல் கீழே விழுந்துவிடும் ! கொஞ்ச தூரம் போனதும் வண்டியை நிறுத்திவிட்டு ஆள் மட்டும் நடந்துவந்து விழுந்து கிடக்கும் பெடலை எடுத்துவந்து உரிய இடத்தில் செருகிப் பலம்கொண்டமட்டும் திருகி நிலைநிறுத்துவார் ! பிறகு வண்டி ஓடும் ! ஓரிடத்தில் வண்டியை நிறுத்த ஸ்டாண்டைப் போடுவார்; ஸ்டாண்ட் நேரே நின்றால் அல்லவா வண்டி நிற்கும்? ஸ்டாண்ட் பெடல் இருக்கும் பக்கமாக நகர்ந்தபடி போகவே , வண்டி ஒருபக்கமாகச் சாயும் ! அதைச் செயின் மாட்டியதுபோல உடனே சரிசெய்ய முடியாது என்பதால் வண்டியை நிறுத்த ஒரு மரத்தைத் தேடுவார் ! அந்தக் காலத்தில் கடைகளிளின் முன்னே இருக்கும் மரங்கள் பயன்பட்டது சைக்கிளைச் சாய்த்து நிறுத்துவதற்காகத்தான் !

ஏதோ ஒருகாரணத்தினால் வண்டி கீழே சாய்ந்தால் முதலில் கோணிக்கொள்வது ஹாண்டில்பார்தான் ! அதை எப்படிச் சரிப்படுத்துவர்? கவட்டுக்குள் முன் சக்கரத்தை நுழைத்து இறுக்கமாக இரு தொடைகளாலும் பிடித்துக்கொண்டு இரு கைகளாலும் ஹாண்டில்பாரைப் பிடித்து ஒரு திருகுத் திருகுவார்; ஹாண்டில்பார் நேராகிவிடும் !

வண்டியில் போய்க்கொண்டே இருப்பார்; திடீரென்று பின் வீல் தகர ரிம் மட்டும் உருளும் சத்தம் வரும் ; அவருக்குத் தெரிந்துவிடும்; சைக்கிள் பஞ்சர் என்று ! பக்கத்தில் சைக்கிள் கடையைத்தேடித் தள்ளிக்கொண்டு போவார்; அங்கேபோய் வீலைப் பிரித்து டியூப்பை வெளியே எடுத்தால் , அதில் பஞ்சர் புதிதாக ஒட்டுவதற்கு இடமே இருக்காது ; எல்லா இடத்திலும் ஏற்கனவே பஞ்சர் ஒட்டியிருக்கும் ! ஒரு சிறு பையன் விசுக் விசுக்கென்று காத்தடிக்க கடைக்காரர் பஞ்சர் ஆகியிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துப் பஞ்சர் ஒட்டிக்கொடுப்பார்! பஞ்சர் ஒட்டுவதற்கு ஒரு அணா அப்போது! கடைக்காரர் காற்றை அடித்துச் சைக்கிளைக் கொடுக்கும்போது வண்டிக்காரர் வலது கையால் கார்று நிறைய உள்ளதா? நிற்குதா ? என்று சோதித்துவிட்டுத்தான் வண்டியைக் கிளப்புவார் !

ஒரு காலத்தில் முனிசிபாலிடிகளில் சைக்கிளுக்கு வரி(லைசென்ஸ்) உண்டு ! இரண்டு ரூபாய்தான் வரி, ஒரு வருடத்திற்கு! அதைப் பலபேர் கட்டமாட்டார்கள்! வரிகட்டியவர்களுக்கு ஒரு தகர வில்லை கொடுப்பார்கள்! அந்தத் தகர வில்லையை ஹாண்டில்பாருக்குக் கீழே வைத்து நட்டைப் போட்டுத் திருகிவைத்திருக்கவேண்டும் ! திடீரென்று ஒருநாள் , ஒரு ஆள் அபாயச் சங்கு ஊதுவான்! “யோவ் ! அந்த முக்கில் லைசென்ஸ் பிடிக்கிறார்கள்!” என்று எச்சரிப்பான் ! உடனே அனைவரும் உஷாராகிவிடுவார்கள்! வழக்கமான தெருக்களைத் தவிர்த்து, வேறு வேறு சந்துகளில் விழுந்து போவார்கள் !
அதைப்போலவே இரவு நேரங்களில் சைக்கிளின் முன்பாக விளக்கவைத்திருக்கவேண்டும் ! மண்ணெண்ணெய் விளக்கைத்தான் பலரும் வைத்திருப்பர் ! மேடுபள்ளங்களில் வண்டி செல்வதால் மண்ணெண்ணெய் சிதறி அந்த விளக்கில் தீப்பற்றிக்கொள்ளும் ! தீ திபு திபு என்று எரியும் போதுதான் ஓட்டுபவர் கவனிப்பார்; இல்லையென்றால் யாராவது நடந்து செல்பவர், “யோவ் தீய்யா!” என்று அலறும்போது ஓட்டுபவருக்குத் தெரியவரும் ! பிறகு ஊதி அணைக்கமுடிந்தால் அணைப்பார்; இல்லையென்றால், மண்ணைப்போட்டு தீயை அணைப்பார் !

சைக்கிள் மணி என இருக்கத்தான் செய்யும் ; ஆனால் அதன் உண்மையான ஓசையை யாரும் கேட்டதில்லை! மணியின் ஸ்பிரிங் உடைந்திருக்கும்; அதனால் என்னதான் பலம் கொண்டு அழுத்தினாலும் ‘கிடுக்குக் கிடுக்கு’ என்றுதான் சத்தம் வரும் !அந்த ஓசைக்கு அன்றைய ‘பாதசாரிக’ளும் பழகிப்போனார்கள்!

இப்படியாக அந்த நாள் ‘சைக்கிள் வாழ்க்கை’ தனிச் சுவைகொண்டதுதாங்க!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 11, 2017 10:16 pm

நல்ல அனுபவம் -மலரும் நினைவுகள்.--ரசித்தேன்.

2 ரூபாய் முனிசிபல்  வரி.
இது காமராஜர் காலத்திலோ  அல்லது MGR காலத்திலேயோ நீக்கப்பட்டது.
இருவர் சவாரி செய்வதும் தடை செய்யப்பட்டு , MGR இருவர் போகலாம் என்று
அனுமதி கொடுத்தார்.

அந்த காலத்தில் நான் அனுபவப்பட்ட தமாஷ்.
ஒரு நாள் வேகமாக சைக்கிளில் போகும் போது ,
பஸ்ஸில்  foot board இல் போய் கொண்டு இருந்த ரெண்டு பள்ளி சிறுவர்கள் .
"யோவ் ,பெடலில் காத்து இல்லை ,பாத்து பாத்து"  என கத்த ,
நான் பயந்து போய் ,கீழே இறங்கி , காற்றை செக் பண்ண , பிறகுதான்
அவர்கள் கூறிய வார்த்தை மண்டையில் உரைத்தது.
அதற்குள் பஸ்ஸும் போய் விட்டது. பசங்க தூரத்தில் கை ஆட்டுவது தெரிந்தது .
மனதில் சிறிது வெட்கம் /பிறகு புன்னகை. ...

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 11, 2017 11:01 pm

ஐயா !

அருமை ! " பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை " என்ற தலைப்பில் தங்களுடைய சைக்கிள் அனுபவத்தை மிகுந்த நகைச்சுவையோடு கொடுத்த விதம் மிகவும் அருமை !





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 12, 2017 5:50 pm

நன்றி ரமணியன், ஜெகதீசன் அவர்களே!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக