ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கண்ணில் வெண்ணை --மறு கண்ணில் சுண்ணாம்பு

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒரு கண்ணில் வெண்ணை --மறு கண்ணில் சுண்ணாம்பு  Empty ஒரு கண்ணில் வெண்ணை --மறு கண்ணில் சுண்ணாம்பு

Post by T.N.Balasubramanian Tue Jul 11, 2017 7:45 am

ஒரு கண்ணில் வெண்ணை --மறு கண்ணில் சுண்ணாம்பு

ஒரு கண்ணில் வெண்ணை --மறு கண்ணில் சுண்ணாம்பு  Y5dnQk5pTZi6K7iBf6SL+WR_20170711041259

ஸ்பெயின் நாட்டில் நடக்கும் சான் ஃபெர்மின் விழாவை முன்னிட்டு காளைகளுடன்
சண்டையிடும் நிகழ்ச்சி நடந்தது.

நன்றி தினமலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரு கண்ணில் வெண்ணை --மறு கண்ணில் சுண்ணாம்பு  Empty Re: ஒரு கண்ணில் வெண்ணை --மறு கண்ணில் சுண்ணாம்பு

Post by T.N.Balasubramanian Tue Jul 11, 2017 7:48 am

PETA என்று அமைப்பு உண்டே !
அவர்களும் அங்கே சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்களா?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரு கண்ணில் வெண்ணை --மறு கண்ணில் சுண்ணாம்பு  Empty Re: ஒரு கண்ணில் வெண்ணை --மறு கண்ணில் சுண்ணாம்பு

Post by M.Jagadeesan Tue Jul 11, 2017 7:53 am

படத்தை பாருங்கள் !

ஒருவன் , ஒரு காளையுடன் மோதுகிறான் . இங்கே அப்படியா ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஒரு கண்ணில் வெண்ணை --மறு கண்ணில் சுண்ணாம்பு  Empty Re: ஒரு கண்ணில் வெண்ணை --மறு கண்ணில் சுண்ணாம்பு

Post by T.N.Balasubramanian Tue Jul 11, 2017 8:10 am

இங்கேயும் காளை வாடிவாசல் வழியாக வெளி வரும்போது பலர்
அதை பிடிக்க போட்டிப்போட்டாலும் கடைசியில்  ஒருவரே அதில் வெற்றி பெறுகிறார்.
மேலும்,
"ஸ்பெயின், போர்ச்சுகல், மெக்சிகோ நாடுகளில் காளைப் போர் முக்கியமான தேசியப் பொழுதுபோக்கு விளையாட்டாக இன்றும் நடைபெறுகிறது. காளைகளை அரங்கத்திற்குள் விரட்டி, ஆத்திரமூட்டிச் சண்டையிட்டுக் கொல்வதே இக்காளைப் போரின் நோக்கம்.
இதற்காகத்தான் நான் கேள்வி கேட்டேன் !

உங்கள் கருத்து என்னவோ? ஜல்லிக்கட்டு கூடாது ஆனால் சான்பெர்மின் பரவாயில்லை என்கிறீர்களா?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரு கண்ணில் வெண்ணை --மறு கண்ணில் சுண்ணாம்பு  Empty Re: ஒரு கண்ணில் வெண்ணை --மறு கண்ணில் சுண்ணாம்பு

Post by M.Jagadeesan Tue Jul 11, 2017 12:02 pm

சங்ககாலத்தில் நம் இலக்கியங்களில் குறிப்பிட்டதுபோல் ஏறுதழுவுதல் ( ஜல்லிக்கட்டு ) இப்போது நடைபெறவில்லை என்கிறேன் . MGR நடித்த தாய்க்குப்பின் தாரம் என்ற படத்தைப் பார்த்திருக்கிறீர்களா ? . அந்தப்படத்தில் வருவதுதான் உண்மையான ஜல்லிக்கட்டு . அல்லது வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜெமினிகணேசன் காளையை அடக்குவதும் உண்மையான ஜல்லிக்கட்டு ஆகும் .

ஜல்லிக்கட்டில் நோக்கம் என்ன ?

காளையை அடக்குகின்ற வீரனுக்கு பெண்ணை மணமுடித்துக் கொடுப்பது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஒரு கண்ணில் வெண்ணை --மறு கண்ணில் சுண்ணாம்பு  Empty Re: ஒரு கண்ணில் வெண்ணை --மறு கண்ணில் சுண்ணாம்பு

Post by ராஜா Tue Jul 11, 2017 12:57 pm

M.Jagadeesan wrote:படத்தை பாருங்கள் !

ஒருவன் , ஒரு காளையுடன் மோதுகிறான் . இங்கே அப்படியா ?
எதை எதையுடன் இணைத்து பேசுகிறீர்கள் ?! உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா ?!


ஸ்பெயின் காளைசண்டைகள், சிறிய குத்தீட்டிகளை காளையின் திமிரில் குத்திகொண்டே இருப்பார்கள் இதனால் கொஞ்சம் கொஞ்சமாக இரத்தமெல்லாம் வெளியேறி தன் பலத்தையெல்லாம் இழந்து வாயில் நுரை தள்ளி ஒரு கட்டத்தில் மரணம் அடையும் , அதை டிராக்டரில் கட்டி தரதர என்று இழுத்து சென்று விருந்துக்கு பயன்படுத்துவார்கள்.




தமிழ்நாட்டு ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று இதுவரை உங்களுக்கு தெரியாது என்றால் ,ஈகரையில் நிறைய பதிவுகள் உள்ளது தேடி படிக்கவும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு கண்ணில் வெண்ணை --மறு கண்ணில் சுண்ணாம்பு  Empty Re: ஒரு கண்ணில் வெண்ணை --மறு கண்ணில் சுண்ணாம்பு

Post by M.Jagadeesan Tue Jul 11, 2017 5:21 pm

ஆயர்கள் புலி முதலிய கொடிய விலங்குகளிடமிருந்து தம் பசு முதலிய இனங்களைக் காக்க வேண்டிய நிலையில் இருந்தனர். மேலும் நாட்டின் எல்லைப் பகுதி காடு. பகைவரின் தாக்குதலுக்கு முதலில் உட்படுவதும் அப்பகுதியே, ஆதலால் அவர்கள் வீரம் உடையவராக விளங்க
வேண்டியிருந்தது. எனவே ஆயர், தம் மகளை மணக்க வரும் ஆடவர் வீரம் மிக்கவராய் விளங்க வேண்டும் என எண்ணினர். அதன் காரணமாக ஏறு தழுவும் நிகழ்ச்சியை ஏற்படுத்தினர். ஏறு தழுவுதல் என்பது சீறிப் பாயும் காளைகளைத் தழுவி அடக்குதல் ஆகும். ஆயர் ஏறுகளின் கொம்பைக் கூர்மையாகச் சீவிப் பரந்த வெளியான ஏறு தழுவும் இடத்தில் விடுவர். இளைஞர் போட்டி போட்டு ஏறு தழுவ முயல்வர். ஏறு தழுவிய ஆயனுக்குத் தம் பெண்ணை மணம் முடித்துத் தருவர் ஆயர். ஏறு தழுவல் காட்சிகளை நல்லுருத்திரன் பாடிய முல்லைக் கலிப் பாடல்களில் விரிவாகக் காணலாம்.

ஓஒ! இவள்,பொருபுகல் நல்ஏறு கொள்பவர் அல்லால்
திருமாமெய் தீண்டலர்
(கலித்தொகை-102 : 9-10)

(பொருபுகல் = போர் செய்வதில் விருப்பம் உடைய; ஏறு = காளை)

போர் செய்யும் விருப்பம் உடைய நல்ல காளையை அடக்குபவரே அல்லாமல் வேறு யாரும் இவளது மெய் தீண்டத்தக்கவர் அல்லர் என்பது இதன் பொருள். ஆயர்குலப் பெண் ஏறு தழுவும் ஆடவனையே விரும்பி மணப்பாள் என்பதை இது உணர்த்துகிறது.

ஆடு, மாடுகள் வதியும் இடத்தையும், ஏறு தழுவும் இடத்தையும் ‘தொழு’ என்பர். ஏறு தழுவுவதற்கு முன் நீர்த்துறைகளிலும், மரத்தடிகளிலும் உள்ள தெய்வங்களை வழிபடுவது மரபு. வீரம் அற்றவனை ஆயர்குலப் பெண்டிர் விரும்ப மாட்டார். காளையின் கொம்புக்கு அச்சம் கொள்பவனை ஆயர்மகள்அடுத்த பிறவியில் கூடக் கணவனாக ஏற்கமாட்டாள். இக்கருத்தை

கொல்லேற்றுக் கோடுஅஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்
(கலித்தொகை- 103 : 63-64)

(கோடு = கொம்பு; புல்லாள் = தழுவ மாட்டாள்)

என்ற கலித்தொகை அடிகள் எடுத்துரைக்கின்றன.

இளைஞர்கள் ஏறு தழுவும் காட்சியைக் காணும் தோழியும் தலைவியும் பேசிக் கொள்ளும் உரையாடலில் அக்காட்சி அழகாக விரிகிறது. ஆயர் காளைகளைத் தொழுவில் விடுகின்ற போது வாத்தியங்கள் முழங்குகின்றன. மகளிர் வரிசையாக நிற்கின்றனர். தொழுவில் ஆயர் பாய்ந்தபோது தூசி கிளம்புகிறது; தொழுவில் பாய்ந்த ஆயர் காளைகளின் கொம்பினைப் பிடித்தனர்; தம் மார்பில் பொருந்தும்படி தழுவினர். அவற்றின் கழுத்தில் அடங்கினர்; கொண்டை (இமில்) முறியும்படி தழுவினர்; தோளுக்கு நடுவே காளையின் கழுத்தைப் புகும்படி விட்டனர்; காளைகள் ஆயர்களைக் கீழே வீழ்த்தின; நீண்ட கொம்புகளால் சாகும்படி குத்தின; மொத்தத்தில் கோபமுற்ற காளை எமனைப் போல் விளங்கியது.

இக்காட்சிகளைக் கலித்தொகை 105 ஆம் பாடல் விரிவாகக் காட்டுகிறது.

ஏறு தழுவல் முடிந்தபின் உறவினர் இசைவுடன் திருமணம் நிகழ்த்துவதே ஆயர் குல வழக்கமாகத் தெரிகிறது. சங்க இலக்கியத்தில், கலித்தொகையில் மட்டுமே ஏறு தழுவல் நிகழ்ச்சி இடம் பெறுகின்றது என்பது குறிப்பிடத் தக்கது.

நன்றி : விக்கிபீடியா

தற்போது இந்த வீரவிளையாட்டு மஞ்சுவிரட்டு , ஜல்லிக்கட்டு என்று பல பெயர்மாற்றம் பெற்றுவிட்டது. போட்டியின் நோக்கமும் மாறிவிட்டது. முன்பு காளையை அடக்குபவர்களுக்குப் பெண்ணை மணமுடித்துக் கொடுப்பது நோக்கமாயிருந்தது . இப்போது காளையை அடக்குகின்ற வீரர்களுக்குப் பணமுடிப்பு, பொற்காசு மற்றும் பல பொருட்களைப் பரிசாகக் கொடுக்கிறார்கள் .

கிரிக்கெட் விளையாட்டு முன்பு  TEST MATCH என்று ஐந்து நாட்கள் விளையாடுவார்கள் . ஆனால் இப்போது 50 - 50 என்றும் 20 - 20 என்றும் மாற்றம் பெற்றதுபோல , ஏறுதழுவுதல் என்ற வீரவிளையாட்டின் நோக்கம் சிதைந்தது மட்டுமல்லாமல் , பெயரும்  மாறிவிட்டது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஒரு கண்ணில் வெண்ணை --மறு கண்ணில் சுண்ணாம்பு  Empty Re: ஒரு கண்ணில் வெண்ணை --மறு கண்ணில் சுண்ணாம்பு

Post by T.N.Balasubramanian Tue Jul 11, 2017 5:39 pm

M Jagadeesan wrote: அந்தப்படத்தில் வருவதுதான் உண்மையான ஜல்லிக்கட்டு . அல்லது வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜெமினிகணேசன் காளையை அடக்குவதும் உண்மையான ஜல்லிக்கட்டு ஆகும் .

தாய்க்கு பின் தாரம் நான் பார்க்கவில்லை.
வீரபாண்டிய கட்டபொம்மன் பார்த்துள்ளேன்.
அதில் ஜெமினி கணேசன் அடக்கும் காளை,
அடக்கும் காட்சிகளில் பின்புறமாக லாவகமாக கட்டப்பட்டு இருக்கும் .
படம் வந்தபோதே இது பற்றிய சர்ச்சைகள் வந்தன.

நம்முடைய திரைப்பட கதாநாயகர்கள் காளையை அடங்குவார்கள்
என இன்னுமா நம்புகிறீர்கள் ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரு கண்ணில் வெண்ணை --மறு கண்ணில் சுண்ணாம்பு  Empty Re: ஒரு கண்ணில் வெண்ணை --மறு கண்ணில் சுண்ணாம்பு

Post by ayyasamy ram Thu Jul 13, 2017 2:03 pm

ஒரு கண்ணில் வெண்ணை --மறு கண்ணில் சுண்ணாம்பு  103459460
-
ஒரு கண்ணில் வெண்ணை --மறு கண்ணில் சுண்ணாம்பு  NOB4K3EsTWatMsF6spbZ+IMG_0728
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82781
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு கண்ணில் வெண்ணை --மறு கண்ணில் சுண்ணாம்பு  Empty Re: ஒரு கண்ணில் வெண்ணை --மறு கண்ணில் சுண்ணாம்பு

Post by T.N.Balasubramanian Thu Jul 13, 2017 7:43 pm

ayyasamy ram wrote:ஒரு கண்ணில் வெண்ணை --மறு கண்ணில் சுண்ணாம்பு  103459460
-
ஒரு கண்ணில் வெண்ணை --மறு கண்ணில் சுண்ணாம்பு  NOB4K3EsTWatMsF6spbZ+IMG_0728
மேற்கோள் செய்த பதிவு: 1245432

நானும் அதைத்தான் கூறுகிறேன் ...ஜல்லிக்கட்டில் காளைகளுக்கு துன்பம் செய்வதில்லை.
ஆனால் ஸ்பெயினில் மாடுகளை சித்திரவதை செய்கிறார்கள் அதைத்தான் PETA என்ன செய்கிறது ?
ஒரு கண்ணில் வெண்ணை என்று தலைப்பு கொடுத்திருந்தேன்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரு கண்ணில் வெண்ணை --மறு கண்ணில் சுண்ணாம்பு  Empty Re: ஒரு கண்ணில் வெண்ணை --மறு கண்ணில் சுண்ணாம்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum