ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்!

2 posters

Go down

உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Empty உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்!

Post by ayyasamy ram Sun Jul 09, 2017 8:35 am



அலுவலகத்தில், கணவருக்கு தொழில் தொடர்பாக பெரிய
பிரச்னை; மனிதர், துவண்டு போய், தொய்ந்த முகத்துடன்,
வீடு திரும்புகிறார்.

‘என்னங்க ஒரு மாதிரியா இருக்கீங்க?’

‘அதெல்லாம் ஒண்ணுமில்ல…’

‘எத்தனை வருஷமா உங்களோட குடும்பம் நடத்துறேன்;
எனக்கு தெரியாதா உங்களப் பத்தி… சும்மா சொல்லுங்க…’

‘சொன்னா, பெரிசா தீர்த்து வச்சுடுவியாக்கும்… பேசாம இரு;
சும்மா, நீ வேற குடையாதே…’

‘யாருகிட்டயாவது பகிர்ந்துக்குங்க; மனசுலயே வச்சுக்கிட்டு
பாரம் ஏத்திக்காதீங்க…’

– இப்படி, நீண்டு கொண்டு போன உரையாடலில், கடைசியாக,
அலுவலக பிரச்னையை சொன்னார், கணவர்.

‘அட என்னங்க நீங்க… இப்படி தான், ரெண்டு வருஷத்துக்கு முன்,
இதே மாதிரி ஒரு பிரச்னை வந்துச்சு; என்னமா சமாளிச்சு,
வெளி வந்தீங்க. இதெல்லாம், உங்க திறமைக்கு முன் ஒண்ணுமே
இல்ல; ஊதி, எறிஞ்சுடுவீங்க பாருங்க…’

காட்சி மாறுகிறது; கணவர், தன் நண்பரிடம் இப்படி சொல்கிறார்…

‘என் மனைவி படிக்காதவ தான்; வெளி உலகமே தெரியாது.
அவளுக்கு தெரிஞ்சதெல்லாம், குடும்பம், கடமை, அம்மா வீடு
இவ்வளவு தான். ஆனா, அவ குடுத்தா பாரு தைரியம்…
‘ஊதி எறிஞ்சுடுவீங்க’ன்னா… அதே மாதிரி நடந்துடுச்சு; அவ குடுத்த
தைரியத்தை மட்டுமே வச்சு, போராடினேன்; இப்ப ஜெயிச்சிட்டேன்…’

‘பரவாயில்லயே… என்கிட்ட சொன்னதோட நிறுத்திடாம,
உன் மனைவிகிட்டே போய், இதை அப்படியே சொல்லு…’ என்றார்
நண்பர்.

‘விமானத்துக்கு நேரமாச்சு… சென்னை, கத்திப்பாரா சந்திப்புல,
பாலத்துக்கே பூட்டு போட்டுட்டாங்களாம்; ஒரே போக்குவரத்து
நெரிசலாம்; விமானத்தை பிடிக்க முடியுமான்னு தெரியல…’

‘இதெல்லாம் தேவையில்லாத கற்பனை… நீ போறதுக்குள்ள எல்லாம்
சரியாயிடும். தைரியமாகப் போ; இல்லன்னா, நந்தம்பாக்கம் வழியா
போ; விமானத்தை பிடிச்சுருவே…’

விமானத்தில் ஏறி அமர்ந்ததும், மொபைல் போனில்,
‘நீ சொன்னபடிதாம்பா நடந்துச்சு… சரியான நேரத்துக்கு விமான
நிலையம் வந்துட்டேன்; நான் போன நேரம் எல்லாம் சரியாயிடுச்சு.
நீ தைரியம் குடுக்கல்லன்னா, வழியெல்லாம் ரொம்ப பதட்டப்
பட்டிருப்பேன்; ரொம்ப நன்றி…’

‘தங்கச்சி பிரசவத்துல ஏதோ சிக்கலாம்; அம்மா போன் செய்து,
உடனே ஊருக்கு வரச் சொல்றாங்க; ரொம்ப கவலையா இருக்கு…’

‘கவலைப்படாதே… பிரசவம் நல்லபடியா நடக்கும்; தைரியமாக
போயிட்டு வா; எதுக்கும் இந்த பணத்த செலவுக்கு வச்சுக்கோ;
போய், போன்ல பேசு…’

இப்படியெல்லாம், நம்பிக்கையூட்டும், தைரியமூட்டும்
கதாபாத்திரங்களாக நாம் மாற வேண்டுமே தவிர, ‘நான் அப்பவே
சொன்னேன், இந்த வேலைய விட்டு தொலைங்கன்னு; கேட்டாத்தானே…
இப்ப கிடந்து, படாத பாடு படுறீங்க; என் பேச்சு எங்க எடுபடுது…’
என்று, பேசுகிற மனைவியாகவோ, ‘ஆமாமா… கத்திப்பாராவுல ரொம்ப
பிரச்னையா இருக்கு; நீ, விமானத்தை பிடிக்கிறது சந்தேகம் தான்…’
என்று சொல்கிற நண்பராகவோ,

‘என்ன செய்றது… எல்லாம் விதிப்படி தான் நடக்கும்; நம்ம கையில
என்ன இருக்கு. யார் தலையில, என்ன எழுதி வச்சிருக்கோ…’ என்று,
இருக்கிற கொஞ்ச, நஞ்ச தைரியத்தையும், உருக்குலைக்கும்படி
பேசுகிற முதலாளியாகவோ, ஆகிவிடக் கூடாது.

‘என்ன நம்பிக்கையில், இப்படியெல்லாம் நல்வார்த்தை சொல்லச்
சொல்றீங்க… எதை நம்பி, தைரியமூட்டச் சொல்றீங்க… நாம் நல்லது
சொன்னாலும், அப்படியேவா நடந்துடப் போகுது…’ என்றெல்லாம்,
கேள்வி எழுப்புவோருக்கு ஒன்று சொல்கிறேன்…

எல்லா ஆயுதங்களையும் இழந்து, நிராயுதபாணிகளாக
நிற்போருக்கு, நாம், நம் கைப்பொருளை இழக்காமல் அளிக்கக்
கூடியதெல்லாம், தைரியம், தன்னம்பிக்கை மற்றும் ஆக்கப்பூர்வமான
வார்த்தைகள் மட்டும் தாம்!

நாம் சொன்னபடி நடக்காவிட்டாலும், நாம் வழங்கிய நற்சொற்கள்,
அவர்களுக்கு அந்நேரத்துக்கு ஆறுதலை வழங்கியிருக்குமா,
இல்லையா…

நாம் சொன்னபடி நடக்காவிட்டால், ‘நீ ஏன், அப்படி ஆக்கப்
பூர்வமாகப் பேசுனே…’ என்று சண்டைக்கா வரப்போகின்றனர்…
மாறாக, நாம் சொன்னபடி நடந்து விட்டாலோ, நம்மை அவர்கள்
தலையில் வைத்து கொண்டாடாத குறை தான்!

எனவே, எவ்வித இழப்பையும் நமக்கு ஏற்படுத்தாத
நல்வார்த்தைகளை சொல்லி தான் வைப்போமே!

———————————————–

லேனா தமிழ்வாணன்
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Empty Re: உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்!

Post by M.Jagadeesan Sun Jul 09, 2017 11:46 am

மனைவி என்பவள் மந்திரிக்குச் சமமானவள் . குடும்பத்தில் ஏற்படுகின்ற இடுக்கண் களைந்து , இல்லறத்தேரை இனிதே ஓட்டுபவள் . கணவனின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பவள் . There is a woman behind every successful man என்பது ஆங்கிலப் பழமொழி . அவளை Better Half என்று அழைப்பார்கள். மனைவி என்பவள் கணவனின் பாதி . இந்தத் தத்துவத்தை உணர்த்துவதுதான் சிவனின் அர்த்தநாரீஸ்வர வடிவம் .

சிறந்த மனைவி அமைய பெற்றவன் , தன்னை இகழ்பவர்கள் முன்பாக சிங்கம்போல பீடு நடைபோடுவான் என்பார் ஐயன் வள்ளுவர் .

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை .

என்பது ஐயனின் வாக்கு .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum