புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜி.எஸ்.டி A to Z 30


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 04, 2017 9:06 pm

-இளங்கோ கிருஷ்ணன்
-
ஜி.எஸ்.டி. என்பது என்ன?
-

சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Service Tax) என்பதன்
சுருக்கம். இது நாளை முதல் (ஜூலை 1) மத்திய அரசால்
இந்தியா முழுவதும் அமுலாக உள்ளது.

இப்போது மத்திய, மாநில அரசுகளால் வசூலிக்கப்படும்
வரிகள் எவை? பொதுவாக, ஓர் அரசு நேர்முக வரி (Direct Tax),
மறைமுக வரி (Indirect Tax) என இருவகையான வரிகள்
வசூலிக்கும்.
-
இதில் நேர்முக வரி என்பது ஒருவர் ஈட்டும் வருமானத்தில்
இருந்து நேரடியாக வசூலிக்கப்படுவது. உதாரணம் வருமான வரி.
மறைமுக வரி என்பது ஏதேனும் ஒரு பொருளை அல்லது
சேவையை நுகரும்போது அந்தப் பொருளின் விலையுடன் சேர்ந்து
வசூலிக்கப்படும்.

உதாரணம் உற்பத்தி வரி என்னும் கலால் வரி,
விற்பனை வரி, சேவை வரி, சுங்க வரி போன்றவை.
-
ஜி.எஸ்.டி. யின் நோக்கம் என்ன?
மறைமுக வரியை ஒரே வரிவிதிப்பாக மாற்றுவது தான். அதாவது, ஒரு பொருள் உற்பத்தியாகும்போது விதிக்கப்படும் உற்பத்தி வரி, விற்பனை செய்யப்படும்போது விதிக்கப்படும் விற்பனை வரி, தொழில் சார்ந்த சேவைகளுக்கு விதிக்கப்படும் சேவை வரி, ஏற்றுமதி இறக்குமதியின்போது விதிக்கப்படும் சுங்கவரி போன்ற அனைத்தையும் நீக்கிவிட்டு ஒரே வரிவிதிப்பாக ஏற்படுத்தப்பட்டுள்ளதுதான்
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 04, 2017 9:09 pm

ஜி.எஸ்.டி A to Z 30 TOlyLCZSOg0WFwdX48Pg+13a
-
ஜி.எஸ்.டி. இதன் அறிமுகத்தால் நீங்கும் பழைய வரி விதிப்புகள் எவை எவை?
-
மத்திய கலால் வரி, சேவை வரி, மத்திய, மாநில வணிக வரிகள்,
உணவு வரி, கேளிக்கை வரி, நுழைவு வரி, கொள்முதல் வரி,
ஆடம்பர வரி, விளம்பர வரி உள்ளிட்ட மேலும் சில உள்ளூர் வரிகள்
நீங்கக்கூடும்.

எப்படி செயல்படும்?
இந்தியாவில் நிகழும் வணிக நடவடிக்கைகளான
விற்பனை, விற்பனைப் பொருட்களின் ட்ரான்ஸ்ஃபர்,
கொள்முதல், லீஸ், பொருட்கள் அல்லது சேவைகள் இறக்குமதி,
வணிகம் சார்ந்த சேவைகள், கான்ட்ராக்டுகள் போன்றவற்றின்
மீது ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள்
ஆகிய இரண்டுமே இந்த வரி விதிப்பை நிர்வகிக்க உள்ளன.

எனவே, ஜி.எஸ்.டி மத்திய ஜி.எஸ்.டி எனப்படும் CGST மாநில
ஜி.எஸ்.டி எனப்படும் SGST என இரண்டு வகையாகப்
பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது, ஒரு பொருள் ஒரு மாநிலத்தில்
உற்பத்தியாகி அதே மாநிலத்தில் விற்பனை செய்யப்பட்டால்
வரியின் ஒரு பகுதி மத்திய அரசுக்கும் இன்னொரு பகுதி மாநில
அரசுக்கும் செல்லும்.

-
உதாரணமாக ,1000 ரூபாய் மதிப்பு உள்ள ஒரு பொருள்
தமிழகத்தில் உற்பத்தியாகி தமிழகத்திலேயே விற்கப்படும்போது,
அதன் மீதான வரி 5% என வைத்துக்கொண்டால் ரூ.50 வரியாக
வசூலிக்கப்பட்டு ரூ.25ஐ மத்திய அரசும் மறுபாதியை மாநில
அரசும் வைத்துக்கொள்ளும்.

ஒரு பொருள் ஒரு மாநிலத்தில் உற்பத்தியாகி இன்னொரு
மாநிலத்தில் விற்பனை செய்யப்பட்டால் IGST என்ற ஒரே வரியாக
விதிக்கப்பட்டு அந்த வருவாய் மத்திய அரசுக்குச் செல்லும்.

பிற்பாடு அந்த வரியில் ஒரு பகுதியை விற்பனை செய்யப்படும்
மாநில அரசுக்கு மத்திய அரசு  வழங்கும்.
-
உதாரணமாக ,மேலே சொன்ன அதே பொருள் தமிழகத்தில்
உற்பத்தியாகி வேறு மாநிலத்துக்கோ யூனியன் பிரதேசத்துக்கோ
விற்பனை செய்யப்படுகிறது எனில் ஐ.ஜி.எஸ்.டி 5% மொத்தத்தையும்
மத்திய அரசே வசூலித்துக் கொள்ளும்.

அதாவது ரூ.50 மத்திய அரசின் பாக்கெட்டுக்கே செல்லும்.
பிற்பாடு மத்திய அரசு அதில் ஒரு பகுதியை விற்பனையான
மாநிலத்துக்குத் தரும்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 04, 2017 9:11 pm

மாநிலங்களுக்கு இடையிலான விற்பனையில், பொருள்
உற்பத்தியாகும் மாநிலத்துக்கு வரி செல்லாதா?
==
செல்லாது. அதுதான் ஜி.எஸ்.டியில் முக்கியமான விஷயம்.
ஏனெனில் ஜி.எஸ்.டி. என்பது விற்பனை செய்யப்படும் மாநிலத்தை
அடிப்படையாகக் கொண்ட வரி விதிப்பு முறை.

இதனால், மாநிலங்களுக்கு இடையிலான விற்பனையில் விற்கும்
மாநிலத்துக்கு வரி வருவாய் இருக்காது. இது ஒரு பிரச்னைதான்.
குறிப்பாக, தமிழகம் போன்ற தொழில்சார் மாநிலத்துக்கு பாதிப்புதான்.

ஜி.எஸ்.டியில் வரி விதிப்பு எப்படி இருக்கும்?

0, 5, 12, 18, 28 ஆகிய சதவிகிதங்கள் பொருளுக்குத் தகுந்தபடி
இருக்கும் என்று சொல்கிறார்கள். விலைஉயர்ந்த கற்களுக்கு
0.25% சிறப்பு வரியும், தங்கத்துக்கு 3% சிறப்பு வரியும் இருக்கும்
என்கிறார்கள். சிகரெட், மது போன்ற லாகிரி வஸ்துகளுக்கு
கூடுதல் செஸ் வரிவிதிப்பும் இருக்கக்கூடும்.

யார் தலைமை யில் இயங்கும்?

இதை வசூலிப்பதற்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் என்று ஒரு குழு
அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக (Chairman) நிதியமைச்சர்
இருப்பார். நாடு முழுதும் உள்ள மத்திய அரசுக்குச்சொந்தமான
கலால் மற்றும் சேவை வரி அலுவலகங்கள், சுங்கவரி அலுவலகங்கள்,
மாநில அரசுக்குச் சொந்தமான வணிக வரி அலுவலகங்கள்
ஆகியவை மூலம் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெறும்.

யார் ஜி.எஸ்.டி. கட்ட வேண்டும்?

நீங்கள் ஒரு வணிகர் அல்லது தொழில் முனைவோர் என்றால்
ஜி.எஸ்.டி. குறித்து விரிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டியது
அவசியம். ஏனெனில், இது ஒரு வகை விற்பனை வரி.
அதே சமயம் வணிகம் செய்யும் அனைவரும் ஜி.எஸ்.டி. வரி கட்ட
வேண்டும் என்ற அவசியம் இல்லை.
சிறிய அளவில் தொழில் செய்வோர்க்கு இதில் இருந்து விலக்கு
அளிக்கப்பட்டுள்ளது.

வருடத்துக்கு 20 லட்சங்களுக்குள் விற்பனை (Turnover) உள்ள
வணிகர்கள் தொழில் முனைவோருக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து
விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், இரண்டு
மாநிலங்களுக்கு இடையில் விற்பனை பரிவர்த்தனை
செய்பவர்களுக்கும், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பவர்களுக்கும்
மேலும் சிலருக்கும் ஆண்டு விற்பனைத் தொகை எவ்வளவு
இருந்தாலும் ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு  இல்லை.

பழைய வணிக வரியில் இருந்த மதிப்புக்கூட்டு வரி விதிப்பு முறை
(VAT) இதிலும் உண்டா?

நிச்சயம் உண்டு. உதாரணமாக ஒருவர் 1000 ரூபாய் மதிப்புள்ள
ஒரு பொருளை உற்பத்தி செய்து விற்கிறார் எனில் அதன் வரி
ஐந்து சதவிகிதமான ரூ.50ஐ சேர்த்து ரூ.1050 ஆகப் பெற்றுக்கொண்டு
வரித்தொகை ரூ.50ஐ அப்படியே அரசுக்குக் கட்ட வேண்டியது இல்லை.
அந்தப் பொருளை உற்பத்தி செய்யும் போது வாங்கிய
மூலப்பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியைக் கழித்துக்கொண்டு
எஞ்சிய தொகையைக் கட்டினால் போதும்.

இதை Input Tax Credit என்பார்கள். உற்பத்தியாளர் என்று இல்லை,
வாங்கி விற்பவர்களுக்கும் இந்த இன்புட் டேக்ஸ் கிரிடிட் முறை
பொருந்தும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 04, 2017 9:11 pm

பழைய வரி முறைகளுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?
-
பழைய வரி விதிப்பு முறைகளில் ஒருவர் ஒரு பொருளை உற்பத்தி செய்து,
விற்கும்போது உற்பத்தி வரி, விற்பனை வரி எனத் தனித்தனியாக
வசூல் செய்து தனித்தனி அரசு அலுவலகங்களில் நமூனா தாக்கல்
செய்து வரி கட்ட வேண்டும்.

இந்த முறையில் ஜி.எஸ்.டி., என்ற ஒற்றை வரியை மட்டும் வசூல் செய்து
கட்டினால் போதும். பொருளை வாங்கி விற்கும் வணிகர்களுக்கு
மாநிலங்களுக்கு இடையே விற்கும்போது இருக்கும் ‘சி’ ஃபார்ம் கொடுக்கும்
அவஸ்தைகள் இருக்காது.

மத்திய, மாநில அரசுகளுக்கு இதனால் என்ன நிகழும்?
-
மத்திய அரசைப் பொருத்தவரை நாடு முழுதும் ஒரே வரி விதிப்பு முறை
அமுலாக்கப்படுவதால் நிர்வாகம் ஓரளவு எளிதாகும்.
ஒவ்வொரு பொருளின் விற்பனையிலும் வரித்தொகை மத்திய அரசுக்குக்
கிடைப்பதால் அதற்கு வரி ஆதாயம் அதிகரிக்கும்.

ஆனால், சுங்கவரித்துறை, கலால் வரித்துறை போன்ற வேறு வேறு
அலுவலகங்களை இணைத்துச் செயல்படுத்த வேண்டியது அதன்
முன் உள்ள பெரிய சவால்.

மேலும், இந்தப் புதிய வரி விதிப்பால் ஏற்பட உள்ள பொருட்களின்
விலையேற்றமும் ஒரு முக்கியமான பிரச்சனை. மாநில அரசுகளைப்
பொருத்தவரை வரி வசூல் மத்திய அரசின் கைகளுக்குச் சென்று
விடுவதால் நிதி இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

வரி வருவாயைப் பொருத்தவரை மாநில அரசு என்பது இனி வரியை
வசூலித்துத் தரும் ஒரு இடைநிலை அமைப்பு மட்டுமே. இதனால் ஏற்படும்
நிதி இழப்பை சமாளிப்பது என்பது, தொழில்வளம் மிக்க மகாராஷ்ட்ரா,
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு கடுமையான 
சவால்தான்.

விலையேற்றம் இருக்குமா?

ஜி.எஸ்.டி. அமுலாக்கப்பட்டால் பழைய வரி விதிப்புகளில் இருந்து
கிடைக்கும் வரி வருவாய்க்கு இணையாக வருமானம் இருக்க வேண்டும்
என்று மத்திய, மாநில அரசுகள் விரும்பும். இதனால், பல பொருட்களுக்கும்
விலை உயர்வு இருக்கவே செய்யும் என்கிறார்கள்.

அதேநேரம், அத்தியாவசியப் பொருட்கள், அடிப்படைத் தேவையான
பொருட்களில் பெரிய விலையேற்றங்கள், மாறுதல்கள் இருக்காது என்றும்
சொல்கிறார்கள்.
-
------------------
குங்குமம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 05, 2017 5:26 am

ஜி.எஸ்.டி A to Z 30 BU8XzwISGeO4mw1BwWWg+387406-26628-46

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 05, 2017 6:19 am

இரண்டு இட்டலி + ஒரு வடை + காபி = 78 ரூபாய்க்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தேன் . இப்போது GST வந்தபின்பு 88 ரூபாய் கேட்கிறார்கள் .எனவே ஹோட்டலில் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன் .

GAS விலை 32 ரூபாய் ஏறிவிட்டது . சினிமாவுக்கு 58 % GST . குழந்தைகள் விரும்பி உண்ணும் கடலை மிட்டாய்க்கு 18 % GST . என்னசெய்வதென்று தெரியவில்லை . வழக்கம்போல மோடி ஊர்சுற்றக் கிளம்பிவிட்டார் . குடும்பம் இருப்பவருக்குத்தான் அதனுடைய கஷ்ட நஷ்டங்கள் தெரியும் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக