புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூக்கறுப்பு யுத்தம்  Poll_c10மூக்கறுப்பு யுத்தம்  Poll_m10மூக்கறுப்பு யுத்தம்  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மூக்கறுப்பு யுத்தம்  Poll_c10மூக்கறுப்பு யுத்தம்  Poll_m10மூக்கறுப்பு யுத்தம்  Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மூக்கறுப்பு யுத்தம்  Poll_c10மூக்கறுப்பு யுத்தம்  Poll_m10மூக்கறுப்பு யுத்தம்  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மூக்கறுப்பு யுத்தம்  Poll_c10மூக்கறுப்பு யுத்தம்  Poll_m10மூக்கறுப்பு யுத்தம்  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மூக்கறுப்பு யுத்தம்  Poll_c10மூக்கறுப்பு யுத்தம்  Poll_m10மூக்கறுப்பு யுத்தம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூக்கறுப்பு யுத்தம்  Poll_c10மூக்கறுப்பு யுத்தம்  Poll_m10மூக்கறுப்பு யுத்தம்  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மூக்கறுப்பு யுத்தம்  Poll_c10மூக்கறுப்பு யுத்தம்  Poll_m10மூக்கறுப்பு யுத்தம்  Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மூக்கறுப்பு யுத்தம்  Poll_c10மூக்கறுப்பு யுத்தம்  Poll_m10மூக்கறுப்பு யுத்தம்  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மூக்கறுப்பு யுத்தம்  Poll_c10மூக்கறுப்பு யுத்தம்  Poll_m10மூக்கறுப்பு யுத்தம்  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மூக்கறுப்பு யுத்தம்  Poll_c10மூக்கறுப்பு யுத்தம்  Poll_m10மூக்கறுப்பு யுத்தம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூக்கறுப்பு யுத்தம்


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Jun 30, 2017 8:38 pm

மூக்கறுப்பு யுத்தம்  QUOUkAHbQDOq0I8kmXRl+nayak

மூக்கறுப்பு யுத்தம்  GC1o9WjFR3uJjnhGjnnb+war_of_noses
மூக்கறுப்பு யுத்தம்

தமிழ் நாட்டு வரலாற்றில் தான் எத்தனை எத்தனை விசித்திரங்கள் , கற்பனைக்கும் மிஞ்சிய வரலாற்று நிகழ்வுகள் , இராமாயணத்தில் சூர்ப்பனகையின் மூக்கை அரிந்த புராணக்கதை பலருக்கும் தெரிந்த அளவிற்கு , நமது நாட்டில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் இருமன்னர்களுக்கு இடையே நடந்த போரில் ஆயிரக்கணக்கான மனிதர்களின் , பெண்களின் மூக்குகள் மேலுதட்டுடன் அறுத்தெரியப்பட்ட வரலாறு தெரியுமா ? அந்தப்போர் மூக்கறுப்பு யுத்தம் என்று அழைக்கப்பட்டது இந்தபோரின் வெற்றியை நினைவு கூறும் வகையில் மதுரை தல்லாகுளம் அருகே சேதுபதி மன்னரை பெருமைப்படுத்தும் விதத்தில் மூக்கறு போர் மண்டபம் என்ற பெயரில் கல் மண்டபம் கட்டப்பட்டது
இத்தகைய கொடிய வேதனைத்தரும் மக்கள் கொடுமை இந்தியாதவிர வேறு எங்கும் நடந்திருக்குமா என்பது தெளிவாக தெரியவில்லை .
தொடர்ந்து இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியாயெங்கும் நிகழ்ந்த போர்க்கொடுமைகள் வேதனையானவை .
உண்மையிலேயே நமது வரலாற்றின் ஒருபக்கம் கலை ,அறிவு ,வீரம் ,காப்பியங்கள் ,இலக்கியம் என பெருமைக்குரிய பல சங்கதிகள் இருந்தாலும் ,வேதனையும் துயரமும் கொண்ட மறுபக்கம் நமது வரலாற்றுக்கு உண்டு .
நாம் வளர வேண்டுமானால் வரலாற்றின் இரண்டு பக்கங்களையும் உள்ளது உள்ளபடி அறிதல் அவசியமாகும் .

இந்தமூக்கறுப்புப்போரில் சம்பந்த பட்டமன்னர்களைப் பற்றியும் போர் நிகழ்ந்த விதம் பற்றியும் விரிவாக பார்க்கலாமா ?



விஜயநகரப் பேரரசின் அங்கங்களாக விளங்கியவைதாம் மதுரை,மைசூர், செஞ்சி, தஞ்சைஆகியநாயக்கர் நாடுகள்.
பேரரசுக்குக் கப்பம் கட்டி, படைகளையும் அனுப்பவேண்டிய
கட்டாயம்அவைகளுக்கு உண்டு ..ஆனால் பேரரசு பலவீனம் ஆனபிறகு, நாயக்கர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை
அப்போது மதுரைநாட்டை ஆண்டுகொண்டிருந்தவர் திருமலை நாயக்கர். 1623 இலிருந்து 1659 வரைக்கும் மதுரையை ஆண்டவர் ஆகும்
மைசூர் நாட்டின் அரசர் கண்டீரவ நரச ராஜா. இவர் 1638 இலிருந்து1659வரைக்கும் மைசூரை ஆண்டவர்.
இருவருக்கும் இடையே பலநாள் பகை
திருமலை நாயக்கரைப் பழிவாங்கத் தருணம் பார்த்திருந்தார்
நரச ராஜா.தக்க வாய்ப்புக் கிடைத்ததும் மதுரைநாட்டின்மீது படையெடுத்தார்.
மைசூர் படைகள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சத்தியமங்கலத்தைமுதலில் பிடித்துக்கொண்டன. மதுரை நாட்டில் சேலம், தர்மபுரி, கரூர்,திருச்சியிலிருந்து தெற்கில் உள்ள பிரதேசங்கள் எல்லாமே இருந்தன.

சத்தியமங்கலத்திலிருந்து மைசூர்ப்படைகள் மிகவேகமாக
மதுரையை நோக்கி வந்துவிட்டன.
அந்தப் போரில் மைசூர்ப் படைகள் பெரும் அட்டூழியங்களைச்செய்தன. வழியில் பிடிபடுகின்றவர்களின் மூக்குகளையெல்லாம் அறுத்து
விரட்டி விட்டார்கள் . அவ்வாறு அறுபட்ட மூக்குகளுக்குத் ஊக்கம் தரும் தக்க பரிசு கொடுக்கச்செய்திருந்தார்
நரச ராஜா. மேலுதட்டுடன்மூக்குஇருக்கவேண்டும்.
மேலுதட்டின்மீது மீசை இருந்தால், அந்த மூக்குக்கு அதிகப் பரிசு. எத்தனை கொடுமை பாருங்கள் ! பாதிக்கப்பட்டவர்கள் போர்வீரர்கள் மட்டுமல்ல , அகப்பட்ட அப்பாவி பொது மக்கள்தான் அதிகம்.மூக்கிழந்தவர்கள்
இப்படியே மைசூர்ப்படைகள் மதுரைக்கு மிக அருகில்
வந்துவிட்டன.
அப்போது திருமலை நாயக்கருக்கு எழுபத்தைந்து வயது.
ஆபத்து நெருங்கியபோது, தன்னுடைய மூத்த ராணியாரைக்
கொண்டு ராமநாதபுரத்தின் ரகுநாத சேதுபதியிடம் உதவி கோரிகடிதம் எழுதி அனுப்பச்செய்தார்.
அந்தக் கடிதத்தைக் கண்டதும் சேதுபதி இருபத்தையாயிரம்
பேர் கொண்ட நன்கு தேர்ச்சி பெற்ற படையொன்றை அனுப்பினார்.
மைசூர்ப் படை மதுரையிலிருந்து சில மைல்கள் தொலைவில்இருக்கும்போது, ரகுநாத சேதுபதியின் படை, மைசூர்ப் படைகளுக்கும்
மதுரைக்கோட்டையின் சுவருக்கும் இடையே இன்னொரு சுவர் போலஅணிவகுத்துக் கொண்டது.

இதன் இடையில் திருமலை நாயக்கர் முப்பத்தையாயிரம் வீரர்கள்கொண்ட படையொன்றையும் திரட்டச்செய்தார்.
சேதுபதி, தம்முடைய படையைக் கொண்டு தடுத்து நிறுத்தப்பட்டமைசூர்ப்படைகளின் மீது கடுமையா தக்குதல்களை நடத்தினார். மைசூர்ப்படைகள் விரட்டப்பட்டன.
அவை மிக வேகமாகப் பின்னோக்கித் திரும்பி ஓடின.
திண்டுக்கல்லில் போய் திரும்பிப்பார்த்தனர்

மைசூரிலிருந்து வந்த இருபதினாயிரம் வீரர்கள் கொண்ட
உதவிப்படை அங்கு வந்து அவர்களுடன் சேர்ந்துகொண்டது.
கடும்போர்அங்கே நடந்தது. இருதரப்பிலும் மொத்தம் பன்னிரண்டாயிரம்வீரர்கள் இறந்தனர்.
அந்த நிலையில் தப்பினால் போதும் என்ற நிலைக்கு மைசூர்ப்படை வந்துவிட்டது. எஞ்சியிருந்த வீரர்கள் மைசூரை நோக்கி ஓடினார்கள்.
அதன்பின்னர் திருமலை நாயக்கர், தம் தம்பி முத்தியாலு நாயக்கரின்தலைமையில் ஒரு படையைத் திரட்டி, பதினெட்டுப் பாளையங்களின்படைகளையும் துணைக்குக் கொண்டு, மைசூரின்மீது படையெடுக்கச்செய்தார்.
-- அந்தப் படையினர் திருமலை நாயக்கரின் கட்டளையின்பேரில்
தங்களிடம் அகப்பட்ட மைசூர்க்காரர்களின் மூக்குகளை அறுத்தது.

அவ்வாறு ஓடிய மைசூர் வீரர்களைப் பிடித்து அவர்களின்
மூக்குகளையெல்லாம் சேதுபதி அறுத்துவிடச்செய்தார்.

அந்தப் போரில் மைசூர் மன்னன் கந்தல்களைக் கட்டிக்கொண்டுஒரு யானையின் மீதேறித் தப்பிச்சென்றான் என்றும் அவனுடைய தாயின்மூக்கை முத்தியாலு நாயக்கரின் படையினர் அறுத்ததாகவும் சொல்லப்படுகிறது .
ஆபத்துக்காலத்தில் உதவி செய்து, நாயக்கரின் பட்டமகிஷியின்தாலியைக் காத்தமையால் ரகுநாத சேதுபதிக்கு, ‘திருமலை சேதுபதி’என்றும் ‘ராணி தாலி காத்தார்’ என்றும் ‘ராணி சொல் காத்தார்’ என்றும்
பட்டங்களைத் திருமலை நாயக்கர் கொடுத்தார். அத்துடன் மதுரையில்எத்தனைச் சிறப்பாக நவராத்திரி கொண்டாடப்பட்டதோ, அதே அளவுசிறப்புடன் ராமநாதபுரத்திலும் கொண்டாடும் சிறப்புரிமையையும்
நாயக்கர் வழங்கினார்.

ஆனால் மூக்கறுபட்ட பொதுமக்களைப்பற்றி எந்த தகவலும் இல்லை , அவர்களுக்கு எத்தகைய சிகிச்சை கிடைத்தது ,
நிவாரணம் ஏதும் தரப்பட்டதா என்பதும் தெரியவில்லை .

இந்த வரலாற்றைப்பற்றி பல வருடங்களுக்கு முன் மலேசியா சேர்ந்த திரு ஜெயபாரதி அவர்கள் எழுதியிருந்தார்கள் .இணையத்திலும் விக்கியில் தகவல்கள் உள்ளன .ஆங்கிலத்திலேயும் பல செய்திகள் கிடைக்கின்றன .அவைகளைஆதாரமாகக் கொண்டு தான் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது .
அண்ணாமலை சுகுமாரன்
30/6/17

படத்தில் திருமலை மன்னர்
யுத்தம் நடைபெற்ற இடங்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 01, 2017 6:49 pm

இதுவரை நான் கேள்விப்படாத தகவல்கள். சுகுமாரன் .நன்றி.

அந்த காலத்திலேயே கர்நாடகத்தினர் தமிழ் மக்களை கேவலப்படுத்தி உள்ளனர்.

பெரிய தலைகளின் சண்டையில் அவதி படுவது எளிய மக்கள்தான் அன்றும் இன்றும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக