புதிய பதிவுகள்
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தைராய்டு Poll_c10தைராய்டு Poll_m10தைராய்டு Poll_c10 
41 Posts - 72%
heezulia
தைராய்டு Poll_c10தைராய்டு Poll_m10தைராய்டு Poll_c10 
10 Posts - 18%
E KUMARAN
தைராய்டு Poll_c10தைராய்டு Poll_m10தைராய்டு Poll_c10 
4 Posts - 7%
ஆனந்திபழனியப்பன்
தைராய்டு Poll_c10தைராய்டு Poll_m10தைராய்டு Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தைராய்டு Poll_c10தைராய்டு Poll_m10தைராய்டு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தைராய்டு Poll_c10தைராய்டு Poll_m10தைராய்டு Poll_c10 
377 Posts - 78%
heezulia
தைராய்டு Poll_c10தைராய்டு Poll_m10தைராய்டு Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
தைராய்டு Poll_c10தைராய்டு Poll_m10தைராய்டு Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
தைராய்டு Poll_c10தைராய்டு Poll_m10தைராய்டு Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
தைராய்டு Poll_c10தைராய்டு Poll_m10தைராய்டு Poll_c10 
8 Posts - 2%
prajai
தைராய்டு Poll_c10தைராய்டு Poll_m10தைராய்டு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தைராய்டு Poll_c10தைராய்டு Poll_m10தைராய்டு Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
தைராய்டு Poll_c10தைராய்டு Poll_m10தைராய்டு Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தைராய்டு Poll_c10தைராய்டு Poll_m10தைராய்டு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தைராய்டு Poll_c10தைராய்டு Poll_m10தைராய்டு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தைராய்டு


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu 3 Dec 2009 - 7:01

தைராய்டு


தைராய்டு சுரப்பியினை புரிந்து கொள்ளுதல்
தைராய்டு என்பது ஒரு சிறிய சுரப்பி. வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும். இது கழுத்தின் கீழ்ப்பகுதியின் மையத்தில் அமைந்திருக்கும். இந்த சுரப்பியின் முதன்மைப் பணியானது, உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களை கட்டுப்படுத்துவதாகும். உடலின் வளர்சிதை மாற்றங்களை கட்டுப்படுத்த இந்த தைராய்டு சுரப்பி தைராய்டு என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன் உடலில் உள்ள செல்கள் எந்த அளவு சக்தியினை பயன்படுத்த வேண்டும் என்பதனை முடிவுசெய்கிறது. நன்கு செயல்படும் தைராய்டு சுரப்பியானது தேவையான அளவு தைராய்டு ஹார்மோனை சுரக்கச்செய்கிறது. இரத்தத்திலுள்ள தைராய்டு ஹார்மோனின் அளவினை, பிட்யூட்டரி எனப்படும் சுரப்பி கண்காணித்து அதனை கட்டுப்படுத்துகிறது. இந்த பிட்யூட்டரி சுரப்பியானது மூளைக்கு கீழே மண்டையோட்டின் மையத்தில் அமைந்துள்ளது. இது, இரத்தத்தில் தைராய்டு ஹார்மோன் அளவு குறைவது மற்றும் அதிகரிப்பதை கண்டுணர்ந்து, தைராய்டு சுரப்பியின் செயலை கட்டுப்படுத்தும்/சரிசெய்யும் டி.எஸ்.எச் எனும் ஹார்மோனை சுரக்கிறது.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu 3 Dec 2009 - 7:02



தைராய்டு நோய் என்றால் என்ன? இது யாரைப் பாதிக்கிறது?

தைராய்டு சுரப்பி, தைராய்டு ஹார்மோனை அதிகளவில் சுரக்கும்போது, உடல் சாதாரணமாக இருக்கும்போது பயன்படுத்தும் சக்தியினைவிட, அதிகளவு சக்தியினை விரைவாக பயன்படுத்தும். இந்த நிலை ஹைப்பர்தைராய்டிஸம் (அதிகளவு ஹார்மோன் சுரப்பதினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்) எனப்படும். அதேபோல், தைராய்டு ஹார்மோன் குறைந்த அளவு சுரக்கும்போது, நம் உடல் எப்பொழுதும் விட குறைந்த அளவு சக்தியினை மெதுவாகப் பயன்படுத்தும். இந்த நிலையினை ஹைப்போ தைராய்டிஸம் என்பர். எல்லா வயதினை சார்ந்தவர்களும் இந்த தைராய்டு நோய்களினால் பாதிக்கப்படக்கூடும். ஆகிலும் பாதிப்படையும் நிலைமை ஆண்களைவிட பெண்களுக்கு 5 முதல் 8 மடங்கு அதிகம்.


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu 3 Dec 2009 - 7:04

தைராய்டு சுரப்பி, தைராய்டு ஹார்மோனை அதிகளவில் சுரக்கும்போது, உடல் சாதாரணமாக இருக்கும்போது பயன்படுத்தும் சக்தியினைவிட, அதிகளவு சக்தியினை விரைவாக பயன்படுத்தும். இந்த நிலை ஹைப்பர்தைராய்டிஸம் (அதிகளவு ஹார்மோன் சுரப்பதினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்) எனப்படும். அதேபோல், தைராய்டு ஹார்மோன் குறைந்த அளவு சுரக்கும்போது, நம் உடல் எப்பொழுதும் விட குறைந்த அளவு சக்தியினை மெதுவாகப் பயன்படுத்தும். இந்த நிலையினை ஹைப்போ தைராய்டிஸம் என்பர். எல்லா வயதினை சார்ந்தவர்களும் இந்த தைராய்டு நோய்களினால் பாதிக்கப்படக்கூடும். ஆகிலும் பாதிப்படையும் நிலைமை ஆண்களைவிட பெண்களுக்கு 5 முதல் 8 மடங்கு அதிகம்.


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu 3 Dec 2009 - 7:05



தைராய்டு நோய் எதனால் ஏற்படுகிறது?

தைராய்டு நோய் ஏற்பட பல வித்தியாசமான காரணங்கள் உண்டு. பின்வரும் நிலைமைகள் ஹைப்போதைராய்டிஸ்சத்தை ஏற்படுத்தும்.

  • தைராய்டைடிஸ் என்பது தைராய்டு சுரப்பி வீ’க்கமடைவதாகும். இதனால் தைராய்டு ஹார்மோன் சுரப்பது குறைகிறது.
  • ஹாஷிமோட்டோஸ் தைராய்டைடிஸ் என்பது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் வலியில்லாத நோயாகும். இது பரம்பரை வியாதி.
  • போஸ்ட்பார்டம் தைராய்டைடிஸ் என்பது 5 முதல் 7 சதம் பெண்களில் குழந்தை பெற்றபின் ஏற்படக்கூடிய ஒரு தற்காலிகமான நோய்.
  • ஐயோடின் குறைபாடு. இந்த பிரச்சினையினால் உலகமுழுவதும் தோராயமாக 100 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தைராய்டு சுரப்பி தைராய்டு ஹார்மோனை சுரக்க ஐயோடினை பயன்படுத்துகிறது.
  • செயல்படாத தைராய்டு சுரப்பி. இந்த நிலை பிறக்கும் 4000 குழந்தைகளில் ஒரு குழந்தையினைப் பாதிக்கிறது. இந்த பிரச்சினையினை சரிசெய்யாவிட்டால் அந்த குழந்தை உடல் மற்றும் மூளைவளர்ச்சி குன்றி காணப்படும்.

பின்வரும் நிலமைகள், அதிகப்படி தைராய்டு சுரப்பு (ஹைப்பர்தைராய்டிஸம்) ஏற்படுத்தும்.

  • க்ரேவ் நோய் - இதில் முழு தைராய்டு சுரப்பியும் அதிகளவில் செயல்பட்டு அதிகளவு தைராய்டு ஹார்மோனினை சுரக்கும்.
  • தைராய்டைடிஸ் - இதில் வலி இருக்கும் அல்லது வலி இல்லாமலிருக்கும். தைராய்டு சுரப்பியில் சேமித்துள்ள ஹார்மோனை வெளியேற்றுவதால், சிலவாரங்கள் அல்லது மாதங்கள் ஹைபர்தைராய்டிஸ்சத்தினை ஏற்படுத்தும்.
  • அதிகளவு ஐயோடின். சில் மருந்துகளில் அதிகளவில் ஐயோடின் காணப்படுவதால் அவை சில நபர்களில் தைராய்டு ஹார்மோன் சுரப்பதனை அதிகரிக்கும் அல்லது குறைக்கும்.


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu 3 Dec 2009 - 7:06

தைராய்டு நோய் ஏற்பட பல வித்தியாசமான காரணங்கள் உண்டு. பின்வரும் நிலைமைகள் ஹைப்போதைராய்டிஸ்சத்தை ஏற்படுத்தும்.

  • தைராய்டைடிஸ் என்பது தைராய்டு சுரப்பி வீ’க்கமடைவதாகும். இதனால் தைராய்டு ஹார்மோன் சுரப்பது குறைகிறது.
  • ஹாஷிமோட்டோஸ் தைராய்டைடிஸ் என்பது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் வலியில்லாத நோயாகும். இது பரம்பரை வியாதி.
  • போஸ்ட்பார்டம் தைராய்டைடிஸ் என்பது 5 முதல் 7 சதம் பெண்களில் குழந்தை பெற்றபின் ஏற்படக்கூடிய ஒரு தற்காலிகமான நோய்.
  • ஐயோடின் குறைபாடு. இந்த பிரச்சினையினால் உலகமுழுவதும் தோராயமாக 100 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தைராய்டு சுரப்பி தைராய்டு ஹார்மோனை சுரக்க ஐயோடினை பயன்படுத்துகிறது.
  • செயல்படாத தைராய்டு சுரப்பி. இந்த நிலை பிறக்கும் 4000 குழந்தைகளில் ஒரு குழந்தையினைப் பாதிக்கிறது. இந்த பிரச்சினையினை சரிசெய்யாவிட்டால் அந்த குழந்தை உடல் மற்றும் மூளைவளர்ச்சி குன்றி காணப்படும்.

பின்வரும் நிலமைகள், அதிகப்படி தைராய்டு சுரப்பு (ஹைப்பர்தைராய்டிஸம்) ஏற்படுத்தும்.

  • க்ரேவ் நோய் - இதில் முழு தைராய்டு சுரப்பியும் அதிகளவில் செயல்பட்டு அதிகளவு தைராய்டு ஹார்மோனினை சுரக்கும்.
  • தைராய்டைடிஸ் - இதில் வலி இருக்கும் அல்லது வலி இல்லாமலிருக்கும். தைராய்டு சுரப்பியில் சேமித்துள்ள ஹார்மோனை வெளியேற்றுவதால், சிலவாரங்கள் அல்லது மாதங்கள் ஹைபர்தைராய்டிஸ்சத்தினை ஏற்படுத்தும்.
  • அதிகளவு ஐயோடின். சில் மருந்துகளில் அதிகளவில் ஐயோடின் காணப்படுவதால் அவை சில நபர்களில் தைராய்டு ஹார்மோன் சுரப்பதனை அதிகரிக்கும் அல்லது குறைக்கும்.


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu 3 Dec 2009 - 7:07

ஹைப்பர்தைராய்டிஸ்சம் மற்றும் ஹைப்போதைராய்டிஸ்சம் இவைகளின் அறிகுறிகள் யாவை?




கீழ்க்காண்பவைகள் ஹைப்போதைராய்டிஸ்சத்தின் அறிகுறிகள் ஆகும்.

  • சோர்வு
  • அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல் அதன்மூலம் அதிக இரத்தப்போக்கு ஏற்படுதல்.
  • மறதி.
  • உடல் எடை கூடுதல்
  • உலர்ந்த, தடியான தோல் மற்றும் உரோமம்.
  • கரகரப்பான குரல்
  • குளிரினை பொறுத்துக்கொள்ள முடியாது.


கீழ்க்காண்பவைகள் ஹைப்பர்தைராய்டிஸ்சத்தின் அடையாளங்கள் ஆகும்.

  • எரிச்சல் / படபடப்பு
  • தசைகளின் பெலவீனம் / நடுக்கம்
  • உடல் எடைகுறைதல்
  • தூக்கமின்மை
  • தைராய்டு சுரப்பி வீங்குதல்
  • கண்களில் எரிச்சல் அல்லது பார்வை கோளாறு
  • வெப்ப உணர்வு அதிகரித்தல்

தைராய்டு நோயினை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதற்காக சிகிச்சையினை மேற்கொண்டு நோயின் அடையாளங்கள் ஏற்படும் முன்னரே இதனை கட்டுப்படுத்தலாம். தைராய்டு நோய்கள் வாழ்க்கையின் நீண்ட நாட்கள் இருக்கும் ஒரு பிரச்சினை. இதனை சரியாய் கையாள்வதினால் தைராய்டு நோய் உள்ளவர் ஆரோக்கியமாக மற்றவர்களைப் போல வாழலாம்.


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu 3 Dec 2009 - 7:08

நன்றி இந்தியா ஹெல்த்து.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu 3 Dec 2009 - 7:36

மருத்துவமும், மூடநம்பிக்கைகளும்

தைராய்டு Pg%2038-39

நாம் அடிக்கடி கேள்விப்படும் ஒரு செய்தி, தைராய்டு சுரப்பி நோயைப் பற்றி-யாகும். ஒருவர் அளவிற்கு அதிகமாக குண்டாக இருப்பார். அவர் உண்ணும் உணவு குறைவா-கவே இருக்கும். சாப்பிடுவதே இல்லை; உடம்பு மட்டும் ஏறிக்கொண்டே போகிறது என்ற வசனங்களை நாம் அடிக்கடி கேட்டிருக்கி-றோம். அதற்கு மாற்றாக, வேறு சிலரோ ஒல்லிப் பிச்சான்களாக இருப்பார்கள். எப்பப்பாரு தின்று கொண்டே இருக்கிறான். ஆனால் ஆளைப் பாரு; ஒடிஞ்சி விழுவதைப் போல இருக்கிறான். வினயமானவன்; அதனால்தான் உண்ட உடலில் ஒட்டவில்லை என்றும் நாம் அடிக்கடி கேட்டிருக்கிறோம்..

நல்லவனுக்கு உடல் பெருக்குவதும், கெட்ட-வனுக்கு உடல் தேய்வதும் உண்மையா? உண்மையைச்சொன்னால் கெட்ட எண்ணங்-களுக்கோ, நல்ல எண்ணங்கக்கோ, உடல் பருமனுக்கோ ஒரு தொடர்பும் கிடையாது.

நம் உடலில் உள்ள தைராய்டு (Thyroid Glands) சுரப்பிகள்தான் நம் உடல் பருமனுக்கு முக்கியக் காரணமாக அமைகின்றன. இனி அந்த சுரப்பியைப் பயீறியும் அதன் சுரப்புகள் பற்றியும் நோக்குவோம்.

தைராய்டு சுரப்பிகள் நம் முன் கழுத்துப் பதியில், மூச்சுக் குழாயின் (Trachea) மேல் பகுதியில் அமைந்துள்ள ஒரு நாளமில்லா (Ductless) சுரப்பியாகும். மூச்சுக் குழாயின் இருபுறமும் ஒட்டி அமைந்துள்ள இரண்டு பகுதியான சுரப்பி (Lobes) நடுவில் இணைப்பு-டன் (Isthmus) மூச்சுக் குழல் மேல் படிந்-திருக்கும். இந்த சுரப்பி ஒரு நாளமில்லா சுரப்பியாகும்.

சுரப்பியின் சுரப்புகள் (Hormones) நேரடியாக இரத்தத்தில் கலக்கும். மேல் தைராய்டு தமனி, கீழ் தைராய்டு தமனி என இரண்டு தமணிகள் மூலம், அதிக அளவு இரத்தம் இச்சுரப்பிகளுக்குச் செல்லும். தைராக்யின் (Thyroxine) ட்ரை ஜடோ தைரோனின் (Tri-Iodo-Thyronine) என்ற இரு வகை சுரப்புகளும் இந்த சுரப்பிகளால் சுரக்கப்படுகின்றன. இந்த சுரப்புகளில், ஐயோடின் (Iodine) கூறுகள்தான் உள்ளன. மண்டை ஓட்டின் அடிப்புறம் உள்ள பிட்யூட்டரி (Pitutary Grand) சுரப்பி சுரக்கும். தைராய்டு தூண்டு சுரப்பு (Thyroid Stimulating Hormone) தைராய்டு சுரப்பிகளை கட்டுப்படுத்தும் தன்மையுடையது.

டி.எஸ்.-ஹெச் (T.S.H.) என்று சுருக்கமாக அழைக்கப்-படும் இச்சுரப்பு, உடலின் தேவைக்கு ஏற்ப தைராய்டு சுரப்பியை தூண்டி, தைராக்ஸினை சுரக்கச் செய்யும். டிரை ஐடோ தைரோனின், தைராக்ஸினை விட வேகமாகச் செயல்படக் கூடியது. இதுவும் தைராய்டு தூண்டு சுரப்பி-யின் கட்டுப்பாட்டில் உள்ள சுரப்பே ஆகும். தைராய்டு சுரப்புகளான தைராக்ஸின் டிரை ஜடோ தைரோனின் இரண்டும் நம் உடலில் உள்ள அடிப்படை உயிரணுக்களான செல்-களின், வளர்சிதை மாற்றத்திற்கான (Metabolism) முக்கிய காரணிகளாகும்.

தைராக்ஸின் சுரப்பு சரியாக இருந்தால் செல்களின் உணவுத் தேவைகள் சரியாக பூர்த்தி செய்யப்பட்டு, அவை சத்தாக மாறி, உடல் இயக்கம் சீராக இருக்கும். தைராய்டு சுருப்பியின் மற்றொரு சுரப்பிற்கு கால்சிடோனின் (Calcitonin)என்று பெயர். நம் உடலில் ஏற்படும் சுண்ணச்சுத்து (Calcium)வளர்சிதை மாற்றத்தில் இந்த சுரப்பு பெரும் பங்கு வகிக்கிறது. இனி தைராக்ஸின் அதிகம் சுரந்தால், அல்லது குறைவாகச் சுரந்தால் ஏற்படும் பாதிப்புக்களையும், விளைவுகளையும் காண்போம்.

தைராக்ஸின் குறைபாடு:

(Hyothyroidism)தைராய்டு சுரக்கும் தைராக்ஸின் குறைபாடு, உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். தைராய்டு குறைபாடு உடையவர்கள் உடல் பருமனாக தெரிவார்கள். தோலின் அடிப்புறம் சவ்வு போன்ற படிவுகள் படிந்து, வீக்கம் போன்று(Myxoedema)ஏற்படும். இதுவே தைராய்டு குறைபாடு உடையவர்கள் பருமனாவதற்குக் காரணம்.

நோய் காரணியம்:

பிட்யூட்டரி சுரப்பியில் உண்டாகும் நோய், அல்லது மாற்றங்களால் தைராய்டு தூண்டு சுரப்பு (TSH) குறைவாக சுரப்பதால் தைராக்ஸின் சுரப்பது குறைவா-கலாம். தைராய்டு சுரப்பியிலேயே ஏற்படும் நோய்கள், தைராய்டு சுரப்பியை அறுவை செய்து எடுத்து விடுதல், முன் கழுத்து கழலை (Goitre)நோய் போன்றவை தைராய்டு குறைபாட்டை ஏற்படுத்தும். இந்நோய் பெரும்பாலும் வயது முதிர்ந்த பெண்களுக்கே வரும். ஆனால் எந்த வயதிலும் வரக்கூடிய நிலைமையும் மறுக்க முடியாது.

நோயின் அறிகுறிகள்:

தைராய்டு குறைபாடு லேசாகத் துவங்கி, அதிகமாகிக் கொண்டே வரும். அறிகுறிகளும் அதைப் பொறுத்தே வேறுபடும். ஆரம்ப நிலையில் சோம்பல், மறதி, இரத்த சோகை, தோலில் வறட்சி ஆகியவை தெரியும். வளர்சிதை மாற்றங்களில் தொய்வு ஏற்படத் துவங்கும். இதனால் மனம், உடல் தளர்வு உண்டாகும். சுறுசுறுப்பு குறையும். குளிர் தாங்க முடியாமை, கண்ணிமைகளில் வீக்கம், முடி உதிர்தல், குரல் தடித்தல், செவிட்டுத் தன்மை, பசியின்மை, உடல் பருமன், மலச்சிக்கல், மாதவிலக்கு மாற்றமடைதல், சோர்வு, பணியில் நாட்டமின்மை, உடல் வலி போன்றவை ஏற்படும். மருத்துவம் செய்யாவி-டில் இந்த நிலமைகள் அதிகமாகும். முகம், உடல் ஆகியவை அதிகம் வீங்கி, பருமனம-டையும். கண்ணிமைகள் வீங்கும், உதடுகள் பருமடையும், நாக்கு பருக்கும், உடல் முழுவதும் பருமனாகும். வியர்வை சுரப்பது நின்றுவிடும். அதனால் தோல் காய்ந்து, வறண்டு காணப்படும். பேசுவது நிதானப்படும். குரல் கடுமையாக ஆண் தன்மையுடன் தெரியும். நினைவாற்றல் குறைந்து, மறதி அதிகமாகும். உடல் களைப்பு, சோர்வுடன் பசியின்மையால் தேவையான அளவு உணவு உட்கொள்ள முடியாது. ஆனால் உடல் மட்டும் பருமனாகிக் கொண்டே வரும். நாடித்துடிப்பு குறைவு படும். இதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைவதால் நாளடைவில் மாரடைப்பு ஏற்படக் கூடிய சூழல் ஏற்படும். இந்த நிலையிலும் சரியாக மருத்துவம் செய்யாவிட்டால் நோயாளியின் உயிருக்கே ஆபத்து ஏற்படும். இரத்த சோகை, நினைவிழப்பு போன்றவை ஏற்பட்டு, நோயாளியின் நிலை கவலைக்கிட-மாக மாறும்.
சில சமயங்களில் குழந்தைகளும் தைராய்டு குறைபாடுகளால் பாதிக்கப்படுவதுண்டு. பிறவிக் கோளாறாகத் தோன்றும் இந்த வியாதியில் தைராய்டு சுரப்பிகள் சரியான வளர்ச்சி அடையாமல் தைராக்ஸின் சுரப்பு குறைபாடு உண்டாகும். குழந்தையின் உடல், மன வளர்ச்சி முழுமையாக பாதிப்படையும். முகத்தில் அதிக அளவு மாற்றங்கள் இருக்கும். அகன்ற சப்பை-யான மூக்கு, தடித்த உதடுகள், தடித்த நாக்கு, வாயின் வெளியே துருத்திக் கொண்டு இருக்கும் நிலை, வீங்கிய வயிறு, தொப்புள் குடல் இறக்கம் போன்றவை சாதாரணமாகத் தோன்றும். சரியாக மருத்துவம் செய்யாவிடில், மேற்கண்ட அறிகுறிகள் நிரந்தரமாகிவிடும். ஆனால் ஆரம்ப நிலையில் கண்டறிந்து, நோயாளிக் குழந்தை, மற்ற குழந்தைகள் போல் சாதாரண வளர்ச்சியுடன் இருக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.

ஆய்வுகள்:

இந்நோயை ஆய்வின் மூலம் எளிதாகக் கண்டுபிடிக்கலாம். இரத்தப் பரிசோதனையில், தைராக்ஸின் அளவு, டிரை ஜடே தைரோனின் அளவு, தைராய்டு தூண்டு சுரப்பியின் அளவு ஆகியவை பார்ப்பதின் மூலம் இந்நோயின் தன்மையை உணர முடியும்.

மருத்துவம்:

தைராய்டு குறைபாடு நோயின் அறிகுறிகள் மோசமாக இருந்தாலும், நோயை எளிதில் கட்டுப்படுத்த முடியும். தைராக்ஸின் குறைப்பாட்டால் இந்நோய் ஏற்படுவதால், அந்த குறைபாட்டை நிறைவு செய்வதன் மூலம், இந்நோயிலிருந்து குணமடையலாம். தைராக்-ஸின், மாத்திரை வடிவில் கிடைக்கிறது. சாதாரணமாக, ஆரம்ப நிலையில் 0.1 mgஅளவில் இம்மாத்திரையை உட்கொள்ள வேண்டும். ஆனால் இம்மாத்திரையின் அளவை கூட்டவோ, குறைக்கவோ மருத்துவரின் ஆலோசனை அவசியம். இம்மாத்திரையை எக்காரணம் கொண்டும் நிறுத்தக் கூடாது. தொடர்ச்சியாக சாப்பிட்டுக் கொண்டே வரவேண்டும். தைராய்டு பற்றாக்குறையோடு, இதய நோயும் சேர்ந்துள்ள நோயாளிகள் அதிக எச்சரிக்கையுடன் இம்மருந்துகளை சாப்பிட்டு வரவேண்டும். பொதுவாக எளிமையாக கட்டு-படுத்தக்கூடிய இந்நோய், சரியான முறையில் மருத்துவம் செய்யப்படாவிட்டால், பலவித தொல்லைகளை ஏற்படுத்துவதுடன், உயிருக்கு ஆபத்தையும் உண்டாக்கும். அதனால் ஆரம்ப நிலையிலேயே நோயறிதலும், மருத்துவம் செய்தலும் அவசியம்.


நன்றி டக்டர்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக