ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை

+7
badri2003
kuloththungan
aeroboy2000
அன்பு தளபதி
esamy
anuradhamv
தமிழ்நேயன் ஏழுமலை
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

request வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை

Post by தமிழ்நேயன் ஏழுமலை Thu Jun 22, 2017 8:12 pm

ஜெயமோகன் வெண்முரசு நாவல் அவர் இணையத்தில் இருந்து யாராவது pdf கோப்பாக சேமித்து இருந்தால் கொடுக்கவும்


“என்னையும் ஒருவனாக்கி இருங்கழல்
சென்னியில் வைந்த சேவக போற்றி”


எனது தளம் ⤵️⤵️⤵️
http://ezhumalaimfm.blogspot.in/
தமிழ்நேயன் ஏழுமலை
தமிழ்நேயன் ஏழுமலை
பண்பாளர்


பதிவுகள் : 75
இணைந்தது : 11/06/2016

Back to top Go down

request Re: வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை

Post by anuradhamv Fri Jun 23, 2017 2:07 pm

I have mudhalkanal saved as pdf (21MB).
anuradhamv
anuradhamv
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 23/06/2016

edensubu இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

request Re: வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை

Post by esamy Tue Jan 02, 2018 12:30 pm

வெண்முரசு நாவல பிடிஎப் வடிவில இருந்தால் கொடுக்கவும்
esamy
esamy
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 26/04/2015

Back to top Go down

request Re: வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை

Post by அன்பு தளபதி Fri Jan 26, 2018 9:32 pm

anuradhamv wrote:I have mudhalkanal saved as pdf (21MB), Kindly email me at
மேற்கோள் செய்த பதிவு: 1244720 என்னுடைய மடலுக்கு அனுப்பவும் நண்பா மணிஅஜித்007@ஜிமெயில்.காம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

request Re: வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை

Post by aeroboy2000 Sun Jan 28, 2018 10:38 pm

தமிழ்நேயன் ஏழுமலை

டியர் தமிழ் மற்றும் அனைவருக்கும்

உங்கள் ஈமெயில் எனக்கு அனுப்பவும்

லிங்க் அனுப்புகிறேன்
இங்கு நீங்கள் பதிவு செய்யவும்...தேவைப்பட்டால்
KLNHerbals@gmail.com
முதல் ஒன்பது புத்தகங்கள் மட்டும்

ஜெய மோகன் கொஞ்சம் கறார்  பேர்வழி

அன்புடன்
கே எல் என்
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

request Re: வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை

Post by kuloththungan Mon Jan 29, 2018 1:31 pm

எனது ஈமெயில்: kuloththungan@யாஹூ.காம்
எனக்கும் தயவு செய்து லிங்கை அளிக்கவும். நன்றி!
அன்புடன்
குலோத்துங்கன்
kuloththungan
kuloththungan
பண்பாளர்


பதிவுகள் : 112
இணைந்தது : 24/01/2017

Back to top Go down

request Re: வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை

Post by aeroboy2000 Tue Jan 30, 2018 10:30 am

அன்பர் ஜெயமோகன்
எம்மைப் பொறுத்தருள்வாராக ....
இது ஏற்கனவே இணைய தளங்களில் உலா வரும் மின் புத்தகங்கள் தான்


அன்பு ஈகரை உறவுகளே ...

அடியேன் தந்தையின் புத்தக அறையில் 5000 புத்தகங்களுக்கும் மேலாக இருந்தன  ...
எமது தந்தை எங்களுக்கு விட்டுச் சென்ற சொத்தே புத்தகங்கள் தான் ...
ராமபாணம் என்ற வெண்ணிற வெள்ளிப் பூச்சு கொண்ட மீன் உருவ சிறு பூச்சிகளின் தொந்தரவு தாங்க முடியாமல் (ஒரு நாளைக்கு ஒரு பக்கத்தை மிச்சமே இல்லாமல் உண்டு விடும்) ...
சில புத்தகங்களை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை பள்ளி நூலகங்களுக்கு அன்பளிப்பாகவும், குறைந்த விலையிலும் வழங்கி விட்டோம் ...
எந்த பாட்சா உருண்டைக்கும் அந்த பூச்சிகள் அசைந்து கொடுக்கவில்லை  

அந்தப் புத்தகங்கள் வாங்கிய 1970 – 1990 ஆண்டுகளில் 20 புத்தகங்கள் வாங்கும் பணத்திற்கு எங்கள் ஊரில் திருவண்ணாமலை மாவட்டம் - ஒரு மூன்று கிரவுண்ட் இடத்தோடு கூடிய ஓட்டு வீடு வாங்கலாம் ... ஒன்றரை ஏக்கர் நிலம் ரூ 900 – 1200 தான் ...
(எங்கள் ஊர் நிலங்கள் இன்று சினிமா - நாடக நடிகர்கள் வசம் உள்ளது)
ஆனால்
இலக்கிய புத்தகங்கள் கம்ப இராமாயணம், பத்துப்பாட்டு எட்டுத்தொகை   வாங்க ஒரு முறை ஆர்டர் செய்தால் ரூ 1200 ஆகும் ...
வர்த்தமானன் பதிப்பகம் தவிர மற்ற பதிப்பகத்தார் முழு விலையில் புத்தகம் போடுவார்கள். இதில் என்ன அற்புதம் என்றால் ... வர்த்தமானன் பதிப்பக குறைந்த விலை புத்தகங்கள் இன்றும் புத்தகமாக உள்ளன ...
மற்ற பதிப்பக புத்தகங்கள் நொறுங்கிய அப்பளங்களாக மாறி வருகின்றன....
எடைக்குக் கூட போட முடியாது ...

இதைக் குறிப்பிடும் காரணம் ...

இன்று வசதி உள்ளவர்கள் பலர் மற்றவர்களுக்கு உதவி செய்வதை மறந்தே போய் விட்டனர் ...
இரவு வாகனம் ஓட்டும் போது லோ பீம் போட்டு ஓட்டுவதை கௌரவக் குறைச்சலாக நினைக்கின்றனர். ஹாலோஜென் விளக்குகளைப் பொருத்தி எதிரே வரும் வாகன ஓட்டிகளின், முன் சீட்டு பயணிகளின் கண்களை குருடு ஆக்குவதோடு நில்லாமல், அவர்களை மலடு ஆக்கும் செய்கையும் மறைமுகமாக நடப்பதை அறிய மறுக்கும் அவல நிலைதான் நிலவுகிறது.

பணம் அளவுக்கு மிஞ்சி இருப்பதால்,
பார்க்கும் பொருள் களையெல்லாம் வெறித்தனமாக (அதான் நுகர்வு வெறி) வாங்கி விட்டு பின்னர் ஓ எல் எக்ஸ் ஸில் அடிமாட்டு விலைக்கு விற்றுக்கொண்டு ...
இருக்கும் இவர்கள்
(நல்லோர்கள், உதவி செய்து வரும் அன்பர்கள் மன்னிக்கவும்)
குறைந்தது புத்தகங்கள் வாங்கியாவது அந்தத் துறையை வதங்க விடாமல் பார்த்துக் கொள்ளலாம் ...

உங்கள் பகுதி மாணவ மாணவிகளுக்கு
பேச்சு போட்டி கட்டுரை போட்டி நடத்தி
நல்ல புத்தகங்கள் பரிசு தரலாம் ...

இவை அடியெனின் உளக்கருத்தே ...
புண் பட்டவர்கள் மன்னிக்கவும்
பண் பட்டவர்கள் நூறாண்டு காலம் வாழ்ந்து மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள் ...

அன்புடன்
கே எல் என்
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

request Re: வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை

Post by aeroboy2000 Tue Jan 30, 2018 10:32 am

வியாசனின் பாதங்களில்…
இந்தப்புத்தாண்டு முதல் ஒருவேளை என் வாழ்க்கையில் இதுவரை நான் ஏற்றுக்கொண்டதிலேயே மிகப்பெரிய பணியைத் தொடங்குகிறேன். மகாபாரதத்தை ஒரு பெரும் நாவல்வரிசையாக எழுதவிருக்கிறேன். இளவயதின் கனவு.அப்படி பல கனவுகள் தொடர்ந்து ஒத்திப்போடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இதுவும் அப்படித்தானிருந்தது.


நேற்று [டிசம்பர் 24-ஆம் தேதி] இரவில் விஷ்ணுபுரம் விழா முடிந்து வந்து சைதன்யாவிடமும் அஜிதனிடமும் பேசிக்கொண்டிருந்தபோது தற்செயலாக மகாபாரதம் பற்றிய பேச்சு எழுந்தது. நள்ளிரவுக்குப்பின்னரும் அந்த உரையாடல் நீடித்தது. பாரதத்தின் உத்வேகம் மிக்க கதையோட்டம். கண் ததும்பவைக்கும் விதிமுகூர்த்தங்கள். சைதன்யா “அப்பா எனக்காக இதையெல்லாம் எழுது” என்றாள்.
இன்று கிறிஸ்துமஸ். சிறுவயதிலிருந்தே எனக்கேயான அந்தரங்கமான கொண்டாட்டம் கொண்ட நாள் இது. நெகிழ்வும் தனிமையும் நிறைந்தவனாக இருப்பேன். காலையில் எழுந்ததும் சட்டென்று தோன்றியது, ‘இந்தநாளில் மகாபாரதத்தை தொடங்கினாலென்ன?”
திட்டத்தை நினைத்தால் எனக்கு பிரமிப்பாகவே இருக்கிறது. ஐநூறு பக்கங்கள் கொண்ட பத்து நாவல்கள். இன்றிலிருந்து ஒவ்வொருநாளும் ஓர் அத்தியாயம் என பத்துவருடங்கள். ஆனால் எந்த பெரும் பயணமும் ஒரு காலடியில்தான் தொடங்குகிறது. தொடங்கிவிட்டால் அந்தக் கட்டாயமும், வாசகர்களின் எதிர்வினைகளும் என்னை முன்னெடுக்குமென நினைக்கிறேன். இப்போது தொடங்காவிட்டால் ஒருவேளை இது நிகழாமலேயே போய்விடக்கூடும்.
நாவல்வரிசைக்கான பொதுத்தலைப்பு ‘வெண்முரசு’. ஏன் இந்தத் தலைப்பு என சொல்லத்தெரியவில்லை, தலைப்பு தோன்றியது, அவ்வளவுதான். அறத்தின் வெண்முரசு. எட்டு சுவைகளும் இணைந்து ஒன்றாகும் சாந்தத்தின் நிறம்கொண்ட முரசு. அந்தப்பெருநாவலின் முதல் நாவல் ‘முதற்கனல்’.
இது ஒரு நவீன நாவல். தொன்மங்களையும் பேரிலக்கியங்களையும் மறு ஆக்கம் செய்யும் இன்றைய இலக்கியப்போக்குக்குரிய அழகியலும் வடிவமும் கொண்டது. ஓர் இலக்கிய வாசகனுக்கு இது உள்விரிவுகளை திறந்துகொண்டே செல்லக்கூடும். ஆனால் எந்த ஒரு எளிய வாசகனும் உணர்ச்சிகரமான ஈடுபாட்டுடன் வாசிக்கக்கூடியதாகவே இது இருக்கும். மகாபாரதத்தின் மகத்தான நாடகத்தருணங்களையே அதிகமும் கையாளும். அதன் கவித்துவத்தையும் தரிசனத்தையும் தீண்டிவிடவேண்டுமென்ற கனவுடன் இது எழும். வியாசனெழுதிய ஒவ்வொன்றையும் இன்று இங்கே என உள்வாங்கிக்கொள்ளவேண்டுமென இது முயலும்
மரபிலிருந்து ஒரு வினா எழலாம். வியாசபாரதத்தை இப்படி மீறிச்செல்ல அனுமதி உண்டா என. புராணங்கள் மெய்மையைச் சித்தரிப்பதற்கான படிமத்தொகையையே நமக்களிக்கின்றன. ஆகவே அனைத்துப் புராணங்களும் பல்லாயிரம் வருடங்களாக தொடர்ந்து மறு ஆக்கம் செய்யப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. மகாபாரதக்கதையை மறு ஆக்கம்செய்யாத பெருங்கவிஞர்களே இந்தியாவில் இல்லை என்பார்கள்.
இந்நாவல் மகாபாரதத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டதல்ல. மகாபாரதக் கதைகளையும் கதைமாந்தர்களையும் வெவ்வேறு திசைகளில் வளர்த்தெடுத்த பிற புராணங்களையும் கருத்தில்கொண்டிருக்கிறது. மகாபாரதத்துக்குப்பின் குறைந்தது ஈராயிரம் வருடங்கள் கழித்து எழுதப்பட்ட பாகவதம், மேலும் ஐநூறு வருடங்கள் கழித்து உருவான தேவிபாகவதம் ஆகியநூல்களின் மகாபாரதக் கதைகளும் பல நாட்டார் பாரதக்கதைகளும் இந்நாவலில் உள்ளன என்பதை வாசகர்கள் காணலாம்.
நண்பர்களில் ஒரு சாரார் நான் தொடர்கள் எழுதும்போது ‘எடுத்து வச்சிருக்கேன். படிக்கணும்’ என்பார்கள். இது அவர்களுக்குரிய நாவல் அலல. அவர்கள் ஒருபோதும் வாசிக்கப்போவதில்லை. இது ஒவ்வொருநாளும் கொஞ்சமேனும் வாசிக்கக்கூடியவர்களுக்கான படைப்பு. ஒவ்வொருநாளும் வாசித்தவற்றைப்பற்றி தியானிக்கக்கூடியவர்களுக்கானது. அவர்களின் வாழ்க்கையை மேலும் சிலவருடங்கள் வியாசனின் மானுடநாடகம் ஒளியேற்றுவதாக! அவர்கள் தங்கள் வியாசனை எனது வியாசனிலிருந்து கண்டுகொள்ள நேர்வதாக!
அன்புடன்
ஜெயமோகன்
25-12-2013
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

request Re: வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை

Post by aeroboy2000 Tue Jan 30, 2018 10:36 am

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 1


Brand: கிழக்கு பதிப்பகம்
Product Code:
Authors: ஜெயமோகன் (ஆசிரியர்)
Edition: 1
Year: 2015
Format: Paper Back
Language: Tamil
Availability: In Stock
(Rs 400)

முதற்கனல் (1) - வெண்முரசு நாவல்(மகாபாரதம் நாவல் வடிவில்) - ஜெயமோகன் :
தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதியிழைக்கப்பட்டவர்களின் கண்ணீர் காய்ந்து மறைவதேயில்லை. கண்ணீர்த்துளி ரத்தப்பெருக்காக மாறியதன் கதையே மகாபாரதம் எனலாம்.

ஆனால் அது அநீதியா என்பது மிகமிகச் சிக்கலான வினா. அது மகத்தான அறச்சிக்கலின் தருணம் என்று மட்டுமே சொல்லமுடியும். ஆகவேதான் மகாபாரதம் முடிவடையாத அறப்புதிர்களின் களமாக இன்றும் உள்ளது. அதில் நல்லவர்களோ கெட்டவர்களோ இல்லை. மாமனிதர்களின் மகத்தான இக்கட்டுகளே உள்ளன. அந்த களத்தைத் தொடங்கிவைக்கும் நாவல் இது.

மகாபாரதம் இந்தியப்பண்பாட்டின் ஒட்டுமொத்த ஞானமும் ஒரே நூலில் திரண்டிருப்பது. ஆகவேதான் அது ஐந்தாம் வேதம் என அழைக்கப்படுகிறது. இந்நூல் அந்த ஞானக்களஞ்சியத்திற்குள் செல்லும் தோரணவாயில்.

வடிவ அளவில் இது ஒரு முழுமையான தனிப்படைப்பு. இதன் மொழியும் கட்டமைப்பும் இதற்குள்ளேயே நிறைவை அடைகின்றன. ஆனால் வெண்முரசு என்ற பெயரில் மகாபாரதத்தை ஜெயமோகன் விரிவாக எழுதிவரும் நாவல்தொடரின் தொடக்கநாவலும்கூட.

இயன்றவர்கள் பிரிண்ட் புத்தகம் வாங்கி ஆதரிக்கவும்...

(https://www.mediafire.com/file/23r98ir27vun53e/Venmurasu-Nool-1-Mutharkanal.pdf)




http://www.mediafire.com/file/23r98ir27vun53e/Venmurasu-Nool-1-Mutharkanal.pdf

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Last edited by aeroboy2000 on Tue Jan 30, 2018 11:03 am; edited 1 time in total
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

request Re: வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை

Post by aeroboy2000 Tue Jan 30, 2018 10:40 am

மழைப்பாடல்(2) - வெண்முரசு நாவல்


Brand: கிழக்கு பதிப்பகம்
Product Code:
Authors: ஜெயமோகன் (ஆசிரியர்)
Edition: 1
Year: 2015
Page: 1016
Format: Paper Back
Language: Tamil
Availability: In Stock
(Rs. 900)

மழைப்பாடல்(2) - வெண்முரசு நாவல்(மகாபாரத நாவல் வடிவில்):
மகாபாரத்தின் துன்பியல் உச்சத்துக்கு காரணமாக அமைந்த அடிப்படை மனநிலைகள் எப்படி உருவாகி வந்தன என்பதை ஆராயும் நாவல் இது. புயல்களால் அலைக்கழிக்கப்படும் பாலைவனமான காந்தாரம் , மழைபெய்தபடி இருக்கும் புல்வெளியான யாதவர்நாடு . காந்தாரியும் குந்தியும் இருமுனைகளாக நின்று மகாபாரதத்தின் பிரமாண்டமான் சதுரங்கக் களத்தை அமைப்பதை விரிவாகச் சித்தரிக்கிற்து. அவர்களுக்குப் பின்னால் அம்பிகையும் அம்பாலிகையும் சத்யவதியும் நின்றுகொண்டிருக்கிறார்கள் அன்னையர் உணர்ச்சிக்களத்தில் நிகழ்த்தி முடித்த போரைதான் பின்னர் மைந்தர் சமர்களத்தில் நிகழ்த்தினார் என்று சொல்லலாம். ஒவ்வொரு சிற்றோடையும் ஒன்றுடன் ஒன்று கலந்து நதியாக மாறி பெருகிச்செல்லும் மாபெரும் சித்திரத்தை உணர்ச்சிகரமான தருணங்கள் மூலமும், அழகிய கவிதுவம் வழியாகவும் காட்டுகிறது மழைப்பாடல். பாரதத்தின் நிலம், சமூகங்கள் வாழ்க்கைமுறை, சிந்தனைமுறைகள் அனைத்தையும் உள்ளடக்கி விரியும் பெருநாவல்.




இயன்றவர்கள் பிரிண்ட் புத்தகம் வாங்கி ஆதரிக்கவும்...
(https://www.mediafire.com/file/kuosx2ho6m2vswk/Venmurasu-Nool-2-MazhaiPadal.pdf)





https://www.mediafire.com/file/kuosx2ho6m2vswk/Venmurasu-Nool-2-MazhaiPadal.pdf

:வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:


Last edited by aeroboy2000 on Tue Jan 30, 2018 11:02 am; edited 1 time in total
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

request Re: வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum