புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆரோபம் Poll_c10ஆரோபம் Poll_m10ஆரோபம் Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
ஆரோபம் Poll_c10ஆரோபம் Poll_m10ஆரோபம் Poll_c10 
46 Posts - 40%
prajai
ஆரோபம் Poll_c10ஆரோபம் Poll_m10ஆரோபம் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
ஆரோபம் Poll_c10ஆரோபம் Poll_m10ஆரோபம் Poll_c10 
4 Posts - 3%
Jenila
ஆரோபம் Poll_c10ஆரோபம் Poll_m10ஆரோபம் Poll_c10 
2 Posts - 2%
kargan86
ஆரோபம் Poll_c10ஆரோபம் Poll_m10ஆரோபம் Poll_c10 
1 Post - 1%
jairam
ஆரோபம் Poll_c10ஆரோபம் Poll_m10ஆரோபம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஆரோபம் Poll_c10ஆரோபம் Poll_m10ஆரோபம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆரோபம் Poll_c10ஆரோபம் Poll_m10ஆரோபம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஆரோபம் Poll_c10ஆரோபம் Poll_m10ஆரோபம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆரோபம் Poll_c10ஆரோபம் Poll_m10ஆரோபம் Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
ஆரோபம் Poll_c10ஆரோபம் Poll_m10ஆரோபம் Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
ஆரோபம் Poll_c10ஆரோபம் Poll_m10ஆரோபம் Poll_c10 
8 Posts - 5%
prajai
ஆரோபம் Poll_c10ஆரோபம் Poll_m10ஆரோபம் Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஆரோபம் Poll_c10ஆரோபம் Poll_m10ஆரோபம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆரோபம் Poll_c10ஆரோபம் Poll_m10ஆரோபம் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
ஆரோபம் Poll_c10ஆரோபம் Poll_m10ஆரோபம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆரோபம் Poll_c10ஆரோபம் Poll_m10ஆரோபம் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
ஆரோபம் Poll_c10ஆரோபம் Poll_m10ஆரோபம் Poll_c10 
1 Post - 1%
jairam
ஆரோபம் Poll_c10ஆரோபம் Poll_m10ஆரோபம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோபம்


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue May 30, 2017 9:23 am

ஆரோபம் MIS1gjEuTLWRDqsHhiJG+kai1


அத்யாரோபம் என்றும் அபவாதம் என்றும் சொல்லும்
உத்தியால் பந்தம் வீடு என்று உணரும் வேதாந்தம் எல்லாம்
மித்தையாம் ஆரோபத்தால் பந்தமாம் அபவாதத்தால்
முக்தியாம் இவ்விரண்டில் முந்தி ஆரோபம் கேளாய்
--கைவல்ய நவநீதம் -19

அத்தியாரோபம் என்றும் அபவாதம் என்றும் சொல்லும் உத்தியால் பந்தம், வீடு என்று உரைக்கும் வேதாந்தமெல்லாம். மித்தையாம் (இல்லாத) ஆரோபத்தால் பந்தமாம். அபவாதத்தால் முத்தியாம். இவ்விரண்டில் முந்தி ஆரோபம் கேளாய்.


வேதாந்த தத்துவம் பரிபூரண ஞானத்தை இரண்டு படிவகைகளில் வைத்து விளக்கும் .
1) ஆரோபம்எனும் நிலையற்ற மாயநிலைப் பொருள்களை
பற்றிய தத்துவ விளக்கம் .
2) அபவாதம் எனும் நிலைத்த ( பரம் பொருள் ) பொருள் பற்றிய தத்துவ விளக்கம் .

ஒன்றன்மேல் மற்றொன்றன் தன்மையை யேற்றிக்கூறுவதை ஆரோபம் என்பர் .
இருட்டில் சுருண்டு கிடைக்கும் கயிற்றை பாம்பு என நினைப்பது ஆரோபம்.
ஆரோபம் எப்போது வரும்?
அந்த விஷயம் முதலில் இருக்கவேண்டும் . இது ஆதாரம்.என்பது
இது மேலே அதனுடைய உண்மை சொரூபம் தெரியாம ஒரு மறைப்பு இருக்கவேண்டும். இதுவே ஆரோபம்

கயிறாக தோன்றும் பிரமம் சாமான்ய ஆதாரம். பாம்பாக தோன்றும் கயிறு விசேட ஆதாரம்.

சுருக்கமாக சொன்னால் ,அத்தியாரோபம் = ஆரோபம். என்பது இல்லூஷன் (illusion).எனப்படும் .

அபவாதம் எனும் நிலைத்த உண்மைகளே பந்த பாசங்களில் இருந்து உயிர்களை விடுவித்து முக்தி எனும் பிறவா நிலைக்கு அழைத்து செல்லும் .
இப்போது ஆரோபம் என்பதை உங்களுக்கு விளக்குகிறேன் என்று அடுத்தப்பாடலுக்கு முன்னுரை கூறுகிறார் ஆசிரியர் .
--


அண்ணாமலை சுகுமாரன்
30/5/17

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Jun 02, 2017 9:10 am


'கைவல்ய நவநீதம்' பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த, தாண்டவராயன் சுவாமிகளால் அருளிச் செய்யப் பெற்ற அத்வைத தத்துவநூல் ஆகும்.

'கைவல்யம்' என்ற சொல் முக்தி அல்லது மோட்சம் என்று பொருள்படும். 'நவநீதம்' என்பது வெண்ணெயைக் குறிக்கும்.

கைவல்ய நவநீதம் என்ற நூல் தலைப்பை, வெண்ணெய் போலத் திரட்டித் தரப்பட்டமுக்திக்கான வழி என நேராகப் பொருள் கொள்ளலாம்.

வேதாந்தம் என்ற பாற்கடலில் இருந்து, முந்தய நூல்களாகிய குடங்களில் நிரப்பி வைத்த ஞானப் பாலை, சற்குருவின் கருணை எனும் தீயில் காய்ச்சி, அநுபூதி என்னும் மத்தால் கடைந்து,
கைவல்யம் என்னும் வெண்ணெயைத் திரட்டி அளித்ததாக நூலாசிரியரே குறிப்பிடுகின்றார்.
உள்ளங்கை நெல்லிக்கனி போல மேலான தத்துவ கருத்துக்களை வெண்ணையாக திரட்டித் தருகிறார்
அடுத்து அடுத்தப்பாடலிலும் ஆரோபம் குறித்து என்ன கூறுகிறார் என்று பார்ப்போம் .

இப்படி போல நாம ரூபங்கள் இரண்டும் இன்றி
ஒப்பமாய் இரண்டு அற்று ஒன்றாய் உணர் ஒளி நிறைவாய் நிற்கும்
அப்பிரமத்தில் தோன்றும் ஐம்பூத விகாரம் எல்லாம்
செப்பு கற்பனையினாலே செனித்தன என்றறிந்து கொள்ளே !
கைவல்ய நவநீதம் --21

ஒருநாமம் ஓர்உருவம் ஒன்றுமில் லார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ"
என்கிறார் மாணிக்க வாசகர்,
இவ்வாறு உருவமோ பெயரோ இல்லாமல் உணர்வாகவும் ,ஒளியாகவும்
எங்கும் நீக்கமற நிறைந்த பரம்பொருளே பிரமம் .

பிரிக்கமுடியாத இந்த பிரம்மத்தில் இருந்தே நிலம் ,நீர் ,காற்று ,நெருப்பு ஆகாயம்
எனும் ஐம்பூதங்களும் வெவேறு மாயத்தோற்றங்களாக உருவாயின .

பிரிக்கமுடியாத மண் என்ற மூல பொருளில் இருந்து பானை ,சட்டி , குவளை
என பல பொருள்கள் பல்வேறு உருவங்களில் பொருள்கள் உருவாக்குவது போல் ,
பரம்பொருள் எனும் இறை இந்த பூதங்களை உருவாக்கி அதன்மூலம்
பஞ்சீகரணம் எனும் வித்தை மூலம் உலகை உருவாக்கியது .
இதுவே ஆரோபம் என்போம் .

அண்ணாமலை சுகுமாரன்
2/6/௧௭

ஆரோபம் RhxRdpgySUq7IxhCqjSb+kaii9

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 03, 2017 4:55 am

பிரிக்கமுடியாத மண் என்ற மூல பொருளில் இருந்து பானை ,சட்டி , குவளை
என பல பொருள்கள் பல்வேறு உருவங்களில் பொருள்கள் உருவாக்குவது போல் ,
பரம்பொருள் எனும் இறை இந்த பூதங்களை உருவாக்கி அதன்மூலம்
பஞ்சீகரணம் எனும் வித்தை மூலம் உலகை உருவாக்கியது .
இதுவே ஆரோபம் என்போம் .

நன்றி
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 03, 2017 5:01 am

ஆரோபம் 3838410834 ஆரோபம் 1571444738

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Thu Jun 08, 2017 9:16 am


ஆரோபம் VrCwilfRcSm1v7XFsnWA+KAIVALYAM



அதுதானெப்படி என்றக்கா லநாதியாஞ் சீவரெல்லாம்
பொதுவான சுழுத்திபோல பொருந்து மவ்வியந்தன்னில்
இதுகால தத்துவப் பேரீசனுட் பார்வையாலே
முதுமூல சுபாவம்விட்டு முக்குணம் வியத்தமாமே
கைவல்ய நவநீதம் -22
அதுதான் எப்படி என்றக்கால் அநாதியாம் சீவரெல்லாம்
பொதுவான சுழுத்திபோலப்பொருந்தும் அவ்வியத்தம் தன்னில் இது காலத் தத்துவப் பேர் ஈசனுட பார்வையாலே !
முதுமூல சுபாவம் விட்டு முக்குணம் வியத்தமாமே !



இத்தகைய கற்பனை எப்படி எழுத்ததெனில் ,
ஆதியும் அந்தமும் இல்லாத நிலையான பரம் பொருளான பிரமத்துள் உறக்கநிலையில் இருக்கும் விதையைப்போல
அனைத்து உயிர்களையும் தன்னுள் பொதித்து வைத்திருக்கிறது .
பிரம்மத்தில் பொதிந்து கிடைக்கும் தத்துவங்களில் ஒன்றான காலம் உயிர்களின் யோகநித்திரையைக் கலைத்து , ஆணவம் கன்மம் மாயை
எனும் மும்மலங்களை உயிருடன் இணைத்து இப்புவியில் பிறப்பெடுக்க வைத்து ,
பரம்பொருளின் அருட்சொரூபமான ,ஈஸ்வரத் தத்துவம் அந்த உயிர்களுக்குள் ஆன்மாவாக நிறைந்து ,

சத்துவகுணம் ,இரசோ குணம் , தமோ குணம் என்ற
மூன்று குணங்களுடன்அந்த உயிரை செயல்படவைக்கிறது .

எக்குணமும், இல்லாத ஆன்மா முக்குணத்துடன்
இயங்கி மாயையின் வளர்ச்சிக்கு காரணம் ஆகிறது .

இந்தப்பாடலுக்கான பொருளை முடிந்தவரை எளிமையாகவே கூற முயன்றிருக்கிறேன் .
நண்பர்கள் சிலர் , படிக்க சற்று கடினமாக இருப்பதாக கூறுகிறார்கள் .இயன்றவரை இன்னமும் எளிமைப் படுத்த
முயற்சிக்கிறேன் .
மூன்று நாட்களாக குடந்தை வரை ஒரு பயணம் ,நிறைய
புதிய நடப்புகள் அனுபவங்கள்கிடைத்தது
விரைவில் பகிர்கிறேன்
அண்ணாமலை சுகுமாரன்
8/6/17

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun Jun 11, 2017 8:41 am

தமிழில் நிறைய பழமையான வேதாந்த ,தத்துவ நூல்கள் உள்ளன .அவர்களின் பெரும்பாலானவற்றின் பெயர்களைக் கூட தற்போது நாம் அறிந்திராதது தமிழின் துர்பாக்கியம்
பலரும் வேதாந்தமும் தத்துவமும் இளமையில் அறியவேண்டிய அவசியமில்லை என நினைக்கிறார்கள் .
, நமக்கு இளமையும் வலிமையையும் இருக்கும் போதே வாழ்வின் போக்கில் வலிமைபெற உதவும் உண்மைகளைத் தெளிவாக அறிந்து கொள்வது ,வாழ்வில் சந்திக்கும் சிக்கல்களை விடுவிக்க உதவும் .
உண்மை எது பொய்மை எது என்று அறியும் தெளிவு
கிடைக்கும் .
இந்த தொடர் கைவல்லிய நவநீதம் எனும் பழமையான
நூலின் ஒரு சுருக்கமான அறிமுகம் .
அறிமுகத்திற்குப்பிறகு அந்த நூல் நவநீதம் போல் நமக்கு
இனிக்க ஆரமிக்கும் .
இன்று கூட ஒரு நண்பர் தொலைபேசியில் அழைத்தார் .
கட்டுரை படிக்க கடினமாக இருப்பதாகக் கூறினார் .
தத்துவத்தில் வரும் பல கலை சொற்களைஎழுதும் போது எளிமைக்கருதி மாற்ற இயலாது .இதே சொற்கள் அனைத்து தத்துவ நூல்களிலும் ஒரேவிதமாக இடம் பெறும் ,இதில் மாற்றி உரைத்தால் மற்றநூல்களை படிக்கும் போது தெளிவு இராது .
நான் மிகவும் சுருக்கமாகவே எழுதுகிறேன் .தயை கூர்ந்து
பொறுமையாக அனைத்து சொற்களையும் உள்வாங்கிப்படித்தால் தானே கூறப்பட்டிருக்கும் பொருள் தங்களுக்கு விளங்கும் .
புரியவேண்டும் என்பதில் எனக்கும் அக்கறை உண்டு ,
புரியாத ஒன்றை எழுதுவதில் என்ன பயன் இருக்கிறது ?

இவைகள் தமிழில் உள்ள தத்துவ நூல்களில் சில

ஜீவப்பிரம்ம ஐக்கியம்
ஞானவாசிட்டம்
கைவல்லிய நவநீதம்
சசி வர்ண போதம்
வேதாந்த சூளாமணி
விசார சாகரம்
அஷ்டாவக்ர கீதை -அஷ்டாவக்ரர்
விவேக சூடாமணி
விசார சந்திரோதயம்
சொரூப சாரம்
தத்துவாமிர்தம் -தத்துவராயர்
ரிபு கீதை
வாசுதேவ மனனம்
ஒழிவில் ஒடுக்கம்
முத்தி சோபானம்
ஞான வெட்டியான்
ஜீவன் முக்திப் பிரகரணம்
விருத்திப் பிரபாகரம்
தத்துவ அனுசந்தானம்
அத்துவித உண்மை
வேதாந்த பரிச்சேதம்
பிரபோத சந்திரோதயம்
குறுந்திரட்டு -தத்துவராயர்
நாநா ஜீவ வாதக் கட்டளை
மகாராஜா துறவு
வார்த்திகாமிர்தம்
பெருந்திரட்டு -தத்துவராயர்
வேதாந்த பரிபாசை


இனி கைவல்லிய நவநீதம்-23 கூறுவதைக் காணலாம்



உத்தம் வெளுப்புச் செம்மை உரைத்திடும் கருப்பும் ஆகும்
சத்துவ குணத்தினோடு ரசோகுணம் தமோ குணந்தான்
சுத்தமோடு அழுக்கு இருட்டாச் சொல்லும் முக்குணமும்
மூன்றாம்
ஒத்துளவேனும் தம்முன் ஒரு குணம் அதிகமாமே
-கைவல்லிய நவநீதம்-23
சத்துவ குணம் என்னும் உத்தம குணம் வெண்மை நிறத்திற்கு ஒப்பானது .
வேகம் கொண்ட ரஜோ குணம் சிவப்பு நிறத்திற்கு ஒப்பானது .
உலகஇன்பங்கள்மீதுவெறிகொண்டுஅலையும் தமோகுணம் கருமை நிறத்திற்கு ஒப்பானது .

இந்த மூன்று குணங்களும் உலகில் வாழும் உயிர்களில்
வெவ்வேறு விகிதத்தில் இடம்பெற்றிருக்கும் .

சத்துவ குணம் அதிகம் உள்ளவர்கள் அன்பு ,கருணை ,
நிதானம் அமைதி இவ்வைகளை கொண்டவர்களாகவும் ,
இறை வழி ,ஞான நாட்டம் கொண்டவர்களாகவும் இருப்பர் .

வேகம் நிறைந்த ரஜோகுணம் மிக்கவர்கள் மற்றவர்களை அடக்கியாள விரும்புவார்கள் ,அதிகாரம் புகழ் ,பெருமை ,மற்றவர்களை தவறாக புரிந்துகொண்டு கோபம் கொள்ளல் ,கடும் முயற்சி , வெற்றி வேட்க்கை என ஆளுமைச் செயல்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பர் .
மந்த நிலை கொண்ட தாமசகுணம் அதிகம் கொண்டவர்கள்
இகலோக இச்சைகளில் வேடிக்கை கொண்டவர்களாக இருப்பர் .உணவு ,மது இவைகளின் மேல் வேட்க்கை ,உழைப்பை விரும்பாமை ,முதலிய குணங்கள் மிகுந்திருக்கும் .
இந்த மூன்று குணங்களும் இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை .ஆயினும் இந்த மூன்று குணங்களும் பல்வேறு விகிதத்தில் இடம்பெற்றிருக்கும் .
ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு குணம் மிகுந்திருக்கும் .
ரஜோ குணம் செயல் நிறைந்தது ,கவர்ச்சி கொண்டது .எனினும் அது வினைகளினால் வரும் எதிர்வினைகளை
ஏற்படுத்தும் கர்ம பதிவுகளை உண்டாக்கும் .
ஆனால் செயல் குறைந்த தாமஸகுணமும் விரும்பத்தக்கது அல்ல .அது உணவில்லாமல் பட்டினி இருப்பதை[போன்றது .விரதம் ஆகாது நமது வாழ்க்கையின் போக்கு ஒரு விரதமாக இருக்கவேண்டும் .
இயன்ற வரை சத்துவம் எனும் உயர் குணங்களை படிப்படியாக நம்முள் வளர்த்துக்கொள்வதே உசிதம்
அண்ணாமலை சுகுமாரன்
11/6/17ஆரோபம் XeVZ1lYSlqVrcYussKnO+9

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Jun 17, 2017 9:41 pm


ஆரோபம் 4JVRvDXeSOmRvmmKJvp8+nool


பிறப்பின் தோற்றம் -

ஒருவழி இதுவாம் இத்தை ஒருவழி வேறாச் சொல்வர்
மருவும் அவ்வியத்தந்தானே மக தத்துவமாகும் அந்த
அருள் மகத்துவம் தான் அகங்காரம் ஆகும் என்றும்
கரு அகங்காரம் மூன்றாகக் காட்டிய குணமாம் என்றும்
கைவல்ய நவநீதம் -24

பிரபஞ்ச பிறப்பு விதிகளில் இதை ஒன்றாகக்கூறுவார்கள்
மேலும் இத்தை ஒரு வழி வேறாய் சொல்வர்.
பிறப்பெடுக்கும் சீவர்களிடம் மருவும் அல்லது அடங்கியுள்ள அவ்வியத்தந்தானே மகதத்துவமாகும்
அந்த அருள் மக தத்துவந்தான் அகங்காரமாகும் என்றும், கருவ என்பது பிரபஞ்ச உற்பத்திக்கு காரணமான அகங்கார தத்துவம்அகங்கார மூன்றாக காட்டிய குணமாம் என்றும் சொல்லுவார்கள்

இதை சற்று எளிதாகப்பார்க்கலாம்
மகத் எனும் ஆன்மத் தத்துவம் சுழுத்தி எனும் ஆழ்ந்த உறக்கத்தில் பரம்பொருள் எனும் பிரமத்துடன் ஐக்கியப்பட்டிருக்கும் போது அவ்வியத்தம் எனும் மாசு இல்லாத நிலையில் இருக்கிறது .
காலம் எனும் பிரகிருதி தத்துவதால் மகத் எனும் ஆன்மத் தத்துவம்எனும் விதை தூண்டப்படும்போது ,விதை முளைத்து ஐம்பூதங்களுடன் இணைந்து வளரத்தொடங்கியதுபோல் ,அது மும்மலங்களுடன் ,மூன்று குணங்களுடன் மூன்று காலங்களுடன் பிணைந்து வளரத்தொடங்கியது
இதனால் அவ்வியத்தம் என்ற மாசுபடாத நிலையில் இருந்த ஆன்மா ,வியக்தம் எனும் மும்மல ,முக்குண மாசுகளுடன் ,
நனவு , கனவு ,கனவற்றை ஆழ்ந்த நித்திரை எனும் மூன்று அவஸ்த்தைகளுடன் பிறப்பு இறப்பு எனும் போராட்ட
சுழற்ச்சியை தொடங்குகிறது .
இத்தகைய எளிய விளக்கத்தை தந்தவர் கவனகர் கனக சுப்புரத்தினம் அதை சிறிய மாறுதலுடன் நான் தந்திருக்கிறேன் .
அண்ணாமலை சுகுமாரன்
17/6/17





sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Jun 17, 2017 9:41 pm


ஆரோபம் 4JVRvDXeSOmRvmmKJvp8+nool


பிறப்பின் தோற்றம் -

ஒருவழி இதுவாம் இத்தை ஒருவழி வேறாச் சொல்வர்
மருவும் அவ்வியத்தந்தானே மக தத்துவமாகும் அந்த
அருள் மகத்துவம் தான் அகங்காரம் ஆகும் என்றும்
கரு அகங்காரம் மூன்றாகக் காட்டிய குணமாம் என்றும்
கைவல்ய நவநீதம் -24

பிரபஞ்ச பிறப்பு விதிகளில் இதை ஒன்றாகக்கூறுவார்கள்
மேலும் இத்தை ஒரு வழி வேறாய் சொல்வர்.
பிறப்பெடுக்கும் சீவர்களிடம் மருவும் அல்லது அடங்கியுள்ள அவ்வியத்தந்தானே மகதத்துவமாகும்
அந்த அருள் மக தத்துவந்தான் அகங்காரமாகும் என்றும், கருவ என்பது பிரபஞ்ச உற்பத்திக்கு காரணமான அகங்கார தத்துவம்அகங்கார மூன்றாக காட்டிய குணமாம் என்றும் சொல்லுவார்கள்

இதை சற்று எளிதாகப்பார்க்கலாம்
மகத் எனும் ஆன்மத் தத்துவம் சுழுத்தி எனும் ஆழ்ந்த உறக்கத்தில் பரம்பொருள் எனும் பிரமத்துடன் ஐக்கியப்பட்டிருக்கும் போது அவ்வியத்தம் எனும் மாசு இல்லாத நிலையில் இருக்கிறது .
காலம் எனும் பிரகிருதி தத்துவதால் மகத் எனும் ஆன்மத் தத்துவம்எனும் விதை தூண்டப்படும்போது ,விதை முளைத்து ஐம்பூதங்களுடன் இணைந்து வளரத்தொடங்கியதுபோல் ,அது மும்மலங்களுடன் ,மூன்று குணங்களுடன் மூன்று காலங்களுடன் பிணைந்து வளரத்தொடங்கியது
இதனால் அவ்வியத்தம் என்ற மாசுபடாத நிலையில் இருந்த ஆன்மா ,வியக்தம் எனும் மும்மல ,முக்குண மாசுகளுடன் ,
நனவு , கனவு ,கனவற்றை ஆழ்ந்த நித்திரை எனும் மூன்று அவஸ்த்தைகளுடன் பிறப்பு இறப்பு எனும் போராட்ட
சுழற்ச்சியை தொடங்குகிறது .
இத்தகைய எளிய விளக்கத்தை தந்தவர் கவனகர் கனக சுப்புரத்தினம் அதை சிறிய மாறுதலுடன் நான் தந்திருக்கிறேன் .
அண்ணாமலை சுகுமாரன்
17/6/17





Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக