புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_c10ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_m10ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_c10ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_m10ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_c10ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_m10ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_c10 
181 Posts - 77%
heezulia
ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_c10ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_m10ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_c10ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_m10ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_c10 
10 Posts - 4%
prajai
ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_c10ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_m10ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_c10ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_m10ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_c10ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_m10ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_c10 
3 Posts - 1%
Barushree
ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_c10ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_m10ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_c10ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_m10ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_c10 
2 Posts - 1%
nahoor
ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_c10ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_m10ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_c10ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_m10ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜேந்திர சோழனின் பிறந்த நாள்


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Jun 09, 2017 9:46 pm



கங்கை கொண்ட ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை சோழர் வரலாறு’என்ற நூலை எழுதிய கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியும், ‘பிற்காலச் சோழர் வரலாறு’ என்ற நூலை எழுதிய சதாசிவப் பண்டாரத்தாரும் மார்கழி மாதத்து திருவாதிரை எனக் கூறியிருந்தனர்

இவ்வாறு கூறுவதற்கு ஆதாரமாகசாஸ்திரியாரும் பண்டாரத்தாரும் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் மார்கழித் திருவாதிரையாக இருக்கலாம் எனக் கணிக்க, அவர்கள் கண்ட சான்று திருவொற்றியூர் சிவாலயத்தில் உள்ள ஒரு கல்வெட்டுதான் .
ராஜேந்திர சோழனின் 31-ம் ஆட்சியாண்டான கி.பி.1043-ல் சதுரானன பண்டிதர் என்பவர் அந்தக் கோயிலில் 150 காசுகளை முதலீடு செய்து, மார்கழித் திருவாதிரை நாள் விழா கொண்டாட ஏற்பாடு செய்தார்.
அதுபற்றிக் கூறும் அந்தக் கல்வெட்டு, ‘திருவொற்றியூருடைய மகாதேவர்க்கு உடையார் ராஜேந்திர தேவர் திருநாள் மார்கழித் திருவாதிரை நாளன்று நெய்யாடி அருள வேண்டும் மிடத்துக்குச் சதுரானன பண்டிதன் தேவர் பண்டாரத்து வைத்த காசு நூற்று ஐம்பது’ என்று கூறுகிறது.

ஆனால் தக்கோலம் என்ற ஊர் சென்னைக்கு அருகேஉள்ளது. இவ்வூர் திருவூறல். என்று பண்டை நாளில் அழைக்கப்பட்டிருந்தது அங்கு இருக்கும் சிவாலயத்தில் உள்ள ராஜேந்திர சோழனின் மூன்றாமாண்டுக் கல்வெட்டு ஒன்று உடையார் ராஜேந்திர சோழ தேவர் திருநாள் திருவாதிரை நாள் எழுந்தருளும் திங்கட் திருவிழாக்களுக்குரிய (12 மாதத் திருவிழாக்களுக்கும் உரிய ) நிவந்தங்கள் பற்றி விவரிக்கிறது.
இந்தக் கல்வெட்டு ‘தென்னிந்தியக் கல் வெட்டுச் சாசனங்கள்’ தொகுதி 5-ல் 1378-ம் சாசனமாக இந்திய அரசின் கல்வெட்டுத் துறையால் வெளி யிடப்பட்டுள்ளது.

இதனை நோக்கும்போது மாதந்தோறும் வரும் திருவாதிரை நாளை ‘ராஜேந்திர சோழன் திருநாள்’ என்றபெயரில் தொடர்ந்து கொண்டாடப்பட்டிருப்பதை
அறிகிறோம்.

இதே போன்று அரியலூர் மாவட்டம் திருமழபாடி கோயிலில் உள்ள ராஜாதிராஜ சோழனின் 4-ம் ஆண்டு கல்வெட்டில் மாதந்தோறும் ‘ராஜேந்திர சோழ தேவர் திருநட்சத்திரத்துத் திருவாதிரைத் திருநாள்’ என்ற பெயரில் அவ்விழா கொண்டாடப்பட்ட குறிப்பு உள்ளது.

இச் செய்தியை ‘தென்னிந்தியக் கல்வெட்டுச் சாசனங்கள்’ தொகுதி 5-ல் உள்ள 633-ம் சாசனம் விவரிக்கின்றது.
எனவே, ஒரு ஆண்டுக்குரிய 12 மாத ஆதிரை நாட்களும் ‘ராஜேந்திர சோழன் திருநாள்’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டிருக்கிறது

நாம் முதலில் கண்ட திருவொற்றியூர் கல்வெட்டுக் குறிப்பிடும் மார்கழி மாதத்துத் திருவாதிரை ராஜேந்திர சோழன் திருநாளாகக் கொண்டாடப்பட்டது என்ற குறிப்பைக் கொண்டு அதுதான் அவர் பிறந்த மாதம் எனக் கொள்ள முடியாது.
மேலும் சிவபெருமான் ஆதிரை நாளுக்கு உரியவர் என்பதைச் பழைய தமிழ் நூலான முத்தொள்ளாயிரம் வாழ்த்துப் பாடலில், ‘ஆதிரையான் ஆதிரையான் என்றென்று அயருமால் ஊர்திரை மேலி உலகு’ என்று கூறுகிறது.
தொடர்ந்து பண்டைக்காலம் முதல் இன்றளவும் அனைத்து சிவாலயங்களிலும் மார்கழித் திருவாதிரை நாளை ஆருத்ரா தரிசனம் என்ற பெயரில் ஆடவல்லான் உலா செல்லும் திருநாளாகக் கொண்டாடிவருவது தமிழர் மரபாகும்
பின் எவ்வாறு ராஜேந்திர சோழனின் சரியான பிறந்த நாளை அறிவது என்ற கேள்வி எழக்கூடும் .
இதைப்போக்க சமீபத்தில் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டில் நடத்திய ஆய்வில் சோழ பேரரசர்களின் பிறந்த நாள் விழாக்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ள தகவலை குறித்து அந்தக்கல்வெட்டை ஆய்வு செய்த குடவாயில் பாலசுப்பிரமணியன் இந்த அரிய தகவலை உறுதி செயகிறார்

திருவாரூர் தியாகராஜர் கோயில் கங்கை கொண்ட ராஜேந்திர சோழனால் கற்கோயிலாக எடுக்க பெற்றதாகும்.
அதில் உள்ள அப்பேரரசனின் ஆணையை குறிப்பிடும் கல்வெட்டு ஒன்றில் தன் அய்யனாகிய ராஜராஜசோழனின் பிறந்த நாள் விழா ஐப்பசி சதயம் என்றும், தன்னுடைய பிறந்தநாள் விழா ஆடி திருவாதிரை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவாரூரில் உள்ள வீதிவிடங்கப் பெருமான் (தியாகேசர் திருக்கோயில்) திருக்கோயில் மூலட்டானத்தைக் கற்றளியாக எடுப்பித்து, அதற்குப் பொற்தகடுகளைப் போர்த்தியவர் ராஜேந்திர சோழன் என்பதை அக்கட்டுமானத்தில் உள்ள கல்வெட்டுச் சாசனங்கள் எடுத்துரைக்கின்றன. அவருடைய தொடர் கல்வெட்டுச் சாசனங்களின் இடையே உள்ள அந்த மன்னரின் 31-ம் ஆட்சியாண்டின் 244-ம் நாளில் பொறிக்கப்பட்ட அவருடைய ஆணையைக் குறிப்பிடும் சாசனத்தில், அவர் பிறந்த மாதமும் நட்சத்திரமும் அவருடைய தந்தை ராஜராஜ சோழன் பிறந்த மாதமும் நட்சத்திரமும் குறிக்கப்பட்டுள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கல்வெட்டை இந்திய தொல்லியல் துறையினர் 1919-ம் ஆண்டில் எண்:674-ம் சாசனமாகப் பதிவுசெய்து, ஆங்கிலத்தில் ஆண்டறிக்கைக் குறிப்பும் வெளியிட்டுள்ளனர்.
அதில் மாமன்னர் ராஜராஜன் ஐப்பசி மாதத்து சதய நாளிலும், அவருடைய மகன் ராஜேந்திரன் ஆடி மாதத்துத் திருவாதிரையிலும் பிறந்தவர் என்ற குறிப்பு அந்த மன்னராலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளனர்.

அந்த சாசனம் ராஜேந்திர சோழனின் ஆணையை வெளியிடு வதாகும். அதில் திருவாரூர் கோயிலின் மூலஸ்தான முடையாரான புற்றிடங்கொண்டாருக்கு மார்கழித் திருவாதிரை நாள், திருப்பூரநாள், ஆவணி அவிட்ட நாள், ஆண்டுப் பெருவிழா ஆகிய நான்கு நாட்களுக்குச் செய்ய வேண்டிய பூஜை முறைகளைக் கூறி, பின்பு தன் ‘அய்யர் பிறந்து அருளிய ஐப்பிசைச் சதயத் திருவிழா வரைவுக்குத் திருமுளையட்டவும், தீர்த்தத்துக்கு திருச்சுண்ணம் இடிக்கவும், நாம் பிறந்த (ராஜேந்திர சோழன் பிறந்த) ஆடித் திருவாதிரை நாளில் திருவிழா வரைவு குருமுளையட்டவும், தீர்த்தத்துக்குத் திருச்சுண்ணம் இடிக்கவும்…’ கொடுத்த நிவந்தங்கள் குறிக்கப்பட்டுள்ளன

திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலின் இரண்டாம் பிரகாரத்து சுவரில் இரண்டாம் குலோத்துங்கனின் 7வது ஆட்சியாண்டு கல்வெட்டு உள்ளது. இதில் ஆளுமைநம்பி (சுந்தரர்), பரவை நாச்சியார், ஆளுடையபிள்ளையார் (சம்பந்தர்), திருநாவுக்கரசரின் வழிப்பாட்டுக்கும், திருவீதியுலா போகும் திருவிழாக்களுக்குமாக அந்த பேரரசன் கொடுத்த ஊர்கள் பற்றியும், எந்தெந்த நாட்களில் திருவீதியுலா நிகழ்ந்தன என்றும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
சம்பந்தரும், திருநாவுக்கரசரும் திருவீதி பார்க்க எழுந்தருளும் நாட்களாக ஐப்பசி சதயநாள், பங்குனி உத்திர நாள், ஆடி திருவாதிரை நாள் என்று மூன்று விழாக்களை இந்த கல்வெட்டு சாசனம் குறிப்பிடுகிறது
அந்த விழாக்களை தான் நூறு ஆண்டுகள் கடந்து அதே கோயிலில் இரண்டாம் குலோத்துங்கன் கொண்டாடியுள்ளார்
இவ்வாறுஇத்தகைய முக்கிய செய்திகளை குடவாயில் பாலசுப்பிரமணியன் தனது கட்டுரையில் விவரிக்கிறார் .

வரலாறு என்பது முற்றிலும் எழுதி முடிக்கப்பெற்ற மாற்ற கூடாத ஆவணம் அல்ல. கிடைக்கும் தரவுகளைக் கொண்டு
மாற்றம் பெறுவதாகும் .
இந்தியத் தொல்லியல் துறையால் படி எடுத்துப் பதிவு செய்யப்பட்ட கல்வெட்டுகள் அத்தனையும் இதுவரை அச்சில் வெளிவரவில்லை ,இன்னமும் படிக்கப்படாமல் படியெடுத்த வடிவத்திலேயே உறங்குகிறது
மேலும், ஆண்டுதோறும் பல நூற்றுக் கணக்கான கல்வெட்டுச் சாசனங்களும் சில செப்பேட்டுச் சாசனங்களும் கண்டுபிடிக்கப்பட்டு வெளிவந்துகொண்டிருக்கின்றன. புதிய தரவுகள் கிடைக்கும்போது பழைய கருத்துக்களும் முடிவுகளும் நிச்சயம் மாற்றம் பெறும்.

ராஜராஜசோழன் , ராஜேந்திரசோழன் போன்ற ஆளுமை மிக்க மாமன்னர்கள் வேறு எந்த நாட்டிலோ ,அல்லது இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலோ தோன்றியிருந்தால் அவர்கள் இன்னமும் அதிகமாக போற்றி
புகழப்பட்டிருப்பார்கள் .
அவர்களின் பிறந்த நாட்கள் மக்களால் ஆண்டுதோறும் மக்களால் தன்னெழுச்சியாக கொண்டாடப்பட்டிருக்கும் .


வைகாசி அனுஷம் எனது பிறந்த நாள் ,தேதியில் ஜூன் 9,
ஆனால் அதை கொண்டாடும் வழக்கம் இதுவரை இல்லை ஆயின் வரலாற்றில் கல்வெட்டுகளில் பிறந்த நாட்கள் எவ்வாறு கொண்டாடப்பட்டிருக்கிறது என்பதை அறிய இன்று செய்திகளைத் தேடும் போது ,எனக்கு இந்த வரலாற்று செய்திகள் மாமன்னர்களை பற்றி கிடைத்தது மேலும் சமீபத்தில் சென்றுவந்த கங்கைகொண்ட சோழபுரம் ,தாராசுரம் ,பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை ,உடையாளூர்
போன்றவைகள் இத்தகைய செய்திகளைத் எழுத என்னை
ஊக்கப்படுத்தியது .
அதை நண்பர்களுடன் பகிர்ந்துக்க கொள்கிறேன் .
அண்ணாமலை சுகுமாரன்
9/6/17ராஜேந்திர சோழனின்  பிறந்த நாள்   JTehu3cXSAKhOSPUSfbO+rajendran

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக