ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிரவைக்கும் தமிழக அரசின் பத்திரப்பதிவு கட்டணம்

Go down

அதிரவைக்கும் தமிழக அரசின் பத்திரப்பதிவு கட்டணம் Empty அதிரவைக்கும் தமிழக அரசின் பத்திரப்பதிவு கட்டணம்

Post by ayyasamy ram Sat Jun 10, 2017 2:19 pm

பத்திரப்பதிவு கட்டணம் அதிகரிப்பால் அடித்தட்டு மக்கள்
பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ள கொங்குநாடு
மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன்,
அரசு சாதாரண மக்களுக்கு பதிவு கட்டணத்தில் சலுகை
தர முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்
, "நிலத்தின் வழிகாட்டு மதிப்பு 2012-ஆம் ஆண்டு பல மடங்கு
உயர்த்தப்பட்டதால் தமிழகம் முழுவதும் அனைத்து பத்திரப்பதிவு
அலுவலங்களிலும் பத்திரப்பதிவு எண்ணிக்கை குறைந்தது.

அன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு வருடமும் பத்திரப்பதிவு
கட்டணம் மூலமாக வருகின்ற வருமானம் அதிகரித்த வண்ணம்
இருந்ததால் சில அதிகாரிகள் அன்றைய முதல்வர் ஜெயலலிதா
இடத்தில் வழிகாட்டு மதிப்பை ஏற்றினால் பலமடங்கு
பத்திரப்பதிவு மூலம் வரும் வருமானம் அதிகரிக்கும் என்று தவறாக
சொன்ன காரணத்தினால் நிலத்தின் வழிகாட்டு மதிப்பு உயர்த்தப்பட்டது.

கடந்த 4 ஆண்டுகளாக பத்திரப்பதிவு வருமானத்தில் தொடர்ந்து
சரிவு ஏற்பட்டு தற்போது தேக்கநிலை ஏற்பட்டிருக்கிறது. இதை
அன்றைக்கே எச்சரித்தோம்.

இந்திய அரசின் ரூபாய் மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு பிறகு
இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவின் காரணமாக சொத்துக்கள்
வாங்குவதோ, விற்பதோ முழுமையாக குறைந்து போனது.

இன்றைக்கு தமிழக அரசு நிலத்தின் வழிகாட்டு மதிப்பை
33 சதவீதம் குறைப்பதன் மூலமாக சொத்து பரிமாற்றத்தை
அதிகப்படுத்திட முடியாது.

இந்த நடவடிக்கை தமிழக அரசுக்கு பலன் தராது. இருந்தாலும்
இன்றைக்காவது களநிலவரங்களை புரிந்து கொண்டு நடவடிக்கை எ
டுத்திருப்பதை வரவேற்கிறோம்.

அதேசமயத்தில் பதிவுக்கட்டணத்தை ஒரு சதவீதத்தில் இருந்து
4 சதவீதமாக உயர்த்தியிருப்பது தவறான அணுகுமுறை.

இதில் பாதிக்கப்பட போவது நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள்.
20 லட்சம் ரூபாய்க்கு நிலமோ, வீடோ வாங்கக்கூடிய ஒருவர்
இதற்கு முன்பு பத்திரப்பதிவு துறைக்கு 1 லட்சத்து 60,000 ரூபாய்
கட்டியிருந்தால் போதும்.

ஆனால் இப்போது 2 லட்சத்து 20,000 ரூபாய் கட்ட வேண்டி வரும்.
50 லட்சம் ரூபாய் வரை சொத்துக்கள் வாங்குகின்றவர்களுக்கு
வழிகாட்டு மதிப்பை குறைப்பதன் மூலமாக எந்த பலனும்
கிடைத்துவிட போவதில்லை.

வசதியில்லாத சிறிய குடும்பத்தை சார்ந்தவர்கள் அந்த குடும்ப
உறுப்பினர்களுக்கான சொத்து பரிமாற்றத்தின் போதும்
அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும்.

தானமாக கொடுக்கப்படுகின்ற சொத்துக்களுக்கு கூட அதிகமான
கட்டணத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்தை அரசு
ஏற்படுத்தியிருக்கிறது. அதிகாரிகள் மட்டத்தில் இதை எல்லாம்
அமைச்சர்களுக்கும், முதலமைச்சருக்கும் எப்படி சொல்லாமல்
விட்டார்கள் என்று புரியவில்லை.
-
2012-ஆம் ஆண்டு எப்படி வழிகாட்டு மதிப்பை ஏற்றி தவறு
செய்தார்களோ அதையே இன்றைக்கும் புதிய தவறை
செய்திருக்கிறார்கள்.

அதனால் தமிழக அரசு 50 லட்சம் ரூபாய் வரை வழிகாட்டு மதிப்பு
இருக்கின்ற சொத்து பரிமாற்றத்துக்கு பழைய முறை போல
1 சதவீத பதிவுக்கட்டணமும், 50 லட்சத்துக்கு மேல் உள்ள சொத்து
பரிமாற்றத்துக்கு 2 சதவீத பதிவுக்கட்டணமும் நிர்ணயித்தால்
பத்திரப்பதிவுகள் அதிகரித்து அரசு எதிர்பார்க்கின்ற பலன் கிடைக்க
வாய்ப்பிருக்கிறது.

அறிவித்திருக்கின்ற 4 சதவீத பதிவுக்கட்டணமானது சாதாரண
மக்களை பாதிக்கும் என்பதை ஏற்றுக்கொண்டு மறுபரிசீலனை
செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.
-
------------------
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum