ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை!

3 posters

Go down

சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Empty சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை!

Post by ayyasamy ram Sun Jun 04, 2017 3:07 pm

சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! QmUhCL6eQc6sqV8tyLND+sani_17269_18241
-
மகாபாரதத்தில் இடம்பெற்றிருக்கும் நள சரிதம்,
நள - தமயந்தியின் வாழ்க்கையை விவரிக்கிறது.

தருமருக்கு முன்னரே சூதாட்டத்தில் அனைத்து
செல்வங்களையும் இழந்து, படாத கஷ்டங்களை
எல்லாம் அனுபவித்தவர் நள மகாராஜா.

பேரழகும் பெருஞ்செல்வமும் பெற்றுத் திகழ்ந்ததைப்
போலவே, அளவற்ற துன்பங்களையும் எதிர்கொண்டு
வாழ்ந்தவர்.

நிடத நாட்டின் மன்னரான நளன், விதர்ப்ப தேசத்து
இளவரசியான தமயந்தியை மணந்த கதையும், பின்னர்
பிரிந்து திரிந்த சோக வாழ்க்கையும் நமக்குத் தெரியும்.

நளனின் சரிதத்தைப் படிப்பவர்கள், சனீஸ்வரரின் பிடியில்
இருந்து விடுபடுவர் என்றும் சொல்வது உண்டு.

ஆனால், நளனின் பூர்வ ஜன்மக் கதையைக்
கேட்பவர்களைத்தான் சனீஸ்வரர் பிடிக்க மாட்டார் என்று
சொல்லப்படுகிறது. நளனின் அந்த பூர்வஜன்மக் கதை
இதுதான்...
-
---------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Empty Re: சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை!

Post by ayyasamy ram Sun Jun 04, 2017 3:08 pm

அயோத்தியை அடுத்த காட்டுப்பகுதியில் வாழ்ந்தவர்கள்
ஆகுகன் - ஆகுகி தம்பதியினர். வேடுவ இனத்தைச் சேர்ந்த
போதிலும் இவர்கள் உயிர்க்கொலை செய்யாத உத்தமர்கள்.

சிவனின் மீது மாறாத அன்புகொண்ட ஆகுகன், தினமும்
ஒருவேளை மட்டுமே காட்டுக்குள் சென்று உணவு தேடுவான்.

அதுவும் தானாக விழுந்த காய், கனிகளை மட்டுமே எடுத்து
வருவான். அவற்றை இறைவனுக்கு நைவேத்தியம் செய்துவிட்டு,
மனைவியோடு பங்கிட்டு உண்பான்.

அப்படி ஒருநாள் உணவு தேடிச் சென்றபோது, மாலை வரை
அலைந்து திரிந்தும் ஒரே ஒரு மாம்பழம் மட்டுமே அவனுக்கு
கிடைத்தது. அதைக் கொண்டு வந்து, பசியோடு இருந்த
மனைவியிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னான் ஆகுகன்.

மனைவியோ `குளித்து முடித்து, சிவபூஜை செய்த பின்னர்
இருவருமே சாப்பிடுவோம்’ என்றாள். பூஜை முடித்து
உண்ணப்போகும் நேரத்தில் வந்து சேர்ந்தார் ஒரு சிவனடியார்.

விருந்தினர் என்போர் புண்ணியத்தை தரும் இறைவனுக்குச்
சமம் என்று கருதிய தம்பதியினர், அவருக்கு அந்தப் பழத்தை
கொடுத்து உண்ணச் செய்தனர்.

சின்னஞ்சிறிய அந்தக் குடிலில் மூவர் தங்க வசதி
இல்லாததால், தனது மனைவியை அந்த அடியாருக்குத்
துணையாக வைத்துவிட்டு, வெளியே காவலுக்கு நின்றான்
ஆகுகன்.

கொடிய மிருகங்கள் உலவும் அந்தக் காட்டில் சிவனடியாருக்கு
ஒரு துன்பமும் நேரக் கூடாதே என்று எண்ணி இரவு முழுக்கக்
காவல் இருந்தான். உள்ளே இருந்த ஆகுகி இரவு முழுக்க
அடியாருக்கு கால் பிடித்தபடி பாதசேவை செய்தாள்.

அவர் உறங்கியதும் கணவனைப் பார்க்க எழுந்தாள்.
அப்போது அடியார் உறக்கத்தில் முனகவும், தம்மால் அவர் தூக்கம்
கலையக் கூடாதே என்று சேவையைத் தொடர்ந்தாள்.
-
----------------------------


Last edited by ayyasamy ram on Sun Jun 04, 2017 3:14 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Empty Re: சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை!

Post by ayyasamy ram Sun Jun 04, 2017 3:10 pm

சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! 8vhlvK0PTwaRzxHH5b5Z+Sani_18047_19219_17491_18180
-
வீடு தேடி வந்த விருந்தினரை இவர்கள் கவனித்த
விதத்தைக் கண்டு சிவபெருமான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

அலகிலா விளையாட்டுக்குச் சொந்தக்காரரான ஈசன், வேடுவ
தம்பதியினரின் பெருமையை உலகறியச் செய்ய எண்ணினார்.
காவலுக்கு இருந்த வேடுவனின் மேல் ஒரு சிங்கத்தை ஏவினார்.

கோரப் பசியோடு விரைந்து வந்த சிங்கத்திடம், தாமே வலியச்
சென்று வணங்கினான் ஆகுகன். தன்னை நாடி வந்திருக்கும்
அதிதியின் தூக்கம் கலையாமல் இருக்க, சத்தமின்றி தன்னை
வேறு ஓர் இடத்தில் வைத்து உண்ணுமாறு வேண்டினான்.

ஒரு மனிதன் தன்னிடம் பேசுவதையும், தன்னை உண்ணுமாறு
வேண்டுவதையும் எண்ணி வியந்தது சிங்கம். அவனைப் பாராட்டி,
ஆகுகனை விட்டுவிடுவதாகவும், அதற்கு பதில் வீட்டில் உள்ள
வேறு ஒருவரை உண்ணுவதாகவும் கூறியது.

ஆனால், அதை மறுத்த ஆகுகன், தன்னை நாடி வந்திருக்கும்
அதிதியைக் கொல்வது பாவம். அவருக்கு பாத சேவை செய்யும்
தன் மனைவியைக் கொல்வதும் அடாத செயலே என்று கூறி,
தன்னையே கொன்று பசியை தீர்த்துக்கொள்ளுமாறு வேண்டினான்.

சிங்கமும் ஆகுகனை கொன்று தின்னத் தொடங்கியது.
அப்போதும் ஒரு சிறு சத்தம்கூட போடாமல் தன்னையே
கொடுத்தான் ஆகுகன்.

பொழுது விடிந்தது. வெளியில் வந்த ஆகுகி மாமிசத்தின்
மிச்சத்தையும், ஆடைகளையும் கண்டு இறந்து கிடப்பது தனது
காதல் கணவனே என்று அறிந்து துடித்தாள். மனம் வெடித்தாள்.

வந்திருந்த சிவனடியாரும் மனம் வேதனை கொண்டார்.
தன்னுயிரைக் காட்டிலும் பிரியமான கணவன் மாண்ட பின்னர்,
தான் வாழத் தேவையில்லை என்று கருதிய ஆகுகி, குடிசைக்குள்
நுழைந்து தீ வைத்துக்கொண்டாள்.

கீழிருந்து மேலாகப் பற்றிய தீ, அக்கினி பகவானையே சுட்டது.
ஆதி பரம்பொருளான சிவனையும் தொட்டது. விடையேறி,
உமையம்மையோடு அங்கே காட்சி அளித்தார் பரமேஸ்வரன்.

தீ மலர்க்குவியலானது; மாமிசப் பிண்டத்தில் இருந்து, ஆகுகன்
எழுந்தான். மலர்க் குவியலில் இருந்து ஆகுகி எழுந்தாள்.

சிங்கம், சனீஸ்வரர் ஆனார். சிவனடியார் இந்திரன் ஆனார்.
அந்த இடமே சொர்க்கலோகமாக மாறியது. தன்னை நாடி வந்த
அதிதிக்காக தன்னையே கொடுத்த அந்தத் வேடுவத் தம்பதியரை
எல்லோரும் வாழ்த்தினர்.

`அடுத்த பிறவியில் அரச குடும்பத்தில் பிறந்து, எடுத்துக்காட்டான
தம்பதியாக வாழ்வீர்கள்’ என சிவனால் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.

அந்த ஆகுகனும் ஆகுகியுமே அடுத்த பிறவியில் நளனாகவும்
தமயந்தியாகவும் பிறந்தார்கள். அதன் பிறகு, நளன் - தமயந்தி
கதைதான் உங்களுக்குத் தெரியுமே?

வந்த விருந்தினரை உபசரித்து, பாதுகாத்து வழியனுப்புவதே
தமிழர்களின் இல்லற தர்மம். அதையே நம் புராணங்களும்
இலக்கியங்களும் வலியுறுத்துகின்றன.

எந்த நேரத்திலும் நம்மை நம்பி வந்தவர்களை கைவிடவே கூடாது
என்பதைத்தான் இந்தக் கதை நமக்குக் கூறுகிறது.
-
----------------------


Last edited by ayyasamy ram on Sun Jun 04, 2017 3:13 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Empty Re: சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை!

Post by ayyasamy ram Sun Jun 04, 2017 3:12 pm

சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! KxNJfOCbQ2i6afHulS3b+sani_18472
-
அதிதியாக வருபவர் இறைவனே என்பதால்தான் அதிதியை
'அதிதி தேவோ பவ' என்ற வாக்கியம் உணர்த்துகிறது.

எனவே, நம் வீடு தேடி வருபவர் யாராக இருந்தாலும்,
இன்முகத்துடன் வரவேற்று உபசரிப்பது நம்முடைய கடமை.
-
---------------------------
எம்.ஹரிகாமராஜ்
நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Empty Re: சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை!

Post by T.N.Balasubramanian Sun Jun 04, 2017 10:19 pm

அதிதியாக வருபவர் இறைவனே என்பதால்தான் அதிதியை
'அதிதி தேவோ பவ' என்ற வாக்கியம் உணர்த்துகிறது.

எனவே, நம் வீடு தேடி வருபவர் யாராக இருந்தாலும்,
இன்முகத்துடன் வரவேற்று உபசரிப்பது நம்முடைய கடமை.
-


அதிதி ....அர்த்தம் என்னவென்று பார்க்க ,
திதி என்றால் என்ன என்று பார்க்கவேண்டும்.
திதி--என்பது குறிப்பிட்ட நாளில் ,குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பட்ஷத்தில் வருவது.
தேய்பிறை/வளர்பிறை ---பிரதமை ............சதுர்தசி என்றும் நேரமும் குறிக்கப்படும்.
திதிக்கு எதிர்மறை அதிதி
சத்யம் --அசத்யம் /நித்யம் --அநித்தியம் என உதாரணப்படுத்தலாம்.

வீட்டிற்கு வரும் உறவுகள்/நட்புகள் இந்த நாளில் இந்த நேரத்தில்
வீட்டிற்கு வருவேன் ----இத்தனை நேரம் /தினங்கள் தங்குவேன் என்று கூறிக்கொண்டு வருபவர்கள்
இந்த அதிதிகள் பிரிவில் வரமாட்டார்கள்.
சந்தேகம் இருந்தால், படிப்பில்   சிறந்தவர்களை கேட்கலாம்.

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sun Jun 04, 2017 10:20 pm; edited 1 time in total (Reason for editing : corrected once)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Empty Re: சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை!

Post by ayyasamy ram Mon Jun 05, 2017 5:02 am

புராண கதை மாந்தரில் ஒருவர் அதிதி
-
அதிதி (aditi, சமக்கிருதம்: अदिति).
(வரையறுக்கப்படாதவள் என்று பொருள்)

ஆதித்தியர்களின் தாய் என்பதால் அதிதி என்றும் அழைப்பர்.
இந்திரன், நெருப்பு, சூரியன், வாமனர் உட்பட அனைத்து
தேவர்களின் தாய் என்பதால் அதிதியை தேவமாதா என்று
விஷ்ணு புராணம் மற்றும் பாகவத புராணம் கூறுகிறது.

ரிக் வேதத்தில் அதிதியின் பெயர் 80 முறை வருகிறது.
ரிக் வேதத்தில் இவர் 'மஹா' என்ற அடைமொழியுடனே
அழைக்கப்படுகின்றார்.

அதிதி தட்சப்பிரசாபதியின் மகள்.
காசியப முனிவரின் முதல் மனைவி.
திதியின் மூத்த சகோதரி.[1]
-
--------------------------
விக்கிபீடியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Empty Re: சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை!

Post by krishnaamma Mon Jun 05, 2017 11:02 am

மிக அருமையான கதை பகிர்வு ராம் அண்ணா புன்னகை................நளதமயந்தி கதையும் கிடைத்தால் போடுங்களேன் புன்னகை .......... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Empty Re: சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum