புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிணற்றுத் தண்ணீர்! Poll_c10கிணற்றுத் தண்ணீர்! Poll_m10கிணற்றுத் தண்ணீர்! Poll_c10 
81 Posts - 67%
heezulia
கிணற்றுத் தண்ணீர்! Poll_c10கிணற்றுத் தண்ணீர்! Poll_m10கிணற்றுத் தண்ணீர்! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
கிணற்றுத் தண்ணீர்! Poll_c10கிணற்றுத் தண்ணீர்! Poll_m10கிணற்றுத் தண்ணீர்! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
கிணற்றுத் தண்ணீர்! Poll_c10கிணற்றுத் தண்ணீர்! Poll_m10கிணற்றுத் தண்ணீர்! Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
கிணற்றுத் தண்ணீர்! Poll_c10கிணற்றுத் தண்ணீர்! Poll_m10கிணற்றுத் தண்ணீர்! Poll_c10 
1 Post - 1%
viyasan
கிணற்றுத் தண்ணீர்! Poll_c10கிணற்றுத் தண்ணீர்! Poll_m10கிணற்றுத் தண்ணீர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிணற்றுத் தண்ணீர்! Poll_c10கிணற்றுத் தண்ணீர்! Poll_m10கிணற்றுத் தண்ணீர்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
கிணற்றுத் தண்ணீர்! Poll_c10கிணற்றுத் தண்ணீர்! Poll_m10கிணற்றுத் தண்ணீர்! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
கிணற்றுத் தண்ணீர்! Poll_c10கிணற்றுத் தண்ணீர்! Poll_m10கிணற்றுத் தண்ணீர்! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிணற்றுத் தண்ணீர்! Poll_c10கிணற்றுத் தண்ணீர்! Poll_m10கிணற்றுத் தண்ணீர்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கிணற்றுத் தண்ணீர்! Poll_c10கிணற்றுத் தண்ணீர்! Poll_m10கிணற்றுத் தண்ணீர்! Poll_c10 
18 Posts - 3%
prajai
கிணற்றுத் தண்ணீர்! Poll_c10கிணற்றுத் தண்ணீர்! Poll_m10கிணற்றுத் தண்ணீர்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கிணற்றுத் தண்ணீர்! Poll_c10கிணற்றுத் தண்ணீர்! Poll_m10கிணற்றுத் தண்ணீர்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கிணற்றுத் தண்ணீர்! Poll_c10கிணற்றுத் தண்ணீர்! Poll_m10கிணற்றுத் தண்ணீர்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கிணற்றுத் தண்ணீர்! Poll_c10கிணற்றுத் தண்ணீர்! Poll_m10கிணற்றுத் தண்ணீர்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கிணற்றுத் தண்ணீர்! Poll_c10கிணற்றுத் தண்ணீர்! Poll_m10கிணற்றுத் தண்ணீர்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிணற்றுத் தண்ணீர்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 01, 2017 11:39 am

வீட்டுக்குள் நுழையும் போதே, ''என்னடா ஆச்சு... இந்த வேலையாவது கிடைச்சுடுமா?'' என்ற அம்மாவின் கேள்வி எரிச்சலுாட்டியது என்றால், அருகில், ஒரு அழகான இளம் பெண் நின்றிருக்கும் போது, அதைக் கேட்டது கோபத்தை ஏற்படுத்தியது.

வாசலில் நின்றிருந்த பெண்ணிடம் அம்மா பேசுவது கேட்டது... ''இவந்தாம்மா என் பையன்... பி.காம்., படிச்சிருக்கான். படிச்சு முடிச்சு, ஆறு வருஷம் ஆச்சு; இன்னும், ஒரு வேலையும் கிடைக்கல. இவன் தலையெடுத்து தான், இவனோட தங்கைக்கு திருமணம் செய்யணும்... இதோ அவளும், பிளஸ்2 முடிச்சு நாலு வருஷம் ஆறது; பகவான் என்னைக்கு கண்திறக்கப் போறாரோ தெரியல,'' என்றாள்.

நான், வேலைக்கு போக மாட்டேன்னு அடம்பிடிக்கற மாதிரி இருந்தது அம்மாவின் புலம்பல்!
எங்கப்பா, என் பத்து வயசிலேயே எங்கம்மாவை விட்டுட்டு, வேற ஒரு பொம்பளையோட ஓடிப் போயிட்டார். எங்கேயோ மும்பை பக்கம் பாத்ததா கேள்வி. அன்றிலிருந்து, எங்கம்மா தான் வீட்டு வேலை, சமையல் வேலைன்னு செய்து, எங்களை காப்பாத்திட்டு வர்றாங்க.

''சரிம்மா... நான் அப்புறமா வரேன்,'' என்று திரும்பி போனவளை, வீட்டிற்குள் இருந்து எட்டிப் பார்த்தேன்.

25 வயசிருந்தால் அதிகம்; மாநிறத்தை விட, கூடுதலான நிறம்.

வீட்டிற்குள் வந்த அம்மாவிடம்,''ஏம்மா... உனக்கு கொஞ்சம் கூட அறிவே கிடையாதா... நானே நொந்து போய் வரேன்; நீ என்னடான்னா, அடுத்தவங்க முன் இப்படி கேக்கறியே...''

''மன்னிச்சுக்கடா ஏதோ ஆதங்கம்... தெரியாம கேட்டுட்டேன்; இனிமே கேக்கல. அந்த பொண்ணு பேரு, லலிதா; எதிர் வீட்டுக்கு, குடித்தனம் வந்திருக்கா... பாவம்டா அவ... கல்யாணமாகி ரெண்டு வருஷம் தான் ஆகுதாம். ஆறுமாசத்துக்கு முன், விபத்துல புருஷன் போயிட்டானாம்.

சின்ன வயசுல இப்படி ஆயிட்டாளேன்னு அவ அப்பா, அம்மாவுக்கு ஒரே துக்கம்... இந்த பொண்ணு தான் அவங்ககிட்டே சொல்லி, நான் கொஞ்ச நாள் தனியா இருக்கேன்னு, பிடிவாதமா இங்க வந்திருக்காளாம்; எங்கிட்டே வந்து, 'என் பொண்ணு தனியா இருக்கா; கொஞ்சம் பாத்துக்கோங்க'ன்னு சொல்லிட்டு போனாங்க,'' என்றாள்.
ஒரு வாரத்திற்கு பின் -

தொடரும்..............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 01, 2017 11:40 am

அன்று,அம்மா, சமையல் வேலைக்கும், தங்கை, அவள் பிரெண்டு வீட்டுக்கும் போயிருந்தனர். நான், தனியாக உட்கார்ந்து, கவிதை எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது, வாசலில் சத்தம் கேட்க, எட்டிப் பார்த்தேன். லலிதா தான் நின்றிருந்தாள்.

''அம்மா இல்லயா?'' என்றாள்.

''இல்ல...'' என்று சொல்லி, கொஞ்சம் தயங்கி, ''சமையலுக்கு போயிருக்காங்க,'' என்றேன்.

''சுமதி?''

''அவ பிரெண்டு வீட்டுக்கு போயிருக்கா...''

அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் சில வினாடிகள் மவுனமாக நின்றிருந்தாள். வெள்ளை நிறத்தில், ஊதாப்பூ டிசைனில் மிக நேர்த்தியாக காட்டன் புடவை உடுத்தியிருந்தாள். கூந்தலை அள்ளிச் சொருகி, 'க்ளிப்' மாட்டியிருந்தாள்; கையில், நோட்டுப் புத்தகம்.

''உள்ளே வாங்க...''

அதற்காகவே காத்திருந்தவள் போல் உள்ளே வந்தாள். அவள் கையிலிருந்த நோட்டை பார்த்தேன்; அது, என் கவிதை நோட்டு.

''அம்மா தான் குடுத்தாங்க... நீங்க கவிதையெல்லாம் எழுதுவீங்கன்னு சொன்னாங்க... ரொம்ப நல்லாயிருந்தது.''

''ஏதோ எனக்கு தோணுறதையெல்லாம் கிறுக்கி வைப்பேன்.''

''என்னங்க இதை போய் கிறுக்கல்ன்னு சொல்றீங்க... எவ்ளோ அருமையா இருந்தது தெரியுமா...''
பதில் கூறாமல், புன்னகைத்தேன்.

''ஒண்ணு கேக்கலாமா... தப்பா நினைச்சிக்க மாட்டீங்களே...''

கேள்வியுடன், தலையுயர்த்தினேன்.

''தாராளமா கேளுங்க...''

''நீங்க, ஏன் சோக கவிதைகளா எழுதுறீங்க...கொஞ்சம் உற்சாகமூட்டும் கவிதைகளா எழுதக் கூடாதா?''
இதழ்களில் இகழ்ச்சியான சிரிப்பு வெளிப்பட, ''நாங்க ௌல்லாம் கஷ்டப்படுற குடும்பத்தில பிறந்து, வாழ்றவங்க. எங்ககிட்ட சோகத்தை தவிர, வேற என்ன இருக்கு... வாழ்க்கையில கஷ்டம்ன்னா என்னான்னு தெரியாதவங்களுக்கு, என் கவிதையின் வலி புரியாது,'' என்றேன்.

என் கண்களையே உற்றுப் பார்த்தவள், ''என்னை பாத்தா இந்தக் கேள்விய கேக்கறீங்க...'' என்றவளின் கண்கள் கலங்கின.

''சாரிங்க... உற்சாகமூட்டும் கவிதைகள எழுத முயற்சிக்கிறேன்,'' என்றதும், ''நான் சொன்னேங்கறதுக்காக உங்கள நீங்க மாத்திக்காதீங்க... உங்களுக்கு சரின்னு பட்டா மாத்திரம் செய்யுங்க. அப்புறம் இன்னொரு விஷயம்...'' என்று இழுத்தாள்.

''பயப்படாதீங்க... தாராளமா சொல்லுங்க...''

தொடரும்..............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 01, 2017 11:40 am

'இல்ல... அன்னிக்கு நீங்க இன்டர்வியூ போயிட்டு வரும் போது, உங்க அம்மா அப்படி கேட்டது தப்பு தான்; நானும் ஒத்துக்கறேன். ஆனா, அதுக்காக உங்கம்மா வருத்தப்பட்டபோது, தப்பு செய்த போது கோபப்பட்ட நீங்க, அதை அவங்க உணர்ந்த பின், அவங்களுக்கு ஆறுதல் சொல்லியிருக்கலாமே...

''இப்ப, நான் யாரு... முன் பின் தெரியாத ஒரு பெண்; முதல்ல கோபமா பேசின நீங்க, அடுத்த நொடியே, அதுக்கு காரணம் சொல்லி, என்னை சமாதானப்படுத்தலயா...'' என்ற போது, புரிந்தது என்பது போல் மெல்ல தலையசைத்தேன்.

அவள் நோட்டை தந்து விடைபெற்றாள்.

அதற்கு பின், நான் வீட்டில் இருக்கும் போதெல்லாம் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவாள் லலிதா. கவிதைகள், சினிமா என்று பேசிக் கொண்டிருப்போம். 'நீங்க ரெண்டு பேரும் சுத்த போர்...' என்று சொல்லி, சீரியல் பார்க்க லலிதாவின் வீட்டுக்கு போய் விடுவாள், என் தங்கை.

மதியம் எங்கள் வீட்டிற்கு வந்த, லலிதா, ''நீங்க தப்பா நினைக்கலன்னா, நான் ஒண்ணு கேக்கட்டுமா...'' என்றாள்.
''இனிமே இதுமாதிரி கேட்டாத்தான் தப்பா நினைப்பேன்; கேளு.''

இப்போது, பேர் சொல்லி கூப்பிடும் அளவுக்கு, நாங்கள் பழகியிருந்தோம்.

''எத்தனை நாள் தான், வேலை தேடியே அலைய போறீங்க... சொந்தமா ஒரு தொழில் செய்யலாமே...''
''தாராளமா செய்யலாம்; ஆனா, முதல் போட, கையில, நுாறு ரூபாய் கூட இல்லாம, எப்படி தொழில் துவங்கறது... எனக்கும், டி.டி.பி., சென்டர் வைக்கணும்ன்னு ஆசை தான். ஒரு ஜெராக்ஸ் மிஷன், லேசர் பிரின்டர், ரெண்டு கம்ப்யூட்டர், ஸ்கேனர்ன்னு அதுக்கே ரெண்டு, மூணு லட்சம் ஆகும்; அதுக்கப்புறம் இடம் பாக்கணும்; அட்வான்ஸ் குடுக்கணும்; இதுக்கெல்லாம் எங்கே போறது...''
''வங்கியில கடன் வாங்கலாமே...''

''நீ, பேங்க் பக்கமே போனதில்லன்னு நினைக்கிறேன்; காருக்கு லோன் தர்றான்; திருப்பி கட்டாதவனுக்கு லோன் தர்றான்; ஆனா, என்னை மாதிரி உண்மையா உழைக்கணும்ன்னு நினைக்கறவங்களுக்கு, தரமாட்டேங்குறான்.''

''இல்ல ரகு... எல்லாருமே அப்படியில்ல... என் பெரியப்பாவும் பேங்க்ல மேனேஜர் தான்; சிறு தொழில் செக் ஷன்ல தான் இருக்கார். நீங்க, 'புராஜெக்ட்'டோட அவரை போய் பாருங்க; கட்டாயமா உதவி செய்வார்,'' என்றாள்.

'இவள் மூலம் லோனா...' சட்டென தன்மானம் தலை தூக்கியது.

''ரகு... இத உங்களுக்காக செய்யல; உங்க கவிதைகளுக்காக தான் செய்றேன்... சரியா...''

'என் மனதை படிக்கும் சக்தி இவளுக்கு எப்படி வந்தது...' என வியந்து, சிரித்தபடியே தலையாட்டினேன்.
பின், அவள் பெரியப்பாவை பார்த்து, லோன் சாங் ஷன் ஆகி, இடம் பார்த்து கம்ப்யூட்டர், பிரின்டரெல்லாம் வாங்கி என, மூன்று மாதம் ஓடிவிட்டது. இதோ, அடுத்த வாரம் திறப்பு விழா; அம்மாவுக்கு ஒரே சந்தோஷம்!

தொடரும்........



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 01, 2017 11:41 am

எல்லாம் சரியா, 'இன்ஸ்டால்' ஆகியிருக்கிறதா என்று பார்ப்பதற்கு, லலிதாவை அழைத்துக் கொண்டு, சென்டருக்கு போயிருந்தேன்.

எல்லாம் ஒழுங்காக வேலை செய்கிறது என்று பார்த்து முடிப்பதற்குள், மதியம், 12:00 மணி ஆகி விட்டது.
''லலிதா மணி ஆயிடுச்சு... இங்கேயே ஏதவது ஓட்டலில் சாப்பிடலாமா?''

''வேணாம் ரகு... எனக்கு ஓட்டல் சாப்பாடு ஒத்துக்காது; அது மட்டுமல்ல, கிளம்பும் போதே உங்க தங்கை, 'நீங்க போயிட்டு வாங்க; உங்களுக்கு நான் சமையல் செய்து வைக்கிறேன்'னு சொன்னா... சீரியல் பாத்துட்டே சமைச்சாலும், ரொம்ப நல்லா சமையல் செய்றா... நான், அதையே சாப்பிட்டுக்கிறேன்,'' என்றாள்.

''சரி, டீயும், போண்டாவுமாவது சாப்பிடுவோம்...''

''ஓகே., உங்க ஆசைய ஏன் கெடுக்கணும்... வாங்கிட்டு வரச் சொல்லுங்க,'' என்றாள்.

பக்கத்து கடையில் ரெண்டு டீயும், நாலு போண்டாவும் சொன்னேன்; ஐந்து நிமிடங்களில் வந்தது. அதற்குள், பல நாட்களாக யோசித்து வைத்திருந்த கவிதையை, தமிழில் தட்டச்சு செய்து, பிரின்ட் போட்டேன்.
போண்டாவை விண்டு, வாயில் போட்ட வளிடம், கவிதை பேப்பரை கொடுத்து, ''லலிதா...இதுதான் முதல் பிரின்ட் - அவுட்; அதனால, ரொம்ப ரொம்ப முக்கியமானவங்களுக்கு, என்னோட தனிப்பட்ட கவிதை,'' என்று சொல்லி அவளிடம் கொடுத்தேன்.

''ஆஹா... ஒரு கம்ப்யூட்டர் சென்டர் முதலாளி, பெரிசா, 'ட்ரீட்' குடுப்பீங்கன்னு பாத்தா, ஒரு கவிதை தானா... சரி குடுங்க... மீதிய அப்புறமா வசூல் செய்துக்கிறேன்,'' என்றவாறு கவிதையை வாங்கி உரக்க படித்தாள்...

இருண்டு கிடந்த
என் வாழ்க்கையில்
ஒளி வெள்ளமாய்
நீ வந்தாய்...
வறண்டு கிடக்கும்
உன் நெற்றியெனும் வானத்தில்
சிவப்பு சூரியனாய் நான் வரவா!

படித்து முடித்தவுடன், சட்டென்று மவுனமானாள். பாதி குடித்து முடித்த டீயை தள்ளி வைத்து, எழுந்து, வெளியில் வந்தவள், ஆட்டோவை பிடித்து சென்று விட்டாள். எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.
இத்தோடு நிறுத்தி யிருந்தால் பரவாயில்லை; அம்மாவிடமும் சொல்லி விட்டாள். ரெண்டு நாளாக, அம்மாவோட புலம்பல் தாங்க முடியவில்லை...

'கடைசியில, என் பையனை மயக்கி, கைக்குள்ள போட்டுக்க தான் லோன் வாங்கித் தந்தாளா... அவ, இனிமே வீட்டு பக்கமே வரக் கூடாது; அவ, வாங்கி குடுத்த லோனை திருப்பி குடுத்துடுடா; உனக்கு வேலை கிடைக்காட்டாலும் பரவாயில்ல... என்னால முடிஞ்ச வரைக்கும், நான் உழைச்சுப் போடறேன்'னு ஒரே சத்தம்.

இத்தனை நாளாக, லலிதா வீடே கதின்னு இருந்த என் தங்கை கூட, இப்போ என்னமா அவளை திட்டித் தீக்கறா!

பொறுக்க முடியாமல், லலிதாவின் வீட்டுக்கு சென்றேன்; துணிகளை, 'அயர்ன்' செய்து கொண்டிருந்தாள், லலிதா.

என்னை கண்டதும் தயங்கி நின்றாள்.

தொடரும்.............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 01, 2017 11:42 am

'ஏங்க... உங்களுக்கு என்னை பிடிக்கலன்னா, முகத்துக்கு நேரா, 'பிடிக்கல'ன்னு சொல்லியிருக்கலாம்; அதை விட்டு, இப்படி ஒதுக்கி வைக்கறது, கொஞ்சம் கூட நல்லாயில்ல... நான், அப்படி ஏதாவது தவறா கேட்டிருந்தேன்னா, என்னை மன்னிச்சிடுங்க. இதை சொல்லிட்டு போகத் தான் வந்தேன்; நான் வர்றேன்.''
திரும்பியவனை, அவள் குரல் தடுத்தது.

'இது என்ன பரஸ்பர உதவியா... நான் உங்களுக்கு லோன் வாங்கி குடுத்ததால, பரிதாபப்பட்டு, என்னை திருமணம் செய்ய...''

''லலிதா... நீயுமா என்னை புரிஞ்சிக்கல... உன்னை பாத்ததுமே, உன் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது. அது மட்டுமல்ல, நீ, பல சமயங்களில, என்னோட மனச சரியா புரிஞ்சி நடந்துருக்க. என் கவிதைகளில் மட்டும் தான், நான் முற்போக்குவாதின்னு நினைச்சியா... என் எழுத்துக்கும்,
வாழ்க்கைக்கும் கொஞ்சம் கூட வித்தியாசமே கிடையாது,'' என்றேன்.
மவுனமாக நின்றாள்.

''இப்போதாவது என்னை நம்புறியா?''
''நம்பறேன் ரகு... எப்பவுமே...''

''இதை ஏன் அம்மாகிட்டே சொன்னே... அவங்க சுத்த கட்டுப்பெட்டி; கன்னாபின்னான்னு கத்திக்கிட்டிருக்காங்க.''
''அவங்களுக்கு தெரியாம எப்படி...''

''அதெல்லாம் நேரம் வரும் போது சொல்லிக்க மாட்டேனா...''
''ஆனா, அவங்களுக்கு இதுல உடன்பாடில்லயே...''

''லல்லுா... இது என் வாழ்க்கை; யாரோட வாழணும்கிறது என்னோட முடிவு; இதுல, அவங்க தலையிடறத, நான் அனுமதிக்க மாட்டேன்.''

''அவங்க சம்மதிக்கவேயில்லன்னா...''

''நான், அவங்கள உதறிட்டு, உன்னை திருமணம் செய்வேன்.''

''ஏன் ரகு... உங்களுக்கு என் மீது இவ்வளவு காதலா... இத ஏன் முன்னாடியே சொல்லல?''
''என்ன கேள்வி இது... அப்போ, எனக்கு ஒரு வேலையும் இல்ல... நானே, அம்மாவ நம்பிட்டிருந்தேன்; எந்த முகத்தை வச்சு, உன்னை காதலிக்கிறேன்னு சொல்வேன்... வேலையில்லாதவன், காதலிக்கறதெல்லாம் சினிமாவிலே தான் நடக்கும்.''

என் அருகில் வந்து, என் கைகளை, தன் கைகளுக்குள் கோர்த்துக் கொண்ட லலிதா, ''உங்களுக்கு வேலையில்லாத போது, உங்கள வெச்சு காப்பாத்த, அம்மா வேணும்; ஆனா, ஒரு வேலை கிடைச்ச பின், உங்க கருத்துக்கு அவங்க ஒத்துப் போகலன்னா, அவங்கள நீங்க துாக்கி எறிஞ்சிட்டு வந்துடுவீங்க, அப்படித்தானே... இதுதான்

உங்க நியாயமா...''

''அது வந்து...''

''யோசிச்சு பாருங்க ரகு... உங்கள வளத்து ஆளாக்கறதுக்கு, உங்கம்மா என்னவெல்லாம் பாடுபட்டிருப்பாங்க... நேத்து வந்த எனக்காக, உங்கம்மாவ தூக்கியெறியுறேன்னு சொல்றீங்களே... நாளைக்கு என்னையும் அதேமாதிரி செய்ய மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?''

''லலிதா... அது வேற; இது வேற... என் மனசு உனக்கு புரியலயா... என்னை சந்தேகப்படுறியா?''

''இல்ல ரகு... முதல்ல, உங்கம்மாவ சமாதானப் படுத்துங்க... உங்க சொந்தக்காலுல நின்னு, உங்க தங்கையோட திருமணத்தை முடிங்க; நான், கிணற்று தண்ணி; எந்த வெள்ளமும் என்னை அடிச்சிட்டு போகாது. உங்க கடமைகள் முடிஞ்சதும், உரிமையோட வந்து, என்னை கூட்டிக்கிட்டு போங்க; அது வரைக்கும், உங்களுக்காக காத்திருப்பாள், இந்த லலிதா!''

ஸ்ரீ அருண்குமார்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக