ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
சொல் பொறுக்காதவன்! Poll_c10சொல் பொறுக்காதவன்! Poll_m10சொல் பொறுக்காதவன்! Poll_c10 
heezulia
சொல் பொறுக்காதவன்! Poll_c10சொல் பொறுக்காதவன்! Poll_m10சொல் பொறுக்காதவன்! Poll_c10 
E KUMARAN
சொல் பொறுக்காதவன்! Poll_c10சொல் பொறுக்காதவன்! Poll_m10சொல் பொறுக்காதவன்! Poll_c10 
mohamed nizamudeen
சொல் பொறுக்காதவன்! Poll_c10சொல் பொறுக்காதவன்! Poll_m10சொல் பொறுக்காதவன்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல் பொறுக்காதவன்!

Go down

சொல் பொறுக்காதவன்! Empty சொல் பொறுக்காதவன்!

Post by krishnaamma Thu Jun 01, 2017 11:18 am

துரையின், 'மூடு' சரியில்லை என்பதை, அவனது இருண்ட முகம் சொன்னது. என்ன என்று கேட்பதற்குள், ''நான், உங்களோடு எவ்வளவு நாளா பழகிட்டிருக்கேன்?'' என்று கேட்டான்.
''ரெண்டு வருஷமிருக்கும்; ஏன் கேட்கறே?''என்றேன்.

''ரெண்டு வருஷத்துல, என்கிட்ட ஏதாவது குறை பாத்திருக்கீங்களா சார்... காசு, பணம் விஷயத்துல, நான் தப்பு செய்திருக்கேனா... உங்க குடும்பத்துல ஒருத்தனா சுதந்திரமா என்னை வீட்டுக்குள் உலாவ விட்டிருக்கீங்க; அதை பயன்படுத்தி, ஏதாவது திருடியிருக்கேனா அல்லது வீட்டில் ஏதாவது பொருள் காணாம போயிருக்கா... சொல்லுங்க?

''சமயத்துல, பீரோ சாவியை கூட, என்கிட்ட கொடுத்து, பணம் எடுக்க, வைக்க சொல்றீங்க. அப்பக் கூட, 'பண விஷயத்துல ஏன் என்னை இழுக்குறீங்க; ஏதாவது, 'மிஸ்டேக்' ஆயிடப் போகுது'ன்னு சொல்வேன்.

அதுக்கு நீங்க, 'ஒரு ஆளை பாத்தவுடனே, அவன் எப்படி பட்டவன்னு சொல்லிடலாம். ரெண்டு வருஷம் பழகியிருக்கோம் தெரியாமல் போகுமா... உன்னை நம்பி, கோடி ரூபாய் கூட கொடுக்கலாம். ஆனா, என்னிடம் அவ்வளவு பணம் இல்ல'ன்னு சொல்வீங்க; உண்டா, இல்லயா?''

'ஆமாம்' என்பது போல் தலையசைத்தேன்.

''எதை வேணும்ன்னாலும் பொறுத்துக்குவேன்; ஆனா, என்னை சந்தேகப்பட்டாலோ, நம்ப மறுத்தாலோ, என்னால தாங்க முடியாது,'' என்றான்.

'தெரிந்தோ, தெரியாமலோ துரையை பற்றி, அப்படியொரு வார்த்தைய, யாரிடமாவது சொல்லியிருக்கோமா...' என்று நினைத்துப் பார்த்தேன். இல்லவே இல்லை. 'ஒருவேளை, என் மனைவி ஏதும் சொல்லியிருப்பாளோ... அது, காற்று வாக்காக இவன் காதுக்கு எட்டி, இப்போது வருத்தத்தை கொட்ட வந்திருக்கானோ...' என்ற ஐயம் எழுந்தது; ஆனால், கனவிலும் என் மனைவி அப்படி சொல்லியிருக்க வாய்ப்பில்லை.

எதிர்வீட்டில் தான் குடியிருக்கிறான், துரை; 30 வயது; பார்வைக்கு முரடனாக தெரிந்தாலும், மனசு பஞ்சு; நல்ல விதமாக பேசினால், 'பச்சக்'கென்று ஒட்டிக் கொள்வான்; கள்ளம் கபடமில்லாமல் பழகுவான். திருமணமாகி, ஒரு குழந்தையும் உள்ளது. குடி வந்த புதிதில், கேட்காமலேயே வந்து உதவி செய்தான்.

இதயத்தில் நுழைந்தவனை, வீட்டுக்குள்ளும் நுழைய விட்டிருந்தோம். துரை தொடர்ந்து பேசினான்...

''ரெண்டு வருஷம் பழகிய நீங்க, என் மீது இத்தனை நம்பிக்கை வைச்சுருக்கும் போது, பல வருஷம் பழகினவங்க, என்னை நம்பணுமா, இல்லயா...'' என்று நிறுத்தியவன், சிறிது தன்னை ஆசுவாசப்படுத்தி, ''சின்ன வயசுல, நான், வீட்டை விட்டு வந்துட்டேன்னு சொல்லியிருக்கேன்; ஆனா, ஏன் ஓடி வந்தேன்னு சொன்னதில்ல.

இப்ப சொல்றேன் சார்... நாங்க, மூணு ஆம்பள பசங்க; நான் தான் இளையவன். அந்த வயசிலேயே, எனக்கு திருட்டு, பொய் சொல்றது, மத்தவங்கள பத்தி வம்பு பேசறது எதுவும் பிடிக்காது. எந்த விஷயமானாலும், நேரடியா பேசணும்; நல்லதா பேசணும். யாராவது பொய் சொன்னா, அவங்க கிட்ட சேரவே மாட்டேன். அதுபோல, என் மீது யாராவது பழி சொன்னாலும் தாங்கமாட்டேன். 'ரோஷக்கார பையன்'னு எங்க அப்பாகிட்ட சொல்வாங்க.

''அப்பாவுக்கும், என்மீது தான் நம்பிக்கை. ஏன்னா, அண்ணனுங்க ரெண்டு பேருமே, பொய் சொல்வாங்க; வீட்டில் காசு திருடுவாங்க. அதனால, கடைக்கு போகணும்ன்னா, என்கிட்ட தான் காசு கொடுத்து அனுப்புவார், அப்பா. அவர் சொன்ன பொருட்களை வாங்கிட்டு, மிச்ச காசை கொண்டாந்து கொடுத்துடுவேன். 'சில்லரை காசுக்கு, நீ எதனா தின்பண்டம் வாங்கிக்கறது தானே'ன்னு அப்பா சொல்வாரு; 'எனக்கு வேணும்ன்னா, உங்ககிட்ட கேட்டு வாங்கிக்கறேன்; நீங்க சொல்லிட்டீங்கன்னு, மிச்சக் காசுல, மிட்டாய் வாங்கி, தின்ன ஆரம்பிச்சா, அதுவே பழக்கமாகி, நீங்க சொல்லாத போதும், வாங்கித் தின்ன ஆசை வரும்.

அப்பாகிட்ட சொல்லிக்கலாம்ன்னு, காசு செலவழிக்க, தைரியம் வந்துடும்; அதுவே, உங்க பாக்கெட்லயும் கை வைக்க தோணும். அப்புறம், அண்ணன்களை போல, நானும் மாறிடுவேன்'னு சொல்வேன்.

''நான் அப்படி சொல்றது, அப்பாவுக்கு பிடிக்கும். 'கனவுல கூட திருட மாட்டடா; நல்லா வருவே'ன்னு பாராட்டுவார். அப்படிப்பட்ட அப்பா, 'மாடக்குழியில சில்லரைக் காசுகள் போட்டு வச்சிருந்தேனே; நாலு ரூபா குறையுதே... துரை, நீ எடுத்தியா'ன்னு கேட்டுட்டாரு. அந்த ஒரு சொல்லுக்கே, ஓடி வந்தவன் நான்,'' என்றான்.

''இப்ப என்ன ஆச்சுன்னு, இதையெல்லாம் சொல்லிட்டு இருக்க... நீ, வேலைக்கு கிளம்ப வேணாமா... நேரமாகுதே,'' என்று நினைவூட்டினேன்; நானும் புறப்பட வேண்டும் என்பதால்!

தொடரும்.............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சொல் பொறுக்காதவன்! Empty Re: சொல் பொறுக்காதவன்!

Post by krishnaamma Thu Jun 01, 2017 11:20 am

'நீங்க புறப்படுங்க சார்; அப்புறம் வர்றேன்,'' என்று எழுந்து, கூப்பிடக் கூப்பிட நிற்காமல் போனான்.
எனக்கு சங்கடமாக போய்விட்டது. அவன் மனைவியை கூப்பிட்டேன்; அவள், கைக்குழந்தையுடன் வந்து நின்றாள்.''என்னாச்சும்மா துரைக்கு... ஏன் ஒரு மாதிரியா இருக்கான்?''

''அவரு, வேலைய விட்டுட்டாரு சார்... வேலை பாத்த கடையில, பணம் காணாம போச்சாம்; அங்க வேலை பாக்கற மத்தவங்கள விசாரிச்சது போல, இவரையும் விசாரிச்சாங்களாம்... அவ்வளவு தான். 'என்னை எப்படி சந்தேகப்படலாம்; சந்தேகப்பட்ட இடத்தில, நான் எப்படி தொடர்ந்து வேலை பாக்க முடியும்'ன்னு, தூக்கிப் போட்டுட்டு வந்துட்டாரு,'' என்றாள், வருத்தத்துடன்!

சட்டென்று கடை முதலாளி மீது கோபம் வந்தது. அவரைப் பற்றியும் ஏற்கனவே சொல்லியிருந்தான், துரை.

'ஊரை விட்டு வந்து, இங்கே வேலை தேடி, கடை கடையாக ஏறி இறங்கினேன்; யாரும் சேத்துக்கல. இந்த முதலாளி தான், கருணை காட்டினாரு... ஆரம்பத்துல, கூட்டி, பெருக்கும் வேலை தான்; போகப் போக, எல்லாம் கத்து கொடுத்தாரு; பேப்பர் ரகம், விலை எல்லாம் சொல்லிக் கொடுத்து, என்னை, சிப்பந்தி ஆக்கினாரு; சம்பளம் சுமார் தான். அதைவிட, இரண்டு மடங்கு அதிகமா தர்றோம்ன்னு, பல கடைகள்ல கூப்பிட்டாங்க; எனக்கு, ஆரம்பத்துல கை கொடுத்த முதலாளிய விட்டு போக மனசில்ல; மனுஷனுக்கு பணம், காசை விட, நன்றியும், விசுவாசமும் முக்கியம் இல்லயா...' என்பான்.

அத்தனை நேர்மையான பையனை, பத்து பேர் முன், திருடனை போல நடத்தினால், எப்படி பொறுப்பான்...
வேலைகளை எல்லாம் விட்டு விட்டு, துரை வேலை செய்த கடைக்கு போய், முதலாளியிடம் என்னை அறிமுகப்படுத்தி, ''நீங்கள் செய்தது சரியா?'' என்று கேட்டேன்; உடனே, ''தப்பு தான்,'' என, ஒப்புக் கொண்டார்.

''ஒரு வார்த்தையில சொல்லிட்டீங்க... அங்க, அவன் எப்படி துடிச்சிட்டிருக்கான்னு உங்களுக்கு புரியாது,'' என்றேன்.

''ஒரு திருட்டு நடந்து போச்சு... கடையில, பத்து பேர் இருந்தால், அத்தனை பேரையும் விசாரிக்கிறது தான் முறை; அந்த வகையில, அவனையும், ஒரு வார்த்தை கேட்க வேண்டியதா போயிடுச்சு. அவனை மட்டும் விசாரிச்சிருந்தா, அவன் கோபப்படலாம்; அவன் மீது தப்பு இல்லாத பட்சத்தில், 'நான் எடுக்கல'ன்னு, ஒரு வார்த்தை சொல்லிட்டு, வேலைய பாக்கிறத விட்டுட்டு, 'அதெப்படி, என்னை சந்தேகிக்கலாம்'ன்னு சிலுப்பிகிட்டு போறது, சரியில்ல.

''வியாபார இடத்தில், கொஞ்சம் நெளிவு, சுளிவு தெரிஞ்சுக்க வேணாமா... முதலாளி, காரணமே இல்லாம, ஒரு தொழிலாளிய திட்டுறான்னா, தொழிலாளி புரிஞ்சுக்கணும்... அங்கே வந்திருக்கிற யாரோ ஒருத்தர் மீது உள்ள அதிருப்திய, அண்ணாச்சி, நம்மகிட்ட காட்டுறாருன்னு!

''தன்னை தான் திட்டுறார்ன்னு எடுத்துகிட்டு, நடைய கட்டினான்னா, அது, அவன் முட்டாள்தனம்; துரை, அதை தான் செய்துட்டு போயிருக்கான். 'இத்தனை வருஷம் வேலை பாத்த என்னை, நீங்க புரிஞ்சுகிட்டது இவ்வளவு தானா'ன்னு கேட்டுட்டு போனான். நான் கேட்கிறேன்... இத்தனை வருஷத்துல, அவன், என்னை புரிஞ்சுகிட்டதும் இவ்வளவு தானா...'' என்றார்.

அவர் தரப்பு நியாயத்தை கேட்டதில், துரை மீது ஆதங்கம் எழுந்தது.''தனி ஆளா இருந்தாலும் பரவாயில்ல; இந்த வேலைய பாத்து, ஒருத்தர் அவனுக்கு பொண்ணு கொடுத்து, குடும்பஸ்தனாக்கியிருக்கார். வேறு எங்கு போனாலும், இங்கு கிடைக்கிற அளவுக்கு, சம்பளம் கிடைக்காது; கஷ்டப்படுவான்.

''யோக்கியமாய் இருக்கிறவன், ஆயிரம் குற்றச்சாட்டு வந்தாலும், உறுதியா இருக்கணும். என்னை எப்படி சந்தேகப்படலாம்ன்னு, சட்டைய பிடிச்சு கேட்கலாம்; தப்பில்ல. கோவிச்சுக்கிட்டு போறது, ஒரு வகை கோழைத்தனம். துரை, அந்த விஷயத்துல, இன்னும் சின்ன புள்ள மாதிரியே இருக்கான். நீங்க எடுத்துச் சொல்லுங்க... முதலாளி வருத்தப்பட்டாரு... இனிமே அப்படி நடந்துக்க மாட்டாரு; உன்னை வேலைக்கு வரச் சொன்னாருன்னு...'' என்று, அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ''வந்துட்டேன் முதலாளி,'' என்று, கடைக்குள் நுழைந்தான் துரை.

''யோசிச்சு பாத்தேன் சார்... நான் தனி ஆளுன்னா பரவாயில்ல; வள்ளியும், குழந்தையும் இருக்காங்க. ஒரு மாசம் சம்பளம் வரலன்னாலும், நெருக்கடியா போகும். இத்தனை வருஷ சர்வீசை காட்டி, இன்னொரு கடையில சேரலாம்; அங்கேயும், ஏதாவது பிரச்னை வந்து, முதலாளி ஒரு சொல் சொல்லலாம். யார்கிட்டயோ கேட்டுக்குறதுக்கு, நம்மை, நல்லா தெரிஞ்சவர்கிட்ட, ஒரு சொல் கேட்டுகிட்டால், தப்பில்லன்னு தோணிச்சு; வந்துட்டேன்,'' என்று, சிரித்தான்.

'யோசித்து முடிவெடுத்திருக்கிறான்; இனி, அவனுக்கு எல்லாம் சுமுகமாக அமையும்...' என்று தோன்ற, என் அலுவலகம் நோக்கி, மகிழ்ச்சியுடன் சென்றேன்.

படுதலம் சுகுமாரன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum