புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோதியின் மூன்று ஆண்டுகால ஆட்சி - பலன் தந்ததா மேக் இன் இந்தியா?
Page 1 of 1 •
- GuestGuest
மோதியின் மூன்று ஆண்டுகால ஆட்சி - பலன் தந்ததா மேக் இன் இந்தியா?
"இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில் தொடங்கும் வாய்ப்புகளை வழங்குவதற்காக `மேக் இன் இந்தியா` (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவை "உற்பத்தி மையமாக்கும்" முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம்", என்று முழங்கினார் பிரதமர் நரேந்திர மோதி.
'இந்திய தொழிற்துறை உற்பத்தியை அதிகரிப்பதுதான் `மேக் இன் இந்தியா` திட்டத்தின் நோக்கம்.
ஆனால், 2014 மே மாதம், மோதி பிரதமராக பொறுப்பேற்பதற்கு முன்பு 4.6 சதவிகிதமாக இருந்த தொழிற்துறை உற்பத்தி, மூன்று ஆண்டுகால ஆட்சிக்கு பிறகு 2017 ஆம் ஆண்டு மே மாதத்தில் 2.7 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது.
2014 ஆண்டில் 11.1 சதவீதமாக இருந்த நுகர்வோர் பொருட்களின் உற்பத்தி மிகப்பெரிய வீழ்ச்சியடைந்து, தற்போது 0.8 சதவீதமாக சரிந்துவிட்டது.
ஆனால் வெளிநாட்டு மூலதன வரத்தை பொருத்தவரை, மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலகட்டத்தைவிட அதிகரித்திருக்கிறது. 2011-12 இல் 117 பில்லியன் டாலர் என்ற அளவில் இருந்த மூலதன முதலீடு, 2014-16 இல் 149 பில்லியன் டாலர்களாக அதிகரித்திருக்கிறது.
மத்திய அரசின் `மேக் இன் இந்தியா` கனவுத் திட்டத்தின்கீழ், உள்நாட்டு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படவேண்டும்.
பொருளாதார நிபுணர் சுஜான் ஹாஜ்ரா சொல்கிறார், "இதை இரண்டு விதமாக பார்க்கலாம். இந்தத் திட்டம் என்ன எண்ணத்துடன் தொடங்கப்பட்டது, எந்த அளவு வேலை செய்யப்பட்டுள்ளது என்பது ஒரு புறம், மற்றொரு புறம், அடிப்படை நிலையில் எப்படி வேலை செய்யப்பட்டுள்ளது என்றும் கணிக்கவேண்டும்."
கட்டமைப்புத் துறையோ, உற்பத்தித் துறையோ முன்னேற்றம் அடையவில்லை, அதற்கு வெளிப்புற மற்றும் உட்புற காரணிகள் இருக்கின்றன என்று பட்டியலிடுகிறார் சுஜான் ஹாஜ்ரா.
வெளிக்காரணிகள்
கட்டுமான துறையில் அதிக திறன்
உலகம் முழுவதும் உற்பத்தித்துறை உச்சக்கட்டத்தில் உள்ளதால், உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான சந்தை கிடைப்பதில்லை. 2007-08 இல் உலக அளவில் நிலவிய பொருளாதார மந்த நிலையால் பாதிப்பு
உள்நாட்டுக் காரணிகள்
வங்கிகளிடம் இருந்து கடன் பெறுவதில் வர்த்தகர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது (வங்கிகள், தொழில் நிறுவனங்களுக்கு வழங்கும் கடன்களின் அளவு மிகவும் குறைவாக பதிவாகியுள்ளது)
இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைப்பது இப்போதும் மிகவும் கடினமானதாகவும், சிக்கலானதாகவுமே உள்ளது. இந்தியாவில் புதிய தொழில்களை துவங்குவதற்கு அனுகூலமான வாய்ப்பு இருக்கிறதா? உலக வங்கியின் 'எளிதாக தொழில் துவங்குவதற்கான வாய்ப்பு-ஒரு கணக்கெடுப்பு' புள்ளிவிவரங்களின் படி, இந்தியா 130வது இடத்தில் இருக்கிறது.
மத்திய அரசு தன்னுடைய கொள்கைகளில் சில மாறுதல்களை ஏற்படுத்தினாலும், தொழில் தொடங்கும் மாநிலத்தில் பல சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது.
ஆனால் பஞ்சாப் போன்ற சில மாநிலங்கள் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. தொழில் துவங்க வசதியான நகரங்களின் பட்டியலில் லுதியானா பல இடங்கள் முன்னேறியிருக்கிறது.
"மேக் இன் இந்தியா திட்டத்தின் முன்னேற்றம் தொடர்கிறது" என்கிறார் கேர் ரேட்டிங்கை சேர்ந்த பிரபல பொருளாதார நிபுணர் மதன் சப்னவிஸ். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் முதலீடு குறைந்து வருவதாக அவர் கூறுகிறார்.
காரணங்கள்
வங்கிகளில் குறிப்பாக அரசு வங்கிகளில் இருந்து கடன் கிடைப்பது சிக்கலாக இருக்கிறது.
வருவாய் அதிகரிக்கவில்லை, ஆனால் விலைவாசி அதிகரித்துவிட்டது.
விலை அதிகரிப்பால் நுகர்வோரிடம் செலவு செய்ய பணம் இல்லை என்பதால் தேவைகளும் குறைந்துவிட்டன.
தொழில் துறைத் திறன் வெறும் 70 சதவீகிதமே பயன்படுத்தப்படுகிறது. இது குறைந்தபட்சம் 85 சதவீதமாக இருக்க வேண்டும்.
ஏற்கனவே இருக்கும் தொழிற்துறையினரின் திறனே முழுமையாக பயன்படுத்தப்படாதபோது, புதிதாக தொழில் துவங்குவதற்கு இது ஏற்ற காலமல்ல.
"உணவுப் பொருள் போன்றவற்றின் விலை உயரும்போது, தங்கள் வருமானத்தில் இருந்து அடிப்படைத் தேவைகளான உணவு போன்றவற்றிற்கு செலவு அதிகமாவதால், கம்ப்யூட்டர், டி.வி., பிரிட்ஜ் போன்ற அத்தியாவசியமில்லாத பொருட்களில் செலவு செய்வதை மக்கள் குறைத்துக் கொள்வார்கள்" என்று விலை உயர்வு, தேவையை பாதிப்பதைப் பற்றி விளக்குகிறார் சப்னவிஸ்.
பட்ஜெட் பற்றாக்குறையை குறைப்பதற்காக, கட்டமைப்புத் துறைக்கான செலவுகளை அரசு குறைத்துவிட்டதால், உள்கட்டமைப்பு துறையின் தேவை குறைந்துவிட்டது.
உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் விலக்கம், தேவைகளில் மிகப்பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தியது
'மோதி அரசின் பிற திட்டங்களை போன்றது தான் மேக் இன் இந்தியா திட்டமும், அதாவது மிகைப்படுத்தப்படும் ஒரு திட்டம்' என்று சொல்கிறார் நிதியமைச்சரின் முன்னாள் பொருளாதார ஆலோசகரும், பிரபல பொருளாதார நிபுணருமான மோகன் குருசுவாமி.
'சிறிய அளவில் மேக் இன் இந்தியா திட்டம் நன்றாக செயல்பட்டிருக்கலாம், ஆனால், இதனால் பெரிய அளவிலான தாக்கம் எதுவும் இல்லை' என்கிறார் குருசுவாமி.
மோதி அரசே இந்தத் திட்டம் குறித்து பெரிதாக கவலைப்படவில்லை என்கிறார் அவர்.
'பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டபோது, முந்தைய ஒப்பந்தங்களைப்போல், அந்த நிறுவனத்தின் வேலையை இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கான ஷரத்தை ஏன் ஒப்பந்தத்தில் சேர்க்கவில்லை?' என்று கேள்வி எழுப்புகிறார் குருஸ்வாமி.
பணவிலக்க நடவடிக்கையின் பொருளாதார விளைவு
அரசியல் ரீதியாக பணவிலக்க நடவடிக்கை வெற்றிபெற்றதாக இருந்தாலும், அது உலகிற்கு தவறான செய்தியை கொடுத்தது. எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல், அமைப்பில் இருந்து திடீரென்று 85 சதவிகித ரொக்க நோட்டுகளை விலக்கிக் கொள்வது என்பது சரியானதா என்ற கேள்வி எழுகிறது.
அதிகாரத்தை ஒரே இடத்தில் குவித்து வைப்பதை மோதி அரசின் மிகப்பெரிய குறையாக குறிப்பிடும் மோகன் குருசுவாமி, இதனால் முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படுவதாகச் சொல்கிறார்.
கனரக தொழிற்சாலைகள் இந்தியாவிற்கு வரமுடியாததற்கு காரணம்? 'முழுமையாக தகுதிவாய்ந்த (பயிற்சி பெற்ற) தொழிலாளர்களின் கடுமையான பற்றாக்குறை' என்கிறார் மோகன் குருசுவாமி.
பல இடங்களில் சீர்திருத்தம்
இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்து தொழில்துறையை எளிமைப்படுத்தியது.
நிலுவையில் இருக்கும் பல முக்கியமான திட்டங்களுக்கு (3-ஜி போன்ற) புத்துயிரூட்டியது
மின்சாரம் வழங்கல் முன்பை விட அதிகமாக்கியது
மாநிலங்களில் கொள்கை சீர்திருங்களுக்கான முயற்சி மற்றும் தனியார் துறையை ஊக்குவிக்கும் முயற்சி
'சிங்கப்பூரில் பொருட்களை உற்பத்தி செய்து, இந்தியாவில் விற்பனை செய்து வந்த தனது நிறுவனம், இரண்டாண்டுகளுக்கு முன்னர் சென்னையில் தனது உற்பத்தி நிறுவனத்தை தொடங்கி, 200 முதல் 250 பேருக்கு வேலை கொடுத்திருப்பதாக' சைபர் பாதுகாப்புத் துறையில் பணியாற்றிவரும் டீப் ஐடெண்டிட்டியின் தலைவர் பெனிலிட்ஸ் நாடார் சொல்கிறார்.
"வரி மற்றும் நாணய பரிமாற்றத்தால் இந்தியாவில் எங்களுக்கு கிடைக்கும் லாபத்தின் காரணமாக எங்களுடைய உற்பத்திப் பொருட்களின் விலையில் 20 முதல் 30 சதவிகிதம் குறைந்துள்ளது" என்று சொல்கிறார் பெனிலிட்ஸ் நாடார்.
தற்போது, வெளிநாடுகளில் சைபர் பாதுகாப்பு பொருட்களை விறபனை செய்யும் நாடாரின் நிறுவனம் தற்போது இந்தியாவிலும் தனது தயாரிப்புகளை களம் இறக்கியுள்ளது.
நன்றி-BBC தமிழ்.

Similar topics
» ‘மேக் இன் இந்தியா’ விழா மேடையில் பயங்கர தீ விபத்து
» மேக் இன் இந்தியா திட்டம் 30,000 கோடி மதிப்பு டெண்டர்கள் ரத்து
» அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???
» எப்-16 ரக போர் விமானங்களை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்க ...
» ரூ.25 ஆயிரம் கோடி ஒப்பந்தம் ரத்து: 'மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்குவிக்க அதிரடி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1