ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை மத்திய அரசை கண்டித்து நாளை திமுக ஆர்ப்பாட்டம் :

3 posters

Go down

மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை மத்திய அரசை கண்டித்து நாளை திமுக ஆர்ப்பாட்டம் :  Empty மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை மத்திய அரசை கண்டித்து நாளை திமுக ஆர்ப்பாட்டம் :

Post by ayyasamy ram Tue May 30, 2017 3:56 am


-
சென்னை :
மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்ததை கண்டித்து,
திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில்
வரும் 31ம்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது:  

இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை
தட்டிப் பறிக்கும் வகையில், மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ்
மாட்டு இறைச்சி விற்பனைக்கு மத்திய அரசு விதித்துள்ள
தடைக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

இதற்கு திமுக தனது எதிர்ப்பினை தொடக்கத்திலேயே பதிவு
செய்தது. மத சுதந்திரம், தனி மனித சுதந்திரம், நாட்டின் மதச்
சார்பற்ற தன்மை, அரசியல் சாசனத்தால் அளிக்கப்பட்டுள்ள
உரிமைகள் அனைத்தையும் மறுக்கும் விதத்தில் மத்திய அரசின்
நடவடிக்கை அமைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டியிருந்தோம்.

தனி மனித சுதந்திரத்துடன் இணைந்த பல அம்சங்களில்
விவசாயிகளின் நலனும் இதில் முக்கியமானதாக அமைந்துள்ளது.
மாட்டு இறைச்சிக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கையால்
இந்தியா முழுவதும் விவசாயிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும்
நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் வறட்சியின் காரணமாக விவசாயம் பொய்த்துப்போய்,
விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில்,
அவர்களுக்கு வாழ்வாதாரமாக இருப்பவை கால்நடைகளே.

இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாத மத்திய அரசின் புதிய
அறிவிப்பினால், விவசாயிகள் தங்கள் கால்நடைகளை உரிய
முறையில் விற்க முடியாத அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழக விவசாயிகளின் நிலையை அந்தியூர் சந்தை எடுத்துக்
காட்டியுள்ளது. கிராமப் பொருளாதாரம், மரபு சார்ந்த வேளாண்மை
இவை குறித்த அக்கறையின்றி மத்திய அரசு மேற்கொண்டுள்ள
நடவடிக்கையும், அதற்கு அண்டை மாநிலங்கள் எதிர்ப்பு
தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு
வாய்மூடி மவுனம் காப்பதும் விவசாயிகளின் நலனைப் பெரிதும்
பாதிப்பதுடன், அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை
உரிமைகளில் ஒன்றான உணவு உரிமையும் பறிக்கப்படுகிறது.

இதனை கண்டித்து மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக,
திமுக சார்பில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்
வரும் 31ம் தேதி புதன்கிழமை காலை 9 மணி அளவில் சென்னை,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
---------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை மத்திய அரசை கண்டித்து நாளை திமுக ஆர்ப்பாட்டம் :  Empty Re: மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை மத்திய அரசை கண்டித்து நாளை திமுக ஆர்ப்பாட்டம் :

Post by M.Jagadeesan Tue May 30, 2017 6:55 am

ஜல்லிக்கட்டு தடை நீக்கத்தால் முன்பு PETA கோபம் அடைத்தது .
இப்போது
மாட்டுத்தோல் கிடைக்காமல் BATA கோபம் அடையப் போகிறது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை மத்திய அரசை கண்டித்து நாளை திமுக ஆர்ப்பாட்டம் :  Empty Re: மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை மத்திய அரசை கண்டித்து நாளை திமுக ஆர்ப்பாட்டம் :

Post by Guest Tue May 30, 2017 12:01 pm

ஒவ்வொரு அரசும் ஆட்சிக்கு வந்தவுடன் தங்களுக்கு விரும்பியதை சரியோ தவறோ செய்து விடுகிறார்கள். மதச் சாயம் பூசி மாடு வெட்டுவதை/இறைச்சிக்காக விற்பதை தடை செய்தது உள் நோக்கம் இருந்தாலும்,விவசாயிகளுக்காக இரங்காத அரசு,ஈழத் தமிழர்களைக் கண்டு கொள்ளாத அரசு,காவிரிப் பிரச்சனையை தூக்கிப் போட்ட அரசாக இருந்தாலும் கூட, அந்தத் தடை வேண்டியதே. இந்தியாவில் விதிக்கப்பட்ட தடைக்கு மதச் சாயம் பூசாமல் சொந்தக் காரணங்களுக்காக செய்தாலும் கூட ஏற்றுக் கொள்ளலாம்.

பல நாடுகளில் இப்படி தடை உள்ளது.
குதிரை மக்களின் நண்பன் எனக் கூறி அமெரிக்காவில் தடை செய்தது. பின்னர் தடை திரும்பப் பெறப்பட்டு மறைமுகத் தடையை விதித்துள்ளது. இஸ்லாமிய நாடுகள் பன்றி இறச்சிக்கு தடை விதித்துள்ளது.தாய்வான் பூனை நாய் இறைச்சிக்கு தடை விதித்துள்ளது.

இப்படிப் பல நாடுகள் சில காரணங்களைக் காட்டி சில மிருகங்களின் இறைச்சியை தடை செய்துள்ளது.

இன்று அரசியல் கட்சிகளின் போராட்டம் அரசியல் செய்வதற்காக மட்டுமே.மக்கள் மீதோ,மதத்தின் மீதோ ஏற்பட்ட பாசம் அல்ல. எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்தியாவை?
avatar
Guest
Guest


Back to top Go down

மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை மத்திய அரசை கண்டித்து நாளை திமுக ஆர்ப்பாட்டம் :  Empty Re: மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை மத்திய அரசை கண்டித்து நாளை திமுக ஆர்ப்பாட்டம் :

Post by சிவனாசான் Wed May 31, 2017 9:07 pm

மனமில்லா மாடுகளுக்கு இறைவன் மனம் அளித்தால் இவர்கள்
ஆர்பாட்டம் எல்லாம் திண்டாட்டம் பெறும். அந்த மனம் என்ற
சக்தியை பெறாமையால் இவர்களது ஆர்பாட்டம் >>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை மத்திய அரசை கண்டித்து நாளை திமுக ஆர்ப்பாட்டம் :  Empty Re: மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை மத்திய அரசை கண்டித்து நாளை திமுக ஆர்ப்பாட்டம் :

Post by சிவனாசான் Thu Jun 01, 2017 6:57 am

பசு ஒரு தெய்வம்!ராஜஸ்தான் ஐகோர்ட் நீதிபதி மகேஷ் சந்திர சர்மா, தன், 139 பக்க உத்தரவில் மேலும் கூறியதாவது: நேபாளம் ஒரு ஹிந்து நாடு; அங்கு பசுவை கொல்வ தற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், விவசாயத்தை நம்பியி ருக்கும் நம் நாட்டில், பசு வுக்கு பாதுகாப்பு இல்லை.33 ஆயிரம் கடவுள்களும், தேவர் களும் குடியிருக்கும் பசுவை, தெய்வ மாக பார்க்க வேண்டும்.
ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு, ஆக்சிஜனை வெளியிடும் ஒரே உயிரினம் பசு தான். பசுவின் கோமியம், 11 வகையான பலன்களை அளிக் கிறது. இந்தத் தீர்ப்பை, என் மனசாட்சி யின்படி அளிக்கிறேன். பசுவைப் போற்றும் சிவனின் பக்தன் நான். மனிதனுக்கு எந்தெந்த வகைக ளில் பசு நன்மை செய்கிறது என்பதை, பல் வேறு வெளிநாட்டு அறிஞர்கள் தங்கள் ஆய்வில் கண்டுபிடித்து தெரிவித்துள்ளனர்.
ஜெர்மன் அறிஞர் ருடால்ப் ஸ்டீய்னர், 'பசுக் களுடைய கொம்புகள், கதிர்வீச்சை கிர கித்து கொள்கின்றன' என, கூறியுள்ளார்.
சென்னை யைச் சேர்ந்த ஒருவிஞ்ஞானி, பசுவின் சாணம், காலரா கிருமிகளை கொல் வதாக கண்டுபிடித் துள்ளார்.பசுவின் சாணம், 4,500 லிட்டர், 'காஸ்' உற்பத்தி செய்கிறது.
நாடு முழுவதும் பசு சாண காஸ் பயன்படுத்தி னால், 6.8 லட்சம் டன் மரத்தை சேமிக்கலாம். வேளாண் பொருளாதாரத்துக்கு முக்கியமான பசுவுக்கு, தேசிய விலங்காக அங்கீகாரம் அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி கூறியுள் ளார்.இந்த அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிபதி மகேஷ் சந்திர சர்மா, நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை மத்திய அரசை கண்டித்து நாளை திமுக ஆர்ப்பாட்டம் :  Empty Re: மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை மத்திய அரசை கண்டித்து நாளை திமுக ஆர்ப்பாட்டம் :

Post by M.Jagadeesan Thu Jun 01, 2017 9:14 am

நீதிபதி என்பவர் அனைத்து மதங்களுக்கும் பொதுவானவராக இருக்கவேண்டும் .ஆனால் இவரோ இந்து மதத்தின் பிரதிநிதியாகச் செயல்படுவதுபோல உள்ளது .

நாளைக்கு ஒரு கிறித்துவ நீதிபதி ஆட்டின் பெருமைகளைப் பேசி ஆடுதான் இந்தியாவின் தேசிய விலங்காக இருக்கவேண்டும் என்று பேசினால் என்னசெய்வது ?

புலி தேசிய விலங்காக இருப்பதில் என்னகுறை கண்டார் இவர் ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை மத்திய அரசை கண்டித்து நாளை திமுக ஆர்ப்பாட்டம் :  Empty Re: மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை மத்திய அரசை கண்டித்து நாளை திமுக ஆர்ப்பாட்டம் :

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மத்திய அரசை கண்டித்து நாளை வேலைநிறுத்தம்; 10 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
» சென்னையில் 10-ந்தேதி தமிழக அரசை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் அணி ஆர்ப்பாட்டம்
» சிங்கள அட்டூழியத்தை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்
» ஜெயலலிதாவை கண்டித்து நாளை தி.மு.க. இளைஞரணி ஆர்ப்பாட்டம்: எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
» மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum