ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி கலைச் சொற்கள்-ஏற்பும் எதிர்ப்பும்.

Go down

கணினி கலைச் சொற்கள்-ஏற்பும் எதிர்ப்பும். Empty கணினி கலைச் சொற்கள்-ஏற்பும் எதிர்ப்பும்.

Post by Guest Sun May 28, 2017 10:54 pm

கணினி கலைச் சொற்கள்-ஏற்பும் எதிர்ப்பும்.

மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் .
1. WhatsApp - புலனம்
2. youtube - வலையொளி
3. Instagram - படவரி
4. WeChat - அளாவி
5.Messanger - பற்றியம்
6.Twtter - கீச்சகம்
7.Telegram - தொலைவரி
8. skype - காயலை
9.Bluetooth - ஊடலை
10.WiFi - அருகலை
11.Hotspot - பகிரலை
12.Broadband - ஆலலை
13.Online - இயங்கலை
14.Offline - முடக்கலை
15.Thumbdrive - விரலி
16.Hard disk - வன்தட்டு
17.GPS - தடங்காட்டி
18.cctv - மறைகாணி
19.OCR - எழுத்துணரி
20 LED - ஒளிர்விமுனை
21.3D - முத்திரட்சி
22.2D - இருதிரட்சி
23.Projector - ஒளிவீச்சி
24.prinder - அச்சுப்பொறி
25.scanner - வருடி
26.smart phone - திறன்பேசி
27.Simcard - செறிவட்டை
28.Charger - மின்னூக்கி
29.Digital - எண்மின்
30.Cyber - மின்வெளி
31.Router - திசைவி
32.Selfie - தம் படம் - சுயஉரு
33 Thumbnail சிறுபடம்
34.Meme - போன்மி
35.Print Screen - திரைப் பிடிப்பு
36.Inket - மைவீச்சு
37.Laser - சீரொளி

இவை உலகத் தமிழ் இணைய மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
.........................................
Video – வீடியோ, காணொளி,விழியம்

இதற்கு வைக்கப்பட்ட சில எதிர் கருத்துகள்.

சிலர் whatsApp - கட்செவி என பாவிக்கின்றனர். கட்செவி என்றால் பழைய தமிழில் பாம்பு என்று பொருள்.
……………….
இது இராம.கி. இன் கருத்து…………….
Video-விழியம் என்ற சொல் தமிழில் இல்லாதது. ஆனால், வீடியோ என்பது விதியோ. வித்யா, வேதம் என்ற சொற்களுடன் தொடர்புடைய இந்தோ-ஐரோப்பியச் சொல் ஆகும். மோதியை மோடி என்று தவறாக நாம் எழுதுவதுபோல், விடியோ விழியம் ஆகியுள்ளது. காணொளி - வீடியோ.

விடையம் - message. 
விடுத்தவர் = messenger
விடுத்து நிரல் =   messenger programme

ஒவ்வொருவரும் தனித்தனியே பாத்தி கட்டிக்கொண்டிருந்தால் பூதியலார் (physicists) சொல்வது வேதியலாருக்குப் (chemists) புரியாது. இருவர் சொல்வதும் மருத்துவருக்கும் (physicians) பொறியாளருக்கும் புரியாது. அப்புறம் பொருளியலாருக்கு (economists), கலைஞருக்கு, ஏன் பொதுமக்களுக்கும் கூடப் புரியாது. கலைச்சொற் படைப்பில் எல்லாருக்கும் பொதுவான சொற்கள், புலனத்திற்கு மட்டுமான சொற்களென்று வெவ்வேறுவகைகளுண்டு.  message என்ற சொல் பொதுமரபில் வரக்கூடிய சொல். அன்றாடச் சொல்லில் ”அவர் நிகழ்தரவி கொடுத்தார்” என்று நாம் சொல்லமுடியுமா? கொஞ்சம் ஒர்ந்துபாருங்கள். மாறாக ”விடையம் தந்தார்” என்று சொல்லிப் போகலாம்.
………………….

இது முனைவர்.க.சுபாஷிணி (தமிழ் மரபு அறக்கட்டளை) யின் கருத்து.

வாட்ஸப், பேஸ்புக், கூகள் போன்றவை கம்பெனிகளின் பெயர்கள். இவற்றை தமிழாக்கம் செய்வது அடிப்படையில் தவறே. நம் பெயரை ஆங்கிலேயர் கூப்பிடும் போது மொழிமாற்றி  கூப்பிட்டால் அனுமதிப்போமா? அதுபோலத்தான். ஒரு ட்ரேட்மார்க் கம்பெனியின் பெயரை தமிழ்படுத்த முயற்சித்தல் என்பதை நாம் தவிர்ப்பது நல்லது.  இந்திய நிறுவனங்கள் இன்போசிஸ், டாட்டா, என இருக்கின்றன. இவற்றை ஆங்கிலேயர்களும், ஜெர்மானியர்களும் ஜப்பானியர்களும் மொழிமாற்றியா அழைத்துக் கொண்டிருக்கின்றனர்? சற்றே நாம் யோசித்தல் அவசியம். நாம் பயன்படுத்துகின்றோம் என்பதற்காக இவற்றை மொழிமாற்றம் செய்து பார்க்கும் முயற்சியை விட்டு, இதேபோல தமிழில் முழு மென்பொருளை உருவாக்கி அவற்றிற்கு தமிழில் பெயர் சூட்டி மகிழ்வது சிறந்தது.
…………………………….

தமிழ் ஆர்வலர் ஒருவர்……….
நம் 'சீனிச்சாமியை' Sugar God  என்றால் ஒத்துக் கொள்வோமா? மொழி பெயர்ப்பியலில், பெயர்களுக்கு இன்னொரு மொழியில் இணை தேடாமல், ஒலிக் குறிப்பில் அமைத்திட வேண்டும் என்பது பால பாடம்.
…………………………

தமிழ் ஆர்வலர் ஒருவர்…………...
பிற மொழிப் பெயர் சொல்லை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை கம்பரின் கம்பராமாயணத்தில் தெரிந்து கொள்ளலாம். 

உதாரணமாக இலட்சுமணன் என்பதை இலக்குவன்  என்று பகரும். 
 
தொல்காப்பியம் கூறும்
வடசொல் எது?வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇஎழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே(தொல்-சொல் -எச்ச-5) 
என்பது வடசொல்லைத் தமிழ்ப்படுத்தற்குத் தொல்காப்பியர் கூறிய நூற்பாவாகும். வடசொல்லைத் தமிழ்ச் செய்யுளுக்கு ஆக்கிக் கொள்ளும் போது வடவெழுத்துகளை நீக்கித் தமிழ் ஒலிக்கேற்ற எழுத்துகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது தொல்காப்பியர் வடசொல்லைத் தமிழ்ப் படுத்தக் கூறிய வழிமுறையாகும்........

இங்கு  வடசொல் என்றால் பிற மொழிச் சொற்கள் எனலாம். 
……………………………..

நன்றி-மின்தமிழ்.
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum